அத்தியாயம் – 14
கவியின் முன் அமர்ந்திருந்த பவனின் முகம் இறுகி இருந்தது. வெற்றுப் பார்வை பார்த்தபடியே இருந்தவளை பார்க்க-பார்க்க அவனுக்கு வேதநாயகத்தின் மீது அத்தனை கோபமாக வந்தது. எப்படி இருந்தவளை இப்படி மாற்றி விட்டாரே. தனது சுயநலத்திற்காக சிறு பெண்ணின் வாழ்க்கையை பணயம் வைத்த அவரை கொன்று போட்டால் எண் என்று கூட தோன்றியது.
ஆறுதலாக அவளது கரத்தைப் பற்றியவன் “கவி! மனசை விட்டுடாதே! எதுவும் முடிந்து போகல. உனக்கு நாங்க இருக்கோம்”.
அவனை நிமிர்ந்து பார்த்தவளின் இதழில் விரக்திப் புன்னகை எழ “நன்றின்னு சொல்லி உன்னை தள்ளி வைக்க முடியாது பவா. ஆனா என்னுடைய மனதில் இருக்கும் வலியை உங்கள் யாராலையும் உணர முடியாது”.
“அந்தாள் செய்ததை மன்னிக்க முடியாது கவி. அதற்காக நீ இப்படியே உடைஞ்சு போயிடக் கூடாது. உனக்கு இன்னும் வயசு இருக்கு. உனக்காக இத்தனை பேர் இருக்கோம். இனி ஒருக்காலும் அவனிடம் உன்னை நெருங்க விட மாட்டோம்”.
கண்கள் கலங்க அவனைப் பார்த்தவள் “உங்களுக்கு தெரிந்தது ஒரு பாதி தான் பவா. ஆனா அவர் என்னுடைய சிறகை மொத்தமா உடைச்சு போட்டுட்டார். என் மனம் எப்பவோ மரித்து போயாச்சு. எனது உணர்வுகளை தன்னுடைய செயலாள கொஞ்சம் கொஞ்சமா குத்தி கூறு போட்டுடாங்க” .
அவளது கரங்களை அழுத்தமாகப் பற்றி “எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வு இருக்கும் கவி” என்றான்.
“உங்களை எல்லாம் ரொம்ப கஷ்டப்படுத்துறேன் இல்ல?”
அவளது குரல் உடைந்து போனதை உணர்ந்தவன் “நீ எதைப் பற்றியும் கவலைப்படாதே கவி. உன்னை எதற்காகவும், யாரிடமும் விட்டுக் கொடுக்க மாட்டோம். எந்தவொரு சூழ்நிலையிலும் நானும் அம்மாவும் உனக்கு துணையாக நிற்போம்”.
“எதிர்காலமே இல்லாத எனக்காக நீங்க எல்லாம் எதுக்கு கவலைப்படணும் பவா. என்னை எங்காவது கண்காணாத இடத்தில் கொண்டு விட்டுடுங்க” என்றவளை இடைமறித்தவன் “என்ன பேசுற கவி? நான் கேட்கிறதுக்கு மறைக்காம பதில் சொல்லு? உனக்கும் ரிஷிக்கும் என்ன பிரச்சனை?”
அவனது கேள்வியில் அதிர்ந்தவளின் முகம் வெளிறிப் போக “எதுவுமில்லை” என்றாள்.
“எனக்கு வேண்டியது உண்மையான பதில் கவி. உங்கள் இருவரின் அன்பையும் அருகே இருந்து பார்த்தவன் நான். ரிஷியிடம் இப்பவும் அந்த அன்பை பார்க்கிறேன். ஆனா நீ தான் ஏதோவொரு காரணத்திற்காக அவனிடமிருந்து ஒதுங்கிப் போகிறாய். அது என்ன?”
அடுக்கடுக்கான கேள்வியில் முகம் ரத்தப் பசையை இழக்க சட்டென்று இருக்கையிலிருந்து எழுந்து கொண்டவள் “என்னை எதுவும் கேட்காதே. எனக்கு எந்த பதிலும் தெரியாது” என்று கூறி பின்னோக்கி நகர்ந்தாள்.
அவளின் முகத்தில் தெரிந்த பயத்தையும், வலியையும் குறித்துக் கொண்டவன் “அப்போ நீ தான் தப்பு செய்றியா கவி? ரிஷியை ஏமாற்றப் பார்க்குறியா?” என்றான் கடுமையாக.
அவனது கேள்வியில் அதிர்ந்தவளின் விழிகளில் கண்ணீர் தடம். நீயா பவா என்னை இப்படி கேட்டது என்கிற கேள்வி இருந்தது.
அவளது இதழ்களோ “நானா ஏமாற்றுகிறேன்...இல்ல..இல்ல” என்றபடி தட்டுதடுமாறி நகர, ஒரு கட்டத்திற்கு மேல் மயங்கி தடாரென்று கீழே விழுந்தாள்.
அதைக் கண்டதும் பதறி போய் அவளை தூக்க முயற்சி செய்ய, அவளது இதழ்களோ “நானில்லை! அம்மா ஏம்மா என்னைப் பெத்த?” என்று புலம்பிக் கொண்டிருக்க, அலேக்காக அவளைத் தூக்கிக் கொண்டிருந்தவனின் காதுகளில் கடைசியாக அவள் சொன்ன வார்த்தை விழ, அது தந்த தாக்கத்தின் காரணமாக அவளுடனே அருகே இருந்த நாற்காலியில் விழுந்து விட்டான்.
மனமோ இவள் என்ன சொல்கிறாள் என்று அலறிக் கொண்டிருந்தது. அவளது வாயிலிருந்து தெரியாமல் வார்த்தைகள் வந்துவிட்டதா? என்று அவளை மீண்டும் பார்க்க, அப்போதும் அவள் சொன்னதையே தான் சொல்லிக் கொண்டிருந்தாள். அவனால் ஜீரணிக்க முடியவில்லை. அங்கு யாரும் இல்லை என்றாலும் வேறு யார் காதிலும் விழுந்துவிடக் கூடாது என்றெண்ணி அவளது வாயை மூடினான்.
அவனது கன்னங்களை கண்ணீர் தொட, மடியில் அவள் இருப்பதையும் மறந்து அப்படியே அமர்ந்து விட்டான். மனமோ கடவுளே அவளுக்கு ஏன் இந்த சோதனை என்று கதறிக் கொண்டிருந்தது. அதே சமயம் வேதநாயகத்தை அடித்து வெளுக்கும் வெறியும் எழுந்தது.
ஒருவாறு தன்னை சமாளித்துக் கொண்டவன் அவளை அங்கிருந்த படுக்கையில் படுக்க வைத்துவிட்டு தன்னை சீர்படுத்திக் கொண்டு வந்தவன், அவளது மயக்கத்தை தீர்க்க ஏற்பாடு செய்தான். என்னதான் தன்னை சமாளித்துக் கொண்டாலும் அவனது முகம் மட்டும் இறுகி கிடந்தது.
மெல்ல எழுந்தவள் பவனைப் பார்த்து “சாரி பவா! மன உளைச்சல் எனக்கு அடிக்கடி இப்படி ஆகிடுது” என்றாள்.
“விடு! இனி, தேவையில்லாததை எல்லாம் நினைக்காம என்னுடைய பாதுகாப்பில் அமைதியாக இரு. ஜூஸ் கொண்டு வரேன் குடிச்சிட்டு ரெஸ்ட் எடு” என்று கூறி அங்கிருந்து வெளியேறினான்.
அவளுக்கு தான் உளறிய எதுவும் நினைவில்லை ஆதலால் அமைதியாக அமர்ந்திருந்தாள். அந்நேரம் அருணா கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவர் “என்னடா கவி என்னவோ ஒரு மாதிரி இருக்க?” என்று அவள் அருகே சென்றமர்ந்தார்.
பட்டென்று அவரது மடியில் அப்படியே படுத்து விட்டாள். தன்னை மீறி கன்னங்களை கண்ணீர் நனைக்க “என்னை உங்களோடவே கூட்டிட்டுப் போயிடுங்க அத்தை” என்றாள்.
அந்நேரம் உள்ளே நுழைந்த பவன் “கவி!” என்று ஒரு அதட்டல் போட்டு “எழுந்திரு! இனி, உன் கண்ணில் கண்ணீரைப் பார்க்கவே கூடாது. நீ எவ்வளவு தைரியமான பொண்ணு. முதல்ல இதை குடி” என்றவன் அன்னையிடம் திரும்பி “அம்மா! நான் சில முடிவுகள் எடுத்திருக்கிறேன். அதுக்கு உங்க சம்மதம் எனக்கு முக்கியம்” என்றான் அழுத்தமான குரலில்.
அவனை நிமிர்ந்து பார்த்தவர் “எனக்கு எப்பவுமே உன்னுடைய முடிவுகளில் சம்மதம் உண்டு பவா. நீ என்ன செய்யணுமோ செய்” என்றார்.
சற்று நேரம் யோசித்தவன் “சரிம்மா! நான் சில ஏற்பாடுகளை செய்துவிட்டு உங்க கிட்ட வரேன். நீங்க போன விஷயம் என்னாச்சு?” என்றான் கூர்மையான பார்வையுடன்.
மகனைப் பார்த்தவரின் இதழ்களில் வெற்றுப் புன்னகை “என்னை எதிர்பார்க்கல. அம்மா நினைத்ததை நடத்திட்டாங்க. அதே சமயம் என்னை மன்னிக்கவும் இல்ல பவா” என்றார் பரிதாபமாக.
வேகமாக அன்னை அருகில் சென்றவன் அவரை அணைத்து விடுவித்தவன் “பாட்டியின் மனசு நிச்சயம் மாறும் அம்மா. நீங்க எதை நினைத்தும் கவலைப்படாதீங்க” என்றான் ஆறுதலாக.
மகனை நிமிர்ந்து பார்த்து “இனி, நீ ரொம்ப கவனமா இருக்கணும் பவா. அவரின் முகத்தில் ரௌத்திரம் தெரிந்தது. ஆசாபாசங்கள் இல்லாத மனிதர் ஒருவர் உண்டென்றால் அது அவர் தான். எதையும் துணிஞ்சு செய்வார். அதனால உங்க எல்லோருடைய பாதுகாப்பும் முக்கியம்”.
அதைக் கேட்டதும் அவனது முகம் மேலும் இறுக “நான் பார்த்துக்கிறேன்-மா. நீங்களும் ரெஸ்ட் எடுங்க” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.
மீட்டிங்கை முடித்துக் கொண்டு ரிஷியுடன் அனைவரும் அவனது மாளிகைக்கு சென்று இறங்கியதும், அங்கே ஹாலில் ஒருவித டென்ஷனுடன் அலைந்து கொண்டிருந்த லோகநாயகி வேகமாக ஓடி வந்தார்.
“அருணா வந்தாளாமே? அவ எப்படி திடீர்னு வந்தா?” என்று தன்னை மறந்து கேட்டுவிட்டார்.
செங்கமலமோ அவரை முறைத்துவிட்டு தெய்வநாயகியைப் பார்த்து “உனக்கு மீட்டிங்கிற்கு யார்-யார் வந்தாங்கன்னு தெரியுமா தெய்வா?” என்று கேட்டார்.
அவரோ மறுப்பாக தலையசைத்து “தெரியாது அத்தை!” என்றவரை விட்டுவிட்டு லோகநாயகியிடம் திரும்பியவர் “உனக்கு எப்படி அருணா வந்தது தெரியும்? ம்..?” என்றார் மிரட்டலாக.
அப்போதுதான் உளறிவிட்டதை உணர்ந்தவர் “அது வந்து நானா கேட்டேன். அங்கே நடப்பது எனக்கெப்படி தெரியும்”.
தனது கூர்மையான விழிகளால் அவரை அளவிட்டவர் “உள்ளே வா உன் கிட்ட பேசணும்” என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.
ரிஷியும், மித்ராவும் மெல்ல தங்களுக்குள் பேசியபடி உள்ளே செல்ல, லோகநாயகிக்கு பாட்டியை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்கிற பயம் எழுந்தது. தயங்கி உள்ளே சென்று தனதறைக்குள் நுழைய இருந்தவரை தடுத்தது செங்கமலத்தின் குரல்.
“லோகா இங்கே வா!”
உள்ளுக்குள் புலம்பியபடியே வெளியில் காட்டிக் கொள்ளாமல் “என்னால உங்களுக்கு வேலை எல்லாம் செய்ய முடியாது” என்றார் தெனாவெட்டாக.
அவளை ஏளனமாகப் பார்த்து “நான் கேட்கிற கேள்விக்கு பதிலை சொல்! அருணா வந்தது உனக்கு எப்படி தெரியும்?”
அவர் அந்த கேள்வியைக் கேட்டதும் தெய்வநாயகி அதிர்ந்து நிற்க, ரிஷியும், மித்ராவும் லோகநாயகியை கவனிக்க ஆரம்பித்திருந்தனர்.
“நான் சும்மா தான் கேட்டேன். இத்தனை வருஷம் கழிச்சு நீங்களே வந்திருக்கும் போது உங்க பொண்ணு வர மாட்டாங்களா?” என்றார் சுதாரிப்பாக.
அதுவரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த தெய்வநாயகி “அக்கா வந்திருக்காங்களா அத்தை?”.
“ம்ம்...வந்திருக்கா! லோகா நீ எனக்கு இன்னும் பதில் சொல்லல. உனக்கு ஆபிசிலிருந்து யார் தகவல் சொல்றது?”
“எனக்கு யார் சொல்வா? ஆபிசில் இருப்பவங்களை எனக்கு எப்படித் தெரியும்? அதோட நீங்க என்ன இத்தனை கேள்வி என்னை கேட்குறீங்க?” என்று வேண்டுமென்றே எகிறினார்.
அப்போது ரிஷியின் நாய் ஒன்று உள்ளே வந்துவிட, அது நேரே சென்று அவன் மீது விழுந்து பிரண்டு விளையாட ஆரம்பித்தது. மித்ராவிற்கு அதை பார்த்ததும் ஆசை இருந்தாலும் நாய் என்றால் அவளுக்கு பயம். அதனால் சற்று தள்ளி அமர்ந்து கொள்ள நினைத்து எழுந்து நின்றவளைக் கண்டதும் அதற்கு குஷியாகி விட்டது. அவளின் மேல் கால் வைக்கப் போக, அவளோ அலறி அடித்துக் கொண்டு பின்னால் நகர, அது அவள் விளையாடுகிறாள் என்றெண்ணி அவளை துரத்த இருவரும் ஹாலை சுற்றி-சுற்றி ஓட ஆரம்பித்தனர். அனைத்தையும் மறந்து ரிஷி சுவாரசியமாக இருவரையும் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். மிகுந்த உற்சாகமாகிப் போன நாய் அவளை விடாது துரத்த, அவள் எங்கு செல்வதென்று தெரியாமல் திறந்திருந்த லோகாவின் அறைக்குள் சென்று விட்டாள். நாயும் வேகமாக அவளைத் துரத்த, அவளோ சென்ற வேகத்தில் அங்கிருந்த ஒரு ஸ்டூலின் மீது மோதி கீழே சாய்ந்து விட, நாய் அவளின் இரு பக்கமும் கால்களைப் போட்டபடி நின்று கொண்டது.
லோகாவோ மித்ரா தன்னறைக்குள் நுழைந்ததுமே பதட்டமாகி போனவர் வேகமாக அங்கே செல்ல முயல, ரிஷி அவரை நிறுத்திவிட்டு தானே சென்றான். முகமெல்லாம் வியர்வை துளிகள் பெருக்கெடுக்க, கைகளை பிசைந்தபடியே பார்த்துக் கொண்டிருந்தார்.
செங்கமலம் லோகாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
நாய் இருபக்கமும் கால்களை போட்டுக் கொண்டு நிற்பதை கண்டவள் பயந்து போய் வீலென்று அலற ஆரம்பித்தாள். அதுவரை விளையாட்டாக எண்ணி இருந்தவன் அந்த சப்தத்தில் அடித்து பிடித்து அங்கே ஓடினான். அங்கு அவள் இருந்த நிலையைப் பார்த்ததும் சத்தமாக சிரிக்க ஆரம்பித்து விட்டான்.
அவளோ கண்களை இறுக மூடிக் கொண்டு “ப்ளீஸ்! ப்ளீஸ்! என்னை காப்பாத்துங்க ரிஷி” என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
மெல்ல நாயை அவளிடமிருந்து தள்ளி இருக்க செய்துவிட்டு, கைகொடுத்து அவளை தூக்கி விட்டவன் தன்னுடைய சிரிப்பை அவள் காணாதவாறு அடக்கிக் கொண்டான்.
அவளோ அவனது கைகளை விடாது இறுக்கிப் பிடித்துக் கொண்டு அறையை விட்டு வெளியேற முயற்சித்தாள். அவனும் எதுவும் பேசாது அவள் இழுத்த இழுப்பிற்கு பின்னே சென்று கொண்டிருந்தவனின் பார்வை ஓரிடத்தில் அதிர்வுடன் நின்றது.
நீலோற்பலத்தில் அவன் கண்ட பொம்மை அங்கே சுவர் ஓரமாக கிடந்தது.