வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள - கதை திரி

sudharavi

Administrator
Staff member
சூர்யா கதவை திறந்து கொண்டு வெளியே வர, அங்கிருந்த காட்சியை கண்டு திகைத்து நின்றான்.

வெற்றி சந்துருவிடமிருந்து விடுபட, போராடி கலைத்து போனவன் “டேய்! நல்லவனே! என்னடா பார்த்துகிட்டு நிற்கிற என்னை காப்பாத்துடா” என்றான்.

“அப்பா! அவரை விடுங்க” என்றான் சத்தமாக.

சூர்யாவை முறைத்து “அறிவு கெட்டவனே நீ பண்ணி வச்ச வேலையில் உன்னை அடிக்க வீடு தேடி வந்திருக்கார்” என்றார்.

“ஹையோ! அப்பா! அவரை விடுங்க” என்றான் சத்தமாக.

மல்லியோ ஒருபடி மேலே போய் சூர்யாவின் கையைப் பிடித்து இழுத்து கதவருகே சென்றவர் “நீ ஓடி போயிடு..அப்பா அவரை பார்த்துக்குவார்” என்றார்.

அழுவதா சிரிப்பதா என்று புரியாமல் அவர்கள் இருவரிடமும் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்தனர் சூர்யாவும், வெற்றியும்.

இது வேலைக்காது என்றெண்ணிய சூர்யா “அப்பா! அவரை விடுங்க! அவர் போலீஸ் ஆபிசர்” என்றான் சத்தமாக.

படாரென்று அவனை விட்டவர் அதிர்ந்து போய் வெற்றியைப் பார்க்க அவனோ ஹப்பாடா இவர் கிட்ட இருந்து தப்பிச்சோமே என்று பார்த்து வைத்தான். ஆனால் சற்று நேரத்தில் சுதாரித்துக் கொண்ட சந்துரு பாய்ந்து சென்று சூர்யாவின் சட்டையைப் பிடித்து “போச்சு! என் மானம் மரியாதை எல்லாம் போச்சு. ஒரு போலீஸ்காரன் குடும்பத்திலேயே உன் வேலையை காட்டுட்டியா?” என்று அவனை தள்ளி விட்டு மல்லியிடம் சென்றவர் “வாடி! ரெண்டு பேரையும் ஜெயில்ல களி திங்க வச்சிடுவான் நம்ம பிள்ளை” என்றார் கோபமாக.

அவர் அடிக்கும் கூத்தை பார்த்துக் கொண்டிருந்த வெற்றி நொந்து போய் சோபாவில் அமர்ந்து விட்டான்.

சூர்யாவோ தந்தை வெற்றியின் முன் மானத்தை வாங்குகிறாரே என்று பல்லைக் கடித்தான்.

தாய், தந்தை இருவரையும் பார்த்து “கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் சும்மா இருக்கீங்களா? அவர் எதுக்கு வந்திருக்காருன்னு கேட்காமலே நீங்களே பேசிட்டு இருங்க” என்றான் எரிச்சலாக.அதற்கும் அடங்காத சந்துரு “உன்னை மாதிரி ஒருத்தனை பெத்தா இப்படித்தாண்டா யோசிக்கணும்” என்றார் ஆத்திரமாக.இதற்கு மேல் விட்டால் சூர்யாவையும் இழுத்துக் கொண்டு தாங்களே சென்று ஜெயிலில் அமர்ந்து பூட்டிக் கொள்வார்கள் என்று பயந்த வெற்றி “சார்! உங்க பையன் நல்லவன். நீங்க தேவையில்லாம யோசிக்காதீங்க. நான் வந்தது வேற விஷயம்” என்றான்.அவனை சந்தேகமாக பார்த்தவர் “இவனை நல்லவன்னு சொல்ற நீங்க எப்படிப்பட்டவரா இருக்கணும்? என்ன விஷயமா வந்தீங்க?” என்று அவனையே போட்டு பார்த்தார்.சூர்யா தந்தையின் கூற்றில் கடுப்பாகி அவரை இழுத்துச் சென்று சோபாவில் அமர வைத்தவன் “அவர் பேசி முடிக்கும் வரை நீங்க குறுக்கே எதுவும் பேசாதீங்க” என்று கூறி விட்டு தானும் அமர்ந்து கொண்டான்.தன்னை நிதானப்படுத்திக் கொண்ட வெற்றி தங்களின் ஆபரேஷன் பற்றிய சிறு குறிப்பை கூறி அதில் சூர்யாவின் பங்கும் இருக்கிறது. அதற்கு சூர்யாவும் களத்தில் இறங்க வேண்டும் என்று கூறி அவரின் அனுமதியை வேண்டினான்.வெற்றியை சந்தேகமாக பார்த்த சந்துரு “நீங்க உண்மையிலேயே போலீஸ் தானா? அதுக்கு ஆதாரம் எங்கே இருக்கு? இவனைப் போய் இதில் ஈடுபடுத்துறது எந்தளவுக்கு உதவியா இருக்கும்?” என்றார்.சூர்யாவை முறைத்தவன் ‘எனக்கு இது தேவையாடா? கொஞ்ச நேரத்திலேயே கண்ணை கட்டுதே இவரை தினமும் எப்படிடா சமாளிக்கிற?’ என்று பார்த்து விட்டு தனது கார்டை எடுத்து அவரிடம் காட்டினான்.இருவரையும் மாறி மாறி சந்தேகமாக பார்த்த சந்துரு “இவனே பொண்ணுங்களை கண்டா பின்னாடி போயிடுவான். இவனை வச்சு அவனை பிடிக்கிறதா? அந்த பயலோட இவனும் சேர்ந்துட்டா என்ன பண்றது?” என்றார்.தந்தை தன்னைப் பற்றி சொன்னதில் முகம் கன்றி போனவன் “அப்பா! என்ன பேசுறீங்க? வேண்டாம் பா!” என்றான் கடுப்பாக.அவரின் பேச்சில் வெற்றியே அதிர்ந்து போய் “சார்! உங்க பையன் நல்லவன் சார். இந்த வயதில் வருகிற ஈர்ப்பு தான் அவனிடம் இருக்கே தவிர. அவன் மோசமானவன் இல்லை. அதிலும் பெண்கள் கிட்ட கண்ணியமா தான் பழகுறான்” என்றான்.சந்தேகமாக மகனை திரும்பி பார்த்தவர் பின்னர் வெற்றியிடம் திரும்பி “இதனால இவனுக்கு பிரச்சனை வந்தா என்ன பண்றது. வேண்டாம்! இவனை விட்டுடுங்க” என்றார்.“அவனோட பாதுகாப்புக்கு நான் உறுதி தரேன் சார். நீங்க தைரியமா அனுமதி கொடுங்க”.அவன் கூறினாலும் மனம் வராமல் மல்லியை பார்க்க, அவருக்கும் இதில் விருப்பம் இல்லை என்பதை போல தலையசைக்க, சூர்யா வேகமாக சென்று அன்னையின் கையை பிடித்துக் கொண்டு “அம்மா! எனக்கு இது நல்லவொரு சான்ஸ்...நிச்சயமா எனக்கு இதில் எதுவும் ஆகாது. ப்ளீஸ்! எனக்கு அனுமதி கொடுங்க” என்றான்.சற்று நேரம் இருவரும் யோசனையுடன் அமர்ந்திருக்க, சந்துரு முதலில் தன்னை சுதாரித்துக் கொண்டு “சரி! அவன் வரட்டும்” என்றார்.சூர்யா பாய்ந்து சென்று தந்தையைக் கட்டிக்கொண்டு “தேங்க்ஸ் பா” என்றான்.

வெற்றியும் “தேங்க்ஸ் சார்” என்றான்.

அவனை கூர்ந்து பார்த்து “எனக்கு பதிலுக்கு ஒரு உதவி வேணும்?” என்றார்.“சொல்லுங்க சார்”

சூர்யாவை திரும்பி பார்த்து விட்டு “இவன் தினமும் ஒரு பெண்ணை வண்டியில் கூட்டிட்டு போறான். அது யாரு என்னனு எனக்கு தெரியனும். இவனோட ஆக்டிவிட்டீஸ் கொஞ்சம் கண்காணிக்கணும்” என்றார்.அவர் அப்படி கேட்பார் என்பதை அறியாத வெற்றி வந்த சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டான். சூர்யாவிற்கோ அப்பாவின் மீது கொலைவெறியே எழுந்தது.சூர்யாவை போட்டு பார்க்க எண்ணிய வெற்றி “ஓகே சார்! நான் என்ன எதுன்னு விசாரிச்சு உங்களுக்கு தகவல் தரேன்” என்றான்.சூர்யாவின் பக்கம் திரும்பிய சந்துரு “இனியாவது ஒழுங்கா இரு. இவர் கண் உன் மேல தான் இருக்கும்” என்றார் மிரட்டலாக.

எதுவும் சொல்லாமல் பல்லைக் கடித்தபடி அமர்ந்திருந்தான் சூர்யா. வெற்றி கிளம்புவதாக சொல்லி எழுந்திருக்க, அவன் பின்னே வழியனுப்ப செல்வதாக கூறி கீழே சென்றான் சூர்யா.அங்கே கீழ் வீட்டு மாமியோடு பேசிக் கொண்டிருந்த கிருத்திகா “சூர்யா! எங்கேடா உன்னை ரொம்ப நாளா காணும்?” என்று அவன் முன்னே சென்று நின்றாள்.வெற்றியின் முன்பு அவளிடம் பேச சங்கடமாக இருக்க, “கொஞ்சம் வேலை கிருத்தி...சரி நான் அப்புறம் பேசுறேன்” என்று கிளம்பினான்.

வெற்றியோ சூர்யாவை குறுகுறுவென்று பார்த்துக் கொண்டே தன் பைக் அருகே செல்ல, அவனை முறைத்த சூர்யா “எதுக்கு இப்படி பார்க்குறீங்க?” என்றான் எரிச்சலாக.“நீங்க கோபியர் கொஞ்சும் ரமணனா? உங்கப்பா உன்னை இப்படி வச்சு செய்றாரேடா” என்றான் சிரிப்புடன்.“மகா எரிச்சலா இருக்கு வெற்றி. இந்த பொண்ணு கிட்ட பேசினாலும் உடனே அவ பின்னாடி நான் ஓடி போயிடுவேன் நினைக்கிறார்” என்றான்.“ஹாஹா! விடுடா! விடுடா!” என்றவன் குறுஞ்சிரிப்புடன் “ஆனாலும் உனக்கு மச்சமிருக்குடா. பொண்ணுங்க தானா வந்து பேசுறாங்களே” என்றான்.வெற்றியை முறைத்து “அதெல்லாம் ஒரு கனா காலம். இப்போ எல்லாம் பொண்ணுங்க என்றாலே அலர்ஜியா இருக்கு” என்றான் உடம்பை உதறியபடி.பைக்கில் சாவியை போட்டு ஏறி அமர்ந்தவன் குழப்பத்துடன் “ஏன் திடீர்னு என்ன?” என்றான்.அவனை முறைத்து “எல்லாம் உங்க மனைவியோட திருவிளையாடல் தான். பொண்ணுன்னு ஒரு பேயோட என்னை கோர்த்து விட்டிருக்காங்களே. கனவுல கூட வந்து பயமுறுத்துறா” என்றான் சோகமாக.“ஹாஹா..” என்று சத்தமாக சிரித்து “இதை அவ கேட்கணும்...நீ செத்தே”.“நான் ஒண்ணு சொல்றேன் கேளுங்க வெற்றி. தயவு செஞ்சு என்னை தனியா இந்த ஆபரேஷன்ல ஈடுபட வைங்க. அவளோட கோர்த்து விடாதீங்க” என்றான் கெஞ்சலாக.வெற்றியால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. சூர்யாவின் தோளில் தட்டி “டேய்! இந்த ஆபரேஷனுக்கு துருப்பு சீட்டே அவ தான். அதோட அந்த பயலுக்கு பொண்ணுங்களை தான் பிடிக்கும். உன்னை வச்சு என்ன செய்ய?” என்றான்.“அது தான் சொல்றேன் வெற்றி. அவனுக்கு பொண்ணுங்களை தானே பிடிக்கும். இவளை அவன் பொண்ணுன்னு நம்பவே மாட்டானே” என்றான்.பொங்கி வந்த சிரிப்புடன் “டேய்! நீ ரொம்ப ஓவரா போற...என் பொண்டாட்டி கிட்ட இப்படி பேசிடாதே. அவ கிட்ட போட்டு கொடுக்கிறதும் இல்லாம இவளே நாலு அப்பு அப்பிடுவா” என்றவன் “ஓகே சூர்யா...அடுத்தது என்ன எப்படின்னு உனக்கு எல்லாம் தகவல் வரும்...விஷயம் எந்தக் காரணம் கொண்டும் வெளியே வரக் கூடாது” என்று கூறிவிட்டு கிளம்பினான்.
 
bselva

Active member
ha ha surya va alaluku vachu vanguranga.😆😆.
analum surya appa ipidi konjam kooda pilla mela nalla enname ilama iruka koodathu.pavam payan. ipidi oru parents ipidi oru pulla ha ha family ye oru kilpak case mathiriye irukangala oru mathiri dibolic a behave pannikittu. 😆😆
 
Anuya

Well-known member
Haha.... Sema epi sudha maa.... Sirichi mudiyala🤣🤣 surya paavam da vetri avara poi enda ipadi paduthuringa kudumbama sernthu.... Fun-filled epi sudha maa... Waiting for nxt ud😍😍❤️
 
Ama ama kaa... Ivanga thaan surya ku oru bad boy image ah create seiranga.... Avan.oru pattu thanga kutty❤️
எல்லாத்துக்கும் காரணம் இந்த ரைட்டர் அம்மா தா அவிங்க மட்டும் சூரியா விசயத்தில் கோக்கு மாக்கு பண்ணட்டும் அப்புறம் பொங்கல் கன்பர்ம் அவுங்களுக்கு
 
sudharavi

Administrator
Staff member
அத்தியாயம் – 15

இஷான், கார்த்திக் மற்றும் பார்த்திபனுடன் அமர்ந்து அந்த கேசிற்குரிய பிரச்சனைகளை பேசிக் கொண்டிருந்தவர்களை கலைத்தது கன்யாவின் குரல். சூர்யா தான் அவளை அழைத்துக் கொண்டு வந்திருந்தான். அவனிடம் நிறுத்தாமல் வளவளத்துக் கொண்டு வந்தாள்.

ஆண்கள் அனைவரும் அமர்ந்திருக்க, சத்யா தங்கள் முன்னே இருந்த போர்டில் கேஸ் சம்மந்தப்பட்ட விவரங்களை எழுதி, எங்கெங்கு என்னென்ன பிரச்சனைகள் வரலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அந்நேரம் உள்ளே வந்த கன்யாவை முறைத்து “கன்யா! நீ இனி கொஞ்சம் சீரியசாக இருக்கணும். முக்கியமா பேச்சை குறைக்கணும்” என்றாள் கண்டிப்புடன்.

சூர்யா இஷான் அருகில் சென்று அமர்ந்து கொள்ள, தனக்கு தெரிந்த விவரங்களை கூற ஆரம்பித்தாள். தனக்கு கிடைத்த விவரங்களை வைத்து மேற்கொண்டு இதை எப்படி கொண்டு செல்வது என்று பேச ஆரம்பித்தனர்.

சூர்யாவிற்கு அவர்கள் சொன்ன விவரங்கள் அதிர்ச்சியைக் கொடுத்தது. இப்படியும் நடக்குமா? ஒருவரால் சக மனிதரை எப்படி துன்புறுத்த முடியும் என்று அவனால் நம்பவே முடியவில்லை. அதிலும் சத்யவாணி சொன்ன விதம் அவனுக்கு அதை கேட்டு னா வறண்டு போனது. தனக்கு மட்டும் தான் அப்படி இருக்கிறதா என்று கன்யாவை திரும்பி பார்க்க, அவளோ மிகச் சாதரணமாக கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

‘இவ சரியான கல்நெஞ்சக்காரியா இருப்பா போல’ என்றெண்ணிக் கொண்டான்.

சத்யா பேசி முடித்ததும் நெற்றியை தடவிக் கொண்டமர்ந்திருந்த வெற்றி “ஏன் வாணி இதெல்லாம் அங்கங்கே யாரோ சேகரித்த விவரங்கள் தானே. பாதிக்கப்பட்ட யாரும் முன் வந்து தகவல் கொடுக்கல இல்லையா?” என்று கேட்டான்.

“ம்ம்...ஆமாம் வெற்றி. ஆனா சொல்ல தயாரா இருக்கிற பெண்களும் இருக்காங்க. அதை நான் வெளில கொண்டு வரேன்” என்றாள் அழுத்தமாக.

அதுவரை பொறுமையாக இருந்த கன்யா “அக்கா! இதுல என் பங்கென்ன?” என்றாள்.

அவளை சீரியசான முகத்தோடு பார்த்த வாணி “இந்த கேசோட துருப்பு சீட்டே நீ தான். உன்னை வச்சு தான் நாங்க அந்த கூட்டத்துகிட்ட நெருங்க போறோம்” என்றாள்.

சூர்யாவும் தன் பங்கு என்ன என்று அறிந்து கொள்ள “மேம்! நான்” என்றான்.

“நீ தான் இவளுக்கும் அவங்களுக்கு நடுவில் மீடியேட்டரா இருக்கப் போற. இவளோட பாதுகாப்பு உன் கையில் தான்” என்றாள்.

அதைக் கேட்டதும் ‘இவளுக்கு நான் பாதுகாப்பா? கிழிஞ்சுது! இவளே பத்து பேரை போட்டு தள்ளுவா’ என்றெண்ணிக் கொண்டு “ஓகே மேம்” என்றான்.

தனது இருக்கையில் இருந்து எழுந்து கொண்ட வெற்றி ஆண்கள் மூவரையும் பார்த்து “இவங்க ரெண்டு பேருக்கும் முகநூலில் புதிய ப்ரோபைல் தயார் பண்ணனும். கன்யாவிற்கு நிறைய போட்டோ எடுத்து அப்லோட் பண்ணி வைக்கணும். அவளோட பிரெண்ட் லிஸ்ட்டில் நிறைய அழகான பெண்கள் பிரெண்டா இருக்கணும். அதுக்கு நீங்க தயார் பண்ண போகிற புகைப்படங்கள் எல்லாம் உயிரோட இல்லாத பெண்களோட புகைப்படங்களை ரெடி பண்ணுங்க. எந்த வகையிலும் சந்தேகம் எழாதவாறு இருக்கணும் இவளோட ப்ரோபைல். தேதி முதற்கொண்டு மூன்று நான்கு வருடங்கள் முன்னாடி ஆரம்பித்த மாதிரி ரெடி பண்ணனும்” என்றான்.

வெற்றி நிறுத்தியதும் பார்த்திபனிடம் சென்ற வாணி “நீங்க இவனுக்கு ப்ரோபைல் ரெடி பண்ணி, கொஞ்சம் தற்காப்பு கலைகளை கொடுத்து இவனை தயார் செய்ங்க. அதற்குள்ள நானும், இஷானும் மேற்கொண்டு விவரங்களை சேகரிக்கிறோம்” என்றவள் வெற்றியின் பக்கம் திரும்பி “என்ன வெற்றி நான் சொல்றது சரி தானே” என்றாள்.

அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தவன் அவள் கேட்டதும் நின்று “ம்ம்..சரி தான். நானும் கார்த்தியும் இதுல அரசியல்வாதிகள் பின்புலம் எதுவும் இருக்கான்னு ஆராய்கிறோம்” என்றான்.

தலையசைத்தபடி அதை ஒத்துக் கொண்ட வாணி “கைஸ்! இனி நாம நேராக சந்திப்பதை தவிர்க்கணும்” என்றவள் அங்கிருந்த மேசையிலிருந்து ஆறு சிம் கார்டுகளை எடுத்து அவர்களின் முன்னே போட்டாள்.

“எதுவாக இருந்தாலும் இங்கே இருக்கிற நம்பர்ல கூப்பிடுங்க” என்றவள் மேலும் சில காகிதங்களை அவர்களின் முன்னே எடுத்து வைத்தாள். அதில் அவர்களின் பெயர் மாற்றப்பட்டு ஒவ்வொருவருக்கும் வேறொரு பெயர் கொடுக்கப்பட்டிருந்தது.

“இதை நோட் பண்ணிக்கோங்க. இந்த கேஸ் முடிகிற வரை நாம பேசும் போது இந்த பெயரில் மட்டுமே கூப்பிடனும். அதோட கன்யா, சூர்யா இவங்க ரெண்டு பேருக்கும் தங்குவதற்கு வேறு இடம் பாருங்க. இவங்க வீட்டில் இருக்க வேண்டாம்” என்றாள்.

சூர்யா, கன்யா இருவரையும் பார்த்த வெற்றி “உங்க ரெண்டு பேருக்கும் காலேஜில் பேசிட்டேன். இந்த ஆபரேஷன் முடியும் வரை நீங்க காலேஜ் போக வேண்டியதில்லை. நாங்க என்ன சொல்றோமோ அதை பாலோ பண்ணனும்” என்றான்.

கன்யாவோ முகத்தை சுருக்கி “அப்போ இவன் கூட நான் இனி ட்ராவெல் பண்ண முடியாதா?” என்றாள் சோகமாக.

இதழில் எழுந்த சிரிப்புடன் வெற்றி சூர்யாவை பார்க்க, அவனோ பல்லைக் கடித்துக் கொண்டு அவளைப் பார்த்தான்.

வாணி அவள் சொன்னதை கண்டு கொள்ளாமல் “ஓகே கைஸ்! உங்க நேம் கார்ட் அண்ட் சிம்மை எடுங்க. யார் யாருக்கு என்ன நம்பர் என்று தெரிந்து கொண்டு இங்கேருந்து கிளம்புவோம்” என்றாள்.

பார்த்திபன் முதலில் எடுக்க அவனுக்கு வாசு என்கிற பெயர் வரவும், தனது புதிய மொபைல் எண்ணை அனைவருக்கும் காண்பித்தான். அடுத்து இஷானுக்கு ராகேஷ் என்கிற பெயரும் நம்பரும் வந்தது. அடுத்தது கார்த்திக்குக்கு ஷ்யாம் என்கிற பெயர் வந்தது. சூர்யாவிற்கு சர்வா என்கிற பெயரும்ம், வெற்றிக்கு வால்டர் என்கிற பெயரும், கன்யாவிற்கு பூஜா என்கிற பெயரும், வாணிக்கு பிரபா என்கிற பெயரும் வந்தது. அனைவரும் தங்களின் எண்களையும் , பெயரையும் பகிர்ந்து கொண்டு பிரிந்தனர்.

சூர்யாவும், கன்யாவும் தங்களின் வீட்டினரிடம் சொல்லிக் கொண்டு வெற்றி ஏற்பாடு செய்யவிருக்கும் இடத்தில் தங்குவதற்கு எதுவாக தயாராக சென்றனர்.

சூர்யாவின் வரவிற்காக காத்திருந்த சந்துரு அவன் உள்ளே நுழைந்ததுமே கையைப் பிடித்து இழுத்து தன் முன்னே அமர வைத்தவர் “சூர்யா! அவங்க கிட்ட பேசினியா?” என்றார்.

இவர் என்ன பேசப் போகிறார் என்கிற யோசனையுடன் அமர்ந்தவன் “ம்ம்...பேசிட்டேன்” என்றான்.

முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு “என்ன சொன்னாங்க?” என்றார்.

எரிச்சலுடன் பார்த்தவன் “அதெல்லாம் உங்க கிட்ட சொல்ல முடியாது” என்றான்.

கடுமையாக அவனை முறைத்து “நான் உன் அப்பன். எனக்கு தெரியாம இருக்க கூடாது” என்றார்.

“உங்க அப்பனுக்கு அப்பன் வந்தாலும் சொல்ல முடியாது”.

“இங்கே பாரு சூர்யா! உனக்கு இதெல்லாம் புது அனுபவம்” என்றவரை மடக்கியவன் “நீங்க எப்போ போலீசில் வேலை பார்த்தீங்க அனுபவம் ஏற்பட?” என்றான்.

இவன் என்னடா எப்படி போனாலும் கேட்டை போடுறான் என்கிற எரிச்சலுடன் “நான் சொல்றதை கவனமா கேளு. உன்னை சுத்தி இருக்கிற யாரையும் நம்பாதே” என்றார்.

“உங்களையுமா?’

லேசாக நெஞ்சை தடவிக் கொண்டவர் “சூர்யா! கொஞ்ச நேரம் பொறுமையா கேளு” என்றார்.

‘இவர் இன்னும் முடிக்கலையா? இதென்னடா சூர்யாவுக்கு வந்த சோதனை? என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டே அவரை கடுப்பாக பார்த்து வைத்தான்.

“வெற்றியே சொன்னாலும் நீ எதையும் ஆராயாம நம்பக் கூடாது. உன் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு இது” என்றார்.

மல்லியோ மகனை கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தவர் “நீ என்ன தான் குறும்புத்தனம் பண்ணினாலும் என் கண் முன்னாடியே இருக்கிறப்போ உன்னோட அருமை தெரியல சூர்யா. உனக்கு நாக்கும், மூக்கும் ஏழு ஊருக்கு இருக்கும். சாப்பாட்டுக்கு என்னடா பண்ணுவ?”.

மனைவியை திரும்பி பார்த்து முறைத்த சந்துரு “நீ வேணா கூட போய் சமைச்சு போடுறியா?” என்றார் கிண்டலாக.

இருவரையும் முறைத்தவன் “இப்படியே பேசிட்டு இருந்தா நான் கிளம்பின மாதிரி தான்” என்று எழுந்து கொண்டவனின் கைகளைப் பற்றி கொண்ட சந்துரு “நல்லா ஞாபகம் வச்சுக்கோ சூர்யா. ரொம்ப தைரியமா எது வந்தாலும் எதிர்த்து போராடனும். உனக்கு பயமா இருந்தா என் பேரை நினைச்சுக்கோ தைரியம் தானா வந்துடும்” என்றார்.

அவரை மேலும் கீழும் பார்த்துவிட்டு ‘நாயை கண்டா பில்டிங்கை சுத்தி சுத்தி ஓடுற இவரெலாம் தைரியத்தைப் பத்தி பேசுறது ஓவரா இல்ல’ என்று தனக்குள் முனகி கொண்டு அறைக்குள் சென்றான்.

அதே நேரம் கன்யா ராகவனிடம் சிக்கி நூட்லஸ் ஆகி இருந்தாள். அவளை நிற்க வைத்து அட்வைஸ் என்கிற பெயரில் காதில் ரத்தம் வர வைத்துக் கொண்டிருந்தார். தங்கை இருந்தாலாவது அவளை வைத்து சமாளிக்கலாம் என்று பார்த்தால் அவள் பள்ளிக்குச் சென்று விட்டிருந்தாள்.
 
sudharavi

Administrator
Staff member
“இங்கே பாரு கன்யா..எனக்கு தினமும் சரியா போன் பண்ணி பேசிடனும். அந்த போலீஸ்காரங்களை நம்பாதே. அவங்க காரியம் முடிஞ்சதும் நம்மளை கழட்டி விட்டுடுவாங்க” என்றார் கடுமையாக.

அன்னை, தந்தை இருவருக்கும் தன்னை பாதுகாத்து கொள்வதாக உறுதி அளித்து விட்டு தனது பொருட்களை எடுக்கச் சென்றாள். அவள் எடுத்துக் கொண்டு கிளம்பவும் சூர்யா வரவும் சரியாக இருந்தது.

அவனைப் பார்த்த ராகவன் “நீங்க வாணி அனுப்பின போலீசா?” என்றார்.

அவரை பார்த்து தலையசைத்து விட்டு கிளம்பி விடலாம் என்றெண்ணியவன் அவரின் கேள்வியில் ஜெர்காகி ‘என்னடா இது அவ தான் லூசுன்னா அவ அப்பனும் லூசா இருக்கான்’ என்று உள்ளுக்குள் திட்டிக் கொண்டே “ஆமாம் சார்” என்றான்.

சூர்யாவை பார்த்த கன்யா “டேய்! வந்துட்டியா? என் பையை எடு” என்றாள்.

அவளது பேச்சில் பல்லைக் கடித்த சூர்யாவை மிரண்டு போய் பார்த்தார் ராகவன். மகளிடம் சென்று மெல்லிய குரலில் “கன்யா! தம்பியை பார்த்தா எனக்கே பயமா இருக்கு. நீ கொஞ்சம் பார்த்து பேசும்மா” என்றார்.

தந்தையிடம் எதுவும் பேசாமல் அவன் பின்னே சென்றவள் பைக்கில் ஏறி அமர, அவன் வண்டியை கிளப்பி சற்று தூரம் சென்றதும் சிரிக்க ஆரம்பித்தாள். அவளது சிரிப்பு அவனுக்கு எரிச்சலைத் தர, “ஏய்! எதுக்கு சிரிக்கிற?” என்றான்.

“எங்கப்பா உன்னைப் பார்த்து பயந்து போயிட்டார் டா” என்றாள் சிரிப்புடன்.

கண்ணாடி வழியாக அவள் முகத்தைப் பார்த்தவன் “இப்போ உனக்கு சிரிப்பா தான் இருக்கும். ஒரு நாள் என்னை நம்பி என்னை காப்பாத்துங்கன்னு நிற்ப பாரு அன்னைக்கு வச்சுகிறேன்” என்றான்.

அவன் முதுகில் ஓங்கி தட்டி “இப்படி எல்லாம் ஒரு நினைப்பு இருக்கா” என்று மீண்டும் சிரிக்க ஆரம்பித்தாள்.

இவர்கள் அனைவரும் ஒருவனைத் தேடி தங்களின் பயணத்தை தொடங்க, அவனோ சென்னையின் புறநகர் பகுதியில் பங்களா ஒன்றில் சோபாவில் அமர்ந்திருந்தான். போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தவனின் முகம் உற்சாகமாக இருந்தது.

“புது பட்சியா? ஆளு எப்படி இருக்கு? நல்லா செக் பண்ணிட்டீங்களாடா? பிரச்சனை எதுவுமிலேன்னு சொல்லு பிடிச்சிடுவோம்” என்றான் கேசி.

அவனுக்கு அருகே கைகளை கட்டிக் கொண்டு நால்வர் நின்றிருந்தனர். போனை அணைத்து தூக்கி போட்டவன் “டேய்! அடுத்தது ரெடி ஆகிடுச்சாம். நீங்களும் ஒரு தடவை பார்த்திடுங்க. மற்றதை நான் பார்த்துகிறேன்” என்றான்.

அடியாள் போலிருந்தவன் “சரிண்ணா!” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.

அப்போது கேசியின் போன் விடாமல் அடிக்க, மெல்ல நகர்ந்து அதை எடுத்து பார்த்தவனின் இதழ்களில் புன்னகை. போனை எடுத்து தன்னருகே நின்றிருந்தவர்களிடம் காட்டியவன் “பட்சி சிக்கிடுச்சு. சிக்கென் சிக்ஸ்டிபை போட்டுட வேண்டியது தான்” என்றான் வசீகர சிரிப்புடன்.

சற்று நேரம் போனை எடுக்காமல் விட, அதுவோ நீ எடுக்கும் வரை ஓய மாட்டேன் என்று விடாது அடித்தது. சற்று நேரத்திற்குப் பிறகு எடுத்து காதில் வைத்து “ஹாய் ஜோ! என்னடா நான் பிசியா இருக்கேன்னு நேத்தே சொன்னேன் இல்ல. இப்படி விடாம அடிச்சா என்ன பண்றது?” என்றான் கொஞ்சலுடன்.

“ஸ்டாப் பேபி! என்னால உன்னை பார்க்காம உன் குரலை கேட்காம இருக்க முடியலடா”.

“சாரி ஜோ! எனக்கும் அப்படித்தான். ஆனா என்ன செய்ய இன்னைக்கு நிறைய மீட்டிங்க்ஸ் சோ ரொம்ப பிசிடா”.

அந்தப் பக்கம் இருந்தவளோ ஹஸ்கி வாய்சில் “ப்ளீஸ் பேபி! எனக்கு உன்னை பார்க்கணும்” என்று கெஞ்சினாள்.

பக்கத்திலிருந்தவனிடம் கண்களை சிமிட்டிவிட்டு “ஒ..நோ ஜோ! என்னால உன்னோட தவிப்பை புரிஞ்சுக்க முடியுது. பட் இப்போ எனக்கு நேரமில்ல. சாயங்காலம் ஏழு மணிக்கு வேணா நான் ப்ரீ. நான் சொல்ற இடத்துக்கு வந்துடு பார்க்கலாம்” என்றான்.

அவனை சிறிதளவும் சந்தேகப்படாமல் அவன் சொன்னதும் “ஓகே பேபி..லவ் யூ டா” என்று முத்தம் வைத்துவிட்டு அவன் சொன்ன அட்ரசை நோட் செய்து கொண்டு போனை வைத்தாள்.

போனை அணைத்துவிட்டு அதை கையில் வைத்து கொண்டு சிரித்தவன் “ஆளை மயக்கிற அழகோட, பார்க்க பளபளப்பா இருந்தா நாம கூப்பிடாமல் அவளுங்களே வந்து விழறாலுங்கடா...இப்படி பொண்ணுங்க இருக்கிற வரைக்கும் எனக்கு கொண்டாட்டம் தான்” என்று சொல்லிக் கொண்டு எழுந்து நின்றான்.

“அப்போ கெஸ்ட் ஹவுசை ரெடி பண்ணிடவான்னே” என்றான் மூவரில் ஒருவன்.

“ம்ம்...இன்னைக்கு நான் மட்டும் தாண்டா. வேற யாருக்கும் இன்பார்ம் பண்ணாதீங்க. பட்சி பறந்திடுச்சுன்னா கஷ்டம்” என்றான்.

“சரிண்ணா” என்று கூறிவிட்டு அவன் சென்று விட, கேசி தன்னரைக்குச் சென்று கணினியில் முகநூல் பக்கத்தை ஆராய ஆரம்பித்தான். அழகான ப்ரோபைல் படம் வைத்திருக்கும் பெண்களின் படங்களின் முகவரியை தனியே எடுத்து வைத்துக் கொண்டு, அவர்களைப் பற்றி ஆராய ஆரம்பித்தான்.

சூர்யாவுடன் சென்று தனக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் இறங்கிக் கொண்டாள். அதுவொரு தனி வீடு. ஆனால் சத்யாவால் ஹாஸ்டல் போன்று உருவாக்கப்பட்டு நாலைந்து பெண்கள் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவருமே போலீஸ் துறையை சேர்ந்தவர்கள். அவளை இறக்கிவிட்டு தனக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீட்டிற்கு சென்றான் சூர்யா.

சூர்யா சென்றதும் கன்யாவை அழைத்துக் கொண்டு சென்று போட்டோ சூட் நடத்தி பலவித போஸ்களில் புகைப்படம் எடுத்தார்கள். அவற்றை வைத்து அவளுக்கு முகநூலில் பூஜா என்கிற பெயரில் கணக்கு துவங்கப்பட்டது. சூர்யாவிற்கும் சர்வா என்கிற பெயரில் கணக்கு தொடங்கப்பட்டது.

வாணி மேலும் விபரங்கள் தேடுவதற்கு முயன்று கொண்டிருக்க, அவளது எண்ணிற்கு புதிய நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. யோசனையுடன் எடுத்து வைத்தவளின் காதில் விழுந்த செய்தி அதிர்ச்சியளிக்க அவசரமாக எழுந்தவள் “உங்களை நான் நேரில் பார்க்க முடியுமா?” என்றாள்.

அந்தப் பக்கமிருந்தவளோ “வேண்டாம்! இந்த விஷயம் என் மூலமா வெளியே வந்தது என்று தெரிந்தால் என் உயிருக்கே ஆபத்து...ஆனா என்னைப் போல நிறைய பெண்கள் பாதிக்கப்படக் கூடாது என்று தான் உங்க கிட்ட சொல்றேன்” என்றாள்.

வாணி அவள் பேசப்பேச அதை ரெகார்ட் செய்து கொண்டாள்.
 
Anuya

Well-known member
Super epi sudha maa❤️😍.... Intha kumbal an sikiram kandu pidichi Sathya and team thakka thandanai kudukanum..... Ipo niraiya nadakura oru scenario va sollitinga sudha maa.... Surya ku sarva name nalla iruku❤️❤️😍😍😍
 
bselva

Active member
super epi mam.oru pakkam story serious mode la poitu irukum pothu side la ithungaloda alumbal. ha ha ithungala vida ithunga parents than semma comedy panranga. villain kitte pavam surya vum kanyavum maatipangalonu manasu pathaikuthu.
 
sudharavi

Administrator
Staff member
அத்தியாயம் -16

ஈசிஆரில் இருந்த அந்த பண்ணை வீடு சத்தமின்றி ஒரு பெண்ணின் கண்ணீரை சுமக்க தயாராகிக் கொண்டிருந்தது. கேசி ஐந்து மணிக்கே அங்கு வந்து இறங்கி இருந்தான். அவனது சகாக்கள் அவனது அறையை தயார் செய்து கொண்டிருந்தார்கள். சுவற்றிலும், கண்ணாடியிலும் கமெராக்கள் வைக்கப்பட்டு சரியான ஆங்கிளில் இருக்கிறதா என்று சரி பார்க்கப்பட்டுக் கொண்டிருந்தது.

பாரில் அமர்ந்திருந்தவனுக்கு அழைப்பு வர “எஸ் சித்து! வைட்டிங் பார் தீ பர்ட். நோ..நோ..இன்னைக்கு நான் மட்டும் தான். அவளுக்கு மேலும் நம்பிக்கையை கொடுத்து வேலையை முடிச்சிட்டா ஐ வில் ஷேர்” என்றான் விகாரமான சிரிப்புடன்.

அந்தப் பக்கம் இருந்தவன் ஏதோ சொல்ல, அதற்க்கு சத்தமாக சிரித்துக் கொண்டவன் “என்னோட பாடிக்கு தான் இவ்வளவு பேன்ஸ்” என்றான் கள்ளச் சிரிப்புடன்.

“என்ஜாய்...வைட்டிங் பார் தி பீஸ்ட்” என்றான் சித்து.

“யா சுயர்” என்றவன் ஷாட் கிளாசை எடுத்து வாயில் கவிழ்த்துக் கொண்டான்.

சற்று நேரம் யோசித்தவன் நேரே ஜிம்மிற்கு சென்று ட்ரேட் மில்லில் ஓட ஆரம்பித்தான். வியர்வை வழிய வழிய ஓடியவன் அதை நிறுத்திவிட்டு குளித்து பிரெஷாகி ஹாலிற்கு வந்தான். அதற்குள் அவனது சகாக்கள் வேலையை முடித்துவிட்டு அவன் முன்னே வந்து நின்றனர்.

“ம்ம்...எல்லாம் முடிஞ்சுதா?”

“முடிஞ்சுது அண்ணா”

“ஓகே...அவ வந்து போகிற வரை யாரும் கண்ணில் படாம இருங்க. நான் மட்டும் தான் இங்கே இருக்கிறதா அவ நம்பனும்”.

“சரிண்ணா...நாங்க எல்லோரும் அவுட் ஹவுசில் இருக்கோம்”.

அவர்களை யோசனையுடன் பார்த்தவன் “எதுவும் மிஸ் ஆகிடாதில்லை” என்றான்.

“இல்லன்னா பக்காவா செட் பண்ணிட்டோம்”

அப்போ ஓகே...நீங்க கிளம்புங்க”

அவர்கள் கிளம்பியதும் தன்னறைக்கு சென்று கையில்லா கட் பனியனும் ஷார்ட்ஸ்சம் அணிந்து கொண்டு கீழே வந்தான். சரியாக அந்நேரம் கார் வந்து நிற்க, அதிலிருந்து தேவதை போல இறங்கினாள் ஜோ.

அவளை பார்வையாலேயே மேய்ந்து கொண்டே வாயிலுக்குச் சென்றான். காரை நிறுத்தி பூட்டி விட்டு அவனை நோக்கி நடக்க, அவளது விழிகள் அவனது உருவத்தை அளக்க ஆரம்பித்தது.

வேக நடையுடன் அவள் அருகே வந்தவன் டக்கென்று இடையை பிடித்து தன்னருகே இழுத்து அவள் கழுத்தில் முகம் புதைத்து “வா பேபி! யு ஆர் லுக்கிங் கார்ஜியஸ்” என்றான்.

அவளும் சிறிதும் எதிர்ப்பை தெரிவிக்காமல் அவனுடன் இழைந்தவள் “நீயும் தான் கேசி” என்றாள் அவன் மீது சாய்ந்தவாறு.

தன் பிடியிலேயே வைத்துக் கொண்டு அவளோடு நடந்தவன் சோபாவில் சென்றமர, அவள் அவன் மடி மீது அமர்ந்து கொண்டு “உன்னை ரொம்ப மிஸ் பண்ணினேன் பேபி” என்றாள்.

அவர்களின் நெருக்கம் அங்கங்கே வைக்கப்பட்டிருந்த கமேராக்களில் புகைப்படங்களாக எடுக்கப்பட்டுக் கொண்டிருந்ததது. இது எதையுமே அறியாத ஜோ அவன் மீதான மயக்கத்திலேயே இருந்தாள். சிறிதும் தன் பெண்மையை பற்றி எண்ணாமல் கையில் கிடைக்காத சொர்கத்தை கண்டு விட்டது போல நடந்து கொண்டாள்.

அவள் ஒரு டாக்டர். தனியார் மருத்துவமனையில் லட்ச கணக்கில் சம்பளம் வாங்குபவள். அப்பர் மிடில் கிளாஸ் வகை குடும்பத்தை சேர்ந்தவள். தாய், தந்தைக்கு மூத்த பெண். அவளுக்குப் பிறகு தம்பி ஒருவன் இருக்கிறான். முகநூலின் மூலம் கேசியின் அறிமுகம் கிடைக்க, அவனது புகைப்படங்கள் மீது விழுந்த மையல், காதலாக எண்ணி அவனுடன் போன் மூலம் நெருங்கி பேசும் அளவிற்கு வளர்ந்தது.

இப்படியொரு உடல் வளம் உள்ள ஒருவனை காதலித்தால் தனது நட்புகள் இடையே பொறாமையை உண்டு பண்ணும் என்று தவறாக எண்ணிக் கொண்டு யாரென்று தெரியாத ஒருவனின் வலையில் தானாக சிக்கிக் கொண்ட பறவை அவள். இதோ அவளை விழுங்கி கபளீகரம் செய்ய, தயாராக இருக்கிறான்.

தனக்கு நேரப் போகும் கொடுமையை அறியாமலேயே அவன் இழுத்த இழுப்பிற்க்கு எல்லாம் வளைந்து கொடுத்துக் கொண்டிருந்தாள்.

சற்று நேரம் வரை அவள் உணர்வுகளோடு விளையாடியவன், இனி தான் அத்து மீறினாலும் அதை ஏற்றுக் கொள்வாள் என்கிற நிலை வந்ததும் தனதறைக்கு கொண்டு சென்றான். எதற்குமே எதிர்ப்பு தெரிவிக்காமல் அவனது ஆசைக்கெல்லாம் வளைந்து கொடுத்தாள். அவனோ தனது ஒவ்வொரு அசைவையும் அங்கிருக்கும் காமெராகளை நோக்கியே வைத்துக் கொண்டான்.

அனைத்தும் முடிந்து சிறிதும் தான் செய்து வைத்திருக்கும் வேலைக்கு சலனப்படாமல் அவன் நெஞ்சின் மீது சாய்ந்து கொண்டு “பேபி! இன்னைக்கு செம வேலை டா...ஆனாலும் உன்னை பார்க்காம இருக்க முடியலேன்னு தான் வந்தேன்” என்றாள் அரை கண்களை மூடியபடி.

அவளது தலையைக் கலைத்து “இன்னைக்கு இப்படியொரு கிப்ட்டை எதிர்பார்க்கவே இல்லடா” என்றான்.

அவனை நிமிர்ந்து பார்த்து விட்டு எழுந்தவள் “நான் என்னைக்கும் உன்னுடையவள் பேபி” என்று கூறி கண் சிமிட்டிவிட்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

அவள் சென்ற திசையை பார்த்துக் கொண்டிருந்தவன் “உன்னை போல பெண்கள் இருக்கிற வரைக்கும் எனக்கெல்லாம் வாழ்வு தாண்டி” என்று சொல்லிக் கொண்டு ஆடைகளை அணிந்து கொண்டு கீழே செல்ல தயாராக இருந்தான்.

அவள் வந்ததும் இருவரும் கீழே செல்ல, “நான் கிளம்புறேன் பேபி! நெக்ஸ்ட் வீக் நிறைய வேலை இருக்கு. சோ உன்னை பார்க்க முடியாது” என்று கூறி எம்பி அவன் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.

அவனோ அவளை தொடாமல் கேலியாக பார்த்தபடி நின்றிருந்தான். அதை எல்லாம் உணராமல் காரில் ஏறி அமர்ந்தவள் “பை டா! எப்போ முடியுதோ போன் பண்றேன்” என்று காரை கிளப்பினாள்.

வெறுமனே தலையசைத்து விட்டு ‘நாளைக்கே அலறி அடிச்சிட்டு போன் பண்ணுவடி’ என்று சொல்லிக் கொண்டு வீட்டிற்குள் சென்றான்.

அவளது கார் அங்கிருந்து சென்றதும் அவுட் ஹவுசில் இருந்தவர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். கேசி சோபாவில் பாட்டிலுடன் அமர்ந்திருக்க, அவர்கள் அவனது அறையை நோக்கி சென்றனர். அங்கிருந்த கமெராக்கள் உயிரூட்டப்பட்டு அதில் பதியப்பட்டிருந்த காட்சிகளை லேப்டாப்பில் ஒட்டி பார்க்க, ஆரம்பித்தனர்.

கீழே இருந்தவன் தள்ளாடியபடி மாடிக்கு செல்ல, அங்கே பார்த்துக் கொண்டிருந்தவர்களின் பின்னே சென்று நின்றவன் ஓடிக் கொண்டிருந்த காட்சிகளைப் பார்த்து சொல்ல முடியாத வார்த்தைகளால் கமென்ட் அடிக்க ஆரம்பித்தான். அவர்களும் அவளைப் பற்றி அவளது அங்கங்களைப் பற்றி சொல்ல கூசக் கூடிய வார்த்தைகளை வைத்து கமென்ட் அடித்துக் கொண்டிருந்தனர்.

ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்து நல்ல வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தவளின் தவறான சகவாசமும், தவறான நடவடிக்கையாலும் அவளது கற்பும், உடலும் மற்றவர்களின் காட்சிப் பொருளானதை அறியாமல் அவனுடன் கூடிய கூடலை எண்ணி ரசித்துக் கொண்டே தன் வீட்டிற்கு சென்றாள். அவள் வீடு போய் சேரும் முன்பே அவளது விடீயோ பலரின் மொபைலுக்கு அனுப்ப பட்டது. ஒரே இரவில் அவளது உடலை பலரின் பார்வைக்கு விருந்தாக்கி இருந்தான் கேசி.

வாணியும், வெற்றியும் தங்கள் வீட்டில் அமர்ந்து அன்று வந்த அழைப்பை பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.

“எப்படி வாணி? இந்த பொண்ணுங்களுக்கு அறிவே கிடையாதா?” என்றான் எரிச்சலாக.

அவளோ கடுப்பாகி முறைத்து “இந்த மாதிரி xxxx பயலுக இருக்கிற வரை பொண்ணுங்களுக்கு ஆபத்து தான்” என்றாள்.

“சரி! சரி! உன் திருவாசகத்தை ஆரம்பிக்காதே. அந்த பொண்ணு வேற என்ன சொன்னா?”

அவள் சொன்னதை எல்லாம் ஒன்று விடாமல் கூறியவள் “எனக்கென்னவோ இது ஒருத்தனை மட்டும் நம்பி நடக்கிற மாதிரி தெரியல. அவன் பின்னாடி ஒரு க்ரூப்பே இருக்குன்னு நினைக்கிறேன்” என்றாள்.

லாப்டாப்பை தூக்கிக் கொண்டு வந்தவன் “அந்த நாயோட ஐடியை சொல்லு பார்ப்போம்” என்றான்.

அவள் சொல்ல அவனது ஐடியை ஓபன் செய்து பார்க்க, அவனது புகைப்பட கலேரி எல்லாம் துழாவி அனைத்தையும் பார்த்து முடித்தவன் “சரியான மேல் ப்ராஸ்ட்டிடியுடா இருப்பான் போல” என்றவன் மேலும் சில பல கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்து விட்டு லாப்டாப்பை நகர்த்தினான்.
 
sudharavi

Administrator
Staff member
வாணியோ அவனது ப்ரோபைலில் பார்வையை வைத்திருக்க, அதை கண்ட வெற்றிக்கு கோபம் எழ, “அடியே! அங்கே என்ன பார்வை? அந்த நாய் இப்படி போட்டோ போட்டு எல்லா குடும்பத்திலேயும் குழப்பத்தை உண்டு பண்ணிடுவான் போல” என்றான்.

முதலில் அவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் இருந்தவள் புரிந்ததும் கடுப்பாகி கையிலிருந்த புத்தகத்தால் அவனை தலையில் அடித்து “கொன்றுவேன்!” என்றவள் “கன்யாவை கவனமா பார்க்கணும் வெற்றி. அவங்க அப்பா அம்மா என்னை நம்பி தான் சம்மதம் சொல்லி இருக்காங்க” என்றாள் யோசனையாக.

“பயப்படாதே வாணி...இவனுக்கு நம்ம கையால தான் கச்சேரி” என்றான் வெறுப்புடன்.

அந்நேரம் மீண்டும் காலையில் பேசிய எண்ணிலிருந்து வாணிக்கு அழைப்பு வர, அவசரமாக ஸ்பீக்கரில் போட்டு இருவரும் கேட்க ஆரம்பித்தனர்.

“மேடம்! இன்னைக்கு இன்னொரு பொண்ணு அவன் கிட்ட மாட்டி இருக்கு. அவளோட வீடியோ சர்குலேட் ஆகுது” என்றாள் பரபரப்பாக.

“வாட்! உனக்கு எப்படி தெரியும்?”

“எனக்கு அவன் நட்பு வட்டத்தில் இருக்கிறவங்களை தெரியும்” என்றாள்.

வாணியை முந்திக் கொண்ட வெற்றி “இங்கே பாரும்மா! நீ உண்மையாவே இந்த கேசில் உதவனும்னு நினைச்சா உனக்கு தெரிந்த நபர்கள், அவனுக்கு உதவி செய்பவர்கள் எல்லோரை பற்றியும் எங்களுக்கு தகவல் கொடு. இப்படி உடைச்சு உடைச்சு சொல்றதுனால எங்களால எதையும் கண்டு பிடிக்க முடியாது” என்றான்.

வெற்றியின் குரலை கேட்டதும் சட்டென்று பயந்து போய் அமைதியாக இருந்தவள் பெருமூச்சுடன் “நான்...நான் முழுசா பாதிக்கப்படல. அவனும் நானும் நெருக்கமா இருக்கிற மாதிரி போட்டோஸ் ரெடி பண்ணி என்னை மிரட்டி ஒரு ஐந்து லட்சம் வரை வாங்கி இருக்கான் சார். ஆனா என்னுடைய அதிர்ஷடம் அடுத்த கட்டம் வரை போகல. ஆனா நிறைய பெண்களின் வீடியோ அவன் கிட்ட இருக்கு. அவனை சுத்தி நண்பர்கள், கையாள் என்று பெரும் படையே வச்சிருக்கான்” என்றாள்.

வாணி மெல்ல அவளிடம் “நீ இதெல்லாம் போனில் சொல்றது உனக்கு சேப் இல்லம்மா. நாம நேரா பார்த்து பேசினா நல்லது. நீயே இடத்தை முடிவு பண்ணு. நாங்க வந்து உன்னை பார்க்கிறோம்’ என்றாள்.

சற்று நேரம் யோசித்தவள் “ம்ம்..சரி மேடம்! நான் நாளைக்கு இடத்தையும், நேரத்தையும் சொல்றேன்” என்றாள்.

அவள் போனை வைத்ததும் இருவரும் அவள் சொல்லிய விவரங்களை பற்றி பேசிக் கொண்டிருந்து விட்டு, பார்த்திபனுக்கு அழைத்து சர்வாவின் ஐடியில் இருந்து கேசியின் நண்பன் சித்துவின் ஐடிக்கு ரிகுவேஸ்ட் கொடுக்க கூறினார்கள். சர்வாவின் ஐடியில் பல அழகிய பெண்களின் புகைப்படங்களால் நிரம்பி இருந்தது.

சூர்யாவின் அந்த ஐடியை ஓபன் செய்து பார்த்துவிட்டு “அடபாவிகளா! என்னையும் மாமா பயலாக்கிட்டாங்களே!” என்று புலம்பிக் கொண்டு அமர்ந்திருந்தான்.

அந்நேரம் கன்யா ஹாஸ்டலில் இருந்து சூர்யாவிற்கு அழைத்து “என்ன பாஸ் பண்றீங்க?” என்றாள் படுக்கையில் உருண்டபடி.

அவளது அழைப்பில் கடுப்பானவன் “கனவு கண்டுகிட்டு இருக்கேன்” என்றான்.

உடனே எழுந்தமர்ந்தவள் “கனவில் நான் வரேன்னா டா?”

“நீ மட்டும் தான் வர...தினமும் பேய் கனவா வருது” என்றான் கிண்டலாக.

அவன் தன்னை பேய் என்று சொன்னதில் டென்ஷனாகி “டேய்! இன்னைக்கு சொல்றேண்டா உனக்கு இந்த பேயோட தான் வாழ்க்கை” என்றாள் எரிச்சலாக.

அவள் அப்படி சொன்னதும் லேசாக சிரித்துக் கொண்டவன் அவளின் குறும்பில் உள்ளம் நெகிழ “உனக்கு பயமா இல்லையா கன்யா இந்த விவகாரத்தில் இறங்க” என்றான் மெல்லிய குரலில்.

அதுவரை விளையாட்டுத்தனமாக இருந்தவள் முகம் இறுக “எனக்கு இது போல பெண்களை ஏமாத்துறவங்களை பந்தாடனும்னு ஆசை. அதை இதன் மூலமா நிறைவேற்ற முயற்சிக்கிறேன்” என்றாள்.

அத்தனை நாள் அவள் தன்னை துரத்தும் போது தெரியாத ஒரு உணர்வு அவன் மனதை இப்போது உரசி செல்ல ஆரம்பித்திருக்கிறது. ஏனோ அவள் மீது ஒரு வித ஈர்ப்பு தோன்ற ஆரம்பித்திருக்கிறது. ஆரம்பத்தில் அவளது செயல்கள் அவனை வெறுப்பேற்றினாலும், அவளது குறும்பிலும், அன்பிலும் மெல்ல மனதை அவளிடம் இழக்கக ஆரம்பித்தது புரிந்து போனது. ஆனால் அதை வெளிப்படுத்த தயக்கம் இருக்கிறது. அதனால் தான் அவளை இதில் ஈடுபடுத்துவதில் சற்று பயம் எழுந்தது. சூர்யாவின் மன மாற்றத்தை அறியாத கன்யா வழக்கம் போல அவனை கலாய்த்து கொண்டிருந்தாள்.

சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு போனை வைக்கும் சமயம் “கன்யா! உனக்கு எதுவும் ப்ராப்லம்னா தயங்காம என்னை கூப்பிடு” என்று கூறி போனை வைத்தான்.

காதிலிருந்து போனை எடுத்தவள் அவன் சொன்னதைக் கேட்டு போனை வெறிக்க, ‘என்ன ஹல்க் திடீர்னு எமோஷன் எல்லாம் காட்டுறான்...நம்ம மேல பீலிங்க்ஸ் வந்துடுச்சோ’ என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

கேசி வீட்டிலிருந்து சென்ற ஜோ அன்று தன் வாழ்வின் மிக முக்கிய நாளாக எண்ணி மகிழ்வுடன் தன்னறைக்குள் புகுந்து கொண்டு அன்றைய நிகழ்வை ஓட்டிப் பார்த்து கனவுகளுடன் உறங்க ஆரம்பித்தாள்.

மறுநாள் காலை சரியாக ஆறு மணிக்கு அவளது போனில் மெச்செஜ் வந்ததற்கான நோடிபிகேஷன் சத்தம் வந்தது. அரைகுறை உறக்கத்துடனே கையை நீட்டி போனை எடுத்தாள்.

மெல்ல வாட்ஸ் அப்பை ஓபன் செய்து செய்தியை பார்க்க, அதில் “ஹாய் பேபி! வெரி குட் மார்னிங்’ என்கிற செய்தி கேசியிடமிருந்து வந்திருந்தது.

இதழில் புன்னகையுடன் ‘குட் மார்னிங்’ போட்டு முத்தம் வைக்கும் குழந்தையின் படத்தை போட்டுவிட்டு மீண்டும் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்க ஆரம்பித்தாள்.

சுமார் அரை மணி நேரம் வரை எந்த மெச்செஜும் இல்லை. ஆறரை மணியளவில் மீண்டும் படபடவென்று செய்திகள் வந்ததற்கான அறிகுறி வந்ததது.

“கேசி பேபி! ஏண்டா தூங்க விட மாட்டேன்ற” என்று புலம்பிக் கொண்டே போனை கையிலெடுத்து மெச்செஜை திறந்தாள்.

அதில் ஏதோ வீடியோ வந்திருக்க, சலிப்புடன் ‘என்னத்தை அனுப்பி வச்சிருக்கான். இவனோட லவ்வுக்கு அளவே இல்ல’ என்று புலம்பிக் கொண்டு டவுன்லோட் போட்டாள்.

அந்த மெச்செஜுக்கு கீழே “டோன்ட் மிஸ் தி வீடியோ பேபி...உனக்கு பிடிக்கும்” என்று போட்டிருந்தான்.

அதை பார்த்து தனக்குள் சிரித்துக் கொண்டவள் டவுன்லோட் முடிந்ததும் வீடியோவை ஓட விட்டாள். அது ஆரம்பித்ததுமே அவளது விழிகள் தெறித்து விழும் அளவிற்கு வெளியே வந்தது. முதல்நாள் நடந்த அவர்களின் அந்தரங்கம் அங்கே வீடியோவில் ஓடியது. அவளது இதயம் படபடவென்று அடித்துக் கொள்ள, மனமோ அவமானத்தில் துடித்தது. கண்கள் தானாக கண்ணீரை சிந்த, முழுவதும் பார்க்க இயலாமல் போனை நழுவ விட்டவள் வாயை பொத்தியபடி அழுக ஆரம்பித்தாள்.

அவளது மனம் ‘அவன் ஏன் இப்படி செய்தான்’ என்று கேள்வி கேட்டது. தங்களது அந்தரங்கத்தை வீடியோ எடுத்து அனுப்பி இருக்கிறான் என்றால் அவன் எப்படிபட்டவன்? யார் யாருக்கெல்லாம் அனுப்பி இருக்கிறான்? ஊருக்கே காட்சி பொருளானது போல் துடித்து போனாள். வெளியில் சத்தம் வராமல் படுக்கையில் விழுந்து பிரண்டு அழுது கொண்டிருக்க, அதை கலைத்தது அலைப்பேசியின் அழைப்பு.

மெல்ல அதை எடுத்துப் பார்க்க அவன் தான் அழைத்தான். கைகள் நடுங்க அதை ஏற்பதா வேண்டாமா என்கிற பயத்துடன் அதையே பார்த்திருந்தாள். அழைப்பு விடாமல் தொடர்ந்தது. அந்த சத்தமே அவளது மூளையை குத்தி குதறியது.

என்ன தான் சொல்கிறான் பார்ப்போம் என்கிற பயத்துடன் அழைப்பை ஏற்க “ஹாய் பேபி! மார்னிங்கே செம சர்ப்ரைஸ் இல்ல” என்றான் கொஞ்சலாக.

“ஏன் இப்படி செஞ்ச கேசி” என்றாள் அழுகையை அடக்கியபடி.

“என்ன பேபி இப்படி கேட்டுட்ட? நான் எவ்வளவு ரசிச்சேன் தெரியுமா? எத்தனை தடவை போட்டு பார்த்தேன் தெரியுமா?”

கரகரப்பான குரலில் “உன் கிட்ட இருந்து இதை எதிர்பார்க்கல கேசி. ஏண்டா?” என்றாள் கோபமாக.

அதுவரை இருந்த கொஞ்சல் குரலை மாற்றியவன் “ஜோ! இந்த வீடியோ ஆன்லைனில் வராம இருக்கணும்னா நீ எனக்கு டென் லேக்ஸ் கொடுக்கணும். அதை கொடுத்திட்டா தடயமே இல்லாம எல்லாத்தையும் அழிச்சிடுறேன்” என்று கூறி அவள் தலையில் விள்ளாமல் விரியாமல் குண்டை போட்டான் .

அந்த நிமிடம் அவளுக்கு தான் செய்த தப்பின் அளவு தெரிந்தது. அவனது பேச்சில் சுவாசம் கூட கஷ்டமாகி போனது. அடுத்து இதை எப்படி கையாள்வது என்று புரியாமல் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள்.

அவனோ அவளை அழைத்துப் பார்த்துவிட்டு போனை அணைத்து விட்டான்.

எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ, அறைக் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு சுதாரித்துக் கொண்டவள் அழுகையை அடக்கிக் கொண்டு “கிளம்பிட்டு இருக்கேன் மா” என்று குரல் கொடுத்தாள்.

தன்னை பொக்கிஷமாக பெற்று வளர்த்தவர்களுக்கு தான் செய்திருக்கும் செயலை என்னை கூனி குறுகி போனாள்.
 
எவ்வளவு ஒரு கேவலமான செயல், இவனுகளுக்கெல்லாம் சரியான தண்டனை குடுக்கணும்,
அட நம்ம சூர்யாக்கு லைட்டா பல்ப் எரியுதுபோல ஹ ஹா