சினிமா செய்திகள்

sudharavi

Administrator
Staff member
#1
இங்கு சினிமா செய்திகளை நமக்காக பதிவிடுவாங்க செல்வி பாண்டியன் அவர்கள்.
 
#2
`என் சப்போர்ட் மகனுக்கா... மருமகளுக்கானு தெரியணுமா?’’ நடிகை பூர்ணிமா பாக்யராஜ்
இந்த வருடச் சந்திப்பு, கடந்த நவம்பர் 10-ம் தேதி, சென்னையிலுள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடந்துச்சு. நானும் என் கணவரும் கலந்துகிட்டோம்; நண்பர்கள் பலரும் கலந்துகிட்டாங்க. சந்தோஷம், நெகிழ்ச்சினு மறக்க முடியாத நாளாக அமைந்தது."பிரபல நடிகை பூர்ணிமா பாக்யராஜ், சின்னத்திரை பயணத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறார். சன் டிவி `கண்மணி' சீரியலில், முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். தன் நடிப்பு, குடும்ப பர்சனல் விஷயங்களை மகிழ்ச்சியுடன் பகிர்கிறார்.
``முதல்முறையாக சின்னத்திரைப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறீங்க. இது, எப்படி அமைந்தது?"
``கல்யாணத்துக்குப் பிறகு 29 வருஷம் நடிக்கவேயில்லை. பிறகு, கடந்த அஞ்சு வருஷமா செலக்டிவா நடிச்சுகிட்டு இருக்கிறேன். சின்னத்திரை வாய்ப்புகள் நிறைய வந்தாலும், இப்போதான் அதற்கான சூழல் அமைந்திருக்கு. நல்ல கதை, என் ஃப்ரெண்டு சுஜாதாவின் தயாரிப்பு, சன் டிவினு நிறைய விஷயங்கள் ஒருசேர அமைஞ்சதால, `கண்மணி' சீரியல்ல நடிக்க ஒப்புக்கிட்டேன். இந்தப் பயணம் நல்லா போயிட்டு இருக்கு".``நடிப்புக்குப் பெரிய இடைவெளி கொடுக்க என்ன காரணம்?"
``1980-களில் ரொம்ப பிஸியா நடிச்சுக்கிட்டு இருந்தப்பயே கல்யாணம் பண்ணிட்டேன். கணவர் சினிமா துறையிலதான் இருக்கார் என்பதால, எனக்கு அப்போ நடிக்காம இருக்கோமேனு வருத்தம் வரலை. குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட்டு, ரொம்ப மகிழ்ச்சியா இருந்தேன். அப்போ நான் மிஸ் பண்ணின நிறைய படங்கள், பெரிய ஹிட்டாச்சு. பையனும் பெரியவனாகிட்டான்; கமிட்மென்ட் அதிகம் இல்லை என்பதால, பிடித்த கேரக்டர்கள்ல நடிக்கலாம்னு முடிவெடுத்தேன். 29 வருட இடைவெளிக்குப் பிறகு, 2013-ம் வருஷம் `ஆதலால் காதல் செய்வீர்' படத்துல நடிச்சேன். சில மாதங்களுக்கு முன் வெளியான `மோகினி' படத்தில் நடிச்சேன். இப்போ ஜோதிகாவுடன் ஒரு படம் உட்பட சில படங்களில் நடிக்கவிருக்கிறேன். முன்பு, ஃபேஷன் டிசைனிங் பிசினஸ் பண்ணிட்டிருந்தேன். இப்போ பிசினஸ்லேருந்து விலகிட்டேன். ஃபேஷன் டிசைனிங் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால, எங்க குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சிலருக்கு மட்டும் செலக்டிவா டிசைனிங் செய்துகொடுக்கிறேன்".
`மகனும், மருமகளும் டான்ஸர். உங்களுக்கு டான்ஸ் சொல்லிக்கொடுப்பாங்களா?"

``1980-களில், டான்ஸ்ல அதிக ஆர்வத்துடன் இருந்தேன். பிறகு, டான்ஸ்ல டச் இல்லாம போச்சு. பையன் சாந்தனு மற்றும் மருமகள் கீர்த்தி ரெண்டு பேரும் சூப்பரா டான்ஸ் ஆடுவாங்க. அவங்கதான் நான் தொடர்ந்து நடிக்க உத்வேகப்படுத்துறாங்க. கீர்த்தி, புது டான்ஸ் இன்ஸ்டிட்யூட்டை விஜயதசமியின்போது தொடங்கினாங்க. அப்போ நான், குஷ்பு உள்ளிட்ட ஃப்ரெண்ட்ஸ் பலரும் அந்த இன்ஸ்டிட்யூட்ல, `சின்ன மச்சான்' பாட்டுக்கு டான்ஸ் ஆடினோம். அந்த வீடியோ வைரல் ஆச்சு. ரொம்ப நாள் கழிச்சு, நண்பர்களுடன் சேர்ந்து டான்ஸ் ஆடினது மகிழ்ச்சியா இருந்துச்சு. ஓய்வுநேரம் கிடைச்சா, நிச்சயம் டான்ஸ் கத்துப்பேன். குறிப்பா, `உனக்கு எதுக்குமா டான்ஸ்?'னு பையன் விளையாட்டா சொல்ல வாய்ப்பிருக்கு. அதனால, மருமகள் கீர்த்திகிட்ட நிச்சயம் டான்ஸ் கத்துப்பேன்".


``நீங்க வீட்டில் எப்படி, மகன் மற்றும் மருமகளில் யாருக்கு அதிகம் சப்போர்ட் பண்ணுவீங்க?"

``வீட்டில் பொறுப்பான இல்லத்தரசி. மருமகள் கீர்த்தி, என் மகள்போல. டிரஸ் உட்பட, இந்தக் காலத்துக்கு ஏற்ப புது ட்ரெண்ட்டான விஷயங்களைக் கீர்த்திதான் எனக்குச் சொல்லிக்கொடுப்பாங்க. கணவர், நான், மகன், மருமகள்னு நாங்க நால்வரும் ஃப்ரெண்ட்ஸ் போலவே பழகுவோம். மகன் மற்றும் மருமகள் ரெண்டு பேரிடமும் எந்த விஷயத்தையும் நாங்க வலியுறுத்த மாட்டோம். அவங்களோட நல்ல பயணத்துக்கு, ஆலோசனை கொடுப்போம்; தப்பு யார் செஞ்சாலும் கண்டிப்போம். இருவருக்கும் ஒரேவிதமான பாசத்தைத்தான் நானும் என் கணவரும் காட்டுவோம்".

``நட்சத்திரத் தம்பதியாக இருக்கும் திருமண பந்தம் பற்றி..."

``இது பலருக்கும் அமையாத மகிழ்ச்சி தருணம். என் கணவருக்கும் எனக்கும் புரிதல் அதிகம் உண்டு. அதனால 34 ஆண்டுகளாக தம்பதியாக மகிழ்ச்சியுடன் வாழ்கிறோம். தன் சினிமா பணிகள் பத்தி அவ்வப்போது எங்கிட்ட ஷேர் பண்ணுவார். மத்தபடி அவரின் சினிமா வேலைகள்ல நான் தொந்தரவு செய்ய மாட்டேன்".``சமீபத்தில் நடந்த 80' s யூனியன் சந்திப்பு பற்றி..."

``1980-களில் நாங்க எல்லோரும் பிஸியா நடிச்சுகிட்டு இருந்தோம். பிறகு கல்யாணம், குடும்பம்னு எல்லோரும் கமிட்டாகிட்டோம். இப்போ, எங்க நட்பு பலமாகியிருக்கு. ஆண்டுதோறும் ஒருநாள் மீட் பண்ணி, அன்பைப் பரிமாறிக்கிறோம். அந்த நாளுக்காக ஆவலோடு காத்திட்டு இருப்போம். இந்த வருடச் சந்திப்பு, கடந்த நவம்பர் 10-ம் தேதி, சென்னையிலுள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடந்துச்சு. நானும் என் கணவரும் கலந்துகிட்டோம்; நண்பர்கள் பலரும் கலந்துகிட்டாங்க. சந்தோஷம், நெகிழ்ச்சினு மறக்க முடியாத நாளாக அமைந்தது. அடுத்த வருடச் சந்திப்புக்காக இப்போதே எதிர்பார்ப்பு கூடிவிட்டது".
 
#3
இரவு 12 மணிக்குத்தான் உற்சாகத்துடன் பாடுவேன்!" - நினைவுகள் பகிரும் பி.சுசீலா
ந்திய இசையுலகில் தனிச்சிறப்பு வாய்ந்த பின்னணிப் பாடகி பி.சுசீலா, தன் 84-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். நாள்முழுவதும் ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்தவர், அந்த மகிழ்ச்சித் தருணங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

``ஒவ்வொரு வருஷமும் என் பிறந்த நாளை எளிமையாகத்தான் கொண்டாடுவேன். ஆனால், நேற்று முழுவதும் நேரிலும், போன் வாயிலாகவும் ஏராளமான ரசிகர்கள், சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். ரசிகர்களின் ஏற்பாட்டால், என் வீட்டில் கேக் வெட்டினேன். எனக்காக ரசிகர்கள் வாங்கிவந்த கேக்கை வெட்டி, அவர்களோடு சாப்பிடும்போது தனி சந்தோஷம்தான் இல்லையா. ரசிகர்கள் என் பாடல்களைப் பாடி என்னை உற்சாகப்படுத்தினார்கள். நானும் அவர்களை மகிழ்விக்கப் பாடினேன். இப்படி நேற்றைய என் பிறந்தநாள் மறக்க முடியாத மகிழ்ச்சித் தருணமாக அமைந்தது.குறிப்பாக, நேற்று ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க, என் இளமைக்காலத்தில் பரபரப்பாகப் பாடிக்கொண்டிருந்த தருணங்களை நினைவுகூர்ந்தேன். 1960, 70-களில் பல மொழிகளில் பாடிக்கொண்டிருந்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில்தான் அதிகம் பாடினேன். அதனால், இந்தி உட்படப் பல மொழிகளின் பெரிய இசையமைப்பாளர்களின் இசையமைப்பில் பாட நேரமில்லாமல் போய்விடும். அதனால், அவர்களின் செல்லக்கோபத்துக்கு ஆளாவேன். அந்தக் காலங்களில் பகலில் தொடங்கும் பாடல் ரெக்கார்டிங் விடியற்காலைவரைக்கூட நடக்கும். பெரும்பாலும் இரவு 12 மணியளவில்தான் என் குரல் நல்ல இனிமைத்தன்மைக்கு வரும். அப்போது மிகுந்த உற்சாகத்துடன் பாடுவேன். அதனால், மிகக்கடினமான பாடல்களை அப்போதுதான் பதிவுசெய்வார்கள். பிறகு, வீட்டுக்கு வந்து சில மணிநேரம்தான் தூங்குவேன். காலையில் எழுந்து மீண்டும் வேறு இசையமைப்பாளருக்குப் பாடுவதற்கு கிளம்பிவிடுவேன். காரில் பயணித்தபடியேதான் பெரும்பாலும் சாப்பிடுவேன். இப்படியே என் இசை வாழ்விலும், அதனுடன் இணைந்த தனிப்பட்ட வாழ்விலும் இவ்வளவு தூரம் பயணித்துவிட்டேன். இசை மற்றும் என் குடும்பம் தவிர வேறு எதிலும் நான் பெரிதாகக் கவனம் செலுத்தவேயில்லை. தற்போதைய ஓய்வுக்காலத்தை மகிழ்ச்சியுடன் கழிக்கிறேன்" என்று புன்னகைக்கிறார், பி.சுசீலா.

1542284241829.png
 
#4
சர்வம் தாள மயத்துக்கு பாலா கொடுத்த ஷாக்... மறக்க முடியலை!’’ - ராஜீவ் மேனன்
``பொதுவாகவே ஒரு மியூசிகல் படம்னா, அந்தப் படத்தில் ஒரு இசைப் போட்டி நடக்கும் அதில் கதா நாயகன் எப்படி வின் பண்றான் என்பதுதான் படமாக இருக்கும். ஆனால், `சர்வம் தாள மயம்’ படத்தில் கர்னாடக இசையில் ஆர்வம் இருக்கிற, அதைக் கத்துக்கணும்னு நினைக்கிற பையன், எப்படித் தடைகளைத் தாண்டி கத்துக்கிறான் என்கிற டிராவலைச் சொல்லியிருக்கிறோம்...’’ என உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார், ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராஜீவ் மேனன்.
``இந்தப் படத்துக்கு முன்னாடியே இதே கதையை வைத்து ஒரு டாக்குமென்ட்ரி எடுத்தோம். இந்த டாக்குமென்ட்ரி நல்லா வந்ததுனால இதைப் படமாக எடுக்கலாம்னு முடிவு பண்ணினோம். ஏ.ஆர்.ரஹ்மானும் நாங்க எடுத்த டாக்குமென்ட்ரியைப் பார்த்துட்டு, `இதை நான் பண்ணியே ஆகணும்’னு எமோஷனலாய் கனெக்ட்டாகிதான் படத்துக்குள்ள வந்தார். நானும் ஏ.ஆரும் சின்ன வயசுல இருந்தே நல்ல நண்பர்கள். நான் அவர்கிட்ட ஜாஸ் மியூசிக் கத்துக்கிட்டேன்; அவர் எங்க வீட்டுல கர்னாட்டிக் கத்துக்கிட்டார். இப்படி எங்க டிராவல்ல நடந்த சில விஷயங்களும் இந்தப் படத்தில் இருக்கும்.’’ஒரு மியூசிகல் படம் பண்றதில் என்னென்ன சிக்கல்கள் இருந்துச்சு..?
``இந்தப் படத்தோட ஸ்கிரிப்ட் எழுதுறது ரொம்ப ஈசியா இருந்தது. ஆனால், அதைப் படமாக்குறதுக்கு நிறைய சிரமங்கள் இருந்துச்சு. இந்தப் படம் முழுக்கவே லைவ் சவுண்டு ரெக்கார்டிங்கில் எடுத்தோம். அதுனால படத்தில் பாடகர்களாக, இசைக்கருவி வாசிப்பவர்களாக வேற யாரையும் நடிக்க வைக்க முடியாது. அந்தந்த கலையைத் தெரிந்தவர்களை வைத்துத்தான் எடுக்க முடியும். அதனால்தான் ஒரு இசையமைப்பாளரா இருக்கிற ஜி.வி.பிரகாஷை இந்தப் படத்தில் நடிக்க வைத்தோம். இசையை மையமா வெச்சு எடுக்கிற படத்தில் என்னென்ன சிக்கல்கள் இருக்கும்னு ஜி.வி.க்கு நல்லா தெரிந்திருந்தது; அதனாலேயே பல சிரமங்களிலிருந்து தப்பிச்சுக்கிட்டோம்.’’
சமீபத்தில் நடந்த 31வது டோக்கியோ திரைப்பட விழாவுக்கு `சர்வம் தாள மயம்’ தேர்வாகி இருந்தது; அந்தத் திரைப்பட விழாவுக்குச் சென்றுவந்த அனுபவத்தைப் பற்றிச் சொல்லுங்க..?

``டோக்கியோ திரைப்பட விழாவில் அங்கு இருந்த பெரிய ஸ்கிரீனில்தான் `சர்வம் தாள மயம்’ படத்தை திரையிட்டாங்க. படம் பார்த்த எல்லாருமே பல இடங்களில் கைதட்டுனாங்க. படம் முடிந்ததும் நடந்த கலந்துரையாடலில் பல பேர் கேள்வி கேட்கும் போதுதான், எல்லாரும் படத்தை எந்தளவுக்கு உன்னிப்பா கவனிச்சிருக்காங்கனு தெரிஞ்சது. சில பேர் கண் கலங்கிட்டாங்க; சில பேர் மறுபடியும் படத்தைப் பார்க்கணும்னு சொன்னாங்க. ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு. ஜாப்பனீஷோட இந்த ரெஸ்பான்ஸைவிட டைரக்டர் பாலா படம் பார்த்துட்டு எமோஷனல் ஆனதுதான் எனக்கு செம ஷாக்கா, வித்தியாசமா இருந்தது. அவர் அவ்வளவு எமோஷனல் ஆவார்னு நான் நினைக்கவே இல்லை.’’


ஜி.வி.பிரகாஷ்தான் இந்தப் படத்துக்கு ஹீரோனு சொன்னதும் ஏ.ஆர்.ரஹ்மான் என்ன சொன்னார்..?

`` `பரவாயில்லையே... ஜி.வி பண்ணுவானா; அவன் அந்த அளவுக்கு சீரியஸா இருக்கானா’னு கேட்டார். ஏன்னா நிறைய படங்கள் மியூசிக் பண்ணிட்டு இருந்த ஜி.வி ஏன் நடிக்கப் போனான்னு அவருக்கு ஒரு டவுட் இருந்தது. அப்பறம், `நீங்க அவனை வெச்சுப் பண்றதா இருந்தா ஓகே’னு சொன்னார்.’’
வினித், டிடி இந்தப் படத்தில் நடிச்சிருக்காங்க; அவங்களுக்கு எந்த மாதிரியான ரோல்..?

``ரெண்டு பேருக்குமே ரொம்ப முக்கியமான ரோல். வினித் ஒரு டான்ஸரா இருக்கிறதால அவருக்கும் சங்கீதம் தெரியும். அதனால இந்தப் படத்தில் அவரை யூஸ் பண்ணிக்கிட்டோம். அவருக்கு இந்தப் படத்தில் நெகட்டிவ் ரோல். டிடியோட ரோலைப் பற்றிச் சொல்லணும்னா, இந்த கேரக்டரை டிடியைத் தவிர வேற யாராலும் பண்ண முடியாது. படத்தில் ஒரு முக்கியமான கட்டத்தில் படத்தை நகர்த்துவதே அவங்களோட கேரக்டர்தான்.''
 
#5
அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை!' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்!
ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பெண் இணையத்தில் பாடிய பாடலை தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுப் பாராட்டியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.சில நாள்களுக்கு முன்னதாக கேரளாவைச் சேர்ந்த ராகேஷ் என்பவர் `விஸ்வரூபம்' படத்தில் இடம்பெற்ற `உன்னைக் காணாத...' பாடலைப் பாடியிருந்தார். இவரின் பாடல் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அந்த வீடியோவை பாடகர் சங்கர் மகாதேவன் ட்விட்டரில் வெளியிட்டு, `இவர் யார் என்று தெரியவில்லை. ஆனாலும் இவரின் குரல் எவ்வளவு இனிமையாக உள்ளது' என்று பதிவிட்டிருந்தார். சங்கர் மகாதேவன் பதிவிட்டதை அடுத்து ராகேஷை தேடும் பணியில் பலர் ஈடுபட்டு இறுதியில் அவரைக் கண்டுபிடித்தனர். இதன் பிறகு ராகேஷை நடிகர் கமல் நேரில் வரவழைத்துப் பாராட்டினார்.இதேபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெற்றுள்ளது. ஆனால், இந்த முறை வீடியோ பதிவிட்டுள்ளது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் வடிசலேறு பகுதியைச் சேர்ந்த பேபி என்ற பெண் 1994-ம் ஆண்டு பிரபுதேவா நடித்து ரஹ்மான் இசையில் வெளியான `காதலன்' திரைப்படத்திலிருந்து, என்னவளே... என்னவளே... பாடலை (தெலுங்கில்) பாடியிருந்தார். இந்தப் பாடல் சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது. இதை தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு அதனுடன் ‘ யார் எனத் தெரியவில்லை. பெயர் தெரியவில்லை. அருமையான குரல்’ எனப் பதிவிட்டுள்ளார். இது ரஹ்மான் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஏ.ஆர் ரஹ்மான் தற்போது பெரும் இசையமைப்பாளராக உள்ளார். அவர் ஒரு ஏழைப் பெண்ணின் குரலைப் பாராட்டி சமூகவலைதளத்தில் வீடியோ பதிவிட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளனர்.மேலும் சிலர் அந்தப் பெண்ணுக்கு உங்கள் இசையில் பாட ஒரு வாய்ப்பு கிடைக்குமா. வாய்ப்பு தரவேண்டும். அவரின் எதிர்காலத்தை மாற்ற வேண்டும் என்பது போன்ற கருத்தையும் பதிவிட்டுள்ளனர்.
 
#6
விஜய் ஜோடியாக விஜய் தேவரகொண்டாவின் ஹீரோயின்?
விஜய்யின் அடுத்த படத்தில், அவருக்கு ஜோடியாக விஜய் தேவரகொண்டாவின் ஹீரோயின் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.
விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு ரிலீஸான படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப் படத்தில், கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்தார். வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார்.
‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் மூன்றாவது படம் இது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.
ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரூபன் எடிட்டராகவு, முத்துராஜ் கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். இந்தப் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. அடுத்த வருடம் (2019) தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் ஹீரோயின் யார் என்பதில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. நயன்தாரா, சமந்தா ஆகியோரது பெயர்கள் அடிபட்டு வருகின்றன. இந்நிலையில், ராஷ்மிகா மடன்னாவின் ரசிகர் ஒருவர், ராஷ்மிகா தான் ‘தளபதி 63’ படத்தின் ஹீரோயின் என ட்விட்டரில் பதிவிட்டு, அதில் அட்லீ, விஜய் ஆகியோரையும் டேக் செய்துள்ளார்.
அந்த ட்வீட்டுக்குக் கீழே, ‘டேய்... எனக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடாதேடா...’ என நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளார். ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ தெலுங்குப் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1542286195222.png
 
#7
தளபதி 63’ படத்துக்கு ராசியான நம்பர் 3: சுவாரசியத் தகவல்கள்
தளபதி 63’ படத்துக்கு ராசியான நம்பராக 3 அமைந்திருக்கிறது என்று சொல்லலாம்.
‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.
ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரூபன் எடிட்டராகவும், முத்துராஜ் கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். இந்தப் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.
இந்தப் படத்துக்கும், 3 என்ற நம்பருக்கும் ராசி இருப்பதாகக் கூறப்படுகிறது. அதைப் பற்றிய சுவாரசிய தகவல்களைப் பார்க்கலாம்.
‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்கிறார் விஜய்.
அடுத்த வருடம் (2019) தீபாவளிக்கு ‘தளபதி 63’ படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ 2017-ம் ஆண்டு தீபாவளிக்கும், ‘சர்கார்’ 2018-ம் ஆண்டும் தீபாவளிக்கும் ரிலீஸானது. எனவே, தொடர்ச்சியாக மூன்றாவது முறை தீபாவளிக்கு விஜய் படம் ரிலீஸாக இருக்கிறது.
விஜய் நடித்த ‘உதயா’ மற்றும் ‘அழகிய தமிழ் மகன்’ ஆகிய இரண்டு படங்களுக்கு மட்டுமே இதற்கு முன்பு இசையமைத்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மெர்சல்’ படத்துக்கு இசையமைத்தார். தொடர்ந்து ‘சர்கார்’ படத்துக்கும் இசையமைத்தார். ‘தளபதி 63’ படத்துடன் சேர்ந்து தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக விஜய் படத்துக்கு இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
அதேபோல, ‘மெர்சல்’ மற்றும் ‘சர்கார்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ‘தளபதி 63’ படத்துக்கும் அனைத்துப் பாடல்களையும் எழுதுகிறார் விவேக்.
1542286271587.png
 
#8
விளையாட்டை மையப்படுத்தி 'தளபதி 63': அட்லீ திட்டம்
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள புதிய படத்தின் கதை விளையாட்டை மையப்படுத்தியது என்று தகவல் வெளியாகியுள்ளது.
'சர்கார்' படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று (நவம்பர் 14) வெளியிடப்பட்டது. அட்லீ இயக்கவுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் விஜய் - அட்லீ கூட்டணி இப்படத்தில் இணைந்திருக்கிறது. தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். படத்தின் தலைப்பு மற்றும் விஜய்யுடன் நடிக்கும் நடிகர்கள் உள்ளிட்ட விவரங்களை இன்னும் படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.
ஆனால், இப்படம் முழுக்க விளையாட்டை மையப்படுத்தியே அமைத்திருக்கிறாராம் இயக்குநர் அட்லீ. இதில் விளையாட்டுப் பயிற்சியாளராக விஜய் நடிக்கவுள்ளார்.
இதுவரை விஜய் நடித்திராத கதாபாத்திரம் என்பதால், இதற்காக சில பயிற்சிகளையும் மேற்கொள்ளவுள்ளார் விஜய். விளையாட்டை மையப்படுத்தியது என்றாலும், விஜய் ரசிகர்களுக்கு ஏற்றவகையில் ஜனரஞ்சகமாக திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார் அட்லீ.
‘தளபதி 63’ படப்பிடிப்புக்காக சில கல்லூரிகளுக்குச் சென்று இடங்களைத் தேர்வு செய்து வைத்திருக்கிறார் அட்லீ. 2019-ம் ஆண்டு ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். படப்பிடிப்பு தொடங்கப்படும் அன்று, பெரியளவில் பூஜை ஒன்றையும் நடத்தி, அன்றைய தினம் விஜய்யுடன் நடிக்கும் நடிகர்கள் பெயர்களை அறிவிக்கவும் படக்குழு முடிவு செய்திருக்கிறது.
இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, சண்டை வடிவமைப்பாளராக அனல் அரசு, பாடலாசிரியராக விவேக், எடிட்டராக ரூபன், கலை இயக்குநராக முத்துராஜ் ஆகியோரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். 2019 தீபாவளி வெளியீடு என்று இப்போதே படக்குழு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
1542286357352.png
 
#9
மிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு!
விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் தீபாவளியன்று வெளியான 'சர்கார் ' திரைப்படம் தேர்தல் மற்றும் வாக்கு அரசியலைப் பேசும் படமாக அமைந்திருந்தது. இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றிருந்தாலும் ஆளும் கட்சியின் கடும் எதிர்ப்புக்கு ஆளானது. படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவள்ளி என்ற பெயரை படத்தின் வில்லி கதாபாத்திரத்துக்கு வைத்திருந்தது ஆளும் தரப்புக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், இலவசங்கள் குறித்தும் காட்சிகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் அதை நீக்கக் கோரியும் அ.தி.மு.க-வினர் போராட்டம் நடத்தி வந்தனர். பேனர்கள் கிழிப்பு, காட்சிகள் ரத்து என அ.தி.மு.க-வினர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இதையடுத்து, சர்காருக்கு இரண்டாவது சென்சாரிடப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``சர்கார் திரைப்படம் தொடர்பான பேனர்களை அ.தி.முக-வினர் கிழித்தார்கள் என்பது தவறான தகவல். பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பொதுமக்களோடு சேர்ந்து அ.தி.மு.க-வினரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள். ஏ.ஆர்.முருகதாஸின் உறவினர்கள்கூட விலையில்லா பொருள்களை வாங்கியிருக்கின்றனர். அந்தப் பட்டியலை நாங்கள் வைத்திருக்கிறோம். விலையில்லா திட்டங்களால்தான் உயர்கல்வியில் தமிழகம் 46.8 சதவிகிதமாக சிறந்து விளங்குகிறது. படத்தில் கோடிகோடியாக சம்பாதிக்கும் திரையுலகினர் மக்களுக்கு என்ன செய்திருக்கின்றனர். அந்தப்படத்தில் குறிப்பிட்ட காட்சியை நீக்கியிருக்கிறார்கள். சர்கார் பிரச்னை சுமுகமாக முடிந்துவிட்டது. ஊடகங்கள் இனி இதை பெரிதுப்படுத்த வேண்டாம்" என்று தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் `சர்கார்' படக்குழுவினர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியர் விவேக், நடிகைகள் கீர்த்தி சுரேஷ் , வரலட்சுமி நேற்று ஒன்றாக சந்தித்துள்ளனர். இந்தப் புகைப்படங்களை ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் ஒரு கேக்கின் மேலிருக்கும் மெழுகுவத்தியை ஒளியேற்றுவதுபோல் ஒரு புகைப்படத்தை ' Whose hand is this ?' என்ற கேப்ஷனுடன் வெளியிட 'தளபதி' என்று கமென்டுகள் பறந்தன.

அதே நேரத்தில் அந்த கேக்கில் சிறு சிறு மிக்ஸி, கிரைண்டர்களால் அலங்காரப்படுத்தப்பட்டிருந்ததை மீம்ஸுகளாக போட்டு வருகின்றனர் ரசிகர்கள். இலவச பொருள்களை விஜய் ரசிகர்கள் ஒருபுறம் போட்டு உடைப்பதே பெரும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ள நிலையில் சர்கார் படக்குழுவின் இந்த கேக் புகைப்படம் என்ன விளைவுகளைத் தரும் என்று பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும்.
 
#10
`பொங்கலுக்கு பராக்’ - `பேட்ட’ ரஜினியின் புது லுக்
காலா' படத்துக்குப் பிறகு ரஜினி நடிக்கும் திரைப்படம் `பேட்ட. `கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், பொங்கலுக்கு படம் ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா என இரண்டு ஹீரோயின்கள் நடித்திருக்கின்றனர். இவர்கள் இருவரும் ரஜினியுடன் நடிக்கும் முதல் படம் இதுதான்.மேலும், `பேட்ட' படத்தில் ரஜினியுடன் பாலிவுட் நடிகர் நவாசுதின் சித்திக், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். `பேட்ட' படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் சில போஸ்டர்கள் ரிலீஸான நிலையில், புது போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இதில், `பொங்கலுக்கு பராக்' என்னும் டேக்லைனுடன் டீசர்ட், கையில் பூந்தொட்டி என சிம்ரனுடன் ரொமான்ஸ் கம் யூத் லுக்கில் இருக்கிறார் ரஜினி. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
#11
திருமணப் பரிசு வேண்டாம்; ஆனால்?' - ரன்வீர், தீபிகா ஜோடி விநோத வேண்டுகோள்
ரன்வீர் சிங்- தீபிகா படுகோனுக்கு நாளை திருமணம் நடைபெற உள்ள நிலையில், `திருமணத்துக்கு வருபவர்கள் பரிசு கொண்டு வரவேண்டாம்' என்ற கோரிக்கையையும் வைத்துள்ளனர் இந்தக் காதல் ஜோடிகள்.பாலிவுட்டின் முன்னணி ஜோடியான ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனும் காதலித்து வரும் தகவல் சினிமா உலகில் வலம் வந்து கொண்டிருந்தது. இதுதொடர்பான எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் அவர்கள் தரப்பிலிருந்து வெளிவரவில்லை. பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் உட்பட பல படங்களில் இவர்கள் இணைந்து நடித்த இவர்கள், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியானது.இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக, நவம்பர் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்களில் தங்களின் திருமணம் நடைபெறவுள்ளதாகக் கூறி கடந்த மாதம் தங்கள் திருமணப் பத்திரிகையை வெளியிட்டனர். காதலிப்பதைக்கூட உறுதிப்படுத்தாத இவர்கள் திடீரென திருமணப் பத்திரிகையை வெளியிட்டது அவர்களின் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
இந்த நிலையில், நாளை இத்தாலியில் திருமணமும் வரும் 28-ம் தேதி மும்பையில் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதற்கிடையே தங்கள் திருமணத்துக்கு வருபவர்களுக்கு ஓர் அன்பு கோரிக்கை வைத்துள்ளனர். அதாவது, ‘தங்கள் திருமணத்துக்கு வருபவர்கள் பரிசுப் பொருள்கள் எதுவும் கொண்டு வரவேண்டாம். அப்படி ஏதாவது கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் தீபிகா நடத்திவரும் அறக்கட்டளைக்கு உதவித் தொகை வழங்குங்கள்’ எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
 
#12
'சீதக்காதி' கெட்டப்பில் ஃபேமிலி போட்டோ! - வைரலாகும் விஜய் சேதுபதி படம்
'சீதக்காதி' கெட்டப்புடன் விஜய் சேதுபதி தன் குடும்பத்துடன் புகைப்படம் ஒன்று எடுத்துள்ளார். தற்போது இணையத்தில் வைரலாகிவரும் அந்தப் புகைப்படத்தைப் பலரும் ஆச்சர்யத்துடன் பகிர்ந்துவருகின்றனர். பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் படம், 'சீதக்காதி'. இந்தப் படத்தில், விஜய் சேதுபதி நாடக நடிகராக நடித்துள்ளார். இந்தப் படத்துக்காக, விஜய் சேதுபதி வயதான தோற்றத்துடன் வித்தியாசமான மேக்கப் செய்திருக்கிறார். இந்த மேக்கப், பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.ஆஸ்கர் விருது வென்ற மேக்கப் மேன் கெவின் ஹேன்லி, விஜய் சேதுபதியின் இந்த மேக்கப்பை வடிவமைத்திருக்கிறார். இந்த மேக்கப்புடன் விஜய்சேதுபதி தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் புகைப்படம் எடுத்துள்ளார். இந்தப் புகைப்படம், விஜய் சேதுபதியின் 15-ம் ஆண்டு திருமண நாளை ஒட்டி எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும், தியாகராஜன் குமாரராஜா எழுதிய பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இன்று மாலை படத்தின் இன்னொரு போஸ்டர் வெளியிடப்படும் என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
 
#13
எனக்கு சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது: ‘காற்றின் மொழி’ குறித்து வித்யா பாலன்
ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காற்றின் மொழி’. ராதாமோகன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், விதார்த், லட்சுமி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், இளங்கோ குமரவேல் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் சிம்பு நடித்துள்ளார்.
இந்தியில் வெளியான ‘துமாரி சுலு’ படத்தின் தமிழ் ரீமேக் இது. வித்யா பாலன் நடித்த வேடத்தில் ஜோதிகா நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் உறவினரான ஏ.எச்.ஹாசிஃப் இந்தப் படத்துக்கு இசையமைக்க, தனஞ்ஜெயன் தயாரித்துள்ளார்.
நாளை மறுநாள் (நவம்பர் 16) ‘காற்றின் மொழி’ ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில், படத்தையும், அதில் பணிபுரிந்தவர்களையும் வாழ்த்தியுள்ளார் வித்யா பாலன்.
“எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது, பெருமையாகவும் இருக்கிறது. இந்தியில் ‘துமாரி சுலு’ படத்தில் நான் பண்ண ரோல், தமிழில் ‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா பண்ணியிருக்காங்க. ஜோதிகா, ராதாமோகன், தனஞ்ஜெயன் மற்றும் படத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆல் த பெஸ்ட்.
நான் இந்தப் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நீங்களும் அதேபோல் காத்திருப்பீர்கள் என நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் வித்யா பாலன்.
1542287256383.png
 
#14
தமிழக அரசை வம்புக்கு இழுக்கும் ‘எல்.கே.ஜி’ பொங்கல் வெளியீடு போஸ்டர்
ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஆர்.ஜே. பாலாஜி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘எல்.கே.ஜி’. பிரபு இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தது படக்குழு.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, படத்தின் முக்கியமான அறிவிப்பு வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள். தற்போது இப்படம் ‘பொங்கல் வெளியீடு’ என்பதுதான் அந்த அறிவிப்பு என படக்குழு புதிய போஸ்டரில் தெரிவித்திருக்கிறது.
சமீபகால அரசியல் நிகழ்வுகளை மையப்படுத்திதான் இக்கதையை உருவாக்கியிருக்கிறார் ஆர்.ஜே. பாலாஜி. அரசியலில் எந்தவொரு முக்கியமான நிகழ்வுகள் நடந்தாலும், அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலோ அல்லது எதிர்ப்போ உடனடியாகத் தெரிவிப்பவர் ஆர்.ஜே. பாலாஜி.
‘எல்.கே.ஜி’ படத்தின் போஸ்டரிலும் அவருடைய கிண்டல் இருக்கிறது. ‘இலவச வேட்டி சேலையுடன் பொங்கலுக்கு வர்றோம்’ என்ற தலைப்புடன், ஆர்.ஜே. பாலாஜி அரசியல்வாதி கெட்டப்பில் வணங்குவது போன்று அமைந்திருக்கிறது.
மேலும், ஆர்.ஜே. பாலாஜியைச் சுற்றி இலவச ஆடு, மாடு, மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், டிவி மற்றும் இலவச அரிசி ஆகியவை இருக்கிறது. அவை அனைத்திலுமே ஆர்.ஜே. பாலாஜியின் ஸ்டிக்கர் இடம்பெற்றிருக்கிறது.
‘சர்கார்’ படத்தில் இலவசப் பொருட்களைத் தீயில் போடும் காட்சிக்குத்தான் தமிழக அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்தது. தற்போது படத்தின் போஸ்டரிலேயே ‘எல்.கே.ஜி’ படக்குழு கிண்டல் செய்திருக்கிறது. இதனால், இப்படத்துக்கு கண்டிப்பாக எதிர்ப்பு வரும் எனத் தெரிகிறது.
ப்ரியா ஆனந்த் நாயகியாக நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றுள்ளது. விது அய்யண்ணா ஒளிப்பதிவு செய்ய, அந்தோணி எடிட் செய்கிறார். லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.
1542287404129.png
 
#15
தீபிகா படுகோனே திருமணத்தில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா: பாலிவுட்டைக் கலக்கும் நம்மூர் இனிப்பு
கோயம்புத்தூரைத் தலைமையகமாகக் கொண்ட ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாவுக்கு அறிமுகம் தேவையில்லை. தற்போது பாலிவுட்டின் பிரபலமான நட்சத்திரங்கள் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் சுவையை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
பாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்களான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோரின் திருமணம் நவம்பர் 14 மற்றும் 15-ம் தேதிகளில் மிகப் பிரம்மாண்டமான முறையில் இத்தாலியிலுள்ள லேக் கோமா நகரில் நடைபெற்றது. முதல்நாள் கொங்கினி கலாச்சார முறைப்படியும் அடுத்த நாள் சிந்தி கலாச்சாரப்படியும் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விழாவில் உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர்.
பல வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் தீபிகா படுகோன் ஹாலிவுட்டிலும் கால் பதித்தார். சில வாரங்களுக்கு முன் தங்களது திருமணச் செய்தியை ரன்வீர் சிங்கும், தீபிகாவும் ட்விட்டரில் ஒரு சேர அறிவித்தபின்அவர்களது திருமணம் குறித்த செய்திகள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டன.
இந்நிலையில், சக திரையுலக நட்சத்திரங்கள், ஊடகவியலாளர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகளுக்கு புதுமணத் தம்பதிகளிடமிருந்து தனிப்பட்ட கடிதத்துடன் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா இனிப்புப் பெட்டகமும் அனுப்பப்பட்டது. இந்தத் தகவலை பல பிரபலங்கள் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார்கள். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாவின் சுவை பற்றியும் அவர்கள் குறிப்பிடத் தவறவில்லை.

மைசூர்பா இனிப்புப் பெட்டகமும், கடிதமும்

அவ்வாறு பதிவிடப்பட்ட ட்வீட்களில், “ரன்வீரும் தீபிகாவும் இந்த மைசூர்பாவுக்கு மிகப்பெரிய ரசிகர்களாக இருந்திருக்க வேண்டும். தீபிகா- ரன்வீரின் அன்பளிப்புக்கு நன்றி” என்றும் “அவர்களது திருமணப் புகைப்படங்களை விட, உடன் வந்த கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாதான் இப்போதே வேண்டும்" என்றும் "மைசூர்பாவில் காணாமல் போன 'க்' பற்றிய எங்களது விளக்கம், அது மைசூர் பாக் என்று சொல்வதற்கு முன்னரே நாவில் கரைந்து மறைந்து விட்டது" என்றும் பிரபலங்கள் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்கள்.
இதைப் பல நெட்டிசன்கள் பதிவிட்டும், பகிர்ந்தும் தமிழகத்தின் பெருமை இது எனக் கொண்டாடி வருகின்றனர்.
இது குறித்து ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர் எம். கிருஷ்ணனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, "ஒரு முக்கியமான பிரபலத்திற்காக மைசூர்பா மொத்தமாகத் தேவை என எங்களது பெங்களூரூ கிளையினைத் தொடர்பு கொண்டு வாங்கினார்கள். அப்போது தீபிகா படுகோனே- ரன்வீர் தம்பதியின் திருமண கொண்டாட்டத்திற்குத்தான் செல்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது.
திரை நட்சத்திரங்களும், முக்கியஸ்தர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இனிப்புப் பெட்டகத்தையும் கடிதத்தையும் பகிர்ந்து வைரலான பிறகுதான் தெரிந்துகொண்டோம். அன்பைச் சொல்ல அழகான வழியைத் தேர்ந்தெடுத்த புதுமணத் தம்பதிகளுக்கு எங்கள் வாழ்த்துகள். எங்கள் மைசூர்பாவுடனான இனிய தருணங்களைப் பகிர்ந்து கொண்ட எங்கள் பிரியமுள்ள வாடிக்கையாளர்களுக்கு நன்றியும் அன்பும்" என்று தெரிவித்தார்.
1542381471976.png
 
#16
காற்றின் மொழி
பரிசுப் பொருளை வாங்குவதற்காக பண்பலை அலுவலகம் செல்லும் பெண், அதே இடத்தில் ஆர்.ஜே. ஆகப் பணிபுரியும் சூழல் வந்தால், அவர் அன்பு வழி நின்று ஆறுதல் மொழி பகிர்ந்தால் அதுவே 'காற்றின் மொழி'.
கணவர் விதார்த், மகன் சித்து ஆகியோருடன் சென்னையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் ஜோதிகா. குடும்பத் தலைவியாக வீட்டைப் பொறுப்பாக கவனித்துக் கொண்டாலும் உடன் பிறந்த இரட்டைச் சகோதரிகளாலும், அப்பாவாலும் தொடர்ந்து அவமானப்படுத்தப்படுகிறார். பிளஸ் 2-வில் மூன்று முறை முயன்றும் தோல்வியைச் சந்தித்ததால் ஜோதிகாவை உடன்பிறந்தவர்களே ஏளனமாகப் பார்ப்பதும், எந்த வேலை செய்தாலும் விமர்சிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
இந்நிலையில் ஒரு நாள் மின் கட்டணம் செலுத்துவதற்காகச் செல்லும் ஜோதிகா ஹலோ எஃப்.எம். நடத்தும் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறுகிறார். அதற்கான பரிசைப் பெற அந்த அலுவலகம் செல்லும் ஜோதிகாவுக்கு ஆர்.ஜே. ஆகும் ஆசை ஜோதிகாவுக்கு துளிர்க்கிறது. ஆர்வமுடன் ஆடிஷனில் கலந்துகொள்ளும் ஜோதிகா அதில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆர்.ஜே.வும் ஆகிறார். ஆனால், அவருக்கு இரவுப் பணி ஒதுக்கப்பட்டு ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவும் ஏற்பாடாகிறது.
அதற்கு விதார்த் முழு மனதோடு சம்மதிக்கவில்லை. இதனிடையே ஜோதிகா - விதார்த் மகன் சித்து வீடியோ கேம்களுக்கு அடிமையாகிறான். முறையான கண்காணிப்பு இல்லாததால் ஒழுங்கில்லாமல் வளர்கிறான். நிறுவனத்துக்குப் புதிதாக வந்த முதலாளியின் பேரன் நாராயண் லக்கியால் விதார்த்துக்கும் சிக்கல் எழுகிறது. இந்தச் சூழலில் ஒரு நாள் சித்து காணாமல் போகிறான். ஏன் சித்து காணாமல் போகிறான், ஜோதிகாவின் வேலை என்ன ஆகிறது, விதார்த் தன் வேலையை தக்கவைத்துக் கொண்டாரா, எப்போதும் தன் குடும்பத்தினரிடம் திட்டு வாங்கும் ஜோதிகா அடுத்து என்ன செய்கிறார் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.
சாதாரண குடும்பத் தலைவிக்கு இருக்கும் சுமைகளையும், அவருக்குள் இருக்கும் கனவுகளையும் இயல்பாகச் சொல்லியிருக்கும் இயக்குநர் ராதாமோகனைப் பாராட்டலாம். ஒரு இந்திப் படத்தின் மறு ஆக்கம் என்ற போதிலும், நுண் உணர்வுகளை மெல்லிய இழையுடன் சொல்லும் அவரது பாணி இந்தப் படத்திலும் தொடர்வது ஆரோக்கியமானது.
லெமன் இன் த ஸ்பூன் போட்டியில் வெற்றி பெறும் சான்றிதழ்களைக் காட்டினாலே விளையாட்டுப் பிரிவுக்கான ஒதுக்கீட்டில் ஓர் அரசு வேலை கிடைத்திருக்கும் என்று நம்பும் அளவுக்கான வெகுளிப் பெண் கதாபாத்திரத்தில் ஜோதிகா ஆர்வமும் ஆசையுமாக நடித்திருக்கிறார். ஆர்வக்கோளாறில் குறும்பு என்கிற பெயரில் சரோஜாதேவியை இமிடேட் செய்ததையும், மிமிக்ரி என்ற பெயரில் மிகை உணர்ச்சி காட்டியதையும் ஜோதிகா தவிர்த்திருக்கலாம். டிராவல்ஸ் நடத்தலாம் என்ற ஐடியா குறித்துப் பேசும் தொனியிலும் முறையிலும் செயற்கைத்தனம் அப்பட்டமாய் எட்டிப்பார்க்கிறது.
ஆர்.ஜே. ஆன பிறகு முகம் தெரியாத முகங்களுக்கு ஆறுதல் சொல்லும் விதத்தில் ஜோதிகா பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார். புரிந்துகொள்ளாமல் எப்போதும் திட்டும் அப்பா, அக்காக்களுக்கு மத்தியில் அவஸ்தையையும், மகன் காணாமல் போன சம்பவத்தின்போது பதற்றத்தையும் அழகாக வெளிப்படுத்துகிறார். லட்சுமி மஞ்சு, இளங்கோ குமாரவேல் கேட்கும் கேள்விகளுக்கு ரியாக்‌ஷனில் பதில் சொல்லும் விதம் சிறப்பு.
விதார்த் - ஜோதிகாவுடனான காட்சிகளில் அந்நியோன்யம் இல்லை. ஒருவித அசவுகரியத்துடனே விதார்த் நடித்திருப்பது திரையில் வெளிப்படையாகத் தெரிகிறது. மனைவியைக் கொஞ்சும் போது கூட 2 அடி தள்ளி நிற்கிறார். வேலை தரும் அழுத்தம், பக்கத்திலிருந்தும் மனைவி தூரமாய் போய்விட்ட உணர்வை வெளிப்படுத்தும் தருணம், மகன் காணாமல் போனதும் துடிக்கும் இடங்களில் ஸ்கோர் செய்கிறார்.
எம்.எஸ்.பாஸ்கருக்கு வழக்கமும் பழக்கமுமான கதாபாத்திரம். அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். இளங்கோ குமரவேல், லட்சுமி மஞ்சு, சாண்ட்ரா எமி ஆகிய மூவரும் கதையின் போக்கில் கவனிக்க வைக்கிறார்கள். மயில்சாமி ஓரிரு காட்சிகளில் வந்தாலும் சிரிக்க வைக்கிறார்.
மனோபாலா, 'டாடி' சரவணன், யோகி பாபு, சிம்பு, உமா பத்மநாபன் ஆகியோர் இடம்பெறும் காட்சிகள் படத்துக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. பிரவீன் கே.எல். இதில் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.
மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு படத்துக்குப் பலம் சேர்க்கிறது. காஷிஃப்பின் இசையில் போ உறவே பாடல் மட்டும் மனதில் நிற்கிறது. கிளம்பிட்டாளே விஜயலட்சுமி தீம் பாடல் பொருத்தமற்ற இடத்தில் முன்கூட்டியே வருவதால் ரசிக்க முடியவில்லை. பின்னணி இசை நெருடல். ஜிமிக்கி கம்மல் பாடலுக்கான நடனம் வேகத்தடை.
இந்தியில் ஹிட்டடித்த 'துமாரி சுலு' என்ற படத்தை தமிழுக்கு ஏற்றபடி மறு ஆக்கம் செய்திருக்கிறார் இயக்குநர் ராதாமோகன். ஒரு குடும்பத்தலைவி ஆர்.ஜே.ஆனால் வீட்டுக்குள் என்ன மாதிரியான பிரச்சினைகள் ஏற்படும் என்ற சுவாரஸ்ய ஒன்லைனைச் சுற்றி திரைக்கதையையும் கொஞ்சம் மாற்றி அமைத்திருக்கிறார். ஆனால், நடிகர்களின் பக்குவமற்ற நடிப்பால், தேவையே இல்லாத இரட்டை அர்த்த வசனங்களால் முதல் பாதி மிகச் சுமாரான அம்சங்களில் அமுங்கி விடுகிறது.
இரண்டாம் பாதியில் சூழல் தரும் நெருக்கடியால் திரைக்கதை சீராகப் பயணிக்கிறது. பொன்.பார்த்திபன் வசனங்களும் அதற்கு கை கொடுக்கின்றன. பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லும் விதமும், தனிமையில் இருப்பவர்களின் வலியைப் புரிந்துகொண்டு ஆறுதல் சொல்லும் காட்சிகளும் படத்தை வலுவான தாங்கிப் பிடிக்கின்றன. ஜோதிகாவின் கதாபாத்திரம் நீட்சியடையும்போது உணர்வின் எல்லையில் படம் சரியாகப் பயணிக்கிறது. கிளைமேக்ஸ் காட்சியும் நல்ல தீர்வை முன் மொழிந்திருக்கிறது. அந்த வகையில் 'காற்றின் மொழி' உறவுப் பாலத்துக்கு கவுரவம் சேர்க்கிறது.
1542381897859.png
 
#17
ஜெய் ஹிந்த்; ஜெய் இந்தியா'- நயன்தாரா, ஷாருக் கலக்கும் ஹாக்கி உலகக்கோப்பை வீடியோ!
நவம்பர் 28ம் தேதி ஒடிஷா மாநிலம் புவனேஷ்வரில் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி தொடங்கவுள்ளது. இந்தியாவில் ஹாக்கி உலகக்கோப்பை நடப்பதை அடுத்து தொடரை பிரபலப்படுத்த ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஒரு தீம் சாங் ஒன்று தயாராகியுள்ளது. 'ஜெய் ஹிந்த் ஜெய் இந்தியா' எனத் தொடங்கும் அந்தப் பாடலின் ப்ரோமோ இன்று ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்டார் . இந்த வீடியோவில் நயன்தாரா, ஷாரூக் கான் ஆகியோருடன் தேசிய ஹாக்கி விளையாட்டு வீரர்களும் நடித்திருக்கின்றனர்.

இந்திப் பாடலாசிரியர் குல்சார் பாடல்வரிகளில் உருவான இப்பாடலுக்கான மியூசிக் வீடியோவை ரஹ்மானே இயக்குவது கூடுதல் சிறப்பு. இதற்கான ஷூட்டிங் ஒடிஷா மாநிலம் புவனேஷ்வரில் சமீபத்தில் நடந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இயக்க ரவி வர்மன் இதன் ஒளிப்பதிவை மேற்கொண்டார்.
இப்பாடலை ரஹ்மானுடன் இணைந்து நீத்தி மோஹன், ஸ்வேதா மோஹன், ஷாஷா திருப்பதி, டிரம்ஸ் சிவமணி ஆகியோர் உருவாக்கியுள்ளனர். இதை உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ள மில்லெனியம் சிட்டியில் 28 ம் தேதி ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் ஷாருக் கான் ஆகியோர் அரங்கேற்றவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 
#20
சிவாஜி வீட்டு மருமகளான ‘பிக் பாஸ்’ சுஜா வருணி

‘பிக் பாஸ்’ மூலம் பிரபலமான நடிகை சுஜா வருணியின் திருமணம் சென்னையில் இன்று நடைபெற்றது.
2002-ம் ஆண்டு வெளியான ‘ப்ளஸ் 2’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சுஜா வருணி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘ஆண் தேவதை’.
படங்களின் மூலம் புகழ் கிடைக்காவிட்டாலும், கடந்த வருடம் (2017) ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகப்பெரிய அளவில் ரீச் கிடைத்தது. குறிப்பாக, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசனை அவர் ‘அப்பா’ என்றுதான் அழைத்தார்.
சுஜா வருணியும், நடிகர் சிவகுமாரும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தனர். சிவகுமார், நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனும் ஆவார். ‘சிங்கக்குட்டி’, 'புதுமுகங்கள் தேவை' உள்ளிட்ட சில படங்களில் இவர் நடித்துள்ளார். சிவகுமார் சிவாஜி தேவ் என்றும் அழைக்கப்படுகிறார்.
இவர்கள் இருவருக்கும் இன்று காலை சென்னையில் திருமணம் நடைபெற்றது.
க்ரவுன் ப்ளாஸா ஹோட்டலில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில், இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், விஷ்ணுவர்தன், நடிகைகள் ஸ்ரீப்ரியா, ராதிகா சரத்குமார், சுஹாசினி மணிரத்னம், லிஸி, வடிவுக்கரசி, ‘காதல்’ சந்தியா, விஜி சந்திரசேகர், நடிகர்கள் சிவகுமார், அஸ்வின், எம்.எஸ்.பாஸ்கர் கவிஞர் சினேகன், திமுகவைச் சேர்ந்த துர்கா ஸ்டாலின், மு.க.தமிழரசு, செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.