விழிகளிலே ஒரு கவிதை - பார்ட் -2

Janu murugan

Moderator
Staff member
Jun 10, 2020
43
20
8
20
விழிகளிலே ஒரு கவிதை 6

நட்சத்திரா அவர்கள் கலாய்ப்பதிலிருந்து தப்பிப்பதற்காக ரூமுக்குள் ஓடினாள். ரூமிற்குள் ஓடிய நட்சத்திராவிற்கு மூச்சுவாங்கி தன்னை ஆசுவாசபடுத்திக் கொண்டாள். அவர்கள் கலாய்த்தது நினைவு வர அவளது முகம் நாணத்தில் சிவந்தது. இதழில் புன்முறுவல் பூத்தது.
தானாக சிரித்துக் கொண்டே இருந்தவள் அப்போதுதான் சூர்யா தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தாள். சூர்யா அப்படி ஒரு பார்வை அவளை பார்த்துக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்த நட்சத்திராவால் அவனிடமிருந்து பார்வையை விலக்க முடியவில்லை. சூர்யா, "ஏய் கேடி நீ என்ன சைட் அடிச்ச தானே..." என்றான்.
நட்சத்திரா இல்லை என்று தலையை ஆட்டினாள். சூர்யா ஒவ்வொரு அடியாக அவளை நோக்கி முன்னேறிக்கொண்டே, "பொய் சொல்லாதே! எனக்கு தெரியும். நீ என்ன சைட் அடிச்ச, என் கண்ணை பார்த்து சொல்லு இல்லைனு" என்றான். அவன் கண்ணை பார்த்தவள் அதில் மூழ்கி விட்டாள். இருந்த இடத்தை விட்டு அசையவில்லை.
அவன் தன்னை நோக்கி வருவதை பார்த்தும் விலக முற்படவில்லை. காதலை தேக்கி நிற்கும் அவனது விழிகள் சிக்கித் தவித்தவள் அதிலிருந்து மீள வழியைத் தேடிக் கொண்டிருந்தாள். கால்கள் தரையில் இல்லாததை போல உணர்வு.
அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். தன் காதலில் அவளை மூழ்கடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்வையால் களவாடிக் கொண்டு இருந்தனர். நிமிடங்கள் யுகங்களாக கரைந்தது. இருவரும் வெகு நேரம் கண்களாலேயே காதல் மொழி பேசிக் கொண்டிருந்தனர். இருவருக்கும் அந்த மோனநிலையை கடக்க மனம் வரவில்லை.
தாரா, "நட்சத்திரா, சூர்யா சாப்பிட வாங்க" என்று அழைக்க இருவரும் அந்த மாயையில் இருந்து விடுபட்டனர். நட்சத்திரா வேகமாக அவனிடமிருந்து விலகி வெளியே சென்று விட்டாள்.
அவளால் எவ்வளவு முயன்றும் தனது கன்ன சிவப்பை மறைக்க முடியவில்லை.
முயன்று தன்னை இயல்பாக்கிக் கொண்டவள் 'சே! நட்சு நீ இவ்வளவு வீக்கா இருக்க. அவன் உன்ன பத்தி என்ன நினைப்பான்... பேசுறது மட்டும் வாய் கிழிய பேசு, அவன் கிட்ட வந்தாலே ஆஃப் ஆகிட்ற. அவன் பேசினது எல்லாம் மறந்து போச்சா? என தன்னை தானே கடிந்து கொண்டே கீழே இறங்கிச் சென்றாள்.
வாசலிலேயே நின்று அவளது செய்கையை பார்த்து சிரித்துக் கொண்டே அவள் பின்னே சென்றான் சூர்யா. கிஷோர் அவன் சிரித்துக் கொண்டே வருவதை பார்த்து சூர்யாவின் காதில், "என்னடா தனியா சிரிச்சிட்டு வர்ற.. என்ன விஷயம்?" எனக் கேட்க சூர்யா, "ஏன்டா டேய்! உனக்கு வேற வேலையே இல்லையா? என்னதான் நோட் பண்ணிட்டு இருக்கியா...?"
கிஷோர், "அப் கோர்ஸ்...." என்றான். சூர்யா, "இப்ப மட்டும் நீ பேசாம இல்ல, காலேஜ்ல படிக்கும்போது காவ்யா என்ற ஒரு பொண்ணு பின்னாடி நீ சுத்துனீயே அதை அண்ணிக் கிட்ட போட்டு கொடுத்துடுவேன்" என்றான்.
கிஷோர், "அடேய்! நான் நல்லா இருக்கிறது உனக்கு பிடிக்கலையா? இனிமேல் நீ சிரிச்சுக்கிட்டு இல்லை சட்டையை கிழிச்சுட்டு திரிஞ்சா கூட நான் கேட்க மாட்டேன்" என்றான்.
தாரா, "சாப்பிடும் போது என்ன பேச்சு உங்களுக்கு.." என கேட்க சூர்யா, "அண்ணி அது வந்து..." என்று ஆரம்பிக்க கிஷோர் அவன் வாயை வேகமாக மூடி, "ஒன்னும் இல்ல தாரா, ஆபீஸ் விஷயமா பேசிட்டு இருந்தோம்" என்றான்
ஷீலா, "சாப்பிடும்போது கூட என்ன ஆபிஸை பத்தி பேச்சு, பேசாமல் சாப்பிடுங்க ரெண்டு பேரும்" என்று அதட்டினார். நட்சத்திரா தவறியும் கூட சூர்யாவை பார்க்கவில்லை. அவனைப் பார்க்க ஏதோ ஒன்று தடுத்தது.
சூர்யா மறந்தும் வேறுபுறம் பார்க்கவில்லை. நட்சத்திராவை பார்வையால் வருடிக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தான் அவன் பார்வை தன்னை தீண்டுவதைப் உணர்ந்து அவனை பார்க்காமல் வேகமாக சாப்பிட்டுவிட்டு ரூம்க்கு சென்று விட்டாள்.
அவன் வருவதற்குள் பெட்ஷீட்டை இழுத்துப் போர்த்தி படுத்துவிட்டாள். சாப்பிட்டுவிட்டு ரூமிற்க்கு வந்த சூர்யா அவள் செய்கையை பார்த்து தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டு அவள் அருகில் படுத்துவிட்டான். மறுநாள் பொழுது எப்பொழுதும் போல புலர்ந்தது சூர்யா எந்த சேட்டையும் செய்யவில்லை. அன்றைய பொழுது எந்த கலாட்டாவும் இல்லாமல் கடந்தது. மாலை நேரம் பெண்கள் மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
வெளியே சென்றிருந்த சூர்யா வீட்டிற்கு வந்தான் அவன் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது படு குஷியாக திரிந்தான். நட்சத்திரா, 'என்ன இவன் வழக்கத்துக்கு மாறாக ஓவரா சிரிக்கிறானே !
காலையில இருந்து ஸ்மூத்தா போகுதேன்னு நெனச்சேன், ஆரம்பிச்சிட்டான்' என நினைத்தாள்.
சூர்யா, "நட்சத்திரா ஒரு காபி போட்டு தர்றீயா..?" என்றான் நட்சத்திரா சரி என்று தலையாட்ட சூர்யா, "நான் ரூம்க்கு போறேன், கொண்டு வா" என்று விட்டு ரூமிற்க்கு சென்றான்.
நட்சத்திரா காபி போட்டு ரூமிற்கு எடுத்துச் சென்றாள். சூர்யா நட்சத்திராவை பார்த்து சிரித்தான். நட்சத்திரா 'ஐயையோ! சிரிக்கிறானே என்ன ஆப்பு வச்சிருக்கானோ..?' என நினைத்தாள்.
சூர்யா, "டார்லிங் இங்க வா..." என்றவன் காபி கப்பை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு "டார்லிங் இந்த இரண்டு விரலை ஒன்றை தொடு" என்றான்.
நட்சத்திரா கேள்வியாக பார்க்க சூர்யா, "அப்புறம் சொல்றேன், முதல்ல இந்த ரெண்டு விரல்ல ஒன்னைத் தொடு" என்றான்.
நட்சத்திரா ஒரு விரலை தொட சூர்யா, "சூப்பர்! எனக்கு தெரியும், நான் நெனச்சேன் நீ இதை தான் தொடுவேன்னு".
நட்சத்திரா, "நீ பேசறது எதுவுமே எனக்கு புரியல, இப்ப எதுக்கு ஒரு விரலை தொட சொன்ன, தொட்டதுக்கு பிறகு குதிக்கிற" என்றாள்.
சூர்யா, "ஓ.... அதுவா, இந்த விரலை தொட்ட நாம ஸ்விஸ்க்கு ஹனிமூன் போறோம், இந்த விரல் தொட்ட ஜெர்மனிக்கு ஹனிமூன் போறோம்" என்றான்.
நட்சத்திராவிற்கு இதைக் கேட்டு அதிர்ச்சி, "என்னது ஹனிமூனா?" என்றாள். சூர்யா, "ஆமா டார்லிங், ஹனிமூன் தான். அதுவும் நாளைக்கு காலைல 10 மணிக்கு ஃப்ளைட்.நினைக்கும் போதே ஜாலியா இருக்கு. ஸ்விஸ்க்குப் போய்.." என்று பேசிக்கொண்டிருக்கும் போத நட்சத்திரா கையை காதில் வைத்து பொத்தி, "போதும்! போதும்! நிறுத்து, என்னால கேட்க முடியல" என்றாள்.
சூர்யா, "ஸ்விஸ் போய் சுத்தி பார்த்து என்ஜாய் பண்ண போறோம்ன்னு தான் சொன்னேன். இதுக்கு எதுக்கு நீ காதை பொத்துற.." என்றான்.
நட்சத்திரா, "சே! இதுதான் சொல்ல வந்தியா?" என்று பெருமூச்சு விட்டாள். சூர்யா, "ஆமா... நீ என்ன நெனச்ச?" என கேட்க நட்சத்திரா திருட்டு முழி முழித்தாள்.
சூர்யா அவள் முழிப்பதை பார்த்து விட்டு, "ஏய் கேடி! நீ ஏதோ ஏடாகூடமா நினைச்சுருக்க, என்னன்னு சொல்லு" என்றான்.
நட்சத்திரா, "அதெல்லாம் ஒண்ணும் இல்லையே! நீயா எதையாவது கற்பனை பண்ணிக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பில்லை" என வெளியே ஓடிவிட்டாள். எல்லோரும் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
சூர்யா, "அம்மா, அப்பா நாங்க ஹனிமூன் போக போறோம்" என்றான்.
கிஷோர், "சூப்பர் டா.. எங்க போக போறீங்க?"
சூர்யா, "ஸ்விஸ் போக போறோம்" என்றான்.
கிஷோர், "சூப்பர், நைஸ் பிளேஸ்டா" என்றான்.
சூர்யா, "எல்லா நட்சத்திராவோட சாய்ஸ்தான், அவதான் ஸ்விஸ்க்கு போகலாம்ன்னு சொன்னா. அதான் நாளைக்கு காலையில முதல் ஃப்ளைட் டிக்கெட் புக் பண்ணிட்டேன்" என்றான்.
சங்கர் "நாளைக்கே வா?" என கேட்க சூர்யா, "ஆமாப்பா..." என்றான். பெரியவர்கள் சரிப்பா பத்திரமா போயிட்டு வாங்க என்றனர். அனைவரும் சாப்பிட்டு உறங்கச் சென்றனர்.
நட்சத்திரா, "டேய்! நான் உன்கிட்ட ஹனிமூன் போகணும்னு அடம் பிடிச்சேனா... ஏன்டா எல்லார்கிட்டயும் என்ன கோர்த்து விட்ற" என்று பொரிந்தாள்.
சூர்யா, "ஆமா டார்லிங், நீதான போகலாம்னு சொன்ன" என்க நட்சத்திரா, "நான் எங்க சொன்னேன்..? நீ ரெண்டு விரலில் ஒன்ன தொட சொன்ன, அதான் நான் தொட்டேன்."
சூர்யா, "நீ தொட்ட விரல்ல நான் ஸ்விஸ் வச்சிருந்தேன். அப்போ நீ தான் போக சொன்னேன்னு அர்த்தம்" என்றான். சோ நான் சொன்னது சரிதானே..?" என்க,
நட்சத்திரா, "நீ எதை எதையோ பேசி என்ன குழப்புற" என்று திட்டி விட்டு படுத்து விட்டாள். சூர்யா, 'நல்லா குழம்பி தெளிவாகி என்கிட்ட வந்துடு' என நினைத்து படுத்தவன் உறங்கிப் போனான்.
நட்சத்திரா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். தூரத்தில் யாரோ நட்சத்திரா நட்சத்திரா என அவளை அழைப்பது போல தோன்றியது. வெகுநேரம் அந்த குரல் ஒலிக்க நட்சத்திரா கண் விழித்து விட்டாள். சூர்யாவின் முகம் வெகு நெருக்கத்தில் இருந்தது. அவள் அடித்துப் பிடித்து எழுந்தாள்.
சூர்யா, "டார்லிங், டைம் ஆயிடுச்சு. ஃப்ளைட்டுக்கு எழுந்திரு" என்றான். நட்சத்திரா ரொம்ப நேரம் தூங்கி விட்டேனா என நினைத்து நேரத்தை பார்க்க 5.30 எனக் காட்டியது.
நட்சத்திரா, "டேய் எனக்கு வர்ற கோவத்துக்கு உன்னை கழுத்தை நெரித்து கொல்லனும் போல இருக்கு. மணி ஐந்து முப்பது தான் ஆகுது பிளைட் 10 மணிக்கு தானே.." என்றாள்.
சூர்யா, 'டார்லிங் இப்ப கிளம்பினால் தான் சரியான நேரத்திற்கு போக முடியும்" என்று தொல்லை பண்ணி அவளை குளிக்க அனுப்பினான்.
நட்சத்திரா குளித்து முடித்து ரெடியாகி கீழே வர குடும்பமே ஹாலில் காத்துக்கொண்டிருந்தனர். நட்சத்திரா ஆச்சரியமாக அவர்களை பார்க்க தாரா, "
5.30 க்கு தொல்ல பண்ண எழுப்பி விட்டுடானா...?" என்றாள்.
நட்சத்திரா ஆமாம் என தலையாட்ட "எங்க எல்லோருக்கும் இதே நிலைமைதான்" என்றாள். நட்சத்திரா 'அட பாவி! என்னை எழுப்பி விட்டால் ஒரு ஞாயம் இருக்கு. அவங்க என்னடா பண்ணாங்க? இவன என்ன பண்ணினா தகும்' என்று அவனை முறைத்தாள். அவன் இதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.
நட்சத்திரா 'கடவுளே! இவன் ரொம்ப ஆடுறான். எப்படியாவது இந்த ட்ரிப்பை கேன்சல் பண்ணிடு" என வேண்டிக் கொண்டாள்.அவள் வேண்டியது கடவுள் இருக்கு கேட்டு விட்டதோ என்னவோ?
அவர்கள் எல்லாம் எடுத்து வைத்து சாப்பிட்டு விட்டு கிளம்பினர். சரியாக கிளம்பும் நேரம் சரியாக ஹரிஷின் குடும்பம் சூர்யாவின் வீட்டிற்கு வந்தனர்.
நட்சத்திரா அவர்களைப் பார்த்த சந்தோஷத்தில் சுதா அம்மா ஜெய் அப்பா என அவர்களை வரவேற்றாள்.
சூர்யாவிற்கு அவர்களை பார்த்ததும் உள்ளுக்குள் ஏதோ தோன்றியது. சங்கரும் ஷீலாவும் அவர்களை வரவேற்று உபசரித்தனர். அவர்கள் கூறிய விஷயத்தை கேட்டு சூர்யா அதிர்ச்சியாகி விட்டான்.
கவிதைகள் தொடரும்.....
 

Janu murugan

Moderator
Staff member
Jun 10, 2020
43
20
8
20
விழிகளிலே ஒரு கவிதை 7

சங்கரும் ஷீலாவும் ஹரிஷ் குடும்பத்தினரை வரவேற்றனர். ஷீலா, "வாங்க அண்ணா, அண்ணி" என வரவேற்றார். நட்சத்திரா ஹரிஷ் குடும்பத்தினரைப் பார்த்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக்கொண்டு, "நான் காபி கொண்டு வரேன் என கிச்சனுக்குள் ஓடினாள்.
சங்கர் ஜெயராஜிடம், "ஏன்டா கல்யாணத்து அன்னைக்கு வந்தது. அப்புறம் இப்பதான் உனக்கு நம்ம வீட்டுக்கு வழி தெரிஞ்சுதா?" என்று கேட்டார்.
ஜெயராஜ், "டேய்! உனக்கு தெரியும்ல, மேக்னாவோட கல்யாண விஷயமா தான் நாங்க இந்தியா வந்தோம். இப்போ அந்த விஷயமாதான் ஷ்ரவன் வீட்டுக்கு போய் பேசிட்டு வரோம்" என்றார்.
சங்கர், "நல்ல விஷயம்தான், மாப்பிள வீட்ல என்ன சொன்னாங்க?"
ஜெயராஜ், "மாப்பிள்ளை வீட்டில் எல்லோருக்கும் தங்கமான ஆளுங்க. ரொம்ப நல்லா பேசினாங்க, வரதட்சணையா ஒரு ரூபாய் கூட வேண்டாம் என்று சொல்லிட்டாங்க. அவங்க நல்ல வசதியான குடும்பம். இருந்தாலும் நம்ம பொண்ணுக்கு நாம செஞ்சுதான் ஆகணும்" என்றார்.
சங்கர், "ஆமா! நீ சொல்றது கரெக்ட் தான்டா என்றவர், கல்யாணத்தை எப்போ முடிவு பண்ணி இருக்கீங்க?" என்றார்.
ஜெயராஜ், "கல்யாணம் அடுத்த மாதம் தான்" என்றார். சூர்யா இதைக் கேட்டு 'அப்பாடா! இதனால நம்ம ஹனிமூன் ட்ரிப் கேன்சல் ஆகாது' என நினைத்தான் ஆனால் அடுத்து அவர் சொன்ன வார்த்தையில் சூர்யா ஆட்டம் கண்டு விட்டான்.
ஜெயராஜ், "நிச்சயதார்த்தத்தை இன்னும் ஒரு வாரத்தில் வச்சுக்கலாம் என்று முடிவு பண்ணி இருக்கோம்" என்றார். காபி போட்டு கொண்டு வந்த நட்சத்திராவிற்கு இதைக்கேட்டு சந்தோஷம் தாளவில்லை. சூர்யாவின் ரியாக்ஷனை பார்த்து அந்த சந்தோஷம் இரு மடங்காகியது.
நட்சத்திரா, "அப்பா, நீங்க கவலைப்படாதீங்க! இது நம்ம வீட்டு விஷேசம். நாங்கதான் முன்னாடி நின்னு எல்லா வேலையும் பார்த்துக் கொள்வோம்" என்றவள் சூர்யாவிடம் திரும்பி, "என்ன மாமா பேசாம இருக்கிங்க.... சொல்லுங்க" என்று அவனை கோர்த்து விட்டாள்.
சூர்யா, 'அடி கிராதகி! இப்படி சமயம் பார்த்து செய்கிறாளே!' என நினைத்தவன், கஷ்டப்பட்டு முகத்தை சிரித்த மாதிரி வைத்துக் கொண்டவன், "நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க, எல்லா வேலையும் நாங்க பார்த்துக்கிறோம்" என்றான்.
சங்கர், "ஜெய், இது நம்ம வீட்டு விஷேசம் ஜமாய்ச்சுடலாம்" என்றார்.
ஹரிஷூம் ஷ்ரவனும் அப்போது தான் உள்ளே நுழைந்தனர். சூர்யா அவர்களை வழியிலேயே மடக்கி தீயாய் முறைத்தான். அவர்கள் இருவரும் இப்போ எதுக்கு இவன் இந்த முறைப்பும் முறைக்கிறான் என நினைத்தார்கள்.
ஹரிஷ் அங்கே அவன் எடுத்து வைத்திருந்த சூட்கேசை பார்த்துவிட்டான். 'ஓ... அப்படியா மேட்டர், பையன் அதுக்குத்தான் கடுப்பா இருக்கானா...' என நினைத்தவனுக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை, விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டான்.
ஷ்ரவன், "டேய் மச்சான், எதுக்குடா சிரிக்கிற?" என்று கேட்க, ஹரிஷ் அவன் காதில் ஏதோ கூற அவனும் சிரிக்க ஆரம்பித்து விட்டான்.
சூர்யா, "டேய் சிரிக்காதீங்கடா... இருக்க கடுப்புல உங்களை பொளந்து கட்டிடுவேன்" என்றான்.
ஹரிஷ், "மச்சான், சத்தியமா நான் வேணும்னு பண்ணலடா.... என்னால சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியலைடா..."
சூர்யா, "எல்லாம் இவனால வந்தது. இவன்தான், ஏன்டா நீ கல்யாணம் பண்ணிக்கலைனு யாரு இப்போ அழுதது? உன்னால நான் ஆசை ஆசையாக கிளம்புன ஹனிமூன் ட்ரிப் கேன்சல் ஆயிடுச்சு" என்றான் கோவமாக.
ஷ்ரவன், "என்னடா இப்படி கேட்டுட்ட... நான் கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் தான்டா ஆசைப்படுவேன். ரெண்டு வருஷம் லிவ்விங் டு கெதர் மாதிரி இருந்துட்டு இப்போ தான் கல்யாணம் பண்ணமாதிரி ஹனிமூன் போகலைனு வருத்தப்படுறான்" என்றான்.
இதைக் கேட்ட சூர்யா ஷ்ரவனின் வாயை வேகமாக பொத்தி, "ஏன்டா நான் நல்லா இருக்குறது உனக்கு பிடிக்கலையா? வீட்டுல ஒரு நல்ல இமேஜை மெயின்டெயின் பண்ணி வச்சிருக்கேன் அதை கெடுத்து விட்றாதடா" என்றான்.
ஷ்ரவன், "சரி விடு டா மச்சான், நாங்க ஹனிமூன் போகும் போது நீயும் சேர்ந்து வாடா" என்றான்.
சூர்யா, "டேய்! கூட்டமா போக அது என்ன டூரா.... ஹனிமூன்டா" என்று கூறிச் சென்றான். ஹரிஷின் குடும்பம் வந்ததால் எல்லோரும் கலகலப்பாக பேசி கொண்டிருந்தனர். சூர்யா மட்டும் வடை போச்சே என்ற ரேஞ்சில் அமர்ந்திருந்தான்.
ஹரீஷ் வீட்டினர் எல்லோரையும் அழைக்க வேண்டும் என்றதால் மதிய உணவை முடித்து விட்டு கிளம்பினர். அவர்கள் கிளம்பியது தான் தாமதம் குடும்பமே சூர்யிவைப் பார்த்து நக்கலாக சிரித்து.
கிஷோர், "டேய், காலைல இருந்து என்ன அலப்பறை பண்ணின... அஞ்சு மணிக்கு எழுப்பி விட்டு கொடுமை பண்ணுனேல, எங்க எல்லாரோட சாபம் தான் உன்னை ஹனிமூன் போகவிடாமல் பண்ணிடுச்சு" என்று கூறி சிரித்தான்.
நச்சத்திரா, "மாமா, என் வீட்டுக்காரரை இப்படி கலாய்க்கிறீங்க.... நீங்க இப்படி எல்லாம் கலாய்ச்சிங்கண்ணா என் வீட்டுக்காரரு இனிமேல் ஹனிமூனே வேண்டாம்னு முடிவு பண்ணிட போராரு" என்றவள், சூர்யாவை பார்த்து கண்ணடித்தாள்.
சூர்யா மைண்ட் வாய்ஸில் 'ஆஹா! விட்டா இவ பேசி அடுத்த மாசம் போக நினைத்திருந்த ஹனிமூன் எப்பவுமே இல்லாம ஆக்கிடுவா போல' என நினைத்தவன், "நீங்க எல்லாரும் சிரித்து என்னை கோபப்படுத்துரீங்க... நான் கோவமா போறேன்" என்று ரூமிற்கு தப்பித்து ஓடி விட்டான். நட்சத்திரா, 'சே எஸ்கேப் ஆகிவிட்டான்' என நினைத்தாள்.
ஷீலா, "நீங்க எல்லோரும் என் பிள்ளைய ரொம்ப கலாய்ச்சுட்டீங்க.... பாருங்க எவ்வளவு கோபமா போறான்" என்று குறைபாட்டார்.
கிஷோர், "அம்மா, அவனுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க... காலையிலிருந்து அவன் பண்ணது கொஞ்ச நஞ்சமா?" என்றான்.
ஷீலா, "நீங்க என்ன வேணா பேசுங்க, அவன் கோவமா போறதை பார்க்க எனக்கு கஷ்டமா இருக்கு. நான் போய் அவனை சமாதானப் படுத்துறேன்" என்க,
நட்சத்திரா, "அத்தை, நான் போய் பேசுறேன், நீங்க இருங்க" என்று ரூமிற்க்கு சென்றாள். அங்கே சூர்யா சோகமாக அமர்ந்து இருந்தான். நட்சத்திராவிற்கு அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தாலும் அவன் பேசிய பேச்சிற்கு இதுவும் வேண்டும் என நினைத்துக் கொண்டவள் அவனை மீண்டும் வெறுப்பேற்றுவதற்காக பேசினாள்.
நட்சத்திரா, "இவ்வளவு நாள் கடவுள் இல்லை இல்லை என்று சொல்லி திட்டிட்டு இருந்தேன். ஆனால் இன்னைக்கு நான் வேண்டுனது கடவுளுக்கு கேட்டுருச்சு போல.... உடனே நிறைவேத்திட்டாரு. எனக்கு இப்ப எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? எனக்கு இருக்க சந்தோஷத்தில் ஒரு குத்தாட்டம் போடனும் போல இருக்கே..." என்று அவள் போனில் பாடலை ஒலிக்கவிட்டு டான்ஸ் ஆட ஆரம்பித்தாள்.
அது வரை சோகமாக இருந்த சூர்யா ஆர்வமாக அவளை கவனிக்க ஆரம்பித்தான் நட்சத்திரா டான்ஸ் ஆடி கலைத்துவிட்டாள். நம்ம போட்ட ஆட்டத்தில அவன் இன்னும் கடுப்பாகி இருப்பான்னு நினைத்து அவனை பார்க்க, அவன் நட்சத்திராவை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
நட்சத்திரா, 'என்ன இவன், இவனை கேவலமா கலாய்ச்சு நான் ஆடுனா, இவன் கடுப்பாவான்னு பார்த்தா, இப்படி லூசு மாதிரி சிரிச்சுகிட்டு இருக்கான்' என நினைத்து அவனை பார்த்தாள்.
அவன் பார்வையின் அர்த்தம் புரிந்த சூர்யா, "டார்லிங் நான் ஏன் இப்படி சிரிச்சிட்டு இருக்கேன் என்று தானே நீ பாக்குற.." என்றான். நட்சத்திராவின் தலை தானாக ஆமாம் என்று ஆடியது.
சூர்யா, "டார்லிங், இந்த நிமிஷம் நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா? நமக்கு பிடிச்சவங்க சந்தோஷப்படுத்தி பக்குறதுல தான் நம்ம சந்தோஷமா இருக்கு. நான் ஹனிமூன் போயிருந்தால் கூட இவ்வளவு சந்தோஷப்பட்டு இருப்பேனான்னு தெரியலை. ஆனால் இப்ப உன்னோட சந்தோஷத்தைப் பார்த்து நான் ஆயிரம் மடங்கு சந்தோஷமா இருக்கேன்" என்றான் வாடாத புன்னகையுடன்.
நட்சத்திரா 'அப்படியே பிளேட்டை திருப்பி போட்டுட்டானே! எப்படி பால் போட்டாலும் சிக்ஸர் அடிக்கிறானே! விட்டா பேசியே என்னைக் கவுத்து விடுவான் போல' என்று நினைத்து அவனை விழிவிரித்து பார்த்தாள்.
சூர்யா, "ஏய் கேடி! உன்கிட்ட ரொம்ப நாளா ஒன்னு சொல்லனும்னு நினைச்சிட்டே இருந்தேன். உன் கண்ணு என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டே இருக்கு. ஹே ப்ளீஸ், ஒரே ஒரு தடவை உன் கண்ணுக்குள்ள நான் விழுந்திடவா? ப்ளீஸ் டீ..." என்றான்.
நட்சத்திரா 'இவன் என்ன இப்படி பேசறான்?' என நினைத்து விழிவிரித்து அவனை ஆச்சரியமாக பார்த்தாள். சூர்யா, "அப்படி பார்க்காதடி... உன் கண்ணு என்ன கொல்லுது... ஒவ்வொரு தடவையும் நீ பொய் சொல்லி மாட்டிக்கும் போது உன் கண்ணில் ஒரு ரியாக்ஷன் தெரியுமே, அப்போ எனக்கு எப்படி இருக்கும் தெரியுமா?" என்று அவன் பேசிக்கொண்டே போக,
நட்சத்திரா, "போதும் போதும், நீ பேசுறதை நிறுத்து. நீ பேச பேச எனக்கு ஏதோ பண்ணுது" என்றாள்.
சூர்யா சிரித்துக்கொண்டே, என்ன பண்ணுது? உன்ன டிஸ்டர்ப் பண்ணதா...?"
நட்சத்திரவின் மனம் அவன் பேச்சை ரசித்தாலும் அவனது மூளை நட்சத்திரா இப்படி காதல் வசனம் பேசுற வாய்தான் வார்த்தையால உன்ன குத்தி கிழிக்கும் என்று எச்சரிக்கை செய்தது.
வேகமாக தன் முகத்தை மாற்றியவள், "ஆங்... இரிட்டேட்டிங்கா இருக்கு" என்று கூறி வெளியேறிவிட்டாள்.சூர்யா அவள் பேசியதற்கெல்லாம் கவலைப்படவில்லை. அவள் மனதை மாற்ற அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தான்.
கீழே வந்த நட்சத்திரா, 'இவன் வீட்டில் இருப்பது நமக்கு தான் பிரச்சனை. எப்படியாவது இவனை ஆபீஸ்க்கு துரத்தி விடனும்' என நினைத்தவள் 'எப்படி செய்வது?' என யோசித்தாள். நட்சத்திரா ஒருவழியாக ஐடியாவை யோசித்து விட்டாள்.
நட்சத்திரா கிஷோரிடம் சென்று, "மாமா ஆபீஸ் வேலை எல்லாம் எப்படி போகுது?" என்று கேட்டாள்.
கிஷோர், "ரொம்ப கொடுமையா போதுமா. கல்யாண வேலையில் ஆபீஸை ஒழுங்காக கவனிக்காமல் விட்டுட்டேன். இப்போ நிறைய வேலை தலைக்கு மேல இருக்கு. இன்னைக்கு கூட ஜெய் அங்கிள் குடும்ப வந்துட்டதால நான் ஆபீஸ் போகலை. இப்போ இன்னைக்கு வேலையும் நாளைக்கு சேர்ந்திடும்" என்று கவலையாக கூறினான்.
நட்சத்திரா, "ஆமாம் மாமா, அவர்கூட இதைப் பத்தி என்கிட்ட சொன்னார். நாளையிலிருந்து ஆபீஸ்க்கு உங்க கூட வரப்போறதா சொன்னார்" என்றாள்.
இதை கேட்டதும் கிஷோர், "உண்மையாவா சொல்ற? என்னால நம்ப முடியலையே! கல்யாணத்துக்கு ரெண்டு வாரத்துக்கு முன்னாடியே எனக்கு ஒரு மாசம் லீவு வேணும்னு சொன்னான்."
நட்சத்திரா, "என்னாலேயே நம்ப முடியல மாமா. அவர் கிட்ட கேட்டேன், அவர் தான் நீங்க ரொம்ப கஷ்டப்படுறீங்களாம். இப்போ தான் ஹனிமூன் போகலைன்னு ஆயிடுச்சு. அதான் அவனுக்கு உதவி பண்ணலாம்னு இரண்டு நாள் ஆபிஸ் போறேன். அதுக்கு அப்புறம் தான் நிச்சயதார்த்த வேலை ஆரம்பமாகுது" என்று சொன்னாரு என்றாள்.
கிஷோர், "சே! சூர்யாவுக்கு என்மேல் எவ்வளவு பாசம்? இது தெரியாம அவன கலாய்ச்சுட்டேனே!" என வருத்தப்பட்டான்.
சூர்யா, நட்சத்திராவும் கிஷோரும் ரொம்ப நேரமாய் பேசுவதை பார்த்துவிட்டு இவங்க அப்படி என்ன இவ்வளவு ஆர்வமா பேசுறாங்க? போய் கேட்போம் என்று வர, கிஷோர், "வாடா சூர்யா, நட்சத்திரா இப்ப தான் எல்லாத்தையும் சொன்னா" என்றான்.
சூர்யா 'எல்லாத்தையும் சொன்னாளா? என்ன சொன்னானு தெரியலையே! எப்படி சமாளிப்பது?' என நினைத்து முழித்தான்
அவன் முழிப்பதை பார்த்து நட்சத்திராவிற்கு சிரிப்பு வந்து விட்டது. அதை அடக்கிக் கொண்டாள்.
சூர்யா என்னவென்று தெரியாமல், "ஆமாடா..." என்று கூறினான்.
கிஷோர், "நீ இப்படி சொல்லுவேன்னு நான் எதிர் பாக்கலடா சூர்யா...."
சூர்யா, 'ஐயையோ! பெருசா எதுவும் சொல்லிக் கோர்த்துவிட்டுருக்கா போலவே! சூர்யா உன் கதி அவ்வளவுதான்' என நினைத்தான்.
கிஷோர், "உனக்கு என் மேல இவ்வளவு பாசமா? எனக்காக கல்யாணமான ஒரு வாரத்திலேயே ஆபீசுக்கு வரேன்னு சொல்லி இருக்க" என்றான்.
சூர்யா, 'என்னது ஆபிசுக்கு வரவா? அடிப்பாவி! என துரத்துவதற்கு முடிவு பண்ணிட்டா போல' என நினைத்தவன், வேறு வழியில்லாமல், "ஆமாடா.. வரேன்னு சொன்னேன்" என்றான்.
நட்சத்திரா, 'அப்பாடா! ஒரு வழியாக இவனை ஆபிஸ்க்கு துரத்தி விட்டுட்டோம்' என நினைத்தாள். இரவு அனைவரும் சாப்பிட்டு உறங்கச் செல்ல நட்சத்திரா, 'அவனை கோர்த்துவிட்டோமே, ஏதாவது திட்டுவானோ?' என லைட்டாக பயந்துகொண்டே ரூமிற்க்கு சென்றாள்.
ஆனால் அவள் எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை. சூர்யா அவளைப் பார்த்து மதியம் கொடுத்து அதே புன்னகையுடன் சிரித்துக்கொண்டிருந்தான். நட்சத்திரா, "என்ன இவன், எது பண்ணினாலும் சிரிக்கிறான். ஒருவேளை நட்டு கழன்டுடுச்சோ...?" என்று நினைத்தவள் இந்த முறை வாய்விட்டே கேட்டுவிட்டாள்.
சூர்யா சிரித்துக்கொண்டே, "நட்டு எல்லாம் கழறலை. நான் என்னோட முயற்சியில் கொஞ்சம் கொஞ்சமா ஜெயிச்சுட்டு இருக்கேன். அத நினைத்துதான் சிரிச்சேன்" என்றான்.
நட்சத்திரா, "என்ன முயற்சி?" என்றாள். சூர்யா, "என் குட்டச்சியை பழையபடி மாத்துற முயற்சியில... இப்போ நீ கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டு இருக்க" என்றான்.
நட்சத்திரா, "நான் எப்போ மாறினேன்? நான் மாறமாட்டேன்."
"இப்ப கூட பொய் சொன்னல, அப்போ பழைய மாதிரி மாறிட்டே வர்ற என்று தானே அர்த்தம். அதுவுமில்லாம நான் கூட இருந்தா எங்க நீ பழையபடி என் பக்கம் சாஞ்சுடுவியோன்னு நினைச்சு தான என்னை ஆபிஸ் அனுப்ப நினைக்குற..."
நட்சத்திரா அப்போதுதான் தான் செய்ததை நினைத்து பார்த்தாள். 'அவன் சொல்ற மாதிரி நான் மாறிட்டு வரேனா?' என்று சுய அலசலில் ஈடுபட்டவள் எதுவும் பேசாமல் படுத்துக் கொண்டாள். சூர்யாவும் பின்னர் எதுவும் பேசவில்லை.
மறுநாள் ஆபீஸில் சூர்யா வந்துவிட்டோமே என நினைத்து கடமைக்காக ஒரு பைலை பார்த்துக் கொண்டிருந்தான் சிறிது நேரத்தில் அவனுக்கு போரடித்துவிட்டது என்ன செய்வது என்று யோசித்து விஜய்க்கு கால் செய்தான். போனை அட்டென்ட் செய்த விஜய், "சொல்லுடா மச்சான்..." என்றான்.
சூர்யா, "மச்சான் கொஞ்சம் அவசரம். சீக்கிரமா ஆபிஸ்க்கு வர்றியா?" என்றான்.
விஜய், "என்னடா, எதுவும் பிரச்சனையா?" என கேட்க,
சூர்யா, "ஆமாடா, ரொம்ப முக்கியமான விஷயம்" என்றான்.
விஜய், "சரிடா, இப்பவே வரேன்..." என்று போனை கட் செய்தான். அடுத்த பத்தாவது நிமிடத்தில் விஜய் சூர்யாவின் ஆபீஸ்க்கு வந்திருந்தான்.
விஜய் வேகமாக சூர்யாவின் கேபினுக்குள் நுழைந்து, "மச்சான் என்னாச்சுடா? என்ன பிரச்சனை?" என கேட்டான்.
சூர்யா, "மச்சான் முதல்ல உட்காரு, ஓடி வந்ததுனால் எப்படி மூச்சு வாங்குது பாரு... இந்தா இந்த தண்ணிய குடி" என்றான்.
விஜய், "என்னடா, உனக்கு ஏதோ பிரச்சனை என்று சொன்னதால் நான் என்னோட பெங்களூரு பிளைட்ட கூட கேன்சல் பண்ணிட்டு வந்து இருக்கேன். நீ இப்படி சாவகாசமா பேசிட்டு இருக்க" என்றான்.
சூர்யா, "மச்சான், நீ முதல்ல உட்காரு. நான் சொல்றேன்" என்றான் விஜய் வேறு வழியில்லாமல் சேரில் அமர்ந்து, "இப்பவாவது சொல்லுடா.." என கேட்டான். சூர்யா சொன்ன பதிலில் விஜய் கொலைவெறியாகிவிட்டான்.
கவிதைகள் தொடரும்...
 

Janu murugan

Moderator
Staff member
Jun 10, 2020
43
20
8
20
விழிகளிலே ஒரு கவிதை 9

ஷீலா, "நான் உன்னை கொடுமைப் படுத்துறேனா?" என்று கேட்க, நட்சத்திரா மைண்ட் வாய்ஸில் 'ஐயையோ! பெருசா கோர்த்து விட்டுடான் போல' என்று நினைத்தவள், "ஐயோ! அப்படிலாம் இல்லத்தை" என்றாள்.
ஷீலா, "நான் என்னைக் கேட்காம எதுவும் செய்யக்கூடாது என்று சொல்லி இருக்கேனா?"
நட்சத்திரா, "அப்படி எல்லாம் இல்ல அத்த, ஏன் இப்படி கேட்கறீங்க?" என்றாள்.
ஷீலா, "அப்புறம் ஏன் சூர்யா கிட்ட அப்படி சொன்ன?"
நட்சத்திரா என்ன சொல்லியிருப்பான் என்று தெரியாமல் பே வென்று முழித்தாள்.
ஷீலா, "சூர்யா கிட்ட அவனுக்கு சாப்பாடு கொண்டுவர ஆசையாயிருக்கு. ஆனால் நான் என்ன சொல்லுவேன் என்று பயந்துட்டு நீ சாப்பாடு கொண்டுவரலன்னு சொன்னியா? அவன் என் பொண்டாட்டிய என்னம்மா சொல்லி மிரட்டி வச்சிருக்க.." என்று கேக்குறான்.
நட்சத்திரா, 'பாவி! இப்படி எல்லார் முன்னாடியும் எப்போ பார்த்தாலும் என் இமேஜை டேமேஜ் பண்றதே பொழப்பா வச்சிருக்கான். இன்னைக்கு இருக்கு டா உனக்கு' என திட்டிக்கொண்டே பாவமாக முழித்தாள்.
அவளது முகத்தைப் பார்த்த ஷீலாவிற்கு சிரிப்பு வந்து விட்டது. நட்சத்திரா, "அத்தை நான் எதுவுமே சொல்லல" என்றாள்.
ஷீலாவிற்கும் தெரியும் நட்சத்திரா அவ்வாறு சொல்லியிருக்க மாட்டாள் என்று சும்மா விளையாட்டுக்காக அவளை மிரட்டினார்.
ஷீலா சிரித்துக் கொண்டே, "சரி, அவனுக்கு சாப்பாடு எடுத்துட்டு போ. அவன் இன்னும் சாப்பிடாம வெயிட் பண்றான்" என்றார்.
நட்சத்திரா, "சரிங்க அத்தை.." என்று கூறி சாப்பாடை எடுத்து வைத்துக்கொண்டு சூர்யாவின் அலுவலகத்திற்குச் சென்றாள். அலுப
அலுவலகத்தில் அவளைப் பார்த்த அனைவரும் ஸ்நேகமாக புன்னகைத்தனர். நட்சத்திரா பதிலுக்கு ஒரு புன்னகை உதிர்த்தாள்.
சூர்யாவின் கேபினுக்குள் நுழைந்ததும் சாப்பாடு கூடையை நங்கென்று வைத்தாள்.
அவள் கூடையை நங்கென்று வவைத்ததிலயே அவளின் சூர்யாவிற்கு புரிந்தது. நட்சத்திரா இடுப்பில் கை வைத்துக் கொண்டு சூர்யாவை முறைத்தாள்.
சூர்யா, "டார்லிங், சாப்பாடு கொண்டு வந்து விட்டியா? வந்து எடுத்துவை, மாமா மேல எவ்வளவு பாசம் உனக்கு? நான் சாப்பிடல என்று சொன்ன பத்து நிமிஷத்துல எனக்கு சாப்பாடு கொண்டு வந்து நிக்குற..." என்றான்.
நட்சத்திரா, "டேய்! உனக்கு அறிவே இல்லையா? எப்ப பார்த்தாலும் என்ன கோர்த்து விட்டுறதையே வேலையாய் வச்சிருக்க... நான் உனக்கு சாப்பாடு கொண்டு வரேன் என்று அழுதனா? அவங்க கேட்கும்போது எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா?" என்று கோபமாக திட்ட,
சூர்யா, "திட்டி முடிச்சிட்டியா? வந்து மாமாவுக்கு சாப்பாடு எடுத்து வை" என்றான்.
நட்சத்திரா, "நான் உன்னை திட்டிட்டு இருக்கேன். நீ கொஞ்சம் கூட கவலைப்படாமல் சாப்பாடு எடுத்து வைக்க சொல்ற... முடியாது போடா" என்றாள்.
சூர்யா, "நீ எடுத்து வைக்கலைனா, நான் சாப்பிட மாட்டேன்" என்றான்.
நட்சத்திரா, "சாப்பாடுலாம் எடுத்து வைக்க முடியாது... வேணும்னா நீயே எடுத்து வச்சு கொட்டிக்க..." என்றாள்.
சூர்யா, "வம்பு பண்ணாம எடுத்துவை. எப்படியும் கொஞ்ச நேரத்துல நீயா எனக்கு எடுத்து வப்ப.." என்றான்.
நட்சத்திரா, "அது நடக்காது..." என்றாள். சூர்யா நடந்துட்டா. நான் சொல்றபடி நீ நடந்துக்கனும்."
நட்சத்திரா, "அப்படி நடக்கலனா நான் சொல்றதை நீ கேட்கணும்.." என்றாள்.
சூர்யா, "சரி சரி பார்ப்போம். நான் சொல்றத செய்றதுக்கு ரெடியாக இரு. அப்புறம் பின்வாங்கக் கூடாது" என்றான்.
அவன் பேசி முடிக்க கிஷோர் உள்ளே நுழைந்தான். நட்சத்திராவிற்கு கிஷோரைப் பார்த்ததும் புரிந்து விட்டது. இவன் நம்மல செய்ய வைத்து விடுவானோ? என்று நினைத்தாள்.
கிஷோர், "நட்சத்திரா, சாப்பாடு கொண்டு வந்துட்டியா? நான் வெளியே போய் சாப்பிடலாம் என்று நினைத்தேன். சூர்யாதான் நீ எடுத்து வருவதாக சொன்னான். சீக்கிரம் எடுத்துவை, பசிக்குது" என்றான்.
சூர்யாவிற்கு சிரிப்பு வந்து விட்டது. அதை கட்டுப் படுத்தினான். நட்சத்திரா அவனை முறைத்துக் கொண்டே பரிமாறினாள். கிஷோர், "நட்சத்திரா, நீ சாப்பிட்டியா?" என கேட்க, நட்சத்திரா, "நான் சாப்பிட்டேன் மாமா. நீங்க சாப்பிடுங்க..." என்றாள். சிறுது நேரத்தில் கிஷோரும் சாப்பிட்டு கிளம்பிவிட்டான்.
நட்சத்திரா, 'ஐயோ! என்ன செய்யப் போகிறானோ..?' என நினைத்து வேகமாக கிளம்ப முயற்சிக்க சூர்யா, "ஏய் கேடி! எங்க ஓட பாக்குற... சொன்ன பேச்சை மீறக்கூடாது. நான் சொன்னதை செய்கிறேன் என்று சொல்லி இருக்க.." என்றான்.
நட்சத்திரா, "அதெல்லாம் செய்ய முடியாது.." என்று நகர போக சூர்யா, "செய்யலைனா இங்கேயிருந்து போக முடியாது" என்று அவளைப் பிடித்துக் கொண்டான்.
நட்சத்திரா, "இது ஆபீஸ், என்ன பண்ற?" என கேட்க சூர்யா, "அப்போ வீடா இருந்தா ஓகேவா?" என்று கூறி கண்ணாடித்தான்.
நட்சத்திரா அவனை முறைத்துவிட்டு, "டேய் நீ ரொம்ப பண்ற... என்னை விடுடா" என்றாள்.
சூர்யா, "நான் உன்னை எதுவுமே பண்ணல.." என்று அவளை நெருங்க நட்சத்திராவிற்கு பதட்டமாகி விட்டது. சூர்யா இதழ் உரசும் நெருக்கத்தில் வந்தவன், "ஒரே ஒரு தடவை ஐ லவ் யூ சொல்லு... உன்ன விட்டு விட்டுவேன்" என்றான்.
இந்த வார்த்தையை கேட்டதும் வேகமாக அவனைத் தள்ளியவள், "எந்த காலத்துலயும் அந்த வார்த்தையை நான் உன்கிட்ட சொல்ல மாட்டேன்" என்று கூறி வேகமாக வெளியேறி விட்டாள்.
சூர்யா, 'எங்க போய்டுவ என்னை விட்டு..' என்று நினைத்துக்கொண்டான். நட்சத்திரா அவனைத் திட்டிக்கொண்டே வெளியே வந்தவள் விபிஷா அழைப்பதே கூடக் காதில் வாங்காமல் சென்றாள்.
விபி நட்சத்திரா வின் முன் சென்று நின்று "என்ன ஓனரம்மா, இந்த ஸ்டாப் கூப்பிடத கூட கேட்காமலே போறீங்க.." என்றாள்.
நட்சத்திரா அவளைப் பார்த்துவிட்டு, ஹே விபி, எப்படி இருக்க? சாரி ஏதோ ஞாபகத்தில் நீ கூப்பிடதை நான் கவனிக்கல" என்றாள்.
விபிஷா, "ஏதோ ஞாபகமா? சூர்யா அண்ணா ஞாபகமா?" என்றாள் சிரித்துக்கொண்டே.
நட்சத்திரா, "அதெல்லாம் ஒண்ணுமில்ல.." என்றவள் சிறிது நேரம் பேசி விட்டு சென்றாள்.சூர்யா ஒரு வழியாக ஆபிஸ் வேலை முடிந்து வீட்டிற்கு கிளம்பிவிட்டான்.
வீட்டிற்கு சென்றவன் எப்படி நட்சத்திராவை ஆபீஸ் வர வைப்பது என யோசித்துக் கொண்டிருந்தான். சங்கர் வந்து, "என்னடா யோசிச்சிட்டு இருக்க..?" என்றார். சூர்யா இவரை வைத்தே பிளானை செயல்படுத்தலாம் என்று நினைத்தவன் "வொர்க் லோட் கொஞ்சம் அதிகமா இருக்கு.
அதான் அத பத்தி யோசிச்சிட்டு இருந்தேன்பா.."
சங்கர், "ஆபீஸ் வேலைய முடிச்சிட்டு வந்துடு... வீடு வரைக்கும் இழுத்துட்டு வராதே!" என்றார்.
சூர்யா, "நட்சத்திராவும் இதைத்தான் சொன்னார். அப்புறம் வீட்ல இருக்க போரிங்க இருக்கு. என் கூட ஆபீஸ் வரேன் என்று சொன்னாள்" என்றான்.
சங்கர், "டேய்! இப்பதான் கல்யாணம் முடிஞ்சது. அதுக்குள்ளேயும் அந்த பொண்ண ஆபீஸ் வரச்சொல்றடா..." என்றார்.
சூர்யா, "அப்பா நான் சொல்லிட்டேன். அவ வொர்க் லோட் குறையுற வரைக்கும் கொஞ்ச நாள் என் கூட வேலை செய்கிறேன் என்று சொல்றா..." என்றான். சங்கர், "சரி, உங்க இஷ்டம்..." என்றார்.
ஷீலா எல்லோரும் சாப்பிட வாங்க என்று அழைத்தார். சூர்யா ரூமுக்கு போய் டிரஸ் சேஞ்ச் பண்ணி விட்டு வந்து சாப்பிட அமர்ந்தான். நட்சத்திரா பரிமாற சங்கர், "நட்சத்திரா நீயும் உட்காரு, சேர்ந்து சாப்பிடுவோம்" என்றார்.
சூர்யா தன் பக்கத்தில் உட்கார என்பது போல பார்க்க நட்சத்திரா அவனை முறைத்துவிட்டு அவனுக்கு எதிரில் அமர்ந்தாள். சூர்யா அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
நட்சத்திரா 'எப்படி முழுங்குற மாதிரி பாக்குறான். யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க? பொறுக்கி' என முணுமுணுத்தாள்.
அவளது வாய் அசைவை வைத்து திட்றா என புரிந்தவன் 'என்னையவே பொறுக்கின்னு சொல்கிறீயா?' என நினைத்து தனது காலால் அவளது காலை பிடித்து கொண்டான்.
நட்சத்திரா அவனை பார்க்க அவன் எதுவும் தெரியாததுபோல் தட்டை பார்த்த சாப்பிட்டுக் கொண்டிருந்தான். நட்சத்திரா காலை உருவ முயல அவளால் முடியவில்லை. சூர்யா மிகவும் டைட்டாக பிடித்துக்கொண்டான்.
நட்சத்திரா அவனிடமிருந்து காலை உருவ முடியாமல் முழித்துக் கொண்டிருந்தாள். சங்கர் நட்சத்திரா என அழைக்க, நட்சத்திரா "சொல்லுங்க மாமா.." என்றாள்.
சங்கர், "சூர்யா சொன்னாமா..."
நட்சத்திரா, 'ஐயையோ! அடுத்து என்ன கோர்த்து விட்டானோ..? காலையில இருந்து விடாம அடிக்கிறானே!' என நினைத்தவள் "சொல்லுங்க மாமா..." என்றாள்.
ஷீலா, "என்கிட்டயும் சொன்னான்மா.. ஏன் நீ அந்த முடிவு எடுத்த?" என்றார்.
நட்சத்திரா 'வளைச்சு வளைச்சு கேள்வி கேட்கிறாங்களே! என்ன சொன்னான் என்று தெரிஞ்சாவாது சமாளிக்கலாம்' என நினைத்தவள், "ஆமா அத்தை, நான் தான் சொன்னேன்" என்றாள்.
நட்சத்திராவைப் பார்த்து சூர்யாவிற்கு சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. நட்சத்திரா அவனிடமிருந்து காலை உருவமும் முடியாமல் அவர்களை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள்.
ஷீலா, "ஏன் நட்சத்திரா, இப்பதான் கல்யாணம் முடிஞ்சு இருக்கு... நீ ஆபீஸ் போறேன் என்று சொல்லற.. கொஞ்ச நாள் வீட்டில் இருக்கலாம் இல்ல..." என்றார்.
நட்சத்திரா, 'பாவி! வீட்டில் தொல்லை பண்றது பத்தாது என்று ஆபீஸ்ல என்ன கொடுமை படுத்த போறனா..? விடவே கூடாது, போக மாட்டேன்' என்று சொல்லி விடலாம் என நினைத்து வாயை திறக்க போக சூர்யா முந்திக்கொண்டு, "நானும் அதை தான் சொன்னேன்மா. ஆனால் நட்சத்திரா ஆபீஸ் வந்தே ஆகவேண்டும் என்று அடம்பிடிக்குறா.... சரி என்று நானும் விட்டுட்டேன்" என்றான்.
இதற்கு மேல் அவளால் எதுவும் பேச முடியவில்லை. தாரா, "அத்தை அவ போகணும் என்று ஆசைப்படுறா... விடுங்க போகட்டும்" என்றாள்.
நட்சத்திரா, "அத்தை நான் போறேன்.." என்றாள். சூர்யா 'அப்பாடா! ஒரு வழியா பிளானை சக்சஸ் பண்ணிட்டோம்' என்று நினைத்தான்.
நட்சத்திரா, 'ஆபிஸ்ல இவன் என்னை என்ன பாடுபடுத்த போகிறானோ...?' என நினைத்தாள். சாப்பிட்டு ஒவ்வொருவராக எழுந்து செல்ல நட்சத்திரா மட்டும் அமர்ந்து இருந்தாள். சூர்யா இன்னும் அவளை விடவில்லை. எல்லோரும் எழுந்து சென்று விட்டனர்.
நட்சத்திரா, "ரொம்ப நேரமா காலை பிடிச்சிருக்க...கால் வலிக்குது, காலை விடுடா..." என்றாள்.
சூர்யா சாப்பிட்டுக்கொண்டே, "என்கிட்ட ஐ லவ் யூ சொல்லு, விடுறேன்" என்றான். நட்சத்திரா, "அதெல்லாம் முடியாது, போடா..." என்றாள்.
சூர்யா, "அப்போ நானும் விட மாட்டேன்.." என்றாள். நட்சத்திரா கோபமாக பேசினால் விடமாட்டான் என நினைத்தவள், "பிளீஸ் விடுடா.." என்றாள்.
சூர்யா அவள் செயலில் மனம் இறங்கி, "சரி மாமா என்று சொல்லு... விட்றேன்" என்றான். நட்சத்திரா வேறுவழியில்லாமல் "ப்ளீஸ் மாமா.." என்க, சூர்யா சரி போ என்று காலை விட்டான்.
நட்சத்திரா கைகழுவுவதற்காக எழப்போக
வெகு நேரம் காலை அவன் பிடித்திருந்ததால் கால் தடுக்கி விழப் போக சூர்யா எழுந்து அவளை பிடித்து விட்டான். சூர்யா விடாமல் அவளை பிடித்து கொண்டு நிற்க நட்சத்திரா, "என்ன சாங் பாட போறியா... விடுடா" என்று கூறி ரூமுக்கு சென்று விட்டாள்.
சூர்யா இதுதான் சாக்கு என்று எத்தனை டா போடுறா என்று நினைத்தான். நட்சத்திரா அவன் வந்தா ஏதாவது வம்பு பண்ணுவான் என நினைத்தவள் பெட்ஷீட்டை போர்த்தி தூங்கி விட்டாள். சூர்யா வந்த அவளைப் பார்த்து சிரித்துவிட்டு அவள் அருகிலேயே படுத்துக் கொண்டான்.
மறுநாள் வழக்கம்போல விடிய சூர்யா முதலிலே எழுந்துவிட்டான். நட்சத்திரா தூங்கிக் கொண்டிருந்தாள்.
நட்சத்திராவுடன் ஆபீஸ் செல்ல போகிறோம் என்ற மகிழ்ச்சியில் எழுந்து குளிக்க சென்றான். அவன் குளிக்க சென்றதும் நட்சத்திரா எழுந்துவிட்டாள். இன்னைக்கு அவன் கூட போகக் கூடாது என நினைத்தவள் தூங்குவது போல நடித்தாள். சூர்யா குளித்து வந்து உடை மாற்றினான்.
நட்சத்திரா என்ன பண்றான் என்று ஒரு கண்ணை திறந்து பார்த்தாள். சூர்யா அவள் கண்ணைத் திறந்து பார்த்ததை கண்ணாடி வழியே கவனித்து விட்டான்.
தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டவன் திரும்பிப் நட்சத்திராவையேப் பார்த்தான். நட்சத்திரா கண்களை இறுக மூடிக் கொண்டாள். அவளின் செய்கையை ரசித்து கொண்டே அவள் அருகில் சென்றான். நட்சத்திரா அவன் சென்று விட்டானா என்று பார்க்க கண்களை திறந்தவள் அதிர்ச்சியாகி கண்களை மேலும் விரித்தாள்.
சூர்யாவின் முகம் அவளுக்கு மிக நெருக்கத்தில் இருந்தது. சூர்யா, "என்னை ஏமாத்தலாம்னு பார்க்கிறாயா?" என்றான். நட்சத்திரா பதட்டத்தில் இல்லை என தலையை ஆட்டினாள்.
சூர்யா, "அப்புறம் ஏன் கண்ண மூடி நடிச்ச?" நட்சத்திரா நம்ம நடிச்சதை கண்டு பிடித்து விட்டானே! என்று ஆச்சர்யமாக பார்த்தாள்.
சூர்யா, "ஒரே ஒரு தடவை உன் கண்ணுக்குள்ள விழுந்துக்கவா?" என்றான். நட்சத்திரா ஏன் எப்ப பார்த்தாலும் இவன் பைத்தியம் மாதிரி பேசறான் என நினைத்தவள் அவனது கண்களை பார்க்க முடியாமல் அவனை தள்ளிவிட்டாள்.
நட்சத்திரா, "நீ இப்படி பேசினா நான் மாறி விடுவேன் என்று நினைக்காதே! பக்கத்துல வர வேலை வச்சுக்காத..." என்று அவனை திட்டி விட்டு குளிக்க சென்றாள்.
சூர்யா எங்க மாறி விடுவோமோ..? என்ற பயத்தினால்தான் கோவமா இருக்க மாதிரி நடிச்சுட்டு போறா கேடி என நினைத்து புன்னகைத்தான்.

கவிதைகள் தொடரும்...
 
Need a gift idea? How about a dinosaur night light?
Buy it!