வேட்டையாடு விளையாடு - கதை திரி

Status
Not open for further replies.

sudharavi

Administrator
Staff member
#31
“நீங்க ஏன் இங்கே வந்து உட்கார்ந்திருக்கீங்க?” என்றாள் சற்றே கோபத்தை காட்டி.


ஒருவன் தலையை சொரிந்து கொண்டு “உங்களை பார்க்கலாம்னு தான் மேம்” என்றான்.


அவர்கள் அப்படி நேரடியாக சொன்னதும் லேசாக கன்றி சிவந்த முகத்துடன் “உங்க கிளாசுக்கு போங்க...இனிமே உங்களை இங்கே பார்த்தால் கம்ப்ளைன்ட் பண்ண வேண்டி வரும்” என்றாள்.


சூர்யாவோ ரிஷியிடம் திரும்பி “ஒரு இருபத்திநாலு இருக்குமாடா” என்றான்.


ரிஷி பதில் சொல்லும் முன்னே முந்திக் கொண்ட ரமேஷ் “முப்பத்திரெண்டு இருக்கும் டா” என்றான்.


அவன் சொன்னதின் அர்த்தத்தை புரிந்து கொண்ட சூர்யா “நான் வயசை சொன்னேன். இன்னொரு முறை இப்படி பேசின கொண்டு வச்சு வெளுத்திடுவேன்” என்றான் பல்லைக் கடித்தபடி.


“நான் என்ன தப்பா சொல்லிட்டேன்” என்று முறைத்தான் ரமேஷ்.


இவர்கள் தங்களுக்குள் வாதாடிக் கொண்டிருக்க அவர்கள் முன்னே வந்து நின்றிருந்தாள் இந்திரஜா. கைகளை கட்டிக் கொண்டு அவர்கள் மேஜையின் முன் நின்றிருந்தாள்.


அவளைக் கண்டதும் கப்பென்று வாயை மூடிக் கொண்டவர்கள் எழுந்து நின்றனர்.


ஒவ்வொருவரையும் கூர்ந்து பார்த்தவள் “பேசி முடிச்சாச்சா? நான் இனி பாடம் எடுக்கலாமா?” என்றாள்.


எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றிருந்தனர்.


அவர்களை ஒவ்வொருவரையும் ஆராயும் பார்வை பார்த்தவள் “இன்னைக்கு முதல் நாள் என்பதால் இதை நான் பெருசா எடுத்துக்கல. என் கிளாசில் கவனம் ரொம்ப முக்கியம். உங்களுக்கு படிக்க விருப்பம் இல்லேன்னா நான் வரதுக்கு முன்னாடி வெளில போயிடலாம்” என்றாள் கண்டிப்பான குரலில்.


மற்றவர்கள் அனைவரும் தலையை குனிந்திருக்க சூர்யா மட்டும் அவளது முகத்தை நேரடியாக பார்த்துக் கொண்டு நின்றான்.


அவர்களிடம் கடுமையாக பேசினாலும், தன்னிடம் பயம் வர வேண்டும் என்பதற்காக மட்டும் அப்படி நடந்து கொண்டாள். ஆனால் சூர்யாவின் பார்வை அவளை சங்கடப்படுத்தியது. இதென்ன இந்தப் பய இப்படி பார்த்து வைக்கிறான் என்று உள்ளுக்குள் எண்ணிக் கொண்டாள்.


அவர்கள் அனைவரும் இனி ஒழுங்கா வகுப்பை கவனிப்போம் என்று உத்திரவாதம் கொடுத்த பிறகே அங்கிருந்து நகர்ந்தாள்.


சற்று நேரம் பாடம் சம்மந்தமாக பேசி அவர்களுக்கும் தனக்கும் இருந்த இடைவெளியை குறைத்து விட்டு கிளம்பியவள் “என்னிடம் எதுவும் கேட்கனும்னா தைரியமா கேட்கலாம்” என்று கூறிவிட்டு வகுப்பறை வாயிலிற்கு சென்றவளை சூர்யாவின் குரல் நிறுத்தியது.


“நீங்க எப்படி இவ்வளவு அழகா இருக்கீங்க?” என்று அவன் குரல் கேட்டதும் சட்டென்று நின்றவள் முகத்தில் கடுமையை கூட்டி “பாட சம்மந்தமா கேட்பதை சொன்னேன்” என்று கூறி விட்டு விறுவிறுவென நடந்தாள்.


சூர்யாவின் நண்பர்களோ அவனை குனிய வைத்து மொத்திக் கொண்டிருந்தனர்.


“ஏண்டா இப்படி! நீ பண்ணின வேலையில நாளைக்கு வர மாட்டாங்க பாரு...நமக்கு ஒத்த ரோசா தான் ராசி” என்று புலம்பினார்கள்.


அவனோ கையை உயர்த்தி “டேய்! விடுங்கடா! நான் என்ன தப்பா சொல்லிட்டேன். அவங்க அழகா தானே இருக்காங்க” என்றான்.


ரிஷியோ “அதுக்கு! அவங்க நம்ம லெக்சரர் டா” என்றான் முறைத்துக் கொண்டே.


“நான் இல்லேன்னு சொல்லலியே...அழகை எங்கிருந்தாலும் ஆராதிக்கணும் டா” என்றான்.


அவனது நண்பர்கள் அவன் காலில் விழாத குறையாக கெஞ்சி “நமக்கு தினமும் கண்குளிர பார்க்கணும்டா..உன்னோட லவ்வர் பாய் வேஷத்தை எல்லாம் அவங்க கிட்ட காட்டி ஓட்டி விட்டுடாதேடா” என்றனர்.


அவர்களை ஒரு பார்வை பார்த்தவன் “உங்களை எல்லாம் பார்த்தா பாவமா இருக்கு...உங்களுக்காக ஒத்துகிறேன்” என்றதும் தான் மூச்சு வந்தது.


அதே நேரம் ஸ்டாப் ரூமில் இந்துவிடம் பேசிக் கொண்டிருந்த சகுந்தலா “இந்த வயசில் நீ ஏன் மா இங்கே வந்து சேர்ந்த...வேற காலேஜ் போயிருக்கலாம் இல்ல?” என்றார்.


அவளோ புரியாத பார்வை பார்த்து “ஏன் மேடம்?” என்றாள்.


“இங்கே படிக்கிறது முழுக்க பொறுக்கிங்க...அதிலும் நீ போறியே அந்த கிளாஸ்ல சூர்யான்னு ஒருத்தன் இருப்பான் பாரு” என்றார் பல்லைக் கடித்துக் கொண்டு.


அவர் சொன்னதும் கடைசியாக அவன் தன்னிடம் சொன்ன வார்த்தை நினைவுக்கு வர “உங்களுக்கு எப்படி மேடம் தெரியும்?” என்றாள்.


“நேத்து அந்த கிளாசுக்கு நான் தான் போனேன். இன்னைக்கு என்னால முடியாதுன்னு சொன்னதுனால தான் உன்னை அங்கே போட்டிருக்காங்க” என்றார்.


“ஒ..” என்றவள் “சின்ன பசங்க இந்த வயதில் அப்படித்தான் இருப்பாங்க மேடம் பார்த்துக்கலாம்” என்றாள் யோசனையுடன்.


“எதுக்கும் கவனமா இரு...நீ வேற நல்லா இருக்க...அவனுங்க பார்வையும் முழியும் சரியே இல்ல” என்றார்.


“என்ன மேடம் இப்படி சொல்றிங்க?”


அவரோ அவள் கிட்டே நெருங்கி அமர்ந்து “என் வயசென்ன? என்னையே அப்படி பார்தானுங்கன்னா பார்த்துக்கோயேன்” என்றவரை பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல் தலையை குனிந்து கொண்டு சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.


பிரின்சிபால் அழைப்பதாக அவளை அழைக்க வந்த மணி காதில் அவர் பேசியது விழ, அவரை கேவலமாக லுக் விட்டவன் ‘ஆனாலும் இந்தம்மாவுக்கு இப்படியொரு நினைப்பு ஆகாது’ என்றெண்ணிக் கொண்டு இந்துவை அழைத்துக் கொண்டு பிரின்சிபால் அறைக்குச் சென்றான்.
 

bselva

Active member
#32
Ha ha sakkuboi madam ku ithu konjam athigama ila.

Mam heroine teacher ammava athuvum herovuke class edupanganu ninaikave ila.ha ha different line .teacher na soori ya vida kandipa age athigama thana irukanum 🤔🤔

Dei soori ipidi first impression ye bad akitiye.
Dei ungappa pavam da avara ipidi daily polamba vaikiriye pavam manushanuku konjam gap kududa
 

sudharavi

Administrator
Staff member
#33
அத்தியாயம் – 4


இந்து வேலையில் சேர்ந்து ஒரு மாதம் முடிந்திருந்தது. அந்த கல்லூரியும், வேலையும் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரே ஒரு குறை சூர்யா மட்டுமே. நன்றாக படிப்பவனாக இருந்தும் அவனிடம் இருக்கும் குறும்பு அவளை கடுப்படிக்க செய்தது.


அதிலும் தன்னிடம் அவன் எடுத்துக் கொள்ளும் உரிமையை எண்ணி எரிச்சல் அடைந்தாள். ஆனால் அவனிடம் அளவுக்கு அதிகமாக கோபப்படவும் முடியவில்லை.


அன்று ஒரு விசேஷத்திற்கு சென்று விட்டு கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்பதால் சிறிய ஜரிகை போட்ட பட்டுபுடவை ஒன்றை கட்டிக் கொண்டு கழுத்தில் மெல்லிய நெக்லசும் போட்டு காதுகளில் குட்டி ஜிமிக்கி போட்டுக் கொண்டு கிளம்பினாள்.


ஜீவாவும் அவர்களுடன் கிளம்பி வர மூவரும் அவளது காரில் பாங்க்ஷன் நடக்கும் இடத்திற்கு சென்றனர். அது அவளது தாய் மாமாவின் மகளின் வளைகாப்பு விழா. வந்திருந்த அனைவருமே அவளது நெருங்கிய சொந்தங்கள். அனைவரிடமும் உற்சாகமாக பேசி இருந்துவிட்டு கல்லூரிக்கு நேரமானதை அன்னையிடம் தெரிவித்து விட்டு அங்கிருந்து கிளம்பினாள்.


அப்போது மாமா தன் சம்மந்தியோடு வந்தவர் அவளது அன்னையிடம் இந்துவிற்கு ஒரு வரன் வந்திருப்பதாகவும், தனது சம்மந்திக்கு நெருங்கிய உறவு என்றும் தெரிவித்தார். அவர்களின் பேச்சைக் கேட்டதும் இந்துவின் முகத்தில் ஒருவித சங்கடம் தெரிந்தது. அதை உணர்ந்து கொண்ட ஜீவா “நீ கிளம்பு இந்து” என்று வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தான்.


அங்கிருந்து வெளியேறியதும் ஆசுவாசம் அடைந்த இந்துவிற்கு உள்ளுக்குள் அந்த மாப்பிள்ளை யார் என்று அறிந்து கொள்ள ஆர்வம் எழுந்தது. மாலை மெதுவாக அன்னைக்கு தெரியாமல் ஜீவாவிடம் கேட்டறிந்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்துடன் கல்லூரிக்குள் நுழைந்தாள்.


காரை நிறுத்தி விட்டு ஸ்டாப் ரூமிற்கு சென்றமர்ந்தவள் அடுத்த வகுப்பிற்கான பாடங்களை பார்க்க ஆரம்பித்தாள். அப்போது அங்கே வந்த சகுந்தலா ‘என்ன இந்து இன்னைக்கு எதுவும் விசேஷமா? பட்டுப்புடவையில் வந்திருக்க?” என்றார் மேலும் கீழும் பார்த்தவர்.


“ஆமாம் மேம்! ஒரு வளைக்காப்பு அதுக்கு போயிட்டு தான் வந்தேன்” என்றாள்.


அவரோ சும்மா இல்லாமல் “நீ சும்மாவே அழகு. இந்தப் புடவையில் கேட்கவே வேண்டாம். பசங்க எங்க கிளாசை கவனிக்கப் போறாங்க” என்றார் கிண்டலாக.

அவரின் பேச்சில் முகம் சிவந்தவள் ‘இந்தம்மா என்ன இப்படி பேசுது’ என்று எண்ணிக் கொண்டு பாடத்தை படிப்பது போல் தலையை குனிந்து கொண்டாள்.


சற்று நேரம் அவரும் தன்னுடைய வேலையில் மூழ்கி விட, அடுத்த வகுப்பிற்கான நேரம் வந்ததும் புத்தகத்தை எடுத்துக் கொண்டு சூர்யாவின் வகுப்பிற்கு சென்றாள்.


அவரவர் இருக்கையில் இல்லாமல் மாற்றி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவர்கள் அவளைக் கண்டதும் அவரவர் இடம் தேடி ஓட, சூர்யாவின் பார்வையோ பிரம்மிப்புடன் அவளையே தழுவிச் சென்றது.


வகுப்பறையை கண்களால் சுற்றி வந்தவளுக்கு சூர்யாவின் பார்வை கண்டு ஒருவித அசூயை முகத்தில் வந்தது. என்ன தான் வயது கோளாறாக இருந்தாலும் ஒரு ஆசிரியரை இப்படி பார்க்கலாமா என்று எண்ணி கடுப்பானாள்.


அவனோ தனது பார்வையை மாற்றிக் கொள்ளாது அப்படியே அமர்ந்திருந்தான். அவள் பாடம் எடுக்க ஆரம்பித்த பிறகும் அவனது பார்வை மாறவில்லை.

ஆனால் அவ்வப்போது தன்னைச் சுற்றி உள்ளவர்களையும் பார்த்துக் கொண்டான். அவளுக்கு அவன் பாடத்தை கவனிக்கிறானா என்கிற சந்தேகமும் இருந்தது. அதனால் அன்றைய வகுப்பு முழுவதும் அவனை கேள்வி கணைகளால் துளைத்து எடுத்து விட்டாள்.

அவளின் ஒவ்வொரு கேள்விக்கும் சரியான பதிலை தான் சொல்லிக் கொண்டிருந்தான். முதல் கேள்வி கேட்டபோதே அவளுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் அவனின் சரியான பதிலில் ஆச்சர்யமடைந்தாள். அதன் பின்னரே சரி எப்படியோ பாடத்தை கவனித்தால் போதுமென்று அவனது பார்வையை புறந்தள்ளினாள்.


வகுப்பை முடித்துக் கொண்டு வந்தமர்ந்தவளுக்கு ஏனோ மிகவும் களைப்பாக இருந்தது. அது அவனது பார்வையின் வீச்சில் ஏற்ப்பட்ட களைப்பு என்பதையும் உணர்ந்து கொண்டாள். மனமோ இது சரியில்லை என்றே உரைத்துக் கொண்டிருந்தது. அவன் வயதென்ன? தன் வயதென்ன? ஆண், பெண் ஈர்ப்பு சகஜம் என்றாலும் வயதிற்கும் தான் பார்க்கும் வேலைக்கும் மதிப்பளிக்க வேண்டாமா? என்று எண்ணி அவன் மீது கடுப்பானாள்.


அன்று முழுவதும் அந்த பாதிப்பிலேயே சுற்றிக் கொண்டிருந்தவள் மதியத்திற்கு மேல் தலைவலி தாங்காமல் காண்டீனிற்கு காப்பி குடிக்க சென்றாள். அங்கு மாணவர்கள் யாருமில்லை. அதனால் காப்பியை வாங்கி வைத்துக் கொண்டு போன் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவளின் முன்னே வந்து நின்றான் சூர்யா.


இங்கேயும் இவனா என்கிற எண்ணத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தவள் “என்ன?” என்றாள்.


“உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்?” என்றவனை உஷாராக பார்த்து “சப்ஜெக்ட் பத்தி தானே?” என்றாள்.


அவனோ ‘என் சப்ஜெக்டே நீங்க தான்’ என்று கவுண்ட்டர் கொடுத்துக் கொண்டான்.


மௌனமாக நின்றவனை கடுப்புடன் பார்த்தவள் “ஸ்டாப் ரூமில் போய் வெயிட் பண்ணு வரேன்” என்றாள்.


அவனோ அங்கிருந்து நகராமல் “உங்களுக்கு/உனக்கு புடவை ரொம்ப அழகா இருக்கு. ஆனா காலேஜுக்கு இனி புடவை கட்டிட்டு வராதே. எல்லா பயலும் உன்னையே தான் பார்க்கிறாங்க” என்றான்.
 

sudharavi

Administrator
Staff member
#34
அவன் ஏதோ சொல்லப் போகிறான் என்கிற எண்ணத்தில் இருந்தவளுக்கு அவன் ஒருமையில் அழைத்து பேசியதும், உரிமையாக காதலியிடம் சொல்வது போல் கூறியதும் டென்ஷன் ஆனவள் “சூர்யா! கால் மீ மேம்! அப்புறம் இந்த மாதிரி கன்னாபின்னான்னு என் கிட்ட பேசின நடக்கிறதே வேற” என்றாள் கடுமையாக.


அவனோ சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் அவளை ஆழ்ந்து பார்த்தவன் “என் வாழ்க்கையின் சில முடிவுகளை நான் சட்டுன்னு எடுத்திடுவேன். ஆனா அதன் பிறகு அதில் எந்த மாற்றமும் இருக்காது. உன்னை பார்த்த அந்த நிமிடமே நீ தான் எனக்குன்னு மனசுல தோணிடுச்சு. இனி, யார் தடுத்தாலும் உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்றான் அழுத்தமாக.


அவனது பேச்சில் அவளது ரத்த அழுத்தம் எகிற “அறிவு இருக்காடா உனக்கு. ஏதோ சின்ன பயலா இருக்கியேன்னு பொறுமையா சொன்னா புரியாதா உனக்கு. என் வயசென்ன உன் வயசென்ன? இந்த வயசில் பார்க்கிற பெண்களை எல்லாம் கல்யாணம் பண்ணிக்கத் தான் தோணும். உனக்கு இன்னும் வாழ்க்கையே ஆரம்பிக்கல. அதுக்குள்ள லவ் கேட்குதா? போய் ஒழுங்கா படிக்கிற வேலையை மட்டும் பாரு. வந்துட்டான் லவ் சொல்ல” என்று கடுப்புடன் கூறி விட்டு விறுவிறுவென்று அங்கிருந்து வெளியேறினாள்.


மனதிற்குள் அத்தனை எரிச்சலும், ஆத்திரமும் எழுந்து மறைந்தது. சினிமாவை பார்த்து கெட்டு போயிருக்கானுங்க. இவனுங்களுக்கு ஏற்ற மாதிரி தான் அவனுங்களும் படம் எடுக்கிறானுங்க. பார்க்க பார்க்க தான் பிடிக்கும்னு டைலாக் வேற என்று கரித்துக் கொட்டிக் கொண்டு ஸ்டாப் ரூமிற்கு வந்தாள்.


அங்கு வாயிலிலேயே அவன் நின்று கொண்டிருந்தான். அதைக் கண்டதும் உள்ளுக்குள் பயம் வந்தது. ஐயோ! இங்கே எல்லோர் முன்பும் எதையாவது உளறி வைக்கப் போகிறானோ என்று பயத்துடன் அவனைப் பார்த்தாள்.


அவன் அவளை சாதரணமாக பார்த்து “மேம்! ஒரு டவுட் கிளியர் பண்ணிக்க வந்தேன்” என்று சிரித்து வைத்தான்.


சகுந்தலா அப்போது தான் உள்ளே நுழைந்தவர் அவனை சந்தேகத்தோடு பார்த்துக் கொண்டே அவளிடம் “இவன் எதுக்கு இங்கே வந்திருக்கான்” என்றார்.

அவரிடம் “டவுட் கேட்கனுமாம்”என்றாள் மெல்லிய குரலில்.


அவனை மேலும் கீழும் பார்த்தவர் “க்கும்...இவன் நமக்கே டவுட் கிளியர் பண்ணுவான். இவனுக்கு டவுட்டா? எதுக்கும் ஒரு ரெண்டடி தள்ளியே நில்லு” என்று பயமுறுத்தி விட்டு சென்றார்.


அவள் உள்ளே சென்றதும் அவளின் டேபிளின் அருகே சென்றவன் அன்று நடத்திய பாடத்தில் டவுட் கேட்க, அதுவரை இருந்த பயத்தை ஒதுக்கி வைத்துவிட்டு அவனது சந்தேகங்களை கிளியர் செய்தாள். அதை முடித்துக் கொண்டு நோட் புக்கை எடுத்துக் கொண்டவன் மெல்லிய குரலில் “என்ன பெர்பியும் யூஸ் பண்ற? சும்மா கும்முன்னு இருக்கு” என்று விட்டு நகர்ந்தான்.


தன்னிடம் அவன் சொன்னது உண்மைதானா என்று கேட்டவளுக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. அதை உணர்ந்த போது அடுத்த நிமிடம் எதையாவது எடுத்து அவன் மண்டையை உடைக்க வேண்டும் என்று தோன்றியது. அவன் பேசியது அங்கிருந்த யார் காதிலாவது விழிந்திருந்தால் என்ன நினைப்பார்கள் என்று எண்ணி வெடவெடத்துப் போனாள்.


அவன் சென்ற திசையைப் பார்த்து சற்று நேரம் வெறித்தபடி அமர்ந்திருந்தாள். மனமோ படபடவென்று அடித்துக் கொண்டது. இது சரியில்லை! என்று பயம் காட்டியது. அவளின் மனநிலை அசாதாரண நிலைக்கு சென்றது.


அவளை சுற்றலில் விட்டவனோ உற்சாகமாக விசில் அடித்துக் கொண்டு நண்பர்களிடம் சென்றான். அவனைக் கண்டதும் ஓடி வந்த ரிஷி “எங்கேடா போன?” என்றான்.


“டவுட் கிளியர் பண்ணிக்க போனேன் டா” என்றான் கண் சிமிட்டி.


அதில் அதிர்ந்து போனவன் அவனை அவசரமாக அங்கிருந்து தள்ளிக் கொண்டு சென்றவன் யாருமில்லா இடத்திற்கு சென்றதும் “அவங்களுக்கும் லெட்டர் கொடுத்திட்டியா டா” என்றான் பயத்துடன்.


வழக்கமான தனது மயக்கும் புன்னகையுடன் “லெட்டர் இல்லடா ஆனா நேரடியா சொல்லிட்டேன்” என்றான் கண்களை சிமிட்டியபடி.


“டேய்!” என்று அவன் சட்டையைப் பிடித்தவன் “என்னடா பண்ணி வச்சிருக்க?” என்றான்.


அவனது கைகளைப் பற்றிக் கொண்டவன் “என் விருப்பத்தை சொன்னேன் டா” என்றான்.


அதைக் கேட்டதும் வாய் மேல் கை வைத்தபடி சுவற்றில் சாய்ந்து விட்டான்.


அவனைப் பார்த்து சத்தமாக சிரித்தவன் “எதுக்குடா இப்படி ஒரு ரியாக்ஷன்?” என்றான்.


அவனது சிரிப்பில் கோபமடைந்தவன் பாய்ந்து அவனை மொத்தி “அவங்க நமக்கு டீச் பண்றவங்க. அவங்க கிட்ட போய் லவ் சொல்லி இருக்கியே” என்றான் கவலையுடன்.


ரிஷியின் தோள்களில் தட்டியவன் “மச்சான்! இந்த முறை ஐ யம் சீரியஸ் டா. எனக்கு இந்துவை பிடிச்சிருக்கு. இந்த ஜென்மத்தில் மனைவின்னு வந்தா அவ தான்” என்றான்.


அவனை முறைத்தவன் “அப்படியே அந்த பேரளுக்கும் ஒரு லெட்டரை தட்டி விட்டுடு. சோலி முடிஞ்சு போயிடும். அதை மட்டும் ஏன் விட்டு வைக்கிற” என்றான் கடுப்பாக.


“ஹாஹா...ஏண்டா இந்த கொலைவெறி. அந்தம்மா புருஷன் என்னை மொத்துறதுக்கா?”


சூர்யாவை கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தவன் “சூர்யா! நீ போற ரூட் சரியில்லை. வேண்டாம் விட்டுடு! நமக்கு இன்னும் நிறைய டைம் இருக்கு. உன் வாழ்க்கையில் பல பெண்களை கடந்து போக வேண்டி இருக்கும். இப்போ நீ எடுக்கிற இந்த முடிவு ரொம்பவே அதிகம். அதுவும் அவங்களுக்கு முற்றிலும் விருப்பம் இல்லாத போது” என்றான்.


இரு கைகளையும் கட்டிக் கொண்டு அவனை பார்த்திருந்தவன் “நான் எதையும் அவசரமா முடிவெடுக்கல ரிஷி. இந்த ஒரு மாசமா எல்லாவற்றையும் கவனித்து விட்டு தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன். எது வந்தாலும் சமாளிக்கிற தைரியம் எனக்கிருக்கு பார்த்துக்கலாம் விடு” என்றான்.
 
Status
Not open for further replies.