அத்தியாயம் – 8
வேதநாயம் ஒருவித பதட்டத்துடன் நடந்து கொண்டிருந்தார். அவருக்கு செங்கமலமும் அவரது பேத்தியும் வந்திறங்கிய செய்தி தெரிக்கப்பட்டிருந்தது. செங்கமலத்தின் வரவு அவர் மனதில் சலனத்தை உருவாக்கி இருந்தது. இத்தனை வருடத்திற்கு பின் அவர் ஏன் இங்கு வந்திருக்கிறார்? நிச்சயம் அதன்பின்னே வலுவான காரணம் இருக்க கூடும் என்று மனம் உரைத்தது.
அதிலும் மித்ராவின் நடவடிக்கை அவரது சந்தேகத்தை உறுதி செய்தது. தனக்கு தெரிந்த ஆட்களின் மூலம் அவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முயன்றார். அதற்கான பலன் பூஜ்யம்.
அவர்களைப் பற்றிய தகவல்கள் எதையும் பெற முடியவில்லை.
அலைப்பேசியை எடுத்து யாருக்கோ அழைத்தவர் “இன்னுமா கண்டுபிடிக்கல? அந்தக் கிழவி எதுக்கு வந்திருக்கா? காரணமில்லாமல் இத்தனை வருஷம் கழிச்சு அந்த வீட்டுக்கு அவ வரமாட்டா...ஒழுங்கா கண்டுபிடிச்சு சொல்லு” என்று மிரட்டிவிட்டு வைத்தார்.
அவர் முகத்தில் சிந்தனை கோடுகள். பவன் ஒருபுறம் வந்திருக்கிறான். செங்கமலம் ஒருபுறம் வந்திறங்கி இருக்கிறார். தன்னைச் சுற்றி சதிவலை பின்னப்படுகிறதோ என்கிற யோசனை எழுந்தது.
சற்று நேரம் யோசித்தவர் ஒரு முடிவுடன் டிரைவரை அழைத்து வண்டியை எடுக்கச் சொல்லி போலீஸ் ஸ்டேஷனிற்கு சென்றார்.
“கவி பத்தி எதுவும் தெரிஞ்சுதா சார்?”
“அவங்க கொடைக்கானல் விட்டு வெளியே போகலன்னு மட்டும் உறுதியா சொல்ல முடியும் சார். அவங்களை கடத்தினது யாருன்னு இன்னும் தெரியல”.
அவரோ கோபத்தோடு “அந்த ரிஷியைப் பிடித்து நல்லா விசாரிங்க சார்...அவன் தான் கடத்தி இருக்கான். குற்றவாளியை வெளியே விட்டுட்டு வேற இடத்தில் தேடினா எப்படி?”
வேதநாயகத்தை கோபமாக பார்த்து “அப்படி எல்லாம் விசாரிச்சிட முடியாது சார். ரிஷி தான் அன்னைக்கு எங்கே இருந்தேன்னு சொல்லி வலுவான ஆதாரங்களை கொடுத்திருக்கிறார்”.
வேகமாக எழுந்து கொண்டவர் “நீங்க சீக்கிரம் கண்டுபிடிக்கலேன்னா நான் மேலிடத்திற்கு போக வேண்டி வரும்” என்று மிரட்டலாக கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.
அதே நேரம் கவின்யா தான் இருந்த இடத்தில் உண்ணாவிரதம் இருந்து அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தாள்.
“மேம்! நீங்க சாப்பிடலேன்னா எங்களை தான் திட்டுவாங்க. ப்ளீஸ் மேம்” என்று கெஞ்சினாள் அந்தப் பெண்.
கவியோ விரக்தி, கோபம் என பல்வேறு மனநிலையில் அழுத்த “போய் சொல்லுங்க...இப்படி உயிர் வாழ்வதை விட செத்துப் போறேன்”.
அவளின் பதிலில் பயந்து போய் அவசரமாக அலைபேசியை எடுத்துக் கொண்டு வேறு அறைக்குச் சென்றாள்.
“சார்! மேம் சாப்பிட மாட்டேன்னு அடம்பிடிக்கிறாங்க. சொன்னா கேட்க மாட்டேன்றாங்க”.
“விடு! மயங்கி விழட்டும் ட்ரிப்ஸ் போட்டு படுக்க வச்சிடலாம்...இந்த ஆட்டமெல்லாம் என்கிட்டே செல்லுபடியாகாது”.
அவரின் பதிலில் அமைதியாக “ஓகே சார்” என்று கூறி போனை அனைத்து வைத்து விட்டாள்.
கவியோ கன்னங்களை கண்ணீர் நனைக்க “ஏன் எனக்கு இப்படியொரு வாழ்க்கை? சொல்லி அழக் கூட ஆளில்லாமல் எதற்கு என்னை படைத்தாய்? மாமன் என்றொரு பணத்தாசை பிடித்த மிருகத்திடம் என்னை விட்டுட்டு ஏன் போன அம்மா?” என்று கதறி கதறி அழ ஆரம்பித்தாள்.
யாராலும் அவளை சமாதானப்படுத்த முடியவில்லை. அவர்கள் நினைத்தது போல் அழுதழுது மயங்கி விழுந்தாள். அதன் பின்னர் மருத்துவர் வரவழைக்கப்பட்டு அவளுக்கு ட்ரிப்ஸ் போடப்பட்டு படுக்கையில் வைக்கப்பட்டாள்.
காலையிலிருந்தே செங்கமலத்திற்கும் லோகநாயகிக்கும் கொடுக்கல், வாங்கலாக இருந்தது. மித்ரா அதை சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருந்தாள் என்றால் தெய்வநாயகிக்கு தலைவலியாக இருந்தது.
ரிஷியோ நேற்றைய நினைவுகளில் இருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். அங்கேயே பிறந்து வளர்ந்த அவனுக்கு இப்படியொரு இடம் இருப்பதே நேற்று தான் தெரிந்தது. அது யாருடைய பங்களாவாக இருக்கும் என்று யோசித்து குழப்பமாக இருந்தது.
அதிலும் அங்கே யாரோ இருப்பதற்கான அறிகுறி அந்த லாந்தர் விளக்கு. மற்றொன்று அந்த பெண்மணியின் அலறல். நிச்சயமாக அது பேயோ, பிசாசோ இல்லை. யாரோ மனிதர்கள் அங்கு வசிப்பது நிச்சயம் என்று புரிந்து போனது.
தீவிரமாக யோசித்து காலையில் அங்கு பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்து கார் சாவியை எடுத்துக் கொண்டு கீழே கிளம்பி வந்தான்.
மித்ரா யாரிடமோ அலைப்பேசியில் பேசிக் கொண்டே தோட்டத்துப் பக்கம் செல்ல, ரிஷி சென்றதை அவள் கவனிக்கவில்லை. நடந்து கொண்டே சற்று தூரமாக சென்று விட, தோட்டத்தின் பின்பக்கம் சென்றாள். நிறைய மரங்கள் அடர்ந்த பகுதியாக காட்சியளித்த அந்தப் பகுதி பகலிலேயே பயமாக இருந்தது.
போனை அணைத்து வைத்து விட்டு மெல்ல முன்னேறினாள். ஏனோ அவளுக்கு அந்த மாளிகையே மர்ம மாளிகை போன்று தோன்றியது. அதன் பின்னே நிறைய மர்மங்கள் இருக்கக் கூடும் என்று தோன்றியது.
மிகப் பெரிய பரப்பளவு கொண்ட அந்த தோட்டம் நீண்டு கொண்டே சென்றது. மாளிகையும் அத்தனை பெரியது என்பதால் தோட்டத்தினுடே மாளிகையின் சில வாசல்களும், இருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் செல்ல முடியாமல் செடி, கொடிகள் செழித்து வளர்ந்திருக்க, பாதையே தெரியாத அளவிற்கு இருந்தது.
அவளது மனம் போதும் இதோடு நிறுத்து என்று கூற, மேலும் சென்று பார்க்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு நகர இருக்கும் நேரம் அவளது போன் அடித்தது. செங்கமலம் தான் அழைத்திருந்தார்.
“மித்து எங்கே இருக்க? சீக்கிரம் இங்க வா?”.
“வரேன் பாட்டி...இங்கே தோட்டத்தில் தான் இருந்தேன்”.
அவரிடம் பேசி முடித்துவிட்டு நேரே கிளம்பி மாளிகைக்கு சென்றாள். தனதறையில் இருந்த செங்கமலம் பேத்தியை பார்த்தவுடன் கண்ணை காண்பித்து கதவை சாத்திவிட்டு வா என்று கண்ணால் காண்பித்தார்.
அவளும் வெளியில் யாரும் இருக்கிறார்களா என்று கவனித்துவிட்டு கதவை சாத்திக் கொண்டு உள்ளே சென்றாள். அவளது கைகளைப் பற்றி தன்னருகே அமர்த்திக் கொண்டவர் தனது மொபைலில் டைப் செய்து காண்பிக்க ஆரம்பித்தார்.
அதைக் கண்டதும் மெல்லிய புன்னகை எழ, பாட்டியின் தோள்களை பற்றி அணைத்துக் கொண்டவள் “கேடி பாட்டி” என்று பாராட்டிவிட்டு அவர் காட்டியதை படிக்க ஆரம்பித்தாள்.
இங்கே இருப்பவர்களில் லோகநாயகியை நாம் கண்காணிக்க வேண்டும். அதோடு இங்கிருக்கும் சுவர்களுக்கு கூட காது உண்டு. நான் வாழ்ந்த இந்த மாளிகை இப்போது நிறைய மர்மங்கள் அடங்கியதாக தோன்றுகிறது.
நேற்றிலிருந்து நான் பார்த்தவரை நமக்கு புரியாத சங்கதிகள் நடக்கின்றது. அது ரிஷியின் பார்வைக்கு வரவில்லை. நீ முதலில் உனது ரெஜிஸ்ட்ரேஷன் வேலையை முடித்து ரிஷியிடம் அலுவலக பொறுப்புக்கு செல்ல வேண்டும். அப்போது தான் ரிஷியிடம் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள முடியும். முக்கியமாக ரிஷிக்கு இந்த மாளிகையைப் பற்றிய விவரங்களை சொல்ல வேண்டும் என்று எழுதி இருந்தார்.
அதை படித்ததும் நிமிர்ந்து பார்த்தவள் “கவின்யாவை தேடனுமே? ரிஷி இதை செய்திருப்பான்னு நினைக்கிறீங்களா?” என்று எழுதி காண்பித்தாள்.
செங்கமலம் அவளை பார்த்துவிட்டு மீண்டும் எழுதி காண்பித்தார்.
எனக்கு வேதநாயகத்தின் மீது தான் சந்தேகம். ரிஷியும், கவியும் காதலர்கள். வேதநாயகம் தான் அவர்களுக்கு இடையே பிரச்னையை உண்டாக்கி இருக்கிறான். தன்னோட காதலியை கடத்தும் அளவிற்கு ரிஷி கேவலமானவன் இல்லை. அப்போ கவின்யாவை கடத்தின மாதிரி நாடகம் ஆடினா பழி நிச்சயமாக ரிஷியின் மேல தான் விழும். அது தான் அவன் எண்ணமாக இருக்கும் என்று முடித்திருந்தார்.
பாட்டியின் கணக்கை அறிந்து கொண்ட மித்ரா பிரமிப்புடன் “பாட்டி! யூ ஆர் கிரேட்!”என்று தன்னை மீறி அவரை கட்டிக் கொண்டவள் “இதை நான் கிளம்பும் முன்னாடியே தெரிஞ்சுகிட்டேன். இப்போ கண்டிப்பா அவர் மட்டும் தான் காரணம்னு என்னால உறுதியா சொல்ல முடியும். அதற்கான ஆதாரங்களுக்காக காத்திருக்கிறேன்” என்றாள் கண்சிமிட்டி.
“எனக்கு தெரியும் நீ கண்டுபிடிச்சிடுவேன்னு ஆனா ரிஷி நிலைமை ரொம்ப மோசம் மித்து. இங்கே இருக்கிறவங்க அவனுக்கு பின்னி இருக்கிற வலை மிகப் பெரியது. தனக்கு எதிராக தன் வீட்டில் இருப்பவர்களே இருக்காங்கன்னு தெரிஞ்சா சும்மா விட மாட்டான்”.
அதை படித்ததும் “யூ மீன் லோகா அவ்வளவு டேஞ்சரஸ்னு சொல்றீங்களா?” என்று கேட்டாள்.
“ம்ம்..உனக்கு தெரிய வேண்டியது நிறைய இருக்கு. இப்போ நம்மோட வேலை அவங்க சதியை முறிக்கனும். கவியை அவன் கிட்ட இருந்து காப்பாற்றனும்”.
சற்று யோசனையுடன் அமர்ந்திருந்த மித்ரா “அதெல்லாம் ரிஷி பார்த்துக்குவார் நினைக்கிறேன் பாட்டி. புதுசா வந்திருக்கிற என்னால இவ்வளவு கண்டுபிடிக்க முடிஞ்சிருக்குன்னா இதே இடத்தில் பிறந்து வளர்ந்து உலகம் முழுக்க பிசினெஸ் பண்ணுகிற ஒருத்தரால இதை கண்டுபிடிக்க முடியாம இருக்காது”.
“ம்ம்...பார்ப்போம். இப்போ சாதரணமா ஏதாவது பேசி சிரிப்போம்...நீ நம்ம அறை வாசலை நோட்டம் விடு. நிச்சயம் நிழல் தெரியும்” என்று எழுதி காட்டினார்.
அதை படித்ததும் சிரிப்புடன் பாட்டியை நிமிர்ந்து பார்த்துவிட்டு “ஏன் பாட்டி இந்த வீட்டில் தெய்வநாயகி அத்தை, லோகா அத்தை ரிஷி தவிர வேற யாரும் இருக்காங்களா?” என்றாள் சப்தமாக.
சட்டென்று அறை வாசலில் அடர்ந்த நிழல் தெரிந்தது. பாட்டியும் அதை கவனித்து விட்டு “பேய் பிசாசு தான் இங்கே இருக்கு” என்றார் சிரிப்புடன்.
இருவரும் ஒருவருக்கொருவர் கையை காண்பித்துவிட்டு தங்களுக்குள் சிரிக்க ஆரம்பித்தனர்.
வெளியே நின்று அவர்கள் பேசிக் கொண்டதை கேட்ட்கு கொண்டிருந்த லோகாவிற்கு உள்ளுக்குள் பயம் எழுந்தது. அந்த குட்டி பிசாசு எதையும் கண்டுபிடிச்சிருக்குமோ? காலையில வேற தோட்டத்துப் பக்கம் போனாளே...ஐயோ! இந்த கிழவியை சமாளிப்பேன்னா? இந்த சின்ன பிசாசை சமாளிப்பேன்னா? என்று தலையைப் பிடித்துக் கொண்டு தன்னறையில் அமர்ந்து விட்டார்.
ரிஷியோ அந்த வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தான். அப்போது அவனது அலைபேசியில் ஒரு சில தகவல்கள் வர அதை கேட்டுக் கொண்டவன் “இதெல்லாம் சரியான தகவல் தானே? ஒரு ஈ, எறும்பு கூட உங்களை மீறி அங்கே போக கூடாது...கவனமா இருங்க. கார் எதுவும் அங்கிருந்து வெளியே போனா உடனே பாலோ பண்ண ஆரம்பிங்க” என்றவன் போனை அணைத்து வைத்துவிட்டு அந்த ஒற்றையடி பாதையில் செல்ல ஆரம்பித்தான்.
முதல் நாள் இரவு சென்ற நினைவில் சரியாக அந்த பாதையில் செல்ல ஆரம்பித்தவன் ஓரிடத்திற்கு மேல் திடீரென்று வழி மறிக்கப்பட்டிருந்தது. முதல்நாள் இல்லாத அந்த மிகப் பெரிய காம்பவுண்ட் கட்டப்பட்டு ஈரம் கூட காயாத நிலையில் இருந்தது. பெரிய கதவும் போடப்பட்டு, அந்தப் பக்கம் என்ன இருக்கிறது என்று பார்க்க கூட இயலாத வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
அதை பார்த்ததும் அதிர்ந்து நின்றவன் காரை விட்டு இறங்கி கதவருகே சென்றான். அங்கு காவலுக்கு யாரும் இருப்பது போல தெரியவில்லை.
“யாரவது இருக்கீங்களா?” என்று சப்தம் போட்டு அழைத்துப் பார்த்தான்.
பதிலேதும் இல்ல என்றதும் கதவின் மீது கை வைத்த நிமிடம் அந்த இடமே நடுங்கி போகும் அளவிற்கு அலாரம் மாதிரி சப்தம் எழுப்பியது. பயந்து போய் ஓரடி பின்னே நகர்ந்தான். அதே சமயம் கேட்டிற்கு அந்தப் புறம் தபதபவென்று சப்தத்துடன் நாய்கள் குலைத்தபடியே ஓடி வரும் சப்தம் கேட்டது.
ஒரு நிமிடம் யோசனையுடன் நின்றவன் பின்னர் மெதுவே திரும்பி பார்த்தபடி சென்றான். மனமோ அந்த பங்களாவிற்கும் காம்பவுண்ட் சுவருக்கும் குறைந்தது ஒரு கிலோமீட்டர் தூரமாவது இருக்கும். தான் அங்கு நேற்று சென்று வந்தது கவனிக்கப்பட்டிருக்கிறது. இரவோடு இரவாக இந்த சுவர் எழுப்பபட்டிருக்கிறது என்றால் இதன் பின்னே ஏதோவொரு ரகசியம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டான். முதலில் இது யாருடைய இடம் என்று பார்க்க வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டான்.
தனது காரில் ஏறி அமர்ந்தவன் தனது பிஏவிடம் அந்த இடத்தைப் பற்றி கூறி அது யாருடைய இடம் என்று விசாரித்து சொல்லும்படி கூறிவிட்டு காரை எடுத்தான். நேரே தனது அலுவலகத்திற்கு சென்று அந்த இடத்தை பற்றிய விசாரணையை தனக்கு தெரிந்தவர்கள் மூலம் நாலா புறமும் முடுக்கி விட்டான்.
என்ன முயன்றும் அந்த இடம் யாருக்கு சொந்தம் என்று ஒரு சின்ன க்ளு கூட கிடைக்கவில்லை. தங்களது வக்கீலுக்கு அந்த இடம் பற்றி எதுவும் தெரியுமா என்று அவருக்கு அழைத்தான்.
“சொல்லு ரிஷி”
“அங்கிள்! நேற்று நான் ஓரிடத்துக்குப் போனேன்” என்று தான் பார்த்த விஷயங்களை அவரிடம் பகிர்ந்து கொண்டவன் “அந்த இடம் யாருக்கு சொந்தமானதுன்னு தெரியுமா?”
அவரோ முக்கியமான வேலையில் இருக்க “என்ன எழுதி இருந்துதுன்னு சொன்ன?” என்று கேட்டார்.
ஏதோ “நீலோற்பலம்னு போட்டிருந்தது அங்கிள்” என்று அவன் சொல்லி முடிக்கும் முன் அந்தப் பக்கம் அதிர்ந்து போய் போனை கீழே விட்டிருந்தார்.
“அங்கேயா போன? என்ன பார்த்த?” என்றார் பதட்டத்துடன்.
“ஏன் அங்கிள் உங்களுக்கு தெரியுமா?” என்றான் அவரின் பதட்டத்தை உணர்ந்து.
“நீ என்ன பார்த்த?”
“ஆளில்லா வீட்டைத் தான் பார்த்தேன்” என்றான் மற்றதை மறைத்து.
சற்றே ஆசுவாசமானவர் “இனி அந்தப் பக்கம் போகாதே” என்றார் ஜாக்கிரதை உணர்வுடன்.
“ஏன்? அந்த இடம் யாருக்கு சொந்தம்?”
“அது எதுக்கு உனக்கு...நீ கவின்யாவை பற்றி விசாரிக்கலையா?” என்றார் எரிச்சலாக.
அவனோ உஷாராகி “அங்கிள் உங்களுக்கு ஏதோ விஷயம் தெரிஞ்சிருக்கு. நீங்க சொல்லலேன்னாலும் என்னால கண்டுபிடிக்க முடியும். இப்போவே என் ஆளுங்க தேட ஆரம்பிச்சிட்டாங்க”.
“உனக்கு ஏன் இந்த வேலை ரிஷி. வேண்டாம் விடு” என்றார் கோபமாக.
“முடியாது அங்கிள்”.
“இப்பவும் சொல்றேன் வேண்டாததை எல்லாம் தோண்டாதே ரிஷி. சில விஷயங்கள் நமக்கு தெரியாம இருக்கும் வரை தான் நல்லது” என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டார்.
அதே நேரம் ஏற்கனவே கடத்தப்பட்டு படுக்கையில் இருந்த கவின்யா அங்கிருந்து காணாமல் போயிருந்தாள். அந்த வீடே அல்லோகலபட்டுக் கொண்டிருந்தது. தங்களை மீறி எப்படி கொண்டு சென்றிருக்க முடியும் என்று தெரியாமல், தங்களின் தலைவருக்கு என்ன பதில் சொல்வது என்று பயந்து போய் நின்றிருந்தனர்.
கவின்யாவோ கொடைக்கானல் மலையை விட்டு இறங்கிக் கொண்டிருந்தாள். அவள் சென்று கொண்டிருந்த கார் மதுரையை நோக்கி பறந்து கொண்டிருந்தது. பின் சீட்டில் குழந்தை போல உறங்கிக் கொண்டிருந்தவளை அவ்வப்போது திரும்பி பார்த்து விட்டு வண்டியை ஒட்டிக் கொண்டிருந்தான் பவன்.
அவன் மனம் நிம்மதி அடைந்திருந்தது. அவளை பாதுக்காப்பான ஓரிடத்தில் தங்க வைத்துவிட்டு மீதமுள்ள வேலைகளை முடிக்க வேண்டும் என்று கணக்கிட்டபடியே சென்று கொண்டிருந்தான்.
வேதநாயகத்தின் ஆட்டத்தை முடிக்க தானும் ரிஷியும் கை கோர்க்க வேண்டும் என்கிற முடிவு எழுந்தது.