Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript டீசர் | SudhaRaviNovels

டீசர்

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
188
131
43
டீசர்.........

“மாறன் எனக்கு இந்த ப்ரோக்ராம்மில் ஹெல்ப் பண்ண முடியுமா?”

“யா சுயூர்!”

அவன் அப்படி சொன்னதுமே அவள் இதழில் மென்னகை படர்ந்தது. அந்த அலுவலகத்தில் யார் என்ன உதவி கேட்டாலும் முகம் சுளிக்காமல் உதவி செய்வான். அதோடு பெரிய பொறுப்பில் இருக்கிறோம் என்கிற தலைக்கனம் என்றுமே அவனிடம் இருந்ததில்லை. அவனது இந்த குணங்களே அவளை அவனிடம் ஈர்த்தது.

மெல்ல மெல்ல அவள் மனம் அவன் பால் சென்று கொண்டிருப்பதை உணர்ந்தாலும் அவனுக்கு தன்னை பிடிக்குமா என்கிற தயக்கமும் இருந்தது.

மாறனுக்கும் அவள் மேல் மெல்லிய ஈர்ப்பு இருந்தது. அவனுமே அதை வெளிப்படுத்தும் நேரத்தை எதிர்பார்த்து தான் காத்திருந்தான்.

உடனடியாக அவளது மேஜைக்கு வந்து அவளுக்கு உதவி செய்து விட்டு சென்றவனை பற்றிய எண்ணங்களுடன் தனது வேலையில் மூழ்கினாள்.

மாலை வேலை முடியும் நேரம் வீட்டிற்கு கிளம்ப தனது டூ வீலரை கிக் ஸ்டார்ட் செய்ய முயன்று அது முடியாது போக, கஷ்டப்பட்டு உதைக்க ஆரம்பித்தாள். வண்டியோ கிளம்புவேனோ என்று சண்டித்தனம் செய்தது. வியர்க்க விறுவிறுக்க டூ வீலரை நகர்த்திச் சென்று ஸ்டாண்டில் நிற்க வைத்து விட்டு ஊபரில் போகலாம் என்று நினைக்கும் நேரம் அவள் அருகே கார் வந்து நின்றது.

“மேடம்! கார் புக் பண்ணி இருந்தீங்களா?”

அவளோ இல்லை என்று மறுக்கலாம் என்று நிமிர்ந்தவளின் பார்வையில் மாறன் பட, அவனோ கையசைத்து போய் வா என்று சொல்லிவிட்டு புன்னகையுடன் தனது வண்டியில் சென்றான். அவன் தான் தனக்காக காரை ஏற்பாடு செய்திருக்கிறான் என்கிற உற்சாகத்தோடு காரில் ஏறி விட்டாள்.

வீடு சென்று சேரும் வரை மனம் உற்சாகத்தில் கரை புரண்டோடிக் கொண்டிருந்தது. தனது தேவையை கவனிக்கிறான் அதுவும் தன்னுடன் வா என்று அழைக்காமல் கண்ணியமாக கார் புக் செய்து கொடுத்திருக்கிறான். ஒரு பெண்ணிற்கு வேறு என்ன வேண்டும்?
“அக்கா! உனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேணும்?”

தங்கை அப்படி கேட்டதும் அவளுக்கு மாறனின் நினைவு வர, அவள் முகம் கனிந்து மெல்லிய சிரிப்புடன் “என்னுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கிறவரா இருக்கணும் அஞ்சனா”.

“ம்ம்...அப்புறம்?”

“என்னுடைய தேவை இது தான் என்று சொல்லாமலே அவராகவே புரிஞ்சுகிட்டு செய்யணும்”.

கன்னத்தில் கை வைத்தபடி “அப்புறம்” என்றாள் குறும்போடு.

“சின்ன விஷயத்தில் கூட என் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்கணும். எனக்கு விருப்பமில்லாமல் ஒரு விஷயத்தை செய்யவோ நினைக்கவோ கூடாது”.

“அடேங்கப்பா! கண்டிஷன் எல்லாம் பலமா இருக்கே அக்கா?”

“இது கண்டிஷன் இல்லை அஞ்சனா. நம்முடைய உணர்வுகளுக்கு மதிப்பு வேண்டும் என்று கேட்கிறேன் அவ்வளவு தான்”.

“அம்மாவும், அப்பாவும் இப்படியொரு மாப்பிள்ளையை உனக்கு கொண்டு வராங்களான்னு பார்ப்போம்”.

தங்கையை பார்த்து கண் சிமிட்டி “நிச்சயம் அப்படிப்பட்டவர் தான் எனக்கு கணவரா வருவார்” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றாள்.
தர்ஷனா கார்த்திக்!

டிவியில் ஓடிக் கொண்டிருந்த தங்களின் திருமண விடியோவை பார்த்துக் கொண்டிருந்தவளின் மனம் வெறுமையை பூசிக் கொண்டிருந்தது.

இந்த ஒரு மாதத்தில் என்னவெல்லாம் நடந்து விட்டது. சற்றும் எதிர்பார்க்காத ஒரு திருமணம். அதிலும் இத்தனை விரைவாக. நீண்ட பெருமூச்சுடன் அருகே அமர்ந்து திருமண விடியோவை பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக்கை பார்த்தாள்.

அவள் பார்ப்பது தெரிந்ததுமே அவள் அருகே குனிந்து “லுக்கிங் கார்ஜியஸ் தர்ஷு. என்னால கண்ணை எடுக்கவே முடியல”.

“ம்ம்...”

கார்த்திக்கின் அக்கா சாம்பவி “என்னடா எங்களுக்கும் சொல்லலாம் இல்ல?” என்றார் கிண்டலாக.

“கார்ஜியசாக இருக்கான்னு சொன்னேன்”.

அவன் அப்படி சொன்னதுமே தர்ஷனா அதிர்ந்து அவனை பார்க்க சாம்பவியோ “போதும்டா! தெரியாம கேட்டுட்டேன்” என்று விட்டார்.

“கார்த்தி! எங்க வீட்டுக்கு எப்போ வர?”

“எப்போ போகலாம் தர்ஷ்?”

“டேய்! நீ என்னடா அவளை கேட்கிற?”

“பின்னே! இனி அவளுடைய முடிவு தான் எல்லாமே”.

“வாவ் மாமா! அக்கா ஆசைப்பட்டபடியே நீங்க அமைஞ்சிருக்கீங்க. சூப்பர்”.

“அஞ்சனா!”

“நீ சும்மா இருக்கா! மாமா சூப்பர்”.

சாம்பவி சிரித்துக் கொண்டே “உனக்கும் கார்த்தி மாதிரியே மாப்பிள்ளை பார்த்திடுவோமா?”

அஞ்சனா பதில் சொல்லும் முன்பே “வேண்டாம்!’ என்றிருந்தாள் தர்ஷனா.

காலமென்ற ஒரு நினைவும்

காட்சியென்ற பல நினைவும்

கோலமும் பொய்களோ- அங்கு குணங்களும்

பொய்களோ?

750
 
  • Like
Reactions: saru