அத்தியாயம் – 6
வேதநாயகம் சென்றதும் ரிஷியை சூழ்ந்து கொண்ட தெய்வநாயகியும், லோகநாயகியும் “என்ன நடக்குது ரிஷி இங்கே? கவி எங்கே?” என்றனர்.
தலையைப் பிடித்தபடி அமர்ந்திருந்தவன் மெல்ல நிமிர்ந்து பார்த்து “தெரியலம்மா! என்னைச் சுற்றி என்ன நடக்குதுன்னு எனக்கு புரியல? நான் காதலிச்ச கவி எனக்கெதிரா திரும்பினா. இப்போ காணாமலும் போயிட்டா. இந்த வேதநாயகம் மட்டும் தான் எனக்கு எதிரியா? இல்ல வேற யாரும் இருக்காங்களான்னு எனக்கு புரியல” என்றான் கண்களில் வலியுடன்.
அவனருகில் அமர்ந்து கொண்ட தெய்வநாயகி “விட்டுடு ரிஷி...யார் எப்படி வேணா போகட்டும். நீ உன் வழியை மட்டும் பார்”.
“அதெப்படி அக்கா! கவியை காணும்னா ரிஷியைத் தானே எல்லோரும் சொல்வாங்க. அவங்களுக்காக இல்லாட்டியும் ரிஷியை இதிலிருந்து காப்பாற்றவாவது கவியை கண்டுபிடிச்சாகனும்” என்றார்.
அப்போது வீட்டின் தொலைப்பேசி அழைக்க, லோகநாயகி சென்று எடுத்தார்.
“ஹலோ!”
“தெய்வாவை கூப்பிடு”
“நீங்க யார்னு தெரிஞ்சுக்கலாமா?”
லோகநாயகிக்கு செங்கமலத்தின் குரலை அடையாளம் தெரியவில்லை. அதிலும் அவர் அதிகாரமாக பேசுவதை கண்டு மனதிற்குள் திட்டிக் கொண்டே தெய்வநாயகியிடம் “அக்கா! உங்களை தான் கேட்கிறாங்க” என்றார்.
மகனை விட்டு வேகமாக எழுந்து வந்தவர் தொலைப்பேசியிடம் காதை கொடுக்க அந்தப் பக்கம் பேசியதும் “அத்த! நீங்களா? எப்படி இருக்கீங்க?” என்றார் உற்சாகமாக அனைத்தையும் மறந்து.
“எல்லோரும் நல்லா இருக்காங்க தெய்வா...நாங்க இன்னைக்கு சாயங்காலம் அங்கே வரோம். நானும் என் பேத்தி மித்ராவும்” என்றார்.
“உண்மையாவா! வாங்க அத்தை” என்று கூறி சிலவற்றை பேசிவிட்டு வைத்தார்.
லோகநாயகிக்கு பேசியது யார் என்று கணிக்க முடியவில்லை. அதனால் யோசனையுடன் தெய்வநாயகியை பார்த்தபடி இருந்தார். ரிஷியோ கவியை பற்றிய சிந்தனையிலேயே மூழ்கி இருந்தான்.
“நம்ம செங்கமலம் அத்தை தான் பேசினாங்க லோகா. இன்னைக்கு சாயங்காலம் அவங்களும் அவங்க பேத்தி மித்ராவும் இங்கே வராங்களாம்” என்றார்.
செங்கமலத்தின் பெயரை கேட்டதுமே முகம் மாறிப் போன லோகநாயகிக்கு அதற்கு பின் பேசியவை எதுவுமே காதில் விழவில்லை.
“லோகா! அத்தைக்கு கீழே இருக்கிற ரூமை ரெடி பண்ணிடுவோம். மித்ராவுக்கு மாடி ரூமை கொடுத்திடுவோம்” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்க லோகாவோ ஒருவித பதட்டத்துடன் “எதுக்கு அக்கா ?” என்றார் குழம்பிய நிலையில்.
“நல்லாருக்கு போ! இவ்வளவு நேரம் சொன்னதெல்லாம் காதுல வாங்கலையா லோகா? அத்தையும், பேத்தியும் கொஞ்ச நாளைக்கு இங்கே தங்குகிற மாதிரி வராங்க. ரூமை ரெடி பண்ணனும்னு சொல்லிட்டு இருந்தேன்” என்றார்.
அவரோ வேறு எதையும் யோசிக்காது “எதுக்கு வராங்களாம்?” என்றார்.
லோகாவை முறைத்து “இதென்ன கேள்வி? அவங்க கிட்ட போய் இப்படி கேட்க முடியுமா? இன்னைக்கு நீ சரியில்ல...கவி விஷயத்தை ரிஷி பார்த்துப்பான். நீ இதை கவனி” என்று அங்கிருந்து அவரை விரட்டி விட்டார்.
செங்கமலத்தின் வரவு லோகநாயகிக்கு பீதியை வரவழைத்தது. எதற்கு இத்தனை வருடங்களுக்குப் பிறகு இந்தம்மா இங்கே வருகிறது என்கிற யோசனையுடன் அங்கிருந்து சென்றார். ரிஷியோ எதையும் காதில் வாங்காமல் கவியை யார் கடத்தி இருப்பார்கள் என்று யோசிக்க ஆரம்பித்திருந்தான்.
அவனது சிந்தனையை கலைத்தவர் “ரிஷி! எதையும் நிதானமா யோசிச்சா விடை கிடைக்கும். ஒரு மணி நேரத்திற்குள் கவி அவர் கிட்ட போகணுமாம் இல்லேன்னா உன்மேல போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுப்பேன்னு சொல்லிட்டு போயிருக்கார்”.
சிறிது நேரம் கண்மூடி யோசித்தவன் சட்டென்று எழுந்து கொண்டு “ம்ம்...அவர் என்ன என்மேல கம்ப்ளைன்ட் கொடுக்கிறது. நானே அவர் மேல கொடுக்கிறேன். இப்போ வரை நான் எங்கே இருந்தேன், யார் கூட இருந்தேன் என்பதற்கான ஆதாரம் என்கிட்டே இருக்கு. கண்டுபிடிக்கிறேன்..இதுக்கு பின்னே யார் இருக்காங்கன்னு” என்றான் உறுதியுடன்.
மகனை மெச்சுதலாகப் பார்த்து “இது தான் என் பிள்ளை. ரிஷி! செங்கமலம் பாட்டியும், மித்ராவும் வராங்க” என்றார்.
அதைக் கேட்டதும் மெல்லிய குரலில் “பவர் மாற்ற வராங்க...தன்னோட பெயரில் இருப்பதை அவங்க பேத்தி மித்ரா பேருக்கு மாற்ற போறாங்க” என்றான்.
“அப்படியாப்பா ரொம்ப சந்தோஷம். லோகாவுக்கு இப்போ தெரிய வேண்டாம். தேவையில்லாம அவங்க கிட்ட முகத்தை காண்பிப்பா...ரொம்ப வருஷம் கழிச்சு வராங்க அதானால நல்லா கவனிச்சு அனுப்பனும். அதோட இந்த வீட்டோட பெரியவங்க அவங்க தான். அதனால மரியாதையாக நடந்துக்கணும்” என்றார்.
“ம்ம்...போன வாரமே எனக்கு அவங்க வக்கீல் மூலியமாக தகவல் வந்துடுச்சு” என்றான்.
மகன் அருகில் சென்றவர் அவனது கைகளைப் பற்றிக் கொண்டு “போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கிறதோட கவி விவகாரத்திலிருந்து விலகிடு ராஜா...உன்னை வேண்டாம்னு ஒதுங்கி போனவங்க பின்னே நீ போகாதே. கடவுள் ஏதோவொரு காரணம் வைத்திருப்பார் எல்லாவற்றிற்கும்...நான் சொல்றதை புரிஞ்சுக்குவேன்னு நினைக்கிறேன்”.
அன்னையின் கண்களை கூர்ந்து பார்த்தவன் “அதெப்படி எல்லாவறையும் மறந்திட முடியும்? உள்ளே இருப்பது மனசா இல்ல கல்லா? இதோ இந்த நிமிஷம் அனைத்தையும் தாண்டி அவ எங்கே யார் கிட்ட கஷ்டப்பட்டுகிட்டு இருக்கிறளோன்னு நினைச்சு மனசு கிடந்தது தவிக்குது. அப்படி எல்லாம் விட்டுட முடியாதும்மா” என்றவன் அன்னையை திரும்பியும் பாராது வெளியேறினான்.
மகனின் முதுகையே பார்த்துக் கொண்டிருந்தவரின் மனம் அடித்துக் கொண்டது. இது நல்லதற்கில்லை. எப்படியாவது அவனது மனதை மாற்றிவிட வேண்டும் என்று தவித்தது. ஆனால் அதற்கான வழி தான் தெரியவில்லை.
ஆட்களை வைத்து மேலே இருந்த அறையை சுத்தம் செய்ய ஆரம்பித்திருந்த லோகநாயகியின் மனமோ செங்கமலத்தை சுற்றியே வந்து கொண்டிருந்தது. பெருசு எதுக்கு வருதுன்னு தெரியலையே? இத்தனை வருஷம் கழிச்சு வருதுன்னா ஏதோ இருக்கு. இந்த வீட்டில் என்னென்ன நடக்கப் போகுதோ என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டே ஆட்களை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்.
அதே நேரம் ரிஷிவர்மா போலீசிடம் வேதநாயகத்தின் மீது புகார் அளித்துக் கொண்டிருந்தான். தான் அன்று எங்கிருந்தேன் என்பதற்கான ஆதரங்களுடன் அனைத்தையும் சம்ர்பித்திருந்தான். அவனிடம் புகாரை வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தவர்கள் வேதநாயகத்தை காண சென்றார்கள்.
தனது வீட்டில் சிந்தனையுடனும், கோபத்துடனும் நடந்து கொண்டிருந்தார் வேதநாயகம். கவியை கடத்தியது ரிஷி தான் என்பதில் அவருக்கு எந்த சந்தேகமும் இல்லை. தான் மிரட்டி விட்டு வந்ததில் அவளை அவன் திருப்பி அனுப்பி விடுவான் என்று நம்பவில்லை. தனது ஆட்டத்தை தடுக்கவே அவன் இதை செய்திருக்கிறான் என்றெண்ணிக் கொண்டார். அதோடு கவியை தன் பிடியிலிருந்து காப்பாற்றவே நிச்சயமாக செய்திருப்பான் என்று உறுதியாக நம்பினார்.
அவரின் யோசனையை கலைப்பது போல வீட்டின் வாயிலில் போலீஸ் ஜீப் வந்து நின்றது. முதலில் திடுக்கிட்டு பின்னர் சுதாரித்துக் கொண்டவர் “வாங்க இன்ஸ்பெக்டர்...என்ன விஷயமா என்ன பார்க்க வந்தீங்க?” என்றார் இயல்பாக காட்டிக் கொள்வது போல.
அவரை ஆராயும் பார்வை பார்த்துவிட்டு “உங்க மேல கம்ப்ளைன்ட் வந்திருக்கு சார்” என்றார்.
உள்ளுக்குள் திடுக்கிட்டாலும் “கம்ப்ளைன்ட்டா? யார் கொடுத்திருக்காங்க என்ன விஷயமா?” என்றார் எதையும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல்.
“ரிஷி வர்மா சார் தான் கொடுத்திருக்கார். உங்க மருமகள் காணாம போயிட்டாங்கன்னு அவங்க வீட்டில் போய் சண்டை போட்டதாகவும், தேவையில்லாம தன்னை இந்த விவகாரத்தில் இழுப்பதாக கொடுத்திருக்கார்”.
“என்ன! அவளை கடத்தி வச்சுகிட்டு என் மேலேயே புகார் கொடுத்திட்டிருக்கானா? அவன் தான் சார் என் மருமகளை கடத்தி வச்சிருக்கான். என்னால உறுதியாக சொல்ல முடியும்” என்றார் கோபமாக.
“உங்க மருமகள் காணாமல் போனதை ஏன் சார் கம்ப்ளைன்ட் பண்ணல?”
அந்தக் கேள்வியில் அதிர்ந்து “நான் புகார் கொடுக்க தான் கிளம்பிகிட்டு இருந்தேன் சார். அதுக்குள்ள அவன் முந்திகிட்டான்” என்றார் பதட்டத்துடன்.
அவரை ஒருமாதிரியாக பார்த்துவிட்டு “அவங்க காணாமல் போய் நான்கு மணி நேரத்துக்கு மேல ஆச்சு.
அதோட ரிஷி சார் வீட்டில் போய் தகராறு பண்ணிட்டு வந்தீங்களே தவிர இந்நேரம் வரை புகார் கொடுக்கல. அது ஏன்னு தெரிஞ்சுக்கலாமா?”
“என்னையே சந்தேகப்படுறீங்களா சார்? நல்லாயிருக்கு சார் உங்க ஞாயம். மருமகளை உயிரோட பறி கொடுத்திட்டு தவிச்சுகிட்டு இருக்கிறவன் கிட்ட வந்து விசாரணை பண்றீங்க. தப்பு பண்ணினவன் புகார் கொடுத்திட்டா அவன் நிரபராதி”.
“அவர் தான் கடத்தினார் என்பதற்கான ஆதராம் எதுவும் இருந்தா கொடுங்க சார். நாங்க மேற்கொண்டு ப்ரோசீட் பண்றோம்”.
“என்கிட்டே அதெல்லாம் இல்லை. ஆனால் என்னால உறுதியாக சொல்ல முடியும். ஏன்னா என் மருமகளும் அவனும் விரும்பினாங்க. அவனோட கெட்ட எண்ணங்களை புரிஞ்சுகிட்ட என் மருமகள் அவனை விட்டு விலகப் பார்த்தாள். அது பிடிக்காம தான் அவன் இதை செய்திருக்கான்”.
அவரின் பதட்டமும், கோபமும் அவரை யோசிக்க வைத்தது.
“அவர் தேவையான ஆதாரங்களை கொடுத்திருக்கார். இன்னைக்கு முழுவதும் யார் யாரோடு இருந்தேன் எந்தெந்த இடத்தில் இருந்தேன்னு எல்லாம் கொடுத்திருக்கார்”.
“எல்லாம் அலிபி தயார் செய்திருப்பான் சார். அவன் கேடி. அவனை நம்பாதீங்க. தயவு செய்து என் மருமகளை கண்டுபிடிச்சு கொடுத்திடுங்க” என்று கெஞ்சலாக முடித்தார்.
“ஓகே சார்! நீங்க ஸ்டேஷனுக்கு வந்து ஒரு புகார் கொடுங்க. நாங்க ஆக்சன் எடுக்கிறோம்” என்று எழுந்து கொண்டார்.
“வரேன் சார்! தயவு செய்து என் மருமகளை சீக்கிரம் மீட்டுக் கொடுங்க” என்றார் உண்மை அன்பு இருக்கும் மாமனை போல.
அதே நேரம் ரிஷியும் தனது ஆட்களின் மூலம் தேடுதல் வேட்டையை தொடங்கி இருந்தான். அவள் எந்த கோவிலுக்குச் சென்றாள், எந்த பாதை வழியாக அவளது கார் பயணித்தது என்று அனைத்தும் விசாரிக்கப்பட்டது.
அவள் சென்ற பாதை வழியாக காரை செலுத்திக் கொண்டு வந்தவன், காரை நடுவழியில் நிறுத்தி விட்டு எந்த இடத்தில் அவள் கடத்தப்பட்டிருக்க கூடும் என்று யோசித்துக் கொண்டு நின்றான்.
அந்நேரம் மதுரை ஏர்போர்ட்டில் இறங்கி காரில் பயணம் செய்து மலையேறி இருந்த மித்ராவின் கார், ரிஷியின் கார் முன்னே வந்து நின்றது. நடுவழியை அடைத்துக் கொண்டு நின்ற காரைப் பார்த்து டிரைவர் ஹாரன் அடிக்க, அதை கவனிக்காது தனது சிந்தனையில் மூழ்கி நின்றான் ரிஷி.
சிறிது நேரம் ஹாரனை ஒலிக்க விட்டு ஓய்ந்து போன டிரைவர் “அம்மா நான் இறங்கி போய் பார்த்திட்டு வரேன்” என்று இறங்கலானார்.
மித்ராவோ “நீங்க இருங்க நான் போய் பார்க்கிறேன்” என்று காரை விட்டு இறங்கி விடுவிடுவென்று அவன் முன்னே சென்று நின்றாள்.
“ஹலோ மிஸ்டர்! காரை நடுவழியில் நிறுத்திட்டு இங்கே என்ன பண்ணிட்டு இருக்கீங்க? தற்கொலை செஞ்சுக்க போறீங்களா? அப்படினா காரை ஓரமா பார்க் பண்ணிட்டு பண்ணிக்கோங்க. போறவங்க வரவங்களுக்காவது தொந்திரவு இல்லாம இருக்கும்” என்று முதுகு காட்டி நின்றவனிடம் சடசடத்தாள்.
ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி கிடந்தவனை கலைத்தது மித்ராவின் குரல். அவசரமாக திரும்பியவன் அருகே நின்றவளை அறியாத பார்வை பார்த்தான். மித்ராவிற்கோ அவன் ரிஷி வர்மா என்பது தெரிந்து போனது.
அவனிடம் வம்பு வளர்க்க எண்ணி “என்ன சார் எந்த இடத்திலிருந்து குதிக்க போறதா முடிவு பண்ணிட்டீங்களா?” என்றாள் கிண்டலாக.
அவளின் பேச்சு கோபத்தை கொடுக்க “ஹலோ யார் நீங்க? உங்களுக்கு என்ன வேண்டும்?”
“ஹப்பாடா!” என்று நெஞ்சில் கைவைத்துவிட்டு “இப்போவாவது கேட்டீங்களே. உங்க கார் நடுவழியில் நிற்குது. அதை எடுத்தால் தான் நாங்க போக முடியும்”.
அதை கேட்டதும்ம் “ஒ..சாரி” என்று வேகம் வேகமாக காரை நோக்கி நடந்தான்.
அவனை ஆராய்ந்து கொண்டே மிக இயல்பாக “மிஸ்டர் ரிஷி! கவின்யாவை எப்படி கடத்தி இருப்பாங்கன்னு கண்டுபிடிச்சிட்டீங்களா?” என்றாள் இதழ்களில் எழுந்த சிரிப்பை அடக்கியபடி.
நடந்து கொண்டிருந்தவன் அதிர்ச்சியுடன் திரும்பி அவளை பார்க்க, அவனருகே சென்றவள் “பார்த்து! பார்த்து! ஹார்ட் நின்னுடப் போகுது!” என்றாள் சிரிப்புடன்.
அவனோ கோபத்தோடு “யார் நீங்க?” என்றான்.
அவன் முன்னே சென்று கைகளைக் கட்டிக் கொண்டவள் மெல்லிய சிரிப்போடு “தி கிரேட் பிசினெஸ்மேன் ரிஷி வர்மாவுக்கு என்னை தெரியாததில் அதிசயமில்லை. ஐயம் மித்ரா பூமிநாதன்” என்று கையை நீட்டினாள்.
அவனோ கடுமையாக முறைத்து “உனக்கு எப்படி கவி காணாமல் போனது தெரியும்? நீ யார் அந்த வேதநாயகம் ஆளா?” என்றான் முறைப்புடன்.
“நான் யார் ஆளுமில்லை. உங்க வீட்டிற்கு வந்திருக்கிற விருந்தாளி” என்றாள் மெல்லிய சிரிப்போடு.
அதுவரை கோபத்தோடு நின்றவன் “ஷ்..” என்று தலையை உலுக்கிக் கொண்டவன் “செங்கமலம் பாட்டியோட பேத்தி..அம் ஐ ரைட்” என்றான்.
மெல்ல தலையசைத்து “என் பேர் கூட தெரியல” என்றாள் இதழ் கடித்து.
“வாங்க போகலாம்” என்று தலையசைத்துவிட்டு காரில் ஏறி அமர்ந்தான். அவளும் தன் காரில் சென்றமர, இரு கார்களும் ஒன்றன் பின் ஒன்றாக அங்கிருந்து ரிஷியின் மாளிகையை நோக்கிச் சென்றது.
ரிஷியே அவர்களை அழைத்து வருவான் என்று எதிர்பார்க்காத தெய்வநாயகி காரிலிருந்து இறங்கிய செங்கமலத்திடம் சென்று கால் தொட்டு ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டவர் மித்ராவை “வாம்மா” என்றழைத்து கைகளைப் பற்றிக் கொண்டார்.
மகனிடம் திரும்பியவர் “நீ எங்கே இவங்களை பார்த்த?” என்றார் அதிசயமாக.
அவன் பதில் சொல்வதற்கு முன் முந்திக்கொண்ட மித்ரா “அவர் எங்கே பார்த்தார் அத்தை. காரை நடுவழியில் நிறுத்திட்டு பள்ளத்தை எட்டி எட்டி பார்த்துகிட்டு இருந்தார். இவரை பார்த்ததுமே ரிஷின்னு கண்டுபிடிச்சிட்டேன். ஆனா பாருங்க அவருக்கு எங்களை தெரியல” என்றாள் விஷமப் புன்னகையுடன்.
ஏனோ அவளது பேச்சும் செயலும் அவனை சங்கடப்படுத்த, உள்ளுக்குள் எழுந்த கோபத்தை மறைத்தபடி மடமடவென்று அங்கிருந்து சென்று விட்டான். அதில் சங்கடபட்டுப் போன தெய்வநாயகி பாட்டியிடம் “உள்ளே வாங்க அத்தை...கவியை யாரோ கடத்திட்டாங்கன்னு செய்தி வந்ததிலிருந்து இப்படித்தான் இருக்கான். தப்பா நினைச்சுக்காதீங்க” என்று சமாதானப்படுத்தி உள்ளே அழைத்துச் சென்றார்.
மாளிகையின் மீது கண்களை சுழலவிட்டபடி உள்ளே சென்ற பாட்டியின் கண்களில் அலட்சியமாக நின்ற லோகநாயகி பட்டார்.
சோபாவில் அமர்ந்ததும் “தெய்வா ஒரு காப்பி கொண்டு வர சொல்றியா? பயணம் பண்ணினது களைப்பா இருக்கு”.
“இதோ சொல்றேன் அத்தை” என்றவர் சமையல்கார அம்மாளை அழைத்து காப்பி போட கூறினார்.
அதை பார்த்த பாட்டி “தெய்வா! எனக்கு அவங்க போட வேண்டாம். அங்கே நிற்கிறாளே அவளை போட சொல்லு” என்று லோகநாயகியை கையை காட்டினார்.
அதில் திடுக்கிட்டுப் போன தெய்வநாயகி அவரை பார்க்க “ஏன் அவ இதெல்லாம் செய்ய மாட்டாளா?” என்று மேலும் வம்பிழுத்தார்.
அதுவரை அலட்சியமாக நின்று கொண்டிருந்த லோகநாயகி வேகமாக அவரின் முன்னே வந்து நின்று “நான் எதுக்கு செய்யணும் உங்களுக்கு? என்ன என்னை வேலைக்காரின்னு சொல்றீங்களா? இதை சொல்லத் தான் இத்தனை வருஷம் கழிச்சு இங்கே வந்தீங்களா?” என்று ஆட ஆரம்பித்தார்.
அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மித்ரா பாட்டியை கண்டிப்பான பார்வை பார்த்தவிட்டு லோகநாயகியின் அருகே சென்று தோளில் கை போட்டுக் கொண்டவள் “அத்தை! பாட்டி உங்களை வேணும்னே வம்பிழுக்கிறாங்க. உங்க கையால காப்பி குடிக்க ஆசை போல இருக்கு...வேற ஒண்ணுமில்ல” என்று சமாதானப்படுத்தினாள்.
அவளின் கையை தட்டிவிட்டு நகர்ந்து நின்றவர் “அக்கா இவங்களுக்கும் எனக்கும் எந்த பேச்சுமில்லை வழக்குமில்லை. பாட்டியும், பேத்தியும் என்கிட்டே வராத வரை நல்லது” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து தனதறைக்குள் நுழைந்து கொண்டார்.
தெய்வநாயகியோ பயத்துடன் செங்கமலத்தை பார்க்க, அவரோ “அவளை விடு! நீ காப்பி சொல்லு” என்றார் எதுவுமே நடக்காத மாதிரி.
அவர்களுக்கு குடிப்பதற்கு தேவையானவற்றை சொல்லிவிட்டு வந்தவர் மித்ராவிடம் “ரொம்ப அழகா இருக்க-டா...சின்ன வயதில் பார்த்தது” என்றார் கைகளை வருடியபடி.
செங்கமலமோ யோசனையுடன் “கவியை கடத்தினது யாருன்னு தெரிஞ்சிடுச்சா? ரிஷிக்கு எதுவும் தெரியுமா?” என்றார்.
மாடியை பார்த்தபடி “இல்லத்தை! அவர் வந்து இவன் தான் கடத்திட்டான்னு சப்தம் போட்டுட்டு போறார். இப்போ வரை அவளை யார் கடத்தினாங்கன்னு தெரியல” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
அவர்கள் பேசுவதை காதில் வாங்கிக் கொண்டிருந்தாலும் மித்ராவின் பார்வை லோகநாயகியின் அறை வாயிலையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தது. அவர் கதவோரம் நின்று அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருப்பதை கண்டு கொண்டாள்.
மெல்ல நடந்து அவரின் அறைக் கதவருகே சென்று அவர் எதிர்பார்க்கும் முன் கதவை படாரென்று திறந்தாள். அங்கே அவள் எதிர்பார்த்தது போல் கதவின் பின்னே அவர் இல்லாமல் போக, பெரிய ஸ்டூல் ஒன்றிருந்திருக்க, அது கதவு அடித்ததில் சாய்ந்து பெரும் சப்தத்தை எழுப்பியது.
அதே நேரம் யாரோ வேகமாக ஓடியது போலவும் தோன்றியது. ஒருவேளை பிரமையோ என்றெண்ணியவளின் பார்வை ஜன்னலோரம் நின்று தன்னை ஏளனமாக பார்த்துக் கொண்டிருந்தவரின் மீது விழுந்தது. அவரின் பார்வையில் ஏதோவொரு செய்தி இருந்தது.’எதையும் ஆராயாதே! ஓடிவிடு’ என்று சொன்னது போல இருந்தது.