வேட்டையாடு விளையாடு - கதை திரி

Status
Not open for further replies.

sudharavi

Administrator
Staff member
சூர்யாவிற்கோ அந்த வீடியோ பார்த்த பிறகு கன்யாவை அவர்களின் முன் கொண்டு செல்ல வேண்டுமா என்கிற எண்ணம் எழுந்தது.


“கன்யா வரணுமா வெற்றி பார்டிக்கு? நான் மட்டும் போதாதா?” என்றான்.


அவனை யோசனையாக பார்த்த வெற்றி “கன்யாவுக்காக தான் நீ போகணும் சூர்யா. உன்னோட கர்ல் பிரெண்ட் அவ. அப்படி தான் அவனுங்களுக்கு அறிமுகமாக போறா. அவளோட பாதுகாப்பு உன் கையில் தான்” என்றான்.


சற்று யோசனையுடன் “ம்ம்..ஓகே வெற்றி” என்றான்.


மறுநாள் செய்ய வேண்டியவற்றை முடிவு செய்து கொண்டு அங்கிருந்து சென்றான் வெற்றி. அனைவரும் சென்றதும் தனது இடத்திற்கு சென்ற சூர்யா ஒருவித பதட்ட நிலைமையிலேயே இருந்தான். அவனது மனம் அந்த வீடியோவின் தாக்கத்திலிருந்து மீளவில்லை. அதே சமயம் கன்யாவை அந்த பொறுக்கிகள் இடம் அறிமுகம் செய்ய வேண்டுமே என்று தவித்தது.


அவளிடம் பேசி பார்ப்போமா என்கிற எண்ணத்துடன் அவளது எண்ணிற்கு அழைத்தான்.


அவளோ விஜய் தேவரகொண்டா நடித்த கீத கோவிந்தம் படத்தை தேவாரகொண்டாவிர்காக ஜொள்ளு விட்டுக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தாள். அலைபேசி அடிக்கவும் அதை எடுத்துப் பார்த்தவள் அவசரமாக எழுந்து சென்று ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். பின்னர் அலைப்பேசியை ஆன் செய்து “ஹாய் ஹல்க்” என்றாள்.


அவள் ஹல்க் என்று அழைக்கவும் கடுப்பானவன் “ஏய்! என்ன திமிரா?” என்றான்.


“என்னடா நீயே போன் பண்ணி இருக்க? மழை அடிச்சு ஊத்த போகுது பாரு” என்றாள் கிண்டலாக.


“கன்யா! நான் ஒன்னு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டியே?” என்றான் தயக்கத்துடன்.


இதழில் எழுந்த சிரிப்பை அடக்கியபடி “நீ ஒன்னு கேட்டாலும் ஒன்பது கேட்டாலும் போன்ல எப்படிடா கொடுக்கிறது?” என்றாள்.


அவளது பேச்சில் தலையில் அடித்துக் கொண்டவன் “நான் சீரியஸா பேசுறேன்” என்றான்.


“எந்த ஹாஸ்பிட்டலில் இருந்துடா?”


“ஷ்...கன்யா! நீ இந்த ஆபரேஷனில் இருக்கனுமா?”


அதுவரை வார்த்தையால் விளையாடிக் கொண்டிருந்தவள் “ஏன் சூர்யா? என்னாச்சு?” என்றாள்.


மனதிலிருந்த துக்கம் தாங்காது “இன்னைக்கு வெற்றி ஒரு வீடியோ ஆதாரத்தை காண்பிச்சார். என்னால முடியல கன்யா. அவனுங்க வெறி பிடிச்ச நாய்ங்க...உனக்கு எதுவும் ஆபத்து வந்துடுமோன்னு பயமா இருக்கு” என்றான்.


அவனது குரலில் தெரிந்த நடுக்கத்தை உணர்ந்து கொண்டவள் “பயப்படுறியா சூர்யா?” என்றாள்.


“எனக்காக இல்ல கன்யா. உனக்காக! உன்னோட பாதுகாப்புக்காக” என்றான் சீறலான மூச்சுடன்.


“நீ இருக்க இல்ல...என்னை பார்த்துக்க்க மாட்டியா?”


அவள் அப்படி சொன்னதும் என்ன மாதிரி உணர்ந்தான் என்றே புரியவில்லை. ஒரு பெண் தன்னுடைய பாதுகாப்பை உரிமை உள்ளவனிடம் மட்டுமே தேடுவாள். அப்படி என்றாள் அவளுக்கும் தன் மீது ஈர்ப்பு இருக்கிறது. இத்தனை நாள் அவள் விளையாட்டாக தன்னிடம் பழகவில்லை என்பதை உணர்ந்து பரவசம் அடைந்தான்.


அவளோ “அதெல்லாம் சரி! எனக்கு அந்த வீடியோவை எதுக்கு காண்பிக்கல? நான் வாணி அக்காவுக்கு போன் பண்ணி கேட்கிறேன்” என்றாள்.


அதில் அதிர்ந்து போனவன் “ஏய்! நீ பாட்டுக்கு அவங்க கிட்ட கேட்டு வைக்காதே! நீ சின்ன பொண்ணு...நீ எல்லாம் அதை பார்க்க கூடாது” என்றான் பதட்டமாக.


“இந்த சின்ன பெண்ணை இவ்வளவு பெரிய ஆபரேஷனில் ஈடுபட மட்டும் வைக்க முடியும். ஆனா வீடியோவை பார்க்க கூடாதுன்னு சொன்னா என்ன அர்த்தம்” என்று வம்பு பண்ணினாள்.


அவளின் அடாவடியில் கடுப்ப்பானவன் “லூசு! இது நீ பார்க்கிற படங்கள் இல்ல. கடுப்பை கிளப்பாம வாணி மேடம் சொல்ற மாதிரி நாளைக்கு பார்டிக்கு தயாராகு. ஐயோவோட தான் வரனும் தெரியுமில்ல” என்றான் கிண்டலாக.


“அது தாண்டா மனசு வலிக்குது. தேவாரகொன்டாவை நினைச்சவளுக்கு இப்படியொரு ஹல்க்கை ஜோடி சேர்த்த ஆண்டவனை என்ன சொல்றது?” என்றாள் வருத்தமாக.


“கன்யா! உனக்கு தைரியம் இருக்கு இல்லேன்னு சொல்லல. ஆனா நாளைக்கு ரொம்ப கவனமா இருக்கணும். நீ நினைக்கிற மாதிரி இல்ல இந்த உலகம்” என்றான்.


அவளோ சிரிப்புடன் “என்னடா ஹல்க்! இவ்வளவு பீலிங்க்சை இத்தனை நாள் எங்கே வச்சிருந்த?” என்றாள் கிண்டலாக.


குரல் கரகரக்க “ப்ளீஸ்! கன்யா! நான் சொல்றதை கவனமா வச்சுக்கோ. நாளைக்கு என்னை மீறி எங்கேயும் அந்த பார்டியில் தனியா போயிடாதே. என்னோடவே இரு. அங்கே வரவனுங்க எல்லாம் பொணம் தின்னிங்க. தயவு செஞ்சு நான் சொல்றபடி கேளு” என்றான்.


அதுவரை விளையாடிக் கொண்டிருந்தவள் “அப்படி என்ன இருந்துச்சு அந்த வீடியோவில்? நீ இவ்வளவு தூரம் பயப்படுற என்றால் நிச்சயமா மோசமான விஷயமா தான் இருக்கும். நீ சொல்றதை கேட்கிறேன் சூர்யா. உன்னை மீறி எங்கேயும் போக மாட்டேன்” என்றாள்.


அவன் தான் பார்த்ததை சொல்லவில்லை என்றாலும் அதை அவளுக்கு தன் உணர்வுகளின் மூலம் கடத்தி இருந்தான். அந்த சின்னஞ்சிறு உள்ளங்கள் ரெண்டும் தங்களை அறியாமல் அடுத்தவரை தேடினர்.


அவனது இதமான பேச்சில் படத்தை கூட பார்க்காமல் விட்டத்தைப் பார்த்தவண்ணம் படுத்திருந்தாள் கன்யா. அவனோ மறுநாளில் இருந்து அவளது வாழ்க்கை எந்த திசையை நோக்கி போகும் என்கிற பயத்தில் இருந்தான். அவர்களின் நேரடி பார்வையில் அவள் விழுந்தாள் நிச்சயம் ஆபத்தை நோக்கி இழுக்கப்படுவாள். அவளை அவர்களிடம் இருந்து பாதக்காப்பது தனது முதல் கடமை என்பதை அந்த நிமிடம் உணர்ந்தான்.
 
ப்ப்பா... என்ன கொடுமை இது. படிக்கவே இவ்வளவு கஷ்டமா இருக்கு...
சுதாம்மா... அவனுக்கு சட்டத்திலும் மாட்ட கூடாது... நாமளே அவனுக்குள் வெச்ச்சுசு செய்யனும். Severe punishment to be given.....
 
Unaiya sollanumna Rompa rompa valiya irukku manasu Sudha ma , nammala suthi iruppavargalil silar mmm illa palar intha pinam thinnum kalugukalai vida koduramana murungangal than irukkinrathu, aduthu enna aagumnu padikkave payama irukku . Ennai porutha varai ithu kathaiyala nam nattil pengalukku ethiraga nadantha , nadakkum paliyal van kodumaiyin unmai sambavathin vili paduthan intha kathaikalam than intha story.
 
Ooooo.... Enna solrathu maa... No words to say..... அந்த video கடவுளே எப்படி maa இந்த maari ஆளுங்க எல்லாம் இருக்காங்க.... Vani... வெற்றி oda உணர்வுகள் semma ennake அழுகை வந்துடுச்சி....மந்திரி பையன் antha கேசி ku friend ah athu thaan இந்த ஆட்டம் ஆடுறாங்க.... கனியா vs romba romba கவனமா paathukanum சூர்யா... Super Super Super maa... Semma ah kondu pooringa story ah...
 
Status
Not open for further replies.