வேட்டையாடு விளையாடு - கதை திரி

Status
Not open for further replies.
#26
🤣🤣🤣🤣தரமான சம்பவத்தை சந்துருக்கு சூர்யா சிறப்பாக செய்து விட்டான், எபி சூப்பர் சுதா மா 😍😘
 

bselva

Active member
#27
Ha ha ha chance ila mam semma hero.
Kanni rasi payan.
Inthe Mr.Romeo va adaka vara pora veera mangaya epo intro pannuveenga?
Analum surya appa torture thanga mudila.college pora payana etho high school payan mathiriye treat panraru.
Ha ha only boys college OMG pavam payan.
 

bselva

Active member
#28
Ha ha ha epi ku epi hero kalakuran ponga.
Vachan paru mr.chandru ku aaaapu.
Ella sari than soori ipidi college kula athuvum teacher a pagachukitsye. Iru vela avangaluku kulfi Mathieu super ponnu iruntha enna oannuva😉😉
 

sudharavi

Administrator
Staff member
#29
அத்தியாயம் – 3


சமயலறையில் இருந்து எழுந்த மணமும், பம்பரமாக சுழன்று வேலை செய்து கொண்டிருந்த மகளையும் பெருமையாக பார்த்தபடி கால்களை தடவிக் கொண்டு அமர்ந்திருந்தார் அமிர்தம்.


ஜிம் போய் விட்டு வியர்க்க விறுவிறுக்க உள்ளே நுழைந்த ஜீவா, தங்கை இன்னும் கிளம்பாமல் சமைத்துக் கொண்டிருப்பதை கண்டு “இந்து! உனக்கு நேரமாகலையா” என்றான்.


கையில் கரண்டியுடன் எட்டிப் பார்த்தவள் “சமையல் முடிச்சிட்டேன் அண்ணா. ஒரு பைவ் மினிட்ஸ்ல கிளம்பிடுவேன்” என்றவள் சுட சுட காப்பியை போட்டு எடுத்துக் கொண்டு வந்து அவனிடம் நீட்டினாள்.


“இதெல்லாம் நீ செய்யணுமா இந்து? நான் பார்த்துக்க மாட்டேனா?” என்றான் ஜீவா.


“இதில் என்னன்னா இருக்கு? செஞ்சு வச்சிட்டு கிளம்பிட்டா அம்மா நல்லா ரெஸ்ட் எடுக்கலாம்” என்றாள்.


பேசிக் கொண்டிருக்கும் மகனையும், மகளையும் பெருமையாக பார்த்துக் கொண்டிருந்த அமிர்தம் “இப்படியே பொறுப்பா உன் தங்கைக்கு ஒரு மாப்பிள்ளையை பார்த்துடு ஜீவா” என்றார்.


அவர் அருகில் அமர்ந்து “சொல்லி இருக்கேன் அம்மா...நல்ல இடமா வரட்டும் முடிச்சிடலாம்” என்றான் தங்கையைப் பார்த்து சிரித்துக் கொண்டே.


அவளோ முகத்தை சுருக்கிக் கொண்டு இருவரையும் பார்த்தவள் “அண்ணனனுக்கு முதல்ல கல்யாணம் பண்ணிட்டு அப்புறம் எனக்கு பாருங்கம்மா” என்று கூறிக் கொண்டே தன் அறைக்குச் சென்றாள்.


“பெண்ணை வச்சுகிட்டு அவனுக்கு கல்யாணம் பண்ண வேண்டிய அவசியம் இல்ல. உனக்கு பண்ணிட்டே அவனுக்கு பண்ணலாம்” என்றார்.


சற்று நேரத்திற்குள் கல்லூரிக்கு கிளம்ப தயாராக சுடிதாரில் வந்து நின்றாள். அன்னைக்கு தேவையானதை டைனிங் டேபிளில் எடுத்து வைத்துவிட்டு, தனக்கு மதியம் எடுத்துச் செல்ல வேண்டிய டிபன் டப்பாவை பாக் செய்து ஹன்ட் பாகில் வைத்துக் கொண்டாள்.


அண்ணனும், தங்கையுமாக அமர்ந்து காலை உணவை முடிக்க, அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தவர் “ஆம்பள பசங்க படிக்கிற காலேஜில எதுக்கு வேலைக்கு போகணும்? வேற எங்கேயாவது சேர்ந்து விட்டிருக்கலாம் ஜீவா” என்றார் குறையாக.


இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டு “அம்மா! பயப்படுறதுக்கு ஒண்ணுமில்ல. நான் போய் எல்லாம் பார்த்திட்டு வந்துட்டேன்” என்றான் ஜீவா.


அன்னையின் அருகில் அமர்ந்து “அம்மா! உங்களுக்கு தேவையானதை எல்லாம் எடுத்து வச்சிருக்கேன். சாப்பிட்டிட்டு நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க. நாளைக்கு நீங்க தான் எனக்கு சமைச்சு கொடுக்க்கனும்” என்று கூறி கண் சிமிட்டினாள்.


அவளது தலையை வருடி “நல்லபடியா போயிட்டு வா” என்று வழியன்னுப்பி வைத்தார்.


கீழே சென்று தன் காரில் அமர்ந்தவள் முதல் நாள் டியுட்டியில் சேரப் போவதை எண்ணிக் கொண்டு காரை கிளப்பினாள். இதற்க்கு முன்பு ஆண், பெண் இருபாலரும் படிக்கும் கல்லூரியில் தான் வேலை செய்து கொண்டிருந்தாள்.


அண்ணனுக்கு மாற்றல் கிடைத்ததும் இந்த ஊருக்கு வர வேண்டிய சூழ்நிலை. அவளுக்கு இந்தக் கல்லூரியில் வேலை செய்வதில் எந்த பிரச்னையும் இல்லை, அமிர்தம் தான் உள்ளுக்குள் ஏனோ பயந்தார்.


முதல் நாள் இரவு மனைவியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டவர், தன்னை அவளிடம் மாட்டிக் கொடுத்த மகன் மீது கொலைவெறியோடு கிளம்பிக் கொண்டிருந்தார் சந்திரு.


அதற்கு தகுந்தார் போல் கல்லூரிக்கு கிளம்பி வந்த மகனைப் பார்த்ததும் முகம் சிவந்து போய் மூச்சு புசுபுசு என்று இழுத்தது.


“சூர்யா!” என்று கோபமாக கத்தினார்.


அன்னையின் கவனிப்பில் இட்லியை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தவன் நிமிர்ந்தும் பார்க்காமல் தட்டில் கவனமாக இருந்தான்.


“என்ன டிரஸ் போட்டிருக்க சூர்யா?” என்றார் பல்லைக் கடித்துக் கொண்டு.


அவன் பதில் சொல்வதற்கு முன்பே முந்திக் கொண்ட மல்லி “ஏன் அவன் போட்டிருக்கிற ட்ரெஸ்சுக்கென்ன?” என்றார் கடுப்பாக.


அவரை முறைத்து “இப்படியா காலேஜுக்கு டிரஸ் பண்ணிட்டு போவாங்க?” என்றார் ஆங்காரமாக.


காலாட்டிக் கொண்டே சாம்பாரில் இட்லியை முக்கி அடித்துக் கொண்டிருந்தவன் எதையும் கண்டு கொள்ளவில்லை.


அவரின் கேள்விக்கு மல்லியே திருப்பிக் கொடுத்தார் “பின்னே உங்களை மாதிரியா டிரஸ் பண்ணிட்டு போவாங்க? முழு கை சட்டையை இன் பண்ணிட்டு போக அவன் என்ன பாங்க்லையா வேலை பார்க்கிறான்?” என்றார்.


தனது கேள்விக்கு அவன் பதில் சொல்லாமல் மல்லியே சொல்லிக் கொண்டிருந்ததை கண்டு நறநறவென பல்லைக் கடித்து “டேய்! பதில் சொல்லப் போறியா இல்லையா?” என்றார்.


அதற்குள் ஆறு இட்லியை சாப்பிட்டு முடித்திருந்தவன் பெருத்த ஏப்பத்துடன் எழுந்து கொண்டு அன்னையைப் பார்த்து “ஏம்மா அந்த சிவப்பு சேலை தக்காளி ஆண்ட்டி பத்தி நல்லா விசாரிச்சிட்டீங்களா?” என்று கேட்டு குண்டை போட்டுவிட்டு நகர்ந்தான்.


தான் என்ன கேட்டுக் கொண்டிருக்கிறோம் இவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்றெண்ணியவர் மனைவியை பார்க்க அவரோ முகத்தை சுருக்கி கோபமாக “நீங்க அவனை கண்காணிக்கிறது இருக்கட்டும். உங்க பார்வை அங்கே இங்கே அலைபாஞ்சுது அப்புறம் இருக்கு சங்கதி” என்றார் மிரட்டலாக.


மனைவியின் மிரட்டலில் உள்ளுக்குள் நடுங்கி போனவர் எதுவும் பேசாமல் சாவியை எடுத்துக் கொண்டு கீழே சென்றார்.


சூர்யாவோ அவரின் செய்கையைக் கண்டு மனதிற்குள் குத்தாட்டம் போட்டுக் கொண்டே அவரை பின்தொடர்ந்தவன் அன்னையை கட்டிப் பிடித்து ஒரு முத்தத்தை கொடுத்து “லவ் யு மா” என்றான்.


அவன் தலையில் தட்டியவர் “போடா போக்கிரி...அவரை ஒழுங்கா கவனி” என்றார்.


தந்தையின் நிலையை எண்ணி தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டு கீழே வந்தான். அவரோ இவன் வருவதற்குள் பொறுமையை இழந்து ஹார்னை அடிக்க ஆரம்பித்தார். அதற்கெல்லாம் அசந்தால் அவன் சூர்யா இல்லையே.


நேரே அவரிடம் சென்று “உங்களுக்கு நேரமாச்சுன்னா நீங்க கிளம்புங்கப்பா?” என்றான்.


எரிக்கும் பார்வையை பரிசாக தந்து “சீக்கிரம் வண்டியை எடுத்துகிட்டு வா” என்றார்.


அப்போது கீதா மாமி குப்பை போட்டுவிட்டு அந்தப் பக்கமாக வந்தவர் சூர்யாவை பார்த்ததும் “என்ன சூர்யா? இன்னும் ஸ்கூல் பையன் மாதிரி அப்பாவுக்கு டாட்டா காட்டுறியா?” என்று கேட்டு சிரித்தார்.


உடனே தனது ட்ரேட் மார்க் புன்னகையை சிந்தியவன் “நோ கீது டார்லிங்...என்னை எங்கப்பா எப்பவும் காலேஜில் கொண்டு விட்டுட்டு தான் ஆபிஸ் போவாங்க” என்றான்.


அவன் கீது டார்லிங் என்றழைக்க சந்திருவிற்கு பிபி எகிறியது. கீதா மாமியோ அவன் சொன்னதை கேட்டு அதிசயபட்டவர் “என்ன சார் இது? இந்த காலத்துல இப்படி இருக்கீங்க? பொண்ணுங்களே தைரியமா எல்லா இடத்துக்கும் போகும் போது பையனை இப்படி பழக்காதீங்க?” என்றார்.


வீட்டில் இருந்தால் அவனை கன்னம் கன்னமாக அறைந்து தள்ளி இருப்பார். அந்த மாமியிடம் இதை சொல்ல வேண்டிய அவசியம் என்ன? என்று கோபத்தில் காய்ந்தவர் “உங்க அறிவுரைக்கு ரொம்ப நன்றி” என்றவர் “டேய்! பைக்கை எடுத்திட்டு வா” என்று கடித்து துப்பினார்.


கீதா மாமியை பாவமாக பார்த்துவிட்டு பைக்கை எடுக்க்கச் சென்றான். அவரோ சந்திருவை எதிரியை பார்ப்பது போல் பார்த்துக் கொண்டு “நல்லா இருக்கிற பையனை ஓவரா பாதுகாத்து கெடுத்து விட்டிருவார் போல...பாவம் சூர்யா” என்று திட்டிக் கொண்டே சென்றார்.


சந்திருவிற்கோ இவன் எப்படி தன்னை எல்லோரிடமும் திட்டு வைக்கிறான் என்று எண்ணி மனதிற்குள் புழுங்கிக் கொண்டிருந்தார்.

அதன் பின்னர் எதுவும் பேசாமல் அவனை கல்லூரி வாயிலில் விட்டு விட்டு ஆபிசிற்கு சென்றார்.
 

sudharavi

Administrator
Staff member
#30
வழக்கம் போல மரத்தடியில் கூடி இருந்த அவனது நட்பு கூட்டம் தங்கள் வயதிற்கே உரிய விதத்தில் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.


அப்போது ரிஷி “சூர்யா இன்னைக்கு பஸ்ட்டு அவர் பேரல் கிளாஸ்டா” என்றான்.


அதற்குள் சக்தி “ஒ..சூர்யாவோட லவ்வர் கிளாசா” என்று கேட்டு சிரித்தவனை அனைவரும் சேர்ந்து மொத்தினர்.


அட்மின் பில்டிங்கில் இருந்து வேக நடையுடன் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்த மணி “சூர்யா! இன்னைக்கு அந்த பொண்ணு வருதுப்பா” என்றார்.


அவர் சொன்னது புரியாமல் “எந்த பொண்ணு மணி அண்ணே?” என்றான் குழப்பத்துடன்.


“அதான் பா உங்களுக்கு கிளாஸ் எடுக்கிற புது லெக்சரர்” என்றார்.


அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து “என்னன்னா சொல்றீங்க? அதான் சகுந்தலா மேடம் வந்துட்டாங்களே” என்றார்கள்.


மறுப்பாக தலையசைத்து “இல்லப்பா! இப்போ தான் கேட்டுட்டு வந்தேன். சகுந்தலா உங்க கிளாசுக்கு இனி வராதாம். அதுக்கு பதிலா தான் இந்தப் பொண்ணு வருதாம். அங்கே ஸ்டாப் ரூமில் பேசிட்டு இருந்தாங்க” என்று அவர் சொல்லி முடித்ததும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள் அவசரமாக கிளாசை நோக்கி ஓட ஆரம்பித்தார்கள்.


மணிக்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்த்தார்.


தலைதெறிக்க ஓடியவர்கள் முதல் பெஞ்சில் அமருவதற்கு இடம் பிடித்தனர். மற்ற மாணவர்களுக்கு இவர்கள் ஏன் முதல் பெஞ்சிற்கு அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று புரியாமல் பார்த்தனர்.


மூச்சிரைக்க அமர்ந்தவர்கள் தங்களுக்குள் சிரித்துக் கொண்டு “நல்லவேளை விஷயம் கசியறதுகுள்ள நம்ம இடத்தைப் பிடிச்சிட்டோம்” என்றனர்.


அப்போது திடீர் என்று பக்கத்து கிளாசில் இருந்து மூன்று நான்கு பேர் வந்து இவர்கள் கிளாசில் அமர்ந்து கொண்டனர். சூர்யா மற்றவர்களை பார்த்து கண் சிமிட்டி “விஷயம் தெரிஞ்சு போச்சு போல” என்றான்.


இவர்கள் இங்கே அடித்துக் கொண்டிருக்க, தனது காரில் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தவள் பார்கிங்கில் காரை விட்டுவிட்டு முதல் நாள் பார்மாலிட்டி எல்லாம் முடித்துக் கொண்டு மணியின் துணையுடன் சூர்யாவின் வகுப்பறைக்குள் அடி எடுத்து வைத்தாள் இந்திரஜா என்கிற இந்து.


வெள்ளையில் பிங்க் நிற பூக்கள் தெளித்த சுடிதாரில் கழுத்தை சுற்றி போடப்பட்ட ஷாளுடன் கையில் புத்தங்களை சுமந்து கொண்டு உள்ளே நுழைந்தவளைக் கண்டு அத்தனை மாணவர்களும் வாயில் ஈ புகுவதை கூட கவனியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.


சூர்யாவோ சும்மாவே பெண்களை கண்டால் மெய் மறந்து நிற்பவன் இப்போது குணா கமல் போன்று நின்றான்.


பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க

காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க

ஊனுருக உயிருக தேன் தரும் தடாகமே


அவள் வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதோ, அனைவரையும் அமர சொன்னதோ எதுவுமே அவன் காதில் விழவில்லை. அனைவரும் அமர்ந்த பிறகும் அவளையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்.


அவனது செயலைக் கண்டு பயந்து போன ரிஷி மெல்ல யாவரும் அறியாமல் அவன் கையைப் பிடித்து அமர வைத்தான்.


சூர்யாவோ அவளிடமிருந்து கண்களை அகற்றாமலே “செம பிகர்டா ” என்றான்.


“டேய்! ஓவரா பண்ணி முதல் நாளே விரட்டி விட்டுடாதே” என்று பல்லைக் கடித்தான் ரமேஷ்.


அங்கே மற்ற மாணவர்கள் ஒவ்வொருவராக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்க, சூர்யாவின் முறை வந்ததும் எழுந்து நின்றானே தவிர தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. அதைக் கண்ட இந்து ரிஷியிடம் “எதுவும் ப்ராப்ளமா?” என்றாள் யோசனையுடன்.


மறுப்பாக தலையசைத்து “இல்ல மேம்!” என்றவன் சூர்யாவின் முதுகில் ஓங்கி ஒரு அடியை வைத்து அவனை சுயநினைவிற்கு கொண்டு வந்தான். அவளை கண்களில் நிரப்பிக் கொண்டே தன்னைப் பற்றி கூறி விட்டு அமர்ந்து கொண்டான்.


அவனது செயலைக் கண்டு அவளுள் எழுந்த அதிருப்தியை மறைத்துக் கொண்டு மற்றவர்களிடம் செல்ல, அடுத்த வகுப்பு மாணவர்கள் அவளிடம் வசமாக சிக்கிக் கொண்டனர்.

 
Status
Not open for further replies.