விழிகளிலே ஒரு கவிதை

Janu murugan

Moderator
Staff member
Jun 10, 2020
43
20
8
20
விழிகளிலே ஒரு கவிதை 30 (இறுதி அத்தியாயம்)

இருவரும் வெகுநேரம் அதே நிலையிலேயே இருந்தனர். நட்சத்திரா அவனிடமிருந்து விலக முயற்சித்தாள். சூர்யா, "ஏய் கொஞ்ச நேரம் இருடி என்று அவளை மீண்டும் அணைத்தான். பின் சில நிமிடங்கள் கழித்து அவளை விடுவித்தான்.
நட்சத்திரா, "மாமா உன்கிட்ட ஒன்னு கேட்கணும்" என்றாள்.
சூர்யா, "அதுக்கு முன்னாடி நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்றான்
நட்சத்திரா, "சொல்லு மாமா" என கேட்க சூர்யா சோபாவில் அமர்ந்து பக்கத்தில் உட்கார் என்றான். நட்சத்திரா உட்கார சூர்யா பேச ஆரம்பித்தான்.
"நட்சத்திரா இங்க பாரு இனிமேல் எங்க போனாலும் போனை உன் கையிலே வச்சிக்க. உன் கையில் பாதுகாப்பிற்காக பணம் வைத்துக்கொள். எங்கனாலும் தனியா போக பழகிக்கோ. யாரையும் டிபண்ட் பண்ணி இருக்காத" என்ன பேசிக் கொண்டிருக்க.... நட்சத்திரா இடையில் புகுந்து, "மாமா இந்த உலகத்துல கஷ்டமான விஷயம் எது என்று உனக்கு தெரியுமா?" எனக் கேட்க சூர்யா, "இப்ப எதுக்கு தேவை இல்லாம இந்த கேள்வியை கேட்கிற?" என்றான்.
நட்சத்திரா, "தேவை இருக்கு சொல்லு மாமா" என்றாள். சூர்யா யோசித்துவிட்டு "தெரியல டி...." என்றான்.
நட்சத்திரா, "மாமா இந்த உலகத்திலேயே கஷ்டமான விஷயம் எதுவென்றால் அடுத்தவங்க அட்வைஸை கேட்பதுதான்" என்றாள்...
சூர்யா அவள் சொன்னதின் அர்த்தம் விளங்காமல் யோசித்தவன் பின் புரிந்துகொண்டு புரிந்துகொண்டு அவளை முறைத்தான். "உனக்கு போய் அட்வைஸ் பண்ணினேன் பாரு என்னை சொல்லணும்" என்றான்.
நட்சத்திரா, "நீ இருக்கும் போது நான் எதுக்குமே பயப்பட மாட்டேன்" என்றாள். சூர்யா, "நான் இருக்கும் போதுதான் இப்போ நீ தொலைஞ்ச" என்க நட்சத்திரா, "மாமா அது என் மேல தான் தப்பு. நான் தான் நீ கூட வரியா? இல்லையா? என்று பார்க்காமல் வேடிக்கை பார்த்துட்டு நடந்து போய் விட்டேன்" என்றாள்.
சூர்யா, "எப்படி டி உனக்கு என் மேல இவ்வளவு நம்பிக்கை வந்தது?"
நட்சத்திரா, "மாமா நான் உன்மேல வைத்திருக்கும் நம்பிக்கை, பாசம், அன்பு எல்லாத்துக்கும் காரணம் நான் உன் மேல வச்சி இருக்க காதல் தான். ஆனால் நான் உன் மேல் வைத்திருக்கும் காதலை விட நீ என் மேல் அதிகமாக அன்பு காதல் எல்லாம் வைத்திருக்க. அதை நான் இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உன்கிட்ட பார்த்தேனே அந்த பயம் தவிப்பு எல்லாம் சொல்லிடுச்சு. இந்த உலகத்துல இந்த நிமிஷம் அதிகமா சந்தோஷமா இருக்கிறது நான் மட்டும்தான். ஐ யம் சோ சோ ஹாப்பி, நீ என் மேல் இருக்க காதலை வாய்மொழியாக சொல்லவில்லை என்றாலும் நான் அதை உன் செயல் மூலமாக புரிஞ்சுக்கிட்டேன்."
"அதுக்கு மேல லாரா ஆன்ட்டி கேட்டப்ப யோசிக்காம உன்னோட மனைவி என்று சொன்னியே அந்த நிமிடம் எப்படி இருந்துச்சு தெரியுமா? அந்த நிமிடமே செத்துப் போனாலும் நான் கவலைப்பட மாட்டேன். நீ என்னை காதலிக்கிற என்று தெரிஞ்சுடுச்சு. ஆனால் அதை என்கிட்ட சொல்ல தான் உனக்கு தயக்கம். ஏன் அந்த தயக்கம் தான் என்றுதான் எனக்குத் தெரியலை" என்றாள்.
சூர்யா அவளை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். இதையெல்லாம் கேட்டு சூர்யா ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நட்சத்திரா "உனக்கு சொல்ல விருப்பமில்லை என்றால் நீ சொல்ல வேண்டாம் மாமா" என்று எழுந்து செல்ல எத்தனிக்க சூர்யா அவள் கையை பிடித்து நிறுத்த நட்சத்திரா என்ன என்பது போல பார்த்தாள் சூர்யா, "உட்காரு சொல்றேன்" என்றவன் பேச ஆரம்பித்தான்.
நான் விஜய், ராகுல் மூணு பேரும் சின்ன வயசுல இருந்தே ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். ராகுலோட அப்பா ஆர்மில இருந்தாரு. நாங்கள் எட்டாவது படிக்கும்போது ராகுல் அப்பா ஒரு சண்டையில் இறந்துட்டாரு. அவங்க அப்பா இறந்த பிறகு அவனுக்கு அவங்க அம்மா நாங்க ரெண்டு பேரு இது தான் அவனோட உலகம்".
"நாங்க பத்தாம் வகுப்பு படிக்கும்போது ரோஷினி என்று ஒரு பொண்ணு எங்க ஸ்கூலில் ஜாயின் பண்ணாள். ராகுலுக்கு அவளை ரொம்ப பிடித்து இருந்தது. ரோஷினிக்கும் ராகுலை பிடித்தது. ரெண்டு பேரும் காதலிச்சாங்க. ராகுலோட உலகத்துல எங்களோடு சேர்ந்து அவளும் இருந்தாள்".
"இரண்டு வருஷம் ரொம்ப சின்சியரா காதலிச்சாங்க. நாங்க பன்னிரண்டாம் வகுப்பு முடிக்கும் சமயத்தில் ரோஷினுக்கும் ராகுலுக்கும் சண்டை வந்தது. எப்பவும் போலத்தான் சண்டை போடுறாங்க என்று நாங்கள் கண்டுக்கவில்லை. ஆனால் அவர்கள் சண்டை ரொம்ப பெரிசாகிடுச்சு"
"ரோஷினி ராகுல்கிட்ட நாம பிரிந்து விடுவோம் என்று சொன்னாள். ஆனால் ராகுலுக்கு அவளைப் பிரிய மனசில்லை. அவகிட்ட கெஞ்சினான் போராடினான். ஆனால் ரோஷினி மனசு இறங்கவே இல்லை. நானும் விஜய்யும் கூட அவளிடம் பேசினோம். ஆனால் எந்த பலனும் இல்லை. அவ எடுத்த முடிவில் உறுதியாக இருந்தாள். அவ ராகுலை விட்டுட்டு போயிட்டா".....
"ராகுல் தான் ரொம்ப மனசு உடைஞ்சு போய் விட்டான். நாங்க அவனை தேற்றுவதற்கு ரொம்ப முயற்சி பண்ணனோம். ஆனால் அவன் மனதளவில் பலமிழந்து ஒருநாள் தற்கொலை பண்ணிக்கிட்டான். என்னால அவன் இறப்பை தாங்கிக்கவே முடியல. அதிலிருந்து வெளிவர ரொம்ப கஷ்டப்பட்டேன். நான் நார்மலாக கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆச்சு".
"ராகுல் இல்லாம அவனோட அம்மா கீதா தனியாக ஆகிட்டாங்க. அப்போதான் எனக்கு காதல் மேலே வெறுப்பு வந்தது. எல்லோரையும் கஷ்டப்படுத்துற இந்த காதல் வேண்டாம் என்று தோணுச்சு. என் வாழ்க்கையில நான் யாரையும் காதலிக்க கூடாது நேசிக்கக் கூடாது என்று முடிவு பண்ணிட்டேன். நான் யாரையாவது நேசித்து அவங்க என்ன விட்டுப் போயிட்டா என்னால தாங்கிக்க முடியாது. அதான் நீ என்கிட்ட விரும்பியதை சொல்லும்போதெல்லாம் நான் விலகி விலகிப் போனேன்".
"ஒருவேளை நான் உன்னை காதலித்து நீயும் என்னை விட்டு போயிட்டா என்னால தாங்கிக்க முடியாது. இன்னொரு இழப்பை என்னால ஏத்துக்க முடியாது. எந்த சூழ்நிலையிலும் நீ என்னை விட்டு போக மாட்டேல?" என்று கூறி அவளைப் பார்த்தான்.
நட்சத்திராவிற்கு தான் கஷ்டமாக இருந்தது. எவ்வளவு சோகத்தை மனசுக்குள்ளேயே வச்சிருக்கான் என நினைத்தவள் அவனிடம், "நான் உன்னை விட்டு என்றைக்குமே பிரிந்து போக மாட்டேன். நான் அப்படி உன்னை பிரிந்தால் அதற்கு காரணம் என் மரணமாகத்தான் இருக்கும். ஒரு விஷயத்தை நீ புரிஞ்சுக்கணும் மாமா எல்லா விஷயத்திலும் நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு. நம்ம நல்லது தான் பார்க்கணும்" என்றாள்.
சூர்யா கையை நீட்டி, "சத்தியமா என்னை விட்டுட்டு போக மாட்டேல? என்க நட்சத்திராவிற்கு அவன் செயல் குழந்தைத் தனமாக இருந்தது. நட்சத்திரா அவன் கை மேல் தன் கையை வைத்து, "சத்தியமா எப்பவுமே நான் உன்னை விட்டு பிரிய மாட்டேன். இப்ப உனக்கு பயம் போயிடுச்சா?"
சூர்யா, "போயிடுச்சு பசி வந்துடுச்சுடி. சாப்பிட ஏதாவது இருக்கா? சாப்பிடலாம்" என்று எழுந்தான்
நட்சத்திரா, அவ்வளவுதானா? வேறேதுவும் இல்லையா?" என்றாள்.
சூர்யா, "அவ்வளவுதான் வேற என்ன இருக்கு? என்று தோளை குலுக்கிவிட்டு வா சாப்பிடலாம்" என்றவன் எழுந்து சென்றுவிட்டான்.
நட்சத்திரா, 'இவ்வளோ சொன்னவன் எப்போ அவனுக்கு தோணுதோ அப்பவே லவ்வ சொல்லட்டும். நாம வாயைத் திறந்துக் கேட்கக் கூடாது' என நினைத்துக் கொண்டாள்.
அதன் பின் வந்த நாட்களில் நட்சத்திரா அவன் காதலை சொல்ல வேண்டும் என்று கேட்கவில்லை. சூர்யாவும் வாயைத் திறந்து சொல்லவில்லை. நாட்கள் யாருக்கும் நிற்காமல் செல்ல நட்சத்திரா படிப்பை முடித்துவிட்டாள்.
நட்சத்திராவும் சூர்யாவும் எல்லா பொருட்களையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர். நாளை இருவரும் இந்தியா கிளம்பவேண்டும்.
நட்சத்திரா, "மாமா இந்த திங்க்ஸ் எல்லாம் நாம கையிலே தூக்கிட்டு போய் விடுவோம். ஆனால் இந்த பிரிட்ஜ், டேபிள் மத்த எல்லாத்தையும் எப்படி தூக்கிட்டு போவது?" என்று மிக முக்கியமான சந்தேகத்தை கேட்டாள்.
சூர்யா அவள் தலையில் கொட்டி, "ஏன்டி குட்டச்சி உனக்கு மட்டும் கடவுள் அறிவை கொஞ்சம் நிறைய வச்சுட்டாரு போல. இதெல்லாம் எப்படி கைல தூக்கிட்டு போக முடியும்? இதை விற்க ஏற்பாடு பண்ணிட்டேன். இதை ஆளுங்க வந்து தூக்கிட்டு போயிடுவாங்க" என்றான்.
நட்சத்திரா, "மாமா எல்லாத்தையும் தூக்கிட்டுப் போயிடுவாங்களா?"
சூர்யா, "ஆமாடி...." என்றான்.
நட்சத்திரா, "மாமா இதையெல்லாம் விற்க வேண்டாம் மாமா" என்றாள்.
சூர்யா, "விற்க்காமல் தலையிலயா தூக்கிட்டு போக முடியும்?"
நட்சத்திரா, "மாமா இதுல தான் நம்ம சந்தோஷமா இருந்த ஞாபகங்கள் எல்லாம் இருக்கு" என்றாள்.
சூர்யா, "இந்த வீட்டில் கூட தான் நம்ம ஞாபகங்கள் இருக்கு. அதுக்காக இந்த வீட்டை தூக்கிட்டு போக முடியுமா? லூசு மாதிரி பேசாம எல்லாத்தையும் எடுத்து வை சீக்கிரம்" என்றான்.
நட்சத்திரா முகத்தை சோகமாக வைத்துக் கொண்டே எல்லா பொருட்களையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
சூர்யா, "ஏய் குட்டச்சி ஹரீஷ் வீட்ல நம்மளை விருந்துக்கு கூப்பிட்டு இருக்காங்க. ஞாபகம் இருக்குல்ல? சீக்கிரம் வேலைய முடிச்சுட்டு கிளம்பு" என்றான். வேலையெல்லாம் முடித்துவிட்டு இருவரும் ஹரிஷின் வீட்டிற்கு கிளம்பி சென்றனர்.
சுதாவும் ஜெயராஜும் அவர்களை வரவேற்றனர். சுதா, "இப்பத்தான் நீங்க ஆஸ்திரேலியா வந்த மாதிரி இருக்கு. அதுக்குள்ளயும் நாட்கள் ஓடிருச்சி" என்றார்.
நட்சத்திரா, "ஆமா எனக்கு கூட இப்பதான் வந்த மாதிரி இருக்குமா" என்றாள்.
சுதாவிற்கு சூர்யாவும் நட்சத்திராவும் கிளம்புவது வருத்தமாக இருந்தது. நட்சத்திராவிற்கும் ஹரிஷ் ஃபேமிலியை பிரிவது கஷ்டமாக இருந்தது. சுதா நட்சத்திராவைப் பெற்ற மகள் போல பார்த்துக் கொண்டார்.
நட்சத்திரா, "அம்மா நீங்க கண்டிப்பா இந்தியாவுக்கு வரணும். நான் உங்கள் வரவை எதிர்பார்த்துக் காத்திருப்பேன்" என்றாள்
ஜெயராஜ், "அதுக்கு என்னம்மா? வந்துட்டா போச்சு. நீங்க எப்போ உங்க கல்யாண பத்திரிக்கையை அனுப்புறிங்களோ அப்பவே உடனே கிளம்பி வந்துடுறோம் குடும்பத்தோட" என்றார்
இதைக் கேட்டதும் நட்சத்திராவும் சூர்யாவும் பதில் சொல்லாமல் முழித்தனர். சுதா, "என்ன இப்படி முழிக்கிறீங்க? எப்போ உங்க காதல் விஷயத்தை வீட்டில் சொல்றதா ஐடியா. எவ்வளவு நாள் இப்படியே சீக்கிரெட்டா லவ் பண்ணிட்டு இருக்க போறீங்க... இதில் ரிஜிஸ்டர் மேரேஜ் வேற பண்ணிட்டீங்க" என்றார்.
சூர்யா, "சீக்கிரமா சொல்லி விடுவேன்" என்றவன் நட்சத்திராவை முறைத்தான்.
நட்சத்திரா, 'ஐயோ! என்னைக்கோ சொன்ன பொய் இன்னைக்கு நம்மளை பழிவாங்குது' என நினைத்து அவனைப் பார்த்து ஹிஹிஹி என இளித்தாள்.
ஜெயராஜ், "சீக்கிரம் சொல்ற வழிய பாருங்க" என்றார். சூர்யா இவங்க இப்போதைக்கு இந்த டாபிக்கை விடமாட்டாங்க போல என நினைத்தவன், "அங்கிள் ஆபீஸ்ல ஒரு முக்கியமான வேலை இருக்கு. நான் போய்ட்டு எல்லா கணக்கையும் முடிச்சுட்டு வந்துடுறேன்" என்றவன் ஹரிஷை அழைத்துக்கொண்டு ஆபீஸுக்கு கிளம்பினான்.
சுதா சூர்யாவிற்கும் நட்சத்திராவிற்கும் என்ன பிடிக்கும் என்று பார்த்து பார்த்து சமையல் செய்தாள். நட்சத்திரா ஜெயராஜிடம் பேசிக் கொண்டு செஸ் விளையாடிக் கொண்டிருந்தாள்.
திடீரென்று அவளுக்கு வாந்தி வருவது போல இருக்க எழுந்து வாஷ் பேஷனை நோக்கி ஓடினாள். சுதாவும் ஜெயராஜும் என்னவென்று பதற நட்சத்திரா, "ஒன்னும் இல்லம்மா நைட் சாப்பிட்டது டைஜஸ்ட் ஆகல என்று நினைக்கிறேன்" என்றாள்
ஜெயராஜ், "வாமா ஹாஸ்பிட்டலுக்கு போகலாம்".
நட்சத்திரா, "அதெல்லாம் வேண்டாம் அப்பா. இன்னும் கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும்" என்றாள்.
சுதா, இந்தாம்மா தண்ணீரைக் குடி" என்று கொடுக்க அதை வாங்க போனவள் அப்படியே மயங்கி சரிந்தாள். சுதா பதறிக்கொண்டு அவள் முகத்தில் தண்ணீர் தெளிக்க நட்சத்திரா மெதுவாக கண்ணைத் திறந்தாள். சுதா மெதுவாக அவளை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று சோபாவில் அமர வைத்தார்.
ஜெயராஜ், "நான் முன்னாடியே டாக்டர்கிட்ட போகலாம் என்று சொன்னேன். இப்ப பாரு மயக்கம் போட்டு விழுகுற அளவுக்கு போய்ட்ட" என்றார்.
நட்சத்திரா, "அப்பா இப்பவும் சொல்றேன். டாக்டர்கிட்ட போகிற அளவுக்கு எல்லாம் ஒன்னும் இல்ல. இது நார்மல் மயக்கம்தான்" என்றாள்.
நட்சத்திரா வாந்தி மயக்கம் இதையெல்லாம் வைத்து சுதா ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். சுதா, "அவளுக்கு என்ன ஆச்சு என்று எனக்கு தெரியும்" என்றார்.
ஜெயராஜும் நட்சத்திராவும் அவரை கேள்வியாக பார்க்க சுதா, "இருங்க ஒரு நிமிடம் வந்துவிடுகிறேன்" என்று கிச்சனுக்குச் சென்றவர் சர்க்கரையை எடுத்து வந்து நட்சத்திராவிற்கும் ஜெயராஜுக்கும் கொடுத்தார்.
இருவரும் ஒன்றும் புரியாமல் பார்க்க சுதா, "இன்னுமா உங்களுக்கு புரியல? நம்ம நட்சு உண்டாகிருக்கா. நம்ம சூர்யா அப்பாவாக போறான்" என்றார்.
இதைக் கேட்டதும் நட்சத்திராவிற்கு தூக்கி வாரி போட்டது. ஜெயராஜ், எவ்வளவு சந்தோஷமான விஷயம் சொல்லி இருக்க, போய் ஸ்வீட் செஞ்சு எடுத்துட்டுவா. நான் டாக்டருக்கு கால் பண்ணி செக் பண்ண வர சொல்றேன்" என்றார்.
நட்சத்திரா, "அதெல்லாம் ஒன்னும் இல்ல நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க...." என்று கூற வர சுதா, "நாங்க சரியாதான் சொல்றோம். இந்த மாதிரி நேரத்துல நீ ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணக்கூடாது. போய் ரூம்ல ரெஸ்ட் எடு. நான் ஸ்வீட் செய்கிறேன். இந்த சந்தோஷமான செய்தியை கொண்டாட வேண்டாமா?" என்றார்.
நட்சத்திரா, நாம என்ன சொன்னாலும் இவங்க கேட்க போவதில்லை என்று நினைத்து வாயை மூடிவிட்டாள்.
ஜெயராஜ், "டாக்டருக்கு கால் பண்ணிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவாரு" என்றார். நட்சத்திரா சொல்றதுக்கு ஒன்னும் இல்ல. நீங்க நடத்துங்க என்ற ரீதியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
சூர்யாவும் ஹரிஷும் வேலையை முடித்து விட்டு வீடு திரும்பினர். சூர்யா உள்ளே நுழைந்ததும் "சூர்யா இந்தா ஸ்வீட் சாப்பிடு" என்று அல்வாவை ஊட்டினார் சுதா.
சூர்யாவும் ஹரிஷூம், "என்ன ஸ்பெஷல்? ஸ்வீட் எல்லாம் செஞ்சு இருக்கீங்க" என்க சுதா, "நல்ல விஷயம் தான். நம்ம நட்சத்திரா சந்தோஷமான விஷயம் சொல்லி இருக்கா" என்றார்.
சூர்யா, 'இவ நல்ல விஷயம் சொன்னால் அது கண்டிப்பா எனக்கு கெட்ட விஷயமாகத்தான் இருக்கும்' என்று நினைத்தான்.
சுதா, "நம்ம சூர்யா அப்பாவாக போகிறான்" என்றார். இதைக் கேட்டதும் சூர்யா ஆடிப்போய் விட்டான். பேலன்ஸிற்காக பக்கத்திலிருந்த சுவற்றை பிடித்துக் கொண்டான்.
ஹரிஷ், "மச்சான் காங்கிரஸ்டா..." என்று அனைத்துக் கொண்டான். சூர்யா நான் ஒண்ணுமே பண்ணலையே என்று நினைத்து முழித்தான்.
சுதா, "சூர்யா இனிமேல் நீங்க டிராவல் பண்ண முடியாது. குழந்தை பிறந்த பிறகுதான் நீங்க இந்தியா போக முடியும்" என்றார்
சூர்யா மைண்ட் வாய்ஸில் 'இவ கல்யாணத்தை பத்தி சொன்ன பொய்யில இருந்து தப்பிக்கத்தான் வெளியே போனேன். இப்ப அதை விட பெரிய பொய்யை சொல்லி நம்மளை மாட்டி விட்டுட்டாளே!' என நினைத்து அவளை முறைத்தான்.
நட்சத்திரா நான் எதுவுமே பண்ணல என்ற ரீதியில் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு அவனை பார்த்தாள். சுதா, "என்ன சூர்யா யோசிக்கிற? வீட்டில் எப்படி சொல்றதுனா... நீ கவலைப்படாத, நாங்க உங்க ரெண்டு பேர் வீட்லயும் பேசுறோம். கண்டிப்பா உங்கள புரிஞ்சுக்குவாங்க" என்றார். சூர்யா நட்சத்திராவிடம் சென்று யாருக்கும் கேட்காத வகையில் பேசினான்.
சூர்யா, "ஏன்டி ஊருக்கு கிளம்புற நேரத்துல இப்படி வம்பு இழுத்து விட்டிருக்க.." என்றான்.
நட்சத்திரா, "மாமா சத்தியமா நான் எதுவும் சொல்லலை. சாப்பிட்டது ஒத்துக்காம வாமிட் பண்ணேன். அதை வச்சு அவங்களே முடிவு பண்ணிட்டாங்க" என்றாள்.
சூர்யா, "நீ இல்லை என்று சொல்லி அவர்களுக்கு புரிய வைக்க வேண்டியது தானே" என்றான். நட்சத்திரா, "எங்க அவங்க என்ன பேசவே விடலையே" என்றாள்.
சுதா, "சூர்யா நீ ஒன்னும் கவலைப்படாதே! நான் நட்சத்திரா கூட இருந்து பத்திரமா பார்த்துக்கிறேன். நட்சத்திராவும் எனக்கு மேக்னா மாதிரி தான்" என்றார்.
ஜெயராஜ், "டாக்டர் வந்துவிட்டார் என்று நினைக்கிறேன். நான் போய் பார்த்துட்டு வருகிறேன்" என்று டாக்டரை அழைத்து வந்தார்.
டாக்டர் நட்சத்திராவை பரிசோதித்துக் கொண்டிருந்தார் அந்த நிமிடம் சூர்யாவும் நட்சத்திராவும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தனர்.
டாக்டர் பரிசோதித்துவிட்டு, "ஒன்னும் இல்ல அவங்களுக்கு சாப்பிட்டது டைஜஸ்ட் ஆகலை. அதனாலதான் வாந்தி எடுத்து இருக்காங்க. அவங்க வீக்கா இருக்காங்க. டேப்லெட்ஸ் எழுதி தரேன் சாப்பிடுங்க" என்றார்.
இதைக் கேட்டதும் நட்சத்திராவும் சூர்யாவும் நிம்மதி அடைந்தனர். மற்ற மூவரும் இதைக் கேட்டு வருத்தம் அடைந்தனர். டாக்டர் சென்றதும் சுதா "சாரிமா நட்சத்திரா தேவை இல்லாம உன் மனசுல ஆசைய வளத்துட்டேன். இப்படி ஒன்றும் இல்லாமல் போயிடுச்சு" என்று வருத்தப்பட்டார்
நட்சத்திரா நல்ல வேலை ஒன்னும் இல்லாம போயிடுச்சு என்று சந்தோஷப்பட்டவள் அதை வெளியே காட்டாமல் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு, "சரி விடுங்க அம்மா, எது எப்ப நடக்கும் என்று விதி இருக்கோ அது அப்பதான் நடக்கும்" என்றாள்.
சூர்யா ஆஹா! நாடகத்தை போட ஆரம்பிச்சுட்டா என்று நினைத்தான். ஜெயராஜும் ஹரிஷும் சூர்யாவிற்கு ஆறுதல் சொல்ல சூர்யா சோகமாக இருப்பது போல் நடித்தான். பின் அனைவரும் சமாதானமாகினர். ஒருவழியாக நட்சத்திராவும் சூர்யாவும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று வீட்டை வந்தடைந்தனர்.
இப்படியே அந்த நாள் கழிந்தது. மறுநாள் இருவரும் இந்தியாவிற்கு கிளம்பினர் ஹரிஷின் குடும்பத்தினர் ஏர்போர்ட் வந்து அவர்கள் இருவரையும் வழியனுப்பி வைத்தனர். சூர்யாவும் நட்சத்திராவும் மகிழ்ச்சியாக இந்தியாவிற்கு சென்றனர்.
சில மாதங்களுக்கு பிறகு....
சென்னை எஸ்.ஆர்.எஸ் திருமண மண்டபம். சூர்யா வெட்ஸ் நட்சத்திரா என்ற பெயர்ப்பலகை வெல்கம் என்ற போர்டுடன் அனைவரையும் வரவேற்றது.
மணமகன் அறையில் சூர்யா குதூகலத்துடன் கல்யாணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தான். விஜய், "டேய்! மச்சான் இதோட பத்து தடவை பவுடர் அடிச்சுட்டட. என்னால முடியல..."
சூர்யா, "ஏன்டா இப்படி பொறாமை
படுற... வாழ்க்கையில கல்யாணம் என்பது ஒரு தடவை தான் நடக்கும். அதுல நான் அழகா தெரிய வேண்டாமா?" என்றான்.
விஜய், "எதுக்கும் ஒரு லிமிட் தான்டா. என்னால தாங்க முடியல உன்னோட அலப்பறையை" என்றான்.
விஜய் சொல்வதை காதில் வாங்காமல் சூர்யா பதினொன்றாவது முறையாக பவுடர் அடிக்க ஆரம்பித்தான்.
கல்யாண மண்டபமே களைகட்டியிருந்தது. ஷீலாவும் சங்கரும் வரும் உறவினர்களை வரவேற்று உபசரித்துக் கொண்டிருந்தனர். மல்லிகாவும் சந்திரசேகரும் பரபரப்பாக வேலை செய்துகொண்டிருந்தனர். சதீஷ் அனுவுடன் மொக்கை போட்டுக் கொண்டிருந்தான்.
மணமகள் அறையில் நட்சத்திரா கொதித்துக் கொண்டிருந்தாள். யாரும் தன் பேச்சை கேட்கவில்லை. கல்யாணத்தில் விருப்பமா? என்று ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. விருப்பமில்லாத கல்யாணத்தை என் சம்மதம் இல்லாமல் செய்து வைக்கிறார்கள்' என மனதிற்குள் புலம்பிக் கொண்டிருந்தாள்.
விபிஷா நட்சத்திராவிற்கு நெற்றிச் சுட்டியை வைத்துவிட நட்சத்திரா அதை தள்ளிவிட்டு, "ஏன்டி இப்ப இது ஒண்ணுதான் குறைச்சல். கல்யாணத்தை நிறுத்த ஒரு வழி சொல்லுனா அதை சொல்ல மாட்ற" என்றாள் கடுப்பாக.
விபிஷா, "நீ கூட தான் எதுக்கு கல்யாணத்தை நிறுத்த சொல்ற, உனக்கும் சூர்யா அண்ணாக்கும் என்ன பிரச்சனை என்று கேட்டால் சொல்ல மாட்ற" என்றாள்.
நட்சத்திரா 'கடைசி நிமிஷத்துல கூட ஏதாவது அற்புதம் அற்புதம் நிகழாதா? இந்த படத்துல எல்லாம் தாலி கட்டுற சமயத்தில் கல்யாணம் நிற்குமே! அதுமாதிரி எதுவும் நடக்காதா?' என நினைத்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் அது எதுவும் சூர்யாவிடம் பலிக்காது என்று அவளுக்கு தெரியவில்லை. சிறிது நேரத்தில் மல்லிகா வந்து, "நட்சத்திராவை கூட்டிட்டு வாங்க. பொண்னை அழைக்கிறாங்க" என்றார்.
சூர்யா மாப்பிள்ளைக்கு உரிய கம்பீரத்துடன் ஆணழகனாக அமர்ந்திருந்தான். விபிஷாவும் தாராவும் நட்சத்திராவை அழைத்துவந்தனர். விண்ணுலக தேவதை போல நட்சத்திரா நடந்து வந்தாள்.
அவள் நடந்து வந்து சூர்யா அருகில் அமர சூர்யா அவளைப் பார்த்து புன்னகைத்தான். நட்சத்திரா அவனைப் பார்த்து முறைத்தாள்.
சூர்யா அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நட்சத்திராவை வைத்த கண் வாங்காமல் பார்த்து
கொண்டிருந்தான்.
விஜய் அவன் காதில், "ஏன்டா எல்லார் முன்னாடியும் இப்பிடி மானத்த வாங்குற, கொஞ்ச நேரம் இந்தப் பக்கம் பாரு. என் தங்கச்சியைவே பார்த்து கொண்டே இருக்காதே" என்றான்.
சூர்யா அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் நட்சத்திராவிடம், "ஏய் குட்டச்சி சேலைல நீ ரெம்ப அழகா இருக்க" என்றான். இதைக்கேட்டு நட்சத்திரா சூர்யாவைத் தீ பார்வையோடு முறைத்தாள்.
நட்சத்திரா கடவுளே கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திவிடு என மனதில் மந்திரம் போல் வேண்டிக் கொண்டே இருந்தாள். தாரா மாங்கல்யத்தை அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு வந்து தந்தாள்.
ஐயர் மந்திரத்தை கூறி தாலி எடுத்து கொடுத்தார். சூர்யா அதைவாங்கி நட்சத்திராவின் கழுத்தில் மங்கல நாண் பூட்டினான்.
முற்றும்...
ஹாய் ப்ரண்ட்ஸ், என்னடா இந்த பிள்ளை பாதிலே முற்றும்னு போட்டுருச்சுன்னு என்னை திட்டாதீங்க. இதில் சொல்லப்படாத நிறைய கேள்விகளுக்கு விழிகளிலே ஒரு கவிதை பகுதி(2) ல சொல்றேன்... மீட் யூ சூன் வித் பார்ட் 2. அப்புறம் இதுவரைக்கும் கமெண்ட் பண்ணாத சைலண்ட் ரீடர்ஸ் தாம் இப்பவாவது ஒரு கமெண்ட் பண்ணுங்கபா...
 
Need a gift idea? How about a dinosaur night light?
Buy it!