Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 9 | SudhaRaviNovels

அத்தியாயம் - 9

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
550
404
63
அத்தியாயம் – 9

பவனின் கார் மதுரையை நெருங்கும் வேளை, தனது காரை மற்றொரு கார் தொடர்வதை கண்டு கொண்டான். அதற்குள் வேதநாயகம் கண்டுபிடித்துவிட்டாரா என்கிற சந்தேகத்துடன் அந்தக் காரை எப்படி தவிர்ப்பது என்கிற யோசனையுடன் ஓட்ட ஆரம்பித்தான்.

அவனை தொடர்ந்தது ஒரு கார் அல்ல, மூன்று கார்கள் என்பதை அவன் உணரவில்லை. அதை உணர்ந்த போது சுற்றி வளைக்கப்பட்டிருந்தான். திடீரென்று நடந்துவிட்ட நிகழ்வில் அதிர்ந்து காரை நிறுத்திவிட, மற்ற காரிலிருந்த ஆட்கள் இறங்கி அவனது கார் கதவை தடதடவென்று தட்ட ஆரம்பித்தனர்.

மயக்கத்திலிருந்த கவிநயாவிற்கு மெல்ல உணர்வுகள் விழித்தெழ, கார் கதவுகள் படபடவென்று தட்டப்படும் சப்தமும், காரின் வெளியே தெரிந்த முகங்களை கண்டு பயந்து போனவள் அவசரமாக எழுந்தமர்ந்து கொண்டாள்.

பவனோ அவர்களை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் காரை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து போய் விட முயன்றான். ஆனால் அவனது காரை மூன்று கார்கள் வழிமறித்து நின்றதால் போக முடியாமல் முன்னேயும், பின்னேயும் போய் வந்ததது.

கவி வேறு விழித்தெழுந்து அழ ஆரம்பித்ததை கண்டதும் “கவி! பயப்படாதே! என்னைப் பார்! உன் பவா வந்துட்டேன். தைரியமா இரு” என்று அவளை சமாதனாப்படுத்த முயன்றான்.

அவளோ கார் கதவு தட்டப்படும் ஓசை கேட்டு உடல் தூக்கிப் போட, இரு கைகளால் காதை அடைத்தபடி கால்களை குறுக்கி கொண்டு கண்ணீர் வழிய அமர்ந்திருந்தாள். சிறிது நேரத்திற்கு பின் அப்படியே மயங்கி சாய்ந்து விட்டாள்.

காரை எடுக்கவும் இயலாமல், வெளியே செல்லவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்த பவனுக்கு அவர்கள் கண்ணாடியை உடைத்து விடுவார்கள் என்கிற எண்ணம் எழுந்தது. எப்படியாவது கவியை காப்பாற்றிவிட வேண்டும் என்கிற எண்ணத்துடன் காரை விட்டு இறங்கிவிட தீர்மானித்தான்.

ஆனால் அவன் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று. எப்போது காரை விட்டு காலை வெளியே வைத்தானோ அந்த நிமிடமே அவனை அவர்கள் சூழ்ந்து கொள்ள, அடுத்த நிமிடம் அவனை அங்கிருந்து அகற்றி விட்டு காரை திறந்து கவியை தங்களது காருக்கு மாற்றி விட்டார்கள். இதை எதிர்பார்க்காத பவன் அவர்களிடமிருந்து விடுபட போராடி முடியாது “டேய்! அவளை விடுங்க! எங்கே கொண்டு போறீங்க?” என்று கத்த ஆரம்பித்தான்.

அப்போது ஒருவன் அவனிடம் “ரொம்ப சப்தம் போடாதீங்க பாஸ்! அவங்க சரியான இடத்துக்கு தான் போறாங்க. உங்களுக்கு தகவல் வரும். எதையும் வெளியே சொல்லாம ஊர் போய் சேருங்க” என்று விட்டு அங்கிருந்து சென்றார்கள்.

அவன் அப்படி சொன்னதும் திகைத்து நின்ற நிமிடம் அவர்களின் கார் அங்கிருந்து செல்ல ஆரம்பித்தது. அதன் பின்னே ஓட முயன்றவனை தடுத்து நிறுத்தியது அலைப்பேசி அழைப்பு. ரிஷி தான் அழைத்திருந்தான். தடுமாற்றத்துடன் அவர்களின் பின்னே போவதா அழைப்பை ஏற்பதா என்று யோசித்து அழைப்பை ஏற்றான்.

“மிஸ்டர் பவன்! நீங்க அந்த கார் பின்னாடி போக வேண்டிய அவசியம் இல்லை. கவி என்கிட்டே தான் வரப் போகிறாள். சோ உங்களுக்கு வேற வேலை இருந்தா பாருங்க”.

பவனோ கடுப்பாகி “அறிவிருக்கா உனக்கு! அங்கிருந்தா அவளுக்கு பாதுகாப்பும் இல்லை, நிம்மதியும் இல்லைன்னு தானே இங்கே அழைச்சிட்டு வந்தேன். மறுபடியும் அங்கே கொண்டு வச்சு அவளை கஷ்டப்படுத்த போறியா?” என்று சீறினான்.

அவனது பேச்சில் கடுப்பாகி போன ரிஷியும் “இத்தனை நாள் அவள் இருந்தது வேதநாயகத்திடம். இனி, இருக்கப் போவது என்னுடைய பாதுகாப்பில். நிச்சயம் என்னுடைய பாதுகாப்பில் இருப்பது அவளுக்கு கஷ்டம் கிடையாது பவன். அவள் என்னுடைய காதலி. அதனால வார்த்தைகளை பார்த்து பேசு” என்றான் மிரட்டலாக.

“வேண்டாம் ரிஷி! அவளை நிம்மதியாக இருக்க விடு. கொடைக்கானலில் இருக்கும் வரை அவளுக்கு அந்த நிம்மதி இருக்காது”.

“நீ அவளுக்கு மாமன் மகனாக இருக்கலாம் பவன். ஆனால் ஷி இஸ் மைன். சோ எங்க வாழ்க்கையில் தலையிடாதே” என்று கூறி போனை அணைத்து விட்டான்.

பக்காவாக ப்ளான் செய்து அவளை மதுரைக்கு அழைத்து வந்து விட்டதாக எண்ணி இருந்தவனுக்கு ரிஷியின் செயல் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. ஏனோ அவனது உள் மனம் கவி அங்கே செல்வதை விரும்ப மாட்டாள் என்று கூறியது.

ஏமாற்றமும், கோபமும் ஒருங்கே எழ, அந்த ஆத்திரத்துடன் காரை எடுத்துக் கொண்டு மீண்டும் மலையேற தொடங்கினான்.

அந்நேரம் வேதநாயகத்திற்கு கவி கடத்தப்பட்ட செய்தி தெரிவிக்கப்பட்டது. அதில் அதிர்ந்து போனவர், அங்கே காவல் இருந்தவர்களை எல்லாம் தனது கோபத்தால் மிரட்டிக் கொண்டிருந்தார். இப்போது இதை யார் செய்தார்கள் என்று அவரால் அனுமானிக்க முடியவில்லை. ஏனென்றால் ரிஷி என்ன காரியத்தில் ஈடுபட்டிருக்கிறான் என்று அறிந்தவரால் அவனை சந்தேகப்பட முடியவில்லை . அதே சமயம் பவனை இதில் சம்மந்தபடுத்தி பார்க்கவும் முயலவில்லை. மண்டை காய்ந்து போய் அமர்ந்திருந்தார்.

கவின்யா தன்னிடத்தில் வந்துவிட்டாள் என்கிற நிம்மதியில் மீண்டும் தனது தேடலை துவங்கினான் ரிஷி. அவனால் அன்று கண்ட காட்சியை மறக்க முடியவில்லை. அந்த வீட்டிற்கும் தனது வாழக்கைக்கும் ஏதோவொரு தொடர்பிருக்கிறது என்று மனம் கூறியது. அதிலும் வக்கீலிடம் பேசிய பின்பு அது உறுதியானது. அவருக்கும் விஷயம் தெரிந்திருக்கிறது. அனால் என்ன காரணத்தினாலோ அதை மறைக்கிறார் என்று புரிந்து போனது.

அந்த வீட்டைப் பற்றிய தேடலில் எந்தப் பக்கம் போனாலும் முட்டுச் சந்தாகவே இருந்தது. பல வருடங்களாக வாழ்ந்து வருபவருக்கு கூட அப்படியொரு மாளிகை இருப்பது தெரியாத விஷயமாக இருந்தது.

சிந்தனையுடன் தனது சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்தவனை கலைத்தது அலைப்பேசி. மித்ரா தான் அழைத்திருந்தாள்.

“சொல்லு மித்ரா”

“இன்னைக்கு பத்து மணிக்கு ரிஜெஸ்ட்ரார் ஆபிஸ் போகணும் ரிஷி. பதினொரு மணிக்கு போர்ட் மீட்டிங் அரேஞ் பண்ணிடுங்க. இன்னைக்கே நான் ஆபிஸ் வந்திடுறேன்”.

“ம்ம்...நீ வரும்போது பாட்டியை அழைச்சிட்டு வந்துடு...அவங்க ஆபிசுக்கும் வரணும்”.

“ம்ம்...ஓகே டன்”.

போனை அணைத்தவள் பாட்டிக்கு மெச்செஜ்ஜில் தகவல் அனுப்பி விட்டு, லோகநாயகிக்கு தாங்கள் எங்கு செல்கிறோம் என்று தெரிவிக்க வேண்டாம் என்று முடிவெடுத்துக் கொண்டனர். லோகநாயகியோ அவர்கள் இருவரும் வீட்டிலேயே இருப்பது இடைஞ்சலாக இருப்பதாக கருவிக் கொண்டிருந்தார்.

ரிஷியிடம் பேசிய பிறகு செங்கமலமும், மித்ராவும் வெளியே கிளம்ப தயாராகிக் கொண்டிருப்பதை கண்டவர் அவர்களிடம் கேட்க முடியாமல் தெய்வநாயகியிடம் சென்று நின்றார்.

“அக்கா! பெருசும் சிறுசும் எங்கே கிளம்புதுங்க?”

அவரை முறைத்த தெய்வநாயகி “இப்படி பேசாதேன்னு சொன்னா கேட்கிறியா?” என்று அதட்டினார்.

“அதை விடுங்கக்கா. எங்கே கிளம்புறாங்க ரெண்டு பேரும்?”

சொல்லாமல் விடமாட்டார் என்றெண்ணி “மித்துவோட பிரெண்ட் யாரோ இங்கே இருக்காங்களாம். அவங்களை பார்க்க தான் போறாங்க”.

“ஒ...ஹப்பா கொஞ்ச நேரமாவது நிம்மதியா இருக்கலாம். ஆமாம் இதுங்க ரெண்டும் எதுக்கு இங்கே வந்து உட்கார்ந்திருக்குங்க? எதுவும் சொத்து வாங்க போறாங்களா?”

அவரின் தொடர் கேள்வியால் கடுப்பானவர் “போதும் லோகா...அவங்க கிட்ட போய் இதெல்லாம் கேட்க முடியுமா? அனாவசியமா எதையும் பேசி வைக்காதே” என்று கூறி அங்கிருந்து வெளியேறினார்.

மித்ராவும், செங்கமலமும் வெளியேறியதும் லோகா போனை எடுத்துக் கொண்டு வேகமாக அறைக்குள் நுழைந்து கொண்டார். யாருக்கோ அழைத்து அவர் அவர்கள் வெளியே சென்ற தகவல்களை பகிர்ந்து கொள்ள, அந்தப் பக்கம் வந்த செய்தியில் அதிர்ந்து போய் நின்றார்.

சரியாக பத்து மணிக்கு ரிஷியும் வந்துவிட பவர் மாற்றும் வேலை முடிந்தது. வேதநாயகத்திற்கு போர்ட் மெம்பராக பதினொரு மணிக்கு ஆபிஸ் வரும்படி தகவல் அனுப்பப்பட்டது. திடீரென்று எதற்காக போர்ட் மீட்டிங் நடைபெறவிருக்கிறது என்று புரியாமல், கவி தன்னிடமிருந்து காணாமல் போன குழப்பத்துடனும், கோபத்துடனும் ஆபிசிற்கு கிளம்பிச் சென்றார்.

அங்கே அனைத்து போர்ட் மெம்பர்களும் வந்திருக்க, வழக்கம் போல தனது திமிருடன் “யாரை கேட்டு திடீர்னு மீட்டிங் அரேஜ் பண்ணி இருக்க ரிஷி? அப்படி என்ன முக்கியமான விஷயம்?”

மித்ராவையும், செங்கமலம் பாட்டியையும் வேறொரு அறையில் அமர்த்திவிட்டு தான் ரிஷி மற்றவர்களுடன் கான்பரன்ஸ் ரூமில் அமர்ந்திருந்தான்.

அவரது கேள்வியில் இதழில் புன்னகை எழ “சொல்றேன்! அதுக்கு தானே எல்லோரையும் கூப்பிட்டிருக்கேன்” என்றவன் அனைவரையும் பார்த்தான்.

எல்லோர் முகத்திலும் அந்த கேள்வி இருந்தது.

“எல்லோருக்கும் இதே கேள்வி இருக்கும்னு தெரியும். உங்க எல்லோரிடமும் முக்கியமான ஒருவரை அறிமுகப்படுத்த தான் இந்த மீட்டிங். எங்கள் குடும்பத்திலேயே பலரிடம் இந்த கம்பனிக்கான ஷேர் இருக்குன்னு உங்களுக்கு எல்லாம் தெரியும்” என்றவனின் பார்வை வேதநாயகத்தை தொட்டு மீண்டது.
அவன் பேச ஆரம்பித்ததும் அலட்சியமாக அமர்ந்திருந்தவர் அவன் ஷேர்ஸ் பற்றி பேசியதும் நன்றாக நிமிர்ந்தமர்ந்து கவனிக்க ஆரம்பித்தார்.

“அந்த ஷேர்ஸ் எல்லாமே என்கிட்டே தான் இருந்தது. அதாவது எனக்கு பவர் எழுதி கொடுத்திருந்தாங்க.
ஆனா இப்போ அவங்களே ஒரு போர்ட் மெம்பரா நம்ம கம்பனியில் உள்ளே வரணும்னு விரும்புறாங்க” என்றவன் வேதநாயகத்தைப் பார்த்தான்.

அவன் சொன்னதின் அர்த்தம் புரிய உள்ளுக்குள் கொதிப்படைந்தவர் “இதென்ன புதுசா இருக்கு” என்றார் கோபத்தை அடக்கிய குரலில்.

அவன் பதிலளிக்கும் முன் வேறொருவர் “நல்லது தானே!” என்று விட்டார்.

அவரை நன்றாக முறைத்த வேதநாயகம் “எங்களை எல்லாம் கேட்காமல் எதுவும் செய்யக் கூடாது” என்றார்.

ரிஷியோ அவரின் பேச்சை காதில் வாங்காதது போல “என் பேரில் பவர் மாற்றப்பட்டு அவங்களே உரிமையாளரா நம்ம கம்பனிக்கு வந்திருக்காங்க” என்றவன் அலைப்பேசியை எடுத்து மித்ராவையும், பாட்டியையும் அங்கு வரக் கூறினான்.

அடுத்த ஐந்தாவது நிமிடம் பாட்டியை முன்னே அனுப்பிவிட்டு உள்ளே நுழைந்தாள் மித்ரா. கெட்டி ஜரிகை போட்ட பட்டுப்புடவை கட்டி கோல்டன் பிரேம் கண்ணாடி போட்டு கெத்தாக உள்ளே நுழைந்தார் செங்கமலம். அவரை தொடர்ந்த மித்ராவும் சின்னஞ்சிறிய பார்டர் வைத்த பட்டுபுடவை அணிந்து கம்பீரமாக வந்து அனைவருக்கும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

வேதநாயகத்திற்கு உயரழுத்த மின்கம்பியை மிதித்த உணர்வு செங்கமலத்தை பார்த்து. இதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் இருவரும் இதற்காக தான் வந்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

பாட்டியும், பேத்தியும் அவரை தவிர மற்றவர்களிடம் எல்லாம் பேசினார்கள். ஒரு சிறு பார்வை கூட அவர் பக்கம் திருப்பாமல் அனைவரிடமும் பேசினார்கள். உள்ளுக்குள் எழுந்த கோபத்தை நறநறவென்று பற்களை கடித்தபடி அடக்கிக் கொண்டு “இந்த கம்பனிக்கு விருந்தாளியாக வந்திருக்கிற உங்கள் இருவரையும் வரவேற்கிறேன்” என்றார் கிண்டலான குரலில்.

பாட்டி நாற்காலியில் நன்றாக சாய்ந்தமர்ந்து கொண்டவர் கண்ணாடியை லேசாக உயர்த்திப் பிடித்து போட்டுக் கொண்டு அவரை ஆழ்ந்து பார்க்க, மித்துவோ “இந்த கம்பனியின் முக்கிய முடிவுகளை எடுக்க கூடிய ஷேர் ஹோல்டராக நாங்க வந்திருக்கோம் விருந்தாளிகளாக இல்லை...சோ வார்த்தைகளை அளந்து பேசுங்க மிஸ்டர் வேதநாயகம்”.

அவளின் பேச்சில் கோபமடைந்தவர் மற்றவர்களை பார்த்து “இத்தனை வருடங்களாக இந்த கம்பனி நிர்வாகத்திற்காக பாடுபட்ட நம்மளை பார்த்து கேள்வி கேட்க இவங்க யார்? ஏன் எல்லோரும் பேசாம அமைதியாக இருக்கீங்க?” என்று சப்தம் போட்டார்.

அதுவரை அவரது ஆட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ரிஷி மெல்ல எழுந்து கொண்டு “யாரும் பேச மாட்டாங்க. ஏன்னா ஒரு காலத்தில் இந்த கம்பனியின் மொத்த ஷேர்சும் இருந்தது இவர்களிடம். இந்த கம்பனியின் வளர்சிக்காக பாடுபட்டவர் தான் செங்கமலம் பாட்டி. இதெல்லாம் உங்களுக்கு தெரியாம இருக்காது. சில காரணங்களால எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்திட்டு இங்கே இருந்து போயிட்டாங்க. இந்த கம்பனியில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் இது தெரியும்” என்றான் கூர்மையான பார்வையுடன்.

ஏற்கனவே கவி காணாமல் போனது, செங்கமலத்தை நேருக்கு நேர் சந்தித்தது...அதிலும் கம்பனியில் அதிகாரமாக பேத்தியுடன் வந்தமர்ந்தது என்று அவரை பதட்டமடைய வைத்தது. தான் என்ன செய்கிறோம் என்று யோசிக்காமல் அருகே இருந்த பேப்பரை எடுத்து ரிஷி மீது வீசிவிட்டு “இவங்க இரண்டு பேருக்கும் இங்கே இடமில்லை. மரியாதையா இங்கிருந்து அனுப்பு” என்று மிரட்டிவிட்டு கதவை அடித்து சாத்திவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

அவர் சென்றதும் பாட்டியும் பேத்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு ரிஷியைப் பார்க்க அவனோ அவரின் கோபம் கண்டு உள்ளுக்குள் யோசித்தாலும் அதை வெளிக்காட்டாது “சாரி பார் தி இன்கன்வீனியன்ஸ்...மிஸ். மித்ரா நாளையிலிருந்து ஸ்வான் லேக் க்ரூப் ஆப் கம்பனீஸின் சிஎப்ஒ (சீப் பினான்சியல் ஆபிசர்) ஆக இருப்பாங்க” என்று அறிவித்தான்.

இந்த முடிவு என்று கொடைக்கானல் வர வேண்டும் என்று தீர்மானம் ஆனதோ அன்றே போன் மூலியமாக ரிஷியிடம் பேசி இந்த பதவி தனக்கு வேண்டும் என்று கேட்டுவிட்டாள். அதற்கு மற்ற ஷேர்ஹோல்டர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்பதால் வேதநாயகம் அறியாதபடி ரகசிய கூட்டம் போட்டு அனைவரின் சம்மதத்தோடு ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. வேதநாயகத்திடம் அந்த கம்பனியின் பங்குகள் பத்து பர்சென்ட் தான் இருக்கிறது. ஆனாலும் இந்த முடிவை எதிர்க்க அவருக்கு அதிகாரம் உண்டு.

அந்த மூவருக்கும் இனி தங்களின் கம்பனி பற்றிய செய்திகள் தான் தலைப்பு செய்தியாக அமையும் என்று நன்றாக தெரியும்.