விழிகளிலே ஒரு கவிதை - பார்ட் -2

Janu murugan

Moderator
Staff member
Jun 10, 2020
43
20
8
20
விழிகளிலே ஒரு கவிதை 10

நட்சத்திரா வேறு வழியின்றி கடனே என்று கிளம்பிக் கொண்டிருந்தாள். சூர்யா நட்ச்ததிராவிடன் ஆபீஸில் ஒன்றாக இருக்கப் போவதை நினைத்து குஷியாகி விட்டான்.
"நட்சத்திரா, சீக்கிரம் கிளம்பு..." என அவளை பாடாய் படுத்திக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்கமுடியாமல் நட்சத்திரா, "டேய்! இப்படியே தொல்ல பண்ணிட்டு இருந்த என்ன நடந்தாலும் பரவாயில்லைன்னு நான் வராமல் இருந்துடுவேன்" என்றாள். சூர்யா உடனே அமைதியாகி விட்டான்.
நட்சத்திரா உடுத்துவதற்கு எந்த சேலையை எடுப்பது என யோசித்துக் கொண்டிருக்க, சூர்யா, "இதை கட்டு..." என ஒரு சேலையை எடுத்து கொடுத்தான்.
நட்சத்திரா அவனை கேள்வியாக பார்த்தாள். சூர்யா, "என் ட்ரெஸூக்கு மேட்சா இருக்கும்" என்றான்.
நட்சத்திரா, "ஓ.. அப்படியா?" என்று அதை வாங்கியவள் பெட்டில் தூக்கிப்போட்டுவிட்டு, "எதை வேணா போடுவேன். ஆனால் இதை போட மாட்டேன்" என்றாள்.
இதை கேட்டதும் சூர்யாவின் முகம் வாடியது எல்லாம் ஒரு நொடிதான். மறுநிமிடமே தன்னை சமன்படுத்தி கொண்டவன், "நோ ப்ராப்ளம் டார்லிங். நீ போடுற ட்ரெஸ்க்கு மேட்சா நான் மாத்திக்கிறேன்" என்றான் கைகளை விரித்து.....
அவன் பதிலில் நட்சத்திரா ஒரு நிமிடம் ஆச்சரியப்பட்டுப் போனாள். 'என்ன பண்ணுனாலும் கோபப்பட மாட்டுறானே! இவன கடுப்பாகி இவனே விட்டுட்டுப் போக வைக்கணும்' என நினைத்தவள், அவனை முறைத்து விட்டு வேறு உடை எடுத்து குளிக்கச் சென்றாள்.
அவள் வேண்டுமென்றே அரை மணி நேரம் குளித்தாள். அவள் குளித்து வர சூர்யா கடுப்பாகி இருப்பான் என நினைக்க அவனும் ஆசுவாசமாக உக்கார்ந்து கொண்டு, "என்ன டார்லிங், சீக்கிரமா வந்துட்ட.... இன்னும் டைம் இருக்கு. மெதுவா குளிச்சிட்டு வர வேண்டியதுதானே!" என்றான்.
நட்சத்திரா, 'சரியான ரோசம் கெட்டவனா இருப்பான் போல' என மனதிற்குள் திட்ட, சூர்யா, "ஆமா..." என்றான்.
நட்சத்திரா, "என்ன ஆமா?" என கேட்க,
சூர்யா, "அதான் மனசுக்குள்ள நினைச்சியை.... நான் ரோஷன் கெட்டவன்னு... அதான் ஆமான்னு சொல்றேன்" என்றான்.
நட்சத்திரா, 'அடப்பாவி! மனசுல நினைக்கிறது கூட கண்டுபிடிச்சுடுறானே! என நினைத்து பார்க்க,
சூர்யா, "ஆமா, நான் ரோஷன் கெட்டவன் தான், உன் விஷயத்தில் மட்டும் எனக்கு காதலை தவிர வேற எதுவுமே கிடையாது" என்றான் அவளை ஆழ்ந்து பார்த்த படி. அவன் பார்வையை தாங்க முடியாதவள் தன் முகத்தை திருப்பி கொண்டாள்.
'எப்போ பார்த்தாலும் ஏதாவது டயலாக் பேசியே ஆஃப் பண்ணிடுறான்' என திட்டியவள் மனதில், 'ஆமா நானும் எத்தனை வருஷமா இவன் பின்னாடி சுத்துனேன். ஆனால் ஒரு தடவை கூட இப்படி பேசினது இல்லையே!' என தோன்ற அதை அவனிடமே கேட்டு விட்டாள்.
அவள் கேள்வியை கேட்டு சிரித்தவன், "ஆங்... உனக்கு தெரியாம ஒரு கேர்ள் ஃப்ரெண்ட் வச்சிருக்கேன். அவ என்கிட்ட பேசற டயலாக் எல்லாம் மாறாம அப்படியே உன்கிட்ட சொல்லிட்டு இருக்கேன்" என்று கூறி கண்ணடித்தான்.
நட்சத்திரா, "சீ... காமெடி பண்ணாத! உனக்கு நானே ஓவரு... இதுல வேற ஒரு பொண்ணா? உனக்கு அவ்ளோ எல்லாம் டேலன்ட் இல்ல" என்றாள்.
சூர்யா, "என்னடி படக்குனு இப்படி சொல்லிட்ட... நான் கண்ணசைச்சா என் பின்னாடி எத்தனை பேர் வருவாங்கன்னு தெரியுமா?" என்றான் காலரை தூக்கியபடி.
நட்சத்திரா, "யாரு நம்ம ஆபீஸ் ஸ்டாப்ஃபா?" என்றாள்.
சூர்யா, "ஏன்டி மறுபடியும் மறுபடியும் என் இமேஜை டேமேஜ் பண்ற.... இதுக்காகவே ஒரு பொண்ண கரெக்ட் பண்றேன்" என்க,
நட்சத்திரா, "நீ மறுபடியும் மறுபடியும் காமெடி பண்ணாத. உன் பின்னாடி இத்தனை வருஷமா சுத்துனா என்னையே உன்னால கரெக்ட் பண்ண முடியலை. மூஞ்சியை இஞ்சி தின்ன குரங்கு மாதிரி வச்சிருந்தா யாரும் உன்னை திரும்பி பார்க்க மாட்டாங்க" என்றாள்.
சூர்யா, "அடியே! அது பார்ட் 1லடி இது பார்ட் 2 டி... இப்போ ஐயா லெவலே வேற... நான் காதல் மன்னனாகிட்டேன்... தெரியுமா?" என்றான்.
நட்சத்திரா, "இந்த வெத்து வேட்டு சீன் எல்லாம் போடாத.... தள்ளிப் போ நான் ரெடி ஆகணும்" என்க,
சூர்யா, "நானும் ஒரு பொண்ணை கூடிய சீக்கிரமே கரெக்ட் பண்ணி காட்டுகிறேன். அப்போ நீயே ஒத்துக்குவ.." என்றான்.
நட்சத்திரா அவன் கூறுவதை கவனிக்காமல் ரெடியாகினாள்.சூர்யா, நட்சத்திரா சேலைக்கு மேட்ச்சாக ஒரு சட்டையை அணிந்து வந்து, "டார்லிங், எப்படி இருக்கு?" என கேட்டான்.
நட்சத்திரா 'ஒரு பேச்சுக்கு சொன்னான்னு என்று நினைச்சா உண்மைக்கே மாத்திட்டு வந்து நிக்குறான்' என நினைத்து அவனைப் பார்த்த சூர்யா, "டார்லிங், கேள்வி கேட்டா பதில் சொல்லாமல் எவ்வளவு நேரம் என்னைவே சைட் அடிப்ப?" என்றான்.
நட்சத்திரா, "சைட் அடிக்கிற அளவுக்கு எல்லாம் நீ வொர்த் இல்ல" என்று உதட்டை சுழிக்க,
சூர்யா, "காலேஜ் படிக்கும் போது யாரோ என்ன முழுங்குற மாதிரி சைட் அடிச்சுகிட்டே இருப்பாங்க..." என்றான்.
நட்சத்திரா, "அது புத்தி இல்லாம பண்ணிட்டேன். இப்போதான் எனக்கு புத்தி வந்து இருக்கு..." என்று கூறி வெளியே சென்றாள். சூர்யா சிரித்துக் கொண்டே அவள் பின்னாடி சென்றான்.
அவர்கள் கீழே இறங்கி வர ஷீலா, "இவ்வளவு நேரமா கிளம்பிட்டு இருக்கீங்க..... சீக்கிரம் கிளம்ப வேண்டாமா?" எனக் கேட்க,
சூர்யா குடும்பமே கிளம்பி நிற்பதை பார்த்து விட்டு, "நீங்க எல்லாரும் எங்க கிளம்பிட்டீங்க? நாங்க ரெண்டு பேரும் மட்டும் தான் ஆபிசுக்கு கிளம்பிட்டு இருக்கோம்..." என்றான்.
ஷீலா, "என்னது ஆபீஸா? இன்னைக்கு மேக்னா நிச்சயதார்த்தத்திற்கு புடவை எடுக்க போறோம். நீ ஆபீஸ் எல்லாம் ஒன்னும் போக வேண்டாம். எங்க கூட வா..." என்றார்.
சூர்யா அதிர்ச்சியாகி, "நாளைக்கு தானே போறதா ப்ளான் இருந்துச்சு.." என்றான்.
ஷீலா, "ஆமாடா! ஆனால் காலையிலதான் ஜெயராஜ் அண்ணா கால் பண்ணி இன்னைக்கு நல்ல நாளா இருக்கு... இன்னைக்கே போகலாம்னு என்று சொல்லிட்டாரு..." என்றார்.
இதைக் கேட்ட சூர்யா மைண்ட் வாய்ஸில் 'சூர்யா, எல்லோரும் உனக்கு எதிராக சதி பண்றாங்க. இந்த தடவை விட்றாதடா..' என சொல்லிக் கொண்டவன், "அம்மா, என்னம்மா... இப்போ வந்து கடைசி நேரத்தில் சொல்றீங்க.... எனக்கு ஆபீஸ்ல முக்கியமான மீட்டிங் இருக்கு" என்றான்.
ஷீலா, "ரொம்ப முக்கியமான மீட்டிங்கா?" என கேட்க,
சூர்யா, 'ஆஹா! நம்ம பிளான் ஒர்க்வுட் ஆகிருச்சு... இப்படியே இதைப் புடிச்சு ஆபீஸ் போயிடணும்' என நினைத்தவன், முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு, "ஆமாம்மா.... ரொம்ப முக்கியமான மீட்டிங் இருக்கு. ஃபாரின் கிளையண்ட்ஸ் எல்லாம் வராங்க... அவங்கள போய் நான் ரிசீவ் பண்ணலைனாஅவங்க நம்ம நாட்டை பத்தி என்ன நினைப்பாங்க?" என்றான்.
கிஷோர் 'அது யாருடா நமக்குத் தெரியாம பாரின் கிளையண்ட்ஸ்' என நினைத்தான்.
ஷீலா சில வினாடிகள் யோசித்துவிட்டு, "சரிடா... அப்ப நீ மட்டும் போயிட்டுவா. நாங்க நட்சத்திராவை மட்டும் கூட்டிட்டு போறோம்" என்று அவன் தலையில் இடியை இறக்கினார்.
சூர்யா 'என்ன இப்படி முதலுக்கே மோசம் ஆயிடுச்சே!' என நினைத்தவன், "அம்மா, அவளும் என் கூட வரட்டும்..." என்றான்.
ஷீலா, "அவ எதுக்கு? உனக்கு தான மீட்டிங்..?" என கேட்க,
நட்சத்திரா, "ஆமா, நான் அத்தை கூடவே போறேன். நீங்க பாரின் கிளையண்ட்ஸை ரிசீவ் பண்ணுங்க..." என்றாள்.
சூர்யா 'வேற வழி இல்ல சரண்டர் ஆகி விட வேண்டியதுதான்' என நினைத்தவன், "சரிம்மா.. நீங்க இவ்வளவு தூரம் கேட்கிறதுனால நானும் உங்க கூட வரேன்" என்றான்.
ஷீலா, "நீ இவ்வளவு பீல் பண்ணி எல்லாம் வரத்தேவையில்லை. நாங்களே போய்க்கிறோம்" என்றார்.
சூர்யா, "இல்லமா... நான் இல்லாம நீங்க எப்படி போக முடியும்? எனக் கேட்க,
ஷீலா, "நீதான் ரொம்ப ரொம்ப முக்கியமான மீட்டிங்... ஃபாரின் கிளையண்ட்ஸ் எல்லாம் வேற வராங்கன்னு சொன்ன... அதனால நீ போய் அவங்களை ரிசீவ் பண்ணு. இல்லைனா அவங்க நம்ம நாட்டைப் பத்தி எதாவது தப்பா நினைச்சிடப் போறாங்க" என்றார்.
சூர்யா, "எனக்கு ஃபாரின் கிளையண்ட்ஸை விட என் குடும்பம் தான் முக்கியம்" என்று வீரவசனம் பேச ஷீலா, "இல்லடா, நீ ஆபிஸ பார்த்தாதான் சம்பாதிச்சு உனக்கு பிடிச்ச உன் குடும்பத்தை நல்லா பாத்துக்க முடியும். சோ நீ ஆபீசுக்கே போ..." என்றவர் மற்றவர்களிடம், "வாங்க நாமெல்லாம் கிளம்பலாம்.." என்றார்.
சூர்யா முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு நிற்க நட்சத்திரா அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டே அவர்களோடு சென்றாள்.
சூர்யா, 'ம்கூம்... விடமாட்டேன். இனி அந்த விதியே சதி பண்ணினாலும் நான் ஜெயிக்காம விடமாட்டேன்' என நினைத்தவன் அவர்களுக்கு முன்னாடி அந்த துணிக்கடைக்கு போகணும் என்று வேகமாக கிளம்பினான். போகும் வழியிலே விஜய்க்கு கால் செய்தான்.
விஜய் அன்னைக்கு மாதிரி ஒன்னும் எதாவது ஆகாத வேலைக்கு என் உயிரை வாங்குவானே! என நினைத்துக்கொண்டு காலை அட்டன்ட் செய்தான்.
சூர்யா, "மச்சான், எங்க இருக்க? ஒரு அவசரம்" என்க,
விஜய் 'இந்த தடவையும் உன்கிட்ட ஏமாற நாம் முட்டாள் இல்லை' என நினைத்தவன், "இல்லடா மச்சான், நான் ஒரு முக்கியமான விஷயமா கோவாவுக்கு வந்திருக்கேன்" என்றான்.
சூர்யா, "ஓ... அப்படியா? சரி நான் விபிஷாகிட்ட வேற யாராவது மீட்டிங் அட்டென்ட் பண்ண சொல்லிடுகிறேன்" என்றான்.
விஜய் விபிஷா பெயரைக் கேட்டதும் துள்ளிக்குதித்து, "என்னடா சொல்ற..?" என்றான்.
சூர்யா, "அதான் உன்னால வர முடியாதுன்னு சொல்லிட்டல... உனக்கு எதுக்கு கஷ்டம்டா. நான் வேற யாருக்காவது இன்ஃபார்ம் பண்றேன்" என்றான்.
விஜய், "என்னடா மச்சான், உயிர் நண்பன் நான் இருக்கும் போது நீ வேற யார்கிட்டயும் உதவி கேட்க போற..." என்க,
சூர்யா, "டேய், அதான் நீங்க இல்லையே! கோவால இருக்கன்னு சொல்ற... அப்போ எனக்கு எப்படி உதவி பண்ண முடியும்?" என்றான்.
விஜய், "மச்சான், உன் காதுல அப்படியா விழுந்துச்சு.... உன் காதுல தப்பா விழுந்துருக்குடா... நான் வீட்ல உட்கார்ந்து பால்கோவா சாப்பிட்டுட்டு இருக்கேன்."
சூர்யா, 'வாடா மகனே! என்கிட்டயே பொய் சொல்றியா?' என நினைத்தவன், "இல்லடா, நீ கோவால இருக்கேன்னு சொன்ன மாதிரிதான் கேட்டுச்சு..." என்றான்.
விஜய், "டேய்! நான் சொன்னா நீ நம்ப மாட்டியா? இன்னும் பத்து நிமிஷத்துல நான் உன் ஆபீஸ்ல இருப்பேன்" என்றான்.
'அப்பாடா! அடிமை தானா வந்து தலையை நீட்டுது' என நினைத்தவன், "சரிடா... நீ சொன்ன பொய்யை நான் நம்பிட்டேன். இப்போ நீ ஆபீசுக்கு போ. . அங்க விகே கம்பெனியோட ஒரு மீட்டிங் இருக்கு. விபிஷாகிட்ட டீடெயில்ஸும் கேட்டுட்டு அதை அட்டென்ட் பண்ணிடு" என்றான்.
விஜய், "மச்சி, நீ கவலைப்படாதடா... நல்லபடியாக முடிச்சுடுவேன்" என்று காலை கட் செய்தான்.
சூர்யா அவர்களுக்கு முன்னாடி அந்த டெக்ஸ்டைல்ஸை அடைந்தான். நட்சத்திரா 'அப்பாடா! அவன் தொல்லை ஒழிந்தது' என மகிழ்ச்சியாக சென்றாள். கிஷோர் வந்த கார் வர, சூர்யா அவர்களைப் பார்த்து விட்டு, ஒரு சட்டையை பார்ப்பது போல் திரும்பி நின்று கொண்டான்.
ஆனால் கிஷோர் உள்ளே நுழைந்ததும் சூர்யாவை பார்த்து விட்டான். கிஷோர், "சூர்யா..." என்று அழைக்க, மொத்த குடும்பமும் சூர்யாவை தான் பார்த்தனர்.
கிஷோர், "டேய்! நீ இங்க என்ன பண்ற?" எனக் கேட்க, சூர்யா என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் முழித்தான்.
கவிதைகள் தொடரும்....
மக்களே! தாமதமான பதிவுக்கு மன்னிக்கவும். எனக்கு எழுத வரலைன்னு சொல்லிதான் நான் லேட்டா யூடி போடுறேன். சோ நல்லா என்னை என்கரேஜ் பண்ணுங்க... நல்லா கமெண்ட் பண்ணுங்க. முடிஞ்சா நாளைக்கு ஒரு யூடி தர ட்ரை பண்றேன்... 😍😍😍😍😍
 

Janu murugan

Moderator
Staff member
Jun 10, 2020
43
20
8
20
விழிகளிலே ஒரு கவிதை 11

கிஷோர், "டேய் சூர்யா, நீங்க என்ன பண்ற? உனக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்குனு சொன்ன..." என்று கேட்க, மொத்த குடும்பமுமே அவனை கேள்வியாக பார்த்தனர்.

சூர்யா, "கிஷோர், நீங்க எங்க இங்க? நீங்களும் இங்கதான் பர்சேஸ் பண்ண வந்தீங்களா?" என்று ஒன்றும் தெரியாதது போல கேட்க,

கிஷோர், "டேய், இது கடவுளுக்கே அடுக்காதுடா... நாங்க வரும்போதே இங்குதான் வரோம்னு சொன்னோம்..." என்றான்.

சூர்யா, "அப்படியா? நான் கவனிக்கலடா..." என்றான்.

கிஷோர், "டேய்! சீ கேவலமா நடிக்காத.." என்க, சூர்யா ஹிஹிஹி என இளித்தான்.

கிஷோர், "சிரிச்சு சமாளிக்காதடா... ஒழுங்கா நீ எதுக்கு வந்தன்னு சொல்லு..." என்றான்.

சூர்யா, 'இவன் விடமாட்டான் போல...' என நினைத்தவன், "அது.. அது வந்து..." என இழுக்க,

கிஷோர், "என்னடா இழுக்கிற... என்ன சொல்லி சமாளிக்கிறதுன்னு யோசிச்சிட்டு இருக்கியா?" என கேட்க,

சூர்யா, "யாரு சமாளிக்கிறது? நான் என்னோட கிளையண்ட்ஸ் மீட் பண்ண தான் போனேன். அவங்களுக்கு நம்ம டிரஸ் கல்ச்சர் எல்லாம் ரொம்ப புடிச்சிருக்குன்னு சொன்னாங்க. அதான் இந்த கடைக்கு ட்ரெஸ் வாங்க அவங்களை கூட்டிட்டு வந்தேன்..." என்றான்.

கிஷோர், "ஓ.. அப்படியா! எங்க அவங்கள எங்களுக்கும் கொஞ்சம் அறிமுகப்படுத்தி வைக்கலாம்ல..." என்றான்.

சூர்யா, 'ஐயோ! இவன் விடமாட்டான் போல...' என நினைத்தவன், "அது... அவங்க பர்சேஸ் பண்ணிட்டு கிளம்பிட்டாங்க..." என்றான்.

கிஷோர், "ஓ... கிளம்பிட்டீங்களா? சரி சரி.." என்றான்.

சூர்யா, 'அப்பாடா! நாம சொன்ன பொய்யை நம்பிட்டான்...' என நினைக்க,

கிஷோர், "அது எப்படி சூர்யா, நாங்க வீட்டுல இருந்து இங்க வர்றதுக்குள்ள நீ கிளையண்ட்ஸை மீட் பண்ணி, அவங்க உன்கிட்ட நம்ம கல்ச்சர் பிடிச்சிருக்குன்னு சொல்லி, நீ அவங்களை இங்க கூட்டிட்டு வந்து, டிரஸ் எடுத்து கொடுத்து அனுப்பி வச்சுட்ட..." என கேட்க,

சூர்யா, "ஆமாடா! நீ என்னமோ நான் சொல்றது எல்லாம் பொய் மாதிரியும், நான் உங்களுக்கு முன்னாடி வேகமா கார் ஓட்டிட்டு வந்துட்டு பொய் சொல்ற மாதிரியும் பாக்குற..." என்றான்.

கிஷோர், "ஓ... அப்படியா? இதுதான் உண்மையா?" என கேட்க,

சூர்யா, 'ஐயோ! உள்ளட்டோமே..' என நினைத்து விட்டு, பாவமாக ஷீலாவை பார்த்தான்.

ஷீலா, "டேய் கிஷோர், போதும்விடுடா... எவ்வளவு நேரம் நிக்க வைச்சு கேள்வி கேட்டுக்கிட்டு இருப்ப... நேரமாச்சு வாங்க நம்ம வந்த வேலையை பார்ப்போம்..." என்று கூற எல்லோரும் கடையின் உள்ளே சென்றனர்.

தாரா, "சூர்யா, இதுக்கு நீ எங்க கூடவே வந்து இருக்கலாம்.." என்று சிரிக்க, சூர்யா அசடு வழிந்தான். மைண்ட் வாய்ஸில் 'புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் என்ன வம்பு இழுக்கிறது வேலையா போச்சு..' என்று திட்டினான். நட்சத்திரா அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே சென்றாள்.

சிறிது நேரத்தில் ஹரிஷின் குடும்பம் வந்துவிட்டனர். ஹரிஷ் வந்தவுடன் சூர்யாவிடம், "என்ன மச்சான், ஃபாரின் கிளையண்ட்ஸை ரிசீவ் பண்ண போகலையா?" என்று கேட்டு சிரிக்க,

சூர்யா, "இப்போதானடா வந்த... அதுக்குள்ள எப்படிடா உனக்கு தெரிஞ்சது?" என கேட்டான்.

ஹரிஷ், "டேய், நீ எல்லாம் எந்த காலத்துல இருக்க... என் தங்கச்சி எனக்கு எல்லாத்தையும் லைவ் டெலிகாஸ்ட் பண்ணிட்டா... எல்லாம் டெக்னாலஜி டெவலப்மென்ட்.." என்று கூறி நட்சத்திராவும் ஹரிஷும் ஹைபை அடித்துக் கொண்டனர்.

சூர்யா மைண்ட் வாய்ஸில், 'ஆஹா! கூடிட்டாங்கய்யா ஒன்னு கூடிட்டாங்க..' என நினைத்தான்.

ஹரிஷ், "என்னடா, மனசுக்குள்ள எங்கள திட்றீயா?" என கேட்க,

சூர்யா, "சே சே உன்னைப்போய் திட்டுவேனா? நீ என் உயிர் நண்பனாச்சே..." என்றான்.

ஷீலா, "அங்க என்ன கதை பேசிட்டு இருக்கீங்க... அவங்க அவங்களுக்கு வேண்டும் என்றதை சீக்கிரம் எடுங்க... நகை எடுக்க வேற போகணும்.." என்றார்.

நட்சத்திர எல்லா சேலைகளையும் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்க, சூர்யா, "டார்லிங், அந்த மாம்பல கலர் சேலை உனக்க சூப்பரா இருக்கும்.." என்றான்.

நட்சத்திரா திரும்பி, "அந்த சேலையை மட்டும் நான் எடுக்க மாட்டேன். நீ சொல்லி நான் கேட்கணுமா? அக்கா அந்த பிங்க் கலர் சேலையை எடுங்க.." என்றாள்.

சூர்யா, 'ம்கூம் இவ நான் சொன்னா கேட்க மாட்டா...' என நினைத்து விட்டு திரும்பி வேடிக்கை பார்க்கத் துவங்கினான்.

விஜய் அவசர அவசரமாக கிளம்பி சூர்யாவின் அலுவலகத்திற்குச் சென்றான். சூர்யாவின் பிஏ விஜய்யை பார்த்ததும், "விஜய் சார், எம்.டி உங்ககிட்ட இந்த பைலை கொடுக்க சொன்னாரு... இன்னும் பதினைந்து நிமிடத்தில் மீட்டிங் ஆரம்பமாகப் போகிறது..." என்றான்.

விஜய், "ஓகே, நான் பார்த்துக்குறேன்... நீங்க போங்க..." என்றவன், 'விபிஷாகிட்ட தான இன்று சூர்யா எல்லா டீடெயில்ஸும் கொடுக்கிறேன்னு சொன்னான். எங்க ஆளையே காணோம்' என கண்களால் தேடினான். ஆனால் விபிஷா அவன் கண்ணில் படவே இல்லை. சரி வருவா.. என நினைத்து அந்த பைலை பார்க்க ஆரம்பித்தான்.

சிறிது நேரத்தில் சூர்யாவின் பீஏ வந்து, "சார், மீட்டிங்க்கு எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு... நீங்க வந்தா ஸ்டார்ட் பண்ணிடலாம்..." என்றான்.

விஜய், 'அவ எப்படியும் மீட்டிங்க்கு வருவா இல்ல... அப்போ பார்த்துக்கலாம்...' என நினைத்து மீட்டிங் ஹாலுக்கு சென்றான். அங்கே விபிஷாவைத் தவிர எல்லோரும் இருந்தனர்.

விஜய் இதற்கு மேலும் தாங்க மாட்டாமல் சூர்யாவின் பி.ஏவிடம், "விபிஷா எங்கே?" என்று கேட்டான். அதற்கு அவன் சொன்ன பதிலில் விஜய் ஆடி போய் விட்டான்.

சூர்யாவின் பி.ஏ, "சார் இன்னிக்கு விபிஷா வரலை. அவங்க ரெண்டு நாளைக்கு லீவு..." என்று ஒரு குண்டை தூக்கி போட்டான்.

விஜய், 'அட கருமம் புடிச்சவனே! உன்னை நம்பினேன் பாரு என்ன சொல்லணும்... என்னை ஏமாத்துறதையே உனக்கு வேலையா போச்சு... படுபாவி! இப்படி பாய்ண்ட் அவுட் பண்ணி பழிவாங்கிட்டியே! இருடா உனக்கு இருக்கு...' என மனதுக்குள் கருவிக் கொண்டவன், ஏமாற்றத்துடன் மீட்டிங்கை அட்டென்ட் செய்தான்.

சூர்யா சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க ஒரு பெண் சூர்யாவை பார்த்தாள். சூர்யா முதலில் வேறு எதையோ பார்க்கிறாள் என நினைத்துவிட்டு விட்டான்.

வெகுநேரம் அவனையே அந்த பெண் பார்க்க, அருகில் யாராவது உள்ளார்களா என தேட யாரும் இல்லை என உறுதிப்படுத்தியவன், 'டார்லிங் என்னையவே கலாய்க்கிறீயா? இரு நான் யாருன்னு காட்டுறேன்' என நினைத்தவன், "நட்சு..." என்று அழைத்து, என்னை பார்த்து என்ன சொன்ன? என் மூஞ்சிக்கு எந்த பொண்ணு ஓகே சொல்லாதுன்னு சொன்னேல... இப்ப பாரு, அங்க ஒரு பொண்ணு ரொம்ப நேரமா விடாமல் என்னைவே சைட் அடிச்சிட்டு இருக்கு... அந்த பொண்ணு இப்போ எப்படி கரெக்ட் பண்றேன்னு மட்டும் பாரு.." என்றான்.

நட்சத்திரா, 'ஒருவேளை கரெக்ட் பண்ணி விடுவானோ?' என பயந்தாள். ஆனால் அதே வெளியே காட்டாமல், "ஃபர்ஸ்ட் செஞ்சு காட்டு... அப்புறம் பேசு" என்றாள்.

சூர்யா, "நான் செய்றேன் பாரு..." என அந்த பெண்ணை நோக்கி சென்றான். அங்கே சென்றதும் அந்த பெண் சூர்யாவை பார்த்து புன்னகைத்தாள். சூர்யா, 'ஆஹா! ஓ.கே ஆகிடும் போல...' என நினைத்தவன் வாரணம் ஆயிரம் ஸ்டைலில், "ஹாய் மாலினி! இதை நான் உன்கிட்ட சொல்லியே ஆகணும்... நீ அவ்வளவு அழகு..." என ஆரம்பிக்க,

அந்த பெண், "ஐயோ! அண்ணா, என் பெயர் மாலினி இல்ல, ஷர்மிளா.." என்றாள்.

சூர்யா, "என்னது அண்ணாவா?" என கேட்க, இதைப் பார்த்துக் கொண்டிருந்த நட்சத்திராவிற்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை கையால் வாயை மூடிக்கொண்டு சிரித்தாள்.

ஷர்மிளா, "அண்ணா, என்னை தெரியலையா? நான் விஜய் அண்ணாவோட தங்கச்சி விமலாவோட பிரெண்ட். நம்ம கூட விஜய் அண்ணா வீட்டில் பேசி இருக்குமே!" என்றாள்.

சூர்யா காற்று போன பலூன் போல புஸ்ஸாகி, "ஓ.. அப்படியா! சரி மா..." என்றவன் சிறிது நேரம் பேசி விட்டு திரும்பியவன் நட்சத்திராவைப பார்க்க, நட்சத்திரா சிரிப்பை கட்டுப் படுத்திக் கொண்டிருப்பது தெரிய மைண்ட் வாய்ஸில் 'சூர்யா, இன்னைக்கு உனக்கு நேரமே சரியில்லைடா... இப்படி பல்பு வாங்கிட்டு இருக்கியே!' என தன்னைத்தானே நொந்துவன், 'எப்படியும் அங்கே போய் தானே ஆகணும். சரி சமாளிச்சுக்கலாம்...' என தனக்குதானே சமாதானம் கூறிக் கொண்டு நட்சத்திராவிடம் சென்றான்.

நட்சத்திரா அப்பெண் சூர்யாவை அண்ணா என்று அழைத்த பேதே ஹரீஷை கூப்பிட்டு விட்டாள். ஹரிஷும் நட்சத்திராவும் சூர்யாவைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தனர்.

சூர்யா அருகில் வந்ததும் நட்சத்திரா சூர்யாவைப் போலவே, "ஹாய் மாலினி! இதனால் சொல்லியே ஆகணும்... நீ அவ்வளவு அழகு.." என்க,

ஹரிஷ் அந்தப் பெண்ணைப் போலவே, "ஐயோ! அண்ணா, என் பெயர் மாலினி இல்லை, ஷர்மிளா..." என்றான். இருவரும் ஹைபை அடித்துக்கொண்டனர்.

சூர்யா, "சே! கிரேட் இன்சல்ட்..." என்றான்.

நட்சத்திரா, "ஏது கிரேட் இன்சல்ட்டா? சூர்யான்னு பேரு வெச்சா மட்டும் நீ வாரணம் ஆயிரம் சூர்யா ஆகிடுவியா?" என்றாள்.

ஹரிஷ், "அப்படி சொல்லுமா..." என்றான்.

சூரியா மனதிற்குள், 'ஃபர்ஸ்ட் பார்ட்ல டெரரா இருந்தாலும் அவ்ளோ கெத்தா இருந்த உன்னை இரண்டாவது பார்ட்ல ரொமாண்டிக்கா மாத்துரேன்னு இப்படி வெத்துவேட்டு ஆக்கிட்டாங்களே!' என மனதிற்குள் புலம்பினான்.

விடாமல் நட்சத்திராவும் ஹரிஷும் சூர்யாவை கலாய்த்துக் கொண்டு இருந்தனர். அந்த சமயம் பார்த்து விஜய் கொலைவெறியுடன் அந்த கடைக்குள் நுழைந்தான்.

விஜய்யை பார்த்து விட்டு சூர்யா, "என்ன ரெண்டு பேரும் சேர்ந்து கலாய்க்கிறீங்களா? உங்களை தட்டிக் கேட்க வந்துட்டான் என தளபதி.... பாருங்க அவன் உங்களை என்ன பண்ண போறான்னு பாருங்க..." என்றான்.

விஜய் சூர்யாவை முறைத்துக் கொண்டே அவனிடம் வந்தான். சூர்யா, "பாருங்க... என் தளபதியை" என்றவன் அவன் தோளில் கையை போட்டு, "மச்சான் இதுங்க ரெண்டும் என்ன கலாய்க்குதுங்கடா... இந்த அநியாயத்தை தட்டி கேளுடா..." என்றான்.

விஜய், "சீ! ஃபர்ஸ்ட் கையை எடுடா துரோகி..." என்றான்.

சூர்யா இதைக் கேட்டு அதிர்ரசியாகி நெஞ்சில் கைவைத்து, "நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது..." என கேட்க,

விஜய், "ஆமாடா! நான் தான் பேசுனேன்... உன்ன தான்டா... சூர்யா பேரு வச்சா நீ தளபதி சூர்யா ஆகிடுவியா? எப்ப பார்த்தாலும் என்ன ஏமாத்துறதையே வேலையா வச்சுருக்க..." என்றான் கட்டுக்கடங்காத கோபத்துடன்.

சூர்யா, "மச்சான், நான் என்னடா பண்ணேன்?" என கேட்க,

விஜய், "நீ என்னடா பண்ணல.. விபிஷா இன்னைக்கு ஆபீசுக்கே வரலையாம்.. ஏன்டா என்கிட்ட பொய் சொல்லி ஆஃபீசுக்கு அனுப்பின...?" என்றான்.

சூர்யா மைண்ட் வாய்ஸில், 'ஐயோ! இதை மறந்துட்டோமே...' என நினைத்து விட்டு, எதுவுமே தெரியாததுபோல, "என்னடா மச்சான் சொல்ற.... விபிஷா இன்னைக்கு லீவா? எனக்கு சத்தியமா தெரியாது.." என்றான்.

விஜய், "டேய் மட்டமா நடிக்காதடா... விபிஷா இன்னிக்கு வரலன்னு உனக்கு தெரியுங்குறது எனக்கு தெரியும்..." என்றான்.

சூர்யா 'இதற்கு மேல் நடிக்க முடியாது..' என நினைத்து, "சாரிடா மச்சான், ஏதோ ஒரு ஞாபகத்துல சொல்லிட்டேன்.." என்றான்.

விஜய், "நீ வேணும்னு தான்டா பண்ணி இருக்க... என்கூட பேசாத டா.." என்றவன், "நான் தான்டா உனக்கு இனிமேல் எதிரி.." என்றான்.

இதை பார்த்துக்கொண்டிருந்த ஹரிஷும் நட்சத்திராவும் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்து விட்டனர். இதற்கிடையில் அந்த ஷர்மிளா விஜயை நோக்கி வர, சூர்யா அதைப் பார்த்துவிட்டு திருட்டு முழி முழித்துக் கொண்டிருந்தான்.

நட்சத்திரா அதை கவனித்து விட்டு, 'என்ன இவன் இந்த முழி முழிக்கிறான். சரி இல்லையே!' என நினைத்து அவன் பார்வை சென்ற பக்கம் பார்க்க, ஷர்மிளா வருவதை பார்த்து விட்டாள்.

நட்சத்திரா மைண்ட் வாய்ஸில், 'இவனை கோர்த்து விட இன்னொரு வாய்ப்பு கிடைச்சிருக்கு... விட்றாத நஞ்சு..' என நினைத்தவள், "விஜய் அண்ணா, அந்த பொண்ணு உங்கள பார்த்து தான் வருது..." என்றாள்.

சூர்யா, 'சமயம் பார்த்து போட்டு கொடுத்துட்டா..' என நினைக்க, விஜய் அவளைப் பார்த்துவிட்டு, "ஹாய் ஷர்மிளா, என்ன இந்த பக்கம்?" என கேட்க,

ஷர்மிளா, "பாட்டிகூட ஷாப்பிங் வந்தேன் அண்ணா..." என்றாள்.

விஜய் சூர்யாவிடம், "டேய் மச்சான், ஷர்மிளாவை தெரியுதா? நம்ம விமலாவோட ப்ரண்ட். நீ கூட பேசி இருக்கியே!" என்க,

சூர்யா தெரியுது என தலையாட்டிவிட்டு, "ம்ம்... தெரியுது" என புன்னகைத்தான்.

ஷர்மிளா, "ஏன் தெரியாம, இப்ப கூட கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, ஹாய் மாலினி இதை நான் உன்கிட்ட சொல்லியே ஆகணும்னு... வாரணமாயிரம் டயலாக் பேசி மொக்கை வாங்கினாரே!" என கூறி சிரித்தாள்.

விஜய் அதிர்ச்சியாகி சூர்யாவை பார்க்க அவன் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டான்.

விஜய் ஷர்மிளாவிடம், "ம்கூம்... கண்டிப்பா என் சூர்யா அப்படி பேசி இருக்க மாட்டான். அவனை பத்தி எனக்கு நல்லா தெரியும். அவன் வேற ஏதாவது தப்பு பண்ணுனான்னு சொன்னா கூட நான் நம்புவேன். சூர்யான்னா என்னன்னு தெரியுமா? நட்புனா என்னனு தெரியுமா? என டயலாக் பேசினான்.

சூர்யா மைண்ட் வாய்ஸில், 'சரியான டயலாக் தப்பா நேரத்துல பேசுறானே!' என நினைத்து திருட்டு முழி முழித்தான்.


கவிதைகள் தொடரும்....
 

Janu murugan

Moderator
Staff member
Jun 10, 2020
43
20
8
20
விழிகளிலே ஒரு கவிதை 12

சூர்யா மைண்ட் வாய்ஸில், 'ஐயையோ! சரியான டயலாக்க தப்பான நேரத்தில் பேசுறானே!' என நினைத்தான்.
விஜய் மூச்சுவிடாமல் டயலாக் பேசிக் கொண்டிருக்க நட்சத்திரா, "அண்ணா! அண்ணா! கொஞ்சம் பொறுமை, மூச்சு வாங்குது பாருங்க..." என்றவள், "நாங்க சொல்வது உண்மையா இல்லையான்னு உங்க தளபதி சூர்யா கிட்ட கேளுங்க...." என்றாள்.
விஜய், "அதற்கெல்லாம் அவசியம் இல்லையே! என் சூர்யாவை பத்தி எனக்கு தெரியும்..." என்றான்.
சூர்யா 'இவன் ஓவரா பில்டப் கொடுக்கிறானே! உண்மை தெரிஞ்சா அவ்வளவுதான். பேசாமல் நாமலே சொல்லிவிடுவோம்' என்று நினைத்தவன், "மச்சான், நான் சொல்றதை கேளு டா..." என்றான்.
விஜய், "மச்சான், நீ எதுவும் விளக்கம் சொல்ல தேவை இல்லை. உன்னை இப்படி இக்கட்டான சூழ்நிலையில் நான் நிற்க வைத்தது நினைச்சா எனக்கே ரொம்ப அசிங்கமா இருக்கு..." என்றான். உண்மையான வருத்தத்துடன்.
இதைக் கேட்டு நட்சத்திரா கடுப்பாகிவிட்டாள். "அண்ணானு கூட பார்க்க மாட்டேன். ஏதாவது சொல்லிட்ப போறேன்..." என்க,
விஜய் ஷாக்காகி, "தங்கச்சிமா! அண்ணனை பார்த்து இப்படி பேசுறியே!" என்றான்.
நட்சத்திரா, "இன்னும் கொஞ்ச நேரம் விட்டா இதுக்கு மேலயும் பேசுவேன். அவர் சொல்ல வருவதை முதல்ல கேளுங்க..." என்றாள்.
சூர்யா, "மச்சான், அவங்க சொல்றது எல்லாம் உண்மை தான் டா..." என்றான்.
விஜய் பேரதிர்ச்சியாகி, "மச்சான், நீயா இப்படி பண்ண?" எனக் கேட்டான். சூர்யா அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு ஆமாம் என்று தலையை ஆட்டினான்.
விஜய், "ஏன்டா இப்படி பண்ண?" என்று கேட்க,
நட்சத்திரா, "அண்ணா, நான் சொல்றேன்..." என்றாள் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு.
சூர்யா 'ஆஹா! நம்மள கோர்த்துவிட ஏதோ பிளான் பண்ணிட்டா...' என நினைத்தவன், "மச்சான், நான் சொல்றேன்..." என்றான்.
விஜய், "சூர்யா, நீ எப்ப இந்த மாதிரி வேலைபண்ணியோ அப்பவே நீ பேசுறத நான் நம்பக்கூடாதுனு முடிவு பண்ணிட்டேன்...." என்றவன் நட்சத்திரிவிடம், "நீ சொல்லு மா...." என்றான்.
நட்சத்திரா முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு, "அண்ணா, அவருக்கு என்ன பிடிக்கலையாம். நான் அவருக்கு போர் அடிச்சிட்டேனாம். அப்படித்தான் சொல்லிட்டு இருந்தாரு.... இன்னைக்கு வேற ஏதோ ஃபாரின் கிளையண்ட்ஸ் வராங்க என்று சொல்லி எங்க கூட நிச்சயதார்த்தத்திற்கு புடவை எடுக்க கூட வரலை. அந்த பாரின் கிளையண்ட்ஸை ரிசீவ் பண்ண போயிட்டாரு... நீங்க வேணா ஹரிஷ் அண்ணா கிட்ட கேட்டு பாருங்க...." என்றாள்.
ஹரிஷ், "ஆமா! இவன் எங்க கூட வர மாட்டேன்னு சொல்லிட்டு, அப்போ ஃபாரின் கிளையண்ட்ஸை மீட் பண்ண போய்ட்டான்...." என்றான்.
நட்சத்திரா, "அந்த ஃபாரின் கிளையண்ட்ஸ்ல ஒரு பொண்ணு அழகா இருக்காம். அந்த பொண்ணை அவருக்கு ரொம்ப பிடிச்சு இருக்காம். அதனால என்ன விவாகரத்து பண்ணிட்டு அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்க போறேன் என்று என்கிட்ட சொல்லீட்டாரு.... நான் ஒத்துக்கல, அதான் என்ன வெறுப்பேத்துறதுக்காக அந்த பொண்ணுகிட்ட போய் இப்படி பேசி இருக்காரு.... நானே கோபப்பட்டு இவர் கூட வாழ மாட்டேன்னு சொல்லிவிடுவேனாம்..." என்றாள்.
இதை கேட்டு விஜய் சூர்யாவை முறைக்க, சூர்யா, "மச்சான், அவ பொய் சொல்றா வாய்க்கு வந்ததை அள்ளி விடுறா... உனக்கு தான் அவளை பத்தி முன்னாடியே தெரியுமே! உன்கிட்டயே எவ்வளவு பொய் சொல்லி இருக்கா..." என்க, விஜய் அவன் சொல்வது உண்மைதான் என்பதால் நட்சத்திராவைப் பார்த்தான்.
நட்சத்திரா, "அண்ணா, நான் சொல்றத நம்ப மாட்டீங்களா?" என்றவள் சென்று கிஷோரை அழைத்து வந்தாள்.
சூர்யா 'இவனை எனக்கு எதுக்கு கூட்டிட்டு வர்றா... இவன் சும்மாவே நம்ம இமேஜை டேமேஜ் பண்ணுவான்' என நினைக்க,
நச்சத்திரா கிஷோரிடம், "இவர் காலையிலேயே என்ன சொன்னாரு மாமா? நாம துணிக்கடைக்கு கூப்பிடும்போது..." எனக்கேட்டாள்.
கிஷோர், "யாரோ முக்கியமான ஃபாரின் கிளையண்ட்ஸை மீட் பண்ணனும் சொன்னான். அம்மா கூட கல்யாணத்துக்கு ட்ரெஸ் எடுக்க எவ்வளவோ கூப்பிட்டாங்க. இவன் வரமாட்டேன்னு சொல்லிட்டான்..." என்றான்.
நட்சத்திரா, பார்த்தீங்களா அண்ணா.. என்று கண்ணை காட்டினாள்.
சூர்யா, 'ஆஹா! நம்ம சொன்ன பொய் நமக்கே வினை ஆகிடுச்சே!' என நினைத்தவன், "மச்சான், அப்படி சொன்னது உண்மைதான். ஆனால் நான் அங்க போகாம இங்க வந்துட்டேன்..." என்றான்.
கிஷோர், "டேய் சூர்யா, அவங்கள ரிசீவ் பண்ணிட்டு அவங்ககூட பர்ச்சேஸ் பண்ண இங்க கூட்டிட்டு வந்து அப்போது தான் எதேர்ச்ஞையா எங்களை பார்த்தேன்னு சொன்ன....?" என கேட்க, சூர்யா 'அவ்வளவுதான் சோலி முடிஞ்சது...' என நினைத்தான்.
தாரா, "என்னங்க, இங்க வாங்க..." என அழைக்க,
கிஷோர், "ஒரு நிமிஷம், வந்துவிடுறேன்..." என்று கூற,
சூர்யா 'போ அதான் வந்த வேலையை கரெக்டா பார்த்துட்டியே!' என்று நினைத்தான்.
விஜய், "மச்சான், நீ இப்படி மாறுவன்னு நான் கனவுல கூட நினைக்கலை. உன்னை என் ஃப்ரெண்ட்னு சொல்லவே எனக்கு பிடிக்கலை. என் தங்கச்சி எவ்வளவு தூரம் துரத்தி துரத்தி உன்னை காதலிச்சா... அவளுக்கு போய் துரோகம் பண்ண உனக்கு எப்படி மனசு வந்தது?" என திட்ட,
சூர்யா, 'இன்னைக்கு தான் என் வாழ்க்கையில சிறந்த நாள் போல? இப்படி மொத்தமா எல்லாத்தையும் வாங்குறோம்...' என நினைக்க, நட்சத்திராவும் ஹரீஷூம் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர்.
அவர்கள் இப்படி சிரிப்பதைப் பார்த்து கடுப்பான சூர்யா மைண்ட் வாய்ஸில் 'சூர்யா எவ்வளவு அடி வாங்கினாலும் சோர்ந்து போய் விடக்கூடாது. திருப்பி அடிடா...' என்று தனக்குத்தானே கூறிக் கொண்டவன்,
விஜயிடம், "மச்சான், நீ சொன்னதை கேட்டு என் தப்பை நான் உணர்ந்துவிட்டேன். இனிமேல் நட்சத்திராவுக்கு கனவுல கூட நான் துரோகம் பண்ண மாட்டேன். அவளை நல்லா பார்த்துக்கறேன்..." என்றவன் நட்சத்திராவின் கையைப் பிடித்துக் கொண்டான்.
நட்சத்திரா 'என்னடா இது பிளேட்டையே திருப்பி போடுறான்...' என வாயை பிளந்து பார்க்க சூர்யா அவளை பார்த்து கண்ணடித்தான்..
விஜய், "நட்சத்திரா, என் சூர்யாவை பத்தி எனக்கு நல்லா தெரியும். அவன் ஏதோ புத்தி மாறி இப்படி நடந்துகிட்டான். அவன் இனிமேல் உன்ன நல்லா பாத்துப்பான். அவனுக்கு உன்ன ரொம்ப பிடிக்கும். நீ கவலை படாதே!" என்றான்.
நட்சத்திரா 'இந்த ஜென்மத்துல இவருக்கு லவ் செட் ஆகாது. விபிஷா இவர கட்டிக்கிட்டு என்ன பாடு பட போறாளோ?' என நினைத்தவள் தலையை மட்டும் ஆட்டினாள்.
நட்சத்திராவின் முகத்தை பார்த்த விஜய், "தங்கச்சிமா, நீ ஒன்னும் கவலைப்படாத! அவன் உன்னை விட்டு அங்க இங்கன்னு எங்காவது நகர்ந்தால் என் கிட்ட சொல்லு, நான் பார்த்துக்குறேன்..." என்றான்.
நடசத்திரா, 'இந்த அர லூசு கிட்ட பஞ்சாயத்து பண்ணது என் தப்புதான்' என நினைத்தவள், "சரிங்க அண்ணா..." என்றாள்.
சூர்யா, "மச்சான், இனிமேல் நட்சத்திராவை விட்டு நான் எங்கேயும் போகமாட்டேன்..." என அவள் தோளில் கையை போட்டு கொண்டான். நட்சத்திராதான் கூச்சத்தில் நெளிந்தாள்.
ஹரிஷ் 'இப்படி மாட்டிகிட்டாளே என் தங்கச்சி' என நினைத்து பார்த்தான்.
நட்சத்திரா 'எப்படியாவது காப்பாத்துங்க அண்ணா...' என்று கண்களாலே இறைஞ்ச, ஹரிஷ் 'அண்ணன் இருக்க பயமேன்?' என்றவன், "தங்கச்சிமா அண்ணாக்கு ஃபுளூ கலர் சட்டை செலக்ட் பண்ணி தரேன்னு சொன்ன வா போகலாம்..." என கேட்க,
நட்சத்திரா, "இதோ வரேன் அண்ணா..." என்று விலக பார்க்க, சூர்யா அவளை விடாமல் இறுக்கிப் பிடித்துக் கொண்டவன், ஹரிஷிடம், "ஏன்டா, ஃபுளூ கலர் சட்டையை கூட உன்னால செலக்ட் பண்ண முடியாதா?" என கேட்க,
ஹரிஷ், "என்னடா மச்சான் இப்படி கேட்டுட்ட.... ப்ளூ கலர் என்ன சும்மாவா? அதுல எத்தனை வெரைட்டி இருக்கு... நேவி ப்ளூ, டார்க் ப்ளூ, லைட் ப்ளூ, ஸ்கை ப்ளூ என நிறைய இருக்கு. இதுல ஒரு நல்ல கலரா எனக்கு சூட் ஆகுற மாதிரி தங்கச்சி எடுத்து தருவா..." என்றான்.
சூர்யா, "ஓ அப்படியா! நிச்சயதார்த்தத்துக்கு ரேஷ்மாவை கூப்பிடலாம் இருக்கேன்..." என்றான்.
ரேஷ்மாவின் பெயரை கேட்டதும் ஹரிஷ் ஆர்வமாக, "உண்மையாவா?" என கேட்க,
சூர்யா, "உண்மைதான், நான் கூப்பிட்டா அவ கண்டிப்பா வருவா..." என்றான்.
ஹரிஷ், "சரிடா மச்சான் நீ தங்கச்சி கூட போய் உனக்கு பிடிச்சதை செலக்ட் பண்ணு. புதுசா கல்யாணம் ஆனவங்க தனியா இருக்கணும் ஆசைப்படுவீங்க இப்ப என்ன ப்ளூ கலர் சட்டை இல்லனா பச்சை கலர் சட்டை போட்டுக்கிறேன்..." என்றான்.
நட்சத்திரா 'அடப்பாவி! அண்ணா, இப்படி கவுத்திட்டியே! பச்சை சட்டை எடுக்கப் போறியா? அப்படியே அதை போட்டுகிட்டு பைத்தியக்கார ஹாஸ்பிடல்ல போய் உட்கார்ந்துக்கோ...' என மனதிற்குள் வசைபாடினாள்.
சூர்யா இதுதான் சாக்கென்று நட்சத்திராவை தன்னுடனேயே இருக்க வைத்துக் கொண்டவன், "டார்லிங், அந்த சேலை உனக்கு நல்லா இருக்கும் இந்த சேலை உனக்கு நல்லா இருக்கும்..." என்று அவள் உயிரை எடுத்து விட்டான்.
பெரியவர்களும் புதிதாக கல்யாணம் ஆனவர்கள் என்று அவர்களை கண்டுகொள்ளவில்லை. விஜய் சூர்யாவிடம், "மச்சான், நான் சொன்ன ஒரு வார்த்தைக்காக என் தங்கச்சியை எவ்வளவு நல்லா பார்த்துகிற... நீ தளபதி சூர்யாவை மிஞ்சிட்டடா... நீ என் தளபதி டா..." என்று கூறினான்.
சூர்யா நட்சத்திராவிடம், "எப்படி பார்த்தியா?" என்று காலரை தூக்கினான்.
விஜய் நட்சத்திராவிடம், "தங்கச்சிமா, ஒரு அண்ணனுக்கு இதை விட என்ன வேணும். என் மச்சான் உன்னை உள்ளங்கைல வச்சு தாங்குறான் என்று பாசமலர் ரேஞ்சுக்கு டையலாக் பேச, நட்சத்திரா இப்படி பைத்தியக்கார கும்பல் கிட்ட மாட்டிக்கிட்டோமே!' என தன்னையே நொந்து கொண்டாள்.

கவிதைகள் தொடரும்....
 
Need a gift idea? How about a dinosaur night light?
Buy it!

Latest