Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 10 | SudhaRaviNovels

அத்தியாயம் - 10

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அத்தியாயம் - 10

தனது அறையில் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தவனின் மனம் தன்னவளுக்காக துடித்தது. தனது திருமண படத்தை கண்டுவிட்டு எவ்வாறு துடித்திருப்பாள் என்றெண்ணி நொந்து போனான்.தன்னால் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருப்பது அவனை கோபம் கொள்ள வைத்தது.

அந்நேரம் அவனது அறைக் கதவு திறக்கும் சப்தம் கேட்க, அந்த திசையில் அவனது பார்வை சென்றது. கேஷ்வி தான் உள்ளே நுழைந்து கதவை தாழிட்டுக் கொண்டிருந்தாள். அவளைக் கண்டதும் இதை எப்படி மறந்தேன் என்றெண்ணி பார்த்தபடியே நின்றான். அவளோ அவனை அலட்சியமாக பார்த்துவிட்டு ஆடைகளை எடுத்தக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

அவளிடம் பேச வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான். தன்னால் அவளோடு வாழ முடியாது என்பதை தெரிவித்து விட வேண்டும் என்று உறுதியாக இருந்தான். அதனால் அவளுக்காக காத்திருக்க ஆரம்பித்தான். அரை மணி நேரம் கழித்து வெளியே வந்தவள் டிரெஸ்ஸிங் டேபிளின் முன்னே அமர, இவனோ லேசாக தொண்டையை செருமிக் கொண்டு “நான் உன்னிடம் பேசணும்” என்றான்.

அவளோ ஸ்டைலாக திரும்பி அமர்ந்து “நான் முதலில் பேசிடுறேன் சித்தார்த். அதன்பிறகு உனக்கு ஏதாவது இருந்தா பேசு” என்றாள்.

“ம்ம்..”

அவனை நேருக்கு நேர் பார்த்துக் கொண்டே “எனக்கு இந்த திருமணம், பிசிகல் ரிலேஷஷிப் இதில் எல்லாம் நாட்டமில்லை. என்னுடைய இண்டரெஸ்ட் முழுவதும் தொழில் மீது தான். ஆனா என்னுடைய பேரெண்ட்ஸ்காக தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக் கொண்டேன். அவங்களுக்கு சொசைட்டிக்கு சொல்லணும் என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிட்டேன்னு. சோ அதுக்காக தான் இது. நான் என்ன சொல்ல வரேன்னா நம்முடைய இந்த திருமணம் ஜஸ்ட் ஒரு பிசினெஸ் டீல் மாதிரி தான். நீயும் நானும் அவனாக அவங்க வேலையைப் பார்க்கலாம். எதிர்காலத்தில் நம்முடைய பாமிலி பெருசாகனும்னு நினைத்தால் அப்போ வீ கேன் கோ பார் இட்” என்று சொல்லி அவனை பார்த்தாள்.

தான் சொல்ல வேண்டியதை எல்லாம் அவள் சொல்லி விட்டதில் ஒருவித நிம்மதி அடைந்தான் சித்தார்த். ஆனால் இந்த பந்தத்தின் மூலம் அவளுடன் ஒரே அறைக்குள் இருப்பதை அறவே வெறுத்தான். அவளிடம் தனக்கும் அவளுக்குமான எல்லையை வகுத்து விட நினைத்தான்.

“ரைட்! எனக்கும் இது ஓகே பட் என்னுடைய தனிப்பட்ட விஷயங்களில் நீ உள்ளே வரவே கூடாது. அதே மாதிரி நானும் உன் விஷயத்தில் என்னுடைய லிமிட் எதுவோ அதோட நிறுத்திக் கொள்வேன்” என்றான் தாடையை வருடியபடி.

தனது கழுத்தில் கிடந்த தாலியை கழட்டி டிரெஸ்ஸிங் டேபிளின் மீது போட்டவள் அவனைப் பார்த்து புன்னகையுடன் “இது தான் இதனுடைய மரியாதை. எனக்கும் உன்னுடைய டீல் ஓகே” என்று சொல்லிவிட்டு அவனது படுக்கையை நோக்கி சென்றாள்.

கால்களை சுவற்றில் ஊன்றி நின்றவன் “வெயிட்! நீயும் நானும் ஒரே படுக்கையில் படுப்பதில் எனக்கு விருப்பமில்லை” என்றான் அவளை கூர்ந்து பார்த்துக் கொண்டே.

அவளோ அவனை கூர்ந்து பார்த்து “தென்?” என்றாள்.

தன் கையிலிருந்த ரிமோட்டை அமுக்க, அவனது அறையின் ஒருபக்கம் இருந்த கதவுகள் திறந்து கொள்ள, அங்கே ஒரு அறை பக்கவாக தயாராக இருந்தது. கண்களாலேயே அதைக் காட்டி “நீ இந்த அறைக்குள் வரும் வரை தான் நாம் கணவன் மனைவி. அதன் பின்னர் உன்னுடைய இடம் அது தான்” என்றான்.

அவளோ இரு கைகளையும் கட்டிக் கொண்டு அவனைப் பார்த்தவள் “என்னை என்ன நினைச்ச? வளர்ந்து வரும் தொழிலதிபர்களில் முக்கியமான ஆள். நீ என்னவோ என்னை டீகிரேட் செய்வது போல இருக்கிறது” என்றாள் கடுமையாக.

இருகைகளையும் பாக்கெட்டில் நுழைத்துக் கொண்டவன் மெல்ல அடியெடுத்து அவளருகே சென்று நின்று “அப்படி நினைத்திருந்தால் நீ இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொண்டிருக்கவே கூடாது. நானும் உன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொள்ளவில்லையே. இதை நாம் முன்னமே பேசி இருக்கிறோம் என்று நினைக்கிறேன்” என்றான் கூர்மையான பார்வையுடன்.

அவளும் நிமிர்வுடன் “எனக்கு விருப்பமில்லாத காரணத்தை உன்னிடம் சொல்லிட்டேன். ஆனா நீ இதுவரை எதனால் இந்த திருமணம் வேண்டாம் என்று சொல்லுகிறாய் என்பதற்கான காரணத்தை சொல்லவே இல்லை” என்றாள்.

அவளது கேள்வியில் இறுகிப் போனவன் “இந்த கேள்விக்கான பதிலை அறிந்து கொள்ள உனக்கு உரிமை இல்லை. அது என்னுடைய பெர்சனல்” என்றான்.

அவளோ விடாது “நான் சொன்னேனே” என்றாள்.

“அது உன் விருப்பம். ஆனா ஒன்று மட்டும் நினைவில் வைத்துக் கொள் எக்காரணம் கொண்டும் உன்னை என் மனைவியாக ஏற்றுக் கொள்ள மாட்டேன். நீ சொன்ன மாதிரி இது ஒரு பிஸ்னெஸ் டீல். இதற்கு ஒரு காலகட்டம் உண்டு. அது முடிந்ததும் நாம ரெண்டு பேரும் நம்ம பார்ட்னர்ஷிப்பை முடித்துக் கொள்ளலாம்” என்றான்.

அதுவரை அவன் மீது எந்தவித உணர்வுகளும் தோன்றாது இருந்தவள் அவனது பேச்சிற்குப் பிறகு அவனை அளவிட ஆரம்பித்தாள். அவன் நின்ற தோரணையும், கம்பீரமும் முகத்தில் இருந்த இறுக்கமும் அவளை சுவாரசியமாக பார்க்க வைத்தது. மனமோ இண்டரெஸ்ட்டிங் என்று சொல்லிக் கொண்டது. தன்னை அறியாமலே அவளை அவளது முடிவிலிருந்து மாற்ற வைத்திருந்தான் சித்தார்த். வீட்டிற்கு வெளியே பல எதிரிகளை வைத்திருந்தவனுக்கு, அறைக்குள்ளேயே ஒருத்தியை உருவாக்கி விட்டோம் என்பதோ அறியாது போனான்.

இதழில் எழுந்த புன்னகையுடன் “ஓஹோ...” என்று கூறி விட்டு மெல்ல தனது அறைப் பக்கம் சென்றவளின் மனம் ‘இதுவரை என் மனம் இப்படியொரு உணர்வை பார்த்தது இல்லை. இதுவும் நல்லாருக்கு. சோ கவுன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ். இந்த பார்ட்னர்ஷிபை லைப் லாங் கொண்டு போக அயம் ரெடி” என்று சொல்லிக் கொண்டு அறைக் கதவை சாத்தினாள்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அவள் சென்றதும் ‘ஊப்’ என்று சொல்லிக் கொண்டவன் தலையைப் பிடித்தபடி கட்டிலில் அமர்ந்து விட்டான். அது அவனது வீடு தான். அவனது அறை தான் என்றாலும் நிச்சயம் அங்கிருக்கும் சுவர்களுக்கு கூட காதிருக்கும் என்பதை அறிவான்.

இந்த நான்கு மாதங்களில் அவளிடம் பேசக் கூட முடியாமல் இருக்கும் நிலையை எண்ணி வருந்தினான். தான் ட்ராப் செய்யப்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்தவனுக்கு எதிரி யார் என்பதே தெரியாமல் இருந்தது. தனது சிறு செயல் கூட அவளை அவர்களுக்கு அடையாளம் காட்டி விடும். அதனால் அவளது உயிருக்கு ஆபத்து நேரலாம் என்றெண்ணி பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியாக இருந்தான்.

அவனது நண்பர்களையோ, கல்லூரியில் எவரையும் தொடர்பு கொண்டாலோ நிச்சயமாக அது அவர்களுக்கு தெரியாமல் போகாது என்பதும் புரிந்தது. நேரடியாக தொடர்பு கொள்ளாமல் ஒரு நெட்வொர்க் தயார் செய்ய ஆரம்பித்திருந்தான் குஜராத்தில் இருக்கும் நண்பர்களை வைத்து. அதற்குள் எதிர்பாராமல் இந்த திருமணம்.

நீரஜ் மல்ஹோத்ரா மருத்துவமனையிலேயே இருந்தார். அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனால் அவர் சொல்லிச் சென்ற வார்த்தைகள் மனதிற்குள் அப்படியே இருந்தது.

கண்மூடி யோசனையில் மூழ்கி இருந்தவனை தோட்டத்தில் கேட்ட சிறு சப்தம். திரைச்சீலையைத் தாண்டி யாரோ அவசரமாக மறைவது தெரிந்தது. அந்த நிழல் உருவம் பதுங்கி- பதுங்கி போவதை பார்த்தவன் அவசரமாக கதவை திறந்து கொண்டு தோட்டத்திற்கு ஓடினான்.

தன்னை யாரும் தொடரவில்லை என்கிற நம்பிக்கையுடன் அந்த உருவம் மெதுவாக ஓரிடத்தில் நின்றது. அதைக் கண்ட சித்தார்த் மெதுவாக பூனை போல நடந்து அவனைப் பிடித்திருந்தான். அமுக்கிப் பிடித்து இழுத்துச் சென்றவன் அவன் போட்டிருந்த முகமுடியைக் கழட்ட, அதன் பின்னே இருந்த முகத்தை பார்த்ததும் அதிர்ந்தான்.

அவனோ “என்னை மன்னிச்சிடுங்க” என்று கரங்களைப் பற்றிக் கொண்டான்.

“ஏன்? நீ எதுக்கு என்னை வேவு பார்க்கணும்?’

அவன் தலையை குனிந்தபடி தனக்கு இடப்பட்டிருந்த கட்டளையை சொல்ல, அதைக் கேட்டு இறுகி நின்றான். தன்னைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றெண்ணி நொந்து போய் நின்றவன், எதிரே இருந்தவனின் தோள்களைப் பற்றி அவன் காதில் சிலவற்றை கூறியவன் “இது நான் சொன்ன மாதிரி தான் போகணும் மாற்றி போச்சு உன்னை தொலைச்சிடுவேன்’ என்று கூறி அவனை அங்கிருந்து விரட்டினான்.

தோட்டத்தின் குளுமை அவனை எதுவும் செய்யவில்லை. மனமோ ஏன் என்று கேள்வி கேட்டுக் கொண்டிருந்தது. அந்நேரம் லேசாக க்ரீச்..க்ரீசென்று சப்தம் வந்தது. மெல்ல திரும்பி பார்க்க அங்கே தாதி ( அப்பா வழி பாட்டி) சக்கர நாற்காலியை உருட்டிக் கொண்டு வந்தார்.

அவரை பார்த்ததும் வேகமாக அவரிடம் சென்றவன் “என்ன தாதி இந்த நேரத்திற்கு?” என்றான் அக்கறையாக.

அவனை பார்த்தபடியே மேலும் முன்னே சென்றவர் “இங்கே வா சித்து” என்று தன்னருகே இருந்த கல்லை காண்பித்து அமரும்படி கூறினார்.

தாதியின் முகத்தை பார்த்துக் கொண்டே அமர்ந்தவனின் மனதில் பல கேள்விகள்.

பேரனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவர் “நீரஜை போய் பார்த்தியா?” என்றார்.

“ம்ம்ம்...பார்த்தேன் பாட்டி. எந்த முன்னேற்றமும் இல்லை” என்றான் வருத்தத்துடன் கூடிய குரலில்.

இருளை வெறித்துக் கொண்டிருந்தவர் “உனக்கும் அந்த நிலை வந்துடக் கூடாதுன்னு தான் பயப்படுறேன் சித்து’ என்றார் எதிர்பாராமல்.

அவர் சொன்னது புரியாமல் “என்ன பாட்டி சொல்றீங்க?”

அவனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தவர் “வர்ஷினி கிட்ட பேசினியா? இங்கே வந்த பிறகு?” என்றார்.

அவரின் கேள்வி அவனுக்கு அதிர்ச்சியை கொடுக்க “பாட்டி!”.

“ம்ம்... நீ பேச முடிந்திருக்காதுன்னு தெரியும்” என்றவரின் பார்வை சுற்றுபுறத்தை ஆராய்ந்து கொண்டிருந்தது.

“உங்களுக்கு எப்படி தெரியும் பாட்டி?”

நீண்ட பெருமூச்சுடன் “தெரியும்! எல்லாமே தெரியும். ஆனா என்னால ஒன்றுமே செய்ய முடியாத நிலை” என்றார்.

“என்ன நடக்குது என்னைச் சுற்றி?”

அவனை நிமிர்ந்து பார்த்தவர் “நீ உன் வாழ்க்கையை காப்பற்றிக்கணும் சித்து. உன்னைச் சுற்றி சிலந்திகள் வலை பின்னிக் கொண்டிருக்கு. அதுவும் எல்லாமே ராட்சத சிலந்திகள். அதுக்கு நீ ஒரு பக்கா கிரிமினல் ஆகணும்” என்றார்.

“என் வாழ்க்கைன்னு சொன்னது...”

“வர்ஷினி தான் உன் வாழ்க்கை. இப்போ நடந்தது எல்லாம் உன்னை வலைக்குள்ள சிக்க வைக்கப் போகும் ஒரு செயல்”.

“என் எதிரி யார் என்றே தெரியாமல் எப்படி போராடி என் வர்ஷினியை எப்படி காப்பாற்றிக் கொள்வது?”

அவனை கூர்ந்து பார்த்தவர் “உன் கண்ணையும், காதையும் விசாலமா திறந்து வைத்து பார். எல்லாமே உன் முன்னாடி தான் இருக்கு. சிறு அசைவை கூட விடாம பார்த்தா உனக்கான விடை கிடைக்கும். நீ உன் தாத்தா மாதிரி. இந்த சதி வலையை உன்னால தகர்க்க முடியும்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
முடிஞ்சாகனும்! இல்லேன்னா உன்னை மாதிரி உன் பையனும் அலைய வேண்டி இருக்கும்’ என்று குண்டை தூக்கிப் போட்டார்.

“என்ன சொல்றீங்க பாட்டி?” என்றான் அதிர்ச்சியுடன்.

“உன்னுடைய இந்த போராட்டம் உங்க தாத்தாவால தான் ஆரம்பிச்சு வைக்கப்பட்டது. அவர் நல்லது நினைத்து ஒன்று செய்ய, அவர் நினைத்ததற்கு மாறாக எல்லாமே தலைகீழாக போயிடுச்சு” என்றார் பழைய நினைவுகளுடன்.

“எனக்கு புரியல பாட்டி”.

“இப்போ இதெல்லாம் உனக்கு புரிய வேண்டாம். என்னால கேஷ்வி கூட உனக்கு நடந்த திருமணத்தை தடுக்க முடியல. ஆனா அதுல இருந்து நீ வெளியே வருவதற்கு உதவ முடியும்” என்றார்.

“வர்ஷினி தான் என் மனைவி பாட்டி. அதை யாராலையும் மாற்ற முடியாது” என்றான் உறுதியாக.

“அவ உன்னுடைய சட்டப்பூர்வ மனைவி இல்ல சித்து. நாளைக்கு உனக்கும் கேஷ்விக்கும் ரிஜெஸ்தர் மேரேஜ் இருக்கு. முதல்ல அதை தடுத்து நிறுத்து. அது நடந்தால் தான் வர்ஷினி உன் வாழ்க்கையில் முழுமையாக வர முடியும்”.

“ஆமாம் பாட்டி” என்றவன் “வர்ஷினி எப்படி இருக்கான்னு கூட தெரிஞ்சுக்க முடியல. எந்நேரமும் என் முதுகின் மீது ஒரு கண் இருந்துகிட்டே இருக்கு” என்றான் வருத்தமாக.

அவனது கைகளைப் பற்றிக் கொண்டவர் “என் பாடி கார்ட் பஜ்ரங் நாளைக்கு கோயம்பத்தூர் போறான். அவன் பார்த்துக்குவான் இனி. நீ இங்கே இருக்கிறவங்களை கவனி. என் பேரன் பொண்டாட்டியை நான் பார்த்துக்கிறேன்” என்றார்.

அவனோ “நீங்க என்ன சொன்னாலும் நான் பேசாம, பார்க்காம இருப்பதுனால் என்னை அவ தவறாக நினைப்பா பாட்டி”.

அவனை பார்த்தவர் அவனது கைகளைத் தட்டிக் கொடுத்து “பரவாயில்லை சித்து. அதுவும் நல்லதுக்கு தான். உனக்கும் அவளுக்குமான இடைவெளி தான் அவள் உயிரை காப்பாற்றும். நீ எல்லாவற்றையும் சரி செய்த பின் அவள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுடு” என்றார் சிரிப்புடன்.

முகம் அப்போதும் சரியில்லாமல் இருக்க “பாவம் பாட்டி அவள். என்னை காதலிக்கும் போது உங்க வீட்டில் என்னை ஏற்றுக் கொள்வாங்கலான்னு கேட்டு பயப்படுவா. அதுவே இப்போ நடந்து போச்சு. நிச்சயமா நானில்லாம ரொம்பவே தவிச்சு போயிருப்பா”.

“அந்த தவிப்பை போக்கனும்னா நீ விரைந்து செயல்படனும். அதே சமயம் விவேகத்துடனும் இருக்கணும். இன்னொன்னும் சொல்றேன் நல்லா கேட்டுக்கோ. கேஷ்வியை சாதரணமா எடை போட்டுடாதே. அவளும் பக்கா பிஸ்னெஸ் வுமன். அதனால நீ போட்டிருக்கிற ஆடைகளை கூட சந்தேகப்பட வேண்டிய நிலையில் இருக்கிற. நாளையில் இருந்து உன்னுடைய அதிரடியை நான் பார்க்கணும்” என்றார்.
 

Chitra Balaji

Active member
Feb 5, 2020
125
68
28
Ennaku therinji அவன் அம்மா தான் இது எல்லாம் பண்றாங்க nu நினைகிறேன்...... யாரு avana வேவு paaththathu..... இந்த keshvi semma kedi ah irukkum போல.... பாட்டி ku எல்லா vishayamum therinji இருக்கு.... அவன் தாத்தா appadi enna பண்ணாரு.... Register marriage ah eppadi தடுத்து நிறுத்த poraan.. Super Super maa
 

Shanbagavalli

New member
Mar 26, 2018
23
4
3
Ennaku therinji அவன் அம்மா தான் இது எல்லாம் பண்றாங்க nu நினைகிறேன்...... யாரு avana வேவு paaththathu..... இந்த keshvi semma kedi ah irukkum போல.... பாட்டி ku எல்லா vishayamum therinji இருக்கு.... அவன் தாத்தா appadi enna பண்ணாரு.... Register marriage ah eppadi தடுத்து நிறுத்த poraan.. Super Super maa
எனக்கும் அவங்க அம்மா மேல தான் சந்தேகம். சித்துவோட அதிரடிக்கு வைட்டிங்ங்ங்ங்