Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 2 | SudhaRaviNovels

அத்தியாயம் - 2

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
572
404
63
அத்தியாயம் – 2

வீட்டில் அவர்களிடம் பேசிவிட்டு வந்தவனின் மூளை சூடாகி இருந்தது. அவனுக்கு இப்போதைய தேவை மது. ஆனால் அதற்கெல்லாம் நேரமில்லை. ஒருவித எரிச்சல் மனநிலையுடன் மதுரையை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.

இன்றைய நாள் தொடங்கிய விதமே சரியில்லை என்கிற மனதோடு தான் காரை ஒட்டிக் கொண்டிருந்தான். அந்நேரம் அவனுக்கு வித்யார்த்திடம் இருந்து அழைப்பு வர, அதை எடுத்துப் பேசியவனின் முகம் ரௌத்திரத்தை பூசிக் கொண்டது.

“நீ சொன்னதெல்லாம் உண்மையா வித்யா? ப்ரூப் இருக்கா?” என்று அவன் கேட்டதும் “நான் உனக்கு ஒரு விடியோ அனுப்புறேன். அதை பார்த்திட்டு என்ன பண்றது என்று முடிவு பண்ணு” என்று சொல்லி வைத்துவிட்டான்.

உடனே வாட்ஸ் ஆப்பை திறந்து அந்த வீடியோவை ஓட விட்டான். அதை பார்த்து முடித்ததும் மேலும் அவன் கோபம் அதிகமானது. காரை ஓரமாக நிறுத்திவிட்டு ஒரு நிமிடம் யோசித்தவன் வித்யார்த்துக்கு அழைத்து மீட்டிங்கை ஒரு மணி நேரம் தள்ளி வைக்கச் சொல்லிவிட்டு காரை தொழிற்சாலைக்குத் திருப்பினான்.

பெரியவர்கள் அனைவரும் வந்து தங்கள் வேலைகளில் ஈடுப்பட்டிருக்க, பத்து நிமிடங்களில் இந்திரனின் கார் வளாகத்திற்குள் நுழைந்தது. தனது இடத்தில் பார்க் செய்தவன் வேக நடையுடன் பின்பக்கம் சென்றான். போகும்போதே போன் செய்து அதியமானை வரச் சொல்லிவிட்டு சென்றான்.

அதுவொரு இருளடைந்த அறை. தொழிற்ச்சாலையில் நடக்கும் தவறுகளை எல்லாம் அங்கே வைத்து தான் தட்டிக் கேட்பான் இந்திரன். அங்கிருந்த ஒரு நாற்காலியில் கால் மேல் கால் போட்டுக் கொண்டிருந்தவனின் விழிகளில் மிதமிஞ்சிய கோபம் இருந்தது.

அதியமானோ தன்னை எதற்கு இந்திரன் அந்த இருட்டு அறைக்கு வரச் சொல்கிறான் என்கிற யோசனையுடன் வந்து சேர்ந்தான்.

“சார்!”

அவனை கூர்மையாகப் பார்த்து “வாங்க அதியமான். எப்படி இருக்கீங்க?”

அவனுடைய பார்வையைக் கண்டு நடுங்கிப் போனவன் “ந..நல்லா இருக்கேன் சார். என்னை எதுக்கு வர சொன்னீங்க?”

எதிரே இருந்த நாற்காலியை காண்பித்து “உட்காருங்க பேசுவோம்”.

நாற்காலியின் ஓரம் அமர்ந்தவன் எதிரே இருந்தவனின் கண்களைப் பார்க்க பயந்தான்.

“அப்புறம் எப்படி போகுது உங்க லைப்? நம்ம கம்பனியில் உங்களுக்கு சம்பளம் எல்லாம் எப்படி கொடுக்கிறாங்க?”

“நல்லா போகுது சார். சம்பளமும் நல்லா வருது சார்”.

“சோ சந்தோஷமா இருக்கீங்க. ஒன்றும் குறையில்லை”.

“ஆ...ஆமாம் சார்!”

சட்டென்று நாற்காலியை பின்னுக்குத் தள்ளி எழுந்தவன் வேக நடையுடன் அவன் முன்னே வந்து குனிந்து “அப்புறம் என்ன மயித்துக்கு அந்த கம்பனியில் காசு வாங்கின?” என்று சட்டையைப் பிடித்திருந்தான்.

முகமெல்லாம் கன்ற “இல்...இல்ல சார். நான்...” என்று முடிக்கும் முன் ஓங்கி ஒரு குத்துவிட்டிருந்தான். அதில் அவனது உள்ளி மூக்கு உடைந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது.

மீண்டும் ஒரு அறை விழ, கடவாய் பல் கழன்று விழுந்தது. அப்போதும் அவனுக்கு ஆத்திரம் தீரவில்லை. கன்னம் கன்னமாக அறைந்து தீர்த்தான்.

“சார் தெரியாம பண்ணிட்டேன் என்னை விட்டுடுங்க” என்று காலில் விழுந்து விட்டான்.

அவன் முன்னே குனிந்து “ஒரு இடத்தில் வேலை செஞ்சிட்டு இன்னொரு இடத்துக்கு துரோகம் பண்ண உனக்கு வெட்கமா இல்ல? உன்னை இங்கே எப்படி வச்சிருந்தோம்? அப்படி இருந்தும் உனக்கு பத்தல. அடுத்தவன் கிட்ட காசு வாங்கிட்டு உண்ட வீட்டுக்கு துரோகம் செஞ்சிருக்க” என்று கூறி ஓங்கி உதைத்தான்.

“என்னை மன்னிச்சிடுங்க சார்” என்று அவன் கதற கதற அடித்துத் தீர்த்தான்.

அவனுடைய கதறல் அந்த இடமெங்கும் ஒலிக்க, பெரியவர்களுக்கு செய்தி போனது. அவசரமாக வேலையை நிறுத்திவிட்டு அங்கு ஓடி வந்தனர்.

“என்ன பிரச்சனை இளையவனே? எதுக்கு இவனை இப்படி அடிச்சு வச்சிருக்க?”

அவரை நிமிர்ந்தும் பார்க்காது “ம்ம்...நீங்க கொடுக்கிற சம்பளம் பத்தலையாம் அதனால நம்ம எதிரி கம்பனியில கை நீட்டி சம்பளம் வாங்கிகிட்டு நம்ம பைல்ஸ் எல்லாம் கொடுத்திருக்கான்” என்று சொன்னதும் செல்வா, சுரேந்தரும் அதிர்ந்து போனார்கள்.

“இவன் அப்படி செய்ததுக்கு ப்ரூப் இருக்கா?”

கோபத்தில் இருக்கும் போது அண்ணன்களை பெயர் சொல்லியே அழைப்பான் இந்திரன்.

“செல்வா என் போனை எடுத்துப் பாரு. அதில் வித்யார்த் ஒரு விடியோ அனுப்பி இருப்பான். அதை அவரிடம் காட்டு” என்றவன் அதியமானை தூக்கி நிறுத்தினான்.

செல்வா அந்த வீடியோவை பார்த்துவிட்டு தந்தையிடம் காட்டினார். கஜேந்திரனின் முகத்தில் கோபத்தின் சாயல்.

“எத்தனை வருஷமா இங்கே வேலை செய்றான். கொஞ்சம் கூட அந்த நன்றி இல்லாமல் காசுக்கு விலை போயிருக்கானே”.

சுரேந்திரனும் விடீயோவைப் பார்த்துவிட்டு வந்து அதியமானை நன்றாக நைய்யப் புடைத்தான்.

“இவனை என்ன பண்ணப் போற இந்திரா?”

அவர்களை நிமிர்ந்து பார்த்தவன் “இன்னும் யோசிக்கல. இவனை நம்ம இடத்தில் வைக்க சொல்லுங்க. மீட்டிங் போயிட்டு வந்து என்ன பண்ணலாம்னு சொல்றேன்” என்றதும் அவன் மீண்டும் கால்களைப் பற்றிக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டான்.

ஓங்கி அவனை உதைத்து தள்ளிவிட்டு “பார்த்துகோங்க” என்றுவிட்டு வெளியேறி விட்டான்.

அன்றைய பொழுது முழுவதும் அவனுக்கு நல்லதாகவே அமையாத தோற்றத்தை உண்டு பண்ணியது. மதுரைக்கு சென்றவன் மீட்டிங் நடக்கும் ஹோட்டலிலேயே ஒரு ரூம் புக் செய்துவிட்டு தன்னை ரெப்ரெஷ் செய்து கொண்டு வந்தவர்களை சந்திக்கச் சென்றான்.

அவன் எதிர்பார்த்ததைவிட நன்றாகவே முடிந்த திருப்தியில் வெளியே வந்தவன் அறையை காலி செய்துவிட்டு பார்க்கிங்கை நோக்கிச் சென்றான். அப்போது போகும் வழியில் சமீபகாலமாக சோஷியல் மீடியாவில் பிரபலமாகி இருக்கும் ஒரு அழகான பெண். அவளும் அவள் கூட வந்தவர்களும் ரிஷப்ஷனில் அமர்ந்திருந்தார்கள்.

அவளின் பார்வை முழவதும் இவன் மீது தான். அவள் கூட வந்த பெண்களின் பார்வையும் இவன் மீது தான் இருந்தது. இவன் பார்க்காத போது ஒருவருக்கொருவர் இவனைக் காட்டி பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். அவளின் பார்வை மட்டும் இவன் பார்த்தபோதும் மாற்றிக் கொள்ளவே இல்லை.

இதழ்களில் எழுந்த சிரிப்புடன் அவர்களை நெருங்கியவன் அவளின் அருகே சென்று “இன்று என்னுடன் தங்குகிறாயா?” என்று மெல்லிய குரலில் கேட்டு விட்டான்.

அவளும் எந்த அலட்டலும் இல்லாமல் “ஓகே...இந்த ஹோட்டலையே தானே?” என்று கேட்டாள்.

“நோ! நோ! என் ஊரில் என் தோப்பு வீட்டில்”.

அவனுடைய பதிலில் சற்றே யோசித்தவள் “எங்கே இருக்கு உங்க ஊர்? வேற இடம் என்றால் கொஞ்சம் யோசிக்கணும்”.

“மேலூர்”.

“அங்கே?”

“பூபதி ஜமீன் குடும்பம் கேள்விபட்டிருக்கியா? அது எங்க குடும்பம் தான்”.

அவள் கண்களில் ஒரு மின்னல். பெரிய இடம் பிடித்திருந்தால் மொத்தமாக செட்டில் ஆகி விடலாம் என்று கணக்குப் போட்டாள். அவளுக்கு தெரியாது அவன் யாரையும் அத்தனை எளிதாக நெருங்க விட மாட்டான் என்பதை.

தன் தோழிகளிடம் திரும்பி “நீங்க எல்லோரும் இங்கேயே இன்று நைட் ஸ்டே பண்ணிடுங்க. நான் இவரோட கிளம்புறேன்”.

அவளின் மனவோட்டத்தைப் புரிந்து கொண்டவனின் இதழ்கள் உள்ளுக்குள் வளைந்தது சிரிப்பை மறைத்துக் கொண்டது. அவளை அழைத்துக் கொண்டு தோப்பு வீட்டை நோக்கிப் பறந்தது.

சுமார் முக்கால் மணி நேரத்தில் மேலுரை அடைந்திருந்தது. மேலும் ஒரு பத்து நிமிடத்தில் தோப்பு வீட்டை அடைந்திருக்க, அந்தப் பெண் அங்கே அப்படியொரு வீட்டை எதிர்பார்த்திருக்கவில்லை.

உயர்ந்த கம்பவுண்டிற்குள் இருபுறமும் தென்னை மரங்கள் சூழ, நிலவொளியில் அந்த தோப்பின் நடுவே வெள்ளை மாளிகை போன்றதொரு வீடு.

“வா” என்று அழைத்துவிட்டு அவன் முன்னே செல்ல மனதிற்குள் எழுந்த உற்சாகத்துடன் அவன் பின்னே சென்றாள்.

வீடா அது? சொர்க்கம் எங்கே இருக்கிறது என்று கேட்டால் அங்கே தான் சென்று சொல்லுவாள். வீட்டின் நடுவே தாழ்வாரம் போன்று அமைக்கப்பட்டு மேலே வானத்தை நோக்கி கண்ணாடி கதவுகள் போடப்பட்டிருந்தது. அந்த தாழ்வாரத்தின் நடுவே ஒரு கயிற்றுக் கட்டில். அதில் படுத்து விண்ணில் வரும் நிலவை ரசிக்கலாம்.

அவள் வீட்டை ரசித்துக் கொண்டிருக்க, அவளிடையில் கை கொடுத்து தூக்கிக் கொண்டவன் மெல்ல மாடிப்படி ஏற ஆரம்பித்தான். கையில் இருந்தவளின் இதழ்களில் தன்னிதழ்களைப் பதித்தவன் ரசனையோடு அவளை ரசித்து ருசித்துக் கொண்டே அறைக்குள் நுழைந்தான்.

அவளை கட்டிலில் விட்டு தானும் அவள் மேல் விழுந்து மன்மத அம்புகளைத் தொடுக்க ஆரம்பித்தான். அன்று அவனுக்கு பெண்ணின் தேவை அதிகமாக இருக்க, அவளை மீண்டும் மீண்டும் நாடினான்.

ஆரம்பத்தில் அவனுடன் வர அத்தனை விருப்பமில்லை என்றாலும் அவனது பணக்காரத்தனம் அவளை கவர்ந்திருந்தது.

வாழ்க்கையில் எப்படியாவது ஒரு பணக்காரனுடன் செட்டில் ஆகிவிட வேண்டும் என்கிற எண்ணத்துடன் தான் இருந்தாள். ஆனால் இவளிடம் வந்தவர்கள் எல்லாம் நாற்பது ஐம்பதுக்கு மேலேயே இருந்ததால் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தாள். இதோ இவன் திருமணம் ஆகாதவன் இவனுடன் செட்டில் ஆகி விட்டால் நல்லது என்று அவனது தேவைகளை எல்லாம் மறுப்பு சொல்லாது நிறைவேற்றினாள்.

இரவெல்லாம் அவனின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்தவளுக்கு மறுநாள் காலை எழும்போதே வெயில் கண்களை கூசச் செய்தது. அருகே இருந்தவனைக் காணவில்லை. மெல்ல எழுந்து சென்று சுத்தப்படுத்திக் கொண்டவள் அறையை சுற்றிப் பார்க்க, அங்கே மேஜை மீது கற்றையாக பணம் வைக்கபட்டிருந்தது.

அதன் கீழே ‘நேற்று உன் சேவை எனக்குப் பிடித்திருந்தது’ என்று எழுதி இருந்தது.

அவளுக்கு அங்கிருந்து கிளம்ப மனமில்லாமல் அறைக்குள்ளேயே சிந்தனையுடன் நடந்து கொண்டிருக்க, சற்று நேரத்தில் அறைக் கதவு தட்டப்பட்டது.

மெல்ல சென்று கதவைத் திறக்க அங்கே ஒருவர் நின்றிருந்தார்.

“ கார் ரெடியா இருக்கு. கிளம்பி வா” .

என்ன இது என்று யோசித்துக் கொண்டே “இல்ல நான் இப்போ போகல” என்றாள் இந்திரனைப் பற்றி அறியாது.

“அஞ்சு நிமிஷம் டைம். இங்கே தங்க உனக்கு அனுமதி கிடையாது. சீக்கிரம் கீழே வந்து சேரு” என்று சொல்லிவிட்டு சென்று விட்டான்.

அதில் முகம் கருத்துப் போக எரிச்சலுடன் பணத்தை எடுத்துக் கொண்டு அவன் பின்னேயே சென்று காரில் அமர்ந்து கொண்டாள்.

யோசனையுடன் உள்ளே அமர்ந்தவளுக்கு அவனைப் பார்த்து எப்படியாவது அங்கேயே தங்கிவிட வேண்டும் என்கிற ஆவல் எழுந்தது.

கார் கிளம்பியதும் “உங்க சார் கிட்ட பேசணும்” என்று டிரைவரிடம் கேட்டாள்.

அவன் எதுவும் சொல்லாமல் போனை எடுத்து இந்திரனுக்கு அழைத்து “சார் உங்க கிட்ட பேசணுமாம்” என்று சொல்லி அவளிடம் கொடுத்தான்.

“சார்”

“என்ன பணம் பத்தலையா?”

“இல்ல...நான் இங்கே..”

“லுக்! உனக்கு வேற மாதிரி எண்ணம் இருந்தா மறந்திடு! வந்த வேலை முடிச்சாச்சு பணமும் வாங்கிச்சு. இங்கே வந்ததை மறந்துடு”.

“நான் இங்கேயே இருந்து உங்களுக்கு அப்பப்ப...” என்று இழுத்ததுமே “ஒ...உனக்கு சர்விஸ் பண்ணனும்னா இனி எனக்கு பண்ண முடியாது. என் ஆட்கள் ஒரு ஏழு எட்டு பேர் இருக்காங்க. அவங்களுக்கு தினமும் செர்விஸ் தேவை. உனக்கு ஓகே-னா வீட்டுக்குத் திரும்பி போயிடு” என்றான் கம்பீரமான குரலில்.

அந்த மாளிகையில் இருந்த ஆட்களைப் பார்த்திருந்தவளுக்கு உடல் எல்லாம் நடுங்கிப் போனது. அவர்களுக்கு தினமும் என்று என்னும் போதே கைகள் சில்லிட்டுப் போனது.

“இல்ல சார் நான் போறேன்” என்று சொல்லி போனை டிரைவரிடம் கொடுத்து விட்டாள்.

“மருது! இறக்கி விட்டுட்டு நம்ம இடத்துக்கு வந்துடு”

“சரி சார்”