Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript பர்வீன் பானு | SudhaRaviNovels

பர்வீன் பானு

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
550
404
63
புத்தகம்: பாரிஜாதமே
எழுத்தாளர்: எஸ்.பர்வீன் பானு
பதிப்பகம்: AA publication
பக்கங்கள்:364

846



பாரிஜாதமே – எஸ். பர்வீன்பானு

கையில் கிடைத்தவற்றின் அருமை இருக்கும்போது புரிவதில்லை. இழப்பின்போது தான் அது புரிகிறது.

பாறைகள் மீது அமரும் போது
அதனுள் பதுங்கி இருக்கும் நெருப்பு
கண்ணுக்குத் தெரிவதில்லை;
ஆலமரத்தின் விதைகள்
உள்ளங்கையில் கனப்பதில்லை;
பேரன்பின் வலிமை
இழப்பிற்கு முன் புரிவதில்லை...
-எஸ் பர்வீன்பானு

சிறு வயதிலேயே தாயை இழந்த யயாதிக்கு தந்தையின் பேரன்பு கிடைக்கிறது. ஆனால் அந்த பேரன்பும் ஒரு கட்டத்தில் மறைந்து போக, பற்றிக் கொள்ள இருந்த ஒரே ஆதரவான அக்கா தாரணியிடம் அத்தனை நெருக்கமில்லாமல் போகிறது.

தாயின் ஏக்கத்திலேயே வளர்ந்தவளுக்கு தந்தையின் அன்பு பிடிவாதத்தை மட்டும் கொடுத்திருக்க, வாழ்க்கையை விளையாட்டுத்தனமாகவே கொண்டு செல்லும் பக்குவத்தில் வளர்ந்து விடுகிறாள் யயாதி.

அதே சமயம் தந்தையின் அரவணைப்பிற்கு ஏங்கும் குழந்தையாக ஒவ்வொரு நாளும் அவள் மனம் தவிக்கிறது. அவளுக்கு இருக்கும் ஒரே பற்று அக்காவின் குழந்தை சஞ்சனா.

இதன் நடுவே அந்த வளர்ந்த குழந்தையின் மனதில் காதல் வளர, தன் காதலை அடைந்து விடும் நோக்கத்தோடு பல முயற்சிகளை மேற்கொள்கிறது. அவளின் மனதை கவர்ந்தவனோ ஏற்கனவே காதலினால் சூடுபட்ட பூனை.

இவளைக் கண்டு அவன் ஒதுங்க, இவளோ நான் உன்னை விரும்புகிறேன் அவ்வளவு தான். நீ என்னை விரும்ப வேண்டும் கட்டாயப்படுத்தவில்லை என்கிற நிலையில் நிற்கிறாள்.

இவர்களுக்குள் நடக்கும் உணர்வுப் போராட்டங்களை அழகான வார்த்தை கோர்வையால் நம்மை அவர்களின் உணர்வுகளோடு கலக்க வைத்து, அந்த சுழலில் சிக்கி பரிதவிக்க வைக்கிறார்.

அவரின் ஒவ்வொரு வரியும் ரசிக்க கூடிய வகையில் இருக்கும்.

*மொத்த வாழ்க்கையும் இந்த சின்னச் சின்ன நொடிச் சில்லறைகளின் சேகரம் தான். பல்லாயிரம் நொடிகள் கொண்ட வாழ்க்கைக்கு ஏதோ ஒரு நொடியும், அந்த நொடியில் ஏற்படும் நிகழ்வும், அந்த நிகழ்வில் விளையும் பந்தமே ஆதாரமாய் போகிறது.

*காலத்தை கட்டி வைக்கும் கயிறெல்லாம் யாருக்கும் வாழ்க்கை அன்பு பரிசாய் வழங்குவது இல்லை. ஆனால் அவரவர் செயலும், திறனும், காலத்திற்குள் அழியாச் சுவடாய் தன்னை கட்டி வைத்துக் கொள்ளும் பெரும் வாய்ப்பு மனிதர்களுக்கு உண்டு.

*நல்லவர்களுக்கு நல்லது மட்டும் தான் நடக்கும் என்ற எந்தவொரு குறைந்தபட்ச உத்திரவாதத்தையும் காலமும், கடவுளும் தந்திருப்பதாய் நினைவில்லை.

இப்படி நாவல் முழுவதும் நம்மை ரசிக்க வைக்கும் வரிகளுடன் கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார்.

இங்கு அவரவர் தரப்பு ஞாயத்தை மட்டுமே எண்ணி அடுத்தவரின் உணர்வுகளை காயப்படுத்தி விடுவது உண்டு. மற்றவரின் பக்கம் என்ன இருக்கிறது என்பதை உணராமலே சில நேரங்களில் நல்ல மனிதர்களின் மனங்களை காயப்படுத்தி விடுகிறோம்.

வைகறை வருணன் தன் மனக்காயத்திலிருந்து வெளிவந்து, அவளின் காதலை புரிந்து கொண்டானா? யயா எதிர்பார்த்த பேரன்பும், அரவணைப்பு கிடைத்ததா என்பதற்கு பதில் பாரிஜாதத்தில் இருக்கிறது.

பாரிஜாதம் என்னை மிகவும் கவர்ந்து விட்டது. உணர்வு போராட்டத்தில் ஆழ்த்தி விட்டது பர்வீன்.

ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் இணைத்திருக்கும் அந்தப் பாடல்கள் அத்தியாயத்தின் கனத்தையும், நம் மனதின் கனத்தையும் அதிகரிக்க செய்கிறது.
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
550
404
63
தாழம் பூ - பர்வீன் பானு

849

பாய்மரக் கப்பல் வானதி-நந்தா காதலை சுமந்த அந்த சூறாவளி சுழற்றி அடித்தது நம்மை. தாழம் பூவோ தந்தை மகளின் பாசப் போராட்டத்தில் அவர்களோடு நம்மையும் அனைத்து இன்ப துன்பங்களையும் உணர வைத்தது...கதையின் தொடக்கம் முதல் இறுதி வரை ஒவ்வொரு வரியிலும் அவரின் வார்த்தை ஜாலங்களை பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. படித்து முடித்து பதினைந்து மணி நேரம் கடந்தும் தாழம் பூவின் மணம் என்னை விட்டு அகலவில்லை...என்னை சுற்றி பாப்பா என்று நந்தாவின் குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

யாழி இவளை பற்றி என்ன சொல்ல? இப்படியொரு மகள் இருந்தால் அது வாழ்வின் மிகப் பெரிய வரம்....மனமார்ந்த வாழ்த்துகள் பர்வீன்...
நிறைய எழுதுங்க...அடுத்த கதை எப்போது?
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
550
404
63
வனமாலி – எஸ். பார்வீன் பானு

850
இவரின் எழுத்திற்கு நான் எப்போதுமே மகுடிக்கு மயங்கிய பாம்பாக மாறிவிடுவேன். அதிலும் இந்தக் கதை எனது உறக்கத்தை களவாடி விட்டது. உறக்கம் மட்டுமா? எனது உணர்வுகளை கசக்கிப் பிழிந்து கண்ணீர் சிந்த வைத்திருக்கிறார்கள் மாலியும், அஜயனும்.

கான சிந்தூரி, மாலியின் காதல் பர்வீனின் எழுத்தில் என் இதயத்தில் தேன் தடயவிய இனிப்பாக மிதந்து கொண்டிருக்கிறது. இவர்களின் காதலை இத்தனை அழகியலோடு சொல்ல முடியுமா என்று எண்ண வைத்திருக்கிறார். வனமாலி எப்பொழுதும் வசீகரமானவன். நம்மை மயங்க வைப்பதில் அவனுக்கு அலாதி பிரியம் உண்டு. இந்த வனமாலியும் உங்களை வசீகரிக்க வைப்பான் என்று அழுத்தமாக சொல்கிறேன் .

அழுத்தமான புனைவுகளை தருவதில் பர்வீன் திறமைசாலி. அவரின் சொல்லாடல்களை கண்டு ஒவ்வொரு முறையும் பிரமித்து நிற்கிறேன்.

வாழ்க்கையின் தாத்பரியங்களை போகிற போக்கில் சொல்லிச் செல்வதில் அவருக்கு நிகர் அவரே.

அறிவியல் மூலம் அனைத்தையும் சாதித்து விட முடியும் என்று நம்பும் மனித குலத்திற்கு சவாலான விஷயம் உணர்வு பரிமாற்றம். அதை எந்த அறிவியலாலும் உருவாக்கிட முடியாது. அதை இக்கதையின் மூலம் மிக அழகாக சொல்லி இருக்கிறார்.

இக்கதையில் நடக்கும் சம்பவங்கள் என்றாவது எங்கோ ஒருவருக்கு நடந்தால் நிச்சயமாக முடிவு இது மட்டுமாகவே இருக்கும். எந்த சக்தியாலும் இதயத்தில் பதிந்த காதலை, நினைவலைகளை மாற்ற முடியாது. அதற்கு உதாரணம் அஜயனின் சித்தூர் என்கிற அழைப்பு. அவனது அந்த அழைப்பு அவளது இதயத்தை மட்டுமல்ல நமது இதயத்தையும் அசைத்துப் பார்த்துச் செல்கிறது.
இருநாட்களாக உறக்கத்தை தொலைத்து மாலியைப் பற்றியும், அஜயனை பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கின்றேன். இதுவே அவரின் எழுத்திற்கு கிடைத்த வெற்றி. என்ன வேலை செய்தாலும் என் மனம் மழை நேரம் அவளின் அழைப்பை ஏற்று குடையுடன் செல்லும் மாலியைப் பற்றியே சுற்றி வந்து கொண்டிருக்கிறது. அவர்களின் சின்ன சின்ன நினைவுகளோடு நானும் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

அவர்களின் காதலை சொன்னவிதம் காதலித்தால் இப்படியல்லவா காதலிக்க வேண்டும் என்று தோன்ற வைத்து விட்டீர்கள். அற்புதமான படைப்பை தந்தற்கு மனமார்ந்த வாழ்த்துகள் பர்வீன்...மேன்மேலும் இது போன்ற நிறைய படைப்புகளை புனைவதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
550
404
63
அழுக்கு நோட்டு!- பர்வீன்

வாழ்வின் நிதர்சனத்தை போகிற போக்கில் முகத்திலறைவது போல் சொல்வதில் பர்வீன் கெட்டிக்காரர். அவரின் உவமான உவமேயங்கள் சொல்ல வந்த கருத்தை ஆழமாக பதிய வைத்து விடும் வல்லமை கொண்டவை...பலாப்பழம் போன்று முள்ளோடு இருப்பவரின் உள்ளே இருப்பது இனிமையான மனது என்பதை மிக அழகாக இக்கதையின் மூலம் கூறி இருக்காங்க.

பணம் இருப்பவரிடம் மனம் இருக்காது என்பதை தெளிவாக எடுத்துறைத்திருக்கிறார். வழக்கம் போல ஆழமான கருத்தை ரசிக்க வைக்கும் எழுத்து...மனமார்ந்த வாழ்த்துகள் பர்வீன்...
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
550
404
63
மாதவி - பர்வீன் எஸ் பானு

சில கதைகள், சிலரின் எழுத்து நம்மை அப்படியே இழுத்துக் கொள்ளும். பர்வீன் எடுக்கும் ஒவ்வொரு கருவும் ஆழமாக நம் நெஞ்சில் பதிந்து சிலபல கேள்விகளை எழுப்பிச் செல்லும்.

மாதவியை பார்த்ததிலிருந்து பழைய நினைவுகளில் பயணிக்கும் கதையானது தொண்ணூறுகளில் நாம் அனுதினமும் கவனித்த காட்சிகளை கண் முன்னே கொண்டு வருகிறது.

அநாதரவான பெண்கள் அவர்கள் வாழும் தப்பான வாழ்க்கையில் இந்த சமூகத்தாலும் சுற்றி இருப்பவர்களாலும் தள்ளப்படுகிறார்கள். தன் தாயின் வாழ்வை பற்றி கூறும் இடத்தில் அவளின் வேதனை மனதை தாக்கியது.

ஆண் பெண் நட்பானது அழகான புரிதலுடன் கவிதையாக காட்டப்பட்டிருக்கிறது. அதே நேரம் தனக்கேற்படும் பிரச்சனையில் என்னை யாராவது கல்யாணம் பண்ணிகோங்கடா என்று கேட்கும் இடம் என்னையும் மீறி மளுக்கென்று கண்ணீர் கன்னம் தொட்டு விட்டது.

எத்தனை மாதவிகள் நம்மை சுற்றி! ஆனால் ஓரிடத்தில் கூட பெண்களாகிய நாமே அவர்களுக்காக வருந்தியதில்லை. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தது இல்லை.

வாய்ப்பே இல்லை பர்வீன் ஒவ்வொரு முறையும் உங்கள் கதை படிக்கும் போது என்னுள் ஏக்கம் எழாமல் இருப்பதில்லை...என்னவொரு எழுத்து! மனமார்ந்த வாழ்த்துகள்!