அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

வேட்டை

#1
சதுரங்க வேட்டை

கயமைகளும் கயவர்களும் கலியுகத்தில் களையெடுக்கப்பட வழியில்லாமல் கற்பனை கதாபாத்திரங்கள் களையெடுப்பதை கண்ணை விரித்து கடைக்கோடியில் இருக்கும் கள்ளமில்லா இதயங்களின் கடும் போராட்டமே வேட்டை.

கதையின் நாயகன், நாயகி என்று எண்ண தோன்றாமல் கல்வி நிலையத்தில் தொடங்கி உலகின் உச்சகட்ட கொடுஞ்செயல் புரியும் சைக்கோக்களின் மறுபக்கத்தை தெரிந்து கொள்ள செய்தமை பாராட்டுக்குரியது.

பெண்ணென்பவள் ஆராதிக்கப்பட்ட நிலை மாறி ,பிணமாகியும் பிணைய கைதிகளாக பிணந்தின்னிகளின் மனம் பிறழ்ந்த நிலைக்கு பிணையாக இருக்கும் கொடுமை எதிரிக்கும் நேர்ந்திடக்கூடாது.

காரியம் கண்ணாயினும் கயலின் கிறுக்குத்தனங்களும் ,கண்மூடித்தனமான காதலும் பாண்டியின் வேட்டையில் தென்றலாக வீசி செல்வது அருமை.

வாழ்ந்தாலும் ,வீழ்ந்தாலும் தூற்றும் தூய உள்ளங்கள் சூழ் இவ்வுலகில் கண்டிப்பை மட்டும் காட்டாமல் நம்பிக்கையும் வைத்திட வேண்டும் என்பதை கார்த்திகேயன் மூலம் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும் .மொத்தத்தில் வேட்டை வேங்கையாக வாழ்ந்திட வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

வெந்திடா
வேதனைகள்
வேள்வித்தீயில்
வீழ்ந்திட வேட்டை
 
Last edited by a moderator:

sudharavi

Administrator
Staff member
#2

தீபி சுடச்சுட விமர்சனம்.......உங்களோட அழகு தமிழில் செமையா கொடுத்து இருக்கீங்க......பாண்டியும் கயலும் உங்களின் உள்ளம் கவர்ந்ததில் மிகுந்த மகிழ்ச்சி......நன்றி தீபி..............