வேட்டையாடு விளையாடு - கதை திரி

Status
Not open for further replies.

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

கதையின் டீசரோட வந்துட்டேன்......எருமை! எருமை! இங்கே வந்தாவது ஒழுங்கா இரு! அடக்க ஒடுக்கமா வீட்டுக்குள்ள இரு! என்று அவனை இடித்தார்.
மகனையும் மனைவியையும் பார்த்த சந்துரு " அவனை சொல்லி குத்தமில்ல..நாம கண்காணிக்கனும்" என்றார் எரிச்சலாக.
அவரை முறைத்து "எவ பின்னாடி சுத்துறான்னு நாமலும் பின்னாடியே போக முடியுமாங்க" என்றார் எரிச்சலாக.
"என்ன பண்றது‌ தறுதலையை பெத்துட்டோமே"
"நீங்க நல்லா விசாரிச்சீட்டீங்களா? இந்த அபார்ட்மெண்ட்ல எதுவும் வயசு பொண்ணுங்க இருக்கான்னு".
"அதெல்லாம் விசாரிச்சிட்டேன். யாருமில்ல".
நெஞ்சை பிடித்துக் கொண்டவர் " ஹப்பாடா! இப்போ தான் நிம்மதியா இருக்கு" என்றார்.
மெல்ல அவர்களை நிமிர்ந்து பார்த்த சூர்யா சிரிப்படன் "காலேஜில் இருப்பாங்களே" என்றவனை பாய்ந்து மண்டையில் கொட்டிய மல்லிகா "அதுக்கு தான் மவனே ஜென்ட்ஸ் காலேஜில் சேர்த்து விட்டிருக்கோம்" என்றார்.
அப்போதும் சிரிப்புடனே "எப்படியும் போகிற வழியில் கண்ணுல படாமலா போயிடுவாங்க" என்றவனை தந்தையும் தாயும் கொலை வெறியுடன் பார்த்தனர்.
சந்துரு "இதுக்கு மேல ஏழறையை இழுத்து விட்ட மவனே ஊட்டுக்குள்ளேயே போட்டு பூட்டிடுவேன்" என்றார் கடுப்பாக.
மல்லிகாவோ தலையில் கை வைத்தபடி அமர்ந்தவர் “இவன் பொறந்தப்ப எப்படி எல்லாம் சந்தோஷப்பட்டோம். ஆனா இந்தப் பர....” என்று மகனை முறைத்தார்.


அன்னையின் அருகே நகர்ந்து அமர்ந்தவன் “மா! உங்களை பெருமைப்பட வைக்கிற மாதிரி நல்லா படிக்கிறேன். அமைதியான பையனா இருக்கேன். அப்புறம் ஏன் என்னை கரிச்சு கொட்டுறீங்க” என்றான் பாவமாக.


ஓங்கி அவன் நடு மண்டையில் கொட்டியவர் “நீ இப்படி பேசுறதை வெளியில இருக்கிறவன் கேட்டா நம்புவான். ஏண்டா இப்படி இருக்க? உன்னால தானே அந்த வீட்டை விட்டு இங்கே வந்திருக்கோம். துப்பட்டா மாதிரி ஒரு துணி தெரிஞ்சா போதும் அது பின்னாடியே போய் எங்க மானத்தை வாங்குறியே” என்றார் அழாத குறையாக.


அன்னை தந்தையை சீரியசாக பார்த்தவன் “உங்க பையன் நல்ல ஆரோக்கியமான பையன்னு சந்தோஷப்படுங்க அப்பா, அம்மா” என்றான்.


இருவரும் அவன் பேச்சில் என்னவென்று புரியாமல் பார்க்க, அவர்களைப் பார்த்து கண் சிமிட்டியவன் “இந்த வயதில் ஹார்மோன் சரியா வொர்க் ஆகணும். இல்லேனா ஏதோ சீக்குன்னு அர்த்தம்” என்றவன் எழுந்து ஓடி விட்டான்.


பெற்றவர்கள் இருவரும் தலை மேல் கை வைத்துபடி அமர்ந்து விட்டனர்.


சந்துருவோ அழுகுரலில் “இவனை படிக்க வச்சு தான் ஆகணுமா மல்லி? காலம் முழுக்க நானே கஞ்சி ஊத்திடுறேனே. இவனை வெளில விட்டு அடி வாங்குறதுக்கு இது மேல் இல்லையா?” என்றார்.


“நானும் அதை தான் நினைக்கிறேங்க” என்றார் கண்களில் பயத்துடன்.

அடுத்த வாரத்திலிருந்து பதிவுகள் போடப்படும் பிரெண்ட்ஸ்.....
 
Last edited:
Status
Not open for further replies.