அத்தியாயம் – 3
புனேவின் போஷ் ஏரியா என்று சொல்லப்படுகின்ற பகுதியில் அமைந்திருந்த அந்த பங்களாவில் முகத்தில் நிறைந்த கவலையோடு அமர்ந்திருந்தார் செங்கமலம். அவரின் முன்பு அமர்ந்திருந்த பூமினாதனுக்கு அவரின் கவலைக்கான காரணம் தெரியவில்லை.
“என்னாச்சும்மா? காலையில இருந்து கவலையாவே இருக்கீங்கன்னு ராணி சொன்னா”
மகனை ஒருபார்வை பார்த்துவிட்டு “விஷம்னு தெரியும் ஆனா இத்தனை கேவலமானவனா இருப்பான்னு கொஞ்சம் கூட நினைக்கலடா”.
தலையும் புரியாமல் வாலும் புரியாமல் அன்னை பேசும் வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாமல் குழம்பி போய் அமர்ந்திருந்தார்.
“அப்போவே சொன்னேன் அவனை சேர்க்காதீங்கன்னு. யாரும் கேட்கல”.
“மா! என்ன சொல்றீங்க? எனக்கு ஒன்னும் புரியல”.
மகனை ஆழ்ந்த பார்வை பார்த்த செங்கமலம் “எனக்கு தகவல் வந்திருக்கு. அவன் ஆட ஆரம்பிச்சிட்டான்” என்றார் கவலையாக.
பூமினாதனோ மண்டை காய்ந்து போய் “ராணி! இங்கே வா! அம்மா என்னென்னவோ பேசுறாங்க. என்னன்னு கேளு” என்றார் சப்தமாக.
சோபாவிலிருந்து எழுந்து கொண்ட செங்கமலம் “மித்ராவையும் கூப்பிடு. நாம இன்னைக்கு ஒரு முடிவெடுத்தாகனும்”.
ராணி அங்கே வந்துவிட “என்னத்த? என்ன விஷயம்னு உடைச்சு சொன்னாத்தானே தெரியும்?”
மருமகளின் கையைப் பிடித்து தன்னருகே அமர்த்திக் கொண்டவர் “பூமி! நீயும் உட்கார். நான் என்ன சொல்ல வரேன்னு புரியலையா? கொடைக்கானலில் இருந்து தகவல் வந்திருக்கு”.
அதுவரை அங்கிருக்கும் விவகாரங்களை பற்றி அவர் பேசுகிறார் என்றெண்ணி இருந்த பூமிநாதனுக்கு இதை கேட்டதும் மிகுந்த அதிர்ச்சி.
“என்னமா சொல்றீங்க? அங்கிருந்து உங்களுக்கு யார் தகவல் சொல்றா?”
அவரின் கேள்விக்கு பதிலளிக்காமல் இருந்தவர் “நீ மித்ராவை உடனே வர சொல்லு” என்றார்.
கொடைக்கானளைப் பற்றிய செய்தி என்றதுமே கலவரமான பூமிநாதன் அடுத்து அன்னை கூறிய செய்தியில் கோபமடைந்தார்.
“அவ எதுக்கும்மா வரணும். எதுவாக இருந்தாலும் எங்க கிட்ட சொல்லுங்க”.
அவரோ எதையோ யோசித்தபடி “அந்த வேதநாயகம் ஆட ஆரம்பிச்சிட்டான்டா. அவன் ராஜநாகம். ரிஷியை அவன் கிட்ட தனியாக மோத விடுறது தப்பு. வேதநாயகம் எதற்கும் துணிந்தவன். எங்கப்பா ஆரம்பித்த ஸ்வான் லேக் குழுமம் கண்டவன் கையில் போய் சேரக் கூடாது” என்றார் கோபமாக.
அதைக் கேட்டதும் கணவன் மனைவி இருவரும் பயந்து போய் “என்னத்தை சொல்றீங்க? என்னம்மா சொல்ற?” என்றனர்.
“ஆமாண்டா! ரிஷிக்கு உதவியா நாம இருக்கணும்” என்று குண்டை தூக்கிப் போட்டார்.
பூமிநாதன் கோபத்தோடு அன்னையை முறைத்து “லூசுத்தனமா பேசாதீங்க அம்மா. உங்க அண்ணனும் இல்லை அவர் பெத்த மகனும் உயிரோட இல்லை. நாம அவர்களை எல்லாம் விட்டு விலகி வந்து முப்பது ஆண்டுகள் ஆகுது. அப்புறம் ரிஷி ஒன்னும் குழந்தை இல்லை. உலகம் முழுக்க வியாபாரத்தை பெருக்கி இருப்பவனுக்கு இந்த வேதநாயகத்தை சமாளிக்க முடியாதா? தேவையில்லாத விஷயத்தை பத்தி யோசிச்சு பிபியை எத்திக்காதீங்க” என்று கடுமையாக திட்டினார்.
ராணியும் “ஆமாம் அத்தை. கோவிலுக்குப் போகணும்னா சொல்லுங்க அழைச்சிட்டு போறேன். இந்த விவகாரம் எல்லாம் வேண்டாம்” என்றார்.
இருவரையும் ஒருபார்வை பார்த்துவிட்டு மனதிற்குள் ஒரு கணக்கை போட்டுக் கொண்டு “சரி சரி போய் வேலையை பாருங்க” என்று எழுந்து உள்ளே சென்றார்.
பூமிநாதனோ அன்னையை சந்தேகமாகப் பார்த்துக் கொண்டே மனைவியிடம் “அவங்களுக்கு யார் போன் செஞ்சாங்கன்னு தெரியுமா? எதுக்கும் அம்மா மேல ஒரு கண்ணை வை. நாம சொன்னாலும் அவங்க சும்மா இருக்க மாட்டாங்க. முக்கியமா மித்ராவை அவங்க இருக்கிற பக்கம் விடாதே” என்று கூறிவிட்டு தன்னறைக்குச் சென்றார்.
லோனாவாலாவின் காட்டுப் பகுதியில் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற ரிசார்ட்டான காஷியுரீனா ரிசார்ட்டின் அலுவலகத்தில் தனதறையில் அமர்ந்திருந்தவளின் முன்னே நின்றிருந்தவர்களை கூர்மையாக ஆராய்ந்து கொண்டிருந்தாள் மித்ரரூபினி.
கையிலிருந்த பேனாவை உருட்டிக் கொண்டே “சோ நான் கொடுக்கிற சம்பளம் உங்களுக்கு பத்தல. அதனால வந்திருக்கிற கெஸ்ட் கிட்ட வியாபாரம் பேசி இருக்கீங்க” என்று கேட்டவளின் குரலில் இருந்தது என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை.
எதிரே நின்றிருந்த இருவரும் ஏசி அறையிலும் வியர்த்து வழிய தலைகுனிந்து கொண்டனர்.
“ம்ம்...வீடு கொடுத்து பசங்களுக்கு ஸ்கூல் பீஸ் கட்டி மருத்துவ செலவிற்கு இன்சுரன்ஸ் எடுத்து கொடுத்தும் உங்களுக்கு பத்தல. அப்போ ஓகே! இந்த நிமிஷமே உங்க ரெண்டு பேரையும் வேலையை விட்டு அனுப்பிடுறேன். உங்களுக்கு ரெண்டே மணி நேரம் டைம். நீங்க இருந்ததற்கான அடையாளமே இருக்க கூடாது. அவுட்!” என்று அறையை விட்டு வெளியேறும் படி கையை காட்டினாள்.
அவர்களோ அவள் கூறியதை கேட்டு பதறி போய் “மேம்! இனி அந்த தவறை செய்ய மாட்டோம். ஊரே ஒரு முறை சான்ஸ் கொடுங்க” என்று கெஞ்சினார்கள்.
அவளோ சுழல் நாற்காலியிலிருந்து எழுந்து கொண்டு போனை எடுத்து “கார்ட்சை வர சொல்லுங்க” என்று கூறி வைத்தாள்.
இருவரும் பொதேர் என்று அவளது காலில் விழுந்துவிட, அந்நேரம் கதவை திறந்து கொண்டு வந்த பூமிநாதன் அதிர்ச்சியுடன் அதை பார்த்தார்.
அவரை ஒருபார்வை பார்த்துவிட்டு “நம்ம கெஸ்ட் கிட்ட கர்ல்ஸ் வேணுமான்னு கேட்டு பேரம் பேசி இருக்காங்க. இவங்களுக்கு இரண்டு மணி நேரம் மட்டும் அவகாசம் கொடுத்திருக்கேன். இங்கிருந்து போக, நீங்க எதுவும் ஹெல்ப் பண்ணக் கூடாது. மீறி செஞ்சா நான் நிர்வாகத்தை பார்ப்பதை விட்டுடுவேன்” என்று மிரட்டலாக கூறிவிட்டு ரிசார்ட்டை சுற்றி வர கிளம்பி விட்டாள்.
மகளின் கோபத்தை அறிந்தவரால் அவர்கள் இருவருக்கும் உதவ இயலாமல் போனது. நிர்வாகம் என்று வந்துவிட்டால் மித்ரா தவறுகளை பொறுக்கவே மாட்டாள். அவளிடம் தண்டனையின்றி தப்பிப்பது நடக்காத காரியம். அவளுக்கு இந்த ஹோட்டல் தொழிலில் தீராத ஆர்வம் உண்டு. தங்களது வியாபாரத்தை உலகம் முழுவதும் விஸ்தரிக்க வேண்டும் என்கிற ஆசை நிறைய உள்ளது.
பாட்டி செங்கமலத்தின் மீது அதீத பாசம் உடையவள். அவரின் வாக்கை வேதவாக்காக நினைப்பாள்.
ரிசார்ட்டை சுற்றி பார்த்துக் கொண்டே வந்தவளின் அலைப்பேசி அழைக்க, அதில் பாட்டியின் எண் இருந்ததும் “என்ன பாட்டி போர் அடிக்குதா? இந்த நேரத்துக்கு கூப்பிட்டு இருக்கீங்க?” என்றாள் மெல்லிய சிரிப்புடன்.
அவரோ பதற்றத்துடன் மருமகள் தான் பேசுவதை பார்த்து விடக் கூடாது என்கிற எண்ணத்துடன் மெல்லிய குரலில் “மித்து நான் சொல்றதை கேளு. உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும். உங்கப்பனும், அம்மாவும் என்னை பேச விட மாட்டாங்க. அதனால ஓம் காரேஷ்வர் மந்திருக்கு வந்துடு. உங்கம்மாவை ஏமாத்திட்டு நாம பேசிடலாம்”.
பாட்டியின் பேச்சு அவளுக்கு சிரிப்பைக் கொடுக்க “என்ன பாட்டி ஜேம்ஸ் பாண்ட் மாதிரி ப்ளான் போடுறீங்க?” என்றாள் சிரிப்போடு.
“மித்து! உன்னோட பாட்டி காரணமில்லாம எதையும் செய்ய மாட்டான்னு தெரியுமில்லையா?சீக்கிரம் வந்து சேர்” என்று அதட்டிவிட்டு போனை வைத்து விட்டார்.
அப்படி என்ன ரகசியம் தாய் தந்தைக்கு தெரியாமல் பாட்டி சொல்லப் போகிறார் என்கிற யோசனையுடன் வாசலுக்கு வந்தவள் அங்கே நின்றிருந்த டிரைவரிடம் காரை எடுக்க கூறினாள்.
சுமார் பதினைந்து நிமிட பயணத்திற்குப் பின் ஓம் காரேஷ்வர் மந்திர் வாயிலில் இறங்கி உள்ளே சென்றாள். அவளது பார்வை பாட்டியை தேடியபடியே இருந்தது. சற்று தூரத்தில் அன்னையின் கையைப் பிடித்தபடி வந்து கொண்டிருக்கும் பாட்டியை பார்த்துவிட்டு, அங்கே சென்று கொண்டிருந்த ஒரு குழந்தையை நிறுத்தி அதனிடம் செய்தியை சொல்லி அனுப்பினாள்.
அந்தக் குழந்தை ராணியிடம் சென்று யாரோ அவரை அழைப்பதாக கூற, யோசனையுடன் “அத்தே! இங்கேயே நில்லுங்க. நான் யாருன்னு பார்த்திட்டு வந்துடுறேன்” என்று கோரி குழந்தையின் பின்னே சென்றார்.
அவர் நகர்ந்ததுமே வேகமாக சென்று பாட்டியின் கைகளைப் பற்றி காருக்கு அருகே அழைத்து வந்து காரில் ஏற்றியவள் டிரைவரை அழைத்து உடனே காரை எடுக்கும் படி கூறினாள். செங்கமலமோ பெருமையுடன் பேத்தியை பார்த்து கண்சிமிட்டிவிட்டு ‘உங்கம்மாவுக்கு கூப்பிட்டு சொல்லிடு...சாமியை கும்பிட்டிட்டு வீட்டுக்கு போக சொல்லு. நாம பேசி முடிச்சிட்டு வரோம்னு சொல்லு” என்றார் சிரிப்போடு.
அவரின் பேச்சில் தெரிந்த கிண்டலை சிரிப்போடு கேட்டுக் கொண்டு அன்னைக்கு அழைத்து விஷயத்தை சொல்லிவிட்டு காரை எடுத்தார்கள். சிறிது தூரம் சென்றதும் ட்ரைவரை இறக்கிவிட்டு அவளே ஓட்ட, செங்கமலம் முப்பது வருடத்து கதையை சொல்ல ஆரம்பித்தார்.
அவளுக்கு வேண்டிய தகவல்களை கொடுத்துவிட்டு, சில தகவல்களை மறைத்து விட்டார்.
அனைத்தையும் கேட்டுக் கொண்டவள் “இப்போ நாம என்ன செய்ய முடியும் பாட்டி? என்ன இருந்தாலும் அவங்க குடும்பத்தை பொறுத்தவரை நாம வெளியாள் தானே?”
“யார் சொன்னா மித்து? அந்த காலத்திலேயே எங்கப்பா பொண்ணுக்கும் தொழிலில் பங்கு உண்டுன்னு என்னையும் ஒரு பங்குதாரரா ஆக்கி இருக்கார்”.
காரை நிறுத்திவிட்டு அவரை திரும்பிப் பார்த்தவள் “அது தான் உங்க பவர் எல்லாம் அண்ணன் குடும்பத்துக்கு எழுதி கொடுத்திருக்கீங்களே. அப்புறம் எப்படி நீங்க இதில் தலையிட முடியும்?”
மர்மப் புன்னகையுடன் “அப்படி மொத்தமா எழுதிக் கொடுக்க நானொண்ணும் முட்டாள் இல்லை மித்து. ஒவ்வொரு வருடமும் அந்த பவர் புதுப்பிக்கப்படும்” என்றார் கண்களை சிமிட்டி.
“வாவ்! நீங்க கேடி பாட்டி தான். அப்போ நீங்க ஒரு பங்குதாரரா அங்கே போக போறீங்க? உங்களால அந்த வேதநாயகத்தை சமாளிக்க முடியுமா?”
“போக போறது நானில்லை மித்து! நீ தான்”.
“வாட்! நானா? என்ன சொல்றீங்க?”
“ஆமாம் மித்து! நான் கொடுத்த பவரை மாற்றி எழுதணும். என்னோட பங்குகள் எல்லாம் உன் கைக்கு வந்து சேரனும். நீ அங்கே போய் அந்த வேதநாயகத்தை ஓட வைக்கணும்”.
அதை கேட்டதும் இதழ்களில் எழுந்த கிண்டலான புன்னகையுடன் “அது தான் உங்க பேரன் உலகப் புகழ் பிசினெஸ் மக்நெட் ரிஷிவர்மன் அதை செய்ய மாட்டானா?” என்றாள் சிறு பொறாமையுடன்.
செங்கமலத்திற்கு ரிஷியை பற்றி பெருமை பேசி மாளாது. அவர் அடிக்கடி மித்ராவிடம் அவனைப் பற்றி பேசி கடுப்பேற்றிக் கொண்டிருப்பார். அவளது கனவை அவன் நனவாக்கிக் கொண்டிருக்கிறானே. அவளுக்கு அந்த வாய்ப்பு கை நழுவி போய் கொண்டே இருக்கிறேதே. அதனால் அவன் மேல் சிறு பொறாமை உண்டு அவளுக்கு.
பேத்தியின் பொறாமையை அறிந்தவர் தனக்குள் சிரித்துக் கொண்டு “ரிஷியை சதிவலையில் சிக்க வச்சிருக்கான் மித்து. வேதநாயகம் இப்படியொரு மோசமான காரியத்தை செய்வான்னு நானும் நினைக்கல. ரிஷி பாவம். ஆனா கோவக்காரன். நீ போறது ரிஷிக்கு தோள் கொடுக்கவும், ரிஷியிடமிருந்து வேதநாயகத்தை காப்பாற்றவும் தான்”.
“என்ன சொல்றீங்க பாட்டி? வேதநாயகம் தப்பு பண்ணி இருக்கார். அவரை எதுக்கு நான் காப்பாற்றனும்?’
“ரிஷி அவனை உரு தெரியாம அழிச்சிடுவான். எனக்கு தேவை வேதநாயகத்தை ஸ்வான் லேக் குழுமத்திலிருந்து ஒதுக்கணும். அவனுக்கும் அந்த குழுமத்திற்கும் சம்மந்தம் இருக்க கூடாது. அதை ரிஷி செய்ய மாட்டான்”.
“உங்க ப்ளானுக்கு அப்பா சம்மதிக்க மாட்டார் பாட்டி” என்றாள் யோசனையாக.
“எனக்கு உங்கப்பன் சம்மதம் தேவையில்லை. நீ சம்மதிக்கணும். நிறைய போராட்டங்களை சமாளிக்க தயாராகணும்”.
சற்று நேரம் அமைதியாக இருந்தவள் “எனக்கு ஒரு நாள் டைம் கொடுங்க பாட்டி. நான் இன்னும் சில விஷயங்களை தெரிஞ்சுக்கணும் நினைக்கிறேன். அதுக்குப் பிறகு என்னோட முடிவை சொல்லிடுறேன்”.
அவளை கூர்ந்து பார்த்தவர் “ஒரு நாள் மட்டும் எடுத்துக்கோ மித்து. நாம நினைச்சாலும் நேரம் காலம் நமக்கு ஒத்துழைக்காது. ஏன்னா நிலைமை தீவிரம் அடைவதற்குள் நாம உள்ளே நுழைந்தாகனும்”.
“ம்ம்...சரி பாட்டி” என்றாள் யோசனையுடன்.
அதன்பின் இருவரும் தங்களுக்குள் பேசிக் கொள்ளவில்லை அமைதியாக தங்களின் சிந்தனையில் உழன்றபடி வீடு வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு முன்னே வீட்டிற்கு வந்திருந்த பூமிநாதன் கோபத்தோடு அன்னையை முறைத்துவிட்டு மித்ராவிடம் சென்றார்.
“என்ன மித்து! பாட்டி ஏதாவது பழைய கதைகளைப் பேசி குழப்பிகிட்டு இருப்பாங்க. நீ தேவையில்லாம இதெல்லாம் யோசிக்காதே. நம்ம பிஸ்னெஸ் வேலைகளே நமக்கு நிறைய இருக்கு” என்று படபடவென்று பொரிந்தார்.
ராணியும் “ஆமாம்-டா மித்து. நமக்கு எதுக்கு அடுத்தவங்க வீட்டு விவகாரம்?”
இருவரையும் ஒரு நிமிடம் நின்று தீர்க்கமாக பார்த்தவள் “சில முடிவுகளை எடுக்க நான் பாட்டி கிட்ட ஒரு நாள் டைம் கேட்டிருந்தேன். நீங்க ரெண்டு பேரும் பதட்டப்படுவதை பார்த்து இப்போ முடிவே பண்ணிட்டேன்” என்றவள் பாட்டியிடம் திரும்பி “பவர் மாத்துறதுக்கான ஏற்பாட்டை நாளைக்கே கவனிக்கிறேன் பாட்டி. ஆனா ஒரு கண்டிஷன் நீங்க என்னோட அங்கே வரணும்” என்றாள்.
பூமிநாதன் அதிர்ந்து “மித்து! வேண்டாம்-டா. அந்த வேதநாயகம் மோசமானவன்” என்றார் பயத்தோடு.
செங்கமலம் மகனை பார்த்து கிண்டலாக சிரித்து “வேதநாயகம் கண்ணில் விரலை விட்டு ஆட்ட நம்ம மித்துவால தான் முடியும். நீ சும்மா இருடா நாங்க பார்த்துக்கிறோம்” என்றார் உற்சாகமாக.
ராணியோ “அத்த! கல்யாண வயசில் இருக்கிற பெண்ணை தேவையில்லாத விவகாரத்தில் இழுத்து விடாதீங்க”.
மருமகளை பார்த்து மர்மமாக சிரித்தவர் “நீங்க ரெண்டு பேரும் எதுக்கும் கவலைப்படாதீங்க. நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்”.
பூமிநாதனுக்கு மனசே கேட்கவில்லை. அவருக்கு அம்மா செய்வது சுத்தமாக பிடிக்கவில்லை.
கொடைக்கானலில் நிகழப் போகும் பிரச்சனைகளை எண்ணி கவலையடைந்தார்.
மித்ராவோ தனக்கு தெரிய வேண்டிய தகவல்களை சேகரிக்க ஆரம்பித்திருந்தாள். அதில் ஒன்று ரிஷியைப் பற்றியும் அவனது செயல்பாடுகள், கவிக்கும் அவனுக்குமான உறவு, அதில் எழுந்துள்ள விரிசல் என்று அனைத்தும் அந்த நாளின் முடிவில் அவள் கைகளுக்கு வந்திருந்தது.
வேதநாயகத்தை பற்றி அவள் அறிந்து கொண்டதும், தான் கண்டிப்பாக அங்கு சென்றாக வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டாள். அவளது மனம் பல கணக்குகளை போட ஆரம்பித்தது.
முப்பது வருடமாக தன்னுள் எரிமலையை அடக்கி வைத்துக் கொண்டிருந்த ஸ்வான் லேக் குழுமம் இனி வெடித்து சிதறி சுனாமி என்னும் ஆழிப் பேரலையை உருவாக்கப் போகிறது...அதில் பல மனங்கள் காயப்பட்டுப் போகும், பல மனங்கள் ஜடமாகி போகும்...பிழைத்து கிடக்கப் போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...