Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript தினம் ஒரு தகவல் | SudhaRaviNovels

தினம் ஒரு தகவல்

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும்: சென்னை வானிலை மையம்
வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்ததாவது:
வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடற்கரைப் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் உள் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக காரைக்கால், தரங்கம்பாடியில் 7 செ.மீ. மழையும், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, அதிராம்பட்டினம், சென்னை, காஞ்சிபுரம், கும்பகோணம், செம்பரம்பாக்கம் பகுதிகளில் 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
அடுத்து வரும் 24 மணிநேரத்தைப் பொறுத்தவரை வட தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாகவும், தென் தமிழகப் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
வடதமிழகப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும். மீனவர்கள் தமிழக கடற்கரை, தெற்கு ஆந்திரா, மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு இன்று செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னை மற்றும் அதன் புற நகரங்களைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை தொடரும்''.
இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
விபரீதத்தில் முடிந்த சாகசப் பயணம்: அந்தமான் தீவில் பூர்வீகப் பழங்குடியினரால் அம்பெய்திக் கொல்லப்பட்ட அமெரிக்கர்
புதுடெல்லி



அந்தமான் தீவு ஒன்றில் வெளியுலகத் தொடர்புகளற்ற பூர்வீகப் பழங்குடியினரால் சாகசப் பயணம் சென்ற அமெரிக்கர் அம்பெய்திக் கொல்லப்பட்டதாக எழுந்துள்ள சம்பவம் பரபரப்பாகியுள்ளது.
வடக்கு செண்டினல் தீவில் வாழும் பூர்வீகப் பழங்குடியினர் வெளியுலகுடன் தொடர்பற்றவர்கள், 21ம் நூற்றாண்டிலும் நவீனமயமடையாத கடைசி பழங்குடி பூர்வீக மனிதர்கள் மூர்க்க குணம் கொண்டவர்கள் என்று கூறப்படுகிறது.
இங்கு யாரும் போகக்கூடாது என்று உத்தரவு உள்ள நிலையில் அமெரிக்கருக்கு அங்கு செல்ல 7 மீனவர்கள் உதவியுள்ளனர், அவர்கள் அனைவரையும் கைது செய்துள்ளதாக போலீஸ் அதிகாரி விஜய் சிங் தெரிவித்தார்.
இந்தப் பூர்கக்குடி பழங்குடி மக்கள் அடர்ந்த காட்டுப்பகுதித் தீவில் வசிக்கின்றனர். அவர்களுக்கு அருகில் யாரும் செல்ல முடியாது, சென்றால் அம்பெய்தி கொன்று விடுவார்கள்.
அமெரிக்கர் சாகசப் பயணம் மேற்கொண்டுள்ளார், இவரது உடலை மீனவர்கள் கண்டுபிடித்தனர். இவரை சனிக்கிழமை கொலை செய்துள்ளனர் என்று கூறிய போலீஸ் அதிகாரி விஜய் சிங், அவரது உடலைத் தேடிவந்ததாகத் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக செய்தித் தொடர்பாளர் காத்லீன் ஹோஸீ, இந்தச் சம்பவம் தெரியும் என்றும் ஆனால் இது குறித்து மேலும் பேச அனுமதியில்லை என்றும் மறுத்துள்ளதாக கார்டியன் இதழ் தெரிவித்துள்ளது.
ஜிண்டால் குளோபல் சட்டப்பள்ளியின் பேராசிரியர் மற்றும் சமூக விஞ்ஞானி ஷிவ் விஸ்வநாதன் கூறுகையில் வடக்கு செண்டினல் தீவு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதியில்லை. அங்கு வாழும் ஆதித் தொல் பழங்குடியினத்தின் மக்கள் தொகை என்னவென்று சரியான கணக்கு இல்லை, ஆனால் இந்த இனம் அழிந்து வருகிறது, அரசு அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றார்.
2ஏஇதற்கு முன்பாக 2006-ல் இதே பழங்குடியினர் 2 மீனவர்களைக் கொன்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
ஹார்வர்டு பல்கலை. மாணவர் அமைப்பின் தலைவராக சென்னை மாணவி தேர்வு
வாஷிங்டன்



ஸ்ருதி பழனியப்பன்
அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர் அமைப்பின் தலைவராக இந்திய வம்சாவளி மாணவி ஸ்ருதி பழனியப்பன் (20) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஹார்வர்டு பல்கலைக்கழக இளங்கலை மாணவர்களின் சக்திவாய்ந்த அமைப்பாக இளங்கலை கவுன்சில் உள்ளது. இதன் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு ஸ்ருதியும் துணைத் தலைவர் பதவிக்கு அவருடன் சேர்ந்து போட்டியிட்ட ஜூலியா ஹூசா (20) என்பவரும் வெற்றி பெற்றனர்.
ஹார்வர்டு பல்கலைக் கழகத்தை சொந்த வீடு போல் மாற்றுவோம் என்று கூறி ஸ்ருதி வாக்கு சேகரித்தார். இதற்கு மாணவர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது.
தேர்தலில் ஸ்ருதியும் ஜூலியா வும் 41.5 சதவீத வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தனர். இவர்களை அடுத்து இரண்டாமிடம் பிடித்த ஜோடி 26.6 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. தற்போது இளங்கலை கவுன்சில் உறுப் பினர்களாக உள்ள ஸ்ருதியும் ஜூலியாவும் விரைவில் முறையே தலைவர் மற்றும் துணைத் தலைவராக பொறுப்பேற்க உள்ளனர்.
ஸ்ருதியின் பெற்றோர் சென்னையை சேர்ந்தவர்கள். கடந்த 1992-ல் இவர்கள் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந் தனர்.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
காதலனைக் கொன்று, துண்டுதுண்டாக வெட்டி பிரியாணி செய்த காதலி: 6 மாதங்களுக்குப் பின் போலீஸில் சிக்கினார்
7 ஆண்டுகளாகக் காதலித்த காதலனைக் கொன்ற காதலி அவரின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி பிரியாணி சமைத்து பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களுக்குப் பரிமாறியுள்ளார். தீவிர புலன் விசாரணையில் 6 மாதங்களுக்குப் பின் போலீலிஸ் சிக்கியுள்ளார்.
இந்தச் சம்பவம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துள்ளது என்று அந்நாட்டில் வெளிவரும் ’தி நேஷனல்’ எனும் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அபுதாபி போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது:
கொலைக் குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ள பெண் மொராக்கோ நாட்டைச் சேர்ந்தவர். இவரின் காதலனும் மொராக்கோ நாட்டைச் சேர்ந்தவர். இருவரும் கடந்த 7 ஆண்டுகளாகக் காதலித்துள்ளனர். அபுதாபியில் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன், அந்தப் பெண்ணிடம், தான் மொராக்கோ நாட்டில் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகக் காதலன் தெரிவித்துள்ளார்.
இதை அறிந்த அந்தப் பெண், தன்னை விட்டு, மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்யப் போகிறார் என்பதால் காதலன் மீது ஆத்திரத்தில் இருந்தார். ஆனால், அதற்கான ஆயத்தப் பணியில் காதலன் ஈடுபடவே தனது காதலனை அந்தப் பெண் கொலை செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல், தனது காதலனின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி, அதை பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பாரம்பரிய உணவான ’மச்பூஸ்’ (ஒருவகை பிரியாணி) எனும் பிரியாணி சமைத்துப் பரிமாறியுள்ளார்.
இந்நிலையில், கொல்லப்பட்ட அந்த இளைஞரின் சகோதரர் போலீஸில் புகார் செய்தார். கடந்த 6 மாதங்களாகத் தனது சகோதரரை போலீஸாரின் உதவியுடன் தேடி வந்துள்ளார். இதில் தனது சகோதரரின் காதலியின் பழைய வீட்டுக்குச் சென்று போலீஸாரின் உதவியுடன் சோதனையிட்டதில், மனித பற்கள் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டன.
இதையடுத்து, அந்தப் பற்களை போலீஸார் டிஎன்ஏ ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். அந்த ஆய்வின் முடிவில் கொல்லப்பட்டது தேடப்பட்டு வந்த அந்தப் பெண்ணின் காதலர் என்பதை போலீஸார் உறுதி செய்தனர். இதையடுத்து, அந்த பெண்ணைக் கண்டுபிடித்த போலீஸார் 20-ம் தேதி கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில், தன்னைக் காதலித்து ஏமாற்றியதால், தனது காதலனை 6 மாதங்களுக்கு முன் கொலை செய்தேன் என்று தெரிவித்தார். மேலும் உடலை வெட்டி பிரியாணி சமைத்துப் பரிமாறினேன் என்றும், மீதமிருந்த உடல் பாகங்களை நாய்க்கு உணவாக அளித்தேன் என்றும், தனக்கு உதவியாக ஒருவர் இருந்தார் என்றும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தைக் கேட்ட போலீஸார் அதிர்ந்துவிட்டனர்.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்து அந்தப் பெண்ணை போலீஸார் கைது செய்தனர். அவரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியதில் அந்தப் பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இருக்கிறார் என்று போலீஸார் கூறுகின்றனர்.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
இந்தோனேசியாவில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 6 கிலோ பிளாஸ்டிக்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி

இந்தோனேசியாவின் வகாடோபி தேசியப் பூங்காவில் கரை ஒதுங்கிய திமிங்கலம்.
இந்தோனேசியாவில் இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றுக்குள் 6 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததைப் பார்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடலில் குப்பைகள் சேருவதைத் தடுக்க உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசை கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்தோனேசியாவின் சுலா வெசி மாகாணத்தில் உள்ளது வகாடோபி தேசியப் பூங்கா. இங்குள்ள கடற்கரையில் கடந்த திங்கட்கிழமை எண்ணெய்த் திமிங்கலம் (ஸ்பெர்ம் வேல்) ஒன்று இறந்து கரை ஒதுங்கியது. அது 31 அடி நீளம் இருந்தது. அந்த திமிங்கலத்தைச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆய்வு செய்தனர்.
அப்போது, திமிங்கலத்தின் வயிற்றுக்குள் 115 பிளாஸ்டிக் கப், 25 பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் பாட்டில்கள், கிழிந்த தார்பாய் துண்டுகள், செருப்பு போன்ற குப்பைகள் கிடந்தன. மொத்தம் 6 கிலோவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததைப் பார்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு அமைப்பான ‘டபிள்யூடபிள்யூஎப் இந்தோனேசியா’வைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் திவி சுப்ரப்தி கூறும்போது, ‘‘திமிங்கலத்தின் இறப்புக்குக் காரணம் தெரியவில்லை. எனினும், பிளாஸ்டிக் கழிவுகளும் காரணமாக இருக்கலாம்’’ என்றார்.
கடலில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் அதிகரிப்பதைத் தடுக்க இந்தோனேசிய அரசு உடனடியாக கடும் நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தோனேசியாதான் கடலில் அதிக குப்பைகளை சேர்க்கும் நாடாக இருக்கிறது. இதனால் ‘குப்பை அவசர நிலை’யை கடந்த ஆண்டு இந்தோனேசிய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.