Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript காதலாகி நின்றேன் - ஷெண்பா | SudhaRaviNovels

காதலாகி நின்றேன் - ஷெண்பா

lakshmi

Active member
May 9, 2018
406
60
43
தமிழ் எப்படியோ தன் விருப்பத்தை சொல்லி விட்டான்.
 
  • Like
Reactions: Shenba

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
148
493
63
தமிழ் எப்படியோ தன் விருப்பத்தை சொல்லி விட்டான்.
நன்றிம்மா. பாதி கதை வந்தாச்சு இன்னும் சொல்லாம இருந்தா எப்படி?
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
148
493
63
756

அத்தியாயம் - 21

தமிழ்ச் செல்வனை முதன்முதலாகச் சந்தித்த நாளை, நினைவில் கொணர்ந்தாள்.

‘அண்ணாவுக்குக் கல்யாணம் நிச்சயமாகிடுச்சி… எங்களுக்கெல்லாம் ட்ரீட் கொடுத்தே ஆகணும்’ என்று வற்புறுத்திய நட்பு வட்டத்திடம் இப்போதைக்குச் சிம்பிளாக வைக்கிறேன். கல்யாணம் முடிந்ததும் பெரிய ட்ரீட் வைக்கிறேன்’ என்று சமாளித்து காஃபி ஷாப் ஒன்றிற்கு வந்தனர்.

ஆனால், ஏனடா அங்கு வந்தோம் என்று, இன்றல்லவா வருந்துகிறாள்.

அன்று காஃபி ஷாப்பில் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் கல்லூரி மாணவ, மாணவிகள் தான் இருந்தனர். அதனால் ஆரவாரத்திற்கும் குறைவில்லாமல் இருந்தது.

மூன்று டேபிள்களில் அவர்கள் இடம்பிடித்து அமர, தேவி யாருக்கு என்ன வேண்டுமோ வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டாள். ஆளாளுக்கு ஒவ்வொன்றாக சொல்லி, வெயிட்டரை கலாய்த்துக் கொண்டும், மாற்றி மாற்றி ஆர்டரைச் சொல்லி அவரைக் குழப்பிக் கொண்டும் இருந்தனர்.

“ப்ளீஸ்! யாராவது ஒருத்தர் ஆர்டர் எடுத்துட்டுச் சொன்னா, கரெக்டா கொண்டு வர ஈஸியா இருக்கும்” என்று வெயிட்டர் சொல்ல, “அப்போ தப்பா சொன்னா, கஷ்டப்பட்டுக் கொண்டு வருவீங்களா?” என்று சொல்லி அவரை மண்டை காய வைத்தனர்.

அந்த வயதிற்கே உரிய வேகமும், உற்சாகமும் அவர்களை ஆட்டிப்படைக்க, சிரிப்பும், கும்மாளமுமாக அந்த இடமே களைகட்டியது.

தேவியைப் பொறுத்தவரை, இது வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய வயது. படிக்கும் நேரம் படிப்பு… மற்ற நேரங்களில் விளையாட்டு, போன், நண்பர்களுடன் அரட்டை என்று காலம் கழியும். அவளுக்கு இதுவே போதுமானதாக இருந்தது.

நண்பர்களுடன் வாரத்தில் ஒருநாள் பீச், ஒருநாள் சினிமா, ஒருநாள் ஷாப்பிங்… இதல்லாமல் அவ்வப்போது பிறந்தநாள் பார்ட்டி, கெட் டு கெதர் என்று பொழுதைக் கழிப்பாளே தவிர, மற்ற எந்தக் கேளிக்கைகளிலும், கொண்டாட்டங்களிலும் இறங்கமாட்டாள்.

அவளது நட்பு வட்டத்தில், ஆண்களும் உண்டு. அதேநேரத்தில், அவர்களை ஒரு எல்லையிலேயே நிறுத்தி வைப்பாள். அண்ணனும், தந்தையும் சம்பாதிப்பதை நண்பர்களுடன் சேர்ந்து செலவழிப்பதில் அவளுக்கொரு திருப்தி.

அவர்களுக்கு வேண்டியதையெல்லாம் கேட்டுச் சொல்லிவிட்டு, தன்னிடத்தில் வந்தமர்ந்தாள் தேவி. பக்கத்திலிருந்த தோழிகள் யாரையோ பார்ப்பதும், மெல்லியக் குரலில் பேசிக்கொள்வதுமாக இருக்க, அது என்னவென்று அறிந்து கொள்ளும் ஆர்வம் அவளைத் தொற்றிக் கொண்டது.

அவர்கள் பேசியதிலிருந்து எதிர் டேபிளில் அமர்ந்திருந்த இளைஞனைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று புரிந்து கொண்டாள்.
அவளால் அவனது முகத்தை நேராகப் பார்க்க முடியவில்லை. ஆனாலும், தனது வாட்சைப் பார்ப்பதும், வாசலைப் பார்ப்பதுமாக இருந்தவன், யாருடைய வரவிற்காகவோ காத்திருக்கிறான் என்று மட்டும் புரிந்தது.

“தேவி! ஆள் எப்படி?” தோழி ஒருத்தி அவளது வாயைக் கிளறினாள்.

“முகமே தெரியல… ஆள் எப்படின்னு கேட்டா, என்ன சொல்ல?” என்றாள் அவள்.

“அவ்ளோ தானே” என்ற அவளது தோழி, “ஹலோ! எல்லோ ஷர்ட்… கொஞ்சம் இப்படித் திரும்பறது…” என்று சப்தமாகக் குரல் கொடுக்க, அவனும் சட்டெனத் திரும்பிப் பார்த்தான்.

இதனைச் சற்றும் எதிர்பார்க்காத தேவி, திகைத்துப் போனாள். அவன் திரும்பிப் பார்த்த நேரம், அவளது தோழிகள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருப்பது போல பாவனை செய்ய, தேவி மட்டும் மலங்க மலங்க விழித்தபடி அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சில நொடிகள் அவளை உற்றுப் பார்த்தவன், எதுவுமே நடவாதது போலப் பழையபடி தனது வேலையைப் பார்க்க ஆரம்பித்த பிறகே, அவளால் மூச்சுவிட முடிந்தது.

தன்னைப் பார்த்துச் சிரித்த தோழிகளை மெல்லியக் குரலில் திட்டிவிட்டு, முகத்தைத் துடைத்துக் கொண்டாள். ஓரக்கண்ணால் அவன் என்ன செய்கிறான் என்று பார்த்தாள். அவன் யாருக்கோ போன் செய்து கொண்டிருந்தான்.

“ஹலோ! நான் தமிழ் பேசறேன்” என்றான் அவன்.

மறுமுனையில் பதில் சொன்னார்களோ என்னவோ, அதே தோழி வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல், “நாங்க மட்டும் இங்கிலீஷா பேசறோம்!” என்று சப்தமாகக் கேட்டாள்.

அவன் திரும்பி முறைத்த முறைப்பில், தேவிக்குச் சர்வமும் நடுங்கியது. அவன், அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவளது நல்ல நேரமோ என்னவோ அவன் எதிர்பார்த்திருந்த ஆள் வந்துவிட, தேவி தப்பித்தாள்.

ஆனால், அவள் காஃபி ஷாப்பிலிருந்து வெளியே வரும்போது முதுகைத் துளைத்த அவனது பார்வையை, அவள் உணராமல் இல்லை. அடுத்து வந்த இரண்டு நாட்கள் போகுமிடமெல்லாம் அவன் இருக்கிறானா என்று தேவையில்லாத பயத்துடன் சுற்றிலும் பார்த்துக் கொண்டாள்.

‘கண்ணில் காணாதது கருத்திலும் நிற்காது’ என்ற சொல்லுக்கேற்ப, நான்கைந்து நாட்களில் ஏறக்குறைய அந்நிகழ்ச்சியை மறந்தேவிட்டாள்.

அன்று ரியாவின் பிறந்தநாளென்று அம்மாவிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, ‘என்ன பரிசு வாங்கலாம்?’ என்ற யோசனையுடன் வந்துகொண்டிருந்தாள். சிக்னலிலும் இதே யோசனையுடன் நின்றிருந்தவள், தன்னருகில் வந்து நின்ற வெள்ளை நிறக் காரைத் திரும்பிப் பார்த்தாள்.

‘ஓ! காவல்துறை வாகனமா?’ நினைத்துக்கொண்டே பார்த்தாள்.

டிரைவரின் அருகில் அமர்ந்திருந்தவன் பின்னால் திரும்பி பேசிக் கொண்டிருக்க, அவனது தோளிலிருந்த மூன்று நட்சத்திரங்களையும் ஐபிஎஸ் என்ற பாட்ஜையும் பார்த்தாள்.

‘அசிஸ்டெண்ட் கமிஷனர் வண்டியா இது?’ என நினைத்துக்கொண்டே விழிகளை உயர்த்தியவள் அதுவரை பின்னால் திரும்பிப் பேசிக்கொண்டிருந்தவன், இப்போது கையிலிருந்த பைலில் பார்வையைப் பதித்திருந்தான்.

அவ்வளவு தான் அதுவரை சாதாரணமாக நின்றிருந்தவளுக்கு, கைகாலெல்லாம் ஆட்டம் கண்டது.

‘ஹய்யோ! இவன் போலீஸ் ஆஃபிஸரா? அன்னைக்கு என் நல்லநேரம் தப்பிச்சிட்டேன். இன்னைக்குக் கண்ணில் படாமல் தப்பிச்சிப் போகணும் கடவுளே!’ என்று வேண்டிக்கொண்டாள்.

அவளது வேண்டுதல் பலிப்பது போல சிக்னல் விழவும் வண்டியை ஸ்டார்ட் செய்தவள், அவன் சென்ற திசைக்கு எதிர்த் திசையில் சென்றாள்.

பிறந்தநாள் என்றும் பாராமல் ரியாவை ஒருபிடி பிடித்தாள். அதற்கெல்லாம் அலட்டிக் கொண்டால் தானே அவள்.

“சும்மா ஏண்டி தொணதொணக்கற. உன்னைக் கைல தாங்கற அப்பா, பணம் வேணும்ன்னு கேட்தும் ஏன்னு கேட்காம கொடுக்கற அண்ணன், திட்டினா கூட பொறுமையா பேசுற அம்மான்னு இருக்கற போது உனக்கென்ன பிரச்சனை?” என்றாள் இலகுவாக.

“பிரச்சனையே அண்ணி ரூபத்தில் வீட்ல இருக்கே” என்று கடுப்புடன் சொன்னவளை, ஒருவழியாகச் சமாதானப்படுத்தினாள்.

அதன்பிறகு, எந்தக் காவல்துறை வாகனத்தைப் பார்த்தாலும், அவளுக்குத் திக்திக்கென அடித்துக் கொள்ளும்.

அன்றும் அப்படித்தான் இரவில் லேட்டாக வீட்டிற்கு வரக்கூடாது என்று எச்சரித்த அண்ணியைத் திட்டித் தீர்த்தாள்.

‘அண்ணியாம் அண்ணி. வந்தவுடனே அதிகாரத்தை ஆரம்பிச்சாச்சு. நீ சொன்னா உடனே கேட்கணுமா? நான் லேட்டாதான் வருவேன். நீ என்ன எனக்கு ஒரு வாரம்ன்னு டைம் கொடுக்கறது. என் வீட்லயே யாரும் என்னை எதுக்கும் திட்டினது கிடையாது. எப்போ பாரு அதைச் செய்யாதே… இப்படி இருக்காதே… ரூமை சுத்தமா வச்சிக்கன்னு, உயிரை எடுக்கவேண்டியது.

நீ சொன்னா இதையெல்லாம் கேட்டுடுவேணா? பத்து நாளைக்கு முன்னால கல்யாணமாகி எங்க வீட்டுக்கு வந்த உனக்கே இவ்வளவு திமிர் இருக்குன்னா, இதே வீட்டில் பிறந்து வளர்ந்த எனக்கு… எவ்வளவு இருக்கும். உன்னைக் கடுப்படிக்காம விடமாட்டேன், பார்த்துட்டே இரு’ என்று சஹானாவின் மீதிருந்த கோபத்தில் தனக்குத் தானே முனகிக்கொண்டாள்.
அடுத்து வந்த இருநாட்களிலும் தான் நினைத்தபடியே நடந்துகொண்டவள், மூன்றாவது நாள் ரியாவும் அவளும் மட்டுமாக மாலை காட்சி திரைப்படம் ஒன்றிற்குச் சென்றுவிட்டு, ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

நேரம் கிட்டதட்ட பத்தரையை நெருங்கிக் கொண்டிருந்தது. எதிர்பார்த்ததைவிட இன்று நேரமாகிவிட்டிருக்க, வேகமாக ஸ்கூட்டியைச் செலுத்திக் கொண்டிருந்தவள் சாலை நடுவில் போடப்பட்டிருந்த தடுப்பையும், காவல்துறை வாகனத்தையும் பார்த்ததும், வண்டியின் வேகத்தைக் குறைத்தாள்.

போலீசார் வழக்கமான கேள்விக் கணைகளால் அவளைத் துளைத்தனர். கல்லூரி அடையாள அட்டை, வாகன ஓட்டுனர் உரிமம், என்று அவர்களிடம் கொடுத்தவள், யாரோ பளாரென அறையும் ஓசை கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.
அங்கே, அவனேதான். மீண்டும் பளாரென எதிரிலிருந்தவனது கன்னத்தில் அறைந்துவிட்டு, கோபமாக ஏதோ சொல்லிவிட்டு அவளிருந்த பக்கமாக வந்தான்.

அவளை மேலிருந்து கீழ்வரைப் பார்த்தவன் கண்கள் இடுங்க, “அன்னைக்குக் காஃபி ஷாப்பில்…” அவன் முடிக்கும் முன், “சார் அது நான் இல்ல சார்! என் ஃப்ரெண்ட் சார்!” என்று படபடத்தாள்.
“படிச்ச பொண்ணு மாதிரியிருக்க, அறிவில்ல… ஹெல்மெட்டைத் தலைல மாட்டச் சொன்னா, ரியர்வியூ கண்ணாடிக்கு மாட்டி வச்சிருக்க. கண்ணாடி உடைஞ்சிடும்னா?” என்றபடி ஹெல்மெட்டை கையில் எடுத்தான்.

சட்டென அதை வாங்கியவள், “சாரி சார்! இல்ல சார்!” என்றவள் வேகமாக எடுத்துத் தலையில் மாட்டிக் கொண்டாள்.

அவன் புஸ்சென மூச்சுவிட்டு முறைத்தான்.

“இதுதான் உனக்கு லாஸ்ட் வார்னிங். இன்னொரு முறை இப்படி லேட் நைட்ல சுத்தறதைப் பார்த்தேன், தூக்கி உள்ளே வச்சிடுவேன்!” என்று மிரட்டியவனைப் பயத்துடன் பார்த்தாள்.

“என்ன?” என்றான் மிடுக்குக் குறையாமல்.

“இன்னைக்குத்தான் சார் இப்படி…” என்றவள், அவனது முறைப்பைக் கண்டு பாதியில் நிறுத்தினாள்.

“உன்னை ரெண்டு மாசமாவே வாட்ச் பண்ணிட்டுத்தான் இருக்கேன். இன்னைக்குத் தான் மாட்டியிருக்க. உங்களையெல்லாம் இப்படித் தண்ணி தெளிச்சி விட்டுட்டு, வீட்ல இருக்கவங்க என்ன பண்றாங்க? ஃப்ரெண்ட்ஸ், ஆட்டம் பாட்டம்னு திரியறது… இந்த நேரத்துல எங்கேயிருந்து வர்ற? ஏதாவது சொன்னா பெண்ணுரிமை, சம உரிமைன்னு பேசறது” என்று சீறினான்.

சற்றுநேரம் அமைதியாக நின்றிருந்தாள்.

என்ன நினைத்தானோ, “அட்ரஸை வாங்கிகிட்டு அனுப்பிவிடுங்க” என்று அருகில் நின்றிருந்த பெண் போலீஸிடம் சொல்லிவிட்டு, ரோட்டைக் கடந்து எதிர்த் திசைக்குச் சென்றான்.

விட்டால் போதுமென்று வீட்டிற்குப் புறப்பட்டவளுக்கு, இப்போது சஹானா சொன்ன அனைத்தும் சரி என்றே தோன்றியது. அதன்பிறகு வந்த நாள்களில், இப்போதெல்லாம் நேரத்தோடு வீட்டிற்கு வந்துவிடுவதைப் பற்றி சஹானா கேட்டபோது மனம் உறுத்தினாலும், நடந்ததைச் சொல்லும் தைரியமில்லாமல் அமைதியாக இருந்தாள்.

அன்றுதான் அவனை கடைசியாகப் பார்த்தது. அதன்பிறகு அவனைக் காணும் சந்தர்ப்பம், வர்ஷாவின் வளைகாப்பில் தான் நிகழ்ந்தது. இப்போது ஸ்ரீராமின் நிச்சயதார்த்தத்தில்… இனி, இவனுடனான சந்திப்பு நிச்சயம் இருக்கும். ஆனால், அதை எப்படித் தவிர்ப்பது?

எவ்வளவு யோசித்தும், ‘பதில் மட்டும் கிடைப்பேனா!’ என்று அவளிடம் கண்ணாமூச்சி ஆடியது.

காதல் வளரும்...
 

saru

Active member
Mar 24, 2018
279
26
28
Lovely update
Nallathuki Thane ammuni joldrathu
Ha ha ipo thana vazhiku vandachi
Ana tamilkitaatiyachuuuu
 
  • Like
Reactions: Shenba

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
148
493
63
Lovely update
Nallathuki Thane ammuni joldrathu
Ha ha ipo thana vazhiku vandachi
Ana tamilkitaatiyachuuuu
thank you sister. சொல்றவங்க சொல்ற விதத்தில் சொன்னா, எல்லாம் புரிஞ்சிடும்.
 
Need a gift idea? How about a breakfast sandwich maker?
Buy it!