Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript தினம் ஒரு தகவல் | SudhaRaviNovels

தினம் ஒரு தகவல்

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
விபத்தில் இறந்த உரிமையாளருக்காக 80 நாட்களாக சாலையில் காத்திருக்கும் நாய்: வைரலாகும் நெகிழ்ச்சி சம்பவம்
பெய்ஜிங்,



உரிமையாளருக்காக சாலையில் காத்திருக்கும் நாய்: படம் உதவி பேஸ்புக்
பாசம் காட்டுவதில் மனிதர்களைவிட விலங்குகள் விஞ்சி நிற்கும் சம்பவங்கள் நம்மை நெகிழ்ச்சியூட்டும். சில நேரங்களில் மனிதர்களைவிட நாய்கள் விசுவாசம் மிகுந்தவையாகப் பார்க்கப்படுகிறது. தனது இறந்துபோன எஜமானருக்காக விசுவாசமுள்ள நாய் ஒன்று 83 நாட்கள் அவர் இறந்த இடத்திலேயே காத்திருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியூட்டுவதாக அமைந்துள்ளது.
சீனாவில் தெற்குப்பகுதியில் உள்ள ஹோஹாட் எனும் நகரில் விபத்தில் இறந்த தனது உரிமையாளர் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையில் அந்த நாய் காத்திருக்கிறது.
இந்த நிகழ்வை எடுத்த ஒருவர் அந்த காணொளியை வலைதளத்தில் பதிவிட, நாயின் புகைப்படமும், வீடியோவும் சமூக ஊடகங்களில் இதுவரை 60 லட்சம் மக்களால் பார்த்து பகிரப்பட்டு, பாராட்டப்பட்டு வருகிறது.
சீனாவின் தெற்குப் பகுதியில் மங்கோலியாவின் உட்பகுதியில் உள்ள நகரம் ஹோஹாட். இந்த நகரைச் சேர்ந்த ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சாலை விபத்தில் இறந்து போனார். ஆனால், அவர் வளர்த்த நாய், எஜமானார் வருவார் என்ற நம்பிக்கையில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதியில் இருந்து அவர் இறந்த இடத்திலேயே காத்திருக்கிறது.
இந்தநாய் குறித்து டாக்சி ஓட்டுநர் குவோ ஜின்குவா செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “இந்த நாய் ஏறக்குறைய 3 மாதங்களாக இதே இடத்தில் அமர்ந்திருக்கிறது, மழை, வெயில், பனியிலும் எங்கும் செல்லாமல் இங்கேயே காத்திருக்கிறது. இந்த நாயின் செயல் கண்ணீரை வரவழைக்கிறது. உரிமையாளர் இனி வரமாட்டார் என்று அழைத்தாலும் வர மறுக்கிறது, உணவுகளை யாரேனும் கொடுத்தால் அவர்களைக் கண்டு அச்சப்படுகிறது ” எனத் தெரிவித்தார்.
இந்த நாயின் நிலையைப் பார்த்து சாலையில் செல்லும் மக்கள் உணவு அளித்தால், புதியவர்களைப் பார்த்து நாய் அச்சப்பட்டுச் செல்ல மறுக்கிறது. துரத்திவிட்டாலும் சிறிது நேரத்துக்குப்பின் மீண்டும் அதே இடத்துக்கு வந்துவிடுகிறது என்று மக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், நாயின் புகைப்படமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து மக்கள் பகிர்ந்து வருகின்றனர். இதைப் பார்த்த தொண்டு நிறுவனம் ஒன்று நாயை மீட்டு காப்பகத்தில் விட முயற்சி மேற்கொண்டுள்ளது.
ஆனால், தனது உரிமையாளர் இறந்தது குறித்து அறியாத அந்த நாய், மீண்டும் அவர் வருவார் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து அதே இடத்தில் இரவு,பகலாகக் காத்திருப்பது பார்ப்பவர்களை நெகிழச் செய்கிறது.
இன்றுள்ள பரபரப்பான உலகில் ஒருவர் இறந்தவுடன் அடுத்த 3 நாட்களில் காரியங்களை முடித்துவிட்டு அடுத்த வேலைக்காகச் சொந்த பந்தங்களும், மனைவி, பிள்ளைகளும் சென்று விடுகின்றனர். ஆனால், இன்றளவும் தன்னை வளர்த்த எஜமானார் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் நாய் காத்திருக்கிறது.
இந்த நாயின் செயல்பாடு ஜப்பானில் உள்ள புகழ்பெற்ற ஹச்சிகோ நாயின் செயல்பாட்டுக்கு ஒப்பாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 1925-ம் ஆண்டு ஹச்சிகோ என்ற பெயர் கொண்ட அகிடா வகை நாய் இறந்துபோன தனது உரிமையாளர் ரயிலில் வருவார் என்று எண்ணித் தொடர்ந்து 9 ஆண்டுகள் டோக்கியோவில் உள்ள ஷிபுயா ரயில் நிலையத்துக்கு வந்து காத்திருந்தது.
நாய் இறந்தபின், நாயின் நினைவாக ஷிபுயா ரயில் நிலையம் முன், ஹச்சிகோ நாய்க்காகச் சிலை அமைக்கப்பட்டு இன்றளவும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
 
  • Like
Reactions: sudharavi

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
திருமணம் முடிந்த கையோடு மணக்கோலத்திலேயே தேர்வெழுதிய பெண்: கர்நாடகாவில் ருசிகரம்

கர்நாடக மாநிலத்தில் திருமணத்தை முடித்த கையோடு மணக்கோலத்திலேயே மணப் பெண் ஸ்வேதா தேர்வெழுதி உள்ளார்.
கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியைச் சேர்ந்தவர் ஸ்வேதா. இவர் மைசூரு பல்கலைக் கழகத்தில் கடைசி ஆண்டு சட்டப் படிப்பு படித்து வந்தார். மே 6-ம் தேதி நிச்சயம் நடந்த இவருக்கு நவம்பர் 18-ம் தேதி திருமணம் என்று முடிவானது.
அதற்கு முன்னதாகவே பல்கலைக் கழகத் தேர்வுகள் முடிவதாக இருந்தன. ஆனால் எதிர்பாராத விதமாக அறிவிக்கப்பட்ட மாண்டியா மக்களவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலால் தேர்வு 18-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.45 முதல் 8.45 முகூர்த்தத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தை முடித்த கையோடு உடனடியாக தேர்வு மையத்துக்குச் சென்ற ஸ்வேதா, தேர்வை எழுதி முடித்தார். அவருடன் கணவரும் இரு வீட்டாரும் உடன் சென்று, வெளியில் காத்திருந்தனர்.
இதுகுறித்துப் பேசிய ஸ்வேதா, ''தேர்வுக்காக நான் நன்றாகப் படித்திருந்தேன். இந்த வாய்ப்பை இழக்க விரும்பாததால், தேர்வை எழுத முடிவெடுத்தேன். என் முடிவுக்கு பெற்றோரும், கணவன் வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.
திருமண நாளில் தேர்வெழுதியது புதிய அனுபவமாக இருந்தது. நிச்சயம் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெறுவேன்'' என்றார்.
 
  • Like
Reactions: sudharavi

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
தாடித் திருவிழா’: கேரளாவில் நடக்கும் தேசிய போட்டியில் பங்கேற்க ஆயிரம் இளைஞர்கள் ஆர்வம்

கோழிக்கோடு



கிளீன் ஷேவ், வழுவழுப்பான முகம் என்பது மட்டும் ஆண்மையின் தோற்றத்தின் அழகல்ல. நீண்ட, அடர்த்தியான தாடி, சிறிய அளவிலான தாடி போன்றயும் அழகுதான். இதைக் கொண்டாடும் வகையில் கேரளாவில் தாடித் திருவிழா நடத்த இளைஞர்கள் தயாராகி உள்ளனர்.
கேரளாவில் நடக்கும் 'தாடி மாமாங்கம்' எனப்படும் தேசிய அளவிலான தாடி வளர்த்தவர்களுக்கான போட்டி வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளது.
கேரளா பியர்ட் கிளப் சார்பில் கோழிக்கோடு நகரில் உள்ள தாகூர் நூற்றாண்டு அரங்கில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க ஏறக்குறைய நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பதிவு செய்து ஆர்வமாக உள்ளனர். இந்தப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.
160 உறுப்பினர்கள் கொண்ட கேரளா பியர்ட் கிளப்பில் சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று ஆந்திரா, மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
இது குறித்து கேரள பியர்ட் கிளப்பின் தலைவர் சோபித் பிரசாந்த் கூறுகையில், “ கேரள மாநிலத்தில் மண்டல அளவிலான பல போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டோம். இதன்மூலம் தாடிப் பிரியர்களுக்கும், அன்பர்களுக்கும் புதிய உத்வேகத்தை அளித்திருக்கிறோம். இந்தத் தாடி மாமாங்கம் விழாவின் மூலம் எங்களின் நெட்வொர்க்கை தேசிய அளவில் வளர்க்க இருக்கிறோம். அதுமட்டுமல்லாமல், உள்ளூர் இளைஞர்கள் தேசிய அளவில் தாடி வளர்ப்பில் இருக்கும் நவீன டிரண்ட் என்ன என்பதை அறிந்து கொள்வார்கள்.
இந்தத் தாடி மாமாங்கம் விழாவில் வலிமையான தாடி, நீண்ட தாடி, ஸ்டைலான தாடி, பியர்ட் ஹங்க், இளமையான தாடி ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் போட்டி நடத்தப்படுகிறது. பார்வையாளர்களாக வருபவர்களுக்கும் தனியாகப் போட்டி நடக்கும். ஒவ்வொரு பிரிவிலும் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு பரிசும், வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்புப் பரிசும் வழங்கப்படும்.
தாடி மாமாங்கத்தைத்தையும் தாண்டி, நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களும் தங்களின் கலாச்சாரத்தையும், பின்புலங்களையும் பகிர்ந்து கொள்ளும் இடமாக இது அமையும். பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும். இந்தப் போட்டியில் எங்களின் கிளப்பின் மூத்த உறுப்பினர் ஆழப்புழா ரெஜி டேனியல், ஜூனியர் உறுப்பினர் கண்ணூர் அவினாஷ் ஆகியோர் வரை அனைவரும் சமூக பணிகளில் ஆர்வமாக இருப்பவர்கள்.
இதுமட்டுமல்ல எங்கள் கிளப் சார்பாக ரத்த தானம், கேரள வெள்ள மீட்புப் பணி போன்றவற்றிலும் ஈடுபட்டோம்” என சோபித் பிரசாந்த் தெரிவித்தார்.

160 உறுப்பினர்கள் கொண்ட கேரளா பியர்ட் கிளப்பில் சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று ஆந்திரா, மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
 
  • Like
Reactions: sudharavi

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
அமைதியின் தாயுமானவன்!


அமைதி நோபல் 2018
டெனிஸ் முக்வேகே காங்கோ நாட்டைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர். ‘அற்புதங்களை நிகழ்த்துபவர்’ என்றொரு புகழ்மொழியும் அவருக்கு உண்டு. மகப்பேறு மருத்துவர் அப்படி என்ன அற்புதத்தை நிகழ்த்திவிடுவார்?
பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிப்பதே இவர் செய்யும் முழுநேர அற்புதம். அதுதான் அவரது வாழ்வும்!
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையைப் போருக்கான ஆயுதமாக மாற்றும் மனிதாபிமானம் அற்றவர்களுக்கு எதிரான அவரது ஓய்வற்றப் போராட்டம், இன்று அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுக்கொடுத்துள்ளது.
போரால் முளைத்த மருத்துவமனை
முக்வேகேயின் தந்தை ஒரு மதபோதகர். அவர் நோயாளிகளுக்குப் பிரார்த்தனை செய்வதற்காகச் செல்லும்போது தானும் கூடச் செல்வார் முக்வேகே. அந்தப் பயணங்கள்தாம் மருத்துவராக வேண்டும் எனும் லட்சியத்தை அவருக்குள் விதைத்தன.
காங்கோ, ஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய நாடு. போர்கள், காங்கோவுக்குப் புதிதல்ல. 1964-ல் மக்கள் புரட்சியால் ஒரு போர் நடந்தது. 1967-ல் ஊழலுக்கு எதிராக ஒரு போர் நடந்தது. 1996-ம் ஆண்டு முதல் இப்போதுவரை அங்கு முடிவிலாப் போர் ஒன்று நடைபெற்று வருகிறது. எண்ணற்ற தங்கச் சுரங்கங்கள் காங்கோவில் உள்ளன. அவற்றைக் குறி வைத்துத்தான் அந்தப் போர் நீள்கிறது. அந்தப் போர்களின்போது, நிறையப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளானார்கள். இதனால் ‘உலகின் வல்லுறவுத் தலைநகரம்’ என்ற களங்கம் காங்கோவுக்கு ஏற்பட்டது. அது இன்றுவரை மாறவில்லை.
அவ்வாறு பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்களில் பலர், முறையான சிகிச்சையின்றி பிரசவக் காலத்தில் அவதியுறுவதைக் கவனித்த முக்வேகே, மகப்பேறு இயலைத் தேர்ந்தெடுத்துப் படித்தார். 1999-ல் பான்ஸி மருத்துவ மனையைத் தொடங்கினார். மகப்பேறு சிகிச்சைக்காகவே அந்த மருத்துவமனையை அவர் தோற்றுவித்தார்.
மனதை நொறுக்கிய முதல் துயரம்
“இரவு பத்து மணி இருக்கும். குழந்தைகள் தூங்கிவிட்டனர். அப்போதுதான் என் வீட்டினுள் அவர்கள் நுழைந்தனர். என் கண்முன்னே, என்னுடைய குழந்தை களையும் கணவரையும் வெட்டிச் சடலமாக்கினர். நடப்பதைக் கிரகிக்கும் முன்பே என்னை அவர்கள் வரிசையாக வல்லுறவு செய்யத் தொடங்கினர். அவர்கள் ஐந்து பேர் என்று நினைக்கி றேன். சலிப்படைந்தவுடன் என்னைத் தூக்கி வெளியே எறிந்தனர். என் வீட்டுக்குத் தீ வைத்தனர்”. டேனிஸ் முக்வேகேயால் சிகிச்சையளிக்கப்பட்ட முதல் பெண் சொன்ன வார்த்தைகள் இவை.
“அதைக் கேட்டவுடன் வார்த்தை களால் விவரிக்க இயலாத கலக்கம் எனக்குள் பரவியது. ஒருவித அச்சம் மனத்தைக் கவ்வியது. எதையும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் உடனடியாகச் செயல்பட்டே ஆக வேண்டும், அவரது உயிரைக் காப்பாற்ற, அவரது வாழ்வை மீட்டெடுக்க, துடைத்தெறியப்பட்ட அவரது கண்ணியத்தை மீட்டெடுக்க, உடலின் சேதமடைந்த பாகங்களைச் செப்பனிட நான் செயல்பட்டே தீர வேண்டும் எனும் வெறி என்னுள் தோன்றியது” என்று முக்வேகே வேதனையுடன் அந்தச் சம்பவத்தை இன்று நினைவுகூர்கிறார்.
உயிரைக் கேட்ட உரை
அந்தப் பெண்களின் வாழ்வைப் புணரமைக்க, தான் தோற்றுவித்த பான்ஸி மருத்துவமனையை முக்வேகே மாற்றியமைத்தார். துணிந்து கேள்விகள் கேட்டார். ஆள்பவர்கள் கையாலாகாதவர் களாக இருப்பதைச் சில நாட்களிலேயே தெரிந்துகொண்டார். உலக நாடுகளின் கவனத்தைப் பெற முயன்றார். ஐ.நா சபையில் 2012 செப்டம்பரில் முக்வேகே பேசினார்.
பெண்களின் உடலைப் பகடைக்காயாக மாற்றும் இந்த முறையற்ற யுத்தம் குறித்தும் அதைத் தடுக்காமல் வெறுமனே வேடிக்கை பார்க்கும் காங்கோ அதிபர் ஜோசஃப் கபிலாவின் ஆட்சி குறித்தும் தனது கண்டனங்களை அந்த உரையில் அழுத்தமாகப் பதிவு செய்தார்.
அதன் விளைவு, துப்பாக்கி ஏந்திய ஒரு நபர் அவர் வீட்டினுள் நுழைந்து கொலைவெறி தாக்குதல் நடத்தினார். அவருடைய குழந்தைகள் சில மணிநேரம் பணயக் கைதிகளாயினர். அவருடைய உற்ற நண்பர் அந்தத் தாக்குதலில் உயிரிழந்தார். அதன்பின் அங்கிருந்து தப்பியவர், ஸ்வீடனுக்குச் சென்று பின் பெல்ஜியத்தில் குடியேறினார்.
அவர் நாடு திரும்ப, காங்கோ நாட்டுப் பெண்கள் தங்களிடம் இருந்த சொற்பப் பணத்தைச் சேர்த்து அவருக்கு விமான டிக்கெட் எடுத்து அனுப்பினர். அந்தப் பெண்களின் அன்பில் நெகிழ்ந்த முக்வேகே நாடு திரும்பினார். இன்றுவரை பாலியல் வன்முறையில் உயிர் பிழைத்த 50 ஆயிரத்துக்கும் மேலான பெண்களுக்குச் சிகிச்சையளித்து அவர்களின் வாழ்வை மீட்டெடுத்துள்ளார்.
தாய்மையைப் போதிக்கும் தாயுமானவன்
வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்கள் அந்த அதிர்ச்சியிலிருந்து எளிதில் மீள்வதில்லை. சுய கவுரவமும் தன்னம்பிக்கையும் இழந்து தவிக்கும் அந்தப் பெண்களுக்கு நம்பிக்கையளித்து மறுவாழ்வுக்கான பாதை அமைத்துக்கொடுத்து மீண்டும் அவர்களைச் சமூகத்தில் பொருத்துவதே இவரது மருத்துவமனையின் முக்கியப் பணியாக உள்ளது.
வல்லுறவுகளால் 13 வயதிலேயே சிறுமிகள் தாயாக மாறும் அவலங்கள் காங்கோவில் சாதாரணமாக நடக்கின்றன. அந்தச் சிறுமிகளுக்குத் தாய்மையைப் போதிப்பது மிகவும் சவாலான பணி. தாய்மையைப் போதிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் குழந்தைகளை வளர்த்தெடுப்பதையும் தனது கடமையாக, வாழ்வாக முக்வேகே கொண்டுள்ளார். இந்தக் குழந்தைகள்தாம் காங்கோவின் எதிர்காலம். அவர்களின் மனத்தில் வெறுப்பைக் களைந்து அன்பை விதைக்க முயல்கிறார்.
அந்த அன்புக்குத்தான் இந்த ‘அமைதி!’ விருது.
 
  • Like
Reactions: sudharavi

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
சென்னையில் அனைத்து தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கும் புதன்கிழமை கட்டாயம் விடுமுறை: ஆட்சியர் அறிவுறுத்தல்
அனைத்து தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் நாளை (புதன்கிழமை) கட்டாயம் விடுமுறை அளிக்க சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் அறிவுறுத்தியுள்ளார்.
நபிகள் நாயகம் பிறந்த தினமான மிலாடி நபியை முன்னிட்டு புதன்கிழமை தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்தது. இந்த ஆண்டுக்கான அரசின் பொது விடுமுறைப் பட்டியலிலும் மிலாடி நபி விடுமுறை இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் சில தனியார் பள்ளி, கல்லூரிகள் நாளை இயங்க உள்ளதாக வந்த தகவலையடுத்து கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் என்று சென்ன மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வெளியிட்ட அறிவிப்பில், ''நாளை (21.11.18) தமிழக அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில தனியார் பள்ளி, கல்லூரிகள் நாளை இயங்க உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. தமிழக கடற்கறையில் புதிய வலுவான காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் இன்று (20.11.18) மாலையிலிருந்து மிதமானது முதல் கன மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே அனைத்து தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் நாளை கட்டாயம் விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.
 
  • Like
Reactions: sudharavi