வட்டத்துக்குள் சதுரம்- கதை திரி

sudharavi

Administrator
Staff member
#23
அத்தியாயம் – 9


மகனிடம் பேசி விட்டு வீடு நோக்கி சென்றவருக்கு அன்னையிடம் பேசிவிட பலத்த யோசனை. தான் சொல்லப் போவதை அவர் எப்படி எடுத்துக் கொள்வார்? சூழ்நிலையை உணர்ந்து முடிவெடுப்பாரா? கார்த்திகா இதற்கு என்ன செய்வாள் என்று பல்வேறு யோசனையுடன் வீடு சென்றார்.

கூடத்தில் சென்றமர்ந்தவர் “பிரபா கொஞ்சம் தண்ணி கொண்டு” என்று மனைவியை அழைத்தார்.


ஒரு சிறிய செம்பில் தண்ணீர் கொண்டு வந்த பிரபாவின் முகம் களையிழந்து காணப்பட்டது.


மனதிலிருந்த சோர்வில் அவர் கொடுத்த தண்ணீரை வாங்கி மடமடவென்று குடித்தவர் “அம்மா எங்க இருக்காங்க?” என்றார் மனைவியிடம் செம்பை கொடுத்துவிட்டு.


“அவங்க அறையில தான் இருக்காங்க” என்று கூறிவிட்டு சமயலறைக்கு சென்றார் பிரபா.


தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அன்னையின் அறை நோக்கி சென்ற கோவிந்தன் அங்கம்மாள் அமர்ந்திருந்த நாற்காலிக்கு எதிரே சென்றமர்ந்தார்.


மகனின் முகத்தைப் பார்த்தே அவர் ஏதோ முக்கியமாக பேச வந்திருப்பதை கண்டு கொண்டவர் “என்ன கோவிந்தா? என்ன விஷயம் முகம் சோர்ந்து போயிருக்கே?” என்றார்.


அன்னையை யோசனையுடன் நோக்கியவர் “இந்த கல்யாணத்தைப் பத்தி தான் பேசனும்மா” என்றார்.


கூர்மையாக மகன் முகத்தை ஆராய்ந்தவர் “மாப்பிள்ளை வந்ததும் அலமேலுவை விட்டு பேசி சீக்கிரம் முஹுர்த்த தேதியை குறிக்கனும்” என்றார்.


லேசாக தாடையை தடவிக் கொண்டு “அம்மா! நான் சொல்றதை கொஞ்சம் சரியா புரிஞ்சுக்குங்க. கொஞ்ச நேரம் அமைதியா கேளுங்க” என்றார்.


எதுவும் பேசாது அவரையே சிறிது நேரம் பார்த்தவர் “ம்ம்..சொல்லு” என்றார்.


“எனக்கும் கார்த்திகா மேல அக்கறை இருக்கு. அதுக்காக அவ மட்டும் ஆசைப்படுற காரணத்துக்காக விஜயன் வாழ்க்கையை பணயம் வைக்கணுமா?”


சற்று நேரம் அமைதியாக இருந்தவர் “நம்ம குடும்பத்துக்கு யார் மருமகளா வரணும்னு நாம தான் முடிவு பண்ணனும். அவன் ஆசைப்படுகிறவளை விட அவன் மேல ஆசை வச்சிருக்கிறவளால அவன் வாழ்க்கை கெட்டுப் போகாது” என்றார் அழுத்தமாக.


அன்னையின் கூற்றில் ஒரு நிமிடம் அதிர்ந்தவர் “அம்மா! உங்களுக்கு விஜயன் மலரை விரும்புறது தெரியுமா?” என்றார்.


கோபமாக அவரை முறைத்து “எது நடக்க கூடாதுன்னு நினைச்சு அந்தப் பெண்ணை வளர்க்க வேண்டாம்னு சொன்னேன்னோ அது நடந்திருக்கு. நானும் இந்த வீட்டில் தான் இருக்கேன் கோவிந்தா. என் கண்ணில் எதுவும் தப்பாது. ஆனா மலர் இந்த வீட்டுக்கு மருமகளாக முடியாது!” என்றார்.


அன்னையின் கோபத்தைக் கண்டு அதிர்ந்தவர் “அம்மா! நீங்க இத்தனை நாள் அந்த பொண்ணு மேல காட்டின துவேஷத்தை சாதரணமா நினைச்சிட்டேன். உங்களுக்கு ஏன் அவ மேல இவ்வளவு வெறுப்பு. ரொம்ப நல்ல பொண்ணும்மா. விஜயன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னா அவளை கட்டி வச்சா தான் நல்லாயிருக்கும்” என்றார்.


“கோவிந்தா! நிறுத்து! இதுக்கு மேல பேசினா என்ன செய்வேன்னு தெரியாது. இந்த வீட்டுக்கு மருமக என் பேத்தி தான். இதை மாற்ற நினைக்காதே” என்று கூறி விட்டு அறையை விட்டு வெளியேறினார்.


அன்னையின் கோபம் கண்டு சோர்ந்து போனவர் அறையை விட்டு வெளியேறும் நேரம் அலமேலு அழுத கண்களோடு அவர் முன் வந்து நின்றார்.

“ஏன் அண்ணே என் பொண்ணு உன் பையனுக்காக கிணத்துல குதிச்ச பிறகும் அவளை கட்டி வைக்க உனக்கு மனசு வரல இல்ல” என்று கத்தி அழ ஆரம்பித்தார்.


அவரது அழுகையைக் கண்டு கோவிந்தனுக்கு சங்கடமாக போய் விட்டது.


“என்ன இது அலமு! நான் அப்படி சொல்லவே இல்லையே” என்று சமாளித்தார்.


அவரோ “பொய் சொல்லாத அண்ணே. நான் தான் நீங்க பேசினதை கேட்டேனே. மலரை கட்டி வைக்கனும்னு நீங்க சொல்லல” என்று ஆர்பாட்டம் செய்ய ஆரம்பித்தார்.


அவரின் அழுகுரல் கேட்டு வீட்டினர் அனைவரும் அங்கு கூடிவிட, அங்கம்மாள் மகளை சமாதானப்படுத்த முயல, கார்த்திகாவோ மாமனை பார்த்து “ஏன் மாமா அம்மாவை அழ வைக்கிறீங்க? இதெல்லாம் வேண்டாம்னு தானே கிணத்துல விழுந்தேன். எதுக்கு என்னை காப்பாத்துனீங்க? நான் செத்திருந்தா உங்க விருப்பம் போல நடந்திருக்கலாமே” என்றாள் அழுகையுடன்.


கோவிந்தனோ அப்போதும் விடாது “என்னம்மா கார்த்தி இப்படி பேசுற? எனக்கு எல்லோரும் ஒன்னு தானம்மா. உன் வயசுக்கு அவசரப்பட்டு முடிவெடுக்கிற. ரெண்டு பக்கமும் ஆசை இருந்தா சரி. ஒருத்தரை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்றது என்ன சந்தோஷத்தைக் கொடுக்கும் சொல்லு?” என்றார்.


அதைக் கேட்டதும் அதுவரை மௌனமாக கண்ணீர் சிந்திக் கொண்டிருந்த அலமேலு ஓவென்று தலையில் அடித்துக் கொண்டு “என் பெண்ணை பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்ட அண்ணே? அவ என்னவோ விஜயன் கையைப் பிடிச்சு இழுத்து கட்டிக்க சொன்ன மாதிரி சொல்றியே உனக்கே வெட்கமா இல்லையா? என் பொண்ணு என்ன ஒன்னுமில்லாதவளா? எனக்கு நல்லா வேணும்னு என் பொறந்து வீட்டு சொந்தம் வேணும்னு வந்து நின்னதுக்கு இதை விட அசிங்கப்படுத்த முடியாது” என்று கத்த ஆரம்பித்தார்.


அங்கம்மாளுக்கு மகன் பேசியதில் படுபயங்கரமாக கோபம் வர “கோவிந்தா! என்ன பேசுறேன்னு புரிஞ்சு தான் பேசுறியா? உன் பையனுக்காக அவ உசுரையே விட தயாரா இருக்கா அதை கூட புரிஞ்சுக்கலேன்னா நீ எல்லாம் பெரிய மனுஷன்னு சொல்லிக்காதே” என்றவர் அலமேலு பக்கம் திரும்பி “சும்மா கத்துறதை நிறுத்திட்டு மாப்பிள்ளை வந்தா பேசி நாளை குறிக்கப் பாரு...அப்புறம் யாரு இந்தக் கல்யாணத்தை தடுக்கிறாங்கன்னு பார்க்கிறேன்” என்றவர் ஓரமாக நின்று கையை பிசைந்து கொண்டிருந்த பிரபாவை முறைத்தார்.


தான் எதுவுமே செய்யாமல் கையாலாகாமல் நின்றிருக்கும் போது எதற்கு இந்த தேவையில்லாத பேச்சு? நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களில் பாதிப்பென்னவோ தனக்கு தான். ஆனால் பழி என்னவோ தன் மேல் விழுந்து கொண்டிருக்கிறது என்றெண்ணி வழக்கம் போல தனது துயரத்தை விழுங்கிக் கொண்டு நின்றார் பிரபா.


மலரோ கொல்லைபுற கதவருகே நின்று நடந்த அனைத்தையும் பார்த்து விட்டிருந்தாள். அவளது மனமோ சூனியமாக இருந்தது. என்று அவன் திருமணத்திற்கு சம்மதம் சொன்னானோ அன்றே அவளது மனம் மரணித்திருந்தது. இப்போது நடப்பவைகளை எல்லாம் ஒரு பார்வையாளராக மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள். உடலும், மனமும் உயிரற்று போய் நாட்கள் ஆகிறது.


கார்த்திகாவின் செயல்களை எண்ணி அவள் மீது கொண்டிருந்த நட்பிற்கு அவள் செய்த துரோகத்தை எண்ணி நெஞ்சம் விம்மியது. விரும்பாத ஒன்றை அடைய எதற்காக இத்தனை பிரயத்தணப்படுகிறாள். அதனால் இவளுக்கு என்ன கிடைக்கப் போகிறது? யாருக்கும் மகிழ்ச்சியைத் தராத வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டு அதில் என்ன சாதிக்க நினைக்கிறாள்? என்று எண்ணிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.


அங்கம்மாள் சமாதானப்படுத்த முயற்சிக்க, அலமேலுவோ ,மகளைக் கட்டிக் கொண்டு ரகளை செய்தார். அவரது ஆர்ப்பாட்டத்தைக் கண்டு அங்கம்மாளுக்கே அலுத்துப் போனது. சிறிது நேரம் அவர் ஆட்டத்துக்கு ஆடியவர் அடங்காமல் அழுது கொண்டிருப்பவரை கண்டு “அலமு! நிறுத்து! சும்மா அழுது ஆகாத்தியம் பண்ணாதே! முதல்ல கண்ணைத் துடை. எதுவும் கையை மீறி போகல. என் பேரன் உன் பொண்ணுக்கு தான். நல்ல காரியம் நடக்க வேண்டிய வீட்டில் ஒப்பாரி வைக்காதே” என்று அதட்டினார்.


அவரின் பேச்சைக் கேட்டு சோர்ந்து போன முகத்தோடு பிரபா அங்கிருந்து சென்றார். கோவிந்தனுக்கோ இதற்கு மேல் விஜயனின் தலையெழுத்து என்று எண்ணிக் கொண்டு திண்ணையில் சென்றமர்ந்தார்.


அனைவரும் அவரவர் அறையில் அடைந்து கொள்ள கார்த்திகாவின் நெஞ்சம் மட்டும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. தந்தையிடம் கூறி இந்த திருமணத்தை தடுத்து நிறுத்தப் பார்த்திருக்கிறான் . அப்படி என்ன தான் அழகில் குறைந்து விட்டோம் அவளை விட. ஏன் என்னை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறான் என்கிற ஆத்திரமே எழுந்தது.

மலரோ தோட்டத்து வீட்டில் சென்று சுருண்டிருந்தாள். மொத்தமாக அவள் மனம் மரத்து போயிருந்தது. எல்லாம் முடிந்து விட்டது. இனி தன் எதிர்காலம் எதை நோக்கி பயணிக்கும் என்கிற எண்ணமே சுழன்றது. விஜயனை விடுத்து இன்னொருவனை தன்னால் ஏற்க இயலுமா? மற்றவன் கட்டும் தாலியை தன்னால் ஏற்க முடியுமா? என்றெண்ணி உடல் நடுங்க கால்களை இறுக்கிக் கொண்டு அமர்ந்து கொண்டாள்.
 

sudharavi

Administrator
Staff member
#24
தோப்பில் அமர்ந்திருந்தவன் இருட்டி வெகு நேரம் ஆகி விட்டதை உணர்ந்து வண்டியை எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான். வாயிலில் வண்டியை நிறுத்தும் போதே அங்கிருந்த அமைதியை உணர்ந்து கொண்டவனுக்கு தந்தை தன் விஷயத்தை வீட்டில் பேசப் போகிறேன் என்று சொன்னது மறந்து போயிருந்தது.


தந்தை சோர்வாக திண்ணையில் அமர்ந்திருப்பதைக் கண்டு “என்னங்கய்கையா இந்த நேரத்தில் இங்கே உட்கார்ந்திருக்கீங்க?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே செல்ல முயன்றான்.


“விஜயா! இங்கே வந்து உட்காரு..கொஞ்சம் பேசணும்” என்றார்.


அவர் குரலில் இருந்த வேறுபாட்டை உணர்ந்து கொண்டவன் “என்னங்கையா”” என்று கேட்டுக் கொண்டே எதிரே அமர்ந்தான்.


“பாட்டி கிட்ட பேசினேன் விஜயா” என்றவர் அவன் முகத்தைப் பார்த்தார்.


அப்போதும் அவன் புரியாமல் ஒரு பார்வை பார்த்து “என்ன பேசினீங்க?” என்றான்.


சங்கடமான பார்வையுடன் “கல்யாணத்தை பத்தி நீ சொன்னதை தான்” என்றார்.


அதைக் கேட்டதுமே பதறி போய் எழுந்தவன் “ஏன் அதை போய் சொன்னீங்க? என்ன எதிர்பார்த்து அவங்க கிட்ட பேசினீங்க? நீங்க நினைத்தது எதுவும் நடந்ததா ஐயா?” என்றான் பதட்டத்துடன்.


ஒருவித வெறுப்போடு “உங்கத்தையும், அம்மாவும் சேர்ந்து உன் வாழ்க்கையை மொத்தமா அழிக்க பார்க்கிறாங்க விஜயா” என்றார் தவிப்புடன்.


தந்தையை கூர்ந்து பார்த்தவன் “நீங்க என்னை பெத்தவர். உங்களுக்கு எல்லோரையும் விட என் மேல உரிமை அதிகம் இருக்கு. அப்படி இருக்கும் போது உங்களை பெத்தவங்க வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து என் வாழ்க்கையை அழிப்பதில் உங்களுக்கு தான் முதல் பங்கு” என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டான்.


அவனது பேச்சில் திகைத்து அமர்ந்து விட்டார்.


தனதறைக்கு சென்றவன் உடை மாற்றிக் கொண்டு அன்னையைப் பார்க்க செல்ல அவனை வழி மறித்தாள் கார்த்திகா.


அதுநாள் வரை அத்தை மகளாக இருந்தால் கூட நேரடியாக நின்று பேசாமல் போகிற போக்கில் பேசி விட்டு சென்று விடுவான். வயதுக்கு வந்த பெண்ணுடன் நின்று பேசுவது முறையல்ல என்கிற எண்ணத்தில் அப்படி நடந்து கொண்டிருந்தான்.


இப்போது அவள் நேராக வழியை மறைத்தார் போல் நிற்கவும் “வழியை விடு கார்த்தி” என்று முகம் பார்க்காது கூறினான்.


“எனக்கு ஒரு பதில் தெரிஞ்சாகனும் மாமா” என்றாள் வழியை விடாமலே.


“ம்ச்...என்ன இது! வழியை விடு கார்த்தி” என்றான் எரிச்சலாக.


“எனக்கு பதில் சொல்லாம இங்கிருந்து போக முடியாது” என்றாள் அழுத்தமாக.


ஒருவித கடுப்புடன் “சொல்லு...என்ன சொல்லணும்?” என்றான்.


“உங்களுக்கு என் மேல விருப்பம் இல்லையா? நான் கிணத்துல குதிச்சதுனால தான் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டீங்களா?”


அவளது இந்த கேள்வியை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. செய்வதையும் செய்து விட்டு நெஞ்சுரத்துடன் அவனிடம் பேசும் தைரியம் எங்கிருந்து வந்தது என்கிற கோபம் எழுந்தது.


இருகைகளையும் கட்டிக் கொண்டு நிமிர்ந்து நின்றவன் “நான் என்ன பதில் சொல்லனும்னு எதிர்பார்க்கிற?” என்றான்.


“உங்களுக்கு பெருசா காதல் எல்லாம் இருக்காதுன்னு தெரியும். ஆனா என் மேல துளியாவது ஈர்ப்பு இருக்கும்னு தோணுது” என்றாள் தெனாவெட்டாக.


அருவெறுப்பான ஒரு ஜந்துவை பார்ப்பது போல் பார்த்து உனக்கே இவ்வளவு தெனாவெட்டு இருந்தா எனக்கு இருக்காதா என்று “காதலா? அதுவும் உன் மேல! என்ன சொன்ன ஒரு துளியாவது ஈர்ப்பு இருக்கும்னா? உன்னை நான் மனுஷியாவே மதிக்கல. அப்புறம் என்ன சொன்ன? கிணத்துல குதிச்சதுக்காக கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன்னா? உனக்காக சொல்கிற அளவுக்கு நீ வொர்த் இல்ல. என் குடும்பத்துக்காக ஒத்துக்கிட்டேன்” என்றவன் அவளது கையை ஒதுக்கி விட்டு சென்றவன் மீண்டும் அவளிடம் சென்று “என் ஆயுசு முழுக்க உன் மேல எந்த உணர்வும் வராது எனக்கு. இந்த பதில் போதும்னு நினைக்கிறேன்” என்று கூறி அங்கிருந்து தோட்டத்துப் பக்கம் சென்றான்.


அவன் தோட்டத்துக்குள் நுழையும் நேரம் தோட்டத்து வீட்டினுள் இருந்து வெளியே வந்தவள் விஜயனை பார்த்ததும் அதிர்ந்து நின்றாள். அவனோ கொஞ்சமும் அசராது அவள் முன்னே சென்று நின்றான்.


இருவரின் உணர்வுகளும் சொல்லில் அடங்காமல் இருந்தது. அவளின் முகத்தை காண இயலாமல் தோட்டத்தை வெறித்தவன் “என்னை மன்னிச்சிடு மலர். என்னை நினைத்தே எனக்கு வெட்கமாக இருக்கு. உன் மனசில் ஆசையை வளர்த்து விட்டுட்டு அதை நிறைவேற்ற முடியாம கையாலாகாதவன் போல நின்று கொண்டிருக்கிறேன்” என்றான் வெற்றுக் குரலில்.


அவளோ எதுவும் பேச இயலாமல் கன்னங்களில் வழிந்த கண்ணீருடன் “எனக்கு ஒரே ஒரு சத்தியம் மட்டும் செஞ்சு கொடு மலர்” என்றான்.


அவன் கேட்பது என்னவென்று புரியாமல் நிமிர்ந்து பார்க்க “எந்த சூழ்நிலையிலும் தவறான முடிவெடுக்க கூடாது. தயவு செய்து உன் மனதை மாற்றிக் கொண்டு வரவிருக்கும் வாழ்க்கையை வாழனும் மலரு. நீ நல்லா இருக்கணும்” என்றவனது விழிகளில் கண்ணீர் தேங்கி நின்றது.


அதுவரை அமைதியாக நின்றிருந்தவள் “எப்போ நீங்க சம்மதம் சொன்னீங்களோ அப்போவே என் உசுரு இந்த உடலை விட்டுப் போயிடுச்சு மாமா. மிச்சமிருக்கிறது வெறும் சதை தான். இனி வாழ என்ன இருக்கு எனக்கு” என்று இரு கை கொண்டு முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.


அவளின் அழுகை அவனை மொத்தமாக உடைந்து போக செய்தது. அவள் அழுது விட்டாள். அவனால் அழ முடியவில்லை. கற்பாறை போன்று இறுகி நின்றான்.
 
#25
inthe karthikavaaaaa nalla vachu saiyunga rombathaannnnnnn panraaaaaaa
inthr kelavi veraaaaaaa
yemaaaaaaa alamu nee mattumthaannnnn pillaigga thudipiyaaaaa
prabamaaaaaaa yenna pawam pannuchuuuu inthe vayasilayum inth kelavi thaan solrathaa magan ketkannumkuthu appoooooooooo prabamaakku avanga magan keeta urimai illaiyaaaaaaaaaaa
 

sudharavi

Administrator
Staff member
#26
அத்தியாயம் – 10


தன்னிடம் வெறுப்புடன் பேசி விட்டு சென்றவன் மலரின் முன்பு கண்ணீருடன் நின்றதை கண்டதும் கார்த்திகாவின் மனது பற்றி எரிந்தது. அத்தை மகளான தனக்கு இருக்கும் உரிமையை விட, மாமன் மகள் இரெண்டாம் பட்சம் தான் என்று இத்தனை நாள் எண்ணி இருந்தாள். ஆனால் இன்றோ தன்னை விட அவனுக்கு அவள் முக்கியமாக போய் விட்டாள்.


எப்படியாவது விஜயனே அவளை வெறுக்கும் படி வைக்க வேண்டும் என்று மனதில் கருவிக் கொண்டாள். இங்கே அவள் ஒன்றை மறந்து விட்டாள். தனது செயல்களுக்கு மலரிடமிருந்து எந்த எதிர்வினையும் வரவில்லை எனும் போது அவள் மீதான அன்பு கூடிக் கொண்டு தான் போகுமே தவிர குறையாது.


‘நான் இந்த வீட்டில் கல்யாணம் பண்ணி வந்த பிறகு உன் கண் முன்னாடியே அவரோட வாழறேண்டி. நீ தினம் தினம் பார்த்து பார்த்து சாகனும்டி. அதுக்காகவே உனக்கு கல்யாணம் ஆக விடாம தடுக்கிறேன்’ என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.


அப்போது அவளை இடித்துக் கொண்டு அங்கே வந்த பவானி “வழிவிடு! எப்பவும் அடுத்தவங்க வழியில் இடைஞ்சலா நிற்கிறதே உன் வேலையா போச்சு” என்று கடுப்படித்துக் கொண்டு தோட்டத்துக்கு சென்றாள்.


மலரும் அண்ணனும் நிற்கும் இடத்திற்கு சென்றவள் “என்ன அண்ணனே பண்ணி வச்சிருக்கே? நீ எப்படி அவளை கட்டிக்க சம்மதம் சொல்லலாம்? இதோ நிற்கிறாளே இவளுக்கு கேட்க நாதியில்லேன்னு தானே எல்லோரும் அவ வாழ்க்கையை ஏலம் போடுறீங்க?” என்றாள் கோபமாக.


தங்கையின் கேள்வியில் அதிர்ந்தாலும் “பவானி! நீ இதில தலையிடாதே! சின்ன பொண்ணு பேசாம இரு!” என்றான்.


அவனை கூர்ந்து பார்த்தவள் “யாருன்னே சின்ன பொண்ணு? இவளுக்கும் என் வயசு தானே அப்போ நான் கேட்கலாம்” என்றாள் அழுத்தமாக.


“நான் கிளம்புறேன் பவானி. இனிமே பேச எதுவுமில்ல. பேசாம போ” என்றான் எரிச்சலாக.


“நில்லுங்க அண்ணா! அவ பாட்டுக்கு அட்டூழியம் பண்ணுவா நாம எல்லாத்தையும் பொறுத்துகிட்டு போகனுமா? இது உங்க வாழ்க்கை அண்ணா.

இதோ இவளுக்கு தனக்கு ஒன்னு வேணும்னு கேட்க கூட தெரியாது. நீங்க மலரை விட்டுட்டு அவளை கல்யாணம் பண்ணினா சத்தியமா உங்க கிட்ட என் உசுரு இருக்கிற வரை பேச மாட்டேன் சொல்லிட்டேன்” என்றாள் கண்களில் கண்ணீர் வழிய.

அதைக் கண்டு பதறிய மலர் “என்ன பேசுற பவானி? அவங்க மேல எந்த தப்பும் இல்ல. குடும்பத்துக்காக தன்னோட ஆசையை விட்டுக் கொடுக்கிறாங்க. நீ அவங்களுக்கு பக்கபலமா இருக்கணும் பவானி” என்றாள் அழுகையுடன்.


அவளை முறைத்துக் கொண்டே “தியாகச் செம்மலே! உன்னளவிற்கு நான் நல்லவ இல்ல. என்னால இதை மன்னிக்க முடியாது. அண்ணா நான் விளையாட்டுக்கு சொல்றேன்னு நினைக்காதீங்க. நிச்சயமா உங்க கிட்ட ஒரு வார்த்தை பேச மாட்டேன். அவளையும் அண்ணியா ஏத்துக்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றாள்.


அவள் சென்றதும் இருவருக்கும் மூச்சு முட்டுவது போலிருந்தது. அந்த சூழலே அனலில் நிற்பது போல் தோன்றியது. ஒருவர் மீது ஒருவர் ஆசை வைத்தது பாவமென்றால் விருப்பமே இல்லாத ஒருத்தி அதை உடைத்து பார்க்க நினைப்பது எத்தகைய பாவம்? சற்று நேரம் அப்படியே நின்றவன் தலையை அழுந்தக் கோதிக் கொண்டு அங்கிருந்து எதுவும் பேசாமல் சென்றான்.


மலரோ அங்கிருந்த படியில் அப்படியே அமர்ந்து விட்டாள். இனி, வரும் நாட்களில் இந்த வீட்டின் நிம்மதி பறி போகும் என்பதற்கு சாட்சியாக பவானி பேசி விட்டு சென்றிருக்கிறாள். அவர்களின் திருமணத்திற்கு தன்னால் இங்கிருக்க முடியுமா? அவர்களின் வாழ்க்கையை கண் கொண்டு பார்க்க முடியுமா? அதை தன்னால் தாங்க இயலுமா? என்று எண்ணி நடுங்கினாள்.


போக்கிடத்திற்கு கூட வழியில்லாமல் போன தன் நிலையை எண்ணி கலங்கினாள்.


பிரபாவும் தனது அண்ணன் மகளை எண்ணி ஒருபுறமும், தன் மகனின் திருமண வாழ்வை எண்ணி சோர்ந்து போய் அமர்ந்திருந்தார். தனது மகனின் திருமணத்தை தன் விருப்பத்திற்கு ஏற்ப செய்ய இடமில்லாமல் என்ன வாழ்க்கை இது? இந்த வீட்டிற்கு வாழ்க்கைப்பட்டு வந்தது முதல் மாமியாரின் பேச்சை மீறி எதையும் செய்து விடவில்லை. தனக்கான மரியாதை எங்கேயும் தரப்படவில்லை என்று தெரிந்தாலும் இது தான் பெண்களின் வாழ்க்கை என்று அதை அப்படியே ஏற்றுக் கொண்டார்.


அந்த வீட்டில் சமையல்கட்டு தான் அவரது நிரந்தர இடம். அங்கே கூட அங்கம்மாளின் ஆதிக்கம் தான். அவர் சொன்னவற்றை மட்டுமே சமைக்க முடியும். மொத்தத்தில் அந்த வீட்டின் அடிமையாக மட்டுமே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார். கணவரின் அன்பிருந்தாலும் அன்னையை மீறி அவரால் எதுவும் செய்து விட முடியாது. அதிலும் அலமேலு விஷயத்தில் அங்கம்மாள் அதி தீவிரமாக இருப்பார்.


இப்போது பிரபாவின் எண்ணமெல்லாம் விஜயன், கார்த்திகா திருமணத்திற்கு முன்பு மலரின் திருமணத்தை முடித்து அங்கிருந்து அனுப்பி விட வேண்டும் என்பது தான். கார்த்திகா திருமணமாகி வந்துவிட்டால் மலரின் நிலை இங்கு கவலைக்கிடமாக மாறி விடும் என்று எண்ணி இதை யோசித்தார். ஆனால் தன் எண்ணத்தை எப்படி நிறைவேற்றுவது என்று புரியாமல் அமர்ந்திருந்தார்.


எப்படியாவது அனைவரையும் சமாதானம் செய்து அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து அங்கிருந்து அனுப்பி விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்.


தண்ணீர் குடிக்க உள்ளே நுழைந்தவன் அன்னை அமர்ந்திருந்த கோலத்தைக் கண்டு மனம் வருந்தினான்.


“அம்மா! ஏன் இருட்டில உட்கார்ந்திருக்கீங்க?” என்றவன் குடத்திலிருந்து தண்ணீரை எடுத்து அருந்த ஆரம்பித்தான்.


கலங்கியிருந்த கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து வந்தவர் “என் பிள்ள வாழ்க்கையே இருட்டாகப் போகுது. நான் இருட்டில் உட்கார்ந்திருந்தா என்ன?” என்றார் சோர்வாக.


குடித்து கொண்டிருந்த தண்ணீர் செம்பை கீழே வைத்து விட்டு அன்னையின் அருகில் சென்றவன் “அம்மா! தயவு செஞ்சு கலங்காதீங்க! இன்னும் எதுவும் கெட்டுப் போகல. நான் மாமா வந்ததும் பேசி பார்க்கிறேன்” என்றான்.


அதுவரை இருந்த சோர்வு நீங்கி விரிந்த விழிகளுடன் “அவர் ஒத்துக்குவாரா விஜயா? பொண்ணுக்காக பார்ப்பாரா?” என்றார் பதட்டமாக.


“இல்லம்மா! அத்தையை விட மாமா தெளிவா யோசிப்பார். விரும்பாத மாப்பிள்ளைக்கு கட்டி வைக்க நிச்சயம் ஒத்துக்க மாட்டார். நீங்க அமைதியா இருங்க” என்றான்.


“எல்லாம் கூடி வந்தா நம்ம குலதெய்வத்துக்கு பொங்க வைப்போம் விஜயா” என்றார் சற்றே உற்சாகமான குரலில்.


அன்னையை உற்சாகப்படுத்த கூறினாலும் அவன் மனதில் உறுதியாக அது நடந்து விடும் என்று தோன்றவில்லை. மூன்று பெண்களும் தங்களின் ஆசைக்கு விஷத்தை வைக்கவே முயற்சிப்பார்கள் என்றே தோன்றியது. அதை வெளிக்காட்டாது “ம்ம்..சரிம்மா” என்று கூறிவிட்டு தன்னறைக்குச் சென்றான்.


எண்ணங்கள் அவனை சூழ்ந்து கொள்ள ஆரம்பித்தது. மலர் பெற்றோர் இன்றி அடைக்கலமாக தங்கள் வீட்டிற்கு வந்த நாளில் இருந்து அவள் மீதான அன்பு மலரத் தொடங்கி இருந்தது. ஆரம்பத்தில் பவானியிடம் காட்டும் அக்கறை போன்றிருந்தது வளர வளர அவள் மீதான ஈர்ப்பாக மாறியது. அவளது மென்மையான சுபாவமே காதல் கொள்ள வைத்தது. அதிர்ந்து பேசாத குணமும், அன்பாக நடந்து கொள்ளும் விதமும் அவனது மனதை புரட்டி போட்டது.


தங்களது ஆசைக்கு பாட்டியிடம் இருந்து தான் எதிர்ப்பு வரும் என்று நினைத்தான். ஆனால் கார்த்திகா தங்கள் வாழ்வில் குறுக்கே வருவாள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவளுடனான திருமணத்திற்கு சம்மதம் சொல்லி விட்டாலும், அவளை மனைவியாக எண்ண முடியவில்லை.

அதிலும் அவள் நடத்திக் கொண்டிருக்கும் நாடகத்தை நினைத்து வெறுப்பு தான் வந்தது.

எப்படியாவது மாமாவிடம் பேசி அவருக்கு புரிய வைத்து இந்த திருமணத்தை நிறுத்தி விட வேண்டும் என்று யோசித்தான். அதே நேரம் அன்னையும், மகளும் சதியாலோசனையில் இறங்கி இருந்தார்கள்.


“இங்க பாருடி நாளைக்கு அப்பா வந்தவுடனே அவர் கண்ணுல நீ பட்டுடாதே. நான் முதல்ல அழைச்சிட்டு போய் எல்லா விஷயத்தையும் சொல்லி சரி பண்ணிடுறேன். அதுக்கு பிறகு நீ அவரை பார்க்க வா” என்றார் அலமேலு.


“அப்பா ஒத்துக்குவாராம்மா?”

“ம்ம்..அவரை ரொம்ப யோசிக்க விடக் கூடாடி. நான் ஒன்னு சொல்றேன் கேளு. நீ வந்து அப்பாவை பார்க்காதே.

படுக்கையிலேயே இரு. கிணத்துல விழுந்ததுல உடம்புல அடின்னு சொல்லிடுறேன். அப்போ தான் பதறி போவாரு” என்று மகளுக்கு தவறான வழியை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார் அலமேலு.
 

sudharavi

Administrator
Staff member
#27
அவர் சொன்னதைக் கேட்டதும் “ஆமாம்ம்மா இப்படி பண்ணினா தான் அப்பா பயந்து போய் ஒத்துக்குவார்” என்றாள் உற்சாகமாக.


சற்றே யோசனையுடன் மகளை பார்த்தவர் “அதுக்கு முன்னே நமக்கு ஒரு வேலை இருக்கு கார்த்தி. உங்க கல்யாணத்துக்கு முன்னே அந்த குட்டியை இங்கிருந்து விரட்டி விட்டுடனும். அப்போ தான் உன் வாழ்க்கை நிம்மதியா இருக்கும்” என்றார்.


“என்ன சொல்றம்மா?”


“ஆமாடி! அவளுக்கு ஏதாவதொரு மாப்பிள்ளையை பார்த்து ஒட்டி விட்டுடுவோம்”.


“வேண்டாம்மா! அவ இந்த வீட்டுலையே இருக்கனும்மா! நாங்க வாழறதை பார்த்து அவ வயிறு எரிஞ்சு சாகனும்” என்றாள் இறுகிய குரலில்.


மகளை முறைத்தவர் “புரியாம பேசாதே கார்த்தி! விஜயன் விருப்பபட்டு இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கல. அரை மனசா இருக்கிற ஆம்பளையை கைக்குள்ள போட்டுகிறது ரொம்ப கஷ்டம். அதுவும் அவன் விரும்பின பொண்ணு முன்னாடி இருக்கும் போது. அதனால அவளை தாட்டி விட்டா தான் உன் வாழ்க்கை சரியா போகும்” என்றார்.


“இல்லம்மா! எனக்கு என் வாழ்க்கையை காப்பாத்திக்க தெரியும். மாமாவை எப்படி என் பின்னாடி சுத்த வைக்கனும்னு தெரியும். ஆனா அவ அதெல்லாம் இங்கிருந்து பார்க்க்கனும். அதனால அவ கல்யாண பேச்சை எடுக்காதீங்க. அப்படியே வந்தாலும் அதை எப்படியாவது தடுத்திடுங்க” என்றாள்.


மகளின் முகத்தை வழித்து நெட்டி முறித்தவர் “இப்போ தாண்டி என் பொண்ணுன்னு நிரூபிக்கிற. நீ பாட்டுக்கு அவ பின்னாடி சுத்திட்டு இருந்தியேன்னு கவலையா போச்சு. என்ன இருந்தாலும் மாமனை கட்டிக்கிட்டு இங்கே ஆட்சி செய்ற மாதிரி வருமா சொல்லு” என்றார்.


“ம்ச்...எனக்கு அப்போ புரியலம்மா. இப்போ தான் தெரியுது. நீ சொன்ன மாதிரி வெளில கட்டி கொடுத்தா இந்த மாதிரி இருக்க முடியாது. அதுவும் இங்கே பாட்டி எனக்கு தான் ஆதரவா இருப்பாங்க. அத்தையும் ஒரு ஊமை. நான் தான் ராணி மாதிரி இருப்பேன் இங்கே” என்றாள்.


“இனி, உன்னைப் பத்தி எனக்கு கவலையில்ல கார்த்தி. உங்கப்பாவை ஒத்துக்க வச்சிட்டா போதும்” என்று கூறி நிம்மதியாக தலையை சாய்த்தார்.


ஒரு திருமண பந்தத்திற்கு தேவை இரு மனங்களின் அன்பு. ஆனால் இங்கு நடப்பதோ விருப்பமில்லாமல் ஒருவனை அந்த பந்தத்திற்குள் நுழைக்க முயலுகிறார்கள். தாலியை கட்டி விடலாம் ஆனால் வாழ்க்கையை அவன் தானே வாழ வேண்டும். அதை அந்த பிடிவாதக்காரி உணரவில்லை.

அவனை மிரட்டி தாலி கட்டிக் கொண்டாள் வாழ்ந்து விடலாம் என்று பைத்தியகாரத்தனமாக எண்ணுகிறாள்.

அவளின் அர்த்தமற்ற பிடிவாதத்தால் கெடப் போவது அனைவரின் நிம்மதியும் என்பதை அவள் உணரவில்லை. உணரும் போது அனைத்தும் கடந்து போயிருக்கும்.


விடியலுக்காக ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதத்தில் காத்திருந்தனர்.


விடிந்ததும் தில்லையும், விஜயனும் வயலுக்குப் போய் விட, அங்கம்மாள் மட்டும் கூடத்தில் அமர்ந்திருந்தார். அப்போது ஸ்டேஷனுக்கு போன வில்லு வண்டி வந்து நிற்க, அதிலிருந்து இறங்கினார் சண்முகம்.


மாப்பிள்ளையின் தலை தெரிந்ததும் “அலமு! மாப்பிள்ளை வந்தாச்சு பாரு” என்று குரல் கொடுத்தார்.


தோளில் துண்டை உதறி போட்டுக் கொண்டு உள்ளே வந்தவர் பவ்யமாக நின்று கொண்டிருந்த அங்கம்மாளிடம் “நல்லா இருக்கீங்களா?” என்றார்.


“நல்லா இருக்கேன் உட்காருங்க மாப்பிள்ளை” என்று கூறினார்.


அவர் அமரவும் சமயலறையில் இருந்து அவசரமாக தண்ணீர் செம்புடன் வந்த பிரபா “வாங்க அண்ணா” என்றார்.


“ம்ம்...நல்லா இருக்கியாம்மா” என்று கேட்டுவிட்டு தண்ணீரை அருந்தினார்.


அதற்குள் அலமேலு அறையிலிருந்து வேகமாக அங்கே வந்தார்.


“வாங்க...வந்துடீங்களா?” என்று கேட்டவரின் குரலில் அழுகையின் சாயல்.


பிரபாவிற்கும், அங்கம்மாளிற்கும் எதற்கு இந்த அழுகை என்று புரியாமல் பார்த்தனர்.


சண்முகமோ “பிள்ளை எங்க அலமு உறங்கராளா?” என்றார்.


அதைக் கேட்டதுமே விம்மி வெடித்து அழ ஆரம்பித்தார்.


சண்முகத்திற்கு ஒன்றும் புரியவில்லை “என்னாச்சு அலமு எதுக்கு அழுகுற?” என்று அதட்டினார்.


“நீங்களே வந்து பாருங்க உங்க பிள்ளைய” என்று புடவை தலைப்பால் வாயை பொத்திக் கொண்டு அழுதார்.


சண்முகத்துக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. அங்கம்மாளும் இவ ஏன் இப்படி கண்ணை கசக்குறா கார்த்தி நல்லாத்தானே இருந்தா என்று யோசித்தார்.


அழுகையுடன் கணவரை கூட்டிக் கொண்டு அறைக்கு சென்றார். அங்கு கார்த்தி நலிந்து போய் படுத்திருப்பதை கண்டதும் பதறி போனவர் “என்னாச்சு கார்த்திக்கு?” என்றார் கோபத்தோடு.


ஓவென்று அழுகையுடன் “கிணத்துல குதிச்சிட்டாங்க” என்றார்.


“என்னது!”


“ஆமாங்க! மாமனை கட்டிக்கணும்னு அம்மா கிட்ட சொல்லி இருக்கா. அதுக்கு அம்மா உங்கப்பா விஜயனுக்கு கொடுக்க விரும்ப மாட்டாங்கன்னு சொன்னாங்க. அதனால கிணத்துல குதிசிட்டா” என்று தனது கதையை எடுத்து விட்டார்.


மகளின் நிலை கண்டு கலங்கி போய் நின்றார் அந்த தந்தை. அதன் பின்னே உள்ளே நாடகத்தை அவர் அறியார்....
 

sudharavi

Administrator
Staff member
#31
ஹாய் பிரெண்ட்ஸ்,

அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன். படித்துவிட்டு தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். போன அத்தியாயத்திற்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

அத்தியாயம் - 12
 
#32
enakkum bhavani nilama than. Aluvaiya varuthu. Malar pavam. Prabha nilamai la ulla ponungala na neraya pathruken. Ana Vijay romba thappu. rompa periya thappu valka epavum namma asapadratha kudukaathu namma than ada adaya muyarchi seiyanum
 

sudharavi

Administrator
Staff member
#33
enakkum bhavani nilama than. Aluvaiya varuthu. Malar pavam. Prabha nilamai la ulla ponungala na neraya pathruken. Ana Vijay romba thappu. rompa periya thappu valka epavum namma asapadratha kudukaathu namma than ada adaya muyarchi seiyanum
நன்றி மா....என்ன செய்வது எதிர்ப்பு இருக்கும் என்று தெரிந்து தான் காதல் வருகிறது....சிலருக்கு அது கை கூடுகிறது சிலருக்கு வாழ்நாள் தண்டனையாக அமைந்து விடுகிறது..
 
#34
நன்றி மா....என்ன செய்வது எதிர்ப்பு இருக்கும் என்று தெரிந்து தான் காதல் வருகிறது....சிலருக்கு அது கை கூடுகிறது சிலருக்கு வாழ்நாள் தண்டனையாக அமைந்து விடுகிறது..
அடுத்த பதிவு சுதாம்மா
 

sudharavi

Administrator
Staff member
#36
அத்தியாயம் – 13

சண்முகம் ஊருக்குச் சென்று தன் மகளுக்கு திருமணம் நிச்சயம் ஆனதை தன் வீட்டு ஆட்களுக்கு தெரிவித்து சம்மதம் வாங்கினார். அவரது சொந்தத்தில் சற்றே சலசலப்பு எழுந்து மறைந்தாலும், என்றுமே சண்முகத்தின் வார்த்தைக்கு மறு வார்த்தை எழுந்ததில்லை. அதனால் திருமணம் தொடர்பான வேலைகளில் மும்மரமாக இறங்க ஆரம்பித்தனர்.


அலமேலுவிற்கு மனதிற்குள் சொல்ல மூடியாத மகிழ்ச்சி இருந்தாலும், மனதோரம் சிறு நெருடலும் இருந்தது. அண்ணன் மகன் தன் மகளை ஒதுக்கி வைத்து விட்டால் என்கிற யோசனையும் வந்து போனது.


மகளிடம் பேசி சமார்த்தியமாக நடந்து கொள்ள சொல்ல வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்.


தனதறையில் ஜன்னலோரம் நின்றபடி கனவுலகில் மூழ்கி இருந்தாள். தானும் விஜயனும் சேர்ந்து வெளியே போகும் போது மலரின் முகத்தில் தெரியும் உணர்வுகளை கனவாக கண்டு ரசித்துக் கொண்டிருந்தாள்.


மகளின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தைக் கண்டு அவள் விஜயனை நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்று எண்ணிக் கொண்டு “கார்த்தி!” என்று மெதுவாக தோளை தொட்டார்.


அவசரமாக திரும்பியவள் “அம்மா!” என்றழைத்தவளின் குரலில் இருந்த உற்சாகம் அவரையும் தொற்றிக் கொள்ள அவளது கன்னத்தை வழித்து திருஷ்டி கழித்தவர் “இப்படியே எப்போதும் சந்தோஷமா இருக்கணும்” என்றார்.


“இருப்பேன் மா” என்றாள் அலமுவின் கையைப் பற்றிக் கொண்டு.


கட்டிலில் அமர்ந்து கொண்டு மகளை பார்த்த அலமு “அது உன் கையில தான் இருக்குது கார்த்திகா” என்றவரை புரியாத பார்வை பார்த்தாள் கார்த்திகா.


“நல்லா கேட்டுக்கோ கார்த்தி. அம்மா இருக்கிற வரை அங்கே உனக்கு எந்த குறையும் வராது தான். ஆனாலும் புருஷன் நம்ம கையில இருந்தா தான் அந்த வீட்டுக்கு எஜமானியா ஆக முடியும். அதனால கல்யாணம் ஆன கையோடு விசயனை முந்தானையில முடிஞ்சுக்க பாரு” என்று மகளுக்கு பாடம் எடுத்தார்.


“ம்ம்...நான் பார்த்துகிறேன் அம்மா. மாமாவை என்னை சுத்தி வர வைக்கிறேன் பாருங்க” என்றாள் வீராப்பாக.


“கஷ்டம்டி! நீ நினைக்கிறது போல அவன் மனசை மாத்துறது முடியாது. நீ போனதும் செய்ய வேண்டிய மொத வேலை அந்த குட்டிக்கு ஒரு மாப்பிள்ளையை பார்த்து கட்டி கொடுத்து துரத்தி விடுறது தான்”.


“என்னம்மா சொல்ற? அவ கல்யாணம் ஆகாம அங்கேயே இருந்து நானும் மாமாவும் வாழுறதை பார்த்து நொந்து போகணும்னு நினைச்சிட்டு இருக்கேன்”.


மறுப்பாக தலையசைத்து “ஆம்பள மனசு புரியல கார்த்தி. அவ கண்ணு முன்னே இருந்தா உன் கிட்ட நெருங்கவே மாட்டான். அதுவும் அவன் ஆசைப்பட்ட பொண்ணு. அதனால சட்டுபுட்டுன்னு ஒருத்தனை பார்த்து கல்யாணத்தை முடிச்சு விட்டுடுங்க. அப்போ தான் வாழ்க்கை சீரா ஓடும்”.


“மாமாவை பார்க்க சொன்னா நல்ல வசதியான வீட்டு பிள்ளையா தேடுவாரு. பேசாம நீயே பார்த்து சொல்லும்மா. வசதி குறைவானவனா ஒருத்தனை பிடிச்சி கட்டி வச்சு விரட்டி விடுவோம்” என்றாள்.
 
Last edited:

sudharavi

Administrator
Staff member
#37
“நீ சொல்றதும் சரி தான். அண்ணனை விட்டா அவளுக்கு சொத்தில பாதியை எழுதி வச்சு கல்யாணம் பண்ணி கொடுக்கும்”.


தனது வாழ்க்கையை கூறு போட சதி நடக்கிறது என்பதை அறியாது அத்தைக்கு சமையலில் உதவி செய்து கொண்டிருந்தாள் மலர். அப்போது சாப்பிட வந்த விஜயன் அவளைப் பார்த்ததும் அதிர்ந்து நின்று விட்டான்.


அவளுக்குமே அவனைக் கண்டதும் தன்னை அறியாமல் கண்ணீர் பெருகியது. அதைக் காட்டிக் கொள்ளாது அவசரமாக திரும்பிக் கொண்டவள் பிரபாவிடம் மெல்லிய குரலில் “அத்தே! மாமா சாப்பிட வந்திருக்காங்க” என்றாள்.


அவர் அப்போது தான் விஜயன் அங்கு நிற்பதை பார்த்து அவனது பார்வை மலரின் மேல் இருப்பதை உணர்ந்து மனதில் எழுந்த வருத்தத்தை அடக்கிக் கொண்டு “விஜயா! உட்காருப்பா” என்றார்.


அன்னையின் குரலில் கலைந்தவன் “ம்ம்..”என்றபடி அமர்ந்தான்.


அவன் அமர்ந்ததும் அவசரமாக அங்கிருந்து வெளியேறினாள் மலர்.


இருவரின் உணர்வுகளையும் கண்டுகொண்ட பிரபா “நான் என்ன பாவம் செய்தேனோ தெரியல விஜயா. என் பிள்ளைங்க ஆசைப்பட்டதை கூட அவங்களுக்கு செஞ்சு கொடுக்க முடியாத பாவி” என்றார் முந்தானையால் வாயை மூடியபடி.


தலையை குனிந்து கொண்டிருந்தவனின் விழிகளிலும் கண்ணீர். அன்னைக்கு பதில் சொல்ல முடியாமல் தொண்டை அடைத்துக் கொண்டது.


அந்நேரம் அங்கம்மாள் வரும் சத்தம் கேட்கவும் அவசரமாக கண்களைத் துடைத்துக் கொண்டு அவனுக்கு பரிமாற ஆரம்பித்தார்.


சமையலறைக்குள் நுழைந்தவர் விஜயன் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை கண்டதும் அவசரமாக விழிகளை உருட்டி மலர் அங்கிருக்கிறாளா என்று கவனித்தார். அவள் இல்லை என்றதும் சந்தோஷமாக பேரனின் அருகில் சென்றமர்ந்து கொண்டார்.


பாட்டியை நிமிர்ந்தும் பார்க்காது சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.


“விஜயா! எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா. கார்த்தியோட மனசை புரிஞ்சுகிட்டு நீ கல்யாணத்துக்கு ஒத்துகிட்டதுக்கு” என்றார்.


அவர் அப்படி சொன்னவுடன் பட்டென்று நிமிர்ந்தவன் “நான் அவளுக்காக ஒத்துக்கல. மாமாவோட மரியாதை கெட்டுடக் கூடாதேன்னு தான் ஒத்துகிட்டேன்” என்றான்.


அதில் முகம் சுருங்கி போனவர் “ஏண்டா! என் பேத்திக்கு என்ன குறை? உனக்காக உசுரையே விடத் துணிஞ்சிருக்கா. இதை விட வேறென்ன வேணும்?” என்றார் கோபமாக.


அவர் பேசப் பேச மனதிலிருந்த ஆத்திரம் எழ கையை உதறியவன் “வேணாம் பாட்டி! நான் எதுவும் பேசக் கூடாதுன்னு அமைதியா இருக்கேன். என்னை பேச வச்சுடாதீங்க” என்று அங்கிருந்து வெளியேறினான்.


அவன் அப்படி பேசிச் சென்றதும் பிரபாவை பார்த்து முறைத்தவர் “ஏண்டி! உன் ஊமை குசும்புத்தனத்தை காட்டிடியா? அவன் அமைதியா தானே இருந்தான். என்ன சொல்லி மனசை கலைச்சு விட்ட? உன் எண்ணம் ஒரு நாளும் நடக்காதுடி. என் பேத்தி தான் இந்த வீட்டை ஆளனும்” என்றவர் முந்தானையை உதறி தோளில் போட்டுக் கொண்டு வெளியேறினார்.

 

sudharavi

Administrator
Staff member
#38
அவர் பேசியதைப் பற்றி கண்டு கொள்ளாமல் வெற்றுப் பார்வையுடன் தன் வேலைகளைத் தொடர்ந்தார்.


அன்னை மனைவியிடம் பேசியதை கேட்ட்விட்ட கோவிந்தன் “பிரபா! அம்மா பேசுறதை நீ மனசில் வச்சுக்காதே” என்றபடி வந்தார்.


எதுவும் பேசாமல் அமைதியாக அவருக்கு உணவை பரிமாற, கோவிந்தனுக்கு அவரின் அமைதி என்னவோ செய்தது.


“என்ன பிரபா? எதுவும் பேச மாட்டேங்கிற?” என்றார்.


அவரை நிமிர்ந்து பார்த்தவர் “ஏன் நான் பேசி என்னவாகப் போகுது? சாப்பிட வந்தீங்களா சாப்பிட்டிட்டு இடத்தை காலி பண்ணுங்க” என்றார் எரிச்சலாக.


அவரின் இப்படிப்பட்ட பேச்சைக் கேட்டு அதிர்ந்தவர் “பிரபா! உனக்கு என் மேல கோபம்னு தெரியும். ஆனா அம்மாவை மீறி என்னால என்ன பண்ண முடியும் சொல்லு?” என்றார்.


“எனக்கு ஒன்னே ஒன்னு பண்ணுங்க” என்றார்.


“சொல்லு பிரபா”


“ஒரு பாட்டில் விஷத்தை வாங்கிட்டு வந்து கொடுங்க. நானும் மலரும் குடிச்சிட்டு போயிடுறோம். நீங்க எல்லாம் நிம்மதியா இருங்க” என்றார் கண்களை துடைத்தபடி.


மனைவியின் பேச்சு அவருக்கு அதிர்ச்சியை ஒருபக்கம் கொடுத்தாலும் மறுபக்கம் அவமானமாக இருந்தது. தன்னுடைய கையாலாகாதனத்தை சுட்டி காட்டுகிறார் என்று.


எதுவும் பேசாமல் கையை கழுவிக் கொண்டு அங்கிருந்து சென்றார்.


பிரபா அப்படியே மூலையில் அமர்ந்து விட்டார். அங்கம்மாளுக்கு பேரன் தன்னை எதிர்த்து பேசி விட்டு சென்றதில் அத்தனை எரிச்சலாக இருந்தது. மகனிடம் பேசி இதற்க்கான தீர்வை காண வேண்டும் என்கிற எண்ணத்தில் கோவிந்தனிடம் சென்றார்.


“கோவிந்தா! என்ன நடக்குதுடா இங்கே? கல்யாணத்துக்கு ஒத்துகிட்ட உன் மகன் பேசுற பேச்சே சரியில்லையே இன்னைக்கு” என்றார் கோபமாக.


ஏற்கனவே மனைவி பேசிய பேச்சில் மனம் நொந்து போய் அமர்ந்திருந்தவர், அன்னை அப்படி பேசியதும் எரிச்சல் எழ அதை காட்டிக் கொள்ளாமல் இருந்தார்.


“நான் கேட்டுகிட்டே இருக்கேன் பதில் பேசாம இருந்தா எப்படி? கல்யாணம் முடிவான வீடு மாதிரியாடா இருக்கு இது? எல்லோரும் மோட்டு வலையை பார்த்துகிட்டே உட்கார்ந்திருக்கீங்க” என்று சத்தம் போட்டார்.


அதுவரை பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தவர் “ஏம்மா! இன்னும் உங்களுக்கு என்ன தான் வேணும்? அது தான் எல்லாம் பேசி முடிச்சாச்சே. ஏன் எங்க உசுரை எடுக்குறீங்க?’ என்று எரிந்து விழுந்தார்.


தன்னுடைய இத்தனை வருட வாழ்க்கையில் மகன் ஒருநாளும் தன்னிடம் குரலை உயர்த்தி பேசியதில்லை என்பதை அறிந்தவருக்கு கோவிந்தனின் பேச்சு அதிர்ச்சியைக் கொடுத்தது.


“என்னடா பேசுற? கல்யாணம் முடிவாகி இருக்கிறது உன் பிள்ளைக்கு”.


“நானா முடிவு பண்ணினேன்?”


“கோவிந்தா! என்னடா பேசுற? உன் தங்கச்சி மக கிணத்துக்குள்ள குதிச்சு உன் மகனுக்காக உசுரையே விடத் துணிஞ்சிருக்கா. அது பெருசா தெரியலையாடா?”


“அம்மா!” என்று அழைத்து கையெடுத்து கும்பிட்டவர் “மறுபடியும் ஆரம்பிக்காதீங்க. நீங்க நினைச்சதை நடத்திடீங்க. நீங்களாவது சந்தோஷமா இருங்க.

ஆனா எங்களை சந்தோஷமா இருக்க மட்டும் சொல்லாதீங்க. எங்களால அப்படி நடிக்க கூட முடியாது” என்றார் அழுத்தமாக.

மகனுக்கும் இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றறிந்து அங்கம்மாளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. வீட்டினர் அனைவரும் இந்த திருமணத்திற்கு எதிராக இருப்பது தெரியவே, இதை இப்படியே விடக் கூடாது என்று எண்ணினார்.


அவசரமாக கணவரின் படத்தருகே சென்றவர் “என்னங்க பார்த்தீங்களா? தங்கச்சியை கண்ணு போல பார்த்துக்குவேன்னு சொன்ன உங்க மகன் இப்போ என்ன பேசுறான்னு?” என்று அழ ஆரம்பித்தார்.


“அம்மா! என்ன பண்றீங்க?”


“என்னத்தடா சொல்ல சொல்ற? நான் இருக்கும் போதே என் பொண்ணுக்கு ஆதரவு இல்லை. என் பேத்தி என்ன ஒன்னுமில்லாதவளா? அவளை கட்டிக்க உன் பிள்ளைக்கு கசக்குதா? உன் பொண்டாட்டி பேச்சை கேட்டுகிட்டு என் பொண்ணு பேத்தி எல்லோரையும் அழ வைக்கிற?” என்றார் அழுது கொண்டே.


அவரின் அழுகை சத்தத்தைக் கேட்டு சமையலறையிலிருந்து ஓடி வந்த பிரபா மாமியாரின் அழுகையைக் கேட்டு அதிர்ந்து போய் நின்று விட்டார்.


கோவிந்தன் அவசரமாக அன்னையின் முன் சென்று நின்றவர் “அம்மா! ஏன் மா இப்படி பேசுறீங்க? அதான் எல்லாம் உங்க இஷ்டப்படி நடந்திடுச்சே” என்றார் கைகளை பிசைந்தபடி.


“என்னடா என் இஷ்டப்படி நடந்துச்சு? அதான் ஆளாளுக்கு மூஞ்சியை ஏணி மேல தூக்கி வச்சுகிட்டு அலையுறீங்களே? என் பேரன், பேத்தி கல்யாணம் நடக்கிற வீடு மாதிரியா இருக்கு இது. இப்போவே இப்படினா என் பேத்தி நிலைமை என்ன?” என்று எகிறி குதித்தார்.


“உன் பேத்திக்கு என்னம்மா வந்துச்சு?” என்றார் கடுப்புடன்.


“ஏண்டா கேட்க மாட்டே? உன் பிள்ளை என்னடான்னா முகத்தை மூஞ்சூறு மாதிரி வச்சுக்கிட்டு நிக்கிறான். உன் பொண்டாட்டி என்னடான்னா அடுப்புக்குள்ள தலையை விட்டுட்டு நிக்கிறா? என்னதாண்டா பிரச்சனை உங்களுக்கு? உங்க பிள்ளை மேல என் பேத்தி ஆசைப்பட்டது தப்பா?”


“என்னம்மா பேசுறீங்க? மச்சான் கிட்ட பேசி முடிச்சு தேதி குறிக்க அனுப்பியாச்சு. இன்னும் என்னதான் வேணும் உங்களுக்கு?”


“உன் மனசாட்சியைத் தொட்டு சொல்லு. இந்த வீடு கல்யாண வீடு மாதிரி இருக்கா இழவு வீடு மாதிரி இருக்கா?” என்றார்.


பாட்டியின் ஆர்ப்பாட்டங்களை ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் மலர்.


அன்னையின் பேச்சில் கோவிந்தனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அமைதியாக நின்றார்.


“என்னடா வாயடைச்சு போச்சா? இதை தான் சொன்னேன்”.


சற்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவர் “சரிம்மா! இப்போ நாங்க என்ன செய்யணும்னு சொல்லு?” என்றார்.


கண்களை அழுந்த துடைத்துக் கொண்டு வந்தவர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு பிரபாவிடம் “தண்ணி கொண்டுவா” என்றார்.

அன்னையின் முன் சென்று நின்ற கோவிந்தன் “சொல்லுங்க” என்றார்.


எதிரே இருந்த நாற்காலியில் காட்டி “உட்காரு” என்றவர் “இதோ பாரு கோவிந்தா. இன்னையோட இந்த வீட்டில் அழுகையோ மூஞ்சியை தூக்கி வச்சிகிறதோ இருக்கப்படாது. எல்லோரும் சந்தோஷமா கல்யாண வேலைகளை பார்க்கணும் சொல்லிட்டேன்” என்றார் அதிகாரமாக.


பிரபா தண்ணியை கொண்டு வந்து விட்டு ஓரமாக நின்றவர் மாமியார் சொன்னது காதில் விழ ‘எல்லாத்தையும் அதிகாரத்திலேயே சாதிக்க நினைக்கிறாங்க. அன்பும், பாசமும் அதுவா வரணும். அது இவங்களுக்கும் இவங்க பேத்திக்கும் எங்க தெரியுது. அதிகாரம் பண்ணி சிரிக்க சொல்றவங்கள இப்ப தான் பார்க்கிறேன்’ என்று எண்ணிக் கொண்டு மாமியாரை பார்த்துக் கொண்டு நின்றார்.
 
#39
Indha kizhaviya yaar adakka pora? Thevaiyillama scene potte kariyam sathikuthu. Ponnu pethi ellarume apdithan irukanga.... Intha Vijayum onnum panna mattengaran.... Sudhama serial ah vara mathiri kettevanga Nalla Vazha koodathu... Parthugonga... Nallavanga vazhalenalum kettavana Vazha koodathu... Athuvum karthiga...............