Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript குடும்ப நாவல் விமர்சனங்கள் | SudhaRaviNovels

குடும்ப நாவல் விமர்சனங்கள்

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
550
404
63
புத்தகம்: காற்றே என் வாசல் வந்தாய்
எழுத்தாளர்: ஜே. செல்லம் செரீனா
பதிப்பகம்: புஸ்தகா
பக்கங்கள்:167

வகை: நாவல்




காற்றே என் வாசல் வந்தாய் – ஜே. செல்லம் ஜெரினா


மனித மனங்களின் மற்றொரு முகத்தை இந்தக் கதையில் மிக அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார் ஜெரினா அவர்கள்.

அண்ணன் தங்கை என்று ஒன்றாகப் பிறந்து வளர்ந்தாலும் தான் தன் குடும்பம் என்று வரும்போது அந்த பாசம் அன்பு எல்லாம் மறந்து தன் பிள்ளைகளின் வாழ்க்கையே முக்கியம் என்று சிலரை யோசிக்க வைக்கும். அப்படிப்பட்டவர் தான் ஜோதி.

கஸ்தூரி அழகான ஒரு யுவதி. ஹைதராபாத்தில் வேலை செய்யும் அவளின் மனம் ஏதோவொரு சம்பவத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக அவளின் குடும்பத்தினர் அவளை சரியாக்கும் பொருட்டு அவளுக்காக யோசிக்கின்றனர். அவளின் துணைக்கு பாட்டி முருகாத்தா அங்கு இருக்கிறார்.

கஸ்தூரியின் அத்தை தான் ஜோதி. அவரின் ஒரு சுயநலமான ஒரு முடிவால் கஸ்தூரியின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி இருக்கிறது. அதை மறக்கவே ஹைதராபாத்தில் வேலை செய்கிறாள். அங்கு அவளுக்கு அறிமுகமாகிறான் ரகுநந்தன்.

புதிய ஊரில் தொலைந்து போன பாட்டியை காப்பாற்றி அழைத்து வர, அவனுக்கும் பாட்டிக்கும்மான பந்தம் தொடங்குகிறது. கஸ்தூரியின் அலுவலகத்திலேயே வேலை செய்யும் அவன் அவளை மணக்க விரும்புகிறான்.

அவளின் மனக் காயங்கள் அவனை ஏற்க மறுக்க வைக்கிறது. பாட்டிக்கு அவனுடைய மனம் புரிய, பேத்திக்கு நல்ல வாழ்க்கை அமைந்தால் நல்லது என்று எண்ணுகிறார்.

கஸ்தூரிக்கு செய்த துரோகத்தால் பாட்டியும் தாத்தாவும் தங்களது மகள் குடும்பத்தையே வெறுக்கின்றனர்.


அவளின் வாழ்க்கையில் நடந்தது என்ன? ரகுநந்தனை அவள் ஏற்றுக் கொண்டாளா என்பதை சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் கொடுத்திருக்கிறார்.
 
Last edited:

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
550
404
63
மனித அட்டைகள் - ஜான்சி


851
இந்த அட்டைகள் மிக அபாயகரமானவை....இவர்களிடம் சிக்குபவர்களை ஒரு சொட்டு இரத்தம் கூட மிஞ்சாமல் உறிஞ்சி விடுபவர்கள்...அதிலும் அவர்களின் அதிகாரம் என்ன அலட்டல் என்ன அப்பப்பா...அதை அப்படியே கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார்...அடுத்தவர் முதுகில் சவாரி செய்யும் இவர்கள் அவர்களின் வலியை கண்டு கொள்வதே இல்லை... இந்த நாயகியை போல அவர்களை சகித்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை...அவரவர் வாழ்க்கையை அவரவர் தான் வாழ்ந்தாக வேண்டும்...அருமையான படைப்பு ஜான்சி...இயல்பான ஓட்டத்தில் ஆங்காங்கே சரவணனை இழுத்து வைத்து நாலு அப்பு அப்பினால் என்ன என்று தோன்ற வைத்தது...வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள் ஜான்சி...


அருமையான கதை ஜான்சி நாங்கள் தான் நன்றி சொல்லனும் இப்படியொரு கதையை கொடுத்ததற்கு..