விழிகளிலே ஒரு கவிதை 21
வகுப்பு முடிந்து அனைவரும் வெளியே வந்தனர். நட்சத்திராவும் ஏதோ ஒரு பெண்ணுடன் தீவிரமாக பேசிக்கொண்டு வந்தாள். சூர்யா மனதிற்குள் வந்த அன்னைக்கே கதைபேச ஆளைப் புடிச்சுட்டா என நினைத்தான்.
ஷ்ரவன் நட்சத்திராவிடம் சென்று, "ஹாய் ஸ்டார் கிளாஸ், எப்படி போச்சு?" என்றான்.
நட்சத்திரா, "ஆங் சூப்பரா போச்சு..."
சூர்யா, இவனுக்கு எப்படி இந்த குட்டச்சியை தெரியும்? என யோசிக்க, ஷ்ரவன், "மச்சான் நான் சொன்னேன்ல காலையில ஒரு தமிழ்நாட்டு பொண்ண பார்த்தேன் என்று, அது இவங்க தான், பேரு நட்சத்திரா" என்றான்.
இதைக் கேட்ட சூர்யா ஹரீஷ் இருவருக்குமே அதிர்ச்சி. ஹரீஷ் ஏதோ சொல்ல வர சூர்யா தடுத்துவிட்டான். ஷ்ரவன் நட்சத்திராவிடம், "ஸ்டார் இது என் ஃப்ரண்ட்ஸ், ஹரிஷ் அண்ட் சூர்யா. இவங்க கூட தமிழ் தான்" என்றான்.
நட்சத்திரா, "ஓ.....அப்படியா! ஹாய்.." என்றாள். நட்சத்திராவுடன் வந்த பெண் தனக்கு நேரம் ஆவதாக கூறி கிளம்பி விட்டாள். ஷ்ரவன், நட்சத்திராவிடம் ஸ்டார் ஸ்டார் என பேச சூர்யாவிற்கு பற்றிக்கொண்டு வந்தது.
சூர்யா ஒரு முறைப்புடன் நின்றிருந்தான். நட்சத்திரா இப்போ எதுக்கு இவன் இந்த முறை முறைக்கிறான் என நினைத்து விட்டு ஷ்ரவனுடன் பேசிக் கொண்டிருந்தாள். ஷ்ரவன் நட்சத்திராவை விடுவதாயில்லை. சூர்யாவிற்கு அங்கே நிற்கமுடியவில்லை.
ஹரீஷ் சூர்யாவின் முகத்தை பார்த்துவிட்டான். விட்டா அவனை அடித்து விடுவான் போல என நினைத்து, "மச்சான் டைம் ஆயிடுச்சு, வா போகலாம் " எனக் கூறி அவனை இழுத்து வந்து விட்டான்.
ஷ்ரவனுக்கு வரவே மனசில்லை. "ஸ்டார் நாம நாளைக்கு பேசலாம்" என்று கூறி விடைபெற்றான். ஹரீஷ் தனது பைக்கில் கிளம்பிவிட்டான். நட்சத்திராவும் சூர்யாவும் பஸ்ஸில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். சூர்யா நட்சத்திராவை முறைத்துக் கொண்டிருந்தான்.
நட்சத்திரா வழக்கம் போல வழவழக்க சூர்யா இருந்த கடுப்பில், "பேசாம வரியா? இல்லை பஸ்ல இருந்து இறக்கிவிடவா?" என்று திட்டிவிட்டான். நட்சத்திரா வாயை மூடிவிட்டாள்.
வீட்டிற்கு வந்த பிறகும் சூர்யா இறுக்கத்துடன் சுற்றிக் கொண்டிருந்தான். நட்சத்திரா காபி போட்டுக் கொண்டுவந்து கொடுக்க சூர்யா வேண்டாமென மறுத்து விட்டான்.
நட்சத்திரா அவன் எதிரில் இருந்த சோபாவை இழுத்துப் போட்டு உட்கார்ந்தவள், "சொல்லு மாமா! என்ன ஆச்சு.... ஏன் கோவமா இருக்க? என்ன பிரச்சனை என்று சொன்னால் தான் சரி பண்ண முடியும்" என்றாள்.
சூர்யா, "நீ எதுக்கு அந்த ஷ்ரவனோட பேசிட்டு இருக்க. அவன் வேற உன்கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசுறான்" என்றான். நட்சத்திரா, ஓ சார்க்கு பொஸஸீவ்னெஸ்ஸா? என நினைத்து மனதிற்குள் சிரித்துக் கொண்டவள், "மாமா நான் காலையில அந்த சாய் தளத்தில் வழுக்கி விழ பார்த்தேன். அவர்தான் என்னை காப்பாற்றினார்."
"அவன் உன்னை ஸ்டார் ஸ்டார்னு கூப்பிடுறான். எனக்கு கேட்கவே எரிச்சலாக இருக்கு" என்றான் முகத்தை அஷ்ட கோணலாக்கி.
நட்சத்திராவிற்கு சூர்யாவை பார்த்து சிரிப்பு வந்துவிட்டது. கஷ்டப்பட்டு அதை கட்டுப்படுத்தி விட்டு, "மாமா என் பெயருக்கு என்ன அர்த்தம் என்று கேட்டார். அதான் சொன்னேன். அதனால அப்படி கூப்பிடுறேன் என்று சொன்னார் . நானும் சரி என்று சொல்லி விட்டேன்" என்றாள்.
சூர்யா, "இது எப்ப நடந்துச்சு..." என்றான் பொங்கி எழுந்து. நட்சத்திரா, "காலையில தான் மாமா" என்றாள்.
சூர்யா, "சரி சரி நடந்தது நடந்து போச்சு. இனிமேல் நீ அவன்கூட பேசாதே!" என்றான்.
நட்சத்திரா, "ஏன் மாமா? அவர பார்த்தா நல்லவரா தெரியுது" என்றாள்.
சூர்யா, "எனக்கு பிடிக்கலை... நீ பேசக்கூடாது."
நட்சத்திரா, "அதான் ஏன்னு கேட்கிறேன" என்றாள்.
சூர்யா, "அவன் என்கிட்டவே உன்னை பற்றி என்ன சொன்னான் தெரியுமா? உன்னை பார்த்த உடனே நீ அவன் இதயதுக்குள்ள நுழைஞ்சுட்டியாம். அதைவிட முக்கியமான விஷயம் என்கிட்ட ஏன் உன் கண்ணு அப்படி இருக்கு உன் உதடு இப்படி இருக்கு என்று வர்ணிக்கிறான். எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? அவன் வாயை உடைச்சிடலாம் போல இருந்துச்சு" என்றான் கை முஷ்டியை மடக்கி. நட்சத்திராவிற்கு அவன் கோபத்தை பார்த்த சந்தோஷம் தாளவில்லை.
அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் "மாமா அவன் என்னை வர்ணித்தால் உனக்கு என்ன? நீதான் என்ன காதலிக்கவே இல்லையே. அவராவது என்னை வர்ணித்து விட்டு போகட்டுமே! விடு மாமா " என்றாள். சூர்யாவிற்கு கோபம் வந்தது.
"அது எப்படி... நீ எனக்கு மட்டும்தான் சொந்தம். எனக்கு சொந்தமான உன்னை அவன் எப்படி வர்ணிக்க முடியும்?" என்றான்....
இதைக் கேட்ட நட்சத்திராவால் தன் காதுகளை நம்பவே முடியவில்லை, "மாமா இப்போ என்ன சொன்ன? ஒரே ஒரு தடவை சொல்லு" என்றாள். சூர்யாவிற்கு அப்போதுதான் தான் சொன்ன வார்த்தையின் அர்த்தம் புரிந்தது. வேகமாக நாக்கை கடித்தவன், "நான் ஒன்னும் சொல்லலையே..." என்றான்.
நட்சத்திரா, "இல்ல மாமா, நீ ஏதோ சொந்த பந்தம்ன்னு சொன்னியே.."
சூர்யா, "அது நீ எனக்கு சொந்தக்கார பொண்ணு. அவன் எப்படி உன்னை லவ் பண்ண முடியும்? என்று சொன்னேன் " என்றான்.
நட்சத்திரா, "மாமா நீ சொன்னது எனக்கு தெளிவா கேட்டுச்சு. நீ என்னை ஏமாத்துற. உனக்கு என் மேல காதல் இருக்கு. ஒரு நாள் நட்சத்திரா நட்சத்திரா என்று நீ என் பின்னாடி சுத்துவ" என்றாள்.
சூர்யா," அது நடந்தா பார்த்துக்கலாம் போடி" என்றான்.
சூர்யாவிற்கும் நட்சத்திராவிற்கும் ஒருவருக்கொருவர் அருகாமையில் நாட்கள் விரைவாக சென்றது. இருவரும் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்து வாழ்ந்து கொண்டிருந்தனர். இடையிடையே சில செல்ல சண்டைகளும் சமாதானங்களும் அடங்கும். இப்பொழுதெல்லாம் சூர்யா நட்சத்திராவின் மீது அதிக அக்கறை எடுத்துக் கொண்டான்.
சூர்யா தன் வார்த்தைகளால் சொல்ல முடியாத காதலை செயல் மூலம் உணர்த்தி கொண்டிருந்தான். நட்சத்திரா அவன் அக்கறையிலும் அவன் செயல்கள் உணர்த்திய காதலிலும் கரைந்து கொண்டிருந்தாள். இருவரும் காதல் வானில் சுதந்திரப் பறவையாக சிறகடித்து பறந்து கொண்டிருந்தனர்.
சூர்யாவிற்கு நட்சத்திராவிடம் காதலை சொல்ல ஏதோ ஒன்று தடுத்துக் கொண்டிருந்தது. நட்சத்திரா சூர்யா அவளிடம் தன் மனதை வெளிப்படுத்தும் தருணத்திற்காக காத்திருந்தாள். இடையில் ஷ்ரவன் வேற ஸ்டார் ஸ்டார் என்று நட்சத்திராவின் பின்னாடியே சுற்றிக் கொண்டிருந்தான்.
அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நட்சத்திரா இழுத்து போத்தி கொண்டு தூங்கி கொண்டிருந்தாள். சூர்யா ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தான். நட்சத்திராவின் போனில் நோட்டிபிகேஷன் தொடர்ந்து வந்துக் கொண்டிருந்தது.
சூர்யா அந்த சத்தத்தில் கடுப்பாகி ரூமிற்குள் செல்ல நட்சத்திரா எந்த சத்தமும் கேட்காதது போல தூக்கிக் கொண்டிருந்தாள். சூர்யா கும்பகர்ணி எப்பிடி தூங்குறா பாரு என நினைத்து போனை எடுக்க அது பாஸ்வேர்டு கேட்டது. சூர்யா இதுல என்ன ரகசியம் இருக்குனு இவ பாஸ்வேர்டு போட்டு இருக்கா என அலுத்துக் கொண்டவன்.
என்ன பாஸ்வேர்டு போட்ருப்பாள் என யோசித்தவன் திடீரென ஏதோ தோன்ற தன் பெயரைப் போட்டான் அது திறந்துக் கொண்டது. சூர்யாவிற்கு சந்தோஷம் தாளவில்லை என் பெயரை பாஸ்வேர்டா போட்ருக்காளா என்று. அந்த சந்தோஷத்தை கலைக்கும் விதமா வந்தது ஷ்ரவனின் மெசேஜ். அதைப் பார்த்ததும் சூர்யாவிற்கு சுள்ளென்று கோபம் வந்தது.
ஷ்ரவன் ஹாய் ஸ்டார் குட் மார்னிங் என்ன பண்ற. எனக்கு சண்டேவே பிடிக்க மாட்டிங்கிது. ஏன் தெரியுமா உன்னைப் பார்க்க முடியாததுனால தான் என்று மெசேஜ் அனுப்பி இருந்தான்.
சூர்யாவிற்கு பாக்க முடியலைனா போய் கிணத்துல குதிடா என்று கூறலாம் என்று தோன்ற வேகமாக டைப் செய்ய விரல்கள் செல்ல காலிங்பெல் சத்தம் கேட்டது. சூர்யா யாரது முக்கியமான வேலை பார்க்கும் போது டிஸ்டர்ப் பன்றது என புலம்பிக் கொண்டே எழுந்து சென்றான்.
சூர்யா கதவை திறந்தது தான் தாமதம் விஜய் ஓடிவந்து தாவி சூர்யாவை அணைத்துக் கொண்டான். சூர்யாவிற்கு ஆனந்த அதிர்ச்சி.
விஜய்," மச்சான் எப்படி இருக்க? உன்ன நேர்ல பார்த்து ஒரு வருடத்துக்கும் மேலாக ஆகுது" என்று பாசமழை பொழிந்து விட்டான்.
சூர்யாவால் இன்னும் நம்ப முடியவில்லை. சூர்யா, "மச்சான் நீ எப்போ ஆஸ்திரேலியாவுக்கு வந்த?" என்றான்.
விஜய், "மச்சான் நேத்து தான் வந்தேன். ஒரு பிசினஸ் மீட்டிங்காக வந்தேன். எனக்கு ஆஸ்திரேலியா என்று சொன்னவுடனே உன்னோட ஞாபகம் தான் வந்தது. ஏன்டா இப்படி இளைச்சு போயிட்ட..." என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான்.
சூர்யா, "ஒவ்வொரு கேள்வியாக கேளுடா. நான் நல்லா இருக்கேன். வா வந்து உட்காரு என்றவன், மச்சான் டீ குடிக்கறியா? காபி குடிக்கிறியா?" என்றான்.
விஜய், "அதெல்லாம் வேணாம் மச்சான். வா வந்து என் பக்கத்துல உக்காரு. உன்கிட்ட பேசணும் நாம உட்கார்ந்து பேசி எத்தனை நாள் ஆச்சு..." என்றான்.
சூர்யா, "ஏன்டா ரெண்டு நாளைக்கு முன்னாடி கூட போன் பேசினோமே... அப்ப கூட ஏன்டா நீ வரேன்னு சொல்லவே இல்ல."
விஜய், "இல்லடா, அப்பாதான் வர்றதா இருந்துச்சு. திடீர்னு அப்பாக்கு வேற ஒரு வேளை வந்துடுச்சு. அதான் நான் இந்த மீட்டிங் அட்டென்ட் பண்ண வந்தேன். உனக்கு ஒரு சர்ப்ரைஸாக இருக்கட்டும் என்று தான் நான் சொல்லல என்றவன், அப்புறம் மச்சி கொஞ்ச நாளைக்கு முன்னாடி என் தங்கச்சிய பார்த்தேன்" என்றான்.
சூர்யா, "யாருடா மச்சான் உன் தங்கச்சி?"
விஜய், "என்னடா சூர்யா ஆஸ்திரேலியா வந்து உனக்கு அம்னீசியா வந்துடுச்சா? என் தங்கச்சி உன்னோட ஆளு நட்சத்திரடா" என்றான்.
நட்சத்திரா என்ற பெயரைக் கேட்டதும் சூர்யாவிற்கு பகீரென்றது. சூர்யா நட்சத்திரா இங்கு வந்ததை அவனிடம் சொல்லவில்லன்னு தெரிஞ்சா என்னை மர்டர் பண்ணிருவானே என நினைத்தான் .
விஜய் "மச்சான் என் தங்கச்சி பாவம்டா. உன்னை பார்க்காமல் எவ்வளவு வருத்தப்பட்டா தெரியுமா? இருந்தாலும் நீ அவளை ரொம்ப தான்டா கஷ்டப்படுத்துற" என்றான்.
சூர்யா, எங்கே நட்சத்திரா எழுந்து வந்து விடுவாளோ..? என்ற பயத்தில் அவன் சொல்வதை காதில் வாங்காமல் தலையை தலையை ஆட்டிக்கொண்டிருந்தான்.
விஜய், "ஏன்டா மச்சான் இங்க நீ மட்டும் தான் தங்கி இருக்கியா... ரெண்டு ரூம் இருக்கு" என்றான்.
சூர்யா, "ரெண்டு ரூம் எனக்கு தான்டா. ஒன்னுல என்னோட திங்ஸ் வச்சி இருக்கேன். இதுல தங்கியிருக்கேன் என்றான்.
விஜய் அடுத்து ஏதோ கேட்க வர சூர்யா, "மச்சான் உனக்கு பிளைட்டுக்கு டைம் ஆகலையா?" என்றான்.
விஜய், "இல்லடா, எனக்கு சாயங்காலம் தான் பிளைட். உன்கூட இன்னைக்கு முழுவதும் என்ஜாய் பண்ணிட்டு தான் போவேன்" என்றான்.
சூர்யா, முடிஞ்சது சோலி என நினைத்தான். விஜய், "மச்சான் இது தான் உன் ரூமா?" என்று எழுந்து போக சூர்யா, அவசர அவசரமாக தடுத்து, "மச்சான் இப்போ எதுக்கு ரூம்க்கு எல்லாம் போற? எதுவாக இருந்தாலும் இங்கேயே இருந்து பேசுடா" என்றான்.
விஜய், "ஏன்டா மச்சான் நான் உன் ரூமுக்கு போக கூடாதா?"
சூர்யா, "இல்லடா, உள்ள எல்லா பொருளும் சிதறி கிடக்கு . இன்னும் சுத்தம் பண்ணல" என்றான்.
விஜய்," என்னமோ சொல்ற போடா. நீ ரொம்ப மாறிட்ட. உன் ரூம்குள்ள கூட விடமாட்ற டா " என்றான்.
சூர்யா, "அப்படி எல்லாம் ஒன்னுமில்ல" எனக்கூற அப்பொழுது நட்சத்திரா எழுந்து மாமா காபி என்று கண்ணை கசக்கிக் கொண்டு வெளியே வந்தாள்.