அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

DAY- 29

sudharavi

Administrator
Staff member
#1
இன்றைய சவால்...

அழிந்து வரும் கடிதம் எழுதும் பழக்கம்....இன்றைய கணினி கடிதம் அல்ல! 80-களில் காகிதத்தில் நமது கையால் உரியவருக்கு எழுதி தபாலில் சேர்த்து அது போய் சேர்ந்ததா என்று பரிதவித்து, அவரிடமிருந்து பதில் வரும் வரை காத்திருந்த அந்த உணர்வு பற்றியது.

உங்கள் அனுபவமோ/ உங்கள் வீட்டு பெரியவர்களின் கடித அனுபவத்தையோ அறிந்து எழுதுங்கள்.

காகித கடிதங்கள் நம் உணர்வுகளின் சங்கமமாக இருந்தது. கணினி கடிதங்கள் இயந்திரத்தின் உணர்வை மட்டுமே பிரதிபலிக்கின்றன.

முக்கியமாக விழாகாலங்களில் அனுப்பபடும் அட்டைகளை பற்றிய அனுபவங்களை எழுதுங்கள். இன்றைய தலைமுறையினர் அறிந்திராத.ஒன்று.
 

Vethagowri

Well-known member
Staff member
#5
"சிந்திக்கிற எண்ணங்கள் ஆனந்தம்
சந்திக்கிற உறவுகள் ஆனந்தம், "
என்பதுபோல சந்தோஷம் துக்கம் அனைத்தையும் சுமந்து வரும் கடிதங்களும் எதிர்பார்க்கும் நேரமும்
நாட்களும் மிகமிகப் பேரானந்தமே...

பள்ளி காலங்களில் நான்கு வருடம் விடுதியில் படித்தேன்.. அந்த நான்கு வருடங்கள் உயிர்ப்போடு வைத்திருந்தது என்றால் அது, எனக்கு வரும் கடிதங்கள் மட்டுமே, மாதத்திற்கு இரண்டு கடிதங்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு, நமக்கு வரும் அறிவுரைகள் ஆகட்டும் பாசங்கள் ஆகட்டும் அதை வார்த்தையால் சொல்லி வடிக்க முடியாது, ஐயம் விடுதியின் வார்டன் படித்துவிட்டு நம்மிடம் கொடுப்பார், பள்ளியில் இருந்து விடுதிக்கு வரும்போதே அன்பர்கள் யாராவது உனக்கு கடிதம் வந்தது என்று சொன்னால் குவிக்கும் புதிய வானத்திற்கும் பூமிக்குமாயிருக்கும். அடுத்து வாழ்த்து அட்டைகள் என்று சொல்லப் போனால் இப்பொழுது உடனே உடனே வார்த்தைகளை பரிமாறி வரும் சந்தோசத்தை விட விழாக்காலங்களில் வரும் வாழ்த்து அட்டைகள் அளப்பரிய சந்தோசத்தை உடையவை, கடைகளில் தேடித் தேடி நமக்கு மனதிற்கு பிடித்தவர்களை போது வரும் சந்தோஷம் அளப்பரியவை, 20 வருடங்களுக்கு மேல் ஆகியும் கூட அப்படிப்பட்ட வார்த்தைகளை இன்றும் பத்திரமாக வைத்திருக்கிறேன், அந்த நண்பர்கள் இப்போது தொடர்பில் இல்லை என்றால் அவர்களின் நட்பு எனக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு என்று அவற்றை பத்திரமாக வைத்திருக்கிறேன், என்னவருக்கு நான் அனுப்பிய வாழ்த்து அட்டையும் இன்றும் பத்திரமாக இருக்கிறது எல்லாம் வார்த்தையில் வடிக்க முடியாத உணர்வுபூர்வமான ஒரு பரிசு
 

kohila

Active member
#6
எனக்கும் கவி சொன்னது போலவே ஹாஸ்டலில் படித்த போதுதான் கடிதத்தின் அருமை தெரிந்தது, வாரத்திற்கு ஒருமுறை ஃபோனில் பேசலாம். கடிதம் தான் எங்களுக்கு இருக்கும் ஒரே தகவல் பரிமாற்றம். அதிலும் போஸ்ட் கார்டில் மட்டும்தான் அனுப்ப வேண்டும் என்று ரூல்ஸ் வேறு இருக்கும். தினமும் லஞ்ச் சாப்பிட வரும் போது நமக்கு லெட்டர் வந்திருக்கான்னு போஸ்ட் பாக்ஸை பார்த்து, வந்திருந்தால், நம்மளை கையாலே பிடிக்க முடியாது. அதில் அதிகபட்சம் 10 வரிகள் கூட எழுத முடியாது. நல்லா படி சாப்பிடு போன்ற வேப்பங்காய வகையறாக்கள் தான். இருந்தும் பலமுறை படித்து, பொக்கிஷமாக வைத்துக் கொண்டாடுவோம்.

எனக்கு கஸின் மட்டும் மொத்தம் 17 பேர். அனைவரிடமிருந்தும் பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள் தவறாமல் வந்து விடும். நானும் அனைவருக்கும் அவரவர் ரசனைக்கேற்ப சினிமா ஹீரோக்களோ, பூக்களோ, பொங்கலை குறிக்கும் வாழ்த்துக்களோ அனுப்பி இருக்கிறேன். ஒரு கட்டத்துக்கு பின், நண்பர்களையும் அந்த வட்டத்திற்குள் அழைத்து, பொங்கல் விடுமுறைக்கு முன் நேரிலேயே நண்பர்களுக்குள் வாழ்த்தட்டை பரிமாறி கொள்வோம்.

சில வருடங்களுக்கு முன் எங்க வீடு பெயின்ட் பண்ணும் போது என் ஸ்கூல் புத்தகங்களுக்கு இடையில் இந்த வாழ்த்து அட்டைகளும் இருந்ததைப் பார்த்து, சிலவற்றை(அந்த காலகட்டத்தில் வெளியான புகழ்பெற்ற படத்தின் ஹீரோ- ஹீரோயின் ஸ்டில் போன்று சில) தலையில் அடித்துக் கொண்டு கிழித்து போட்டேன். அப்போது கொண்டாடிய விஷயங்கள் இப்போது நமக்கே சிரிப்பாக இருக்கிறது. இருந்தாலும் அன்று கிடைத்த மனநிறைவை, இப்போது வாட்ஸ் அப்பில் வரும் அனிமேஷன் வாழ்த்துக்கள் தருவதில்லை.
 

Ramya Mani

Well-known member
#7
எனக்கான கடிதங்கள் எனத் தனியாக வந்ததில்லை. ஆனால் அம்மாவிற்கும் அவரின் அம்மாவிற்கும் (என் பாட்டி) இடையிலான கடிதப் போக்குவரத்தில் அனைத்திலும் ரம்யா இடம்பெற்றிருப்பேன். இங்கு ஷேமம். அங்குள்ள ஷேமத்தை எழுதவும் என ஆரம்பித்து.. மாமா வீட்டில் நடந்த நிகழ்வுகளை வடித்து.. சென்ற முறை அம்மா எழுதிய இங்குள்ள நிகழ்வுகளுக்கு பதில் எழுதி என நீளும் பட்டியலில் எனக்கான வரிகள் பெரும்பாலும் இப்படியாகத்தான் இருக்கும். ராதி(அம்மா -ராதா சுருக்கப்பட்டு) ரம்யாவுக்கு கம்மல் வாங்கி வைத்துள்ளேன். ரம்யாவுக்கு புது ஃபேஷன் ல உமா( மாமி) துணி வாங்கி இருக்கா. ரம்யாவுக்கு வளை வாங்கி இருக்கேன் என்பதாக.. எனக்கு இம்முறை என்ன வாங்கித் தருவ பாட்டி என்றெல்லாம் எழுதியதில்லை. ஆனால் மறக்காமல் ஒவ்வொரு முறையும் இதை எழுதி இருப்பார். என் மாமா பையன் கூட கேட்பான். எப்பப்பாரு ரம்யாக்காவுக்கே வாங்கித் தர்றீங்க.. பசங்களுக்கு ஒன்னும் வாங்கித் தரல னு. பாட்டி பெரும்பாலும் பொண் குழந்தைக்குத்தான்டா வாங்கித் தர முடியும் என சொல்லி விடுவார். கடிதம் என்றாலே பாட்டி எழுதிய கடிதங்கள் மட்டுமே ஞாபகம். இன்றும் அவை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன்.

அம்மா எழுதும் கடிதங்களில் அவ்வப்போது குண்டு குண்டு கையெழுத்தில் பாட்டி எப்படி இருக்க.. என ஆரம்பித்து நான்கு வரிகள் எழுதுவதில் எனக்கும் தம்பிகளுக்கும் போட்டி நடக்கும். இன்லேண்ட் லெட்டரில் பின்பகுதியில் எங்களுக்கான இடம் ஒதுக்கப்படும். ஆளுக்கு இரு வரிகள் எழுதி பாட்டி மறக்காம பதில் போடு என முடிப்போம்..அம்மாவிற்கும் பாட்டிக்கும் இடையிலான அன்பின் பாலமாய் இன்றும் சாட்சியாய் திகழ்பவை ஊதா நிற இன்லேண்ட் லெட்டர் களே..

வாழ்த்து அட்டைகள் பெரும்பாலும் மாமாவின் முகவரிக்கு அனுப்புவோம். அவரும் அனுப்புவார்.
அம்மா ,அப்பாவுக்கு கல்யாணத்துக்கு முன்னாடி பொங்கல் வாழ்த்து அனுப்பிய அட்டை இன்னும் இருக்கிறது. அத பார்த்து இப்பவும் அம்மாவை கிண்டலடிப்போம். லவ்ஸா என... கடிதங்களும் வாழ்த்தட்டைகளும் மறைந்து வீடியோ காலில் வாழ்த்து சொன்னாலும் எழுத்துகளில் வடித்த உணர்வுகளைக் கூறும் உணர்வு இல்லை.. பாட்டி இப்ப இல்ல. ஆனால் இப்பவும் பாட்டியின் எழுத்தை மிஸ் பண்றேன். மலையாளம் கலந்த தமிழில் இருக்கும்.. நாகர்கோவிலில் பிறந்து, ஊட்டியில் வளர்ந்து திருமணம் முடிந்து, பாலக்காட்டில் வாழ்ந்து மாமாவின் வேலையாய் ஊட்டி, கட்னி(உ.பிரதேசம்) ஆவடி என போகாத ஊரெல்லாம் சென்று வந்த தைரியமும் தன்னம்பிக்கையும் உள்ள பெண்மணி.
 

Anuya

Well-known member
#8
நா எழுதின கடிதம்னு பார்த்தா அது composition note & exam paper ல மட்டும் தான். Friends குள்ள சும்மா விளையாட்டுக்கு லெட்டர் குடுப்போம் ஆனா அதுல பதிலுக்கு waitலாம் பண்ண வேண்டாம் படிச்சதும் அவங்க சிரிச்சிடுவாங்க சோ அங்கேயே தெரிஞ்சிடும் நம்ம லெட்டர் எப்படின்னு.....

இன்னைக்கி டாஸ்க்கு வருவோம் ..... இப்படி ஒரு டாஸ்க் சொன்னதும்.... என்ன பண்ணலாம் யார்கிட்ட கேட்கலாம்னு அப்போ தான் யோசனை வந்துச்சி ...தாத்தாகிட்டயும் அம்மாச்சி கிடையும் போய் கேட்டேன் ....தாத்தா நீங்க சின்ன வயசுல லெட்டர்லாம் அம்மாச்சிகு போட்டு இருக்கீங்களானு....... அப்போ தான் எனக்கு தாத்தா அம்மாச்சி லவ் ஸ்டோரி முழுசா தெரிஞ்சிது...... தாத்தாவும் அம்மாச்சியும் அவங்களோட அந்த கால டைம் கே போய்ட்டாங்க போய்ட்டாங்க ....அவங்க ஸ்டோரி சொல்லுன்போது அம்மாச்சி அவ்வளவு வெட்கம் .....ரொம்ப cute ரெண்டு பேரும் ....டாம் & ஜெரி couples தான் அப்படியே ரெண்டு பேரும் எப்பயுமே சீண்டி விளையடிட்டே இருப்பாங்க ....
தாத்தா அம்மாச்சி marriage நிறைய problems அப்பறம் தான் நடந்துச்சாம் .... அப்போ எல்லாம் தாத்தா அம்மாச்சி கூட லெட்டர் ல தான் பேசிக்குவாங்களாம்.... அதுவும் அம்மாச்சி வீட்டுக்கு அனுபாம அவங்க friend வீட்டுக்கு அனுப்பி அம்மாச்சி கிட்ட கொடுக்க சொல்லுவாங்கலாம் ..... லெட்டர் அங்க கைக்கு சேரவே 4-5 days ஆகுமா அப்போ அவங்க பதில் அனுப்பி அது தாத்தா கிட்ட வர 4 days மேல ஆகும் .....அது எல்லாம் செம பீல் அவங்க பதில்காக வெயிட் பண்ணுறது னு சொன்னாங்க ......ரொம்ப ஜாலி அஹ் போச்சி இன்னைக்கி ....இந்த டாஸ்க் முழியமா ஒரு அழகான லவ் ஸ்டோரியும் தெரிஞ்சிக்கிட்டேன் :love::giggle:....
29th day task completed.....
 

Priyasagi

Active member
#9
கடிதம் எழுதிலாம் எனக்கு பழக்கமே இல்ல.. ஆன சின்ன வயசுல அம்மா அப்பாக்கு எழுதின கடிதத்தை, அப்பா அம்மாக்கு எழுதினதலாம் எடுத்து தெரியாம படிச்சிருக்கேன்..ஹி ஹி.... அது ஏன்னா எங்கள பத்தி அம்மா என்ன எழுதி இருப்பாங்கனு தெரிஞ்சுக்க ஆர்வம் அப்போ... எனக்கு அதுல என் பெயரை பார்த்தாலே அவ்வளவு சந்தோஷமா இருக்கும்.. அம்மா நம்மை மறக்கலனு... நான் 1st படிக்கும் போது அம்மா teacher training படிக்க போய்டாங்க .... So அப்போ எழுதின கடிதம் தான்...அதலாம் அலமாரி ல சேர்த்து வச்சிருக்காங்க... அது நான் ஒரு 6th படிக்கும் போது நானும் அக்காவும், சேர்ந்து படிச்சோம்.. யார் பேர் எழுதி இருக்காங்கன்னு பார்த்து சண்டை போட்டுப்போம்.... அம்மாட்ட அவங்க feelings ல கேட்டேன் இன்னைக்கு.. ரொம்ப சந்தோஷமா இருக்கும்.. வாரத்துல ஒரு tym அது எழுதுவன்.. கடிதம் னா மனசில தோன்றத அப்படியே எழுதலாம்.. ஆன தொலைபேசி னா அப்படி இருக்காது.. Feelings ah correct ah share panna mudiyathu phone னா... Hostel la pricipal padichutu tha letter enga கைக்கு வரும்... ஆன நாங்க அனுப்பறத days scholar ta koduthu anupuvom... அம்மாக்கு அவங்க தோழி school padikum pothu tha vazthu attaila anupinagallam.. அம்மா வும் frnds க்கஉanupirukangalam... Letter pola ipo iruka cell phone talk irukathu... Inamu antha letter la serthu vtchurukarathu oru memories kagatha..apdinu romba unarvupoorvama sonnaga... Enaku ipo yarukathu letter eluthunum pola iruku yarukuna
 
#10
எனக்கு என் பிரண்ட்ஸ் கிட்ட இருந்து ரெண்டு மூணு வாழ்த்து அட்டைகள், வந்திருக்கு. அதை தான் நான் என் இனிய ஞாபங்கங்களாக சேர்த்து வச்சிருக்கேன்.என் ஸ்கூல் பெஸ்ட் பிரண்ட், வெளிநாட்டுல இருக்கும் அவள் ஒரு ரெண்டு மூணு தடவை எனக்கு புத்தாண்டு வாழ்த்து அட்டை அனுப்பிருக்கா.அப்புறம் என்னோடு காலேஜ் பிரண்ட் போன வருஷம், காலேஜ் முடிஞ்சு கொஞ்ச நாள்ல, நம்பர் இருந்தும் அதுல கான்டாக்ட் பண்ணாம , லெட்டர் எழுதி அனுப்பி இருந்தாள் இதே சென்னையில் இருந்து கொண்டே. அந்த லெட்டர் பிளஸ் ஸ்கூல் பிரண்ட் ஓட வாழ்த்து அட்டை இரண்டுமே என் கைகளில் கிடைத்த தருணம் இனிமை. அப்புறம் என்னோட இன்னொறு தோழி என் பிறந்த நாளுக்கு அவள் கைபட எழுதிய வாழ்த்து அட்டைகளும் என்னிடம் பத்திரமா இருக்கு. மூன்று பேரும் என் வெவ்வேறு காலகட்டத்தில் பெஸ்ட் பிரண்ட்ஸ், ( ஸ்கூல், யுஜி,பிஜி ).அவங்க ஞாபகமா என்கிட்ட எப்பவுமே இருக்கும் அழகிய பொக்கிஷங்கள் அவை. ரொம்ப மகிழ்ச்சியான தருணங்களும் கூட, நமக்காக அவங்க கைபட எழுதி அனுப்பி வைக்கும் அதை படிக்கும் போது ஒரு சந்தோஷம் .

அப்புறம் அம்மா கிட்ட கடிதம், வாழ்த்து அட்டை பற்றி கேட்டதற்கு, அவங்க பிரண்ட்ஸ்க்கு எழுதி அனுப்பிருக்காங்களாம். அப்போவெல்லாம் கடிதம் தானே போக்குவரத்து .எழுதி மூன்று நான்கு நாட்கள் கழித்து அவங்களுக்கு சென்று திரும்ப பதில் வர ஒருவாரம் ஆகும். அதை காத்திருந்து படிப்பது அலாதி இன்பம். வாழ்த்து அட்டைகளும் ஆர்வமாக வாங்கி எழுதி அனுப்புவாங்களாம்.

நமக்கு கிடைக்கும் பொக்கிஷமாக, அவங்க கையெழுத்தில் உருவாகிய வாழ்த்து அட்டைகளும், நலம் விசாரிக்கும் கடிதங்களும் மிக அழகானவை.