நீ வாழவே என் கண்மணி

#1
"நீ வாழவே என் கண்மணி"

சிறுகதையாக படித்த பொழுதே மனதை கனக்க செய்தது இப்பொழுது அந்த கனத்துடன் இதமான தென்றலையும் அளித்தமைக்கு பாராட்டுகள்.

நிர்மலனின் மனம் நிர்மலமடைய கண்மணியின் முடிவு கண்கலங்க செய்துவிட்டது.

செய்திகளில் பார்த்த நமக்கே பதற்றம் ஏற்படும் போர் நிலைகளை நேரில் அனுபவித்தவர்களின் வலி வாழ் முழுமைக்கும் வாளெடுத்து அருத்திடும் என்பதில் இருக்கும் கருத்தினை காண்பது கண்கலங்கிட செய்கிறது.
களம் கண்டவர்கள் இருவரும் கை சேர்ந்ததிதில் நிஜ வாழ்விலும் இது போன்ற தியாகிகள் இணைந்திட வேண்டும்.
நிர்மலனின்
நிச்சிந்தையான
நித்திரை
கண்மணியின்
நிஜ உலகில் !