விழிகளிலே ஒரு கவிதை - பார்ட் -2

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,520
1,086
113
ஹாய் பிரெண்ட்ஸ்,

ஜானு அவர்களின் விழிகளிலே ஒரு கவிதை இரெண்டாம் பாகம் இங்கு பதிவிடப்படும்...
 

Janu murugan

Moderator
Staff member
Jun 10, 2020
43
20
8
20
விழிகளிலே ஒரு கவிதை 1

பதிப்புரிமை © 2020 by Aruna © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வெளியீட்டில் எந்த பகுதியும் வெளியீட்டாளர் ஆகிய என் அனுமதி இன்றி புகைப்பட நகல், e- புக், PDF, போன்ற எந்த வடிவத்திலும் பதிவு செய்தல் அல்லது பிற மின்னணு அல்லது இயந்திரம் முறைகள் உட்பட எந்த வகையிலும் இனப்பெருக்கம் செய்யவும் விநியோகிக்க அல்லது கடத்தக் கூடாது மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்....
கதையில் குறிப்பிட்டுள்ள கதாபாத்திரங்கள் இடங்கள் மற்றும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. உண்மையான நபர்கள் அல்லது நிஜவாழ்க்கை நிறுவனங்களுடன் எந்த ஒற்றுமையும் முற்றிலும் தற்செயலானது. இந்த படத்தில் தோன்றும் அனைத்து கதாபாத்திரங்களும் பிற நிறுவனங்களுக்கும் கற்பனையானவை. உண்மையான நபர்கள் இறந்தவர்கள் அல்லது உயிருடன் இருப்பவர்கள் அல்லது கடந்தகால அல்லது நிகழ்காலம் நிஜவாழ்க்கை நிறுவனங்களுடன் எந்த ஒரு ஒற்றுமையும் முற்றிலும் தற்செயலானது.....
copyright © 2020 by Aruna.

All rights reserved.
No part of this Publication may be reproduced, distributed or transmitted in any form of are by any means including photo copying, recording or other electronic or mechanical method or without the Prior written permission of the publisher. In the event of violation I will notify you that proper action will be taken. Any resemblance to real persons are other real life entities is purely coincidental . All characters and other entities appearing in this work are fictitious. Any resembles to real persons dead or alive or other real life in entities past and present is purely coincidental....

சென்னையின் பரபரப்பான ஏரியாவில் உள்ள பிரபலமான திருமண மண்டபம் எஸ்.ஆர்.எஸ் மண்டபம் என்ற பெயர் பலகையுடன் மின்னிக் கொண்டிருந்தது. உள்ளே சூர்யபிரகாஷ் வெட்ஸ் நட்சத்திரா என்ற பெயர்ப்பலகை வெல்கம் என்ற வாசகத்துடன் அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தது.
மல்லிகாவும் சந்திரசேகரும் தங்கள் வயதை மறந்து ஓடி ஆடி வேலை செய்துகொண்டிருந்தனர். ஷீலாவும் சங்கரும் திருமணத்திற்கு வருபவர்களை வரவேற்று உபசரித்துக் கொண்டிருந்தனர். ஜெயராஜ் குடும்பத்தினர் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்தனர்.
மணமகன் அறையில் சூர்யா இல்லாத அலப்பரை செய்து கொண்டிருந்தான். விஜய், "டேய் உன் அலப்பறை தாங்க முடியலடா. இதோட எத்தனை தடவைதான் பவுடர் அடிப்ப..?"
ஹரீஷ், "ஆமாடா, இதோட பத்து தடவை பவுடர் அடித்து விட்டடா" என்க,
சூர்யா, "உங்களுக்குப் பொறாமைடா, வாழ்க்கையில ஒரு தடவை தான் கல்யாணம் நடக்கும். அதுவும் காதலித்து கல்யாணம் பண்ண போறேன், அதுல நான் அழகா இருக்க வேண்டாமா..? இதெல்லாம் சிங்கிளா இருக்க உங்களுக்கு தெரியாது" என்றான்.
விஜய், "டேய்! இதுக்காகவாவது நான் கமிட் ஆகுறேன்டா."
சூர்யா, "டேய் காமெடி பண்ணாதடா. நீ லவ் பண்றது விபிஷாக்கே தெரியாது. நீயும் இத்தனை வருஷமா அவ பின்னாடி சுத்திட்டு இருக்க" என்று கூறி சிரித்தான். ஹரிஷ் ஏதோ சொல்ல வர சூர்யா, "ஸ்டாப், உனக்கு பேச தகுதி இல்ல. அவனாவது ஒன் சைடு இங்க ஒன்னுமே இல்லைடா."
ஹரிஷ் வாயை மூடி விட்டான். "எனக்கு பேச உரிமை இருக்கு" என்று ஒரு குரல் கேட்க மூவரும்திரும்பிப் பார்க்க ஷ்ரவன் நின்றிருந்தான். சூர்யா, "வாடா நல்லவனே, உன்னை எப்போ வர சொன்னா எப்போ வந்து இருக்க..?" அவன் ஈஈஈ என இளித்து, "சாரிடா மச்சான் கொஞ்சம் லேட் ஆகிவிட்டது" என்றான்.
சூர்யா, "கொஞ்சம் இல்ல ரொம்பவே லேட்டாயிடுச்சு" என்றான். ஷ்ரவன், "அதை விடுடா மச்சான். உன் கிட்ட கேள்வி கேட்க எனக்கு எல்லா தகுதியும் இருக்கு" என்றான்.
சூர்யா, "நோ, நிறைய பேரை காதலித்து இருந்தாலும் நீ இன்னும் கமிட் ஆகலை" என்றான்.
ஷ்ரவன், "யார் சொன்னது நான் இன்னும் கமிட் ஆகலை என்று? எனக்கு கல்யாணமே பேசி முடிவாக போகுது."
சூர்யா அதிர்ச்சியாக, "உனக்கு பொண்ணு கொடுக்கப் போற அந்த கேன பையன் குடும்பம் யாருடா?" என்றான்.
ஷ்ரவன் ஹரிஷை சைகை காட்ட சூர்யா, "என்னடா இப்படி அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக குடுக்குறீங்க. என் கல்யாணத்து அன்னைக்கு எனக்கு ஹார்ட் அட்டாக் வர வச்சுடுவீங்க போலையே" என்றான்.
ஹரிஷ், "நான் சொல்லலாம் என்றுதான் சொன்னேன். இவன் தான் உன்கிட்ட நேர்ல சொல்லனும் என்று சொல்லிவிட்டான்".
சூர்யா ஹரிஷிடம், "எப்படிடா.." என்க ஹரிஷ், "இவனும் மேக்னாவும் ஒரு வருஷமா லவ் பண்றாங்கடா. எங்க வீட்ல ஓகே சொல்லிட்டாங்க."
சூர்யா, "ஷ்ரவனை கொலை வெறியுடன் முறைக்க, அவன் "மச்சான் நேரில் பார்க்கும் போது நானே உன்கிட்ட சர்ப்ரைஸா சொல்லிக்கலாம் என்று நினைத்தேன்".
சூர்யா, "உன்ன நாளைக்கு கவனிச்சிக்கிறேன் என்றவன் உங்ககிட்ட பேசி டயர்ட் ஆகிட்டேன்" என்று கூறி 11வது முறையாக பவுடர் அடிக்க தொடங்கினான்.
இங்கே நட்சத்திரா மணமகள் அறையில் நெருப்பை விட அதிகமாக கொதித்துக் கொண்டிருந்தாள். 'இந்த கல்யாணத்துல உனக்கு விருப்பம் இருக்கா? இல்லையா? என்று கூட ஒரு வார்த்தை யாரும் கேட்கலை. விருப்பமில்லாத கல்யாணத்தை செய்து வைக்கப் போறாங்க. நான் என்ன பொம்மையா? எல்லோரும் அவங்கவங்க இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கிறார்கள். நானும் உயிருள்ள மனுஷிதான் என தனக்குள்ளே புலம்பிக் கொண்டிருந்தாள்.
விபிஷா நெற்றிச் சுட்டியை எடுத்து அவளுக்கு வைக்க போக நட்சத்திரா அதை தட்டி விட்டு, "இப்போ இது ஒண்ணுதான் குறைச்சல். கல்யாணத்தை நிறுத்த ஒரு ஐடியா சொல்லு என்று கேட்டா அதுக்கு ஏதாவது சொல்றியா?"
விபிஷா, "நானும் தான் உனக்கும் சூர்யா அண்ணாவுக்கும் என்ன பிரச்சனை. ஏன் கல்யாணத்தை நிறுத்த சொல்ற? என்று கேட்கிறேன். நீ பதில் சொல்றியா?"
நட்சத்திராவிடம் பதில் இல்லை மௌனமாகி விட்டாள். விபிஷா, "இங்க பாரு நட்சத்திரா உனக்கும் சூர்யா அண்ணாவுக்கும் என்ன சண்டை வேணா இருந்துட்டு போது. அம்மா அப்பா உனக்கு நல்லது தான் செய்வாங்க. நீ சூர்யா அண்ணாவை எவ்வளவு லவ் பண்ண என்று எனக்கு தெரியும். காதலர்களுக்கு இடையில் சண்டை வருவது சகஜம்தான். நாளைக்கு நீங்க கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் சமாதானமாகி விட்டீங்கன்னா அப்போ கண்டிப்பா நீ வருத்தப்படுவ கல்யாண போட்டோல முகத்தை உர்ருனு வச்சிருக்கேன்னு. சோ கொஞ்சமாவது முகத்தை சிரித்த மாதிரி வை" என்றாள்.
நட்சத்திரா, "அவன் செஞ்சதை என்னைக்கும் மறக்க மாட்டேன்" என்று கோபமாகக் கூறினாள். அப்போது உள்ளே வந்த ரேஷ்மா நட்சத்திராவை முறைத்து, "சரியான கைகாரி என் மாமாவை மயக்கி கைக்குள்ள போட்டுகிட்ட. என் மாமா நீ எது சொன்னாலும் தலையாட்டுராரு. எப்படியாவது இந்த கல்யாணத்தை நான் நிறுத்துவேன்" என்றாள்.
இதை கேட்டதும் நட்சத்திராவின் முகம் பிரகாசமானது. மைண்ட் வாய்ஸில், 'என்ன சொன்னாலும் கேட்குறானா கல்யாணத்தை நிறுத்த சொல்லி காட்டு கத்தா கத்திட்டு இருக்கேன்' என்று நினைத்தவள், "நான் கூட இந்த கல்யாணத்தை எப்படி நிறுத்துவது என்று தான் யோசித்து விட்டு இருக்கேன். ப்ளீஸ் நீயே நிறுத்தி விடு" என்றாள்.
ரேஷ்மா, "நீ இப்படியெல்லாம் பேசினால் நான் நம்பிடுவேனா? நான் இந்தக் கல்யாணத்தை நிறுத்தாம விடமாட்டேன்" என்று விட்டு வெளியேறினாள். நட்சத்திரா இவ லூசா? இல்ல லூசு மாதிரி நடிக்கிறாளா? சரி எப்படி இருந்தா என்ன இந்த கல்யாணத்தை நிறுத்தி விடுவாள் என நினைத்து சந்தோஷப்பட்டாள். ஆனால் அவள் நினைக்கும் எதுவும் சூர்யாவிடம் எடுபடாது என்று அவளுக்கு தெரியவில்லை.
நட்சத்திரா 'இந்தப் படத்துல எல்லாம் காட்டுவார்களே அதுமாதிரி கடைசி நேரத்தில் நிறுத்துங்க என்று யாராவது கத்தி என் கல்யாணத்தை நிறுத்தி விட வேண்டும்' என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தாள்.
நட்சத்திராவிடம் பேசிவிட்டு கோபமாக சென்ற ரேஷ்மா எதிரே வந்தவனை கவனிக்காமல் அவன் மீது மோதிவிட்டாள். கீழே விழச் சென்றவளை எதிரில் இருந்தவன் தாங்கிப் பிடித்துக் கொண்டான்.
ரேஷ்மா, "சாரி தெரியாம இடித்து விட்டேன்" என்றாள். அவன், "ஹே! பியூட்டி இதுக்கு எதுக்கு சாரி கேக்குற. நீ எத்தனை தடவை விழுந்தாலும் நான் தாங்கிப்பிடிக்க தயாராக இருக்கிறேன்" என்றான். ரேஷ்மா 'இவன் என்ன பைத்தியம் மாதிரி உளறிட்டு இருக்கான்' என நினைக்க அவன், "பியூட்டி நான் ஹரிஷ். உன் பெயர் என்ன?" என கேட்க ரேஷ்மா அவனை முறைத்து விட்டு நகர்ந்து விட்டாள்.
ஹரிஷ் சிரித்துக்கொண்டே சூர்யா அறைக்குள் நுழைய மற்றவர்கள் என்னடா பைத்தியம் மாதிரி தனியா சிரிச்சிட்டு வர? என கேட்க ஹரிஷ், "ஆமா டா பைத்தியம்தான் ஆகிட்டேன் அவ மேல" என்றான். சூர்யா, "யாரு மேல? ஏன்டா ஒரு அஞ்சு நிமிஷம் தானடா வெளியே போயிட்டு வந்த."
ஹரிஷ், "ஒரு செகண்ட்ல என் இதயத்தை பறித்து விட்டு போயிட்டா" என்று தரையை பார்த்து சிரித்தான். சூர்யா, "டேய்! மச்சான் நீ என்ன வேணா பண்ணு. கருமம் வெட்கம் மட்டும் படாதடா. என்னாலை அதை பார்க்க முடியலடா" என்றான். இதைக் கேட்டு மற்றவர்கள் சிரித்தனர்.
கிஷோர் வந்து, "நீங்க பேசுனது போதும் மாப்பிள்ளையை கூட்டிட்டு வாங்க" என்றான். புன்னகை முகமாக மாப்பிள்ளைக்கு உரிய கம்பீரத்துடன் சூர்யா வந்து மணமேடையில் அமர்ந்தான். மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்த ஐயர், "பொண்ணை வர சொல்லுங்கோ" என்றார்.
மல்லிகா விபிஷாவிடம், "நட்சத்திராவை கூட்டிட்டு வாமா" என்றார். விபிஷா நட்சத்திராவை அழைத்து வர அவள் விண்ணுலக தேவதை போல் நடந்து வந்து சூர்யாவின் அருகில் அமர்ந்தாள். சூர்யா அவளைப் பார்த்து புன்னகைக்க நட்சத்திரா அவனைப் பார்த்து தீயாய் முறைத்தாள்.
சூர்யா, 'பார்வையிலேயே எரிச்சுடுவா போலயே' என நினைத்தவன், "டார்லிங் இந்த சேலையில நீ ரொம்ப அழகா இருக்க." நட்சத்திரா, "என்னை டார்லிங் என்று கூப்பிடாதே என்று எத்தனை தடவை சொல்லி இருக்கேன்."
சூர்யா, "டார்லிங் அப்படிதான் கூப்பிடுவேன் டார்லிங்" என்றான். நட்சத்திரா கோபத்தில் ஏதோ சொல்ல வர ஷீலா, "ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு பிறகு பேசிகோங்க. இப்போ பேசாம உட்காருங்க. எப்ப பார்த்தாலும் அப்படி என்னதான் பேசுவீங்களோ?" என்றார்.
சூர்யா, "அம்மா லவ்வர்ஸ்குள்ள பேச ஆயிரம் இருக்கும்" என்க அங்கே பெரும் சிரிப்பலை எழும்பியது. நட்சத்திராவிற்கு எரிச்சலாக வந்தது. அங்கே அமர்ந்திருந்த அனைவரும் பொண்ணு மாப்பிள்ளை பொருத்தம் ரொம்ப அருமையாக இருக்கு எனப் பேசிக்கொண்டனர். இதை கேட்ட சந்திரசேகருக்கும் மல்லிகாவுக்கும் சந்தோஷமாக இருந்தது.
தாரா மாங்கல்யத்தை அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கி வர ஐயர் மந்திரத்தை கூறி மாங்கல்யத்தை எடுத்து சூர்யா கையில் கொடுத்தார். அனைவரும் அட்சதை தூவ சூர்யா நட்சத்திராவின் கழுத்தில் மங்கல நாண் பூட்டி தன்னில் சரி பாதியாக ஏற்றுக் கொண்டான். அடுத்தடுத்து ஒவ்வொரு சடங்குகளாக அரங்கேறியது.
பொண்ணும் மாப்பிள்ளையும் சாப்பிட சென்றனர். விஜய், ஹரிஷ், ஷ்ரவன் அனைவரும் நட்சத்திராவையும் சூர்யாவையும் கலாய்த்து ஒரு வழி ஆக்கிவிட்டனர். சூர்யா இவை அனைத்தையும் குதூகலமாக என்ஜாய் பண்ணிக்கொண்டிருந்தான்.
ஹரிஷ், "மச்சான் நீயா சாப்பிட்டுட்டு இருக்க, தங்கச்சிக்கு ஊட்டி விடுடா" என்றான். சூர்யா, "இதுகூட சூப்பரா இருக்கே" என்று சாப்பாட்டை எடுத்து அவளுக்கு ஊட்ட போக நட்சத்திரா அவனை முறைத்தாள். சூர்யா விஜயை பார்க்க விஜய், "தங்கச்சிம்மா வாங்கிக்கோ" என்றான். நட்சத்திரா சூர்யாவை முறைத்துக்கொண்டே சாப்பாட்டை வாங்கினாள். இப்படியே கலாட்டாவுடன் அவர்களின் திருமணம் முடிந்தது.
அனைவரும் திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்தனர். நட்சத்திரா வலது காலை எடுத்து வைத்து வீட்டினுள் நுழைந்தாள். சந்திரசேகரும் மல்லிகாவும் வீட்டிற்கு கிளம்புவதாக கூற ஷீலாவும் சங்கரும் இன்றைக்கு ஒரு நாள் மட்டும் இங்கேயே தங்கிகோங்க என்றனர்.
நட்சத்திராவும், "ஆமாம்மா, எனக்காக இன்னைக்கு ஒரு நாள் மட்டும் இங்கேயே தங்கிக்கோங்க" என்றாள். அவர்கள் சரி என்று சம்மதித்தனர்.
ஷீலா, "நட்சத்திரா சூர்யா ரெண்டு பேரும் டயர்டா இருப்பிங்க, போய் ரெஸ்ட் எடுங்க" என்றார். நட்சத்திரா ரூமிற்கு செல்ல சூர்யா அவள் பின்னே சென்றான். சூர்யாவின் ரூம்க்குள் நுழைந்த நட்சத்திரா அவன் வருவதற்குள் வேகமாக கதவை அடைத்து விட்டாள்.
அவள் செயலில் அதிர்ச்சியான சூர்யா, "நட்சத்திரா கதவைத் திற" என தட்ட நட்சத்திரா, "திறக்க முடியாது போடா" என்று திட்டினாள். சூர்யா 'எப்படியும் அவ திறக்க மாட்டா' என நினைத்து கீழே இறங்கி வந்து விட்டான்.
விஜய், "என்னடா மச்சான் ரெஸ்ட் எடுக்கலையா? போன உடனே வந்துட்ட." சூர்யா, "அது உங்க கூட காலையிலிருந்து சரியா பேசலடா. அதான் உங்க கூட பேசலாம் என்று வந்தேன்."
விஜய், "அடடா எப்படி டா மச்சான் இப்படி கேவலமா சமாளிக்கிற. நீ பல்பு வாங்கினதை நான் பார்த்துவிட்டேன்"என்று ஹரிஷிடம் ஹைபை அடித்தான். சூர்யா ஹிஹி என அசடு வழிந்தான். விஜய் "சிரிக்காதடா பார்க்க முடியல" என்றான் இவர்கள் அரட்டையுடன் நேரம் ஓடியது.
விஜயும் ஹரீஷூம் முதலிரவு அறையை அலங்காரம் செய்துகொண்டிருந்தனர். நட்சத்திராவிற்கு மல்லிகா ஆயிரம் அறிவுரைகளை கூறி அவளை அலங்கரித்துக் கொண்டு இருந்தார்.
ஷீலா, "அண்ணி ஏன் இவ்வளவு அட்வைஸ் பண்றீங்க? நட்சத்திரா உங்க வீட்டில் எப்படி இருந்தாளோ அப்படியே இங்க இருக்கட்டும்" என்றார்.
மல்லிகா, "உங்களை மாதிரி ஒரு மாமியார் கிடைக்க என் பொண்ணுங்க ரெண்டு பேரும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்றார். இதைக் கேட்டு ஷீலா புன்னகைத்தார். நட்சத்திரா பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கி விட்டு சூர்யாவின் அறைக்குள் நுழைந்தாள்..
கவிதைகள் தொடரும்.....
 

Janu murugan

Moderator
Staff member
Jun 10, 2020
43
20
8
20
விழிகளிலே ஒரு கவிதை 2


நட்சத்திரா அறைக்குள் நுழைந்ததும் சூர்யாவை தேடினாள். அவனைக் காணவில்லை எங்கே போயிருப்பான்? என நினைக்க திடீரென்று பின்னாலிருந்து அவளை அணைத்தான்.
திடீர் தாக்குதல் நட்சத்திரா அதிர்ச்சியாகி அவனை விலக்கி விட்டு திரும்பியவள் தீயாய் முறைத்தாள். சூர்யா அவளைப் பார்த்து சிரித்தான்.
நட்சத்திரா, "இந்த பக்கத்துல வேற வேலை எல்லாம் வச்சுக்காதடா. எனக்கு கோவம் வந்தா அவ்வளவுதான் உண்டு இல்லை என்று பண்ணி விடுவேன்" என்றாள்.
சூர்யா, "என்னது டாவா?"
நட்சத்திரா, "ஆமாடா ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ண உனக்கெல்லாம் எதுக்குடா மரியாதை."
சூர்யா, "ஏய் நான் உன் புருஷன்டி."
நட்சத்திரா, "அது மத்தவங்களுக்கு தான். எனக்கு இல்ல, இந்த ரூம்குள்ள நீ யாரோ நான் யாரோ தான். என் பக்கத்துல வர்ற வேலை எல்லாம் இருக்கக் கூடாது" என்றாள்.
சூர்யா, "வந்தா என்ன பண்ணுவ?" என்று ஓரடி முன்னே எடுத்து வைக்க நட்சத்திரா, "பக்கத்துல வர்ற வேலை எல்லாம் இருக்கக் கூடாது" என்றாள்.
சூர்யா அவளை பார்த்துக்கொண்டே முன்னே நடந்தான். நட்சத்திரா பின்னோக்கி நடந்து சுவற்றில் முட்டி நின்றாள். சூர்யா இரண்டு கைகளையும் சுவற்றில் ஒட்டி அவளை நெருங்கி நின்று இருந்தான். இருவருக்கும் நூலிழை இடைவெளிதான்.
நட்சத்திராவிற்கு இதயம் தாறுமாறாக துடித்துக்கொண்டிருந்தது. சூர்யா, "இப்ப பேசு டி" என்றான். நட்சத்திராவிற்கு பேச்சு வரவில்லை. குரல் உள்ளிழுத்துக் கொண்டது.
அவள் காதருகில் குனிந்து, "என்ன இவ்வளவு நேரம் கத்திட்டு இப்ப பேச்சையே காணோம்" என்று அவள் செவி மடலில் இதழ் பதித்தான். அவன் சூடான மூச்சு காற்றை அருகில் உணர்ந்தவள் தனது இரண்டு கைகளையும் வைத்து வேகமாக அவனைத் தள்ளியவள், "பக்கத்துல வராதன்னு சொல்றேன்ல, ஒரு தடவை சொன்னா உனக்கு புரியாதா? இனிமேல் என் பக்கத்துல வந்தா அவ்வளவுதான். பக்கத்துல இருக்க சொம்பை வச்சு அடிச்சிடுவேன்" என்று திட்டினாள்.
இதையெல்லாம் கேட்டும் சூர்யா அவளை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். நட்சத்திரா அவன் சிரிப்பதைப் பார்த்து மேலும் கடுப்பாகிவிட்டாள். நட்சத்திரா, "நான் உன்னை திட்டிகிட்டு இருக்கேன் நீ பைத்தியம் மாதிரி என்ன பாத்து சிரிச்சிட்டு இருக்க" என்றாள். சூர்யா, "ஆமா நான் பைத்தியம் தான். உன் மேல பைத்தியமா இருக்கேன்" என்றான் புன்னகையுடன்
நட்சத்திரா இவன் கிட்ட எல்லாம் பேச முடியாது என நினைத்து தலையணையும் பெட்ஷீட்டையும் எடுத்து சோபாவில் போட்டாள். சூர்யா, "டார்லிங் நீ பெட்லயே படுத்துக்கோ, எனக்கு எந்த பிராபளமும் இல்லை" என்றான் இரண்டு கைகளையும் விரித்து.
நட்சத்திரா, "ஆங்.... நினைப்பு தான், நான் எதுக்கு சோபால படுக்கணும்? நான் பெட்ல தான் படுப்பேன். நீ போய் சோபால படு" என்றாள்.
சூர்யா, "இது என்ன கொடுமையா இருக்கு. இது என்னோட ரூம் டி, நான் சோபால படுக்கணுமா?"
நட்சத்திரா, "இல்லை.." எனக் கூறிக் கொண்டிருக்கும் போதே இடையில் புகுந்து, "அப்போ உனக்கு ஓகேவா?" என்றான். நட்சத்திரா, "என்ன முழுசா பேசவிடு என்றவள் இல்ல நீ தரையில் படுத்தால் கூட எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல, அது உன் இஷ்டம்" என்றாள்.
சூர்யா, "எல்லாரும் கல்யாணத்துக்கு முன்னாடி தான் தனியா தூங்குவாங்க, கல்யாணத்துக்கு அப்புறம் ஒன்னா தூங்குவாங்க. ஆனால் என் விஷயத்தில் எல்லாம் ரிவர்ஸ்ல நடக்குது" என்று புலம்பிக் கொண்டே சென்று சோபாவில் படுத்தான்.
அவன் உயரத்திற்கு சோபா பத்தவில்லை, கால் இடித்தது. சூர்யா, "டார்லிங் என்ன பாத்தா உனக்கு பாவமா இல்லையா?"
நட்சத்திரா, "உன்னை பாத்தா கோவமா தான் இருக்கு பாவமா இல்ல" என்றாள். சூர்யா இதைக் கேட்டு வாயை மூடிக்கொண்டான்.
நட்சத்திரா பெட்ஷீட்டை கழுத்துவரை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்க முயற்சித்தும் தூக்கம் வரவில்லை. சூர்யாவின் பார்வை தன்னை துளைப்பதை உணர்ந்தவள் அவனை திரும்பி பார்த்தாள். சூர்யா இமைக்க மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
நட்சத்திரா பார்த்ததும் அவன் ஒற்றை புருவம் உயர்த்தி என்ன என்று கேட்டான். நட்சத்திரா ஒன்னுமில்லை என்று தலையை ஆட்டினாள். சூர்யா ஹஸ்கி வாய்ஸில், "என்ன என் பார்வை உன்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுதா?" என்றான். அவன் பார்வையில் ஒரு நிமிடம் தன்னைத் தொலைத்தவள் அவன் செய்த செயல்கள் நினைவுக்கு வர கோபமாக திரும்பி படுத்துக்கொண்டாள்.
சூர்யா 'எவ்வளவு நாள் தான் என்கிட்ட இருந்து விலகி ஓடுவ என்று நானும் பார்க்கிறேன்' என்று நினைத்து மனதிற்குள் சிரித்தவன் சிறிது நேரத்தில் உறங்கியும் போனான்.
மறுநாள் பொழுது அழகாக புலர்ந்தது. நட்சத்திரா தூக்கம் கலைந்து கண் விழித்தாள். அவள் எழ முயற்ச்சிக்க முடியவில்லை. சூர்யா அவளை அணைத்துக் கொண்டு படுத்திருந்தான். நட்சத்திரா பொறுக்கி நைட் அவ்வளவு தூரம் சொல்லியும் இப்படி என் பக்கத்தில் வந்து படுத்து இருக்கான் என திட்டியவள் அவன் கையில் வலிக்கும்படி கிள்ளினாள்.
"ஆ..." என்ற சத்தத்துடன் கண் விழித்த சூர்யா, "ராட்சஷி ஏன்டி என்ன கிள்ளுன?" என்றான். நட்சத்திரா, "எதுக்கு டா என் பக்கத்தில் வந்து படுத்த" என்று திட்டினாள்.
சூர்யா முகத்தில் அதிர்ச்சியைக் காட்டி, "நான் எப்படி இங்க வந்தேன்? நைட் அங்க தான படுத்து இருந்தேன்" என்றான்.
நட்சத்திரா 'என்னோட டயலாக்க என்கிட்டயே சொல்றானே' என நினைக்க சூர்யா, "என்ன டார்லிங் நம்ம டயலாக் நமக்கிடையே திரும்பி வருது என்று யோசிக்கிறியா?" என்று கூறிக் கண்ணடித்தான்.
நட்சத்திரா என்னைக்கோ நான் சொன்னதை ஞாபகம் வச்சு பேசுகிறானே என ஆச்சரியமாக விழிவிரித்துப் பார்க்க, சூர்யா, "என்னடி இப்படி பாக்குற? என்னதான் அழகாக இருந்தாலும் இப்படி பச்சையா என்ன சைட் அடிக்ககூடாது" என்றான்.
நட்சத்திரா இதைக் கேட்டதும் அவனை முறைத்து, "ஆமா இவன் பெரிய ஆண் அழகன், இவன சைட் அடிக்கிறாங்க" என திட்டி விட்டு குளிக்க சென்றாள்.
சூர்யா இவ கூட பேசி பேசியே நான் டயர்ட்டாகிவிட்டேன் என்று கூறி மீண்டும் படுத்துவிட்டான். நட்சத்திரா குளித்து கிளம்பி ரெடியாகி கீழே வர ஷீலா, "நட்சுமா காபி குடிமா" என்றார்.
நட்சத்திரா, "தேங்க்ஸ் அத்தை" என்று புன்னகையுடன் வாங்கிக் கொண்டாள். இதை பார்த்த மல்லிகா தேடித்தேடி மாப்பிள்ளை பார்த்து இருந்தாலும் இப்படி ஒரு குடும்பம் என் இரண்டு மகள்களுக்கும் கிடைத்திருக்காது ஒரு நல்ல குடும்பத்தில் தான் நம்ம பெண்களை கட்டி கொடுத்து இருக்கோம் என்று பூரிப்படைந்தார்.
பின் பொதுவான விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தனர். இன்று மாலை சூர்யாவிற்கும் நட்சத்திராவிற்கும் ரிசப்ஷன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கான வேலையை ஆண்கள் செய்துகொண்டிருந்தனர்.
சிறிது நேரத்தில் சூர்யா எழுந்து, "அம்மா காபி" என்று அழைத்துக் கொண்டே கீழே வர அவன் வந்த கோலத்தை பார்த்த ஷீலாவிற்கும் மல்லிகாவிற்கும் அதிர்ச்சி. ஷீலா, "டேய் மொதல்ல குளிச்சிட்டு வா, அப்பதான் காபி" என்று கூற சூர்யா, "அம்மா காபி குடிச்சிட்டு அப்பறம் குளிச்சிட்டு வரேன்" என்றான்.
ஷீலா, "உதை வாங்கப் போற, போயி குளிச்சுட்டு வா" என்று அவனை ரூமிற்குள் தள்ளினார். நட்சத்திராவிற்கு தான் அவன் செய்த காரியத்தினால் தர்மசங்கடமாக போய்விட்டது. நட்சத்திரா 'இவனால் என் மானமே போகுது, நான் எப்படி இவங்ககிட்ட நார்மலா பேசுவேன்? உனக்கு இருக்கு டா' எனக்கு கருவிக் கொண்டே ரூமிற்குள் கோபமாக சென்றாள்.
நட்சத்திரா உள்ளே நுழைந்ததும் சூர்யா, "டார்லிங் எனக்கு டிரஸும் டவலும் எடுத்து கொடுக்கவா வந்த, நான் இந்த பார்மலிடீஸ் எல்லாம் எதிர்பார்க்க மாட்டேன். எனக்கு பிடிக்காது" என்றான்.
நட்சத்திரா அவனை முறைத்து, "எனக்கு வர்ற கோவத்துக்கு உன்னை என்ன பண்றதுன்னு தெரியலையே" என்று பல்லைக் கடித்தாள்.
சூர்யா, "நான் என்ன டார்லிங் பண்ணேன்?" என்றான்.
நட்சத்திரா, "நீ வேணும்னு தான் என்னை அசிங்க படுத்துறடா" என திட்ட சூர்யா, "நான் என்ன பண்ணேன் என்று சொல்லாமலேயே திட்டிட்டு இருக்க" என்றான்.
நட்சத்திரா அவனை இழுத்துக்கொண்டு போய் கண்ணாடி முன் நிறுத்தி, "நீ வந்திருக்க கோலத்தை பாரு" என்றாள். சூர்யா கண்ணாடியை பார்க்க அவனுக்கு அதிர்ச்சி, அவன் நின்ற கோலம் அப்படி தலையில் உதிர்ந்து போன பூக்கள் சட்டையில் லிப்ஸ்டிக் கறை. சூர்யா
நட்சத்திரவைப் பார்த்து அசடு வழிந்தான்.
சூர்யா, "ஹிஹி... நான் பாக்காம வந்துட்டேன்" என்றான்.
நட்சத்திரா, "வர வர நீ ரொம்ப ஓவரா போயிட்டு இருக்க" என்று திட்டி விட்டு வெளியேறினாள்.
மாலை ரிசப்ஷன் வெகு விமர்சையாக நடைபெற்றது. சூர்யா ஷெர்வானியிலும் நட்சத்திரா லெகங்காவிலும் அழகாக நின்றிருந்தனர். ஆபீஸில் வேலை பார்ப்பவர்களுக்காக இந்த ரிசப்ஷன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆபீஸ் ஸ்டாப் ஒவ்வொருவராக வந்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
ஆபீஸில் வேலை பார்க்கும் பெண்கள் சிலர் நட்சத்திராவை பொறாமையாக பார்த்தனர். எல்லோரும் ரிசப்ஷன் வேலையில் பிஸியாக இருந்தனர். ஹரிஷ் ரேஷ்மாவின் பின்னேயே சுற்றிக் கொண்டிருந்தான். ஷ்ரவனும் மேக்னாவும் ஒரு புறமும் சதீஷும் அனுவும் ஒரு புறமும் அமர்ந்து கடலை போட்டுக் கொண்டிருந்தனர்.
போட்டோகிராபர் சூர்யாவை நட்சத்திராவையும் விதவிதமாக போஸ் கொடுக்கச் சொல்லி பாடாய் படுத்திக் கொண்டிருந்தார். நட்சத்திராவிற்கு எரிச்சலாய் வந்தது, இருந்தபோதும் மற்றவர்களுக்காக பொறுத்துக்கொண்டு இன்முகமாக நின்றிருந்தாள். சூர்யா சந்தோஷமாக கொஞ்சம் அதிகமாகவே போட்டோ கிராபருக்கு ஒத்துழைப்பு கொடுத்து, நட்சத்திராவிடம் பல முறைப்புகளை பரிசாக பெற்றுக் கொண்டான்.
நேரம் போகப் போக நட்சத்திராவிற்கு நிற்கமுடியவில்லை, கால் வலி வந்துவிட்டது. அது அவள் முகத்திலும் பிரதிபலித்தது. ஆனால் அவள் வாயைத் திறந்து கூறவில்லை. சூர்யா விஜயை அழைத்து அவன் காதில் ஏதோ கூற சிறிது நேரத்தில் சூர்யாவிற்கும் நட்சத்திராவிற்கும் அமர சேர் போடப்பட்டது.
சூர்யா, "டார்லிங் கொஞ்ச நேரம் உட்காரு, கால் வலிக்க போகுது" என்றான். நட்சத்திரா 'நான் சொல்லாமலே எனக்கு கால் வலிக்குது என்று தெரிஞ்சு செய்கிறானே?' என யோசித்துக் கொண்டிருக்க, சூர்யா ஜூஸை அவளிடம் நீட்டி, "இந்தா தாகமாய் இருந்தா குடி" என்றான்.
நட்சத்திரா யோசனையில் அவன் கூறுவதை கவனிக்கவில்லை. சூர்யா, "டார்லிங் என்ன யோசிக்கிற?" என்று அவளை உலுக்கினான். நட்சத்திரா ஒன்றுமில்லை என்று ஜூஸை வாங்கி அவனைப் பார்த்துக் கொண்டே பருகினாள்.
கவிதைகள் தொடரும்....
ஹாய் டியர்ஸ், சாரிபா லேட்டா யூடி போட்டதுக்கு. இனிமேல் அடிக்கடி சாரி கேட்கவேண்டி இருக்கும்னு நினைக்கிறேன். ஏன்னா எனக்கு ஆன்லைன் க்ளாஸ் தினமும் வைக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஆன்லைன்ல இன்டர்னெல் இந்த வாரம் ஸ்மார்ட் ஆகுதுபா. அதனால் லேட்டா தான் யூடி போடுவேன். பாய் டியர்ஸ்.... மறக்காம உங்கள் கருத்துக்களை பதிவிடுங்க....??
 

Janu murugan

Moderator
Staff member
Jun 10, 2020
43
20
8
20
ஹாய் பிரெண்ட்ஸ்,

ஜானு அவர்களின் விழிகளிலே ஒரு கவிதை இரெண்டாம் பாகம் இங்கு பதிவிடப்படும்...
விழிகளிலே ஒரு கவிதை 3

மறுநாள் காலையில் நட்சத்திரா எழுந்து குளித்து கிளம்பி, "சூர்யா எழுந்திரு..." என்று கத்திக் கொண்டிருந்தாள். சூர்யா தூங்குவது போல கண்களை மூடி நடித்துக் கொண்டிருந்தான். நட்சத்திரா, "டேய்! இப்ப எழுந்திருக்க போறியா? இல்லையா? என்று கோபமாகக் கூறினாள். சூர்யா, 'நல்லா கத்தடி' என்று கண்களை இறுக்க மூடிக்கொண்டான்.
ஷீலா, "நட்சத்திரா..." என்று அழைக்க நட்சத்திரா கீழே இறங்கி வந்தாள். அவள், "சொல்லுங்க அத்தை" என்க ஷீலா, "என்னம்மா நேரம் ஆயிடுச்சு. சந்திர சேகர் அண்ணா ரெண்டு தடவ கால் பண்ணிட்டாங்க. எவ்வளவு நேரமா இரண்டு பேரும் கிளம்புறீங்க, நல்ல நேரம் முடிவதறதுக்குள்ள மறு வீட்டுக்கு
போகனும்" என்றார்.
நட்சத்திரா, "அத்தை இதோ ஒரு பத்து நிமிஷத்துல வந்துடறேன் அத்தை" என்று வேகமாக ரூமுக்குள் நுழைந்து தண்ணியை எடுக்கப்போக சூர்யா அவளை பிடித்து இழுத்து விட்டான்.
நட்சத்திரா அவன் இழுத்த இழுப்பில் பேலன்ஸ் தவறி அவன் மேலேயே விழுந்து விட்டாள். சூர்யா, "காலையில் எழுந்தவுடனே என் தேவதை தரிசனமா" வேகமாக அவனை விலக்கி விட்டு எழுந்தவள் இடுப்பில் கையை ஊன்றி அவனை முறைத்தாள்.
நட்சத்திரா, "இப்ப நீ எழுந்து கிளம்ப போறியா? இல்லையா?" என திட்ட சூர்யா, "மாட்டேன்" என்று மீண்டும் தூங்க போக நட்சத்திரா, "நான் போய் அத்தை கிட்ட சொல்லுவேன்" என்றாள்.
சூர்யா, "போய் சொல்லிக்கோ, நானும் சொல்லுவேன், நீதான் பொய் சொல்றேன்னு. நீ தான் என்னை கிளம்ப வேண்டாம்னு சொல்றன்னு அம்மா கிட்ட நான் சொல்லுவேன். அம்மா நான் சொல்றதுதான் நம்புவாங்க" என்றான்.
நட்சத்திரா, "ப்ளீஸ்டா டைம் ஆயிடுச்சு, கிளம்புடா" என்று கெஞ்சினாள்.
சூர்யா, "சரி ரொம்ப கெஞ்சாத, நான் கிளம்புறேன். ஆனால் ஒரு கண்டிஷன்" என்றான்.
நட்சத்திரா அவனை கேள்வியாக பார்க்க சூர்யா, "இனிமேல் நீ என்னை மாமான்னு தான் கூப்பிடனும்."
நட்சத்திரா இதைக் கேட்டதும், "முடியாது போடா, நீ வந்தா வா வாரலேன்னா போ. நான் வெளில வெயிட் பண்றேன். பத்து நிமிஷத்துல நீ கிளம்பி வந்தா நான் உன் கூட போவேன். இல்லனா நான் மட்டும் தனியாக போறேன்" என்று கூறிவிட்டு வெளியே சென்று விட்டாள்.
சூர்யா, 'உன்னை எப்படி மாமான்னு கூப்பிட வைக்கணும்னு எனக்கு தெரியும்' என்று நினைத்து சிரித்துக் கொண்டே கிளம்ப சென்றான்.
சூர்யா குளித்து கிளம்பி பிளாக் சர்ட் ப்ளூ ஜீன்ஸ் போட்டு கம்பீரமாக இறங்கி வந்தான். நட்சத்திரா அவன் இறங்கி வருவதை இமைக்காமல் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் அருகில் வருவதைக் கூட உணராமல் அவனையே பார்த்துக் கொண்டிருக்க சூர்யா, "என்ன டார்லிங் என்னையே முழுங்கற மாதிரி பாக்குற" என்று அவள் காதில் ரகசியமாக கேட்க, திடிக்கிட்டவள் வேகமாக அவனிடமிருந்து விலகி நின்றாள்.
சூர்யா, "என்னடி என்ன பிடிக்கல பிடிக்கலன்னுட்டு இப்ப இப்படி பாக்குற" என்றான்.
நட்சத்திரா, "நான் உன்ன எல்லாம் பார்க்கல நான் யோசிச்சுட்டு இருந்தேன்" என்றாள் சமாளிப்பாக.
சூர்யா, "நல்லா சமாளிக்கிற டார்லிங்" என்று சிரித்துக் கொண்டே நடந்தான்.
நட்சத்திரா, 'நட்சு இப்படி போய் பல்ப் வாங்கிட்டியே அவன்கிட்ட, எவ்வளவு வாங்கினாலும் உனக்கு புத்தியே வரமாட்டேங்குது' என தன்னைத்தானே கடிந்து கொண்டவள் அவன் பின்னே சென்றாள்.
நட்சத்திரா வேண்டுமென்றே பின்சீட்டில் அமர்ந்து கொண்டாள். அதை பார்த்து சிரித்துக் கொண்டே வண்டியை ஸ்டார்ட் செய்தவன் கண்ணாடி வழியே அவளையே பார்த்துக் கொண்டே வண்டியை ஓட்டினான். இல்லை இல்லை உருட்டிக்கொண்டு இருந்தான்.
அவன் தன்னையே பார்ப்பதை உணர்ந்தவள், "ரோட்டை பார்த்து வண்டியை ஓட்டுடா" என்று திட்டினாள். அவன் அவள் சொல்வதை ஒரு பொருட்டாக மதிக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். நட்சத்திரா, 'இவனெல்லாம் சொன்னா கேக்குற ஜென்மம் கிடையாது' என திட்டி விட்டு திரும்ப எதிரில் ஒரு லாரி வந்துகொண்டிருந்தது. நட்சத்திரா, "டேய்! லாரி வருதுடா" என்று கூறுவதற்குள் லாரி மிக நெருக்கத்தில் வந்து விட்டது.
நட்சத்திரா கண்களை இறுக மூடிக் கொண்டாள். சூர்யா ஒரு நூலிழை இடைவெளியில் காரை திருப்பி விட்டான். நட்சத்திரா இன்னும் உயிரோட தான் இருக்கோமா..? என்று கண்ணை திறந்து பார்க்க சூர்யா அவளை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.
நட்சத்திரா அவனை முறைத்து, "உனக்கு எதில் விளையாடனும் ஒரு விவஸ்தையே இல்லையா..?" என்று திட்டினாள்.
சூர்யா, "இப்போ நீ முன்னாடி வந்து உட்காரலை, அப்போவாவது கடைசி செகண்ட்ல வண்டியை திருப்பினேன். அடுத்து வர்ற வண்டில நேரா போய் மோதி விடுவேன் என்று காரை நிறுத்த அவனைத் திட்டிக்கொண்டே முன்னே சென்று அமர்ந்தாள். சூர்யா இதழில் உறைந்த மென்நகையுடன் வண்டியை எடுத்தான்.
சூர்யா ரேடியோவில் பாட்டு ஓட விட,
"உன் விழிகளில் விழுந்து
நான் எழுகிறேன்
எழுந்துமே மருபடி விழுகிறேன்"
எனறு பாட இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
இது நட்சத்திரா சூர்யாவுக்காக வைத்திருந்த ரிங் டோன். இதைக் கேட்டதும் நட்சத்திரா நினைவு சூர்யாவுடன் இன்பமாக இருந்த நாளை நோக்கி சென்றது. அவளின் கண்களில் தெரிந்த காதலை பார்த்த சூர்யா அவளை மறுபடியும் பழையபடி மாற்ற முடியும் என எண்ணி அவளிடம் பேச தொடங்கினான்.
" நான் செஞ்சது தப்புதான், நான் ஒத்துக்குறேன். நான் தான் மன்னிப்பு கேட்டுட்டேன்ல, இதுக்கு மேல நான் என்ன செஞ்சா நீ என்ன மன்னிப்ப? இப்படி இருக்காதடி உம்முன்னு. பழையபடி மாறுடி. எனக்கு ஏன் பழைய நட்சத்திரா வேணும்" என்று அவளின் கைகளை பற்றினான்.
அவன் கண்களில் தெரிந்த வலியில் ஒரு நிமிடம் அவளின் மனம் இளகினாலும் அவன் செய்தது மனக்கண்ணில் தோன்ற வெடுக்கென தன் கையை உதறி, "மன்னிக்கக் கூடிய தப்பு நீ பண்ணல. நீ பேசிய வார்த்தை என்ன குத்தி கிழிச்சிருச்சு. வீணா என்கிட்ட கெஞ்சிட்டு இருக்காம டைவர்ஸ் கொடுத்துட்டு போற வழிய பாரு. நானாவது நிம்மதியாக இருப்பேன்" என்று கோபத்தில் வார்த்தையை அள்ளி வீசினாள். பேசிவிட்டு நட்சத்திரா ஜன்னல் புறம் திரும்பி கொண்டாள்.
சூர்யாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. ரோட்டை பார்த்து வண்டியை ஓட்ட ஆரம்பித்தான். நட்சத்திராவிற்கு அவனை கோபத்தில் திட்டி விட்டோமே என வருத்தமாக இருந்தது. அவன் தன்னை காயப்படுத்தியது போல தானே தானும் அவனை பேசி விட்டோம் என்று வருந்தி அவனிடம் மன்னிப்பு கேட்கலாம் என திரும்ப அவன் இவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
நட்சத்திரா திரும்பியதும் அவளைப் பார்த்து கண்ணடித்தான். நட்சத்திரா, 'நீ இவனை போய் பீல் பண்ணுவான்னு நினைச்சா அது உன் தப்பு' என நினைத்து பார்த்தாள். சூர்யா, "என்ன டார்லிங் நான் வருத்தப்படுவேன் நினைச்சியா?" என்று கேட்டுவிட்டு பதிலும் அவனே கூறினான். "இதுக்கெல்லாம் பீல் பண்ணா நட்சத்திராவை சமாதான படுத்த முடியுமா?" என்று கூறிவிட்டு,
"காதல் வந்தாளே காலு ரெண்டும் தன்னாலே காத்தா சுத்துதே
உந்தன் பின்னாலே..."

என்று உற்சாகமாக பாடிக்கொண்டே வண்டியை ஓட்டினான்.
நட்சத்திராவிற்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. எதற்கெடுத்தாலும் கோபப்படுபவன் இப்படி அடியோடு மாறிவிட்டனே. இவையெல்லாம் எனக்காக என நினைக்க ஒரு மனம் ஆனந்தக் கூத்தாடியது. மற்றொரு மனம் அவனை நம்பாதே திரும்பவும் உன்னை காயப்படுத்தினாலும் காயப்படுத்தும். உன்னால் தாங்க முடியாது' என்றது அவள் இரு வேறு உணர்வுகள் பிடியில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தாள். இருவரும் ஒருவழியாக நட்சத்திராவின் வீட்டை அடைந்தனர்.
சந்திர சேகரும் மல்லிகாவும் அவர்களை வரவேற்றனர். சூர்யாவை மல்லிகா விழுந்து விழுந்து கவனித்தார். சூர்யா, "நார்மலா இருங்க அத்தை. நான் இன்னைக்கு தான் நம்ம வீட்டுக்கு வர்றேனா? எதுக்கு இப்படி விழுந்து விழுந்து கவனிக்குறீங்க" என்றான்.
சந்திரசேகர், "நல்லா சொல்லுங்க மாப்பிள்ள, நானும் காலைல இருந்து சொல்றேன் பம்பரமா சுத்திட்டு இருக்கா."
மல்லிகா புன்னகையுடன், "வீட்டுக்கு வந்த மாப்பிள்ளையை உபசரிப்பது எங்கள் கடமை" என்றார். சூர்யா மல்லிகாவுடனும் சந்திரசேகருடனும் நன்றாகவே பேசிக் கொண்டிருந்தான்.
நட்சத்திரா இதைப்பார்த்து மருமகன் வந்த உடனே மகளை மறந்துட்டாங்க. ஊர்ல இல்லாத மருமகன் கிடைச்சுருக்கான்னு தலையில தூக்கி வெச்சு கொண்டாடுறாங்க என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டு தனது ரூமிற்குள் சென்று விட்டாள்.
அவர்கள் தன்னை தேடுவார்கள் என்று அவள் எதிர்பார்க்க அவர்கள் இவள் ஒருத்தி இருப்பதையே மறந்து போனது போல பேசிக் கொண்டிருந்தனர். நட்சத்திரா கோபத்தில் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருந்தாள்.
சூர்யா அவளது அறைக்குள் நுழைய நட்சத்திரா அவனை கவனிக்கவில்லை. சூர்யா தன் கொண்டையை செரும நட்சத்திரா அவனை திரும்பி பார்த்தாள். சூர்யா, "யாரு வயிரோ கருகுற ஸ்மெல் வருது" என்றான்.
நட்சத்திரா, "யாருக்கு வயிறு எறியுது?" என்றாள் முறைப்புடன். சூர்யா, "பொய் சொல்லாத, அத்தை மாமா என்கிட்ட க்ளோசா இருக்கிறதா பார்த்து உனக்கு பொறாமை" என்றான்.
நட்சத்திரா, "அவங்க என்னோட அம்மா அப்பா. எனக்கு தான் அவங்க முன்னுரிமை கொடுப்பாங்க" என்றாள்.
சூர்யா, "இல்ல அவங்க எனக்கு தான் முன்னுரிமை கொடுப்பாங்க."
நட்சத்திரா, "இல்ல நான் தான் ஃபர்ஸ்ட்."
சூர்யா, "நான் தான் அவங்களுக்கு ஃபர்ஸ்ட். அதை இப்போ ப்ரூஃப் பண்றேன்" என்றவன் கிச்சனுக்கு சென்றான்.
நட்சத்திரா இப்போ எதுக்கு இவன் கிச்சனுக்கு போறான் என யோசித்தாள். அவன் கிச்சனுக்குள் சென்றதை மல்லிகாவும் சந்திரசேகரும் கவனிக்கவில்லை. சூர்யா ஒரு டம்ளரில் தண்ணீரை எடுத்து வேண்டுமென்றே அதைக் கீழே போட அந்த சத்தத்தில் என்னவோ ஏதோ என்று மல்லிகாவும் சந்திரசேகரும் அங்கு வந்தனர்.
சூர்யா, "அத்தை தண்ணி குடிக்க வந்தேன். தெரியாமல் கைதவறி தண்ணீ கொட்டீருச்சு" என்றான்.
இதைக் கேட்டதும் மல்லிகாவிற்கு நட்சத்திராவின்ன் மேல் கோபம் வந்தது. சூர்யாவிற்கு தண்ணீரை எடுத்துக் கொடுத்துவிட்டு நட்சத்திராவை வேகமாக சென்றார்.
மல்லிகா, "நட்சத்திரா ரூம் குள்ள என்ன பண்ணிட்டு இருக்க? மாப்பிள்ளைக்கு என்ன வேணும்னு கேட்டு எடுத்துக் கொடுக்க மாட்டியா..?" என்றார்.
சூர்யா, "அத்தை விடுங்க, இதுல என்ன இருக்கு. இதுக்கு போய் ஏன் அவளை திட்டுறீங்க" என்று கூறிவிட்டு நட்சத்திராவை பார்த்து கண்ணடித்தான். நட்சத்திரா 'செய்ததையும் செஞ்சுட்டு எப்படி நடிக்கிறான் பாரு' என்று மனதிற்குள் திட்டியவள் அவனை முறைத்தாள்.
மல்லிகா, "நீங்க சும்மா இருங்க மாப்பிள்ளை. அவ எப்பவுமே இப்படிதான் பண்றா" என்று திட்டினார். சந்திரசேகர் அவரை சமாதானப்படுத்தினார். பின் மல்லிகா அனைவருக்கும் உணவைப் பரிமாறினார்.
சூர்யா, "சூப்பரா செஞ்சு இருக்கீங்க அத்தை" என்க மல்லிகா சூர்யாவின் பாராட்டில் மகிழ்ந்து அவனுக்கு பார்த்து பார்த்து எல்லாவற்றையும் எடுத்து வைத்து உபசரித்தார். நட்சத்திராவிற்கு தான் இதை பார்க்க எரிச்சலாக வந்தது. அனைவரும் பேசிக் கொண்டே உணவை உண்டு முடித்தனர்.
பின் மல்லிகா, "நட்சத்திரா தம்பியை உன் ரூமுக்கு கூட்டிட்டு போ, கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும்" என்றார். நட்சத்திரா சூர்யாவிற்கு மட்டும் கேட்கும் விதமாக "உனக்கு வழி தெரியாதா? இல்ல கால் இல்லையா? உன்ன கூட்டிட்டு போக ஒரு ஆளா?" என்று திட்டிவிட்டு அவனை அழைத்துச் சென்றாள்.
சூர்யா நட்சத்திராவின் ரூமை பார்த்துவிட்டு, "பரவாயில்ல, நல்லா சுத்தமா தான் வச்சிருக்க" என்று பாராட்டினான். சூர்யா நட்சத்திராவின்ன் கப்போர்டை திறக்க போக நட்சத்திராவின் மூச்சே ஒரு கணம் நின்று விட்டது. வேகமாக ஓடிச்சென்று கப்போர்டின் முன் நின்று அவனை கதவை திறக்க விடாமல் தடுத்தாள்.
சூர்யா கேள்வியாக அவளைப் பார்க்க நட்சத்திரா பதட்டத்துடன், "என் கபோர்டை நீ திறக்கக் கூடாது" என்றாள் சூர்யா அவள் பதட்டத்தை பார்த்து விட்டு ஏதோ இருக்கு அதான் இவர் தரத்தை விடமாட்றா என நினைத்து விட்டு, "நான் கபோர்ட்டை திறந்து பார்ப்பேன்" என்று உறுதியாகக் கூறினான்.

கவிதைகள் தொடரும்...
 

Janu murugan

Moderator
Staff member
Jun 10, 2020
43
20
8
20
விழிகளிலே ஒரு கவிதை 4


அவன் பதிலை கேட்டு நட்சத்திராவின் பதற்றம் அதிகரித்தது. தன் முகத்தில் அரும்பிய வேர்வையை துடைத்துக் கொண்டு, "என் கபோர்டு திறக்க உனக்கு உரிமை கிடையாது. போனா போகுதுன்னு உன்னையே ரூம்குள்ள விட்ருக்கேன்" என்றாள்.
சூர்யா, ஓ... அப்படியா? என நினைத்தவன் திரும்பி, "சொல்லுங்க அத்தை, நட்சத்திர இங்கதான் இருக்கா" என்றிட நட்சத்திரா, 'ஐயோ! அம்மாவா? இப்பதான திட்டு வாங்கினேன்' என நினைத்துக்கொண்டு எட்டிப் பார்க்க அவள் அசந்த நேரம் கபோர்டை திறந்து விட்டான்.
நட்சத்திரா அவன் கடை திறந்து விட்டானே என்று அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள். சூர்யா கப்போர்டை முழுவதும் பார்த்துவிட்டு, "இதுல பெருசா ஒன்னும் இல்லையே" என்றான். அவன் கப்போர்டை மூடும் வரை நட்சத்திரா உயிரை கையில் பிடித்துக்கொண்டு நின்றிருந்தாள். சூர்யா ஒன்றுமில்லாததுக்கு எதுக்கு நீ இவ்வளவு ரியாக்ட் பண்ற?" என்று கப்போர்டை மூடினான். நட்சத்திரா அப்பாடா! என்று பெருமூச்சு விட்டாள்.
கப்போர்டை மூடிய சூர்யா மீண்டும் திறந்து, "இது என்ன சீக்ரெட் லாக்கரா?" என்று விட்டு அதை இழுத்து திறந்தான். உள்ளே இருந்த பொருட்களை பார்த்தவனுக்கு இன்ப அதிர்ச்சி. அதிலிருந்து அனைத்தும் சூர்யாவின் பொருட்களை. அவனது உடை, அவன் எழுதிவிட்டு தூக்கிப்போட்ட பேனா.. என்று எக்கச்சக்கமாக பொருட்கள்.
சூர்யா அந்த லாக்கரில் இருந்த டைரியை எடுத்து பார்த்தான். அந்த டைரி முழுவதும் சூர்யாவின் புகைப்படம் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாக எடுக்கப்பட்டிருந்தது. சூர்யாவிற்கு அந்த புகைப் படங்களையெல்லாம் பார்த்து ஒரே ஆச்சரியம். எனக்கே தெரியாம இவ்ளோ போட்டோ எடுத்து இருக்காளா? என்று. அதில் இன்னும் ஒரு டைரி இருக்க அதில் என்ன இருக்கிறது என்று ஆர்வமாக பிரித்துப்பார்க்க நட்சத்திரா சூர்யாவுக்காக எழுதிய கவிதைகள் இருந்தது.
உன்னுடன் கைக்கோர்த்து
நடக்க ஆசை!
கடற்கரை மண்ணில் அல்ல
என் காலம் முடியும் வரை!
பிரிந்து சென்றுவிடுவாய்
என தெரிந்தும் உன் பின்னாலே
அலைகிறேன்!
என்றாவது ஒரு நாள்
என்னை புரிந்து கொள்வாய் என்று....
நான் உன்னிடம் பேசிய
வார்த்தைகள் முடிந்துவிடுகிறது!
உனக்காக பேச நினைக்கும்
வார்த்தைகளே என்னை
உன் பின்னால் தொடர செய்கிறது!...
என் கண்களை தாண்டி வெளியே
வரும் கண்ணீர் மரணித்து விடுகிறது...
ஹலோ என்ற அவனின்
ஒற்றை வார்த்தையினால்.....

சூர்யாவிற்கு நட்சத்திராவின் காதலைப் பார்த்து கண் கலங்கி விட்டது. என் மேல இவ்வளவு காதல் வச்சிருக்காளா? என நினைத்தவன் அதிலிருந்த ஒரு பொருளைப் பார்த்தவனுக்கு பேரதிர்ச்சி.
அதை கையில் எடுத்தவன், "நட்சத்திரா இது என்னோட வாட்ச் தானே..?" என்றான். நட்சத்திரா எல்லாத்தையும் பார்த்து விட்டானே! இப்போது கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வது என்று கைகளை பிசைந்து கொண்டே நின்றுருந்தாள்.
சூர்யா, "பதில் சொல்லு, இந்த வாட்ச் நான் ஃபர்ஸ்ட் இயர் படிக்கும்போது தொலைஞ்சு போச்சு. நான் செகண்ட் இயர் படிக்கும்போது தான் நீ காலேஜ் ஜாயின் பண்ண அப்போ அதுக்கு முன்னாடியே உனக்கு என்ன தெரியுமா?" எனக் கேட்க நட்சத்திரா வாயைத் திறக்கவில்லை.
சூர்யா, "சொல்லு டி, உன்ன தானே கேட்கிறேன்" என்க நட்சத்திரா மைண்ட் வாய்ஸில், 'எந்தக் காரணத்தைக் கொண்டும் உண்மையை சொல்ல கூடாது' என மனதிற்குள் கூறிக் கொண்டு அந்த வாட்சை அவன் கையில் இருந்து பிடுங்கினாள்.
நட்சத்திரா, "இது உன் வாட்ச் இல்லை. இந்த உலகத்தில் உன்கிட்ட மட்டும் தான் இந்த மாதிரி வாட்ச் இருக்கா?" என்றாள்.
சூர்யா, "யார் வேணா இந்த மாதிரி வாட்ச் வைத்திருக்கலாம். ஆனால் என் வாட்ச்ல மட்டும் தான் சூர்யா என்று எழுதி இருக்கும்" என்று அந்த வாட்சை திருப்பிக் காட்டினான்.
இந்தக் கேள்விக்கு நட்சத்திராவிடம் பதில் இல்லை. அவள் பதில் பேசாது இருக்கவே சூர்யாவே தொடர்ந்தான், "சரி அதை விடு, இந்த போட்டோஸ் திங்க்ஸ் எல்லாம் என்னோடது தான? என் மேல இவ்வளவு காதலா வெச்சிகிட்டு எப்படிடீ நீ என்ன விட்டுப் போகனும்னு நினைக்கிற" என்றான்.
நட்சத்திரா, "காதலா? உன் மேலயா? என்று கூறி ஒரு விரக்தி புன்னகையை உதிர்த்து, என் காதல் எப்போதோ உடைஞ்சு போச்சு. உன் மேல எனக்கு காதல் எல்லாம் இல்லை" என்றாள்.
சூர்யா, "பொய் சொல்லாத, என் மேல காதல் இல்லாம தான் இதெல்லாம் இன்னும் எடுத்து வச்சிருக்கியா?" என்றான்.
நட்சத்திரா, "அதையெல்லாம் நான் முன்னாடியே எடுத்து வச்சது. தூக்கி போடணும்னு நினைச்சேன், மறந்துட்டேன்" என்றாள்.
சூர்யா, "நீ என்ன பொய் சொன்னாலும் நான் நம்ப மாட்டேன். நீ என்ன இன்னும் அதே அளவுதான் காதலிக்கிற. அப்புறம் நீ என்ன அடித்தாலும் பரவாயில்லை எனக்கு இதை பண்ணியே ஆகணும்னு தோணுது" என்றான்.
நட்சத்திரா அவனை கேள்வியாக பார்க்க சூர்யா அவளை நெருங்கி அணைத்துக் கொண்டான். நட்சத்திரா அதிர்ச்சியாகி அவனை விலக்க முயல சூர்யாவின் இரும்புப்பிடி அவளை விடவில்லை.
மல்லிகா, "நட்சத்திரா..." என்று அழைத்த பின்னரே சூர்யா அவளை விட்டு விலகினான். நட்சத்திரா அவனை முறைக்க சூர்யா, "எனக்கு நம்பிக்கை இருக்கு, என் பழைய நட்சத்திராவை திரும்ப கொண்டு வந்து விடுவேன்" என்றான்.
நட்சத்திரா, "அதெல்லாம் ஒரு காலத்திலும் நடக்காது" என்று கூறி விட்டு வெளியே சென்றாள். சூர்யா அந்த பொருட்களை எல்லாம் இருந்த இடத்திலேயே வைத்துவிட்டு கப்போர்டை மூடிவிட்டான். நட்சத்திராவிற்கும் சூர்யாவிற்கும் அப்பொழுது அங்கேயே கழிந்தது.
இருவரும் வீட்டில் இருந்து கிளம்ப தயாராகினர். மல்லிகா, "நீ இன்னும் சின்ன பிள்ளை கிடையாது. உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு, இன்னைக்கு பண்ணியே அது மாதிரியே பண்ணிட்டு இருக்காத. மாப்பிள்ளைக்கு எது வேணுமோ அதை கேட்டு செய்" என்று அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தார்.
நட்சத்திரா சூர்யாவை மனதிற்குள் அர்சித்துக்கொண்டே மல்லிகா சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தாள். சந்திரசேகர், "என்ன பண்ணிட்டு இருக்கீங்க இவ்வளவு நேரமா? டைம் ஆயிடுச்சு அவங்க கிளம்ப வேண்டாமா? சீக்கிரம் வாங்க" என்க நட்சத்திரா அப்பாடா! தப்பித்தோம் என நினைத்தாள்.
மல்லிகா, "இதோ வரேங்க.." என்று நட்சத்திராவையும் அழைத்து வந்தார். இருவரும் பெரியவர்களிடம் கூறி விட்டு விடை பெற்றனர். காலையில் நடந்ததை நினைத்து நட்சத்திரா முன் சீட்டில் அமர்ந்து கொண்டாள்.
சூர்யா எந்த சேட்டையும் செய்யாமல் நட்சத்திராவை வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டான். அவர்கள் வீட்டிற்கு வந்ததும் ஷீலா, "வாங்க ரெண்டு பெரும் டீ போட்டு கொண்டு வரேன்" என்று கிச்சனுக்கு சென்றார். நட்சத்திரா, "அத்தை நானும் உங்களுக்கு உதவி செய்கிறேன்" என கிச்சனுக்குள் சென்றாள். சூர்யா அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான்.
நட்சத்திரா டீயை எடுத்து வந்து, "மாமா..." என்று அழைத்தாள். சூர்யாவால் அவள் மாமா என்று அழைத்ததை நம்பமுடியவில்லை, தன் கைகளையே கிள்ளி பார்த்தான். வலித்தது அப்ப நிஜம்தானா? என்று பார்த்தான்.
நட்சத்திரா, "மாமா டீயை எடுத்துக்கோங்க" என்றாள். சந்தோஷமாக டீ யை எடுத்து குடித்தவன் அப்போதுதான் மகாலட்சுமியை தன் மடியில் வைத்துக் கொண்டு அவளுக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கும் தனது தந்தையை கவனித்தான்.
சூர்யாவின் உற்சாகம் ஒரு நிமிடத்தில் வடிந்துவிட்டது. 'சே! அப்பா இருக்கிறதுனாலதான் மாமான்னு கூப்பிடாளா? நான் கூட என் பழைய நட்சத்திர வந்து விட்டாளோன்னு நினைத்து விட்டேன்' என மனதிற்குள் புலம்பினான்.
மற்றொரு மனம், 'எப்போ கூப்பிட்டா என்ன? உனக்கு பிடிச்ச மாதிரி கூப்பிட்றா. சோ கிடைத்த வாய்ப்பை யூஸ் பண்ணிக்கோ' என்றது. வேகமாக மூளையை உபயோகப்படுத்தியவன் நட்சத்திரா என்று அழைத்தான்
கிச்சனில் இருந்து வெளியே வந்த நட்சத்திரா, "சொல்லுங்க மாமா.." என்றாள். சூர்யா, "டீல சுகர் கம்மியா இருக்கு. கொஞ்சம் சுகர் எடுத்துட்டு வா" என்றான்.
நட்சத்திரா சர்க்கரையை எடுத்து வந்து அவனிடம் கொடுத்து விட்டு கிச்சனுக்குள் புகுந்து விட்டாள். சூர்யா ஆஹா! கேட்கவே எவ்ளோ இனிமையாக இருக்கு. இன்னொரு தடவை நட்சத்திரா என்று அழைத்தான்.
நட்சத்திரா, "என்ன மாமா..?" என்றாள். சூர்யா, "டீல டிக்காஷன் கம்மியா இருக்கு" என்க நட்சத்திரா அலுத்துக்கொண்டே அவனிடமிருந்து டீயை வாங்கிக் கொண்டு கிச்சனுக்குச் சென்றவள் டிக்காஷன் ஊற்றிக் கொண்டு வந்து கொடுத்தாள்.
சூர்யா 'அவ மாமான்னு சொல்லும்போது எவ்வளவு சந்தோசமாக இருக்கு, கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கே' என்று நினைத்தவன் நட்சத்திராவை அழைக்க வாயைத் திறந்தான் அவன் மூளை அடுத்து என்ன ரீசன் சொல்வது என கேட்க வந்த பிறகு யோசிக்கலாம் என்று நினைத்து அவளை அழைத்தான். முறைப்புடன் வந்து நின்றவள், "இப்போ என்ன மாமா பால் கம்மியா இருக்கா?" என்றாள்.
சூர்யா, "ஈஈஈ... என இளித்து எப்படி இவ்வளவு கரெக்டா கண்டு பிடித்துச்சுட்ட. எவ்வளவு அறிவாளியாக இருக்க, போ போய் இதுல கொஞ்சம் பாலை கலந்து கொண்டு வா" என்றான்.
நட்சத்திரா அவனைத் திட்டிக்கொண்டே கிச்சனுக்கு சென்று பாலை கலந்து எடுத்து வந்து கொடுத்தாள். சூர்யா தன் தந்தை எழுந்து சென்றதை கவனிக்காமல் மீண்டும் நட்சத்திரா என்று அழைக்க நட்சத்திரா, "என்னடா வேணும்..?" என்றாள்.
சூர்யா, "என்னது டேயா? அப்பா இல்லையா" என எட்டிப் பார்க்க அவர் அங்கு இல்லை. சூர்யா மைண்ட் வாய்ஸில், 'ஐயையோ! சூர்யா இப்படி வசமா மாட்டிக்கிட்டயே' என நினைத்து திருதிருவென திருதிருவென முழித்தான்.
ஹாய் டியர்ஸ், என் கவிதை எப்படி இருக்குன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லிட்டு போங்கபா.....??
 
Need a gift idea? How about a breakfast sandwich maker?
Buy it!