அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

DAY-13

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

நாளைய சவால் "பணம்" அல்லது "பாசம்" என்கிற தலைப்பில் எட்டு வரிகளில் கவிதை எழுதுங்கள்......எழுத வராதுன்னு சொல்லாதீங்க மக்கா நாம எழுதுறது தான் கவிதை.....இரு தலைப்புகளிலும் நன்மை தீமைகளை உங்களது பாணியில் எழுதுங்கள்.
 

Vethagowri

Well-known member
Staff member
#2
ஹாய் பிரெண்ட்ஸ்,

நாளைய சவால் "பணம்" அல்லது "பாசம்" என்கிற தலைப்பில் எட்டு வரிகளில் கவிதை எழுதுங்கள்......எழுத வராதுன்னு சொல்லாதீங்க மக்கா நாம எழுதுறது தான் கவிதை.....இரு தலைப்புகளிலும் நன்மை தீமைகளை உங்களது பாணியில் எழுதுங்கள்.
வராது எனக்கு வராது கவிதை வராது... இப்படி சொக்க... சொக்க ன்னு நாகேஷ் போல புலம்ப வைச்சுட்டீங்களே...
 

Vethagowri

Well-known member
Staff member
#6
அன்பர்களின் கனிவான கவனத்திற்கு...

சிறு கவிதை முயற்சி, கல்லு கட்டை எல்லாம் தூக்க கூடாது, முட்டை, தக்காளி கொண்டு அடிக்காமல்,
நான் சொல்லும் முகவரிக்கு அனுப்பினால், முட்டை கறி செய்து சாப்பிட்டுக் கொள்வேன்...கவிஞர்கள் மன்னிக்கவும்.. பின் விளைவுகளுக்கு கவிதாவாகிய நான் பொறுப்பல்ல.. இது சோதனை முயற்சியே...

நான் எடுத்துக் கொண்ட தலைப்பு பாசம்

" நெடுநேரம் கடந்து
திசை மாறிப் போனாலும்
தந்த இன்பங்கள்
என்றுமே மாறாதவை
எவருமே அறியாத ஆழம்
உல கை கோர்க்கும் பாலம்
விலகி நின்றாலும் விரும்பி வரும்
உண்மையான நேசம்"

பிரிவின் வலியே இங்கு தீமை என்று எடுத்து 8வரி கிறுக்கல்கள்

"நேசம் வைத்த மனம்தான்
பாவப்பட்டவை
மறக்க நினைக்கும் போதெல்லாம்
அதிகம் நினைத்து துடிக்கிறது
நிழலாகிய பாசத்தை
பிரிவென்ற வலைக்குள்
சிக்கிக் கொண்ட போது
நினைத்து நினைத்து வலிக்கிறதே"
 

Ramya Mani

Well-known member
#7
ஏதோ எனக்கு தெரிந்த வார்த்தைகளைக்கோர்த்து தந்துள்ளேன்..
எங்கும் இலவசமாய் ..
சில நேரங்களில் முகமூடியுடன்..
நம்மை தவிக்க விட்டுட்டு சென்றவை..
யாரையும் நம்பாமல், ஒருவரே
அவரின் பணிகளைச் செய்வாராயின்....
எங்கோ வீழ்த்தப்பட்டிருக்கலாம்..
வாள் முனை, பேனா முனையை விடக் கூர்மையானவை நேசித்தவரின் சுடு சொல்..
காலப்போக்கில் அனைத்தும் மாறினாலும்
மாறா நேசம் கொண்ட தாயன்பே நன்று;
அன்பின் தன்மை அறிந்த பின்
கைவிடலாகுமோ..
பணம் கண்டு மயங்கி பாசத்தை விட்டு
நேசித்த நெஞ்சம் தவிப்புறும் நிலை.. மழலையில்லா மாதாவின் மனதை ஒத்தது..
 
#8
வராது எனக்கு வராது கவிதை வராது... இப்படி சொக்க... சொக்க ன்னு நாகேஷ் போல புலம்ப வைச்சுட்டீங்களே...
Kavithai. Varathunu super ah eluthirukinga sis.. Enaku la sutti potalum. Varathu...
 
#9
ஹாய் பிரெண்ட்ஸ்,

நாளைய சவால் "பணம்" அல்லது "பாசம்" என்கிற தலைப்பில் எட்டு வரிகளில் கவிதை எழுதுங்கள்......எழுத வராதுன்னு சொல்லாதீங்க மக்கா நாம எழுதுறது தான் கவிதை.....இரு தலைப்புகளிலும் நன்மை தீமைகளை உங்களது பாணியில் எழுதுங்கள்.
Again oru doubt mam... Kandipa 8 lines tha irukanuma.. Athigama iruka kudatha
 
#12
Awwwwww please sorry.. Thaivu senju itha kavithaiya nenaichukonga.. Na eluthirukarathu crct ah nu kuda enaku sathiyama therila..
பாசம் :
ஒரு பூவாய்
என்னில் உதித்து
என் வாழ்வில் வசந்தம் தந்தவளே!
ஐந்தறிவோ ஆறறிவோ
இவ்வுலகில் தாய் பாசத்துக்கு
இணையேதடி என் தங்கமே!
வற்றாத கடலைப்போலடி
தாய் பாசமென்பது!
நேசம் வைத்து வந்தவனே!
இது பொய் நேசம் என்று சென்றவனே!
அன்று வரை பொய் நேசத்தின்
சுவடு தெரியாமல் வளர்ந்தவளின் நிலை அறிவாயோ!
உன் மேல் உயிர் நேசம்
கொண்டவளின் தற்போதைய நிலை அறிவாயோ!
தூங்க இரவுகளும், நினைந்த தலையணைகளின் எண்ணிக்கையை அறிவாயோ!
திருமண சந்தையில், உன் நினைவை மறந்து இன்னொருவரை ஏற்க முடியாமல் தவிக்கும் நிலை அறிவாயோ!
என்றாவது அறிவாய்
உன் பொய் நேசத்தால் , ஓர் உயிரின் நிலையை!!!
 

dharani

Active member
#13
பணத்தை தேடி பணத்தை தேடி

பாசத்தை இழந்தோர் கோடி ....

பாசமே பிரதானமாய் எண்ணி

பணத்தை இழந்தவர் ஆயிரம் ....

பணத்திற்காக பாசமாய்

நடிப்பவர்கள் லட்சம்....

பணமோ பாசமோ ...

அளவோடு இருந்தால்

ஆபத்து ஒன்றும் இல்லை ....


இது கவிதை அப்படினு எல்லாரும் ஒத்துக்கணும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
 
#14
பட்டும் பகட்டும்
பாரினில்
பேருவகையாய்
பணத்தினால்
பறந்திட
பாட்டனும் பூட்டியும்
பண்புடன் பயிரிட்ட
பாசத்தினை படுகுழியில்
புதைத்திட்ட
பெரும் பாக்கியசாலிகள்
பரந்த உலகம் இது!
 
#15
பட்டும் பகட்டும்
பாரினில்
பேருவகையாய்
பணத்தினால்
பறந்திட
பாட்டனும் பூட்டியும்
பண்புடன் பயிரிட்ட
பாசத்தினை படுகுழியில்
புதைத்திட்ட
பெரும் பாக்கியசாலிகள்
பரந்த உலகம் இது!
Wow semma
 
#16
பணத்தை தேடி பணத்தை தேடி

பாசத்தை இழந்தோர் கோடி ....

பாசமே பிரதானமாய் எண்ணி

பணத்தை இழந்தவர் ஆயிரம் ....

பணத்திற்காக பாசமாய்

நடிப்பவர்கள் லட்சம்....

பணமோ பாசமோ ...

அளவோடு இருந்தால்

ஆபத்து ஒன்றும் இல்லை ....


இது கவிதை அப்படினு எல்லாரும் ஒத்துக்கணும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
Eay ennaya semmaya
பணத்தை தேடி பணத்தை தேடி

பாசத்தை இழந்தோர் கோடி ....

பாசமே பிரதானமாய் எண்ணி

பணத்தை இழந்தவர் ஆயிரம் ....

பணத்திற்காக பாசமாய்

நடிப்பவர்கள் லட்சம்....

பணமோ பாசமோ ...

அளவோடு இருந்தால்

ஆபத்து ஒன்றும் இல்லை ....


இது கவிதை அப்படினு எல்லாரும் ஒத்துக்கணும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
Kandipa கவிதை தான்
 

Anuya

Well-known member
#20
பாசம் இன்றி பேச இதயம் ஏற்காது....
பணம் இன்றி வாழ்ந்தால் பதவி நிலைக்காது.....
பிணம் கூட இன்று பணம் கேட்கிறதே....
பாசம் தேடி சென்றால் பிணம் ஆகிறதே...
சந்தேகம் என்ற பெரும் புரலியால் மூழ்கி உள்ளோம்.....
சந்தோசம் என்ற வார்த்தையை மறவாமல் இருக்க முயற்சிக்கின்றோம்.....
நம்பிக்கை பாசத்தின் மீது வைப்பதில்லை .....
அதுவே பணத்தின் மேல் இருந்த ஆசை நீங்குவதில்லை.....
நிரந்தரமாய் பணத்தின் ஆட்சி அடங்கவில்லை.....
பாசத்தின் ஏக்கமும் நீங்க வில்லை....
நூற்றாண்டுகளாய் நொறுங்கினோம் பணத்தால்....
இனி வரும் நாளில் மாறுவோம் பாசத்தின் அடிமையாய்.....இது கவிதை தான் நானே சொல்லிக்குறேன் ...first attempt.... இது கவிதை மாதிரி இருக்கானு கூட தெரியலையே....13வது டாஸ்க் complete.....