விழிகளிலே ஒரு கவிதை

Janu murugan

Moderator
Staff member
Jun 10, 2020
43
20
8
20
விழிகளிலே ஒரு கவிதை 25

ஷ்ரவன் நட்சத்திராவிடம், "ஸ்டார் நீ எப்படி இங்க...? சூர்யாவை வேற மாமான்னு கூப்பிடுற..." என்றான் அதிர்ச்சி விலகாமல்.

சூர்யாவிற்கும் நட்சத்திராவிற்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஷ்ரவன் சூர்யாவிடம், "மச்சான் என்னடா இது..? நீ கூட ஸ்டாரை உனக்கு ஏற்கனவே தெரியும் என்று சொல்லலை. அவ உனக்கு ரிலேஷனா..." என்று கேட்டான். மீண்டும் அமைதி இருவருமே எதுவும் பேசவில்லை.

ஷ்ரவனின் பொறுமை காற்றில் பறந்தது. "இப்ப ரெண்டு பேரும் பதில் சொல்லப் போறீங்களா? இல்லையா?" என்றான் கோபமாக.

சூர்யா இதற்கு மேலும் மறைக்க முடியாது என நினைத்தவன் நட்சத்திரா ஹரிஷிடம் கூறிய பொய்யை அச்சு பிசகாமல் அவனிடம் கூறினான். இதைக் கேட்டதும் ஷ்ரவனின் முகம் இருண்டு விட்டது.

நட்சத்திரா ஏதோ சொல்ல வர ஷ்ரவன், "ஸ்டார் நீ ஏதும் சமாதானம் சொல்ல வேண்டாம். என்கிட்ட இத்தன நாளா உண்மையை மறைச்சுட்டல. நீ முதல்லே எல்லாத்தையும் சொல்லி இருந்தால் நான் என் மனசில் ஆசை வளர்த்து இருக்க மாட்டேன்" என்றவனின் கண்கள் கலங்கியது.

நட்சத்திராவிற்கும் சூர்யாவிற்கும் ஷ்ரவன் பேச்சை கேட்டு மனது பாரம் ஆகியது குற்றவுணர்ச்சி மேலோங்கியது.

தங்கள் விளையாட்டாய் செய்த தவறு ஒருவனை இவ்வளவு தூரம் பாதித்துள்ளது என்று இருவரும் வருந்தினர். இருவருக்கும் ஷ்ரவனை தேற்றும் வழி தெரியவில்லை. சில நிமிடங்கள் அமைதியாக கழிய கதவைத் திறந்து கொண்டு ஹரிஷ் உள்ளே நுழைந்தான்.

ஹரிஷ் மூவரையும் பார்த்து விட்டு "என்ன ஆச்சு? ஏன் எல்லாரும் ஒரே மாதிரி இருக்கீங்க என்றவன் சூர்யாவிடம் மச்சி என்ன ஆச்சு?" என்றான்.

சூர்யா நடந்தவற்றை ஹரிஷிடம் கூறினான் . இதைக்கேட்டு ஹரிஷ் அதிர்ச்சி அடைவான் என நினைத்தால் அவன் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தான்.

சூர்யாவும் நட்சத்திராவும் என்னடா இது நாம இவ்வளவு சீரியஸா பேசிக்கிட்டு இருக்கோம் இவன் பைத்தியம் மாதிரி சிரிச்சுகிட்டு இருக்கான் என்ற ரீதியில் அவனை பார்த்தனர்.

சூர்யா ஹரிஷிடம், "டேய் இப்ப எதுக்கு டா லூசு மாதிரி சிரிச்சு இருக்க...."

ஹரிஷ், "யாரு லூசு நானா...? நீங்க ரெண்டு பேரும்தான் லூசு. அவனுக்கு எப்பயோ உண்மை தெரிஞ்சிடுச்சு. அவன் உங்களை கலாய்ச்சுட்டு இருக்கான்" என்றான். இதைக் கேட்டதும் நட்சத்திராவும் சூர்யாவும் ஷ்ரவனை பார்க்க அவன் இவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.

சூர்யாவும் நட்சத்திராவும் அவனை முறைக்க அவன், "எப்படி என்னோட ஆக்டிங், நல்லா ஏமாந்துட்டிங்களா?" என்றான்.

சூர்யாவும் நட்சத்திராவும்
கொலைவெறியோடு அவனைத் துரத்த ஷ்ரவன் "காப்பாத்துங்க கொலை கொலை" என கத்திக் கொண்டு அந்த வீட்டிற்குள்ளேயே ஓடினான். ஹரிஷ் இதைப்பார்த்து வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தான். நட்சத்திராவும் சூர்யாவும் அவனை கோபம் தீரும் மட்டும் அடித்து ஓய்ந்த நேரம் ஷ்ரவன் "அடிச்சு முடிச்சிட்டீங்களா... எனக்கு பசிக்குது ஏதாவது சாப்பிட கொண்டு வாங்க" என்றான் எதுவும் நடக்காதது போல.

அவன் கேட்ட விதத்தில் இருவரும் சிரித்து விட்டனர். நட்சத்திரா காபி போட்டு கொண்டு வந்தாள். சூர்யா, "மச்சான் எப்ப டா அவன் கிட்ட உண்மைய சொன்ன.."

ஹரிஷ், "அது ஷ்ரவன் முதல் தடவை நட்சத்திராவைப் பார்த்தேன் என்று சொன்னானே அப்பவே எனக்கு தோணுச்சு உண்மையை சொல்ல வேண்டும் என்று. இதனால நம்ம பிரெண்ட்ஷிப் ஏதாவது பிரச்சினை வந்து விடுமோன்னு நான் அவன் கிட்ட சொல்றதுக்கு ஒரு நல்ல சந்தர்பத்தை எதிர் பார்த்து காத்து இருந்தேன். அன்னைக்கு ஒரு நாள் நீயும் தங்கச்சியும் சேர்ந்து போறதை பார்த்துட்டு என் கிட்ட கேட்டான். நான் உண்மையை சொல்லிட்டேன். அப்ப கொஞ்சம் வருத்தப்பட்டான்" என்றான்.

ஷ்ரவன் மீதிய நான் சொல்றேன், "அப்புறம் என் மனசை மாத்திக்கிட்டு நான் நட்சத்திராவை நல்ல ஃப்ரண்டா ஏத்துக்கிட்டேன். நீங்க உண்மைய சொல்ற வரைக்கும் நான் ஏதும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்க கூடாது என்று எப்பவும் போலயே நடிச்சுட்டு இருந்தேன்.

நீங்க உண்மையா சொல்ற மாதிரி தெரியலை. எனக்கு உன்கிட்ட நடிச்சு நடிச்சு போரடிச்சு போச்சு . அதான் உங்களை கொஞ்சம் கதற விடலாம் என்று வீட்டிற்கு கிளம்பி வந்து விட்டேன்" என்றான்..

இதைக் கேட்டதும் சூர்யா அவனிடம் "மச்சான் நாங்க ரெண்டு பேரும் உன் மனதை காயப்படுத்தி இருந்தா சாரிடா" என்றான். ஷ்ரவன், "சே சே அதெல்லாம் ஒன்னும் இல்லை. நான் தான் உன் கிட்ட சாரி கேட்கனும். உன் மனைவிய லவ் பண்றேன்னு உன்கிட்டயே சொன்னேன். என்ன மன்னிச்சுடுடா" என்றான்.

சூர்யா, "இல்லடா நான் தான் முதலிலேயே உன்கிட்ட உண்மையை சொல்லி இருக்கணும்" என்றான்.

ஹரிஷ் "டேய் போதும்டா நீங்க ஃபீல் பண்ணுறது. என்னால பார்க்க முடியலடா" என்றான்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டே நட்சத்திரா சமைத்துக் கொண்டிருந்தாள். நட்சத்திரா சமைத்து முடித்ததும் அனைவரும் சாப்பிட்டனர். பின் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேச பொழுது இனிமையாக கழிந்தது.

விடுமுறை நாட்களை ஆஸ்திரேலியாவில் உள்ள புகழ்பெற்ற இடங்களான விக்டோரியா நூலகம், விக்டோரியா மார்க்கெட், ராயல் பொட்டானிக்கல் கார்டன் சென்று சுற்றிப்பார்த்து இன்பமாகக் கழித்தனர்.
 

Janu murugan

Moderator
Staff member
Jun 10, 2020
43
20
8
20
விழிகளிலே ஒரு கவிதை 26

தாரா கர்ப்பமானதில் இருந்து அனைவரும் அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கினார்கள். ஷீலா தாராவை பெற்ற மகளைப் போல பாசமாக பார்த்துக்கொண்டார். அவளுக்கு வாந்தி மயக்கம் வரும் சமயம் எல்லாம் பெற்ற தாயை போல அன்பை பொழிந்தார்.

தாரா குடும்பத்தினரின் அன்பு மழையில் நனைந்தாள். தாராவின் பெற்றோர் அவ்வப்போது வந்து பார்த்துவிட்டுச் சென்றனர். மல்லிகாவும் சந்திரசேகரும் கிஷோரின் குடும்பத்தினர் தாராவைப் பார்த்துக் கொள்வதைப் பார்த்து பூரித்து போயினர். தன் மகளுக்கு ஒரு நல்ல குடும்பம் கிடைத்துவிட்டதை நினைத்து சந்தோஷப் பட்டனர்.

நாட்கள் ஓட இன்னும் ஒரு வாரத்தில் தாராவுக்கு வளைகாப்பு நடக்க உள்ளது. வளைகாப்பை வெகு விமர்சையாக செய்ய சந்திரசேகர் பெரிய மண்டபத்தை பிடித்து இருந்தார். வளைகாப்புக்கு தேவையான வேலையை சந்திரசேகரும் மல்லிகாவும் ஓடியாடி பரபரப்புடன் செய்துகொண்டிருந்தனர்.

சூர்யாவிற்கும் இரண்டாம் வருடம் படிப்பு முடிந்தது. எக்ஸாம் எல்லாம் முடிந்து சூர்யா இன்னும் இரண்டு நாட்களில் இந்தியா கிளம்ப உள்ளான்.

சூர்யாவிற்கு நட்சத்திராவை நினைத்து கவலையாக இருந்தது. தான் இருந்தவரை அவளை நன்றாக பார்த்துக் கொண்டோம். அவள் தனியாக ஒரு வருடம் ஆஸ்திரேலியாவில் எப்படி இருப்பாள்? இதைவிட பெரிய கவலை என்னை விட்டு அவளும் அவளை விட்டு நானும் எப்படி இருப்போம். ஆனால் நட்சத்திரா கவலையாக இருப்பது போல் காட்டிக்கொள்ளவே இல்லை. சூர்யா தான் இதைப் பற்றி தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான்.

நட்சத்திரா, "மாமா நைட் என்ன சாப்பாடு செய்யட்டும்?" என்று கேட்டாள். சூர்யா அதை கவனிக்காமல் யோசித்துக் கொண்டிருந்தான். அவனை இடித்தவள் "என்ன மாமா யோசிச்சிட்டு இருக்க? நான் கேட்டதைக் கூடக் காதில் வாங்காமல்" என்றாள்.

அவள் இடித்ததில் யோசனை களைந்து சூர்யா என்ன எனக்கேட்டான்.
நட்சத்திரா, "சரியாப் போச்சு போ.... நைட்டு என்ன சாப்பாடு செய்யட்டும் என்று கேட்டேன்" என்றாள்.

சூர்யா, "உன் இஷ்டம் ஏதாவது செய்" என்றான் நட்சத்திரா, "சரி மாமா" என்று கிச்சனுக்கு சென்றாள்.

சூர்யா 'என்ன இவள் இவ்வளவு சாதாரணமா நடக்கிறா. நான் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா கிளம்பும் போது ஒரு வாரம் ரூம்க்குள்ளேயே உட்கார்ந்து அழுதுகிட்டு இருந்தாள். ஆனா இப்போ எப்போதும் இருக்க மாதிரி ஜாலியா இருக்கா. ஒருவேளை நாம கிளம்பிறதுனால இவளுக்கு வருத்தமா இல்லையோ...? இவ இல்லாம என்னால எப்படி இருக்க முடியும்? அப்போ நான் மட்டும் தான் இந்தியா போவதை நினைத்து வருத்தப்படுகிறேனா...?

ஒருவேளை வருத்தப்படாத மாதிரி நடிக்கிறாளோ...? கிளம்பும் அன்னைக்கு அழுது ஆர்ப்பாட்டம் செய்து விடுவாளோ?' என பலவாறாக யோசித்து மூளையைக் குழப்பிக் கொண்டிருந்தான்.

நட்சத்திரா, "மாமா சமைச்சுட்டேன் வா சாப்பிடலாம்" என்று கிச்சனில் இருந்து குரல் கொடுத்தாள். சூர்யா எதுவும் பேசாமல் சாப்பிட அமர்ந்தான். நட்சத்திரா வழக்கம் போலவே நடந்து கொண்டாள். ஆனால் எப்போதும் பேசும் வழவழ பேச்சு அவளிடம் இல்லை. சூர்யா அவளை உற்று கவனித்தான். அவளிடம் எந்த மாற்றமும் தென்படவில்லை. இருவரும் சாப்பிட்ட பிறகு நட்சத்திரா பாத்திரங்களை கழுவி விட்டு கிச்சனை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள்.

சூர்யா பேசாம அவ கிட்டயே கேட்டு விடுவோம் என நினைத்தவன் வேண்டாம் என முடிவு செய்தான். பின் அவ வாயாலேயே வாங்கி விடுவோம் என நினைத்து அவள் கிச்சனில் இருந்து வரும் வரை டிவி பார்ப்போம் என ஹாலில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்தான்.

டிவி ஓடிக் கொண்டிருந்தாலும் சூர்யா நட்சத்திரா எப்போது வருவாள் என கிட்ச்சனை எட்டிப் பார்த்துக் கொண்டே அமர்ந்து இருந்தான். ஆனால் நட்சத்திரா வந்தபாடில்லை. கிட்ச்சனில் எதையோ உருட்டிக் கொண்டு இருந்தாள்.

சூர்யா பொறுமை இழந்து, "நட்சத்திரா நட்சத்திரா...." என அழைத்தான். கிச்சனிலிருந்து வெளியே வந்த நட்சத்திரா "சொல்லு மாமா" என்றாள்.

சூர்யா "இன்னும் இரண்டு நாளில் இந்தியா கிளம்பனும். அதுக்கு என்னோட பொருள்களை எல்லாம் பேக் பண்ணனும். எனக்கு கொஞ்சம் உதவி பண்றீயா?" என்று கூறி அவளது முகத்தை பார்த்தான்.

அவள் முகத்தில் எந்த விதமான உணர்ச்சியும் காட்டாமல் சாதாரணமாக வைத்துக்கொண்டு" ஒரு ஐந்து நிமிடத்தில் பாத்திரத்தை ஒதுங்க வைத்து விட்டு வரேன். வந்து உனக்கு உதவி பண்ணுறேன்" என்று கூறி கிச்சனுக்குள் புகுந்தாள்.

சூர்யாவிற்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டாமாட்றாளே. ஒரு வேளை உண்மைக்கே அவளுக்கு நான் ஊருக்கு கிளம்பிறதுல வருத்தம் இல்லையோ...?

நட்ச்த்திரா சொன்னது போலவே ஐந்து நிமிடத்தில் வெளியே வந்து பொருட்களை எல்லாம் எடுத்து வைப்போம் என அழைத்தாள். நட்சத்திரா அவனது ஒவ்வொரு பொருளையும் ஞாபகம் வைத்து தேடி எடுத்து சூட்கேசில் அடுக்கிக் கொண்டிருந்தாள்.

சூர்யாவும் ஏனோதானோவென்று தனது பொருட்களை எடுத்துவைத்து கொண்டிருந்தான். சூர்யா இவளை விட்டு ஒரு வருடம் பிரிந்து இருக்க போறோம். இவ ஞாபகமா எதையாவது எடுத்து வைத்துக் கொள்வோம் என நினைத்தவன் எதை எடுத்துட்டு போகலாம் என யோசித்தான்.

பின் தனக்கு அவளிடம் மிகவும் பிடித்த அந்த பிங்க் கலர் சுடிதாரை எடுத்து நட்சத்திராவிற்கு தெரியாமல் தனது துணிக்கடியில் மறைத்து வைத்து விட்டான்.

நட்சத்திரா ஒரு வழியாக அவனது அனைத்து பொருட்களையும் சூட்கேசில் மூட்டை கட்டி விட்டாள். சூட்கேசை எடுத்து ஒரு ஓரமாக வைத்தவள் தனது போனை எடுத்து வீட்டிற்கு போன் செய்து பேச ஆரம்பித்தாள். சூர்யாதான் அவள் என்ன நினைக்கிறாள் என யூகிக்க முடியாமல் தவித்தான். திடீரென்று அவன் மண்டையில் மணி அடித்தது.


திடீரென்று சூர்யாவின் மண்டையில் மணி அடித்தது.
 

Janu murugan

Moderator
Staff member
Jun 10, 2020
43
20
8
20
விழிகளிலே ஒரு கவிதை 27

திடீரென்று சூர்யாவின் மண்டையில் மணி அடித்தது. காலையில் இருந்து இப்போது வரை நடந்த அனைத்தையும் ரீவைன் பண்ணி பார்த்தான். காலையிலிருந்து நட்சத்திரா வழக்கத்திற்கு மாறாக அதிகமான வேலை இழுத்துப்போட்டு செய்து கொண்டிருக்கிறாள். தன்னிடம் சகஜமாக பழகினாலும் வழக்கத்தை விட குறைவாகவே பேசினாள்.

எதையோ மறக்க தன்னை வேளையில் மூழ்கடித்து கொள்கிறாள். எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்யகிறாள். அப்போ கண்டிப்பா தன்னோட கவலையை மறக்கத்தான் இப்படி நடந்ததுக்குறா என கண்டுபிடித்து விட்டான்.

நட்சத்திரா போன் பேசிவிட்டு வந்தவுடன் சூர்யா, நட்சு உன்கிட்ட பேசணும்" என்றான். நட்சத்திரா, "சொல்லு மாமா" என்றாள்.

சூர்யா, "நட்சத்திரா நான் இந்தியாவுக்கு போவது உனக்கு கஷ்டமா இருக்கும் என்று எனக்கு தெரியும். அதை மறக்கத்தான் காலையில் இருந்து ஒவ்வொரு வேலையையும் இழுத்துப் போட்டு செய்து உன் கவனத்தை திசை திருப்ப ட்ரை பண்ணிட்டு இருக்க. நான் சொல்றது சரிதானே?" என்று அவள் முகம் பார்க்க நட்சத்திராவின் கண்ணீர் அவளது கன்னத்தை தாண்டி இருந்தது.

சூர்யா இதை எதிர்பார்க்கவில்லை. சூர்யா அதிர்ச்சியுடன் எழுந்து நிற்க நட்சத்திரா அவனை இறுக்கமாக கட்டிக்கொண்டாள். அவளது கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.

நட்சத்திரா, "மாமா என்னால முடியல மாமா. நானும் எவ்ளோ நேரம் தான் நார்மலா இருக்கிற மாதிரி நடிக்கிறது. நீ கிளம்புறது எனக்கு கஷ்டமா இருக்கு மாமா. என்ன விட்டுப் போகாத. நீ இல்லாம நான் எப்படி ஒரு வருஷம் தனியா இங்க இருப்பேன்? பேசாம நான் காலேஜை டிஸ்கண்டினியூ பண்ணிட்டு உன் கூடவே வந்துடவா?" என்று கூறி விம்மினாள்.

சூர்யா, "என்னது காலேஜை டிஸ்கண்டினியூ பண்ண போறியா? அப்படி எல்லாம் பண்ணிடாத.... அது உன் எதிர்காலம் டி. ஒரு வருஷம் தானே சீக்கிரமா கண்ணை மூடி கண் திறப்பதற்குள் ஓடிவிடும்" என்று கூறி அவளை சமாதானம் செய்தான்.

அடுத்து வந்த இரண்டு நாட்களுமே இருவருக்கும் கனமாகவே கழிந்தது. சூர்யா நட்சத்திராவை ஹாஸ்டலில் சேருமாறு கூற நட்சத்திரா மறுத்துவிட்டாள். சூர்யா இரண்டு நாட்களில் நட்சத்திராவிற்கு தேவையான அனைத்தையும் வாங்கி வைத்தான். ஹரிஷ் குடும்பத்தினரிடம் நூறாவது முறையாக நட்சத்திராவை பார்த்துக்கோங்க என்று கூறினான்.

ஹரிஷ், "இதோட நூறு தடவை சொல்லிட்ட. நட்சத்திரா எங்க வீட்டு பொண்ணு அவளை நாங்க நல்லா பார்த்துப்போம். நீ கவலைப்படாதடா" என்றான்.

சூர்யா கிளம்பும் நாளும் வந்தது. நட்சத்திரா அழுவாள் என்று சூர்யா அவளை ஏர்போர்ட் வரை வர வேண்டாம் என்று கூறிவிட்டான். நட்சத்திரா வாசல் வரை வந்து அவனை வழி அனுப்பி வைத்தாள். தன் இயன்ற அளவு முகத்தைச் சாதாரணமாக வைத்துக் கொண்டாள்.

அவன் சென்றதுமே வீட்டுக்குள் சென்று அழ ஆரம்பித்துவிட்டாள். சூர்யாவும் கனத்த மனதுடன் ஏர்போர்ட் சென்றான். அவனுக்கும் நட்சத்திராவை தனியாக விட்டுச் செல்வதில் துளியும் விருப்பமில்லை.

பல மணி நேர பயணத்திற்கு
பிறகு சூர்யா இந்தியாவை வந்து அடைந்தான். சூர்யாவை பார்த்ததில் அவன் குடும்பத்தினருக்கு சொல்லவென்னா மகிழ்ச்சி.

ஷீலா, "ரொம்ப இளைச்சி போயிட்டடா சூர்யா" என்று வருத்தப்பட்டார். சூர்யா தன் வருத்தத்தை வெளியே காட்டாமல் குடும்பத்தினரிடம் புன்னகை முகமாக பதிலளித்தான். சூர்யா, "அதான் இப்போ வந்துட்டேன்ல நல்லா சமைச்சு போட்டு என்ன பழையபடி ஆக்கிடுங்க" என்றான்..

கிஷோர், "சூர்யா நீ வந்துட்டல்ல. இனிமே பிசினஸ்ல பாதியை நீ தான் பார்த்துக்கனும். அப்பாவுக்கு வயதாகி விட்டது. எனக்கு வேலை அதிகமா இருக்கு" என்றான். சூர்யா, "கவலைப்படாதடா நான் இனிமேல் ஆபீஸ் வரேன் டா" என்றான்.

ரூமில் இருந்து வெளியே வந்த தாரா,
"என்ன சூர்யா பயணம் எப்படி இருந்துச்சு?" என்றாள்.

சூர்யா," ம்ம் பரவாயில்லை... அண்ணி"என்றான். சூர்யாவின் முகத்திலிருந்து சோகத்தை தாரா கண்டு கொண்டாள்.

தாரா, "ரொம்ப டயர்டா இருக்க மாதிரி தெரியுது போய் ரெஸ்ட் எடு சூர்யா" என்றாள். ஷீலா, "ஆமாடா போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. அப்புறம் குளிச்சிட்டு சாப்பிட வா" என்றார்.

ரூம்க்குள் நுழைந்ததும் சூர்யா முதல் வேலையாக நட்சத்திராவிற்கு வீடியோ கால் செய்தான்.

சூர்யாவை பிரிந்த துக்கத்தில் சாப்பிடக் கூட தோன்றாமல் அப்படியே உறங்கிப் போயிருந்தாள் அவள். போன் ரிங்காகி அவளை எழுப்பி விட்டது. தூக்க கலக்கத்திலேயே போனை அட்டெண்ட் செய்து பேசினாள். அவளது அழுது வீங்கிய முகத்தைப் பார்த்த சூர்யாவிற்கு மனது கனமாகி விட்டது. பேச்சு வரவில்லை.

நட்சத்திரா, "மாமா வீட்டுக்கு போயிட்டியா?" சூர்யா, " மம் இப்போதான் வந்தேன்" என்றான். நட்சத்திரா, "மாமா ஒரு நிமிஷம் முகத்தை கழுவிட்டு வரேன்" என்று எழுந்து சென்றாள்.

சூர்யா 'நைட் ஃபுல்லா அழுதிருப்பா போல அதான் கண்ணு சிவந்து இருக்கு. கண்டிப்பா சாப்பிட்டு இருக்க மாட்டா. வரட்டும் கண்டித்து வைக்க வேண்டும்' என நினைத்துக் கொண்டான்.

முகம் கழுவி விட்டு வந்த நட்சத்திரா, "சொல்லு மாமா" என்றாள். சூர்யா, "ஏய் குட்டச்சி சாப்பிட்டியா....?" நட்சத்திரா, "சாப்பிட்டேன் மாமா" என்றாள்.

சூர்யா, "என்கிட்டயே நீ பொய் சொல்றியா? நீ சாப்பிடலன்னு எனக்கு தெரியும்" என்றான். நட்சத்திரா மௌனமாகி விட்டாள்.

சூர்யா தொடர்ந்தான், "நேரத்துக்கு சாப்பிட்டு உடம்பை பார்த்துக்கோ. சும்மா என்னையவே நெனச்சு பீல் பண்ணிட்டு இருக்காத. படிப்பில் கவனத்தை செலுத்து" என்று அறிவுரை மழை பொழிந்தான்.

நட்சத்திரா தலையை தலையை ஆட்டினாள். சூர்யா, "தலையை ஆட்டிட்டு அப்புறம் எதுவும் செய்யாமல் இருக்காத. நான் ஹரிஷ் கிட்ட கேட்பேன்" என்றான். நட்சத்திரா, "சரி மாமா செய்றேன்" என்றாள்.

சூர்யா, "சரி இப்போ சாப்பாடு எடுத்துட்டு வந்து என் கண் முன்னாடி சாப்பிடு . அப்பதான் நான் சாப்பிடுவேன்" என்றான்.

நட்சத்திரா, "மாமா இப்ப வா? நான் இன்னும் பிரஷ் பண்ணல குளிக்கலை" என்றாள்.

சூர்யா, "நீ குளித்து பிரஷ் பண்ணிட்டு வா நான் வெயிட் பண்றேன்" என்றான்.

நட்சத்திரா, "மாமா அதுக்கு ரொம்ப நேரம் ஆகும் மாமா" என்றாள்.

சூர்யா, "எவ்வளவு நேரம் ஆனாலும் நான் வெயிட் பண்றேன். நோ பிராப்ளம்" என்றான்.

நட்சத்திரா குளித்து முடித்து வரும் வரை லைனில் காத்து இருந்தான். நட்சத்திரா சாப்பிட்டு முடித்த பிறகே விட்டான்.

சூர்யா, "சரிடி நான் சொன்னதெல்லாம் ஞாபகம் வச்சுக்கோ. எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. நான் போய் ரெஸ்ட் எடுக்கிறேன்" என்றான்.

நட்சத்திரா, "சரி மாமா பாத்து பத்திரமா இரு" என்று காலை கட் செய்தாள்.

நட்சத்திராவிற்கு சூர்யா இல்லாமல் எதையோ இழந்தது போன்ற உணர்வு. சூர்யாவின் நிலைமையும் அதுதான். நட்சத்திரா பெயருக்கு காலேஜ் சென்று வந்தாள். காலேஜ் முடிந்து வீடு திரும்ப அவன் இல்லாமல் வெறுமையான வீடே அவளை வரவேற்றது. அவனுடன் இருக்கும்போது பிடித்திருந்த வீடும் பொருட்களும் இப்போது வெறுப்பை உண்டாக்கியது.

நட்சத்திராவிற்கு தனியே இருக்க பயமாக இருந்ததால் ஹாஸ்டலில் சேர அப்ளிகேஷன் போட்டு இருந்தாள். சூர்யா "இதை தான் நான் முதலிலேயே சொன்னேன். இப்போதாவது உனக்கு தோணுச்சே. சீக்கிரம் ஹாஸ்டல்ல ஜாயின் பண்ணு" என்றான்.

ஹரிஷ் தன் வீட்டிற்கு வருமாறு அழைக்க நட்சத்திரா மறுத்துவிட்டாள். சூர்யா தன் குடும்பத்தினருக்காக மகிழ்ச்சியாக இருப்பது போல காட்டிக் கொண்டான். நட்சத்திராவின் பிரிவு அவனை வாட்டி எடுத்தது.
 

Janu murugan

Moderator
Staff member
Jun 10, 2020
43
20
8
20
விழிகளிலே ஒரு கவிதை 28

நட்சத்திராவிற்கு சூர்யா இல்லாமல் எதையோ இழந்தது போன்ற உணர்வு. சூர்யாவின் நிலைமையும் அதுதான். நட்சத்திரா பெயருக்கு காலேஜ் சென்று வந்தாள். காலேஜ் முடிந்து வீடு திரும்ப அவன் இல்லாமல் வெறுமையான வீடே அவளை வரவேற்றது. அவனுடன் இருக்கும்போது பிடித்திருந்த வீடும் பொருட்களும் இப்போது வெறுப்பை உண்டாக்கியது.
நட்சத்திராவிற்கு தனியே இருக்க பயமாக இருந்ததால் ஹாஸ்டலில் சேர அப்ளிகேஷன் போட்டு இருந்தாள். சூர்யா "இதை தான் நான் முதலிலேயே சொன்னேன். இப்போதாவது உனக்கு தோணுச்சே. சீக்கிரம் ஹாஸ்டல்ல ஜாயின் பண்ணு" என்றான்.
ஹரிஷ் தன் வீட்டிற்கு வருமாறு அழைக்க நட்சத்திரா மறுத்துவிட்டாள். சூர்யா தன் குடும்பத்தினருக்காக மகிழ்ச்சியாக இருப்பது போல காட்டிக் கொண்டான். நட்சத்திராவின் பிரிவு அவனை வாட்டி எடுத்தது.
இரவு அவளை அணைத்துக்கொண்டே உறங்கி பழகியவனுக்கு அவள் இல்லாமல் உறக்கம் வர மறுத்தது. இப்படியே நான்கு நாட்கள் கழிய தாராவின் வளைகாப்பு நாளும் வந்தது. வீடே கலகலப்பாக இருந்தது. நிறைய உறவினர்கள் வந்திருந்தனர்.
சூர்யாவின் குடும்பத்தினரும் நட்சத்திராவின் குடும்பத்தினரும் பரபரப்புடன் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். எல்லோரும் சந்தோஷ கடலில் மிதந்தனர்.
சூர்யாவிற்கு மட்டும் நட்சத்திரா இல்லாதது ஒரு குறையாகவே இருந்தது. மல்லிகாவிற்கும் இந்த சந்தோஷமான நேரத்தில் நட்சத்திராவும் நம்ம கூட இருந்து இருக்கலாம் என்று தோன்றியது..
தாய்மையின் பூரிப்பில் தாரா மிகவும் அழகாக ஜொலித்தாள். ஒவ்வொருத்தராக வந்து சந்தனம் பூசி வளையலை அணிவித்தனர். இதையெல்லாம் வீடியோகால் மூலம் நட்சத்திரா பார்த்துக்கொண்டிருந்தாள்.
சொந்த பந்தங்கள் அனைவரும் வாழ்த்தி விட்டுச் சென்றனர். அந்த நாள் வளைகாப்புடன் இனிதே கழிந்தது. வளைகாப்பு முடிந்ததும் தாராவை சந்திரசேகர் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார்.
விஜய் சூர்யாவிடம், "மச்சான் காலையிலிருந்து உன் முகமே சரியில்லை. நீ என் தங்கச்சிய ரொம்ப மிஸ் பண்றேன்னு நினைக்கிறேன். இங்கேயே இருந்து அவளைப் பிரிந்து கஷ்டப்படுவதை விட பேசாம நீ ஆஸ்திரேலியா கிளம்பி போய் விடு" என்று அறிவுரை வழங்கினான். சூர்யாவும் அதைப்பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.
நட்சத்திரா ஹாஸ்டல் செல்வதற்காக தன் பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். அங்கு உள்ள அனைத்து பொருட்களும் சூர்யாவையே அவளுக்கு நினைவூட்டியது. அவனுடன் சண்டை போட்டது அவனுடன் அமர்நது உணவருந்திய டைனிங் டேபிள். அவன் மேல் தண்ணீர் இறைத்து விளையாடிய வாஷ் ரூம்.
அவனை அடித்து விளையாடிய குஷன். தினமும் காலையில் அவன் போட்டு தரும் காபி. காலை எழுந்ததும் பார்க்கும் அவனது புன்னகை தவழும் முகம். தான் ஒவ்வொரு முறை பொய் சொல்லும் போதும் அவன் அதிர்ச்சியாகி கொடுக்கும் அவனது ரியாக்ஸன். ஓவ்வொரு முறை காலேஜிற்கு அவள் கிளம்பிக் கொண்டிருக்கும் போது அவளை வருடும் அவனது கள்ளப் பார்வை. அவனுடனான இனிய நிகழ்வுகளை நினைக்க நினைக்க அவளுக்கு கஷ்டமாக இருந்தது.
அவனுடன் இருந்த இனிய தருணங்களை கொண்டிருக்கும் இந்த வீட்டிலிருந்து வெளியேற அவளுக்கு துளியும் விருப்பமில்லை. கிளம்ப வேண்டிய கட்டாயத்தால் இடம் மாற முடிவு செய்தாள்...........
உயிரைத் தொலைத்தேன்
அது உன்னில் தானோ?
இது நான் காணும் கனவோ? நிஜமோ?
மீண்டும் உன்னைக் காணும் மனமே!
வேண்டும் எனக்கே மனமே மனமே.....
விழியில் விழுந்தால்
என்னில் எனதாய் நானே இல்லை
எண்ணம் முழுதும் நீ தான் கண்ணே!.......
நட்சத்திரா சூர்யாவின் நினைவுகளில் உழன்று கொண்டிருக்க அவள் போன் ரிங்காகி அவளது யோசனையை கலைத்தது. ஹரிஷ் தான் போன் செய்திருந்தான். நட்சத்திரா போனை எடுத்து, "சொல்லுங்க அண்ணா" என்றாள்.
ஹரிஷ், "என்னமா எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டியா? நான் வந்து உன்னை ஹாஸ்டல்ல சேர்த்து விட்றேன்" என்றான்.
நட்சத்திரா, "இல்லை அண்ணா இன்னும் கொஞ்சம் எடுத்து வைக்கணும்" என்றாள்.
ஷரிஷ், "சரி மா, நான் வந்து உனக்கு உதவி பன்றேன்" என காலை கட் செய்தான். நட்சத்திரா முகத்தை கழுவிவிட்டு வந்து வேலையை தொடர்ந்தாள்.
காலிங் பெல் சத்தம் கேட்க நட்சத்திரா 'ஹரிஷ் அண்ணாவா தான் இருக்கும். ஹாஸ்டல் ஷிப்ட் பண்ண உதவி பண்ணுகிறேன் என்று சொல்லி இருந்தாரே' என நினைத்துக் கொண்டே கதவை திறந்தவளுக்கு இன்ப அதிர்ச்சி.
சூர்யா அவளைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டு நின்றிருந்தான். அவனை பார்த்து முதலில் சந்தோஷப்பட்டவள் பின் வேகமாக கதவை அடைத்து விட்டாள்.
சூர்யா அவள் கதவை அடைத்ததில் அதிர்ச்சியாகி, "ஏய் குட்டச்சி கடல் கடந்து 10 மணி நேரம் டிராவல் பண்ணி உனக்காக வந்து இருக்கேன் . இப்படி வெளியே தள்ளி கதவை அடைக்கிறியே இது நியாயமா? கதவை திறடி.."
நட்சத்திரா, "திறக்க முடியாது போடா இதுதான் உனக்கு தண்டனை" என்றாள்.
சூர்யா, "நான் என்னடி பண்ணேன்..." நட்சத்திரா, "என்னை விட்டுட்டு போன இல்ல? அதுக்கு தான்..."
சூர்யா, "அதான் திரும்பி வந்துட்டேன்ல. கதவை திறடி, டயர்டா இருக்குடி" என்றான். நட்சத்திரா, "போயிட்டு உடனேவா திரும்ப வந்த? ஒரு வாரம் கழித்துதான வந்து இருக்க".
சூர்யா, "இதெல்லாம் அநியாயம் டி போன உடனே எப்படி திரும்ப வர முடியும்? நான் இங்க ஜாப் தேட வேண்டாமா..? அண்ணி வளைகாப்பு முடிந்த மறுநாளே பிளைட் புடிச்சு வந்துருக்கேன்" என்றான்.
நட்சத்திரா, "அதெல்லாம் எனக்கு தெரியாது. ஒரு வாரம் என்ன கஷ்டப்படுத்துனல்ல? அதுக்கு நீ கொஞ்ச நேரம் வெளியே நில்லு" என்றாள்.
சூர்யா ம்கூம் இப்படியெல்லாம் பேசினால் இவன் சரிப்பட்டு வரமாட்டா என நினைத்தவன், "ஏய் குட்டச்சி இப்ப நீ கதவ திறந்தா நீ ரொம்ப நாள் எதிர்பார்த்துட்டு இருக்கியே அதை உன் கிட்ட சொல்வேன்" என்றான்.
நட்சத்திரா உடனே ஆர்வமாக கதவை திறந்தாள். கதவைத் திறந்தவுடன் வேகமாக உள்ளே நுழைந்தவன் அவளை அணைத்துக்கொண்டான்.
நட்சத்திரா ஒரு நிமிடம் அவனது அணைப்பில் நெகிழ்ந்தாலும் வேகமாக அவனை விலக்கி "ஏதோ சொல்ல போறேன் என்று சொன்ன? அத முதல்ல சொல்லு" என்றாள்.
சூர்யா, "அது வா சொல்றேன் என்று அவளை மீண்டும் இழுத்து அணைத்தவன் அவள் காதில் ஐ லைக் யூ" என்றான்.
இதைக் கேட்ட நட்சத்திரா அவனை அடிக்க ஆரம்பித்தாள். "நீ என்ன ரொம்ப ஏமாத்துறடா. எவ்வளவு நாள் என்ன அலையவிடுற. இனிமேல் நான் உன் பின்னாடி சுத்த மாட்டேன்" என்று கூறி முகத்தை திருப்பிக் கொண்டாள்.
சூர்யா, "ஹே! சாரிடி.."
நட்சத்திரா, "உன் சாரியை போய் குப்பையில் போடு" என்று நகர போக அவள் கையை பிடித்து நிறுத்தினான். "அதான் சாரி கேட்கிறேன் இல்ல அப்புறம் என்னடி கோவமா இருக்க..."
நட்சத்திரா, "என்னை ஒரு வாரம் தவிக்க விட்டலே, உனக்கு திரும்பி வர ஒரு வாரமா? அவ்வளவு நாள் என்னை விட்டுட்டு அங்க என்னடா பண்ண....."
சூர்யா, "ஏய்! அண்ணி வளைகாப்பு முடிந்து அன்னைக்கு நைட்டே நான் பிளைட் பிடிச்சு இங்க வந்திருக்கேன். எல்லாரையும் சமாளிச்சிட்டு வர்றதுக்குள்ளேயும் எனக்கு போதும் போதும் என்று ஆயிடுச்சு" என்றான்.
நட்சத்திரா, "அவ்வளவு கஷ்டப்பட்டு எனக்காகத்தான் வந்தியா?" என்றாள். சூர்யா, "சே! சே! உனக்காக எல்லாம் வரல" என்றான்.
நட்சத்திரா, 'சரியான கல்லுளிமங்கனா இருக்கிறான். எனக்காக தான் வந்தேன் என்று சொல்றானா பாரு' என மனதிற்குள் திட்டியவள், "அப்போ யாருக்காக வந்தியோ அவங்க கிட்டேயே போய் பேசு" என உதட்டை சுழித்து விட்டு ரூமிற்குள் சென்று விட்டாள்.
சூர்யாவும் பயண களைப்பில் உறங்கி விட்டான். சூர்யா கண்விழித்து பார்க்க நேரம் மாலை ஆகியிருந்தது. எழுந்து வந்து நட்சத்திராவை பார்த்தான். டிவி பார்த்துக் கொண்டிருந்தவள் அவனைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். அதனை பார்த்து சிரித்துக்கொண்டே கிச்சனுக்குள் நுழைந்தவன் இரவு உணவை சமைக்க ஆரம்பித்தான்.
அவன் சமைத்து முடிக்கும் வரை நட்சத்திரா கிச்சன் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. சூர்யா சமைத்துவிட்டு "நட்சத்திரா சாப்பிட வா" என்று அழைத்தான். நட்சத்திராவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
சூர்யா, "ஏய் குட்டச்சி காலையிலிருந்து சாப்பிடல பசிக்குது. ப்ளீஸ்டி அடம்பிடிக்காமல் சாப்பிட வாடி" என்று கெஞ்சினான். நட்சத்திரா அவன் கெஞ்சலில் மனமிறங்கி சாப்பிட வந்தாள். சாப்பிடும்போது மறந்தும் கூட அவனிடம் பேச வில்லை.
அவள் சாப்பிட்டு விட்டு அவளது ரூமை திறக்க முயற்சிக்க அதைத் திறக்க முடியவில்லை . நட்சத்திரா சூர்யாவைப் பார்க்க அவன் இவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.
நட்சத்திரா, 'நீ கதவை பூட்டினால் மட்டும் நான் உன் ரூம்க்கு தூங்க வருவேனா? நான் ஹால்ல கூட படுத்துக்குவேன்' என நினைத்து சோபாவில் படுத்துக் கொண்டாள்.
அவ எப்படியும் ரூமிற்க்கு வந்துவிடுவாள் எனநினைத்து சூர்யா ரூமிற்கு சென்று விட்டான். ஆனால் வெகு நேரமாகியும் நட்சத்திரா ரூமிற்கு வரவில்லை. சூர்யா எழுந்து போய் பார்க்க நட்சத்திரா கழுத்துவரை இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்திருந்தாள். அவனைப் பார்த்ததும் கண்ணை மூடிக்கொண்டாள்.
சூர்யா, "ஏய் குட்டச்சி வம்பு பண்ணாம ஒழுங்கா ரூம்க்கு வந்து படுடி..." நட்சத்திரா, "போடா வர முடியாது" என்றாள்.
சூர்யா இவ இப்படி எல்லாம் பேசினா வழிக்கு வர மாட்ட என நினைத்தவன் அவளை அலேக்காக தூக்கி கையில் ஏந்திக் கொண்டான்.
நட்சத்திரா, "டேய் என்னடா பண்ற? என்னை இறக்கி விடுடா" என கத்த சூர்யா, "பேசாம வாடி நானே நீ இல்லாம ஒரு வாரம் சரியாக தூங்காமல் இருக்கேன். இன்னைக்காவது நல்லா தூங்கனும்" என்று கூறி அவளை பெட்டில் படுக்க வைத்தவன் தானும் அவள் அருகிலேயே படுத்து அவளை அணைத்துக் கொண்டான்.
நட்சத்திரா, "டேய் விடுடா. நான் ஹாலிலேயே படுத்துக்கிறேன்" என்றாள். சூர்யா, "பேசாம படுடீ எனக்கு தூக்கம் வருது" என கண்ணை மூடி உறங்க ஆரம்பித்து விட்டான். நட்சத்திராவும் அவனது அணைப்பு தந்த சுகத்திலே சிறிது நேரத்தில் உறங்கி போனாள்.
மறுநாள் காலையிலும் நட்சத்திராவின் கோபம் தொடர்ந்தது. சூர்யாவிடம் பாராமுகம் காட்டினாள். சூர்யா, "ஏய் இராட்சஷி ரொம்ப தான்டி ஓவரா போற.. நான் என்ன செஞ்சா உன் கோபம் போகும்? சொல்லுடி" என்றான்.
நட்சத்திரா சிறிது நேரம் யோசித்துவிட்டு "நான் பேக் பண்ணி வச்சிருக்கேன்ல இந்த பொருளை எல்லாம் அந்தந்த இடத்திலேயே அடுக்கி வை" என்றாள்.
சூர்யா, "இவ்வளவுதானா? இப்பவே செய்கிறேன்" என்றான். நட்சத்திரா 'என்ன சொன்ன உடனே செஞ்சுட்டான்' என நினைத்தவள் சரி என்றுவிட்டு டிவி பார்க்க சென்றுவிட்டாள்.
சிறிது நேரத்தில் வேலை முடித்து வந்தவன் அவளை உரசிக்கொண்டு அருகிலேயே அமர்ந்தான். நட்சத்திரா என்னவென்று பார்க்க சூர்யா, "வேலை எல்லாம் முடித்து விட்டேன்" என்றான்.
நட்சத்திரா, "சரி என் கோபம் போயிடுச்சு போ" என்றாள். சூர்யா, "என்னடி இவ்வளவு சாதரணமா சொல்ற? ஒரு மணி நேரம் வேலை செஞ்சுட்டு வந்து இருக்கேன் டி" என்றான்.
நட்சத்திரா, "அதுக்கு இப்ப என்ன பண்ணனும்?"
சூர்யா, "ஏதாவது குடுடி.."
நட்சத்திரா, "என்ன கொடுக்க? என்கிட்ட ஒண்ணுமே இல்ல போடா" என்றாள்.
சூர்யா, "நீ தரலைன்னா பரவாயில்லை நான் தரேன் வாங்கிக்கோ" என்று அவள் கன்னத்தில் இதழ் பதித்தான்.
நட்சத்திரா, "சும்மா சும்மா பக்கத்துல வர்ற வேலை வச்சுக்காத தள்ளிப்போடா" என அவனை விலக்க சூர்யா, "என்னடி ரொம்பதான் ஓவரா பண்ற ஏன் நான் உன் பக்கத்துல வரக்கூடாதா?"
நட்சத்திரா, "ஆமா வரக்கூடாது".
சூர்யா, "அப்போ அப்படி தான் வருவேன்" என்று அவளை நெருங்கி அவள் முகம் முழுவதும் முத்தமழை பொழிந்து விட்டான். நட்சத்திரா அவன் செயல் அதிர்ச்சி ஆகிவிட்டாள். ஊரில் இருந்து வந்ததுல இருந்தே இவன் ஒரு மார்க்கமாக தான் திரிகிறான் என நினைத்தாள். ஆனால் அவன் எதுவுமே நடக்காததுபோல டீவி பார்த்துக் கொண்டிருந்தான்.
இப்படியே நாட்கள் அவர்களுக்கு இனிமையாக கழிந்தது. சூர்யா திரும்பி வந்த விஷயம் தெரிந்து ஹரிஷின் குடும்பத்தினர் சூர்யாவை கலாய்த்து ஒரு வழியாக்கிவிட்டனர்.
சூர்யா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து விட்டான். நட்சத்திரா இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறாள். சூர்யா பைக் வாங்கி விட்டான். நட்சத்திரா மறுத்தும் கேட்காமல் அவளை தினமும் காலையில் காலேஜ்க்கு கொண்டு சென்று விட்டு வருவான். மாலையில் அவளாகவே பஸ்ஸில் வந்து விடுவாள்.
அவளை மிகவும் அக்கறையாகவே பார்த்துக்கொண்டான். சிறு சிறு விஷயங்களை கூட பார்த்து பார்த்து செய்தான். நட்சத்திராவிற்கு அவன் செயல்கள் பிடித்திருந்தாலும் இன்னும் வாயை திறந்து அவன் காதலை சொல்லாமல் இருப்பது ஒரு குறையாகவே இருந்தது.
அவன் வாயைத் திறந்து சொல்லட்டும். அதுவரை தான் கேட்க கூடாது என நினைத்துக்கொண்டாள்.
*******************



ஆர்.கே மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு வராண்டாவில் கிஷோர் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான். தாரா உள்ளே வலியில் அலறி கொண்டிருந்தாள்.
ஷீலா கிஷோரிடம், "பதட்டப்படாதடா நல்லதே நடக்கும்" என்றார். இருந்தும் கிஷோர் பதட்டத்துடனே இருந்தான். தாராவின் பெற்றோரும் பயத்துடனே அமர்ந்திருந்தனர்.
சிறிது நேரத்தில் ஒரு செவிலியர் வந்து பெண் குழந்தை பிறந்து இருப்பதாக கூற எல்லோரும் ஆனந்தம் அடைந்தனர். மகாலட்சுமியே வந்து பிறந்திருப்பதாக மகிழ்ச்சி கொண்டனர்.
கிஷோர் உள்ளே சென்று பார்க்க தாரா மயக்கத்தில் இருந்தாள். அருகில் பிங்க் நிறத்தில் குட்டியான கை கால்களுடன் இருந்த குழந்தை தனது பொக்கை வாய் சிரிப்பை உதித்தது.
கிஷோருக்கு தன் மகளைப் பார்த்ததும் உலகையே வென்று விட்ட உணர்வு. குழந்தையை தூக்கச் சென்றவனுக்கு ஒரு சின்ன தயக்கம். அதை புரிந்துகொண்ட ஷீலா குழந்தையை கையில் தூக்கி "இந்தாடா இப்படிதான் தூக்கணும் பயப்படாத" என்றார்.
கிஷோர் குழந்தையை கையில் வாங்கினான். குழந்தை கிஷோரை பார்த்து சிரித்தது. அதைப் பார்த்ததும் கிஷோருக்கு புன்னகை அரும்பியது. சிறிது நேரத்தில் கண் விழித்து தாராவும் குழந்தையை பார்த்து சந்தோஷபட்டாள்.
நட்சத்திரா சோபாவில் அமர்ந்து இருக்க சூர்யா அவள் மடியில் தலைவைத்து படுத்திருந்தான். இருவரும் ஆர்வமாக டிவியில் படம் பார்த்துக்கொண்டிருந்தனர்.
நட்சத்திராவின் போனில் வீடியோ கால் வந்தது. நட்சத்திரா அதை பார்த்து விட்டு "ஐயோ! மாமா வீட்டில் இருந்து வீடியோ கால் வருது" என்றாள்.
சூர்யா, "எடுத்து பேசுடி"....
நட்சத்திரா, "ஐயோ! மாமா அம்மா இந்த வீட்டை பார்த்தா நான் ஹாஸ்டல்ல இல்லை என்று கண்டுபிடித்து விடுவார்களே!"
சூர்யா, "ஏய் லூசு ரூம்க்குள்ள போய் பேசு டி" என்றான்.
நட்சத்திரா 'சரி சமாளிப்போம் என்று ரூமுக்குள் போய் காலை ஆன் செய்தாள். மல்லிகா, "நட்சத்திரா தாராவுக்கு குழந்தை பிறந்துடுச்சுடி" என்றார் மகிழ்ச்சியாக.
நட்சத்திரா, "குழந்தை பிறந்துருச்சா? என்ன குழந்தை மா?" என்றாள் துள்ளிக் குதித்துக்கொண்டு.
மல்லிகா, "பெண் குழந்தைடி" என்றார். நட்சத்திரா வீடியோகால் மூலம் குழந்தையை பார்த்தாள். குழந்தை ரோஸ் நிறத்தில் அழகாக சிரித்தது. அந்த குழந்தையை பார்த்த நட்சத்திராவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
குழந்தையை நேரில் சென்று பார்க்க மனது துடித்தது. நட்சத்திரா தாரா மற்றும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பேசினாள். இந்த முறை கவனமாகவே பேசினாள். ஒரு தடவை ஷீலாவிடம் மாட்டிக்கொண்டதால் அதன்பின் எச்சரிக்கையாகவே இருந்தாள். மல்லிகா, "நட்சத்திரா இதுதான் உன் ரூமா..?'
அவள், "ஆமாம் அம்மா" என்றாள். மல்லிகா, "உன் ரூம்ல இன்னொரு பொண்ணு இருக்கான்னு சொன்ன அவ எங்க?" என்றார்.
நட்சத்திரா, "அது அம்மா அவள் வெளியே போய் இருக்கா" என்றுவிட்டு பின் சிறிது நேரம் பேசிவிட்டு போனை கட் செய்தாள்.
சூர்யாவிற்கும் ஷீலா வீடியோ கால் செய்தார். அவன் போனை பார்க்க நட்சத்திரா அவனைப் பார்த்து ஒரு மாதிரியாக சிரித்தாள்.
சூர்யா, "என்னடி குட்டச்சி ஒரு மார்க்கமா சிரிக்கிற? அன்னைக்கு மாதிரி ஏதாவது பண்ணி என்னை மாட்டிவிடப் போறியா?" என்றான்.
நட்சத்திரா, "சே சே நான் போய் அப்படி எல்லாம் பண்ணுவேனா மாமா?"என்றாள் முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு.
சூர்யா, "உன் டோனே சரி இல்ல. நான் ரூம்க்குள்ள போய் பேசிறேன்" என்று உள்ளே சென்று கதவை பூட்டிக் கொண்டான்.......
நட்சத்திரா, 'சே இவன கோர்த்து விடலாம் என்று நினைத்தால் எஸ்கேப் ஆகிவிட்டானே!' என நினைத்தாள்.
தாராவிற்கு சுகப் பிரசவம் என்பதால் நான்கு நாட்களிலேயே டிஸ்சார்ஜ் செய்து விட்டனர். ஒரு நல்ல நாளாகப் பார்த்து குழந்தைக்கு பெயர் சூட்டு விழாவை வெகு விமர்சையாக கொண்டாடினார்கள். குழந்தைக்கு மகாலட்சுமி என்று பெயர் சூட்டப்பட்டது.
வழக்கம்போல சூர்யாவும் நட்சத்திராவும் வீடியோகால் மூலம் அந்த நிகழ்ச்சியை பார்த்து ரசித்தனர். சொந்தபந்தங்கள் சூழ விழா மிக சிறப்பாக நடைபெற்றது. சங்கர் கம்பெனியில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு புது துணி எடுத்துக் கொடுத்து தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.
நட்சத்திரா இவ்வளவு சந்தோசமான நேரத்துல நாங்க அங்க இல்லாமல் போய் விட்டோமே என வருத்தப்பட்டாள். சூர்யா அவள் முகத்தை பார்த்தே அவள் நினைத்ததை கண்டுபிடித்து அவளிடம் கேட்டான்......
சூர்யா, "ஏய் குட்டச்சி உனக்கு இந்த சந்தோஷமான தருணத்தில் எல்லோர் கூடவும் இல்லை என்று வருத்தப்படுகிறதானே? என்னால தானே நீ உன் குடும்பத்தை பிரிந்து இவ்வளவு தூரம் வந்து இருக்க" என்றான்.
இதைக் கேட்டதும் நட்சத்திராவிற்கு கஷ்டமாக போயிற்று, "அப்படி எல்லாம் இல்லை மாமா. அப்பா அம்மாவை பிரிந்து வந்ததும் வருத்தம் தான். ஆனால் உன் கூட இருக்கும் போது எனக்கு எல்லாம் சொந்தமும் கிடைத்த மாதிரி ஃபீல் பண்றேன்".
அவள் சொன்ன சமாதானங்களை சூர்யா ஏற்றுக்கொள்ளவில்லை. நட்சத்திரா அவன் முகத்தை தன் புறம் திருப்பி, "இங்க பாரு மாமா, அப்படி பார்த்தா நீ கூட தான் எனக்காக இப்போ இங்க வந்து இருக்க. அதுக்காக நான் கவலை பட முடியுமா என்னால நீ அந்த விழாவில் கலந்து இருக்க முடியல என்று" என கேட்டாள்.
சூர்யா அவள் சொன்னதை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சூழ்நிலையை சகஜமாக மாற்றும் பொருட்டு, "என்னடி சந்தடி சாக்குல நான் உனக்காகத்தான் திரும்பி ஆஸ்திரேலியா வந்தேன் என்று சொல்ற? நான் உனக்காக எல்லாம் வரல" என்றான்.
இதைக் கேட்டதும் நட்சத்திரா இதுவரை இருந்த மனநிலை மாறி கோபமாகி விட்டாள். நட்சத்திரா அவனை முறைத்து "ஏன் மாமா இப்படி பொய் சொல்ற? நீ எனக்காகத் தான் வந்த என்று எனக்கு தெரியும்".
சூர்யா, "அப்படின்னு நீயா நினைச்சுக்கிட்டா அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது" என்றான் தோள்களை குலுக்கி.
நட்சத்திராவிற்கு கோபம் தலைக்கேறியது. "அப்போ யாருக்காக வந்தியோ அவங்ககிட்டே போய் பேசு. என்கிட்ட பேசாத" என்று விட்டு வேகமாக எழுந்து செல்ல முயன்றாள்.
சூர்யா அவளை இழுத்து அருகில் அமரவைத்து, "ஏன்டி குட்டச்சி இப்ப எல்லாம் நீ அதிகமாக கோவப்படுறடி, என்னை கெஞ்சவிடுறடி" என்றான். சூர்யாவிற்கு இது பிடித்திருந்தது.
நட்சத்திரா, "உனக்கு பிடித்தவங்க கிட்டயே போயி பேச வேண்டியதுதானே? ஏன் என்கிட்ட வந்து கெஞ்சுற?"
சூர்யா, "எனக்கு உன்ன மட்டும் தான் பிடிக்கும்"
நட்சத்திரா, "நம்பமாட்டேன்."
சூர்யா, "இப்ப பாரு உன்னை எப்படி நம்ப வைக்கிறேன் என்று அவளை அருகில் இழுத்து கைக்குள் கொண்டு வந்து அவளிடம் நெருங்கி எனக்கு உன்னை மட்டும் தான் பிடிக்கும். உனக்காகத்தான் நான் போயிட்டு திரும்பி வந்தேன்" என்று கூறி அவள் கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதித்தான். இப்ப நம்புறியா டி?" என்றான்.
நட்சத்திரா, "நம்புறேன் நம்புறேன் நீ முதல்ல தள்ளி உட்காரு" என்றாள்.
சூர்யா, "இருடி உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்" என்றான்.
நட்சத்திரா, " சொல்லு மாமா என்ன விஷயம்?" என்றாள்.
சூர்யா, "நீ எனக்கு ஒரு சத்தியம் பண்ணித் தரனும்" என்றான்....
நட்சத்திரா ஏடாகூடமா என்ன சத்தியம் கேட்கப் போகிறானோ? என நினைத்து "என்ன சத்தியம்?" என கேட்டாள்......
கவிதைகள் தொடரும்....
ஹாய் செல்லகுட்டிங்களா, சூர்யா என்ன சத்தியம் கேக்கப் போறானு உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்கா? கண்டுபிடிச்சிட்டீங்கன்னா கமெண்ட்ல சொல்லுங்க. சரியா கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு சாக்லேட் பரிசு.....???
 

Janu murugan

Moderator
Staff member
Jun 10, 2020
43
20
8
20
விழிகளிலே ஒரு கவிதை 29

நட்சத்திரா என்ன சத்தியம் கேட்கப் போகிறானோ? என்று கிலியாகி அவனைப் பார்த்தாள்.


சூர்யா, "இனிமேல் நீ பொய் பேசக் கூடாது" என்றான். இதைக் கேட்டதும் நட்சத்திரா ஆடி போய் விட்டாள்.


சூர்யா, "என்ன அப்படி பார்க்குற, சத்தியம் பண்ணு" என்றான்.


நட்சத்திரா பேவென முழித்தாள். சூர்யா, "கொடுத்த வாக்கை மீறக்கூடாது பொய் பேச மாட்டேன் என்று சத்தியம் பண்ணு" என அவள் முன் கையை நீட்டினான்.


நட்சத்திரா 'இப்படி ஏடாகூடமா சத்தியம் கேட்கிறானே? என் வாயை நான் எப்படி கட்டுப்படுத்துவேன் என புலம்பியவள் சரி முதல் முதலா வாயை திறந்து ஒரு விஷயம் கேட்கிறான், முடியாது என்று சொல்ல வேண்டாம்' என நினைத்து, "சரி சத்தியம் பண்றேன் என்றவள் இனிமேல் பொய்யே பேசமாட்டேன் சத்தியமாக" என்றாள்.


சூர்யா 'அப்பாடா! இவகிட்ட சத்தியம் வாங்கி விட்டோம். இனி மேல் பொய் சொல்லி நம்மளை எங்கேயும் கோர்த்து விட மாட்டா' என்று நினைத்தான்....


பின்வரும் நாட்களில் நட்சத்திரா சூர்யாவிற்கு செய்த சத்தியத்தை காப்பாற்ற அரும்பாடுபட்டாள். பொய் அவள் வாய் வரை வந்துவிடும். அதை வெளியே கொண்டு வராமல் இருக்க மிகவும் சிரமப்பட்டாள். நாட்கள் செல்ல செல்ல நட்சத்திரா பொய் பேசுவதை மறந்தே போய்விட்டாள்.


சூர்யா அமர்ந்து லேப்-டாப்பில் ஏதோ ஒரு ப்ராஜெக்ட் விஷயமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். டிவி பார்த்துக்கொண்டிருந்த நட்சத்திரா சே போரடிக்குது. எவ்வளவு நேரம் நான் டிவி பார்ப்பது? அவனை போய் வம்புஇழுப்போம் என நினைத்து எழுந்தவள் சூர்யாவை உரசிக்கொண்டு அமர்ந்தாள்.


அவன் நட்சத்திராவைக் கண்டு கொள்வதாக இல்லை. நட்சத்திரா 'என்ன இவன் நம்மல கண்டுக்கவே மாட்றான். இது கொஞ்சம் கூட சரி இல்லையே' என நினைத்தவள் அவன் கண்ணத்தில் விரல்களால் கோலம் போட ஆரம்பித்தாள். அதற்கும் அவன் எந்த ரியாக்ஸனும் பண்ணவில்லை.


நட்சத்திரா கடுப்பாகிவிட்டாள். "டேய் சூர்யா" என்றாள். அவன் லேப்டாப்பை பார்த்துக்கொண்டே, "என்னடி...?" என்றான்.


நட்சத்திரா, "உனக்கு உணர்ச்சி இருக்கா? இல்லையா?" என்றாள்.


அவன் லேப்டாப்பை ஓரமாக வைத்துவிட்டு அவள் புறம் திரும்பி அவன் அவளை பிடித்துக்கொண்டே, "இதோ இப்ப காட்டுறேன் எனக்கு உணர்ச்சி இருக்கா இல்லையா"என்று கூறினான்...


நட்சத்திரா இதைக் கேட்டு அதிர்ச்சி ஆகி விட்டாள். "மாமா நான் விளையாட்டுக்கு தான் சொன்னேன்".


சூர்யா, "ஆனா நான் சீரியஸா தான் சொல்றேன்" என்றான்.


நட்சத்திரா விளையாட்டு விபரீதம் ஆயிடுச்சே என்று நினைத்து அவனிடம் இருந்து திமிறி எழுந்து விட்டாள்.


நட்சத்திரா, "மாமா வர வர நீ ரொம்ப கெட்ட பையன் ஆயிட்டே வர்ற" என்றாள்.


சூர்யா அவளை முறைத்து, "ஏன்டி வேலை பார்த்துட்டு இருக்கவனை உசுப்பேத்திவிட்டுட்டு இப்ப வந்து என்ன கெட்ட பையன் என்று சொல்கிறாயா?"


நட்சத்திரா, "நீ நல்ல பையன் என்று நினைத்துதான் உன் பக்கத்திலே உட்கார்ந்தேன்".


சூர்யா, "நான் உன்கிட்ட சொன்னேனா? நான் நல்ல பையன்னு".


நட்சத்திரா, "நான் லவ் பண்ண சூர்யா ரொம்ப நல்ல பையன். நீ அவன் இல்லை" என்றாள். இதை கேட்டதும் சூர்யாவிற்கு ஒரு விஷயம் தோன்றியது.


சூர்யா, "ஏய் குட்டச்சி இங்க வாடி நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் கேட்கனும்" என்றான்.


நட்சத்திரா, "நான் வரமாட்டேன். நீ அங்க இருந்தே கேளு".


சூர்யா, "ஏய் ரொம்ப பண்ணாதடி என்று ஒரே இழுப்பில் அவளை இழுத்து அருகில் அமரவைத்தவன் ஏய் குட்டச்சி சொல்லுடி. எப்ப நீ என்ன முதல் தடவை பார்த்த? எப்போ உனக்கு என் மேல காதல் வந்தது?" என்றான்.


நட்சத்திரா, "முதலில் நீ என்கிட்ட ஐ லவ் யூ சொல்லு. அப்போதான் சொல்லுவேன்" என்றாள்.


சூர்யா, "இதுக்காக எல்லாம் நான் உன்கிட்ட ஐ லவ் யூ சொல்ல முடியாது போடி" என்றான்.


நட்சத்திரா, "அப்போ நானும் சொல்ல மாட்டேன் போடா" என்றாள்.


சூர்யா தன் வேலையை பார்த்தான். நட்சத்திரா, "மாமா எனக்கு ரொம்ப போரடிக்குது. எங்கேயாவது கூட்டிட்டு போ" என்றாள்.


சூர்யா, "எனக்கு நிறைய வேலை இருக்கு. வெளியே எல்லாம் போக முடியாது. போய் டிவி பாரு" என்றான்.


நட்சத்திரா முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள். சூர்யா, "உடனே முகத்தை தூக்கி வைத்துக் கொள்ளாதடி" என்றான்.


நட்சத்திரா, "அதான் எங்கேயும் வரமாட்டேன் என்று சொல்லிட்டல. என்கூட பேசாத" என்றாள்.


சூர்யா, "சரிடி கூட்டிட்டு போறேன். அதுக்கு முன்னாடி எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் வெளிய போய்ட்டு வந்துடுறேன். அதுக்குள்ள நீ ரெடியாக இரு" என்றான்.


நட்சத்திரா துள்ளி குதித்துக் கொண்டு "சரி மாமா.." என்றாள். சூர்யா வேலை விஷயமாக வெளியே சென்று விட்டான். நட்சத்திரா குளித்து கிளம்ப சென்றாள்.


சூர்யா வெளியே சென்று விரைவாகவே திரும்பிவிட்டான். சூர்யா காலிங் பெல்லை அடிக்க நட்சத்திரா வந்து கதவை திறந்தாள். அவன் நட்சத்திராவின் கோலம் பார்த்து அதிர்ச்சியாகி விட்டான்.


சூர்யா, "என்னடி இது கோலம்? இப்படி வந்து நிக்குற?"


நட்சத்திரா, "என்ன ஆச்சு மாமா?" என்றாள்.


சூர்யா, "ஏன்டி இப்படி பாதி குளிச்சதோட துண்டைக் கட்டிக்கிட்டு வந்து நிற்கிற?"


நட்சத்திரா, "நீதான மாமா காலிங் பெல்லை அழுத்துன. அதான் வந்து கதவை திறந்தேன்" என்றாள்.


சூர்யா, "வரவர நீ என்னோட உணர்ச்சியோட அதிகமாக விளையாடுறடி" என்க அவள், "அட போ மாமா நான் போய் குளிச்சுட்டு வர்றேன்" என்று கூறி பாத்ரூமுக்குள் புகுந்து விட்டாள். சூர்யாதான் மந்திரித்து விட்ட கோழி மாதிரி இருந்தான். அவள் கிளம்பி வர இருவரும் ஒரு பெரிய மாலுக்கு சென்றனர்.


நட்சத்திரா, "மாமா நானும் ஒரு வருஷமா ஆஸ்திரேலியாவில் தான் இருக்கேன். ஆனா இந்த வெஸ்ட்ஃபீல்ட் சிட்னே மாலை பத்தி கேள்விப்பட்டதே இல்லையே" என்றாள்.


சூர்யா, "எனக்கே இந்த மால் இப்பதான் தெரியும். நானும் இங்க முதல் தடவை வரேன்".


நட்சத்திரா, "மாமா இந்த மால் ரொம்ப பெருசா இருக்கு" என்றாள். சூர்யா, "ஆமா எங்கேயும் தொலைந்துவிடாத" என்றான்.


இருவரும் அங்குள்ள தியேட்டருக்கு சென்று படம் பார்த்தனர். பின் அந்த மாலை சுற்றி வந்தனர். நட்சத்திரா ஆர்வமாக அந்த மாலை சுற்றி பார்த்தாள்.


சூர்யா, "ஏன்டி எவ்வளவு நேரம் சுத்தி மட்டும் பார்ப்ப? ஏதாவது வாங்க வேண்டியது தானே" என்றான்.


நட்சத்திரா, "மாமா பெரிய பெரிய மால் எல்லாம் எதுக்கு கட்டி வச்சுருக்காங்க? போர் அடிக்கும் போது எல்லாம் சுத்தி பார்க்கத்தான்" என்றாள்.


சூர்யா, "இப்படியே எல்லாரும் வந்து விட்டு போனால் மால்காரன் தலையில் துண்டை தான் போடணும்" என்றான்.


அவள் அவன் சொல்வதை எல்லாம் காதில் வாங்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.


சூர்யாவிற்கு போன் வர பேசிக்கொண்டே நட்சத்திராவுடன் சென்றான். சூர்யா போன் பேசிக்கொண்டு இருந்தவன் நட்சத்திராவைக் கவனிக்கத் தவறிவிட்டான்.


சூர்யா போன் பேசிவிட்டு பார்க்க அவளைக் காணவில்லை. சூர்யாவிற்கு பகீரென்றது. வேகமாக அனைத்து இடங்களுக்கும் அவளை தேடி ஓடினான். அவளைக் காணவில்லை.


சூர்யா தன் போனில் இருந்து கால் செய்ய அவளுடைய மொபைல் அவன் பாக்கெட்டிலேயே ரிங் ஆனது. சூர்யாவிற்கு அப்போதுதான் நட்சத்திரா போனை தன்னிடம் கொடுத்தது ஞாபகம் வந்தது.


அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அங்குள்ள அனைத்து தளத்தையும் ஏறி இறங்கி விட்டான். நேரம் ஆக ஆக அவனுக்கு பயமும் இதயத் துடிப்பும் அதிகமானது.


அந்த மாலின் மேனேஜரிடம் பேசிட்விட்டு அங்கு உள்ள சிசிடிவி கேமராவையும் செக் பண்ணி விட்டான். ஆனால் அவளை எங்கும் காணவில்லை.


சூர்யா அந்த மாலின் வெளியே ஓடி சென்று பார்த்தான். அங்கும் அவள் இல்லை. ஒருவேளை வீட்டிற்கு சென்று இருப்பாளோ? என நினைத்து பைக்கை எடுத்துக் கொண்டு அசுர வேகத்தில் வீட்டை அடைந்தவன் ஓடிச்சென்று பார்க்க கதவு பூட்டியிருந்தது. வீட்டை திறந்து உள்ளே சென்றவன் தரையில் அமர்ந்து விட்டான்.


அவனின் கண்கள் கலங்கிவிட்டது. அவள் எங்கு சென்றால் என்று தெரியவில்லை. இங்கு அவளுக்கு அவ்வளவாக எந்த இடமும் பரிச்சயமில்லை. வெகுளியான பெண் அவளை இப்படி தொலைத்து விட்டேனே என மனதிற்குள் புலம்பினான்.


திடீரென்று காலிங் பெல் சத்தம் கேட்க கதவை திறந்தான். வெளியே நட்சத்திரா நின்றிருந்தாள். அதை பார்த்ததும் சூர்யாவிற்கு போன உயிர் திரும்பி வந்துவிட்டது.


ஓடிச்சென்று அவளை அணைத்தவன் அவள் முகத்தில் முத்தமழை பொழிந்து விட்டான். சூர்யா, "எங்கடி போன? நான் எவ்வளவு பயந்திட்டேன் தெரியுமா?"


நட்சத்திராவிற்கு அவனை பார்க்க ஆச்சரியமாக போயிற்று. சிறிது நேரத்தில் எப்படி இருந்தவன் இப்படி வேர்த்து விறுவிறுத்து கண்ணெல்லாம் கலங்கிவிட்டான். இந்த தவிப்பு அன்பு காதல் எல்லாம் எனக்காக தானா? என நினைக்கும் போதே அவளுக்கு எல்லை இல்லாத சந்தோஷம் உண்டாக்கியது.


"மாமா நான் வழிதவறி போயிட்டேன். என்கிட்ட போனும் இல்ல. கையில காசும் இல்லை. எனக்கு பயமாயிடுச்சு" என்றாள்.


சூர்யா, "அப்புறம் எப்படிடி இங்க வந்த?" என கேட்க நட்சத்திரா, "இவங்கதான் என்னை கூட்டிட்டு வந்தாங்க" என்று ஒரு பெண்மணியை காட்டினாள்.


சூர்யா நட்சத்திரா கூறிய பிறகுதான் அவரை கவனித்தான். அவன், "ரொம்ப தேங்க்ஸ் மேடம் என்றவன் வாங்க உள்ளே" என்று அவரை அழைத்தான். சூர்யா, "நீங்கள் செய்த உதவியை நான் என்றைக்குமே மறக்க மாட்டேன்" என்றான்.


அவர் புன்னகையுடன், "பரவாயில்லை எதுக்கு நன்றி எல்லாம் என்றவர் நான் லாரா" என்றார். சூர்யா தன் பெயரை கூறினான். அவர் சூர்யாவிடம் நட்சத்திரா அவனுக்கு என்ன உறவு என்று கேட்க அவன் யோசிக்காமல், "அவள் என் மனைவி" என்றான்.


சூர்யாவின் பதிலில் அவள்தான் ஆனந்த அதிர்ச்சி அடைந்தாள். சூர்யா கிச்சனுக்கு சென்று காபி போட போய்விட்டான். லாரா நட்சத்திராவிடம் "இப்படி ஒரு கணவன் கிடைக்க நீ கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவர் உன் மேலே ரொம்ப அன்பு வைத்திருக்கிறார்" என்றார்.


நட்சத்திரா புன்னகையுடன் அவர் கூறியதை ஆமோதித்தாள். சூர்யா காபி போட்டுக் கொண்டுவந்து இருவருக்கும் கொடுத்தான். லாரா காபி குடித்துவிட்டு பின் சிறிது நேரம் பேசிவிட்டு இன்றைக்கு இருக்க மாதிரியே என்றைக்கும் நீங்கள் ஒற்றுமையாக இருக்கனும் என வாழ்த்தி விட்டுச் சென்றார்.


சூர்யா அவளை வழியனுப்பி விட்டு கதவை அடைக்க நட்சத்திராவின் பார்வை தன்னை துளைப்பது போல தோன்ற திரும்பி ஒற்றை புருவத்தை உயர்த்தி என்னவெனக் கேட்டான். நட்சத்திரா, "நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கேன். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கொடுத்தியே அந்த மாதிரி ஒரு டைட் ஹக் கிடைக்குமா?"என்று கைகள் இரண்டையும் விரித்து கேட்டாள்.


சூர்யா புன்னகைத்துக் கொண்டே, "ஓய் நாட்?" கிடைக்குமே என்று அவளை இறுக அணைத்துக் கொண்டான்.



ஹாய் செல்லகுட்டிங்களா, நான் கேட்ட கேள்விக்கு நிறைய பேர் பதில் சொல்லி இருந்திங்க. நான் யோசிக்காத அளவிற்கு உங்க கற்பனை இருந்தது ஆனால் என்ன யாருமே கரெக்டா பதில் சொல்லலை. சோ உங்க யாருக்கும் சாக்லேட் கிடையாது நானே சாப்பிட போறேனே.....
 
Need a gift idea? How about a breakfast sandwich maker?
Buy it!