விழிகளிலே ஒரு கவிதை

Janu murugan

Moderator
Staff member
Jun 10, 2020
43
20
8
20
பதிப்புரிமை © 2020 by Aruna © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.


இந்த வெளியீட்டில் எந்த பகுதியும் வெளியீட்டாளர் ஆகிய என் அனுமதி இன்றி புகைப்பட நகல், e- புக், PDF, போன்ற எந்த வடிவத்திலும் பதிவு செய்தல் அல்லது பிற மின்னணு அல்லது இயந்திரம் முறைகள் உட்பட எந்த வகையிலும் இனப்பெருக்கம் செய்யவும் விநியோகிக்க அல்லது கடத்தக் கூடாது மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்....கதையில் குறிப்பிட்டுள்ள கதாபாத்திரங்கள் இடங்கள் மற்றும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. உண்மையான நபர்கள் அல்லது நிஜவாழ்க்கை நிறுவனங்களுடன் எந்த ஒற்றுமையும் முற்றிலும் தற்செயலானது. இந்த படத்தில் தோன்றும் அனைத்து கதாபாத்திரங்களும் பிற நிறுவனங்களுக்கும் கற்பனையானவை. உண்மையான நபர்கள் இறந்தவர்கள் அல்லது உயிருடன் இருப்பவர்கள் அல்லது கடந்தகால அல்லது நிகழ்காலம் நிஜவாழ்க்கை நிறுவனங்களுடன் எந்த ஒரு ஒற்றுமையும் முற்றிலும் தற்செயலானது.....copyright © 2020 by Aruna.


All rights reserved.

No part of this Publication may be reproduced, distributed or transmitted in any form of are by any means including photo copying, recording or other electronic or mechanical method or without the Prior written permission of the publisher. In the event of violation I will notify you that proper action will be taken. Any resemblance to real persons are other real life entities is purely coincidental . All characters and other entities appearing in this work are fictitious. Any resembles to real persons dead or alive or other real life in entities past and present is purely coincidental....


View attachment ei5KHV832367.jpg


" கௌசல்யா ஸூப்ரஜா ராம பூர்வாஸம்தாயா ப்ரவர்ததே".....
என காலையில் சுப்ரபாதம் ரேடியோவில் பாடிக்கொண்டிருக்க மல்லிகா, "தாரிகா எழுந்திரு" என தன் சுப்ரபாதத்தை பாடிக்கொண்டிருந்தார். மல்லிகா, "இப்போ எழுந்திருக்க போறியா? இல்லையா?. உன்னை விட சின்னவ நட்சத்திரா. அவளே இவ்வளோ சீக்கிரம் எழுந்து குளிச்சு காலேஜுக்கு கிளம்பிட்டா" என கத்திக் கொண்டிருந்தார்.....
தாரிகா அவர் பாடிய சுப்ரபாதத்தில் கடுப்பாகி எழுந்து, "அம்மா அவ சீக்கிரம் கிளம்பி எதுக்குப் போறானு தெரியுமா?" என்றாள்......நட்சத்திரா ஓடி வந்து அவள் வாயை பொத்தி, "அம்மா ஏன்மா அக்காவை திட்ற. அவள் வேலைக்கு போயிட்டு வந்து டயர்ட்ல தூங்குகுறா" என்றாள். மல்லிகா, "நட்சத்திரா நீ அவளுக்கு சப்போர்ட் பண்ணாமல் போ சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பு" என்று கிச்சனுக்கு சென்றார்......நட்சத்திரா தாரிகாவிடம் "ஏன்டி எருமை, உன்னை நான் என் அக்காவாவா நினச்சு பழகுனேனா? ஒரு ஃபிரண்டா நினச்சு தான் எல்லாத்தையும் சொன்னேன். ஆனால் நீ இப்படி போட்டு கொடுக்குறீயே" என்றாள்.....தாரிகா, "அம்மா என்னை திட்டிட்டே இருக்காங்க. நீ இங்க மேக்கப் போட்டுட்டு உன் ஆளைப் பார்க்க கிளம்புறீயா?" என்றாள். நட்சத்திரா, ஹிஹிஹி என அசடு வழிந்தாள். தாரிகா "போதும் போதும் ரொம்ப வழியாத கிளம்பு" என்றாள்.....நட்சத்திரா வேகமாக இரண்டு இட்லியை விழுங்கிவிட்டு தன் தந்தை சந்திரசேகரிடமும் தாய் மல்லிகாவிடமும் சொல்லிவிட்டு தன் ஸ்கூட்டியில் பறந்துவிட்டாள்.....


சந்திரசேகர், ஒரு பிரைவேட் பேங்க் எம்ப்ளாயி. மல்லிகா ஹவுஸ் வைஃப். சந்திரசேகரின் பெரிய மகள் தாரிகா, இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஒரு பிரபல தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறாள். நட்சத்திரா இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாள்......


நட்சத்திரா கல்லூரிக்குள் நுழைந்ததும் தன் நண்பர்கள் அமர்ந்து அரட்டை அடிக்கும் இடத்திற்கு சென்று தன் தோழி விபிஷாவிடம், "விபி என்ன வந்துட்டானா?" எனக் கேட்க அவள் இல்லை என உதட்டை பிதுக்கினாள்......நட்சத்திரா தலையை யாரோ தட்ட திரும்பிப்பார்க்க சதீஷ், "ஐ.டி டிபார்ட்மெண்ட் பக்கத்தில உன் ஆளு நிற்கிறான்" எனக் கூற, நட்சத்திரா வேகவேகமாக நடந்து ஐ.டி டிபார்ட்மென்ட்டை அடைந்தாள்.....அங்கே தூரத்தில் சூர்யபிரகாஷ் தன் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தான். அதை பார்த்ததும் நட்சத்திரா அப்படியே சிலையாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.....விபிஷா, "நட்சத்திரா கிளாஸ்க்கு டைம் ஆயிடுச்சு. நீ சைட் அடித்தது போதும் வா போலாம்" என்றாள். நட்சத்திராவிற்கு அவள் சொல்வது எதுவுமே காதில் விழவில்லை. அவள் மெய் மறந்து சூர்யாவையே பார்த்து கொண்டிருந்தாள்......அங்கே சூர்யாவிடம் பேசிக்கொண்டிருந்த விஜய், "மச்சி உன் ஆளு வந்துட்டாடா" என்றான். சூர்யா அவனை முறைத்து, "உனக்கு எத்தனை தடவை சொல்றது. அவளை என் ஆளுன்னு சொல்லாதன்னு" என்றான்.....விஜய், "ஏன்டா மச்சான், அவளும் உன் பின்னாடி இரண்டு வருஷமா சுத்துறா. நீயும் கண்டுக்குற மாதிரி தெரியலையே? நான் நினைக்கிறேன், அவ உன்னை பார்த்தே கரைச்சிடுவா போல" என்றான். சூர்யா அவளை திரும்பிக்கூட பார்க்கவில்லை.....விபிஷா நட்சத்திராவிடம், "ஏன்டி அவன் உன்னை கண்டுக்க கூட மாட்றான். ஆனால் நீயும் வெட்கமே இல்லாம இரண்டு வருஷமா அவன் பின்னாடியே சுத்துற. அப்படி என்னதான் அந்த சிடுமூஞ்சி கிட்ட இருக்கோ?" என்று கூறினாள். ஆனால் நட்சத்திரா அதையெல்லாம் காதில் வாங்கவே இல்லை. நட்சத்திரா இன்னும் சூர்யாவை தான் சைட் அடித்தக் கொண்டிருந்தாள்.....விபிஷா, 'இவ இப்படி சொன்னா கேட்கவேமாட்டா' என நினைத்து, அவளை இழுத்துச் சென்றாள். கிளாஸில் ப்ரொஃபஸர் பாடம் எடுத்துக் கொண்டிருக்க நட்சத்திரா தன் கையில் நோட்டை வைத்து வித விதமான கோணத்தில் திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டிருந்தாள்.......விபிஷா சதீஷிடம், "மச்சி இவ ஏன் இப்போ நோட்டை வைத்து வட்டம் போட்றா?" என்றாள். சதீஷ் அந்த நோட்டை எட்டிப்பார்த்து விபிஷாவிடம், "மச்சி அவ அந்த சூர்யா போட்டோவ தான் வச்சு பார்த்துட்டு இருக்கா" என்றான். இதைக் கேட்ட விபிஷா தலையில் அடித்துக் கொண்டாள். கிளாஸ் முடிந்து எல்லோரும் கிளம்பினார்கள். நட்சத்திரா சூர்யாவை பார்த்து விட்டு கிளம்ப மனமே இல்லாமல் கிளம்பினாள்........சூர்யா வீட்டிற்குள் நுழைந்ததும், "அம்மா... என அழைக்க சூர்யாவின் தந்தை ரவிசங்கர், "என்னடா சூர்யா? இன்னைக்காவது நீ கமிட் ஆயிட்டேன்னு ஒரு நல்ல செய்தியை சொல்லுவியா?" என்றார் . "அப்பா.... என்று அவன் முறைக்க ரவிசங்கர், "ஏன்டா முறைக்கிற?. சின்ன வயசுல இருந்து என் லவ் ஸ்டோரி சொல்லி சொல்லி உன்ன வளர்த்தேனே, எதுக்கு நீ யாரையாவது லவ் பண்ணுவேன்னு தான். ஆனா நீ காலேஜே முடிக்கப் போற, இன்னும் கமிட்டான பாடுதான் இல்லை" என்றார்.சூர்யா, "ஏன்பா எப்ப பார்த்தாலும் என்ன லவ் பண்ண சொல்லி டார்ச்சர் பண்றீங்க. எனக்குதான் பொண்ணுங்களே பிடிக்காதுன்னு உங்களுக்கு தெரியாதா?" என்றான்.....கையில் காபியோடு வந்த சூர்யாவின் தாய் ஷீலா, "ஏங்க வந்ததும் வராததுமா அவனை வம்பு இழுக்குறீங்க என்றவர், சூர்யாவிடம் ஏன்டா சூர்யா நீதான் யாரையாவது லவ் பண்ணேன்டா. எவ்வளவு நாள்தான் சிங்கிளாவே இருப்ப?" என்றார். சூர்யா, "அம்மா, நீங்களுமா?" என சிணுங்கிக் கொண்டே காபி கப்புடன் தன் ரூமிற்கு சென்றான்........இங்கே வீட்டுக்கு வந்த நட்சத்திரா 'ஐயோ என் பேபி இன்னைக்கு ப்ளூ கலர் சட்டைல எவ்ளோ அழகா இருந்தான். என்னால கண்ணை எடுக்கவே முடியல அவன்கிட்ட இருந்து' என தனக்கு தானே புலம்பிக் கொண்டிருந்தாள்......அவளுக்கு காபி கொடுத்த மல்லிகா, "என்னடி தனியா புலம்பிட்டு இருக்க?" என்றார். நட்சத்திரா, "ஒன்றும் இல்லைமா" என்று முழித்தாள். மல்லிகா, "என்னவோ போ கொஞ்ச நாளா நீ ஆளே சரியில்லை, மந்திரிச்சு விட்ட மாதிரி திரியிற" எனக் கூறிவிட்டு சென்றார்.......நட்சத்திரா கண்ணாடி முன் நின்று, "ஏய் நட்சு நீ லூசாகிட்டடி அவன் நினப்புல. பாரு அம்மா உன்னை என்ன சொல்லி விட்டு போறாங்கன்னு. டேய் சூர்யா ராஸ்கல் என்ன என்னடா பண்ண? நான் உன் பின்னாடி இப்படி லூசு மாதிரி சுத்திட்டு இருக்கேன். காலேஜே என்னை ஒருமாதிரி பார்க்குது" எனக் கூறி கண்ணாடியை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.......

சூர்யா, 'இந்த நட்சத்திரா ஏன் இப்படி லூசு மாதிரி என் பின்னாடி சுத்திட்டு இருக்கா. அவளை கூப்பிட்டு கண்டிச்சு வைக்கணும். வரவர ரொம்ப ஓவரா போயிட்டு இருக்கா' என நினைத்துக் கொண்டிருந்தான்......மறுநாள் வழக்கம்போல சீக்கிரமாவே காலேஜுக்கு கிளம்பி சென்றாள் நட்சத்திரா. இன்னும் சூர்யா வராது இருப்பதை தன் நண்பர்கள் மூலம் அறிந்தவள், அவன் எப்போதும் அமரும் இடம் சென்று அங்கே அமர்ந்தவள், 'அவன் உட்கார்ந்த இடமே இவ்வளவு சந்தோஷத்தை எனக்கு கொடுக்குது. அவன் என் கிட்ட பேசினா எப்படி இருக்கும்' என அவள் யோசித்துக் கொண்டிருந்தாள்.....விபிஷா ஓடி வந்து, "உன் ஆளு வந்துட்டான் வாடி" என அவளை இழுத்துச் சென்றாள். சூர்யா தன் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான். நட்சத்திரா வழக்கம்போல சூர்யாவை கண்களால் பருகிக் கொண்டிருந்தாள்......சூர்யா, "விஜய் அவளை கூப்பிட்டு கண்டிச்சு வைடா. வர வர ரொம்ப ஓவரா போறாள். இவ அட்டகாசத்தால் எல்லோரும் என்னை ஒரு மாதிரியா பாக்குறாங்க" என்றான்.....விஜய் நட்சத்திராவை பார்த்து இங்கே வா என சைகை செய்தான். நட்சத்திரா வேற யாரையோவா? என நினைத்து திரும்பிப்பார்க்க விஜய், "உன்னதா வா இங்கே" என்றான்......நட்சத்திரா விபிஷாவைப் பார்க்க அவள் "நான் சொல்ல சொல்ல கேட்காம அவனை சைட் அடிச்சேல, போ போய் வாங்கி கட்டிக்க" என்றாள். நட்சத்திரா என்ன வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டு அங்கே சென்றாள்......அவள் சூர்யாவை பார்த்துவிட்டு அப்படியே உறைந்து விட்டாள். அவனையே ரசித்து கொண்டு இருந்தாள். ஆறடி உயரம், சிறிய கண்கள், கூர்மையான நாசி, சிகரெட் பிடிக்காததால் சிவந்த உதடுகள், பிளாக் கலர் சட்டை , ஜீன்ஸ் பேண்ட் என அவனை அணு அணுவாக ரசித்துக் கொண்டிருந்தாள்......

சூர்யா இவளை பார்க்கக்கூட இல்லை . விஜய் அவளிடம், "இனிமேல் அங்க இங்கன்னு நின்னுட்டு இவனை பார்க்கக்கூடாது" என அவன் கூறிக் கொண்டிருக்க அவள் சூர்யாவை ரசித்துக்கொண்டிருந்தாள்.....இதை பார்த்து கடுப்பான விஜய், "மச்சான் நீ இருக்க வரைக்கும் இவ நான் சொல்றதை கேட்க மாட்ட. நீ கிளம்பு இவளை நான் பார்த்துக்குறேன்" என்றான்......சூர்யா கிளம்பி போக அவன் உருவம் மறையும் வரை அங்கேயே நட்சத்திரா பார்த்துக்கொண்டிருந்தாள். விஜய், "ஏம்மா நட்சத்திரா" என சத்தமாக அழைக்கச் சுயநினைவு பெற்றவள், "சொல்லுங்க சீனியர்" என்றாள்......

விஜய், "இவ்வளவு நேரம் நான் பேசுனது உன் காதுல விழுந்துச்சா?" என்றான். நட்சத்திரா திருட்டு முழி முழிக்க....விஜய், "நீ முழிக்குறதிலயே தெரியுது. நீ எதையும் கவனிக்கலன்னு. இனிமே நீ சூர்யா பின்னாடி சுத்துறத நிறுத்தனும். நீ இப்படி பண்றது அவனுக்கு பிடிக்கலையாம்" என்றான்.....


நட்சத்திரா, "ஓகே சீனியர், நீங்க சொன்னதை நான் கேட்கிறேன்" தலையை ஆட்டினாள். விஜய், 'என்ன சொன்னதும் ஓகே சொல்லிட்டா' என நினைத்து விட்டு, "சரி நீ கிளம்பு நான் சொன்னது ஞாபகம் வச்சுக்கோ" என்றான். நட்சத்திர , "ஒ.கே சீனியர்" என்று ஓடி விட்டாள்......வழக்கம் போல நட்சத்திரா வகுப்பில் சூர்யா போட்டோவை வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.....
"உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன் எழுந்துமே மறுபடி தொலைகிறேன்".....


என்று அவள் மொபைல் பாடிக் கொண்டிருக்க அதை சட்டை செய்யாமல் இவள் அவன் போட்டோவை பார்த்து கொண்டிருந்தாள். ப்ரொஃபசர் யார் மொபைல் அடிக்கிறது என தேடிக்கொண்டிருக்க எல்லோரும் திரும்பி நட்சத்திராவைப் பார்த்தனர்......
விபிஷா, "மச்சி மச்சி" என உளுக்க அப்போதும் அவள் சுய நினைவு பெறவில்லை.


ப்ரொஃபசர், "நட்சத்திரா..." என கத்த திடீரென ஷாக் அடித்தது போல் எழுந்து நின்றவள் பேவென முழிக்க, ப்ரொஃபசர், "கிளாஸ் ரூம்ல மொபைலை சைலன்ட்ல போட மாட்டியா?" எனக் கேட்க அப்போது தான் அவள் மொபைல் அடிப்பதை பார்த்து வேகமாக எடுத்து அதை ஆப் செய்து அவரை பார்த்தாள்....
அவர், "கெட் அவுட்" என கத்த உள்ளுக்குள் சந்தோஷத்தில் குதித்துக் கொண்டு வெளியில் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு வெளியேறினாள்.......வகுப்பறையை விட்டு வெளியேறி சூர்யா கிளாஸ்க்கு சென்று ஜன்னல் தெரியும்படி அமர்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்....

வகுப்பறையை விட்டு வெளியேறிய நட்சத்திரா, சூர்யா கிளாஸ்க்கு சென்று ஜன்னல் தெரியும்படி அமர்ந்து அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.....எதேச்சையாக ஜன்னல் பக்கம் திரும்பிய விஜய் இதை பார்த்து விட்டான். விஜய் இவ திருந்த மாட்ட போலயே. காலையில் தலைய தலைய ஆட்டும் போதே நினச்சேன் என நினைத்தவன் சூர்யாவிடம், "மச்சான் பேசாம அந்த நட்சத்திராவுக்கு நீ ஓகே சொல்லிடு" என்றான்.....சூர்யா அவனை முதுகில் அடித்து , "ஏன்டா எருமை கிளாஸ் கவனிக்கிறதை விட்டுட்டு அவளை பத்தி பேசிட்டு இருக்க" என்றான். விஜய், "மச்சான் எனக்கு என்னமோ அவ உன்ன விடமாட்டான்னு தோணுது" என்றான். சூர்யா, "டேய் எதுக்கு தேவை இல்லாம இப்போ குதர்க்கமாக பேசுற?" என்றான்.....விஜய், "மச்சான் நான் தேவையில்லாம பேசலை. அங்க பாரு அந்த சேர்ல உட்காந்து உன்னையே அவ வெறிச்சிட்டு இருக்கா" என்றான். சூர்யா அவளை பார்த்துவிட்டு, "மச்சான் இவ ரொம்ப பண்றடா. கிளாஸ் முடியட்டும் அவளுக்கு இருக்கு" என்றான்.......அவன் கிளாஸ் முடிந்து வரும்வரை அங்கேயே அமர்ந்து இருந்தாள். சூர்யா அவளை நோக்கி கோபமாக வந்தான். இதைப்பார்த்த நட்சத்திராவிற்கு லைட்டா ஜெர்க் ஆகியது. இருந்தாலும் இன்னும் எவ்வளவோ பார்க்க வேண்டியது இருக்கு இதற்கே பயந்தால் எப்படி என தனக்குதானே சமாதானம் செய்து கொண்டு எழுந்து நின்றாள்......சூர்யா அவளிடம் கோபமாக, "ஏய் உன் மனசுல என்ன தான் நினைச்சுட்டு இருக்க?" என்றான். நட்சத்திரா, "உன்ன தான் நினைச்சுட்டு இருக்கேன்" என்றாள். அவள் கூறிய பதிலில் சூர்யா ஆடி போய்விட்டான். சூர்யா பின் தன்னை சமன்படுத்திவிட்டு "எனக்கு உன்னை பிடிக்கலை, என் பின்னாடி சுத்தாத" என்றான். நட்சத்திரா, "உனக்கு பிடிக்கலைனா என்ன? எனக்கு பிடிச்சிருக்கு" என்றாள்....


அவன், "எனக்கு உன்னை பார்த்தாலே எரிச்சலா வருது" என்றான். நட்சத்திரா, "ஆனா எனக்கு உன்ன பார்த்தாலே காதல் பொங்கி வருது" என்றாள். அவன் கடுப்பாகி "எனக்கு உன் மேல காதலும் இல்லை ஒரு மண்ணும் இல்லை. இனிமே என்னை தொல்லை பண்ணாத" என்றான்......நட்சத்திரா, "உனக்கு லவ் இல்லன்னா பரவாயில்லை. உனக்கும் சேர்த்து நானே லவ் பண்ணுகிறேன் . அப்புறம் உனக்கு பிடிக்கலைன்னா பரவாயில்லை . என்னை லவ் பண்ண கூடாதுன்னு நீ சொல்லக் கூடாது சூர்யா என்று கண்ணடித்தவள், லவ் யூ பேபி. வரட்டா பேபி" என்று கூறிக் கிளம்பினாள்......
அவள் கூறியதில் சூர்யா அதிர்ச்சியாகி அப்படியே நின்றுவிட்டான். விஜய் வந்து, "மச்சான் ஏன்டா இப்படி பேயறைஞ்ச மாதிரி நிற்க்குற?. நீ வந்த வேகத்தைப் பார்த்தா அவளை வச்சு செஞ்சுடுவேன்னு பார்த்தா அவ உன்ன உன்ன செஞ்சுட்டு போயிட்டா போல" எனக் கூறி அவனை பார்த்து சிரித்தான்.....


சூர்யா, "டேய் இப்ப நீ சிரிக்கிறதை நிறுத்தல உன்ன அவ்வளவுதான்" என்றான். விஜய், "போடா டேய் உன் பவுசு எல்லாம் என்கிட்ட தான். இவ்வளவு நேரம் உன்ன வச்சு வாங்கினாலே அவ கிட்ட பேச வேண்டியதுதானே. அப்புறம் மச்சான் எனக்கு என்னமோ அவ உன்னை கரெக்ட் பண்ணிடுவான்னு தோணுது" என்றவன், சூர்யா கீழே எதையோ தேட விஜய் நம்மள அடிக்க தான் கல்லை தேடுறானோ? என்று நினைத்தவன், "சரி அப்புறம் பேசலாம் மச்சான்" என எஸ்கேப் ஆகிவிட்டான்.......விபிஷா நட்சத்திராவை, "ஏய் எங்கடி போன இவ்வளவு நேரம்?" என்றாள். நட்சத்திரா விபிஷாவை கட்டியணைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.."விபி நான் இன்னைக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கேன்" என்றாள். விபி அவளை விலக்கி, "அடியே பப்ளிக் ப்ளேஸ்ல இப்படி பண்றியே , யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க, பைத்தியம்" என்று திட்டினாள்.....நட்சத்திரா அதையெல்லாம் சிரித்துக்கொண்டே வாங்கினாள். விபி, "ஏன்டி திட்டிட்டு இருக்கேன் நீ சிரிச்சிட்டே இருக்க. முழு பைத்தியம் ஆயிட்டியா?" என்றாள். சதீஷ் வந்து, "நட்சத்திரா என்ன உன் ஆள் உன் கிட்ட பேசினானாமே? கேள்விப்பட்டேன்" என்றான்......

இதைக் கேட்ட விபிஷா, "அதுதான் இந்த மேடம் என்ன கட்டிப்புடிச்சு பாசமழை பொழிந்தாங்களோ?" என்றாள். நட்சத்திரா சிரித்துக்கொண்டே தலையை ஆட்டினாள். விபி, "பார்த்துடி தல கழண்டு விழுந்திட போது என்றவள் சரி சரி கிளம்பு டைம் ஆயிடுச்சு" என்றாள். நட்சத்திரா சிரித்துக்கொண்டே ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பினாள்......
இங்கே சங்கர் தன் பெரிய மகன் கிஷோரிடம் பேசிக்கொண்டிருந்தார். "டேய் மகனே என்னடா இன்னைக்காவது அந்த பொண்ணுகிட்ட உன் லவ்வை சொன்னியாடா?" என்றார். கிஷோர், "ஏன் பா நீங்க வேற? . அவளை பார்த்தாலே எனக்கு உள்ளுக்குள்ள உதறுது" என்றான்.....


சங்கர், "ஏன்டா ஒரு கம்பெனி எம்.டியா இருந்துட்டு இப்படி பயப்படுற?. நான்லாம் எவ்வளோ தைரியமா உங்க அம்மாகிட்ட லவ்வ சொன்னேன் தெரியுமா?" என்றார்.....காபி கொண்டு வந்த ஷீலா, "ஏன் சங்கர் இப்படி பொய் சொல்றீங்க. நீங்க ரெண்டு வருஷமா என்னை தூரத்தில் இருந்து பார்த்துட்டு மட்டும் தான் இருந்தீங்க என்றவர், கிஷோரிடம் டேய் கண்ணா தைரியமா அந்த பொண்ணுகிட்ட போய் பேசுபா" என்றார். கிஷோர், "ட்ரை பண்றேன்மா" என்றான்.....சரியாக அந்த நேரம் உள்ளே நுழைந்த சூர்யா, "என்ன கிஷோர் ட்ரை பண்ண போற?" என்றான். சங்கர், "டேய் சூர்யா அதுக்கு நீ சரிபட்டு வரமாட்டடா" என்றார்.....


சூர்யா அதிர்ச்சியாகி, "தி கிரேட் சூர்யா என்னால் முடியாதது எதுவுமே கிடையாது" என்றான். ஷீலா, "சூர்யா அவசரப்பட்டு வார்த்தையைவிடாதடா" என்றார்.....சூர்யா, "நீங்க சும்மா இருங்கம்மா என்றவன், சங்கரிடம் அப்பா சொல்லுங்கப்பா நான் எதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன் சொல்லுங்க" என்றான்....


சங்கர், "வேணாம்டா சூர்யா உன்னால அதை செய்ய முடியாதுடா" என்றார் . சூர்யா, "அப்பா நீங்க சொல்லுங்க முதல்ல அப்புறம் நான் அதை செய்யலன்னா என் பெயரை மாத்திக்கிறேன்" என்றான்....சங்கர், "பேச்சு மாறக் கூடாதுடா மகனே!" என்றார். சூர்யா, "சொல்லப் போறீங்களா? இல்லையா?" என்றான்.......கவிதைகள் தொடரும்.....
 
  • Like
Reactions: Sumiram

Janu murugan

Moderator
Staff member
Jun 10, 2020
43
20
8
20
சூர்யா சங்கரிடம், "சொல்லப் போறீங்களா? இல்லையா?" என்றான். சங்கர், "அது ஒன்னும் அவ்ளோ பெரிய காரியமில்லை. ஒரு பொண்ண லவ் பண்ணனும்" என்றார். இதை கேட்ட சூர்யா திருதிருவென முழிக்க எல்லோரும் அவனை பார்த்து சிரித்தனர்.........
நட்சத்திரா சிரித்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள். மல்லிகா, "என்னடி வரும்போதே புன்னகையோடு வர்ற?' என்றார். நட்சத்திரா, "சார் நான் நல்லா படிக்கிறேன் என பாராட்டினார் , அதான்மா" என்றாள்.
மல்லிகா, "ஏன்டி நீ எத்தனை அரியர் வைச்சு இருக்க உன்னை பாராட்டினாரா?" என்றார். நட்சத்திரா "போம்மா உன்கிட்ட போய் சொன்னேன் பாரு" என்று கோவித்துக் கொண்டு ரூமுக்குள் சென்றாள்......

அங்கே தாரிகா எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்க நட்சத்திரா, "தாரா....."என கூப்பிட தாரிகா அதை கவனிக்காமல் இன்னும் யோசித்துக்கொண்டு இருந்தாள்.

அவளை உலுக்கிய நட்சத்திரா, "என்னடி இவ்வளவு சீரியஸா யோசிச்சிட்டு இருக்க" என்றாள். தாரா, "அது என் எம்.டி கொஞ்ச நாளா என்கிட்ட வித்தியாசமாக நடந்துக்குறாரு. என்னை பார்த்தாலே பதட்டம் ஆயிட்ராரு. ஒன்றுமில்லாத வேலைக்கு அடிக்கடி என்னை கூப்பிட்டுகிட்டு இருக்காரு" என்றாள்.

நட்சத்திரா, "ஒருவேளை அவரு உனக்கு ரூட்டு விடுராரோ? என்றவள் பின் சரி ஆளு எப்படி" என்றாள். தாரிகா, பார்க்க ஹேன்ட்சம்மா இருப்பார். ரொம்ப நல்ல கேரக்டர். ஆனால் ஒரு தடவை கூட தப்பான பார்வை பார்த்தது இல்லை" என்றாள்.
நட்சத்திரா, "என்னடி ஓவரா புகழுற சரியில்லையே என்ன?" என்றாள். தாரா, "அப்படி எல்லாம் ஒன்னுமில்லை. அவரை எனக்கு பிடிக்கும்" என்றாள். நட்சத்திரா, "அப்போ ப்ரபோஸ் பண்ணா ஓகே சொல்லிடுவியா?" என்றாள்.
தாரிகா யோசித்துவிட்டு, "நோ சொல்றதுக்கு என்கிட்ட காரணம் இல்லை" என்றாள். நட்சத்திரா, "அப்ப ஓகே சொல்லிடுவியா?" என்றாள். தாரா, "ஓகே சொல்றதுக்கும் என்கிட்ட காரணம் இல்லையே" என்றாள்.....

நட்சத்திரா, "ஏன்டி என்ன இப்போ குழப்புற?. நானே ஹேப்பி மூடில் இருந்தேன். என்னை இப்படி குழப்பிவிட்டுடியே" என்றாள். தாரா, "நீ சந்தோஷப்படும் அளவுக்கு என்னடி ஆச்சு?" என்றாள். நட்சத்திரா நடந்த அனைத்தையும் கூறினாள். தாரா, "இருந்தாலும் உனக்கு தைரியம் ஓவர் டி" என்றாள்.
நட்சத்திரா, "நீ வேறடி அவன் கோவமா வருவதை பார்த்து எனக்கு லைட்டா பயம் வந்துடுச்சு. நான் பயப்படுகிறேன்னு தெரிஞ்சா அவன் ஓவரா பேச ஆரம்பித்து விடுவான். அதான் நான் சத்தமாக பேசி அவனை ஆப் பண்ணிட்டேன்" என்றாள். இருவரும் நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருந்தனர்.

மல்லிகா வந்து இருவரையும் சாப்பிட அழைக்கவும் வழக்கம் போல கதை அளந்துக் கொண்டே சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்றனர்.......

நட்சத்திரா காலேஜுக்குள் நுழைந்தாள். அவள் பிங்க் நிற சுடிதாரில் தேவதையாக தெரிந்தாள். காற்று சில்லென்று வீசியது. அப்போது சூர்யா நட்சத்திராவை நோக்கி வந்தான். சூர்யா நட்சத்திரவின் அருகில் வந்து முட்டி போட்டு ஐ லவ் யூ நட்சத்திரா என ஒரு ரோஜாவை நீட்டினான்.
அவள் ஆனந்த அதிர்ச்சியில் கண்களில் கண்ணீரோடு அந்த ரோஜாவை பெற்றுக்கொண்டவள் சந்தோஷத்தில் யாஹூ என துள்ளி குதித்தாள். அம்மா என்ற அலறல் சத்தம் கேட்டது.
நட்சத்திரா அந்த சத்தத்தில் தூக்கத்திலிருந்து கண் விழித்து விட்டாள். தாராவின் சத்தத்தில் மல்லிகாவும் சந்திரசேகரும் பதறிக் கொண்டு வந்து அவர்கள் ரூம் கதவை தட்டினர்.......

நட்சத்திரா தாராவை பார்த்து முழித்தாள். தாரா கொலைவெறியோடு நட்சத்திராவை முறைத்துக் கொண்டிருந்தாள்.
மல்லிகா கதவை தட்டிக் கொண்டே இருக்க தாரா கதவை திறந்தாள். மல்லிகாவும் சந்திரசேகரும், "ஏன்டி இப்படி கத்தின?" என்றார்கள். தாரா நட்சத்திராவை பார்க்க அவள் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டாள். தாரா, "ஒரு கெட்ட கனவுமா. அதான் அப்படி கத்திட்டேன்" என்றாள்.
மல்லிகா, "இதுக்கு தான் இப்படி கத்துனியா? என்றவர் பூஜை அறைக்கு சென்று விபூதியை எடுத்து வந்து அவள் நெற்றியில் வைத்து விட்டு பயப்படாத நம குலதெய்வம் எல்லாத்தயும் பார்த்துக்கும்" என்றார். தாராவும் தலையை ஆட்டினாள். தாரா அவர்கள் சென்றதும் நட்சத்திராவை முறைத்து, "எதுக்குடி என்ன எத்துன?" என்றாள்......

நட்சத்திரா எதுவும் சொல்லாமல் மறுபடியும் முழிக்க தாரா, "இப்ப நீ சொல்லல அம்மாவை கூப்பிடுவேன்" என்றாள். நட்சத்திரா பயந்து சொல்லிட்றேன் என நடந்ததை கூறினாள். தாரா இதைக் கேட்டு சிரித்து விட்டு, "இது உன் கனவுல மட்டும்தான் நடக்கும். நீ கனவு கண்டுக்கிட்டே இரு" என்றாள்.
நட்சத்திரா இதைக் கேட்டு சோகமாகி விட தாரா, "ஏய் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன். இதுக்கு போய் சோகமாகிட்ட" என அவளை சமாதானபடுத்தி தூங்க வைத்தாள்.....

மறுநாள் காலையில் வழக்கம் போல நட்சத்திரா சீக்கிரமாக காலேஜ் கிளம்பி விட, தாரா பொறுமையாக ஆபீஸ் கிளம்பி சென்றாள்.......

அவள் ஆபீஸுக்குள் நுழைய எல்லோரும் தீவிரமா எதைப் பற்றியோ பேசிக் கொண்டிருந்தனர். தாரா தன் தோழியிடம் என்னவென்று கேட்க ஹரிணி "தாரா நம்ம எம்.டி இன்னைக்கு பார்மல் டிரஸ் இல்லாம கேஷுவல் டிரஸ்ல சூப்பரா வந்திருக்காரு. என்னால கண்ணை எடுக்கவே முடியலை. யாருக்கு கொடுத்து வச்சிருக்கோ?" என பெருமூச்சு விட்டாள்.
தாரா, "இதுக்குத்தான் இவ்வளவு சீரியஸா டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கீங்களா? வேலையத்தவங்களா" என திட்டி விட்டு தன் வேலையை தொடர்ந்தாள்.
தாராவின் இன்டர்காம் அலற எடுத்து பேசினாள். எம்டி அவளை கேபினுக்கு வர சொன்னார்......
தாராவின் இன்டர்காம் அலற எடுத்து பேசினாள். எம்டி அவளை கேபினுக்கு வரச் சொன்னார். ஹரிணி தாராவிடம் என்னவென கேட்க, "கிஷோர் சார் கூப்பிடுறாரு" என்றவள் எழுந்து சென்றாள்......
தாரா, "சார் மே ஐ கம் இன்" என கேட்க, கிஷோர், "எஸ் கம் இன்" என்றான். கிஷோர் "மிஸ் தாரா ஈவினிங் நீங்க ஃப்ரீயா? நான் உங்ககிட்ட கொஞ்சம் பர்சனலா பேசனும்" என்றான். தாரா யோசிக்க கிஷோர், "கொஞ்ச நேரம் தான். நானே உங்கள வீட்ல ட்ராப் பண்றேன்" என்றான். தாரா, ஓகே சார் வரேன்" என்றாள்.......

நட்சத்திரா காலேஜுக்குள் சென்றதும் சூர்யாவை தேடி கொண்டிருந்தாள். விபிஷா, "என்னடி வந்த உடனே உன் வேலையை ஆரம்பிச்சிட்டியா?" என்றாள். நட்சத்திரா, "அதுக்குதான மச்சி காலேஜே வரேன். சரி என் ஆளை பார்த்தியா?" என்றாள். விபி இல்லை என்று உதட்டைப் பிதுக்கினாள்.
நட்சத்திரா சதீஷிடம், "மச்சி நீ பார்த்த?" என்றாள். சதீஷ், "இல்ல மச்சி நான் எங்கேயுமே பார்க்கலை" என்றான். நட்சத்திரா, "நீங்க சரியா பார்த்திருக்க மாட்டீங்க" என்று தானே தேடி சென்றாள்.
சூர்யா எப்போதும் செல்லும் இடத்திற்கு செல்லாமல் வேறு இடத்தில் அமர்ந்து விஜயிடம் பேசிக்கொண்டிருந்தான். நட்சத்திரா வெகுநேரம் தேடி சூர்யாவை கண்டு பிடித்து அவனை நோக்கி சென்றாள்...
.
விஜய், "டேய் மச்சான் உன் ஆளு வர்றாடா" என்க சூர்யா அவனை முறைத்தான். நட்சத்திரா சூர்யாவிடம், "ஹாய் சூர்யா பேபி. ஏன் எப்பவும் உட்கார இடத்தில் உட்காரலை. எனக்கு பயந்துட்டியா? என்றவள் சரி எனக்கு டைமாயிடுச்சு. பாய் பேபி லவ் யூ பேபி" என்று விட்டு சென்றாள்.
விஜய், "மச்சான் இவ்வளவு நாள் சும்மா பாத்துட்டு தான் இருந்தா. நீ தான் அவ கிட்ட பேசி அவளை உசுப்பேத்தி விட்டுட்ட என்றவன் சூர்யா முறைப்பதை பார்த்து கிளாஸ்க்கு டைம் ஆயிடுச்சு வாடா மச்சான்" என இழுத்துச் சென்று விட்டான்.....


தாரா மாலையில் வேலை முடிந்ததும் கிஷோர் கேபினுக்கு சென்றாள். கிஷோர் "தாரா ஒரு 2 மினிட்ஸ் இந்த மெயிலை சென்ட் பண்ணிட்டு வந்துட்றேன்" என்றான். தாரா, "ஓகே சார் நான் வெளிய வெயிட் பண்றேன். நீங்க வேலைய முடிச்சிட்டு வாங்க" என்று வெளியே சென்று அமர்ந்தாள்.
கிஷோர் வேலையை முடித்துவிட்டு வந்து, "சாரி தாரா லேட் ஆயிடுச்சு வாங்க போலாம்" என்றான். கிஷோர் காரை ஒரு காபி ஷாப்பில் நிறுத்தினான். தாரா கேள்வியாக பார்க்க கிஷோர், "காபி சாப்பிட்டுகிட்டே பேசலாம் வாங்க" என்றான். இருவரும் உள்ளே நுழைந்ததும் ஒரு டேபிளில் அமர்ந்தனர்.
இருவரும் தங்களுக்கு தேவையானதை ஆர்டர் செய்தனர். ஆர்டர் செய்த காபி வர கிஷோர் பேச ஆரம்பித்தான்.....

கிஷோர், "தாரா எனக்கு சுத்தி வளைச்சு எல்லாம் பேச தெரியாது . டைரக்டாவே சொல்லிடுறேன். ஐ லவ் யூ. எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு . உங்களை கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுறேன். உங்கள பாத்த உடனே லவ் வந்துடுச்சன்னுலாம் நான் பொய் சொல்ல மாட்டேன். இப்ப கொஞ்ச நாளா தான் நீங்க என் கண்ணுக்கு வித்தியாசமா தெரியிறீங்க. உங்க ஒவ்வொரு செயலையும் நான் ரசிக்க ஆரம்பிச்சுட்டேன். ஒன்னும் அவசரமில்ல நீங்க பொறுமையா யோசிச்சு சொல்லுங்க" என்றான்.....

தாரா, "சார் எனக்கு உங்களை பிடிக்கும். ஆனால் உங்க மேல லவ் எல்லாம் இல்லை. உங்களை மறுக்க என்கிட்ட எந்த காரணமும் இல்லை. ஆன்ட் ஓன் திங்க் உங்க அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு. நீங்க உங்க பேரண்ட்ஸை எங்க வீட்டுக்கு வந்து பேச சொல்லுங்க. என்னோட பேரண்ட்ஸ் ஓகே சொல்லிட்டா எனக்கு எந்த ப்ராப்ளமும் இல்லை" என்று புன்னகைத்தாள்.
கிஷோர், "ஓகே அப்போ திங்கள்கிழமை எங்க அப்பா அம்மாவை வந்து பேச சொல்றேன். சரி நாம கிளம்பலாம்" என்று எழுந்தான் கிஷோர். தாராவை அவள் வீட்டில் இறக்கிவிட்டு வீட்டுக்கு சென்றான்.....

கிஷோர் வீட்டிற்குள் நுழைந்ததும் அவனை பார்த்தத சங்கர், "என்னாச்சு...? என கேட்க கிஷோர் நடந்தவற்றை கூறினான். சங்கர், "ரொம்ப சந்தோஷமான விஷயம் சொல்லி இருக்கடா. நானும் ஷீலாவும் அவங்க வீட்டுக்கு போய் பேசுறோம்" என்றார்.
ஷீலா, "டேய் கிஷோர் அந்த பொண்ணு எவ்ளோ மெச்சூரிட்டியா பேசி இருக்கா. எனக்கு அந்த பொண்ண ரொம்ப பிடிச்சிருக்கு. உன் செலக்ஷன் ரொம்ப நல்லா இருக்கு" என பாராட்டினார்......
இங்கே தாரா நட்சத்திராவிடம் நடந்ததை சொல்ல, நட்சத்திரா "பரவாயில்லை ரொம்ப ஜென்யூன் ப்ரோபோசல் தான். எனக்கு கிஷோர் மாமாவ ரொம்ப பிடித்து இருக்கு" என்றாள்.
தாரா, "அம்மா அப்பா ஓகே சொல்லட்டும். அதுக்குள்ள மாமான்னு சொல்ற" என்றாள். நட்சத்திரா, "எனக்கு நம்பிக்கை இருக்கு. அம்மா அப்பா கண்டிப்பா ஓகே சொல்லிட்டுவாங்கனு. நான் பிக்ஸ் ஆயிட்டேன். இவர் தான் எனக்கு மாமா . தாரிகா கிஷோர் பேர் பொருத்தம் கூட ரொம்ப நல்லா இருக்கு" என்றாள். தாரா, "எண்ணமோ போடி" என்று எழுந்து சென்று விட்டாள்.......
மறுநாள் நட்சத்திரா கிளாஸில் அமர்ந்து தன் நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டு இருந்தாள். அப்போது அவள் வகுப்புத் தோழி ஒருத்தி வந்து நட்சத்திரா, "கிரவுண்ட்ல உன் ஆளு ஒருத்தனை போட்டு அடிச்சுட்டு இருக்கான்" என்றாள்.
நட்சத்திரா அவதி அவதியாக ஓடி கிரவுண்டுக்கு சென்றாள். அங்கு சூர்யா ஒருவனை போட்டு அடித்துக் கொண்டிருந்தான். நட்சத்திரா அதை ரசித்து ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள். தன் மொபைலை எடுத்து அதை வீடியோவாக பதிவு செய்தாள்.
விபி, "ஏன்டி இதே வேற ஒருத்தியா இருந்தா அவன் சண்டை போடுவதை பார்த்து பயந்திருப்பா. ஆனால் நீ என்னடான்னா இப்படி சந்தோசமா வீடியோ எடுக்கிற?" என்றாள்.

நட்சத்திரா, "எனக்கு தெரியும் என் சூர்யா தப்பு பண்ண மாட்டான்னு. அவன் எதுக்கு அடிக்கிறான் என்று விசாரிச்சேன். இதோ இங்க அடி வாங்குகிறவன் ஒரு பொண்ணுகிட்ட தப்பு தப்பா பேசி இருக்கான். அதான் அடி வாங்குகிறான். தப்பை தானே தட்டிக் கேட்கிறான். அவன்கிட்ட எனக்கு பிடிச்சதே இந்த தைரியம் தான்" என்றாள்...........மல்லிகா கிரைண்டரில் மாவு ஆட்டிக்கொண்டு இருந்தார். காலிங் பெல் சத்தம் கேட்டு போய் கதவை திறந்தார். அங்கே வெளியே நின்று இருந்தவர்களை மல்லிகா கேள்வியாக பார்த்தார்.

அவர், "நான் சங்கர் இது என் மனைவி ஷீலா. நாங்க உங்க பொண்ணு தாரா வேலை பாக்குற கம்பெனியோட ஓனர்" என்றார். மல்லிகா, "உள்ளே வாங்க என அவர்களை அழைத்து உபசரித்தவர், என்ன சாப்பிடுறீங்க டீயா? காபியா?_ என்றார்.
சங்கர், "காபி ஓகே மா" என்றார். மல்லிகா காபி போட செல்ல இவர்கள் வீட்டை கவனித்துக் கொண்டிருந்தனர் . வீடு சிறியதாக இருந்தாலும் மிக நேர்த்தியாக இருந்தது......
மல்லிகா காபி போட்டுக் கொண்டுவந்து கொடுத்தார். அதை வாங்கிய சங்கர், "நாங்க தாராவோட அப்பாகிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்" என்றார். மல்லிகா "அப்படியா? இருங்க அவருக்கு போன் பண்றேன்" என்றவர் தாரா அப்பாவிற்கு போன் செய்து விஷயத்தைக் கூறினார்.
மல்லிகா, "அவர் பத்து நிமிஷத்துல வந்திடுவேன்னு சொல்லிருக்காரு" என்றார். சங்கர், "ஒன்னும் அவசரமில்ல அவரை பொறுமையாவே வரச் சொல்லுங்க நாங்க வெயிட் பண்ணுறோம்" என்றார். சொன்னபடியே பத்து நிமிடத்தில் சந்திரசேகர் வந்துவிட்டார்....
சங்கர் சந்திரசேகரிடம், "சார் என் பையன் கிஷோரோட கம்பெனில தான் உங்க பொண்ணு தாரா வேலை பாக்குறாங்க. என் பையனுக்கு உங்க பொண்ணை புடிச்சிருக்கு . அது மட்டும் இல்ல உங்க பொண்ண எங்களுக்கும் ரொம்ப புடிச்சு இருக்கு . அதான் நாங்க தாராவை பொண்ணு கேட்டு வந்திருக்கோம். இதுதான் என்னோட விசிட்டிங் கார்டு. நீங்க விசாரிச்சுட்டு பொறுமையா யோசிச்சு ஒரு நல்ல முடிவா சொல்லுங்க" என்றார்.
சந்திரசேகர், "நீங்க எவ்ளோ பெரிய ஆள். நீங்க என் பொண்ணை கேட்டு வந்து இருக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. எங்க வீட்டில் இருக்க எல்லார்கிட்டயும் பேசிட்டு கண்டிப்பா ஒரு நல்ல முடிவா சீக்கிரம் சொல்றேன்" என்றார். அவர்கள் இருவரும் விடைபெற்று கிளம்பினர்......
மல்லிகா, "என்னங்க முடிவு பண்ணி இருக்கீங்க?. அவுங்க பேசுறத பார்த்தா நல்ல குடும்பம் மாதிரி தான் தெரியுது. பெரிய பணக்காரங்க போல ஆனா அவங்க பந்தாவே இல்லாமல் நடந்துக்கிறாங்க" என்றார்.
சந்திரசேகர், "எனக்கும் அப்படி தான் தோணுது. இருந்தாலும் பையனை பற்றி கொஞ்சம் விசாரிச்சுப்போம். இது நம்ம பொண்ணு வாழ்க்கை. அதனால அவசரப்படவேண்டாம். அப்புறம் தாரா கிட்ட இதைப் பற்றி இப்போதைக்கு எதுவும் சொல்ல வேண்டாம். நான் நமக்கு தெரிஞ்சங்களை வச்சு விசாரிக்கிறேன்" என்றார்........

தாரா வேலை முடிந்து வீட்டுக்கு வந்தவள் "அப்பா என்ன இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டீங்க?" என்றாள். சந்திரசேகர் "இன்னைக்கு வேலை சீக்கிரம் முடிஞ்சுருச்சு. அதான் வந்துட்டேன்னு" என்றார். தாரா, "சரிப்பா நான் பிரஷ் ஆகிட்டு வரேன்" என ரூம்க்கு சென்று விட்டாள்.
நட்சத்திரா வந்தவுடனே தாராவிடம் சென்று, "ஓய் என்னடி கிஷோர் மாமாவோட அப்பா அம்மா வந்து பேசினார்களா?" என்றாள். தாரா, "தெரியலடி அப்பா அம்மா எப்பவும் போல தான் நடந்துக்குறாங்க. ஒருவேலை வந்திருக்க மாட்டாங்கன்னுதான் தோணுது. அவுங்க வந்திருந்தா என் கிட்ட சொல்லி இருப்பார்கள்" என்றாள்.....

நட்சத்திரா, "உனக்கு தெரியாதுடி. அப்பா விசாரிச்சுட்டு முடிவு பண்ணிட்டு அப்புறம் உன்கிட்ட சொல்லலாம்னு நினைத்திருப்பாங்க என்றுவிட்டு அவள் பக்கத்து வீடு இந்துஜாவிற்கு போன் பண்ணி பேசிவிட்டு, தாராவிடம் நான் சொன்னது கரெக்ட் தான். ஈவினிங் மூணு மணிக்கு ஒரு கார் நம்ம வீட்டுக்கு வந்திருக்கு. அதுல இருந்து இரண்டு பேர் இறங்கி வந்தாங்களாம்" என்றாள்.
தாரா, "எப்படிடி?" என்றாள். நட்சத்திரா , "எல்லாம் நம்ம ஏரியா ஆல் இந்தியா ரேடியோ இந்துஜாவோட அம்மா பங்கஜத்துக்கிட்ட இருந்து தான் இந்த நீயூஸ கலெக்ட் பண்ணினேன்" என்றாள்.
தாரா, "உனக்கு அறிவு அதிகம்டி" என்றாள். நட்சத்திரா, "அறிவு இருந்து என்னடி பிரயோஜனம்? இந்த அறிவு வச்சுக்கிட்டு சூர்யாவை கரெக்ட் பண்ண முடியலையே" என வருந்தினாள்.
தாரா, "எல்லாம் ஒரு நாள் நல்லபடியா நடக்கும். கவலப்படாதடி" என்றாள். இப்படியே ஒரு வாரம் கழிந்தது.....

வேலை முடிந்து சீக்கிரமே வந்த சந்திரசேகர், "மல்லிகா...." என அழைத்தார். மல்லிகா, "இருங்க அடுப்பில் குக்கரை வைத்து இருக்கேன். அஞ்சு நிமிஷத்துல வரேன் என்றவர் ஏங்க வந்ததும் வராததுமாய் இப்படி என் பெயரை ஏலம் போடுறீங்க?" என்றார்.
சந்திரசேகர், "ஒரு முக்கியமான விஷயம் பேசனும் வந்து உட்காரு" என்றார். மல்லிகா, "இருங்க கேஸ் ஆப் பண்ணிட்டு வந்துடறேன் என்று கூறி சென்றவர் கேஸை ஆப் செய்து விட்டு வந்து சோபாவில் அமர்ந்தவாறு இப்ப சொல்லுங்க" என்றார்.....

சந்திரசேகர், "நான் கிஷோர் தம்பி பற்றி விசாரிச்சது வரைக்கும் எல்லாரும் நல்ல விதமா தான் சொல்றாங்க . என்கூட வேலை பாக்குற ஒருத்தர் அவங்களோட சொந்தகாரங்களாம். அவர்கூட சொன்னாரு ரொம்ப நல்ல ஃபேமிலி. நம்ம பொண்ண அவங்க நல்லா பாத்துப்பாங்க என்றார், அதான் உன்கிட்ட ஒருவார்த்தை சொல்லிட்டு அவங்களை ஒரு நல்ல நாள் பார்த்து பொண்ணு பாக்க வர சொல்லலாம்னு இருக்கேன்" என்றார்.

மல்லிகா, "என் கிட்ட கேட்க என்னங்க இருக்கு. நீங்க செஞ்சா அது சரியாதான் இருக்கும் என்றவர் , நம்ம தாரா வரட்டும் அவ கிட்ட ஒரு வார்த்தை கேட்டு எந்த முடிவுனாலும் எடுக்கலாம்" என்றார்.
சந்திரசேகர், "ஆமா நீ சொல்றது கரெக்ட் தான். அவகிட்டயே கேட்கலாம்" என்றார்.....

தாரா வேலை முடிந்து வந்து விட்டாள். மல்லிகா, "நீங்களே அவ கிட்ட பேசுங்க" என்றார். சந்திரசேகர், "இரும்மா. சின்னவ வரட்டும் ரெண்டு பேருக்கும் சேர்த்து சொல்லி விடலாம்" என்றார். நட்சத்திரா காலேஜ் முடித்து தன் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு தாமதமாகவே வீடு வந்து சேர்ந்தாள்........
அனைவரும் இரவு உணவு உண்டு கொண்டிருந்தனர் . சந்திரசேகர் தாராவிடம் பேச ஆரம்பித்தார். "தாராமா உங்க கம்பெனி எம்.டியோட அம்மா அப்பா வந்திருந்தாங்க என்று நடந்ததை கூறினார். நான் அந்த தம்பியை பத்தி நல்லா விசாரிச்சுட்டேன். ரொம்ப நல்ல விதமா சொல்றாங்க. அதான் உன்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு அவங்களை பொண்ணு பாக்க வர சொல்லலாம்னு இருக்கேன். நீ என்னம்மா சொல்ற?" என்றார்.
தாராவிற்கு உள்ளுக்குள் ஒருவித மகிழ்ச்சியே. அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் "உங்க விருப்பம் தான்பா. நீங்க எத பண்ணாலும் எனக்கு சம்மதம்" என்றாள். இதைக் கேட்ட சந்திரசேகருக்கும் மல்லிகாவிற்கு மனம் குளிர்ந்துவிட்டது. சந்திரசேகர், "ரொம்ப சந்தோஷமா. நான் ஒரு நல்ல நாளாப் பார்த்து அவர்களை வரச் சொல்றேன்" என்றார்.....
நட்சத்திரா, "ஹலோ ஹலோ இங்கே ஒரு ஜீவன் நான் இருக்கேன். அவகிட்ட ஒரு ஒப்பினியன் கேட்போம் என்று உங்களுக்கு தோணுதா?" என்றாள் .
மல்லிகா, "வாழப்போறது அவ. அவ கிட்ட கேட்டா நியாயம் இருக்கு. உன் கிட்ட எதுக்கு கேட்கணும்?" என்றார்.
சந்திரசேகர், "மல்லிகா நீ பேசாமல் இரு. என்றவர், நட்சத்திராவிடம் நீ சொல்லுமா உனக்கு ஓகே வா?" என்றார். நட்சத்திரா யோசிக்கிற மாதிரி பாவ்லா செய்தவள் "எனக்கு...... என்று இழுத்தவள் ஓகே" என்று முடித்தாள்.
மல்லிகா, "ஏன்டி ஓகே சொல்றதுக்கு எதுக்கு இவ்வளவு அலப்பறை" என்றார். நட்சத்திர, "அது சும்மா ஒரு கெத்துக்கு" என்றாள். மல்லிகா, "என்ன கெத்தோ போடி" என்றார்.......

சந்திரசேகர் சங்கருக்கு போன் செய்து தங்கள் சம்மதத்தை தெரிவித்தவர் வர்ற வெள்ளிக்கிழமை பெண் பார்க்க வரச் சொன்னார்......
சங்கர் இதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்து "ரொம்ப சந்தோஷம் சம்மந்தி. நாங்க வரோம்" எனக் கூறி போனை கட் செய்து வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து இந்த நல்ல செய்தியை கூறினார்.

ஷீலா இதைக் கேட்டு மகிழ்ந்து, "நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க . நான் போய் ஸ்வீட் செய்கிறேன்" என கிச்சனுக்குள் சென்றாள்.
கிஷோர் இதைக் கேட்டுத் துள்ளாத குறைதான். சூர்யாவை கட்டிக்கொண்டான். சூர்யாவுக்கும் சந்தோஷம் தான். கிஷோரிடம், "கங்கிராட்ஸ்" என்றான் . ஷீலா கேசரி செய்து எடுத்து வர எல்லோரும் சந்தோஷத்தை கொண்டாடினார்கள்......
வெள்ளிக்கிழமை காலை வந்து விட்டது. நட்சத்திரா வழக்கம் போல காலேஜ் கிளம்பிக் கொண்டிருந்தாள்.
மல்லிகா, "எங்கடி கிளம்புற?" என்றார். நட்சத்திரா, "பார்த்தா தெரியலையாமா? காலேஜ் கிளம்பறேன்" என்றாள்.
மல்லிகா, "ஏய் இன்னைக்கு வெள்ளிக்கிழமை" என்றார். நட்சத்திரா, "வெள்ளிக்கிழமையா இருந்தா என்னமா? சனிக்கிழமையா இருந்தா என்னமா? எனக்கு காலேஜ் இருக்குமா" என்றாள்.
மல்லிகா, "அது இல்லடி. இன்னைக்கு தாராவை பொண்ணு பார்க்க வராங்க" என்றார். நட்சத்திர, "ஆமாமா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?. அவளதானே பொண்ணு பார்க்க வராங்க. நான் காலேஜ் போகணும் . என்னோட படிப்பைக் கெடுக்காதீங்க" என்றாள்.......

மல்லிகா, "ஹேய் சும்மா காமெடி பண்ணாதடி. நீ என்னமோ காலேஜ் ஃபர்ஸ்ட் வந்த மாதிரி இன்னைக்கு ஒரு நாள் காலேஜ் போகலனா உன் படிப்பு கெட்டு போகுற மாதிரி பேசுற. எப்படியும் நீ அரியர்தான வைக்கப் போற?" என்றார்.
நட்சத்திரா, "அம்மா....." என்று கத்தினாள். மல்லிகா, _சும்மா கத்தாம தாராவை போய் ரெடி பண்ணு. 10 மணிக்கு அவங்க வந்துடுவாங்க" என்றாள் . நட்சத்திரா கோபத்தில் தூங்கிக் கொண்டிருந்த தாரா முகத்தில் தண்ணீர் ஊற்றிவிட்டாள்......

தாரா பதறி அடித்துக் கொண்டு எழுந்து "ஏன்டி எருமை! எதுக்குடி தண்ணி ஊத்துன?" என்றாள். நட்சத்திரா, "உன்ன பொண்ணு பாக்க வந்தா நீ லீவ் போடு. நான் எதுக்குடி லீவு போடணும்? என் சூர்யாவை பார்க்காமல் எப்படி இருப்பேன்? அதுவும் இன்னைக்கு வேற வெள்ளிக்கிழமை. அடுத்து ரெண்டு நாள் காலேஜ் லீவு. மூன்று நாள் அவனை பார்க்காமல் நான் எப்படி இருப்பேன்?" என புலம்பினாள்.
தாரா, "அதுக்கு நீ போய் அம்மாவை கேட்கணும். நானே இப்போதான் கிஷோர் கூட டூயட் பாடிட்டு இருந்தேன் கெடுத்திட்டியேடி" என்றாள்.
நட்சத்திரா, "நீ மட்டும் உன் ஆளோட டூயட் பாடுற . நான் ஏன் ஆள பாக்க கூடாதா?" என்றாள்.
தாரா சிரித்துவிட்டு, "உன் காதல் உண்மையா இருந்தா நீ கண்டிப்பா அவனை பார்ப்ப" என்றாள். நட்சத்திரா, "ஒருவேளை நான் அவனை பார்க்கலனா என் காதல் உண்மை இல்லையா?" என புலம்பிக் கொண்டிருந்தாள்.....
தாரா குளித்து கிளம்பிக் கொண்டிருந்தாள். மல்லிகா தாராவிடம் "சீக்கிரம் கிளம்புடி. கொஞ்ச நேரத்தில அவங்க வந்துடுவாங்க" என்று கூறிக்கொண்டிருக்கும் போதே வாசலில் கார் நிற்கும் சத்தம் கேட்டது........


சந்திரசேகர் சென்று அவர்களை வரவேற்றார் . சூர்யாவிற்கு கால் வரவே போன் பேச ஓரமாக சென்று விட்டான். அவனை தவிர மற்றவர்கள் வீட்டில் நுழைந்தனர். மல்லிகாவும் அவர்களை வரவேற்றார். பின் சில பல நல விசாரிப்புகள் நடந்தது.
மல்லிகாவிற்கும் சேகருக்கும் கிஷோரை பார்த்தவுடனே பிடித்துவிட்டது. நட்சத்திராவும் அவர்களை பார்த்தாள். சந்திரசேகர் அவர்களிடம், "இது என்னோட ரெண்டாவது பொண்ணு நட்சத்திரா . காலேஜ் படிக்கிறா" என்றார்.
சங்கர் அவளிடம் நலம் விசாரித்தவர் வாசலை பார்க்க சந்திரசேகர் என்னவென கேட்க அவர், "என் இரண்டாவது பையன் எங்க கூட தான் வந்தான். போன் பேசிட்டு வரேன்னு போனான். ஆனால் இன்னும் காணாம்" என்றார் .
நட்சத்திரா, "அங்கிள் நான் போய் பாத்துட்டு வரேன்" என்று வெளியே சென்றாள். அதே சமயம் சூர்யா போன் பேசிவிட்டு இவர்கள் வீடு நோக்கி வந்தான்......

கவிதைகள் தொடரும்...
 

Attachments

  • Like
Reactions: Sumiram

Janu murugan

Moderator
Staff member
Jun 10, 2020
43
20
8
20
நட்சத்திரா, "இருங்க அங்கிள் நான் போய் பாத்துட்டு வரேன்" என்று வெளியே சென்றாள். அதே சமயம் சூர்யா போன் பேசிவிட்டு இவர்கள் வீடு நோக்கி வந்தான்.
நட்சத்திரா அவனைப் பார்த்து ஆனந்த அதிர்ச்சியடைந்தாள். நட்சத்திரா, 'ஒருவேளை இது நம்ம கற்பனையா இருக்குமோ?' என நினைத்து அவனிடமே "டேய் சூர்யா உன்ன நெனச்சு நெனச்சு நான் லூசு ஆயிட்டேன். நான் எங்க போனாலும் நீயே என் கண்ணு முன்னாடி நிக்கிற மாதிரியே தோணுது" என்றாள்.
சூர்யா, 'இது இவ வீடா?' என நினைத்தவன், "லூசு இது கனவு இல்லை நிஜம் தான்" என்றான். அவள் நம்பாமல் அவன் கையை கிள்ளினாள். சூர்யா, "இது உண்மைக்கு கனவில நிஜம்தான் லூசு" என்றான்.
நட்சத்திரா, "வாவ் சூர்யா நீ எப்படி என் வீட்டுல. ஒ.... நான் இன்னைக்கு காலேஜ் வரலைன்னு தெரிஞ்சு என்ன பார்க்காம இருக்க முடியாதுன்னு கிளம்பி வந்துட்டியா?" என்றாள்.
சூர்யா, "ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. என் அண்ணனுக்கு பொண்ணு பாக்க வந்தோம்" என்றான்.
நட்சத்திரா, "வாவ் பொண்ணு என் அக்காதான். அப்போ நம்ம ரிலேஷனாக போகிறோம். வா உள்ள" என துள்ளி குதித்துக் கொண்டு ஓடினாள்.........
நட்சத்திரா ஓடிப்போய் தாராவை கட்டிக்கொண்டாள். தாரா, "என்னடி இவ்வளவு சந்தோஷமா இருக்க?" என்றாள். நட்சத்திரா, "உனக்கு எப்படி நான் தேங்க்ஸ் சொல்றதுன்னே தெரியலை. என் வேலையை எப்படி ஈசியாக்கிட்டியே" என்று ஆர்ப்பரித்தாள்.
தாரா, "ஏன்டி கொஞ்சம் புரியிற மாதிரி என்னன்னு சொல்லு" என்றாள்.
நட்சத்திரா, " சூர்யாவோட அண்ணன்தான் கிஷோர் மாமா" என்றாள்.
தாரா, "சூப்பர் அப்போ நீயும் நானும் ஒரே வீட்டுக்கு கல்யாணம் பண்ணி போக போகிறோம்" என்ற ஆனந்தத்தில் அவளை கட்டிக் கொண்டாள்......

தாராவை அழைக்க வந்த மல்லிகா "இதைப்பார்த்து அக்காவும் தங்கச்சியும் அப்புறம் கொஞ்சி குலாவிக்கோங்க. நட்சத்திரா தாராவை கூட்டிட்டு வா" என்றார்.
நட்சத்திரா தாராவை அழைத்து வந்தாள். கிஷோர் தாராவை ஆவென பார்த்துக் கொண்டிருந்தான். சூர்யா, "டேய் உனக்கு வேற பொண்ணை கிடைக்கலையா?" என்றான். கிஷோர் "ஏன்டா தாராவுக்கு என்ன குறைச்சல்? அவ ரொம்ப நல்ல பொண்ணுடா" என்றான்.
சூர்யா, 'அவங்க நல்ல பொண்ணுதான். ஆனா அவங்க கூட பிறந்தது ஒன்னு இருக்கே அது என் உயிரை போட்டு வாங்குமே' என மனதிற்குள் புலம்பினான்.
கிஷோர் இன்னும் தாராவையே பார்த்துக் கொண்டிருந்தான். ஷீலா, "டேய் கொசு போய்ட போது வாய மூடுடா" என்றார். கிஷோர் அசடு வழிந்தான்......

சங்கர், "அப்புறம் சம்பந்தி ஒரு நல்ல நாளாக பார்த்து நிச்சயதார்த்தம் வச்சுக்கலாம்" என்றார் . சந்திரசேகர் இதை ஆமோதித்தார். "நாங்களே எங்கள் குடும்ப ஜோசியர் கிட்ட பேசிட்டு ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் . அப்புறம் மத்த விஷயத்தை பத்தி பேசலாம்" என்றார் .
சங்கர், "என்ன விஷயம் சம்பந்தி?" என்றார். சந்திரசேகர், "வரதட்சனை.... என்று ஆரம்பிக்கும்போதே, சங்கர், "இதோ பாருங்க சம்பந்தி வரதட்சணை வாங்குவது சுத்தமா எங்களுக்கு பிடிக்காது. என்றவர் வரதட்சனை நாங்கள் கேட்க மாட்டோம்" என்றார்.
சந்திரசேகர் இதைக் கேட்டு மகிழ்ந்து "நீங்க பெருந்தன்மையா சொன்னாலும் நாங்க ஆசைப்படுவதை கண்டிப்பா செய்வோம்" என்றார். சங்கர் சிரித்துக்கொண்டே, "அது உங்க இஷ்டம். என்ன செய்யனும் ஆசைபடுறீங்களோ அதை செய்யுங்க".....
ஷீலா, "சரி சரி நம்மலே பேசிட்டு இருந்தா எப்படி. பொண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்கட்டும்" என்க தாயை பெருமையாக பார்த்து அம்மான்னா அம்மாதான் என நினைத்துக்கொண்டான் கிஷோர்.....

சங்கர், "அதான் ஆபீஸ்ல டெய்லி மீட் பண்றாங்கல. அப்புறம் என்ன இப்போ தனியா பேச?" என்றார். கிஷோர் சங்கரை முறைத்தான்.
சந்திரசேகர், "இதிலென்ன இருக்கு? சம்பந்தி. ரெண்டு பேரும் மனசுவிட்டுப் பேசட்டும்" என்றார்.
தாராவும் கிஷோரும் ஒரே ரூமில் நின்று கொண்டிருந்தார்கள் . தாரா எதுவும் பேசுவதாக தெரியவில்லை . கிஷோரே பேச ஆரம்பித்தான் "உங்க வீட்டில ஓகே சொல்லிட்டாங்க. இப்போ உன்னோட முடிவு சொல்லலாமே" என்றான்.
தாராவிடம் இருந்து பதில் வரவில்லை . கிஷோர், "என்ன பதிலே காணோம். உனக்கு என்ன பிடிக்கலன்னு வெளியே போய் சொல்லிவிடவா?" என்க, தாரா, "அவசர அவசரமாக முந்திக்கொண்டு பிடிச்சு இருக்கு ரொம்ப" என்றாள்.
கிஷோர், "இந்த பதிலுக்காக தான் இவ்வளவு நாள் காத்திருந்தேன் . அடுத்த மாசமே கல்யாணத்தை வைக்க சொல்றேன்" என்றான். தாரா, "இல்ல கொஞ்சம் லேட்டா வைக்க சொல்லுங்க" என்றாள் . கிஷோர் தாராவை கேள்வியாக பார்த்தான்.
தாரா, "கொஞ்சநாள் லவ் பண்ணிட்டு அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாமா?" என்றாள்.....

கிஷோர், "அடியே கள்ளி மாமாமேல உனக்கு அவ்ளோ ஆசையா? சொல்லிட்டல்ல . இனிமே பாரு உன்ன என் காதல்ல திளைக்க வைக்க போறேன்" என்றான். தாரா வெட்கப்பட்டு சிரித்தாள்.
கிஷோர், "இப்படி எல்லாம் சிரிக்காதடி. நான் அவ்வளவு நல்லவன் எல்லாம் இல்லை" என்றான். தாரா, "சீ போடா வெளியே" என்றாள். கிஷோர், "என்னடி போடா வாடான்னு சொல்லுற" என்றான்.
தாரா, "அப்படிதான்டா சொல்லுவேன். நான் என்னோட கிஷோரை சொல்றேன். உனக்கு என்ன?" என்றாள்.
கிஷோர் சிரித்துக்கொண்டு, "நீ எப்படி வேணா கூப்பிட்டுக்கோடி என் பொண்டாட்டி " என்றான். இதை கேட்ட தாராவின் கன்னங்கள் சிவந்துபோனது......

அப்போது நட்சத்திரா, "ஹலோ மாம்ஸ் போனா போகுதுன்னு கொஞ்ச நேரம் பேச விட்டா ரெண்டு பேரும் மணிக்கணக்கா பேசுறீங்க. அப்புறம் கல்யாணத்தை ஒரு வருஷம் தள்ளிப் போட சொல்லி விடுவேன்" என்று மிரட்டினாள்.
கிஷோர் மிரண்டு போய் அவளைப் பார்க்க, தாரா, "வந்த அன்னைக்கே அவரை பயம்முறுத்தாதடி என்றாள். கிஷோரிடம் நீங்க ஒன்னும் நினைச்சுக்காதீங்க. இவ எப்பவுமே இப்படித்தான் விளையாட்டுக்கு பேசுவா" என்றாள்.
நட்சத்திரா, " என்ன மாம்ஸ் பயந்துட்டீங்களா? சும்மா விளையாட்டுக்குத்தான் சொன்னேன் பயப்படாதீங்க என்றவள், வெளியே சென்று சந்திரசேகரிடம் அப்பா கிஷோர் மாமாவுக்கு என்னதான் பிடிச்சிருக்காம்" என்றாள்.
நட்சத்திரா சொல்வதை கேட்டு எல்லோரும் கிஷோரை பார்க்க அவன் நான் எதுவும் சொல்லல என்று முழித்தான் . அவன் முழிப்பதைப் பார்த்து அனைவரும் சிரித்தனர்.....

மல்லிகா, "நட்சத்திரா என்ன பேசுறடி? என்று அதட்டிவிட்டு அனைவரிடமும் நீங்க ஒன்னும் தப்பா நினைச்சுக்காதீங்க சம்பந்தி. அவ எப்பவுமே இப்படித்தான்" என்றார்.
கிஷோர் அப்பாடா என்று பெருமூச்சு விட்டான். ஷீலா, "நாங்க ஒன்னும் நினைக்கலை. எனக்கு நட்சத்திராவ ரொம்ப பிடிச்சிருக்கு. எனக்கு பொண்ணு இல்லை என அடிக்கடி பீல் பண்ணுவேன். இப்போ நட்சத்திரா அந்த குறையை தீர்த்துவிடுவா போல" என்றார்.
நட்சத்திரா, "நீங்க கவலையே படாதீங்க அத்தை. நானும் உங்களுக்கு மருமகள்தான் என்றவள் ஐயோ உளறிவிட்டோமே என நினைத்து விட்டு, நான் உங்களுக்கு இன்னொரு மகள் தான்" என்றாள்.
இதை கேட்டு சூர்யா அவளை முறைத்தான். நட்சத்திரா யாரும் பார்க்காத நேரம் சூர்யாவை பார்த்து கண்ணடித்தாள். சூர்யா வேறு புறம் திரும்பி கொண்டான். பின் அவர்கள் விடைபெற்றுக் கிளம்பினர். கிஷோர் தாராவிடம் கண்களாலே விடை பெற்றான்......
இன்னும் 15 நாட்களில் தாரா விற்கும் கிஷோருக்கு நிச்சயதார்த்தம் என முடிவானது. தாராவும் கிஷோரும் காதல் வானில் சிறகடித்து பறந்து கொண்டிருந்தனர்......

நட்சத்திரா, "சூர்யா மாமா சூர்யா மாமா" என அழைத்துக் கொண்டே அவனிடம் வந்தாள். விஜய், "மாமாவா? இது எப்போதிலிருந்து" என்றான்.
நட்சத்திரா, "அதுவா கிஷோர் மாமாவுக்கு என் தாரா அக்காவை பேசி முடித்ததிலிருந்து" என்றாள்.
விஜய், "மச்சான் சொல்லவே இல்ல எப்போடா?" என்றான். நட்சத்திரா, "அதான் நான் சொல்லிட்டேன்ல. நான் சொன்னா என்ன? மாமா சொன்ன என்ன?" என்றாள்.
சூர்யா நட்சத்திராவிடம், "இன்னொரு தடவை என்னை மாமான்னு சொன்ன உன்னை அவ்வளவுதான்" என்றான் . நட்சத்திரா முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு, "ஏன் மாமா?" என்றாள்.
சூர்யா, "அப்படி கூப்பிடாதன்னு சொல்றேன். நீ திரும்ப திரும்ப அப்படியே கூப்பிடுற" என்றான்.
நட்சத்திரா, "விஜய் சீனியர் நீங்களே நியாயம் சொல்லுங்க. எங்க அக்காவே கட்டிக்க போறவர் எனக்கு மாமா முறைன்னா அவருடைய தம்பி எனக்கு என்ன முறை?" என்றாள்.
விஜய் சற்றும் யோசிக்காமல் "இதிலென்ன சந்தேகம்? மாமா முறை தான்" என்றான் . நட்சத்திரா, "கேட்டீங்களா மாமா விஜய் சீனியரே நான் சொல்றது சரின்னு சொல்லிட்டாங்க" என்றாள் .
விஜய், "ஏன்மா நான் நல்லா இருக்குறது உனக்கு பிடிக்கலையா? இவன்கிட்ட என்னை மாட்டிவிட்ற" என்றான். நட்சத்திரா, "பார்த்தீங்களா மாமா, உங்ககிட்ட பேசிக்கிட்டே வந்த விஷயத்தை மறந்துட்டேன்" என்றாள்.....

விஜய் ஆர்வமாக, "என்ன விஷயம்மா?" என்றான். நட்சத்திரா, "அதுவா இந்த டிரஸ்ல நீங்க பார்க்க செம்மையா இருக்கீங்க மாமா. அதை சொல்லத்தான் வந்தேன் மாமா என்றாள். சரி லேட் ஆயிடுச்சு சீக்கிரம் போகலைன்னா உங்க மாமியார் என்னை திட்டுவாங்க" என்று ஓடி விட்டாள்.....
விஜய், "ஏன் மச்சான் தேடிப்போய் நச்சத்திராவோட அக்காவைதான் உன் அண்ணாக்கு பேசி முடித்து இருக்கீங்க போல" என்றான் . சூர்யா, "நீ வேற ஏன்டா. கிஷோர் தாரா அண்ணிய காதலிச்சிட்டான். அதான் அம்மா அப்பா ஓகே சொல்லிட்டாங்க" என்றான்.....

நாட்கள் றெக்கை கட்டிக்கொண்டு பறந்தது. நிச்சயதார்த்த நாளும் வந்தது. ஒரு மண்டபத்தில் நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மல்லிகாவும் சந்திரசேகரும் ஓடி ஆடி வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். தாரா தோழிகளின் கேலி பேச்சுக்கு இடையே சிரித்துக்கொண்டு தயாராகிக் கொண்டிருந்தாள்.
நட்சத்திரா புடவை கட்டி தாராவை விட அதிகமாக மேக்கப் போட்டுக் கொண்டிருந்தாள். மல்லிகா, "ஏன்டி நட்சத்திரா இதுல யாரு பொண்ணு?" என்றார்......

நட்சத்திரா, "என்னம்மா உளர்ற? நாங்க ரெண்டு பேருமே உன்னோட பொண்ணு தான்" என்றாள். மல்லிகா, "அவள் தலையில் கொட்டி, லூசு நீ கல்யாண பொண்ணா? இல்லை அவ கல்யாணம் பொண்ணா?. நீ இப்படி மேக்கப் போட்டிருக்க" என்றார்.
நட்சத்திரா, "மேக்கப் போட்டது ஒரு குத்தமா? நான் அப்படி தான் போடுவேன்" என்றாள். மல்லிகா, இவ கிட்ட பேசினால் டைம் தான் வேஸ்டாகும் என நினைத்தவர், "தாரா சீக்கிரம் ரெடியாகு" என்று சென்றுவிட்டார்........

நட்சத்திரா பட்டுப்புடவை கட்டி அதற்கு பொருத்தமான அணிகலன்களை அணிந்து அப்சரஸ் போல நடந்து வந்தாள். விஜய் அவளைப் பார்த்துவிட்டு, "டேய் சூர்யா அங்க பாருடா நட்சத்திராவ. இவளையா நீ வேண்டாம்னு சொல்ற" என்றான்.
சூர்யா திரும்பி பார்க்க நட்சத்திரா வானத்தில் இருந்து இறங்கி வந்த தேவதை போல பூமிக்கு வலிக்காமல் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தாள். சூர்யா அவளைப் பார்த்து சற்றே சறுக்கி விட்டான். அவளிடம் இருந்து கண்களை அகற்றவே முடியவில்லை. அவளை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.....

அவன் அருகில் வந்த நட்சத்திரா, "என்ன மாமா இப்படியே எவ்வளவு நேரம் என்ன சைட் அடிச்சிட்டு இருப்ப?. யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க" என்றாள். அவளின் பேச்சில் சுயநினைவு பெற்று சூர்யா தலையை சிலுப்பிக்கொண்டான். நட்சத்திரா, "மாமா இந்த புடவைல நான் எப்படி இருக்கேன்?" என்றாள்.
சூர்யா, "கேவலமா இருக்க" என்றான். நட்சத்திரா, "ரொம்ப தேங்க்ஸ் மாமா" என்றுவிட்டு சென்றாள். சூர்யா அவளை வினோதமாக பார்த்து இவ கிட்ட கொஞ்சம் கேர்ஃபுல்லாதான் இருக்கணும் என நினைத்துக்கொண்டான்.....

நட்சத்திரா தன் தாய் சொன்ன வேலைகளை செய்து கொண்டு இருந்தவள் ஒரு காட்சியை பார்த்து அப்படியே சிலையாகி நின்று விட்டாள்...........நட்சத்திரா தன் தாய் சொன்ன வேலைகளை செய்து கொண்டு இருந்தவள் ஒரு காட்சியை பார்த்து அப்படியே சிலையாக நின்றுவிட்டாள். ஒரு பெண் சூர்யா கையை பிடித்துக்கொண்டு நெருக்கமாக நின்று அவனுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தாள்.
இதைப்பார்த்து நட்சத்திராவிற்கு பகீரென்றது, "யாருடா இது நம்ம கதையில புதுவில்லி" என பார்த்தாள். வெகு நேரமாக அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்....

நட்சத்திராவிற்கு இதை காண பொறுக்கமுடியவில்லை. அவள் நேராக ஷீலாவிடம் சென்று, "அத்தை"என்றாள். ஷீலா, "சொல்லுமா அம்மா ஏதாவது சொல்லிவிட்டாங்களா?" என்றார்.
நட்சத்திரா, "ஒன்னும் இல்லை அத்தை. அந்த பொண்ணு யாரு" என்றாள். ஷீலா, "அது என் தங்கச்சி பொண்ணு அனுயா" என்றார். நட்சத்திராவிற்கு இப்பொழுதுதான் போன உயிர் திரும்பி வந்தது.
அவளது செய்கையை பார்த்த ஷீலா, "என்னாச்சும்மா? ஏன் நீ அவளைப் பத்தி கேட்குற" என்றார். நட்சத்திரா, "ஒன்னும் இல்லை அத்தை அம்மா கூப்புடுறாங்க இதோ வந்து விடுகிறேன்" என ஓடி வந்துவிட்டாள்....
நட்சத்திரா விபிஷா வருவதைப் பார்த்து, "வாடியம்மா எவ்வளவு சீக்கிரம் வந்துட்ட" என்றாள். நட்சத்திராவிடம் அவள், ஹிஹிஹி......என இளித்து, "சாரிடி லேட் ஆயிடுச்சு" என சமாளித்தாள்.
சதீஷ் யாரையோ தேடிக் கொண்டிருக்க நட்சத்திரா அவன் தலையில் கொட்டி, "பக்கி என் வீட்டு விசேஷத்துக்கு வந்துட்டு யாரைடா தேடுற?" என்றாள்.
சதீஷ், "இருடி ஒரு பொண்ண பார்த்தேன். செம்மையா இருந்தா அவளதான் தேடுறேன்" என்றான்.
நட்சத்திரா, "பார்த்துடா யார்கிட்டயாவது அடி வாங்க போற" என்றாள். சதீஷ், "அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்" என அவளைத் தேடிச் சென்றுவிட்டான்.......

கிஷோர் மாப்பிள்ளைக்கு உரிய கம்பீரத்துடன் அமர்ந்து இருந்தான். பெண்ணை அழைத்து வரச் சொல்ல தாராவை அழைத்து வந்தனர்.
தாரா பெண்ணுக்கே உரிய நாணத்துடன் தலை நிமிராமல் விண்ணுலக தேவதை போல் நடந்து வந்தாள். கிஷோர் அவள் அழகில் மயங்கி போய் விட்டான். தாரா கிஷோர் அருகில் அமர்ந்தாள்.
கிஷோர், "ஹே ஸ்வீட் ஹார்ட் செம்மையாக இருக்க" என்றான். தாரா வெட்கப்பட்டு கொண்டே," நீங்களும் தான்" என்றாள்.
ஷீலா, "ரெண்டு பேரும் அப்புறமா பேசிக்கலாம். இப்ப கொஞ்சம் சைலண்ட்டா இருங்க" என்றார். இருவரும் அமைதியாகிவிட்டனர்.
நிச்சயதார்த்த பத்திரிகை வாசிக்கப்பட தாராவும் கிஷோரும் மோதிரம் மாற்றிக்கொண்டனர். நிச்சயதார்த்தம் சிறப்பாக முடிவடைந்தது. அனைவரும் மணமக்களை வாழ்த்தி விட்டுச் சென்றனர்.....
நட்சத்திரா சூர்யாவை கவனிக்க விஜய் யாரையோ சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் . நட்சத்திரா ஆர்வத்தில் திரும்பி பார்க்க அங்கே விபிஷா நின்றிருந்தாள். நட்சத்திரா,' ஓ.... கதை அப்படி போகுதா' என்று நினைத்தவள் விஜயிடம் சென்று," அண்ணா அண்ணா" என்று அழைத்தாள்.
விஜய் இவ யாரை கூப்பிட்றா என்று திரும்பிப் பார்க்க பின்னாடி யாருமில்லை. நட்சத்திரா, "விஜய் அண்ணா உங்கள தான்" என்றாள். விஜய், "நான் உனக்கு அண்ணனா?" என்றான். நட்சத்திரா, "விபிஷாவை கட்டிக்க போறவரு எனக்கு அண்ணா தானே" என்றாள். விஜய் இதைக் கேட்டு முழித்தான்.
நட்சத்திரா, "அண்ணா நீங்க விபிஷாவிற்கு ரூட்டுவிடுறது எனக்கு தெரியும் கவலைப்படாதீங்க அண்ணா. நான் உங்க லவ்வுக்கு ஹெல்ப் பண்றேன். நீங்க என் லவ்வுக்கு ஹெல்ப் பண்ணுங்க" என்றவள் டீல் என்று கையை நீட்ட விஜய் சந்தோஷத்துடன் கையை பதிலுக்கு நீட்டினான்.....

விபிஷா வருவதைப் பார்த்த நட்சத்திரா
"சரிங்கண்ணா அப்புறம் பேசலாம்" என்று சென்றுவிட்டாள். நிச்சயம் முடிந்து அனைவரும் கிளம்பினர்.
சதீஷ் நட்சத்திராவிடம், "மச்சி அந்த பிங்க் கலர் டிரஸ் போட்ட பொண்ணு தான் நான் சொன்ன பொண்ணு" என்றான்.
நட்சத்திரா, "டேய் அவ சூர்யாவோட தங்கச்சிடா" என்றாள். சதீஷ், "அப்போ என் வேளை ஈஸியாகிடுச்சு. மச்சி மச்சி போய் அவகிட்ட பேசி நம்பர் வாங்கிதா மச்சி" என்றான்.
நட்சத்திரா, "போடா டேய். ஏற்கனவே அவன் என்னை முறைச்சிட்டு திரிகிறான் . இதுல இது வேறயா" என்றாள்.
சதீஷ், "மச்சி ப்ளீஸ் எனக்காக இது கூட செய்ய மாட்டியா? உனக்காக நான் எவ்வளவு பண்ணி இருக்கேன்" என்று கெஞ்சினான்.
நட்சத்திரா, "சரி சரி ரொம்ப கெஞ்சாத நான் போய் பேசுறேன்" என்றாள்.....
நட்சத்திரா அனுயாவிடம் சென்று, "ஹாய்....." என்றாள். அவள் யாரென்று பார்க்க நட்சத்திரா, "நான் பொண்ணோட சிஸ்டர்" என்றாள். அனுயா, "ஓ.... நான் மாப்பிள்ளையோட சிஸ்டர்" என்றாள். பின் சில பல நல விசாரிப்புக்கு பின் நட்சத்திரா அவளிடம் நம்பரை வாங்கிவிட்டாள்.
சதீஷ் நட்சத்திராவை பாராட்டியே தள்ளிவிட்டான். நட்சத்திராவின் குடும்பத்தினர் மண்டபத்தில் இருந்து வீட்டுக்கு கிளம்பினர்.
நட்சத்திரா, "அம்மா பர்ஸை மண்டபத்திலே மிஸ் பண்ணிட்டேன். போய் எடுத்துட்டு வரேன் என உள்ளே ஓடியவள் சூர்யாவிடம் போய் வரேன் மாமா" என்று கண்ணடித்து விட்டு சென்றாள்........
மறுநாள் வகுப்பில் ஆசிரியர் பாடம் எடுத்துக் கொண்டிருக்க சூர்யா தீவிரமாக நட்சத்திராவைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தான். இவ வேற மாமா மாமான்னு உயிரை வாங்கிட்டு இருக்கா. அவ வரட்டும் அவளை திட்டிவிட்டுறேன் என நினைத்துக் கொண்டிருந்தான்.
விஜய், "டேய் மச்சான் என்னடா கிளாஸ் கவனிக்காம ஏதோ யோசனையாக இருக்க" என்றான். சூர்யா, "ஒன்னும் இல்லடா" என்று சமாளித்து விட்டான். கிளாஸ் முடிந்தது. எல்லோரும் வகுப்பறையை விட்டு வெளியேறினர். அதேசமயம் நட்சத்திரா விற்கும் கிளாஸ் முடிய, நட்சத்திரா சூர்யாவை நோக்கி வர சூர்யா 'வாடி வா உனக்கு இருக்கு' என நினைத்துக்கொண்டான்......
கவிதைகள் தொடரும்....
 
  • Like
Reactions: Sumiram

Janu murugan

Moderator
Staff member
Jun 10, 2020
43
20
8
20
View attachment ei5KHV832367~2.jpg
நட்சத்திரா சூர்யாவை நோக்கி வர 'சூர்யா வாடி வா உனக்கு இருக்கு' என நினைத்துக்கொண்டான்.


நட்சத்திரா வந்து சூர்யாவிடம் பேசாமல் "விஜய் அண்ணா எப்படி இருக்கீங்க?" என்றாள்.

இதைக் கேட்ட சூர்யாவிற்கு புஸ் என்றாகி விட்டது. 'என்ன இவ என்கிட்ட பேசாம இவன் கிட்ட பேசுறா என்று நினைத்தான். அவன் மனசாட்சி ஏன் அவ உன்கிட்ட பேசலன்னு பீல் பண்றீயா? எனக் கேட்டது. அவன் நான் எதுக்கு அவ பேசலன்னனா ஃபீல் பண்ண போறேன். நான் அவளை திட்டுறதுக்கு தான் சந்தர்ப்பம் எதிர் பார்த்திட்டு இருக்கேன்' எனக்கு தனக்குத்தானே சமாதானம் கூறிக் கொண்டான்.....

விஜய்யும் நட்சத்திராவும் ஏதோ சிரித்து பேசிக் கொண்டு இருந்தனர். நட்சத்திரா விஜயை அண்ணா என அழைப்பது அப்போதுதான் கவனித்தான்.
சூர்யா, "மச்சான் எதுக்கு அவ உன்ன அண்ணான்னு கூப்பிட்றா?" என கேட்க,
நட்சத்திரா, "நான் உங்களை மாமான்னு கூப்பிட கூடாது என்று சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கு. ஆனால் என் அண்ணாவை நான் எப்படி வேணா கூப்பிடுவேன் என்றவள், விஜய் அண்ணா சாப்பிட்டீங்களா?. ரெண்டு நாளா உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன். ஏன் இப்படி இளைச்சு போயிட்டீங்க அண்ணா?" என்றாள்.
சூர்யா, 'அடிப்பாவி! பார்த்து ரெண்டு நாள் தான் ஆச்சு. அதுக்குள்ள இளைச்சுட்டானா?' என நினைத்து அவளை பார்த்தான் .
விஜய், "என்னம்மா பண்றது?. ஒன்னுக்கு ரெண்டு தங்கச்சி வச்சிருக்கேன். உங்க வாழ்க்கை நல்லபடியாக இருக்கணும்னுதான் கவலைப்பட்டு இப்படி ஆயிட்டேன்" என்றான்.
சூர்யா பொறுமை இழந்து, "டேய் தாங்க முடியலடா உங்க நாடகம்" என்றான்.

நட்சத்திரா, "அண்ணா அவர் சொல்றத கண்டுக்காதீங்க. அவருக்கு பொறாமை என்றவள் சரி நான் கிளம்புறேன் அண்ணா" என்று சென்றாள். சூர்யாவிற்கு அவள் தன்னிடம் பேசாதது என்னவோ ஏமாற்றமாக இருந்தது......

மறுநாள் காலை நட்சத்திரா தூங்கிக்கொண்டிருக்க, மல்லிகா, "நட்சத்திரா காலேஜுக்கு டைம் ஆயிடுச்சு கிளம்பு" என்று எழுப்பினார்.
நட்சத்திரா, "அம்மா நான் இன்னைக்கு லீவு. அக்கா கல்யாணத்துக்கு டிரஸ் எடுக்க போகனும் இல்ல" என்றாள்.
மல்லிகா, "ஏன்டி லீவு போட்டா உன் படிப்பு கெட்டுப் போயிடும். நீ வர வேண்டாம் நாங்களே போய் எடுத்துட்டு வர்றோம்" என்றார் .....
நட்சத்திரா, "அம்மா என்ன ரிவெஞ்சா? நான் வராமல் எப்படி மா?" என்றாள். இவர்கள் சண்டையை பார்த்து சந்திரசேகர், "மல்லிகா நம்ம வீட்டு கடைக்குட்டி, அவ இல்லாம எப்படி போக முடியும்? நட்சத்திரா நீ கிளம்பி வாமா" என்றார்......
நட்சத்திராவின் குடும்பம் அந்த துணிக்கடை வாசலில் வந்து இறங்கியது. சூர்யாவின் குடும்பம் ஏற்கனவே அங்கேயே காத்திருந்தனர்.
சந்திரசேகர், "கொஞ்சம் லேட்டாயிடுச்சு. மன்னிச்சிடுங்க சம்மந்தி' என்றார்.
ஷீலா, "என்ன அண்ணா ரெண்டு பொண்ணுங்க வச்சுக்கிட்டு சீக்கிரம் எப்படி வரமுடியும். சூர்யாவே டெய்லி ஒரு மணி நேரம் கண்ணாடி முன்னாடி நிற்பான்".....
சூர்யா, "அம்மா என்னம்மா?" என சினுங்கினான். ஷீலா, "டேய் உண்மையைதான் சொன்னேன். சரி வாங்க உள்ளே போலாம்" என அழைத்துச் சென்றார்......

சூர்யாவின் பின்னாடி வந்த நட்சத்திரா யாருக்கும் கேட்காத வண்ணம், "ஏன் மாமா என்னை பார்க்க எதுக்கு அவ்வளவு மேக் அப். நீ எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும் மாமா" என்றாள்.
சூர்யா, "காலையிலே என்னை கடுப்பு ஏத்தாத போய்டுடி" என திட்டிக் கொண்டிருக்கும் போது விஜய் வந்து விட்டான்.
விஜய், "என் தங்கச்சியை என்னடா சொல்லிட்டு இருக்க?".
நட்சத்திரா, "வாங்க அண்ணா . உங்க ஃபிரண்ட் என்னை திட்டிடாரு. என்னன்னு கேளுங்க" என்றாள்.
விஜய், "டேய் உனக்கு வேற வேலையே இருக்காதா? எப்ப பார்த்தாலும் என் தங்கச்சிய திட்டிக் கொண்டே இருக்க. இனிமே அவளை ஏதாவது சொல்லு உனக்கு இருக்கு. நட்சத்திராவிடம் நீ வாமா நாம போகலாம்" என கையைப் பிடித்து அழைத்து சென்றான்.....
சூர்யா, 'என் கூட இருக்கிறது எல்லாமே பைத்தியமா இருக்குது' என தலையில் அடித்துக் கொண்டான். அரை மணி நேரமாக அலசி தாராவிற்கு புடவை எடுத்தாயிற்று. பெரியவர்கள் எல்லோரும் துணிகளை அலசி கொண்டிருந்தனர்.
தாராவும் கிஷோரும் கிஷோருக்கு துணி எடுக்க முதல் தளத்திற்கு சென்று விட்டனர். எல்லோரும் டிரஸ் எடுத்து முடித்தாயிற்று. சூர்யாவிற்கு மட்டும் ஷீலா டிரஸ்ஸை வெகுநேரமாக தேடிக்கொண்டிருந்தார்.............

மல்லிகா, "அண்ணி ஏன் சூர்யா தம்பிக்கு மட்டும் இவ்வளவு நேரம் தேடுறீங்க?"...
ஷீலா, "சரியாய் கேட்டீங்க. இவனுக்கு மட்டும் எப்படி டிரஸ் எடுத்தாலும் திருப்தியே இருக்காது. அதான் இவ்வளவு நேரம்" என்றார்.
நட்சத்திரா தனக்கு ஒரு சேலையை எடுத்து வந்து சூர்யாவிடம், "மாமா இந்த சேலை எனக்கு எப்படி இருக்கு மாமா?" என்றாள்.
சூர்யா, "படு மோசமா இருக்கு" என்றான். நட்சத்திரா, "வாவ் அப்ப இந்த சேலைய தான் நான் எடுத்துக்குவேன் என்றவள் அலசி ஆராய்ந்து சூர்யாவிற்கு ஒரு டிரஸ்ஸை தன் சேலைக்கு மேட்ச்சாக எடுத்து அதை விஜயிடம் கொடுத்து, அண்ணா இதை சூர்யா கிட்ட கொடுங்க" என்றாள் .
விஜய், "டேய் மச்சான் நான் உனக்காக ஒரு டிரஸை அலைஞ்சு திரிஞ்சு எடுத்து இருக்கேன். இத ட்ரை பண்ணி பாரு" என்றான்.
அதை பார்த்த சூர்யா, "டேய் செம்மையா இருக்குடா. என்னை கரெக்டா புரிஞ்சு வச்சிருக்க. நான் போய் இத ட்ரை பண்ணி பார்த்துட்டு வரேன்" என்று டிரஸ்ஸிங் ரூமுக்கு ஓடினான். அந்த ப்ளூ கலர் ஜீன்ஸும் டி-சர்ட்டும் சூர்யாவிற்கே செய்தது போல இருந்தது........

சூர்யா டிரெஸ்ஸிங் ரூம் சென்று நட்சத்திரா எடுத்த டிரஸ்ஸை போட்டு வந்தான்.
ஷீலா, "சூர்யா சூப்பரா இருக்குடா. உனக்குனே செஞ்சது மாதிரி இருக்குடா".
சூர்யா, "எல்லாம் என் மச்சானோட செலக்சன்தாம்மா. அவன் தான் என்னை கரெக்ட்டா புரிஞ்சு வச்சிருக்கான்"
எல்லோரும் விஜயை பாராட்ட விஜய் "போதும் போதும் என்னை ரொம்ப புகழாதீங்க. எனக்கு கூச்சமா இருக்கு" என்க, நட்சத்திரா விஜய்யை பார்க்க அவன் முழித்தான். எல்லோரும் பர்சேஸ் செய்து விட்டு சாப்பிட ஒரு ஹோட்டலுக்கு சென்றனர்......


சூர்யா, "டேய் மச்சான் எப்படிடா இவ்வளவு சூப்பரா டிரஸ் எடுத்த?"

விஜய், "மச்சான் உண்மைய சொல்லவா?"
சூர்யா, "சொல்லுடா".
விஜய், "அந்த டிரஸ்ஸை என் தங்கச்சி தான் செலக்ட் பண்ணினனா"
இதைக் கேட்ட சூர்யாவின் முகம் அஷ்ட கோணலாகியது. நட்சத்திரா, "ஏன் மாமா நான் உன்னை எவ்வளவு தூரம் புரிஞ்சு வச்சிருக்கேன் பாரு. இதுக்குத்தான் என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்றேன்".....
சூர்யா விஜய் தலையில் நங்கென்று கொட்டி, "எல்லாம் உன்னால தான்டா எருமை மாடு" என்று திட்டினான்.
விஜய், "அம்மா சூர்யா என்னை அடிக்கிறான்"...
ஷீலா, "ஏன்டா சூர்யா பச்ச பிள்ளையை அடிக்கிற?"
சூர்யா, "யாரு பச்சபுள்ள? இவனா? செய்றது பூராம் குரங்கு சேட்டை"
ஷீலா, "அடிக்கிற அளவுக்கு அவன் என்னடா பண்ணான்?"
சூர்யா, "அது...... எனத் திணற விஜய் முடிஞ்சா சொல்லுடா என்பதுபோல் நக்கலாக பார்த்தான். நட்சத்திரா இதைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.......

சூர்யா, "அது எனக்கும் விஜய்க்கும் நடுவுல ஆயிரம் இருக்கும். நீங்க தலையிடாதீங்க"....
ஷீலா, "ஆமாடா இப்பதான் அடிச்சிட்டிங்க அப்புறம் கொஞ்சிக்கோங்க"
பின் கல்யாணத்துக்கு தேவையானவற்றை பர்சேஸ் செய்து விட்டு எல்லோரும் வீடு திரும்பினர்.....
. நட்சத்திரா மாமா மாமா என்று சூர்யா பின்னாடியே சுற்றிக் கொண்டிருந்தாள். திருமணநாள் நெருங்குவதால் தாரா வேலைக்கு செல்லவில்லை.
தாராவும் கிஷோரும் போன் மூலம் காதலை வளர்த்துக் கொண்டிருந்தனர். இரவு 12 மணி தாராவின் வீட்டில் நட்சத்திரா பில்லோவை காதில் வைத்து அழுத்திக் கொண்டிருந்தாள். இருந்தும் தாரா போனில் பேசுவது அவள் காதில் தெளிவாக கேட்டது.

நட்சத்திரா, "அவனவன் இருக்க கடுப்புல இவ வேற என்ன வயிறெரிய வைக்கிறா" என புலம்பினாள். நட்சத்திரா தாராவிடம், "ப்ளீஸ்டீ காலைல பேசிக்கலாம்".
தாரா, "ப்ளீஸ்டி ஒரு அஞ்சு நிமிஷத்துல வச்சிட்றேன்"
நட்சத்திரா, "இதோட பத்து தடவை அஞ்சு நிமிஷம் சொல்லிட்ட என்றவள் தாராவிடம் போனை புடுங்கி யோவ் மாமா" என்க கிஷோர், "என்னம்மா மரியாதை தேயுது"
நட்சத்திரா, "இருக்க கடுப்புல இன்னும் கொஞ்ச நேரத்துல இருக்க மரியாதையும் காணாம போயிடும். இப்ப நீங்க போனை வைக்கல கல்யாணம் பண்ணாம ரெண்டு பேருக்கும் டிவோஸ் வாங்கி கொடுத்துடுவேன். ஒழுங்கா போனை கட் பண்ணிட்டு போய் தூங்குற வேலையை பாருங்க. காலைல பேசிக்கலாம்" என்று போனை கட் பண்ணினாள்.
தாரா முறைக்க, "என்ன முறைக்கிற உனக்கும் சேர்த்துதான் சொன்னேன்" போய் படு என்றவள் பெட்ஷீட்டை இழுத்துப் போர்த்தி படுத்து விட்டாள்.......
சில நாட்கள் கழித்து
கல்யாண மண்டபம் கலை கட்டியிருந்தது. மண்டபத்தின் வாசலில் தாரிகா வெட்ஸ் கிஷோர் இருந்த போர்டு வெல்கம் என்ற வாசகத்துடன் அனைவரையும் வரவேற்றது. வயசு பெண்கள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்க இளைஞர்கள் அவர்களை சைட் அடித்துக் கொண்டிருந்தனர்.....
விபிஷா வாசலில் நின்று பன்னீர் தெளித்து அனைவரையும் வரவேற்று கொண்டிருந்தாள். மணமகன் அறையில் கிஷோரை அவனது நண்பர்கள் கிண்டல் அடித்து ஒரு வழி பண்ணிக் கொண்டிருந்தனர்.
மணமகள் அறையில் நட்சத்திரா ஒவ்வொரு நகையாக மாற்றி போட்டு அது நல்லா இல்லை இது நல்லா இல்லை என்று அலப்பறை பண்ணிக் கொண்டிருந்தாள்.
தாரா, "நட்சத்திரா இன்னைக்கு எனக்கு தான் கல்யாணம். உனக்கு இல்லை, சோ ப்ளீஸ் இன்னைக்கு ஒரு நாளாவது நான் ஹீரோயினா இருக்கேன்டி" என்று கெஞ்சினாள்.
நட்சத்திரா, "சரி போனாப் போகுது பொழச்சுப் போ என்று விடுறேன் இன்னைக்கு ஒரு நாள் தான்"....சூர்யா ஓடியாடி தன் பெற்றோர் சொன்ன வேலைகளை செய்து கொண்டிருந்தான். பார்ப்பவர்கள் சூர்யா டிரஸ் சூப்பர் எனப் பாராட்டினார்கள்.
சூர்யாவே 'அவ நம்மள இந்த அளவு நல்லா புரிஞ்சு வச்சிருக்காளா?' என யோசிக்க ஆரம்பித்துவிட்டான்.
'ஐயோ! லேட் ஆயிருச்சே சூர்யா நம்மள மர்டர் பண்ணிடுவான்' என புலம்பிக் கொண்டு வந்த விஜய் விபிஷாவை பார்த்துவிட்டான். ஐய்! நம்ம ஆளு சூப்பரா இருக்கா என்று சிரித்துக் கொண்டே சென்றான்.
விபிஷா பன்னீர் தெளித்து வரவேற்க விஜய் சிரித்துக் கொண்டே நின்றான். விபிஷா, 'இவர் என்ன லூசா இப்படியே சிரிச்சு கிட்டே நிற்கிறார்' என நினைத்தாள்.
சூர்யா வந்து, "டேய் மச்சான் இதான் வர்ற நேரமா? உனக்கு இருக்கு" என அவனை கழுத்தை பிடித்து இழுத்துச் சென்றான். விஜய், "கொலை கொலை" என அலற இதை பார்த்து சிரித்தாள் விபிஷா.......
நட்சத்திரா, "என்னடி தனியா சிரிக்கிற?"
விபிஷா, "இல்லடி விஜய் சீனியர் காமெடி பண்ணிட்டு இருந்தாரு. அதை பார்த்து தான் சிரிக்கிறேன்".
நட்சத்திரா, அவளை பார்த்து ஒரு மார்க்கமாக சிரித்தாள். விபிஷா, "என்னடி அடுத்து உனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சா?"
நட்சத்திரா, "ஆமா காதல் பைத்தியம் பிடிச்சிருச்சு" என்று சூர்யாவை நோக்கி சென்றாள்.....
கவிதைகள் தொடரும்...
 
  • Like
Reactions: Sumiram

Janu murugan

Moderator
Staff member
Jun 10, 2020
43
20
8
20
நட்சத்திரா சூர்யாவை நோக்கி சென்றாள். சூர்யா இவள் வருவதைப் பார்த்து அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தான். நட்சத்திரா அவன் பின்னாலே நிழல் போல தொடர்ந்து கொண்டிருந்தாள். அவன் மறந்தும் கூட அவளை திரும்பிப் பார்க்கவில்லை.....

சதீஷ் அனுவுடன் பேசிக் கொண்டிருந்தான். நட்சத்திரா இதை பார்த்து ஆச்சரியமடைந்து சதீஷிடம், "மச்சி என்ன கரெக்ட் பண்ணிட்ட போல"....
சதீஷ் இதைக் கேட்டு முழித்தான். அனு புரியாமல் பார்த்தாள். நட்சத்திரா இதையெல்லாம் கவனிக்காமல் பேசிக் கொண்டே சென்றாள். நட்சத்திரா, "நானும் இவ்வளவு நாளா சுத்துறேன். ஒன்னும் நடந்த பாடு இல்ல. பரவால்லை நீயாவது சந்தோசமா இரு என்றவள், அனுவிடம் இவன் ரொம்ப நல்ல பையன். உன்னை நல்லா பாத்துப்பான்" என்றாள். அனு சதீஷை முறைத்து விட்டு சென்றாள்.......

சதீஷ் தலையில் கைவைத்து, "அடிப்பாவி! இப்பதான் அவகிட்ட பிரண்டானேன். ஆனால் அதுக்குள்ளேயும் கழட்டி விட்டுட்டியே"....
இதைக் கேட்ட நட்சத்திரா, "சாரி மச்சி தெரியாம பண்ணிட்டேன்" என அசடு வழிந்தாள்.

சதீஷ், "செய்யுறதை செஞ்சிட்டு சாரி சொல்றியா?" என அவளை அடிக்க வர நச்சத்திரா, "காப்பாத்துங்க...... என கத்திக்கொண்டே ஓடியவள் எதிரே வந்த பெண்ணின் மீது மோதிவிட்டாள்.....
அவள் நவநாகரீக உடை அணிந்து இருந்தாள். திமிர் அலட்சியம் கொண்ட பார்வை என எல்லாம் அளவுக்கு அதிகமாக இருந்தது. முடியை தோல்பட்டை வரை வெட்டி விட்டிருந்தாள்.
நட்சத்திரா இடித்த வேகத்தில் அப்பெண், "இடியட் உனக்கு அறிவே இல்லையா? இந்த லோ கிளாஸ் மக்களை யார் உள்ளேவிட்டது?" என முகம் சுளித்தாள்.
நட்சத்திரா, "யாரை பார்த்து லோ க்ளாஸ் என்கிற?" என்று அவள் பேச ஆரம்பிக்க ஷீலா இவர்களை சண்டையை பார்த்து அங்கு வந்து, "என்னாச்சு? என கேட்க, இருவரும் ஒரே நேரத்தில், அத்தை யாரு இவ? என்று கேட்டனர் .
அவர் சிரித்துக்கொண்டு, "நட்சத்திரா இது என் அண்ணன் பொண்ணு ரேஷ்மா. ரேஷ்மா இது நம்ம தாரா தங்கச்சி நட்சத்திரா" என்றார்.

ரேஷ்மா நட்சத்திராவை அலட்சியமாக பார்த்தாள். நட்சத்திரா "அத்தை தெரியாமல் அவ மேல மோதிட்டேன். அதுக்கு சாரி கூட கேட்டேன். ஆனா இவ ரொம்ப பேசுறா அத்தை"...

ரேஷ்மா, "அத்தை எதுக்கு இந்த மாதிரி லோ கிளாஸ் மக்கள் கிட்ட எல்லாம் ரிலேஷன் வச்சுக்குறீங்க? எப்படி பிஹேவ் பண்ணனும் கூட தெரியல இவங்களுக்கு. இதுக்கு தான் கலா பெரியம்மா பொண்ணு ரீமாவ கிஷோர் மாமாக்கு மேரேஜ் பண்ணலாம்ன்னு சொன்னேன்" சீ என்று அவளை அருவருப்பாக பார்த்து விட்டு சென்றாள்......
அவள் செயலில் நட்சத்திரா வருத்தம் அடைந்தாள். ஷீலா அவள் முக வாட்டத்தைப் பார்த்து, "நட்சத்திரா நீ ஒன்னும் தப்பா நினைச்சுக்காதமா. அவ எப்பவுமே அப்படிதான்"..
நட்சத்திரா தன்னை இயல்பாக்கி கொண்டு, "நான் ஒன்னும் நினைக்கல அத்தை. நிறைய வேலை இருக்கும் போய் பாருங்க" என அவரை அனுப்பி வைத்தாள்......
நட்சத்திர தன் வருத்தத்தை மறைத்துக்கொண்டு சதீஷை தேடினாள். சதீஷ் அனுவிடம் கெஞ்சி கொஞ்சிக் கொண்டிருந்தான் .

நட்சத்திரா அவன் முதுகில் அடித்து, "ஏன்டா எருமை மாட்டு பயலே! என்ன அந்த பிசாசு கிட்ட மாட்டி விட்டுட்டு நீ இங்க கெஞ்சிகிட்டு இருக்க. அனு இவன் ரொம்ப கெட்ட பையன். இவன் பிரண்ட்ஷிப்பை கட் பண்ணிடு"...

சதீஷ், "நட்சுமா நீ ரொம்ப லேட்டு. அவ எனக்கு ஓகே சொல்லிட்டா. இப்ப நான் அவகிட்ட கொஞ்சிட்டு இருந்தேன்"....
நட்சத்திரா, "இப்பவும் நான் தான் அவுட்டா? போடா உன் கூட பேச மாட்டேன்" என கோபித்துக் கொண்டு சென்றாள். சதீஷும் அனுவும் அவளைப் பார்த்து சிரித்தனர்.....
மல்லிகா, "நட்சத்திரா நேரமாயிடுச்சு. போய் தாராவை கூட்டிட்டு வா"
நட்சத்திரா, "இதோ போறேன்மா" என வேகமாக ஓடினாள் .
நட்சத்திரா தாராவிடம், "மேக்கப் போட்டது போதும். பொண்ணு அழைச்சிட்டு வரச் சொன்னாங்க" என அவளை அழைத்து சென்றாள்.
தாரா பட்டுப்புடவையில் தேவதையாக நடந்து வந்தாள். தாராவை அழைத்து வந்த நட்சத்திராவை இப்போது தான் சூர்யா கவனித்தான். நட்சத்திரா இன்று அழகாக இருப்பது போன்று சூர்யாவிற்கு தோன்றியது.....

தாரா பெண்ணுக்கே உரிய வெட்கத்துடன் குனிந்த தலை நிமிராமல் வந்து அமர்ந்தாள். கிஷோர், "என்ன பொண்டாட்டி? உனக்கு இன்னைக்கு ஓவரா வெட்கம் வருதே!"
தாரா, "சும்மா இருங்க எல்லோரும் பார்க்கிறாரங்க" என்று கன்னம் சிவந்தாள்.
ரேஷ்மா சூர்யாவை உரசிக்கொண்டு நின்றாள். இதைப்பார்த்த நட்சத்திராவிற்கு கோபம் புசுபுசுவென்று வந்தது. சூர்யாவை கொலை வெறியுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.
எதேச்சையாக அவள் புறம் திரும்பிய சூர்யா அவள் முகத்தை பார்த்து 'இந்த பைத்தியம் எதற்கு நம்பளை முறைக்குது என யோசித்தவன் ரேஷ்மா உரசிக் கொண்டு நிற்க இவ வேற என எரிச்சலாகி திட்ட போனவன் இதுக்குத்தான் இவ இப்படி முறைக்கிறாளா?'....சூர்யா, "ரேஷ்மா வா இந்த பக்கம் நில்லு" என்று அவள் கையைப் பிடித்து கொண்டான்.
நட்சத்திராவிற்கு கோபம் அதிகமாகியது. 'சூர்யா நல்லா வயிறு எரியட்டும். எவ்வளவு தடவை என்ன கடுப்பேத்தி இருக்கா' என உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்......

ஐயர் மந்திரங்களை கூற கிஷோர் தாராவின் கழுத்தில் மங்கல நாண் பூட்டி தன்னில் சரி பாதியாக ஏற்றுக் கொண்டான். அட்சதை தூவி அனைவரும் வாழ்த்தினர்.
கிஷோரும் தாராவும் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள். பெற்றோர்கள் மனம் நிறைந்தது. திருமண சடங்கு முடிய சொந்த பந்தங்கள் கிளம்ப தொடங்கினர்.......

சூர்யா நட்சத்திராவை வெறுப்பேற்றுவதற்காகவே ரேஷ்மாவுடன் சுற்றிக் கொண்டிருந்தான்.
நட்சத்திரா விஜயிடம், "டேய் அண்ணா! லூசு, எருமை மாட்டு அண்ணா" என திட்ட....
விஜய், "ஏம்மா அண்ணனை திட்டுற?"
நட்சத்திரா, "அங்க பாரு என் வாழ்க்கையில ஆப்பு வைக்க ஒருத்தி வந்து இருக்காள். என்னமோ கம் போட்டு ஒட்டின மாதிரி ரெண்டு சுத்துதுங்க. இப்ப போய் அவங்கள பிரிச்சுவிடலை உன்னை பிரிச்சு மேஞ்சுடுவேன்"....
விஜய், "தங்கச்சி ஏம்மா ஏன் இப்படி கோபப்படுற? அண்ணா எப்படி அவர்களை பிரிச்சுவிடறேன் மட்டும் பாரு" என்று வேகமாக சென்றான்.......

விஜய் சூர்யாவிடம், "மச்சான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் கொஞ்சம் வாடா"
சூர்யா நட்சத்திரா பதட்டத்துடன் நகத்தை கடிப்பது பார்த்து இது இவள் வேலைதானா? என நினைத்தவன், "மச்சான் ரேஷ்மாவுக்கு தெரியாம என் வாழ்க்கையில எந்த ஒரு சீக்ரெட்டும் இல்லை இங்கேயே சொல்லுடா"...
இதைக் கேட்ட நட்சத்திரா விஜயை பார்த்து கழுத்தில் கைவைத்து வேலையை முடிக்காமல் வந்த உன்ன க்ளோஸ் பண்ணி விடுவேன் என சைகை செய்தாள்.
விஜய் 'விட்டா இவ நம்பல மண்டபத்திலே கொன்று புதைச்சிடுவா போலையே!. என்ன செய்றதுன்னே தெரியலையே' என மனதிற்குள் புலம்பினான்......
அப்போது அங்கு வந்த ஷீலா, "டேய் சூர்யா அப்பா உன்னத் தேடிட்டு இருக்காரு போடா" என்றார்.
விஜய்க்கு ஷீலா அவனை காப்பாற்ற வந்த தெய்வமாக தெரிந்தார். சூர்யா, "இதோ போறேன்மா" என்று சென்று விட்டான்.
விஜய் ஷீலாவை கட்டிக்கொண்டு, "லவ் யூ மா" என்றான்.
ஷீலா, "என்னடா திடீர்னு என் மேல பாசம் மழை பொழியுற?"
விஜய், "எனக்கு எப்பவுமே உங்க மேல பாசம் இருக்கும். அப்பப்ப வெளி காட்டுவேன்" என்று சிரித்தான் .
ஷீலா, "சரி சரி ரொம்ப ஐஸ் வைக்காதே!. வேலை தலைக்கு மேலே இருக்கு நான் போய் பார்க்கிறேன்" என கிளம்பினார் .
நட்சத்திரா, "விஜய் அண்ணா சாரி அண்ணா கோவத்துல திட்டிட்டேன்"
விஜய், "சரி விடும்மா நான் ஒன்னும் நினைக்கலை"
நட்சத்திரா, "எனக்கு கில்ட்டியா இருக்குண்ணா. சரி வாங்க உங்க லவ்வுக்கு ஹெல்ப் பண்ணுறேன் என அவனை இழுத்துச் சென்றவள் விபிஷாவிடம் விபி விஜய் அண்ணா உன்கிட்ட ஏதோ சொல்லணும்னு சொன்னாரு. விஜயிடம் சொல்லிட்டு வாங்க அண்ணா நான் போறேன்" என்று சென்று விட்டாள்......நட்சத்திரா விஜய் லவ்வுக்கு உதவி பண்றேன் என்ற பேர்வழியில் விபிஷாவிடம் சென்று, "விபி விஜய் அண்ணா உன்கிட்ட ஏதோ சொல்ல வேண்டுமாம் , சொல்லிட்டு வாங்க அண்ணா நான் போறேன்" என்று சென்றுவிட்டாள்.
சிறிது நேரத்துக்குப் பிறகு வந்த விஜயிடம், "என்ன அண்ணா ஓகேவா?" என்றாள் நட்சத்திரா.
விஜய், "அட நீ வேற ஏம்மா?. எனக்கு பயத்துல பேச்சே வரலை. எல்லாம் ஊத்திகிச்சு"...
நட்சத்திரா, "சரி விடுங்க அண்ணா. ஒன் சைடு லவ்லதான் கிக்கே இருக்கு" என்றாள்.......

இவர்கள் பேசிக் கொண்டிருக்க மல்லிகா வந்து நட்சத்திராவிடம், "இங்கே என்ன பண்ணிட்டு இருக்கீங்க? வாங்க கிளம்பலாம்" என அழைக்க எல்லோரும் கிளம்பினர். கிஷோரும் தாராவும் ஒரு காரில் கிளம்பினார்......
நட்சத்திர விஜயிடம், "அண்ணா சீக்கிரம் வாங்க . அதுங்க ரெண்டு பேரும் ஒரே கார்ல போயிட போறாங்க" என விஜய்யை இழுத்துக் கொண்டு ஓடினாள்.
ஆனால் அதற்கு முன்பே ரேஷ்மாவும் சூர்யாவும் ஒரே காரில் அருகருகே அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த நட்சத்திரா, "அண்ணா......" என்று சோகமாக முகத்தை வைத்து உதட்டை பிதுக்கினாள்.
விஜய், "நீ பீல் பண்ணாதம்மா. அண்ணா உன் கூட வரேன்" என அவளை வேறு காருக்கு கூட்டி சென்றான்.
இதை பார்த்த சூர்யா மனதுக்குள் குதுகலமாக சிரித்தான். அரை மணி நேர பயணத்தில் சூர்யாவின் வீட்டை வந்தடைந்தனர். தாராவும் கிஷோரும் ஆலம் சுற்றி வரவேற்க்கப்பட்டனர்......
ஷீலா, "அனு போய் பாலும் பழமும் எடுத்துட்டு வா" என்க அனு பாலும் பழமும் எடுத்துட்டு வந்தாள்.
கிஷோரும் தாராவும் பாலும் பழத்தையும் உண்டனர். தாரா பூஜை அறையில் விளக்கு ஏற்றினாள். அனைவரும் கடவுளை வேண்டிக் கொண்டனர். தாரா 'கடவுளே நான் ஆசைப்பட்ட வாழ்க்கை எனக்குக் கொடுத்துட்ட. என்னோட தங்கச்சி ஆசைப்பட்ட வாழ்க்கையை நல்லபடியாக கொடு' என வேண்டினாள்......

மல்லிகாவும் சந்திரசேகரும், "சரி நாங்க கிளம்புறோம்" என்றனர்.
ஷீலா, "என்ன அண்ணா கொஞ்ச நேரம் இருங்க"...
சந்திரசேகர், "இல்லம்மா வேலை இருக்கு. இப்ப கிளம்பினால் தான் சரியாக இருக்கும்"
தாராவிற்கு கண்கலங்கியது. மல்லிகாவை அணைத்துக் கொண்டாள். மல்லிகா, "என்ன சின்ன பிள்ளை மாதிரி அழுதுட்டு இருக்க? நாங்களும் இதே ஊர்ல தான் இருப்போம். அரை மணி நேரத்துல வந்து விடலாம்" என்று அவள் கண்ணை துடைத்தார். நட்சத்திராவிற்கும் கண்கள் கலங்கியது......

தாரா, "அம்மா நட்சத்திரா இன்னைக்கு ஒரு நாள் மட்டும் என்கூட இருக்கட்டும்".
மல்லிகா யோசிக்க ஷீலா, "என்ன யோசிக்கிறீங்க? இதுவும் உங்க வீடு மாதிரி தான். நட்சத்திராவை நாங்க பார்த்துக்குறோம்" ...
நட்சத்திராவை விட்டுட்டு மல்லிகாவும் சந்திரசேகரும் கிளம்பினர்.........
சொந்த பந்தங்கள் அனைவரும் கிளம்பினர். ரேஷ்மாவின் பெற்றோர் கிருஷ்ணவேணியும் மோகனும் ஏதோ அவசர வேலை இருப்பதாக கூறி ரேஷ்மாவை மட்டும் விட்டுச்சென்றனர்.
நட்சத்திராவிற்கு இதைக் கேட்டதும் காட்டமாக இருந்தது. விஜய் அவள் முகத்தை பார்த்துவிட்டு, "நான் பார்த்துக்குறேன் அவளை இங்க இருந்து ஓட வைக்கிறது என் பொறுப்பு" என்றான்......

ஷீலா, "கிஷோர் தாரா நீங்க ரெண்டு பேரும் போய் ரெஸ்ட் எடுங்க" என்க இருவரும் ரூமுக்கு சென்றனர்.
ரேஷ்மா, "அத்தை எனக்கு டயர்டா இருக்கு நான் ரூமுக்கு போறேன்" என்று ஓடி விட்டாள்.
விஜயும் சூர்யாவும் வெளியே கிளம்பிவிட்டனர். நட்சத்திராவிற்கு தனியாக இருப்பது போல தோன்றியது.
ஷீலா கிச்சனில் சமைத்துக் கொண்டிருந்தார். நட்சத்திரா, "அத்தை நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணவா?"
ஷீலா, "நீ போய் ரெஸ்ட் எடு "என்றார்.
நட்சத்திரா, "அத்தை எனக்கு போரடிக்குது. குடுங்க நான் காய் கட் பண்றேன்"
ஷீலா, "உனக்கு சமைக்க தெரியுமா?" என்றார்.
நட்சத்திரா, "நான் கிச்சன் பக்கமே வந்தது இல்லை. ஆனால் தாரா நல்லா சமைப்பா. எனக்கு சமைக்கிறது எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்ல அத்தை"
ஷீலா, "அப்போ இங்கே எதுக்கு கிச்சன் பக்கம் வந்து இருக்க?"
நட்சத்திரா, "அதான் சொன்னேனே அத்தை போரடிக்குது. அதான் வந்தேன்" என்றாள்.
ஷீலா, "நான் வேலையை பார்த்துக்கிறேன் . மேல சூர்யா ரூம் பர்ஸ்ட் ரூம். அதுக்கு பக்கத்துல ஒரு ரூம் இருக்கு அங்கே போய் ரெஸ்ட் எடு" என்றார்.
சூர்யா ரூம் என்று கேட்டவுடன் நடசத்திரா வேகமாக தலையை ஆட்டினாள். இரண்டே எட்டில் சூர்யா ரூமை அடைந்தாள்.....
நட்சத்திரா கதவை தள்ள அது ஈசியாக திறந்துகொண்டது. சூர்யாவின் ரூமுக்குள் நுழைந்தாள். அவன் அறை மிகவும் நேர்த்தியாக இருந்தது.
நட்சத்திரா 'என்ன இவன் ரூமை இப்படி சுத்தமாக வைச்சிருக்கான். நாம் ரூம் குப்பை மாதிரி இருக்குமே. இவன் நமக்கு ஆப்போசிட்டா இருக்கானே? என நினைத்தவள் சரி இவனையும் நம்மள மாதிரியே மாற்றி விடுவோம்' என தனக்கு தானே பேசிக் கொண்டாள்.
சூர்யாவின் சிறுவயது புகைப்படம் ஒன்றை பார்த்தவள் வாவ்! சூர்யா செமையா இருக்கடா என போட்டோவை பார்த்து பேசிக் கொண்டிருந்தாள். ஏன்டா சின்ன வயசுல கூட முரச்சுட்டு தான் இருப்பியா? என கொஞ்சிக் கொண்டிருந்தவள் பின்னாடி ஏதோ நிழலாட திரும்பினாள்......

அங்கே சூர்யா கைகளை கட்டிக்கொண்டு கதவில் சாய்ந்து நின்று கொண்டிருந்தான். அவள் சூர்யாவை எதிர்பார்க்காததால் அய்யய்யோ மாட்டிகிட்டேன என திரு திருவென விழித்தாள் .
சூர்யா, "என் ரூம்ல என்னடி பண்ணிட்டு இருக்க?"
நட்சத்திரா கையில் இருந்த போட்டோவை வேகமாக வைத்தவள் "ஒன்னும் பண்ணலையே சும்மா" என்றாள்.
சூர்யா, "சும்மா பாக்குறதுக்கு எதுக்கு ரூமுக்கு வந்த? சொல்லு டி"
நட்சத்திரா, "சும்மா தான் வந்தேன் என ஓட பார்க்க" சூர்யா அவள் கைகளைப் பிடித்து நிறுத்தி, "இல்ல நீ எதையோ எனக்கு தெரியாம எடுத்துட்டு போற. ஒழுங்கா ஏதோ திருடனன்னு சொல்லு" என்றான்.
நட்சத்திரா, "ஒன்னும் இல்லைன்னு சொல்றேன்ல என்ன விடு" என்றாள்.
சூர்யா அவள் இரண்டு கைகளை பிடித்து அவளை நெருங்கி, "இப்போ சொல்ல போறியா? இல்லையா?".....
நட்சத்திராவிற்கு அவனை இவ்வளவு அருகில் பார்க்க ஏதோ செய்தது. ஐயோ இவன் விடமாட்டான் போலயை என நினைத்துவள் இவனை எல்லாம் கவனிக்குற விதத்துல கவனிக்கணும் என்று எம்பி அவன் கண்ணத்தில் இதழ் பதித்தாள்.
சூர்யா அவளின் இந்த திடீர் தாக்குதலில் அதிர்ச்சியடைந்து அவளைப் பிடித்திருந்த கைகளை தளர்த்தினான். இதுதான் சமயம் என்று அவனிடமிருந்து விலகி ஓடி விட்டாள்.......

நட்சத்திரா சூர்யாவிடம் இருந்து தப்பித்து ஓடிவிட்டாள். அவள், "என்ன மாமா இவ்வளவு வீக்கா இருக்க? ஒரே ஒரு கிஸ்க்கே இப்படி சிலையாகிட்ட?"என்றாள்.
சூர்யா தலையை சிலுப்பி விட்டு "எவ்வளவு தைரியம் இருந்தா நீ இப்படி பண்ணி இருப்ப? உன்னை....." என்று அவன் அவளை அடிக்க துரத்த அவள் பக்கத்தில் இருந்த ரூம்க்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டாள்.
சூர்யா, "எப்படினாலும் நீ வெளியே வருவதான? அப்போ இருக்குடி உனக்கு" என்று திட்டி விட்டு சென்றான்.............

ரூம்க்குள் சென்றவள் தான் எடுத்து வந்த அவனது போட்டோவை மறைத்து வைத்தாள். மாலை நேரம் தாராவை ஷீலா ரெடி பண்ணிக் கொண்டிருந்தார்.
நட்சத்திரா அவருக்கு உதவி செய்து கொண்டிருந்தாள். ஷீலா, "நட்சத்திரா சூர்யாவும் விஜய்யும் ரூம் ரெடி பண்ண சொல்லியிருந்தேன். போயி ரொம்ப நேரம் ஆச்சு. என்ன பண்றாங்கன்னு போய் பாரு" என்றார்......
நட்சத்திரா சென்று பார்க்க இருவரும் கதை பேசிக் கொண்டிருந்தனர். நட்சத்திரா "விஜய் அண்ணா உங்களை மாமா கூப்பிடுறாங்க. ஏதோ முக்கியமான விஷயம் பேசனுமாம்" என்றாள்.
விஜய், "என்னையா? இதோ போறேன்" என்று சென்று விட்டான்......
விஜய் சென்ற பின்பும் நட்சத்திரா அங்கேயே நின்றிருந்தாள். சூர்யா அவளை பார்க்க அவள் தரையில் விரலால் கோலம் போட்டு கொண்டு இருந்தாள்.
சூர்யா, 'இப்ப என்ன பண்ணப் போகுதோ? இந்த பைத்தியம்' என்று நினைத்து விட்டு வேலையைத் தொடர்ந்தான்.
நட்சத்திரா, "மாமா..." என்க, சூர்யா, "ம்ம்.." என்றான்.
நட்சத்திரா, "மாமா....." என்று அழுத்தமாக அழைக்க, சூர்யா கடுப்பாகி, "என்னடி...?" என்றான்......
நட்சத்திரா, "மாமா நமக்கு கல்யாணம் ஆனா இப்படி தானே ப்ரஸ்ட் நைட்டுக்கு ரெடி பண்ணுவாங்க சோ...." என்று அவள் இழுக்க,
சூர்யா, "சோ..?" என்று கேள்வியாய் பார்க்க, நட்சத்திரா, "சோ ஒரு டெமோ பார்க்கலாமா?" என்றாள்.....
சூர்யா, "ஏய் நீ உன் எல்லை மீறி பேசுற. வயசுக்கு தகுந்த பேச்சா பேசுற?" என்று அவளை அடிக்க துரத்த அவள் கட்டிலை சுற்றி ஓடினாள்.
சூர்யா உன்னை என்று அவளை பிடித்து இழுக்க, அவள் ஓட முயற்சிக்க இருவரும் கட்டிலில் விழுந்தனர்.
நட்சத்திரா கீழே விழுந்து இருக்க சூர்யா அவள் மேல் விழுந்து இருந்தான். சூர்யாவிற்கு அவளை இவ்வளவு நெருக்கத்தில் பார்த்ததில் உணர்ச்சிகள் தூண்டப்பட்டது. நட்சத்திரா அவன் அடித்து விடுவானோ என்ற பயத்தில் கண்களை மூடிக்கொண்டாள்.
சூர்யாவிற்கு அவளின் கூந்தல் மணமும் மல்லிகை மணமும் ஏதோ செய்ய அவன் கைகள் அவளை அணைக்க முற்பட்டன......
சரியாக அதே நேரம் "அப்பா என்னை கூப்பிடவே இல்லையாம். இந்த நட்சத்திரா ஏன் பொய் சொன்னா? என புலம்பிக் கொண்டு வந்தவன் அந்த காட்சியை பார்த்து பின்னாடி திரும்பி கொண்டு, "அடச்சீ கருமம் புடிச்சவங்களா..." என திட்ட, சூர்யா சுயநினைவு பெற்று எழுந்து விட்டான்.
விஜய், "அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டு நீங்க ப்ரஸ்ட் நைட் கொண்டாடுறீங்களா?" என்றான்.......

நட்சத்திரா, "அண்ணா நான் எதுவும் பண்ணலை. எல்லாம் உங்க ஃப்ரண்டு தான் கல்யாணத்துக்கு முன்னாடி டெமோ பாக்கலாம்னு சொன்னாரு" என்றாள்.
விஜய், "இந்த பூனையும் பால் குடிக்குமான்னு இருந்துட்டு என்ன வேலை பார்க்கிற? இரு உன்னை அம்மாகிட்டே போட்டு கொடுக்கிறேன்" என ஓடினான்......

சூர்யா, "இருடி வந்து உன்னை பாத்துக்கிறேன்" என விஜய் பின்னால் ஓடினான்.
விஜய், "அம்மா....." என்று சொல்ல வர சூர்யா அவன் வாயை மூடிவிட்டான். சூர்யா "அம்மா ஒன்னும் இல்லை. எங்க பிரச்சனையை நாங்களே பார்த்துக் கொள்வோம் என்று அவனை இழுத்துச் சென்று, மவனே நீ மட்டும் உண்மையை சொன்ன நீ தண்ணி அடிச்சுட்டு உளறுன வீடியோவை யூடியூப்பில் போட்டு விடுவேன்" என மிரட்டினான்.
விஜய், "டேய் எங்க வீட்டில என்ன வச்சு செஞ்சிருவாங்க வேணாம் டா" என்றான்......
சூர்யா, "அந்த பயம் இருக்கட்டும் இப்ப சொல்லு பார்க்கலாம்" என அவனை ஷீலா முன் நிறுத்தினான்.
ஷீலா, "என்னடா விஜய் ஏதோ சொல்லவந்த?" என்றார்.
விஜய், "என்னால அந்த விஷயத்தை இப்போது சொல்ல முடியாதும்மா. ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன். சூர்யா சரி இல்ல மா"
ஷீலா, "டேய் ஏன்டா இப்படி உளறிட்டு இருக்க? சொல்ல வந்தது தெளிவா சொல்லு" என்றார்.
விஜய், "அம்மா என்அப்பா ரெண்டு தடவ கால் பண்ணிட்டாரு. டைம் ஆயிடுச்சு நான் கிளம்புறேன்" என ஓடிவிட்டான்.......

தாரா, ஷீலா சங்கர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க இருவரும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என அவளை வாழ்த்தி கிஷோர் ரூம்க்கு அனுப்பி வைத்தனர். அவர்களின் வாழ்வு இனிமையாக தொடங்கியது.....

நட்சத்திரா புது இடம் என்பதால் தூக்கம் வராமல் எழுந்து பால்கனிக்கு சென்று வானத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதேநேரம் சூர்யாவும் நட்சத்திராவிற்கு சொல்லி எப்படி புரிய வைப்பது என யோசித்து வானத்தை வெறித்துக் கொண்டிருந்தான்.
நட்சத்திராவிற்கு ஏதோ உள்ளுணர்வு தோன்ற அருகில் எட்டிப் பார்த்தாள். அவள் சூர்யாவை பார்த்து, "மாமா இங்க என்ன பண்ற? தூக்கம் வரலையா?" என்றாள்.
திடீரென்று அவள் குரலில் யோசனை கலந்தவன், "தூக்கம் வரல" என்றான்.
நட்சத்திரா, "என்ன மாமா ஏதோ தீவிரமா யோசிச்சிட்டு இருக்க?" என்றாள்.
சூர்யா, "அது உன்ன பத்தி தான்" என்றான்.
நட்சத்திரா ஆர்வமாக, "என்னை பத்தி என்ன மாமா யௌசிக்குற?" என்றாள்.
சூர்யா, "உனக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது என்று யோசிச்சிட்டு இருக்கேன்" என்றான்.
நட்சத்திரா, "நான் கூட இதைப்பற்றி தான் யோசிச்சிட்டு இருந்தேன். என் காதல உனக்கு எப்படி புரிய வைக்கிறது" என்று சொன்னாள்.
சூர்யா, "நீ எந்த காலத்திலும் திருந்த மாட்ட போய் படு" என்று ரூம்க்கு உள்ளே சென்று கதவை பூட்டிக் கொண்டான்.
நட்சத்திரா, "இவன் என்னைக்கு என் காதலை புரிஞ்சுகிட்டு என்னை ஏத்துக்கிறது" என பெருமூச்சு விட்டு உள்ளே சென்று விட்டாள்......

காலை சூரியன் தன் வேலையை செவ்வனே செய்ய இருள் மறைந்து வெளிச்சம் பரவியது . நட்சத்திரா எழுந்ததும், "அம்மா காபி...." என கத்திக் கொண்டே கீழே வந்தாள்.
ஷீலா புன்னகையுடன் காபி ட்ரேயை அவள் முன் நீட்ட அப்போதுதான் சூர்யா வீட்டில் இருக்கிறோம் என்ற நினைவு வந்து "ஹிஹிஹி மறந்துட்டேன் அத்தை.." என்று இழித்தாள்.
ஷீலா, "இதுல என்ன இருக்கு? எனக்கு ஒரு பொண்ணு இருந்தா இப்படித்தான் இருந்திருப்பாள்" என்றார்.
நட்சத்திரா, "அத்தை காபி சூப்பர்" என்றாள்.
ஷீலா, "தேங்க்யூ மா" என்றார்.
நட்சத்திரா, "அத்தை நான் போய் குளிச்சுட்டு கிளம்பறேன்" என்று படிகளில் ஏறினாள்...........

தனது அறைக்குச் சென்றவள் குளித்து கிளம்பி சூர்யாவின் ரூமை தட்டலாமா? என யோசிக்க அது திறந்து இருந்தது. சூர்யா அங்கு இல்லை பாத்ரூமில் சத்தம் கேட்க குளிக்குறானா? சரி கீழே போவோம் என்று ஹாலுக்கு வர ஷீலா, "வா நட்சத்திரா சாப்பிடு" என்றார்.
நட்சத்திரா டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பாட்டை ஒரு பிடி பிடித்து கொண்டிருந்தாள். விஜய் அங்கு வர நட்சத்திரா, "அண்ணா வாங்க" என சாப்பிட அழைத்தாள்.
விஜய், "இதோ வந்துட்டேன். இதுக்காகத்தான் வந்தேன்" என்றான்.

ஷீலா அவனுக்கு தட்டில் சாப்பாடு எடுத்து வைத்துவிட்டு சாப்பிடுங்க வந்துவிடுகிறேன் என கிச்சனுக்கு சென்றார்.
விஜய், "வாசனையே இப்படி தூக்குதே! சாப்பாடு டேஸ்ட் அள்ளும் போலையே" என அவன் சாப்பாட்டை வாயில் வைக்க போக, நட்சத்திரா அவன் கையை பிடித்தாள்.
விஜய் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற ரீதியில் அவளை பார்க்க நட்சத்திரா மேலே பார்வையை செலுத்தினாள்.
விஜய் மேலே பார்க்க ரேஷ்மா வந்து கொண்டிருந்தாள். நட்சத்திரா, "அவளை விரட்டுவதற்கு ஒரு வழியைச் சொல்லி விட்டு நீங்க சாப்பிடுங்க" என்றாள்.
விஜய் ஷீலா வருகிறாரா? என்று பார்த்து விட்டு ஓடிப்போய் படியில் தண்ணீர் ஊற்றிவிட்டு ஓடி வந்து உட்கார்ந்துவிட்டான்......

தூக்க கலக்கத்தில் எழுந்து வந்த ரேஷ்மா தண்ணீர் இருப்பதை பார்க்காமல் கால்வைக்க டைல்ஸ் வழுக்கிவிட்டது. "அம்மா......" என்ற அலறலுடன் கீழே விழுந்தாள்.
நட்சத்திராவும் விஜய்யும் இதை பார்த்து வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தனர். ஷீலா சத்தம் கேட்டு ஓடி வர இருவரும் சிரிப்பதை நிறுத்தி விட்டு என்னாச்சு? என்று பதறிக் கொண்டு ஓடி வந்தனர்.
ரேஷ்மா, "அத்தை வழுக்கி விழுந்திட்டேன் இடுப்பு வலிக்குது" என உதட்டை பிதுக்கிக் கொண்டு கூறினாள்.

சூர்யாவும் இவள் சத்தத்தை கேட்டு வந்து விட்டான். ரேஷ்மா வலியில் முனக, ஷீலா, "சூர்யா என்ன பாக்குற? அவளை தூக்கு ரூம்க்கு கூட்டிட்டு போய் எண்ணெய் தேய்த்துவிடலாம்" என்றார். இதைக் கேட்ட நட்சத்திராவிற்கு பகீரென்றது........
சூர்யா அவளைக் கைகளால் தூக்கிக் கொண்டு ரூம்க்கு சென்றான். ஷீலா அவன் பின்னாடியே சென்றார்.
நட்சத்திரா விஜய்யை கொலைவெறியுடன் முறைத்தாள். விஜய் "நான் எதும் வேணும்னே பண்ணலை" என கூறிக் கொண்டே அவன் பின்னால் நகர, நட்சத்திரா அவனை அடிக்க வர விஜய், "அண்ணனை ஏதும் பண்ணீடாதம்மா" என ஓடினான்.
நட்சத்திரா, "உன்னை சும்மா விடமாட்டேன்" என்று துரத்தினாள்.
விஜய், "இதோ பாரும்மா இப்படி திடீர்னு அடிதடியில் இறங்குனா?. நான் என்ன பண்றது எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்" என்றான்.
நட்சத்திரா, "உன்னை அவளை வீட்டை விட்டு துரத்த சொன்னா ரெண்டு பேரையும் கோர்த்து விடற. நீ எனக்கு அண்ணனா? இல்லை அவளுக்கு அண்ணனா? உன்னை சும்மா விடமாட்டேன்" என திட்ட விஜய் பின்னாடி எதையோ பார்த்து முழிக்க நட்சத்திரா திரும்பி பார்க்க சூர்யா அவர்களை முறைத்துக் கொண்டிருந்தான். நட்சத்திராவிற்கு பேச நா எழவில்லை...............
கவிதைகள் தொடரும்....
 
  • Like
Reactions: Sumiram