அத்தியாயம் – 3
ஆபிசில் இருந்த இந்திரன் முன்பு சுரேந்திரனும் செல்வேந்திரனும் அமர்ந்திருந்தார்கள்.
“அதியமானை என்ன பண்ணப் போற இந்திரா?”
இருவரையும் சிந்தனையுடன் பார்த்தவன் “நான் எப்படி பண்ணுவேன் என்ன பண்ணுவேன் என்று ரெண்டு பேருக்கும் தெரியும். உங்களுக்கு எதுவும் ஐடியா இருக்கா?”
“அவ்வளவு தேவையா? அவனை கூட்டிட்டே போய் மதுரம்ல பேசிடு. வேலையை விட்டு தூக்கிட்டு இந்த ஊரை விட்டு ஓட விடு” - சுரேந்திரன்.
“அதெல்லாம் வேண்டாம்! வேலையை விட்டுத் தூக்கிட்டு விரட்டி விடு. நம்ம கிட்ட தான் வீடியோ இருக்கே. அதை வச்சு அவனுங்களுக்கு ஆப்பு அடிக்கலாம்” – செல்வேந்திரன்.
இருவரையும் அதிருப்தியுடன் பார்த்தவன் “இதெல்லாம் அவனுக்கு பத்தாது. மதுரம் அர்ஜுனை என்ன பண்ணலாம் அதை சொல்லுங்க?”
“டேய்! கொலை பண்ணிடாதே-டா. அர்ஜுனை இங்கே வரவழை பேசலாம்”.
உதட்டோரம் கற்றையாக இருந்த மீசை முடியை லேசாக பிடித்துக் கொண்டு சப்தமாக சிரித்தவன் “கொலை பண்ற அளவுக்கெல்லாம் அவன் வார்த் இல்ல. ஓகே! அர்ஜுனை வரச் சொல்றேன்” என்று தலையாட்டிக் கொண்டான்.
இருவரும் எழுந்து கொள்ள செல்வேந்திரன் தம்பியின் முகத்தைப் பார்த்துவிட்டு “உனக்கு கல்யாணம் பண்ணனும்னு அம்மாவும் ஐயாவும் நினைக்கிறாங்க. நீ தோப்பு வீட்டுக்குப் போறதை நிறுத்தேன் தம்பி”.
ஆறடி உயரத்திற்கு வளர்ந்திருந்தவன் நெஞ்சை நிமிர்த்தி “எனக்கு கல்யாணம் எல்லாம் செட்டாகாது. என்னால ஒருத்தி கூட வாழ முடியாது”.
அவன் பேச்சில் அதிர்ந்து போன செல்வேந்திரன் “இப்படி எல்லாம் சொல்லாத-டா. ஐயா பார்க்கிற பெண்ணை கட்டிக்கிட்டு நல்ல வாழ்க்கையை வாழப் பாரு. நீ போகிற பாதை எங்கே வேணா போய் முடியும்”.
அண்ணனின் அருகில் சென்று நின்று தோளில் கைப் போட்டுக் கொண்டவன் “தேவையான பிரகாஷன் எடுத்துகிட்டு தான் இருக்கேன்” என்று சொல்லி கண் சிமிட்டினான்.
சுரேந்திரன் அவன் முதுகில் அறைந்து “போதும்-டா அண்ணன் தாங்க மாட்டார். சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லு. ஐயாவும், அம்மாவும் சந்தோஷப்படுவாங்க”.
பாக்கெட்டில் கையை விட்டுக் கொண்டு இருவரையும் பார்த்து “சாரி பிரதர்ஸ்! என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. என் வாழ்க்கையில் எந்த பெண்ணிற்கும் இடம் கிடையாது. நான் தனிக்காட்டு ராஜா” என்று காலரை உயர்த்திக் கொண்டான்.
பெரியவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினார்கள்.
அதே நேரம் சென்னையில் சுரேந்திரனின் மனைவி மலரின் வீட்டில் ஒரே ஆர்ப்பாட்டமாக இருந்தது.
மலரின் தங்கை லாவண்யா ஹாலில் கிடந்த சோபாவின் மீது நின்று கொண்டிருதாள்.
ஹாலின் ஒரு மூலையில் கரப்பான் பூச்சி ஒன்று மீசையை முறுக்கிக் கொண்டு பறக்கவா ஓடவா என்று நின்று கொண்டிருந்தது. அதைப் பார்த்து தான் இவள் சோபாவின் மீது நின்று கொண்டிருக்கிறாள்.
மகளையும் அந்த கரப்பான் பூச்சியையும் மாறி மாறி பார்த்தார் தேனுகா. நேரே சென்று சமயலறையில் இருந்து ஒரு விளக்கமாரை எடுத்து வந்தார். அதைப் பார்த்ததும் “அம்மா! நான் வேணும்னே சோபாவில் நிற்கல. அங்கே கரப்பான் பூச்சி இருக்கு பாருங்க” என்று கை காட்டினாள்.
அவரும் கடுப்புடன் சென்று கரப்பான் பூச்சியை அடிக்க, அதுவோ ‘விர்’ என்று பறந்து லாவண்யாவை நோக்கிச் சென்றது. அவ்வளவு தான் சோபாவிலிருந்து ஒரே குதி குதித்து வாசலை நோக்கி ஓட, அங்கிருந்து படி தடுக்கி குப்புற விழுந்தாள்.
கரப்பான் பூச்சி சரியாக அவள் முதுகில் சென்று லான்ட் ஆனது. அதை உணர்ந்தவள் அப்படியே மயங்கி சரிந்தாள்.
அதைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டவர் கரப்பான் பூச்சியை அடித்து தூக்கிப் போட்டுவிட்டு, தண்ணீர் தெளித்து எழுப்பி விட்டார். முதுகில் அடித்து எழுப்பி அமர வைத்தவர் “ஒரு கரப்பான் பூச்சிக்கா இத்தனை அமர்க்களம்? அது உன்னை என்னடி பண்ணிடும்?” என்று எரிச்சலாக கேட்டார்.
முட்டி தேய்ந்து லேசாக ரத்தம் வந்து கொண்டிருக்க மெல்ல எழுந்தவள் நொண்டிக் கொண்டே சென்று அமர்ந்தாள்.
லாவண்யா எஞ்சினியரிங் கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள். சின்ன சின்ன விஷயங்களுக்கு கூடபயப்படுவாள். மலர் தன் மனதில் உள்ளதை பேசி விடுவாள். வளவள என்று பேசுபவள் அவள். ஆனால் இவளோ எதையும் வெளியில் சொல்லிக் கொள்ளவே மாட்டாள்.
அவளை திட்டிக் கொண்டே இருந்தார் தேனுகா. இத்தனை பயம் ஆகாது என்றும் தைரியமாக இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். அவளோ காலில் உள்ள காயத்தை ஆராய்ந்து கொண்டே அமர்ந்திருந்தாள்.
அதே வேளை அங்கே மேலூரில் பூபதி மாளிகையில் வரிசையாக கார்கள் வந்து நின்றது.
மலரும்,தேவிகாவும் அப்போது தான் பிள்ளைகளை பள்ளியிலிருந்து அழைத்துக் கொண்டு வந்திருந்தனர்.
“என்னக்கா நடக்குது? குலசேகரன் பட்டினமும், பாப்பாநாடும் சேர்ந்து வந்திருக்கு?”
“அது தான் எனக்கும் தெரியல மலரு. ஒருவேளை நம்ம தம்பிக்கு பொண்ணு பார்க்கிறாங்களோ?”
“உங்களுக்கு அக்கா மட்டும் தானேக்கா இருக்காங்க?” கிண்டலாக.
அவளை முறைத்தவர் “இந்திரா தம்பியை தான் சொன்னேன். அவருக்கு பொண்ணு பார்க்க தான் இவங்களை வர சொல்லி இருக்காங்க. அத்தை பெண்ணையும், மாமா பெண்ணையும் கேட்டுப் பார்த்து இல்லேனதும் வேற இடத்தில் பார்ப்பாங்களா இருக்கும்”.
“அப்போ இன்னைக்கு நமக்கு நல்ல என்ட்டர்டேயின்மென்ட் இருக்கு”.
அவளது தோளைப் பற்றி நிறுத்திய தேவிகா “இங்கே பாரு மலரு நாம பாட்டுக்கு பிள்ளைகளை கூட்டிகிட்டு தோட்டத்துக்கு போயிடுவோம். அத்தை நம்மளை கூப்பிட்டா மட்டும் அங்கே போவோம். நடக்கிற கூத்துல இதுங்க நம்ம தலையை உருட்டாம இருந்தா சரி தான்”.
“ஆமாக்கா! அங்கே பாருங்களே உலக அதிசயத்தை. ராமரும் லட்சுமணரும் சீக்கிரமே வராங்க. கிருஷ்ணரை மட்டும் வழக்கம் போல காணல”.
ஹாலில் அமர்ந்திருந்த கஜேந்திரனின் தங்கை திலகவதி அம்மாளையும் அவர் கணவர் சோமசுந்தரத்தை விசாரித்து விட்டு, டைனிங்கில் அமர்ந்திருந்த பெரியநாயகியின் தம்பியும் பாப்பானாட்டின் ஜமீனுமான ராஜசேகரனையும் அவரையும் அவரது மனைவி அஞ்சுகாவையும் விசாரித்துவிட்டு தங்களது அறைக்குள் புகுந்து கொண்டார்கள்.
அனைவரும் வந்ததும் கஜேந்திரன் அவர்களை அழைத்துக் கொண்டு தனது ஆபிஸ் அறைக்குச் சென்றார்.
எல்லோரும் வந்ததும் பெரியநாயகியும், கஜேந்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
திலகவதிக்கு அந்தப் பொறுமை எல்லாம் இருக்கவில்லை.
“எங்களை எதுக்கு அண்ணன் வர சொன்ன?”
சோமசுந்தரமும் “நானே கேட்கனும்னு நினைச்சேன். இவ்வளவு அவசரமா எதுக்கு கூப்பிட்டீங்க மாப்பிள்ளை ?”
அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு “இந்திரனுக்கு பொண்ணு பார்க்கலாம்னு இருக்கேன். வெளில பார்க்கும் முன்னே பெண்ணை வச்சிருக்க உங்க கிட்ட முதலில் கேட்டுட்டு அப்புறமா முடிவு பண்ண நினைச்சேன்”.
“நீங்க எங்களை கேட்கவே வேண்டாம் அண்ணா. வெளிலையே பார்த்திடுங்க” சடாரென்று சொல்லி விட்டார்.
“ஆமாம் மாப்பிள்ளை. இந்திரனுக்கு வெளிலையே பார்த்திடுங்க” என்று விட்டார்.
பெரியநாயகிக்கு பெரிய அதிர்ச்சி. கஜேந்திரன் இதை ஊகித்திருந்தார். ஆனால் பெரியநாயகி எப்படியும் தன் அண்ணனாவது மகளை கொடுப்பார் என்று எண்ணி இருந்தார்.
“என்ன திலகா உன் மருமகனுக்கு பெண்ணை கொடுக்க மாட்டியா?”
“அண்ணி! என்னை சங்கடப்படுத்தாதீங்க. பெரியவனுங்க மாதிரி இல்ல இந்திரன். பொண்ணுங்க சகவாசம் இருக்கிற அவனுக்கு என் பெண்ணை கொடுக்க எனக்கு விருப்பமில்லை”.
“பெரிய நாயகி ! எங்க பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தானே நாங்க நினைப்போம். உனக்கே ஒரு பொண்ணு இருந்தா நீ இப்படிப்பட்ட பையனுக்கு கொடுப்பியா?”- சோமசுந்தரம்
கண்களில் கண்ணீர் வழிய நாத்தனார் மற்றும் அண்ணனை நோக்கியவர் “போதும்! பெண்ணை கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டீங்க. இதுக்கு மேல என் பையனைப் பற்றி பேச உங்க யாருக்கும் உரிமை இல்ல” என்றார்.
சுரேந்திரன் தான் அன்னையின் அருகில் சென்று அமர்ந்து அவரது கைகளைப் பற்றிக் கொண்டான்.
“அம்மா! கவலைப்படாதீங்க. இந்திரனுக்கு நல்ல பெண்ணாக கிடைப்பாள்”.
செல்வேந்திரனோ அவர்கள் அனைவரையும் பார்த்து “சரி நீங்க எல்லாம் கிளம்புங்க” என்று விட்டான்.
நால்வரும் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.
தோட்டத்தில் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த மலர் “அக்கா! குலசேகரமும், பாப்பாநாடும் கிளம்பிடுச்சு. பொண்ணு தர மாட்டேன்னு சொல்லிட்டாங்கன்னு நினைக்கிறேன்”.
அவளை முறைத்த தேவிகா “பொறுமையா இரு. எல்லாம் முடிவு பண்ணினதும் சொல்வாங்க”.
கஜேந்திரன் கண்களை மூடி சாய்ந்து அமர்ந்து விட்டார். அவரின் நெற்றி முடிச்சுகள் சிந்திப்பதை சொல்லியது. பெரியநாயகியோ கண்ணீருடன் “என் பிள்ளைக்கு கல்யாணம் ஆகாதா?” என்று புலம்பிக் கொண்டிருந்தார்.
அப்போது கஜேந்திரன் சட்டென்று நிமிர்ந்து அமர்ந்தவர் சுரேந்திரனிடம் “சுரேன் உன் மச்சினியை நம்ம இந்திரனுக்கு பேசலாமா?” என்றார்.
அவன் இதை முற்றிலுமாக எதிர்பார்க்கவில்லை. மலருக்கு சுத்தமாக விருப்பம் இருக்காது என்று தெரியும். தான் அதிக நேரம் யோசித்தாலே விருப்பம் இல்லை என்று அன்னை நினைத்து விடுவார் என்று எண்ணியவன் “சரிப்பா கேட்டு பார்க்கலாமே” என்றான்.
அதைக் கேட்டதும் கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தமர்ந்த பெரியநாயகி “கேட்டு பார்ப்பியா? அவளை நம்ம இந்திரனுக்கு முடிச்சிடுவோங்க. சுரேன் நீ தான் அந்த வீட்டு மாப்பிள்ளை. நீ உன் மாமனார் கிட்ட பேசிடு” என்றார் அதிகாரமாக.
செல்வேந்திரனுக்கு அவரின் பேச்சு பிடிக்காமல் “கேட்டு தான் முடிவு பண்ணனுமா. அவங்களுக்கும் ஒரு விருப்பம் இருக்கும் இல்லையா”.
அண்ணனை நன்றியுடன் பார்த்தான் சுரேன். ஆனால் பெரியநாயகியோ “என்ன பேசுற செல்வா? அவங்க வசதிக்கு நம்ம வீட்டு பையனை கட்டுறதுக்கு கசக்குதா? மலரை நாம எப்படி வச்சிருக்கோம்? அதெல்லாம் நாம சொன்னா அவங்க கேட்டுக்கணும்”.
அப்போதும் விடாமல் “அம்மா சுரேன் கதை வேற இந்திரன் கதை வேற. மாமா சொன்ன மாதிரி உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்தா நீங்க கொடுப்பீங்களா சொல்லுங்கம்மா?”
அவனுடைய கேள்வியில் ‘ஓவென்று’ அழ ஆரம்பித்து விட்டார் பெரியநாயகி.
“நீங்களே இப்படி பேசும் போது அடுத்தவன் நம்ம வீட்டுக்கு எப்படிடா நல்லது செய்வான்? என் பிள்ளையை விட்டுடுங்கடா. அவன் தலையெழுத்து அவ்வளவு தான்”.
கஜேந்திரன் நாற்காலியில் இருந்து எழுந்தவர் “சுரேன் உன் மாமானார் வீட்டுக்கு சொல்லிடு. இந்த வெள்ளிக்கிழமை அவங்க பெண்ணை நிச்சயம் பண்ண வரோம்னு”.
“ஐயா!”
“நான் சொன்னது தான் முடிவு. அவங்க எதுவும் மறுத்துப் பேசினா மலரை திருப்பி அனுப்பிடு” என்று சொல்லிவிட்டு வெளியேறி விட்டார்.
பெரியநாயகியும் கண்களைத் துடைத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினார்.
சுரேந்திரன் தான் டென்ஷன் ஆகி விட்டான்.
“என்ன அண்ணா ஐயா இப்படி பண்ணிட்டாங்க? எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல?”
“மலர் கிட்ட எப்படிடா சொல்லுவ? உன் மாமானார் கிட்ட எப்படி சொல்லுவ?”
“முதல்ல இந்திரனைப் பத்தி உன் வீட்டுல என்ன சொல்லி வச்சிருக்கன்னு கேட்கணும்? அடுத்து இதுவரை எதுவும் சொல்லலேன்னா இனியும் சொல்லாதேன்னு சொல்லணும்”.
“அவன் ஒத்துக்குவானா?”
“அதுவும் தெரியல. கடைசில எல்லாம் என் தலையில் வந்து விடிஞ்சிடுச்சு” என்று தலையைப் பிடித்துக் கொண்டான்.
அவனது தோள்களைப் பற்றி தட்டிக் கொடுத்து “பார்த்துக்கலாம்-டா!” என்றான்.
“மலரை எப்படி சமாளிக்கன்னு தான் தெரியல” என்று சொல்லிவிட்டு தங்கள் அறையை நோக்கிச் சென்றான்.
பிள்ளைகளுடன் அறைக்குள் நுழைந்த மலர் கணவன் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருப்பதை பார்த்து மெல்ல பிடித்து விட ஆரம்பித்தாள்.