அத்தியாயம் – 18
அதன் பின்னர் என்னென்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான் ரிஷி. கவி, ரிஷி இருவரின் மனமும் துடித்துக் கொண்டிருந்தது. கவியால் எவர் முகத்தையும் நிமிர்ந்து பார்க்க கூட முடியவில்லை. அவர்கள் சொன்ன காரணங்கள் எல்லாம் ஞாயமானதாக இருந்தாலும், அவளின் மனம் போராடிக் கொண்டு தான் இருந்தது.
தங்களது காதலை துறக்க வேறு எதுவும் தடைகள் வந்திருந்தால் போராடி ஜெயித்திருக்கலாம். ஆனால் இப்படியொரு உறவு முறை தங்களுக்குள் தடையாக வரும் என்று முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. இதற்கு மேல் வழியில்லாத போது அதன் போக்கில் போகட்டும் என்று இருவருமே வெறுத்துப் போய் அமைதியாகி விட்டார்கள்.
மாளிகைக்கு திரும்பிய ரிஷி இரவோடு இரவாக தோட்டத்தை சுத்தம் செய்ய ஆட்களை ஏற்பாடு செய்து விட்டான். அவர்கள் வரும் முன்னே லோகநாயகியின் அறை வாசலுக்கு சென்றவன் கதவை தட்டினான். அப்போது மணி ஒன்று .
அந்நேரத்திற்கு கதவு தட்டப்பட்டதும் அடித்துபிடித்து கதவை திறந்து கொண்டு வந்தார் லோகநாயகி. முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு “சித்தி! சீக்கிரம் என்னோட கிளம்பி வாங்க” என்றான் படபடப்புடன்.
“என்னாச்சு ரிஷி?” என்றார் பயத்துடன்.
“வேதநாயகம் மாமாவுக்கு உடம்பு சரியில்லை” என்றான் வருத்தமாக.
“என்ன! உனக்கு யார் சொன்னா?” என்று கேட்டவர் அவசரமாக தனது போனை எடுக்க ஓடினார்.
அவரது பின்னோடு சென்று அவரை தடுத்தவன் “சித்தி! சீக்கிரம் வந்தா மாமாவை ஆபரேஷன் தியேட்டர் கொண்டு போறதுக்கு முன்னாடி பார்க்கலாம். ரொம்ப மோசமாக இருக்காங்களாம்” என்று பரபரத்தான்.
அவனது பதட்டத்தைப் பார்த்து பயந்து போனவர் போனை எடுக்காமலே அவன் பின்னோடு ஓடினார்.
அவசரமாக அவரை காரில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து வெளியேறினான். அவர்களது கார் வெளியேறவும் தோட்டத்தை சுத்தம் செய்ய ஆட்கள் வந்திறங்கவும் சரியாக இருந்தது. லோகநாயகியை அழைக்கும் முன் மித்ராவிடம் பேசி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டு, அங்கு நடக்கப் போகும் வேலைகளை மேற்பார்வை பார்க்கும்படி கூறிவிட்டே சென்றிருந்தான். அதனால் அவள் ஆட்கள் வந்ததும் வேலையை தொடங்க சொல்லி மேற்பார்வையிட ஆரம்பித்தாள்.
லோகநாயகியை தனக்கு தெரிந்த ஒரு மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றான். காரை நிறுத்தியதும் அவசரமாக இறங்கி ஓடியவரை இகழ்ச்சியாக பார்த்துக் கொண்டே பின்னே சென்றான். அது அவனது நண்பனின் மருத்துவமனை.
“எங்கே இருக்கார் ரிஷி?” என்று பரபரத்தார்.
“வாங்க” என்று அழைத்துக் கொண்டு மாடிக்கு சென்றான்.
அங்கே ஆபரேஷன் தியட்டருக்கு முன்னே சென்றவன் “ஒரு நிமிஷம் இருங்க. டாக்டர் கிட்ட கேட்டுட்டு சொல்றேன். நீங்க மட்டும் போய் பார்த்திட்டு வந்திடுங்க” என்றான்.
அவரோ கைகளைப் பிசைந்து கொண்டே “சீக்கிரம் கேளுப்பா! நான் மட்டுமாவது அண்ணனை பார்த்திட்டு வந்திடுறேன்” என்றார் அழுகையுடன் கூடிய குரலில்.
அவர் சொன்னதும் போனை எடுத்து பேசியவன் “நீங்க போய் பார்க்கலாம் சித்தி” என்றான்.
அவசரமாக உள்ளே சென்றவர் அங்கே இருந்த சூழலைக் கண்டதும் பயந்து வெளியேற முயற்சிக்க, அவரை அழுத்திப் பிடித்து ஒருவர் அவரது புஜத்தில் ஊசி ஒன்றைக் குத்த, சற்று நேரத்தில் கண்கள் கிறங்க அப்படியே மயங்கி அவன் கைகளில் சாய்ந்தார். உடனே அங்கிருந்த வேறொரு வழியாக அவரை தூக்கிச் சென்று காரில் ஏற்றினர். காரின் அருகில் நின்றிருந்த ரிஷி ‘பார்த்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு தனது காரில் ஏறி பறந்தான்.
இவர்கள் அவருக்கு எதிராக வேலை செய்து கொண்டிருக்க, அவரோ நாளை காலை ரிஷியின் மாளிகையில் உள்ளவர்களை அலற விட வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான வேலைகளை செய்யத் தொடங்கி இருந்தார்.
அவரின் கார் காட்டுப் பாதையில் பயணிக்க ஆரம்பித்திருந்தது. அவருடைய மனமோ லோகநாயகி தான் சொன்னவற்றை சரியாக செய்திருக்க வேண்டுமே என்று எண்ணத் தொடங்கி இருந்தது.
அந்த இரவு நேரத்தில் ரிஷியின் மாளிகை அல்லோகலப்பட ஆரம்பித்தது. அதிக வெளிச்சத்தை கொடுக்க கூடிய விளக்குகளை கொண்டு வைத்து தோட்டம் முழுவதும் வெளிச்சமாக்கப்பட்டது. தெய்வநாயகி என்ன நடக்கிறது என்று புரியாமல் மித்ராவிடம் சென்று நின்றார்.
“இங்கே என்ன நடக்குது மித்ரா? ரிஷி எங்கே?” என்றார் பதட்டமாக.
செங்கமலோ மௌனமாக அனைத்தையும் பார்த்தபடி நின்றார்.
“அத்தை! ரிஷி தோட்டத்தை சுத்தப்படுத்தி அங்கிருக்கும் கோவிலை திறக்கணும்னு இவங்களை வரவழைச்சிருக்காங்க”.
“என்ன! ரிஷிக்கு அங்கே கோவில் இருக்கிறது தெரியுமா?” என்றார் அதிர்ச்சியாக.
அவரை திரும்பிப் பார்த்தவள் “ஆமாம் அத்தை! நேத்து நான் தெரியாம தோட்டத்துப் பக்கம் போயிட்டேன்.
அப்போ தான் அங்கே கோவில் இருப்பதை பார்த்தேன். நான் சொல்லித்தான் ரிஷிக்கு தெரியும்”.
அவர் முகத்தில் மேலும் பதட்டம் குடிகொள்ள “நீ ஏன் மா அங்கே போன?”
“நல்லா இருக்கேன்னு பார்த்துகிட்டே போனதில் ரொம்ப தூரம் உள்ளே போயிட்டேன் அத்தை. அங்கே ஒரு பெரிய பாம்பு வேற படம் எடுத்து நின்னுதா? அதை பார்த்ததும் பயந்து போய் ஓடி வந்துட்டேன்”.
“என்ன சொல்ற? அந்த பாம்பையும் பார்த்தியா? போச்சு! என்ன நடக்கப் போகுதுன்னு தெரியலையே? இவன் ஏன் இப்போவே இதை செய்யத் தொடங்குறான்”.
“கவலைப்படாதீங்க அத்தை! காலையில இந்த இடமே சுத்தமாகிடும். நாமளும் கோவிலை போய் பார்க்கலாம்”.
அவரோ எதையும் காதில் வாங்காது “ரிஷிக்கு போனை போடு. முதல்ல இதை நிறுத்த சொல்லு” என்றார் பயத்துடன்.
அவரின் பயத்தைக் கண்டு யோசனையாகப் பார்த்தவள் ரிஷிக்கு அழைக்க, அவனோ போனை எடுக்கவில்லை.
“போன் எடுக்கல அத்தை”.
தெய்வநாயகியின் முகம் வெளிறிப் போய் இருக்க, அவசரமாக அங்கிருந்து நகர்ந்தவர் டிரைவரை அழைத்து காரை எடுக்கும்படி கூறினார்.
மித்ராவும் செங்கமலமும் அவரை பார்த்திருக்க, தெய்வநாயகி காரில் ஏறி அமர்ந்ததும். செங்கமலம் வேக நடையுடன் சென்று மற்றொரு பக்கம் கதவை திறந்து காரில் ஏறி அமர்ந்து கொண்டார்.
தெய்வநாயகி அதிர்ச்சியாக பார்க்காமல் “பூர்வகுடி பாட்டி வீட்டுக்குப் போப்பா” என்றார்.
இதை தான் எதிர்பார்த்தேன் என்பது போல அமைதியாக அமர்ந்திருந்தார் செங்கமலம். மித்ராவோ தனது பாட்டியும் காரில் சென்றதை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அந்நேரம் ரிஷியும் அங்கு வந்து சேர்ந்திருந்தான். அவசரமாக அவனருகே சென்றவள் “உங்க போன் என்னாச்சு ரிஷி?”
டாஷ்போர்டில் இருந்த போனை எடுத்துப் பார்த்தவன் “சாரி மித்ரா!” என்றவன் இறங்கி “அம்மா எதுவும் கேட்டாங்களா?”
“ம்ம்...ஆமாம் ரிஷி! அவங்க என்னவோ பயந்து போயிட்டாங்க. இப்போ சுத்தம் பண்ண வேண்டாம்னு சொன்னாங்க. அதுக்கு தான் உங்களுக்கு கால் பண்ண சொன்னாங்க”.
“ஒ..அவங்களுக்கு அங்கே ஏதாவது இருக்கும்னு பயம். அதுதான் வேண்டாம்னு சொல்லி இருப்பாங்க”.
“எனக்கு அப்படி தோணல ரிஷி. அந்தக் கோவிலில் ஏதோ மர்மம் இருக்கு. அத்தையும், பாட்டியும் எங்கேயோ கிளம்பி போயிருக்காங்க”.
“வாட்! இந்த நேரத்தில் எங்கே போனாங்க?” என்று கேட்டு பதட்டமானான்.
“தெரியல ரிஷி! என்னைக் கேட்டால் நாம இப்போ இதை நிறுத்திட்டு காலையில் செய்தா என்ன?”
அவனோ அன்னையின் எண்ணிற்கு அழைத்து ஓய்ந்து போய் “இல்ல மித்ரா! இது இப்போ நடந்தே ஆகணும்” என்றான்.
அந்நேரம் வேதநாயகத்தின் கார் நீலோற்பலத்தில் நின்றிருக்க, இருட்டில் ஓர் உருவம் மற்றொன்றை கைப்பிடித்து தரதரவென்று இழுத்து வந்து கொண்டிருந்தது. அந்த உருவமோ துள்ளி குதித்து அவரிடமிருந்து விடுபட போராடி முடியாமல், அவர் விட்ட அறையில் அவரின் கைகளிலேயே மயங்கி சரிந்தது.
தனது கைகளில் மயங்கி இருந்த செண்பகத்தை தூக்கி பின் சீட்டில் படுக்க வைத்துவிட்டு, காரில் ஏறி அமர்ந்து காரின் கதவுகளை லாக் செய்தவர் காரை எடுத்தார். அவற்றின் முகம் தான் நினைத்ததை செய்து முடிக்க வேண்டும் என்று தீவிரமாக இருந்தது.
தெய்வநாயகியும், செங்கமலமும் இவை எவற்றையும் பற்றியும் யோசிக்காது காட்டுப் பாதையில் முன்னே ஒருவன் வழிகாட்ட வாசமல்லியின் குடிலை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள்.
எங்கும் பூச்சிகளின் ரீங்காரம் அவர்களை பயமுறுத்த, கரடுமுரடான காட்டுப் பாதையில் பாதங்கள் அழுந்த நடந்தவர்கள். ஓரிடத்தில் தீப்பந்தங்கள் நிறைந்திருக்க, அந்த ஒற்றை குடில் மட்டும் ஜெகஜோதியாக கம்பீரத்துடன் நின்றது.
குடிலின் வாயிலை நெருங்கியதும் ஒருவன் கதவை திறந்துவிட, இருவரும் உள்ளே நுழைந்தனர்.
எங்கும் தீப ஒளி நிறைந்திருக்க, கன்னியம்மாள் சிலை நடுநாயகமாக வைக்கப்பட்டிருக்க, அங்கே கண் மூடி தியானத்தில் அமர்ந்திருந்தார் நூற்றாண்டை கடந்த வாசமல்லி. அவரைப் பார்த்தால் அத்தனை வயதானவர் என்று யாராலும் சொல்ல முடியாது.
இருவரும் அவரை தொந்திரவு செய்யாமல் அவரின் முன்னே சென்றமர்ந்தனர். சற்று நேரம் அங்கே அமைதியாக கழிய, பட்டென்று கண்களை திறந்த வாசமல்லி “ம்ம்...வர வேண்டிய நேரம் வந்தாச்சு. அந்த அம்மா வெளிவர வேண்டிய நேரம் வந்தாச்சு” என்றார் அவர்களை பார்த்தபடி.
தெய்வநாயகி எதுவும் பேசாமல் பவ்யமாக அமர்ந்திருக்க செங்கமலம் “தாயே! எங்களை சுற்றி என்ன நடக்குது? எங்கள் பரம்பரைக்கு ஏன் இத்தனை சோதனை?”
அவரை கூர்ந்து பார்த்து “உனக்கு தெரியாது? ஏன் இதெல்லாம் நடக்குதுன்னு?”
அவரின் பார்வை நெஞ்சை தாக்க அப்படியே தலையை குனிந்து கொண்டார்.
நீண்ட பெருமூச்சை விட்டு “செய்த பாவங்கள் எல்லாம் துரத்திக் கொண்டே இருக்கும். நீ அதை மறந்தாலும் காலம் எதையும் மறக்காது. காலமும் தெய்வமும் அதற்கான தண்டனையை வழங்கும்”.
கண்ணோரம் கண்ணீர் துளிகள் நிறைந்திருக்க “குடும்பத்தை காக்க நினைத்தது ஒரு தவறா அம்மா?” என்றார்.
“நீ நினைத்தது தவறில்லை. ஆனால் நடந்ததில் ஒரு கூடு கலைந்து போயிற்று. நீ அறிந்தது பாதி தான். நீ அறியாதது ஏராளம்”.
“அம்மா!” என்றார் அதிர்ச்சியுடன்.
அவர்களின் பேச்சை கவனித்துக் கொண்டிருந்த தெய்வநாயகி எதுவும் புரியாமல் “எனக்கு எதுவும் புரியலையே அம்மா”.
வாசமல்லியின் பார்வை அவரை தழுவிச் செல்ல “உன்னுடைய இந்த குணம் தான் இதுவரை இந்தப் பரம்பரையை காப்பாற்றி இருக்கு தெய்வா” என்றார்.
“என்னம்மா சொல்றீங்க?”
“சொல்றேன்! எல்லாம் சொல்றேன். நாளைக்கு பல வருடங்கள் கழித்து நம்ம கோவிலில் ஒரு திருமணம் நடக்க இருக்கு. அதை நானே நடத்தி வைக்கப் போறேன்”.
இருவருக்கும் அதை கேட்டதும் அதிர்ச்சி.
“ம்ம்ம்...அதுக்கு முன்னே நிறைய விஷயங்கள் நடக்கப் போகுது. இந்த இரவு விடியும் முன் பல சம்பவங்களை சந்திக்கப் போகுது. அது உங்களை எல்லாம் சுழலில் தள்ளும். ஆனால் நாளைய விடியல் நல்லதாக அமையும்” என்றார் கண்களை மூடியபடி.
அதன்பின் அவர் கண்களை திறக்கவே இல்லை. இருவரும் அவருக்காக காத்திருக்க, அப்போது வெளியிலிருந்து உள்ளே வந்த ஒருவர் அவர்களை வெளியே வரும்படி கூறி அழைத்துச் சென்றார்.
கார் அருகே அழைத்துச் சென்றவர் “நீங்க கிளம்புங்க. அம்மா சரியான நேரத்திற்கு வந்து சேருவாங்க” என்றார்.
செங்கமலத்தின் மனம் எதையோ நினைத்து கலங்க ஆரம்பித்திருந்தது. வாசமல்லியின் வார்த்தைகள் அவர் காதில் மீண்டும் மீண்டும் கேட்க ஆரம்பித்திருந்தது. மனமோ உள்ளுக்குள் கதறிக் கொண்டிருந்தது. நடந்தவைகளுக்கு எல்லாம் தானும் ஒரு காரணமாக நிற்கிறோம் என்கிற எண்ணமே அவரை கலங்க செய்தது.
தெய்வநாயகியோ என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று புரியாமல் “என்ன அத்தை சொல்றாங்க பெரியவங்க? எனக்கு எதுவுமே புரியலையே?” என்றார்.
கலங்கிய கண்களுடன் “அவங்களே நாளைக்கு சொல்வாங்க தெய்வா. நீ எதையும் போட்டு குழப்பிக்காதே”.
நாம் ஒன்று நினைத்திருக்க நடந்ததோ வேறொன்றாக இருக்க
அதை அறியாமல் காப்பாற்ற நினைத்தவளால் கூடொன்று
கலைந்திருக்க, துர்மரணமும் நிகழ்ந்திருக்க காலம் பதில்
சொல்லாத பல கேள்விகளுக்கு விடையளிக்க காத்திருக்கிறது!