சித்திரை கொண்டாட்டம் - 3

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,393
616
113
வணக்கம் நட்புக்களே!

போன வருடம் நாம் நடத்திய சிறுகதை போட்டி ஒன்று நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.

எதிர் எதிரே அமர்ந்திருந்த இருவரின் முகங்களிலும் அத்தனை உணர்வு கலவைகள்,அவன் எரிமலையின் கனலை அடக்கியப்படி அவளை கூர்மையாக பார்த்துபேசுவதற்கு முன்னால் என்னிடம் கேட்க மாட்டியா?” என்றான் கடுமையாக, அவளோ உன் கோபம் என்னை பாதிக்காது என்கிற வகையில்ஏன் கேட்கனும்?” என்றாள்.சட்டென்று எழுந்துஇனி, எதற்கும் என்னை எதிர்பார்க்காதேஎன்று கூறிவிட்டு விறுவிறுவென்று அங்கிருந்து சென்றான்.இந்த பத்தி கொடுத்து சுமார் முப்பத்திரண்டு பேர் இதை அவரவர் வழியில் எழுதினார்கள். அந்தக் கதைகளை நாம் இப்போது தளத்தில் பதிவேற்றம் செய்கிறோம். அதை படியுங்கள். அவர்கள் எழுதிய பாணியை விட்டு நீங்கள் வேறுவிதமாக யோசித்து எழுதுங்கள்.


இந்தப் போட்டி எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல. எவர் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். ஆனால் ஒரே ஒரு சிறிய நிபந்தனை. வெளிநாட்டில் இருப்பவர்கள் அவர்களின் உள்ளூர் முகவரியை கொடுக்க வேண்டும். வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகங்களை அனுப்பும் போது எளிதாக இருக்கும்.இந்தப் போட்டி இருபதாம் தேதியில் இருந்து துவங்குகிறது. ஒருவர் எத்தனை கதை வேண்டுமானாலும் எழுதலாம். ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மே மாத இறுதி வரை எழுதலாம்.

இந்தப் போட்டிக்கும் புத்தகங்கள் பரிசாக அளிக்கப்படும்.