Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript தினம் ஒரு தகவல் | SudhaRaviNovels

தினம் ஒரு தகவல்

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
அடுத்தடுத்து உருவாகும் 2 காற்றழுத்த தாழ்வு நிலை; சென்னைக்கு மழை எப்போது? - வானிலை ஆய்வாளர் செல்வகுமார் கணிப்பு
சென்னை



நவம்பர் 29ம்- தேதி தொடங்கி மழை கொடுக்கும் காற்றழுத்த தாழ்வு நிலையின் பாதை
தமிழகத்தில் நாளை மீண்டும் மழை தொடங்கும் எனவும், டிசம்பர் 5-ம் தேதி மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி வர வாய்ப்பு இருப்பதாகவும் அப்போது பரவலாக கனமழை பெய்யும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது
மாலத்தீவு அருகே உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் நாளை தமிழகத்தில் மீண்டும் மழை தொடங்கும். இதனால் வடகிழக்கு காற்று தமிழக கடலோர மாவட்டங்களுக்குள் நுழையும் சாதக சூழல் உள்ளது. நாளை தொடங்கி டிசம்பர் 1-ம் தேதி வரை இந்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
காற்று வலிமையாக இல்லாததால் உள்மாவட்டங்களில் இதனால் பெரிய அளவில் மழை இருக்காது. அதேசமயம், கடலோர மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் கனமழையை எதிர்பார்க்கலாம். நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை போன்ற தென் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்.
கடலோர மாவட்டங்களை பொறுத்தவரை மகாபலிபுரம் தொடங்கி கன்னியாகுமாரி வரையில் மட்டுமே மழைக்கு சாதகமான காற்று உள்ளது. அதுவும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம். அதேசமயம் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் இது அதிகமழைக்கு வாய்ப்பில்லை.
2வது காற்றழுத்த தாழ்வு நிலை
இதனைத் தொடர்ந்து டிசம்பர் 5-ம் தேதி மற்றொரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது. இலங்கைக்கு தென் கிழக்கே உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை சற்று வலிமை கொண்டதாக உருவாகும். இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். பின்னர் புயல் சின்னமாக மாறவும் வாய்ப்புள்ளது.
டிசம்பர் 5-ம் தேதிக்கு பிறகே அதன் போக்கை முழுமையாக கணிக்க முடியும். எனினும் இது நாளை மழை கொடுக்கும் காற்றழுத்த தாழ்வு நிலையை விட வலுவானதாக இருக்கும்.
டிசம்பர் 5-ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலையால் கோவை, நீலகரி, ஈரோடு போன்ற மேற்கு மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கு அதிக வாய்ப்புள்ளது. மற்ற கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களிலும் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

டிசம்பர் 5-ம் தேதி முதல் மழை கொடுக்கும் காற்றழுத்த தாழ்வு நிலையின் பாதை
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
பாடல்களுக்கான ராயல்டி தொகையை தென்னிந்திய திரை இசை கலைஞர்கள் சங்கம் வசூலிக்கும்: இசையமைப்பாளர் இளையராஜா அறிவிப்பு
சென்னை



இளையராஜா: கோப்புப்படம்
இசையமைப்பாளர் இளையராஜா நேற்று வீடியோ பதிவு மூலம் அவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
இசைக்கலைஞர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு. என்னுடைய முன் அனுமதி பெறாமல், என் பாடல்களை பாட விரும்புகிற இசைக் கலைஞர்கள் முன் அனுமதி பெற்று பாடுவதே முறையாகும். இல்லையென்றால், சட்டப்படி குற்றமாகும். அப்படிச் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுவரை ஐபிஆர்எஸ் அமைப்பில் நான் உறுப்பினராக இருந்தேன். இப்போது உறுப்பினராக இல்லாத காரணத்தால், இதுவரை என் சார்பாக வசூலித்து கொண்டிருந்த ராயல்டி தொகையை, இனி தென்னிந்திய திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம் வசூலிக்கும். இதற்கான உரிமையை அச்சங்கத்துக்கு வழங்கியிருக்கிறேன்.
யாரும் பாடுவதற்கு நான் இடைஞ்சல் செய்யவில்லை என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். பணம் வாங்கி கொண்டுதான் நீங்களும் இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறீர்கள். என் பாடலுக்கு பாடுபவர்கள் பணம் வாங்குகிறார்கள். அதில் எனக்கு பங்கு இல்லையா, பாடலே என்னுடையது என்கிறபோது பங்கு எப்படி இல்லாமல் போகும். பங்கு என்பது சிறிய தொகைதான். அதைக்கூட பெயருக்குத்தான் கேட்கிறேன்.
நாளைய தலைமுறைக்கு இது சரியான நடவடிக்கையாக இருக்கும். முன்னோடி நடவடிக்கையாகவும் இருக்கும். இவ்வாறு இளையராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இசைக்கலைஞர்கள் சங்கம் தெரிவித்திருப்பதாவது: பாடல்களின் காப்புரிமையை காக்கும் பணியோடு, அதனை நெறிப்படுத்தும் பணியையும் இசைக் கலைஞர்கள் சங்கத்துக்கு தந்து, அதில் வரும் தொகையை இசைக் கலைஞர்கள் பெறுவதும் இதுதான் முதல் முறை. இதன் வழியே கிடைக்கும் நிதி முழுவதும் உறுப்பினர்களின் சேமநல நிதிக்கும் உறுப்பினர்களின் கருணைத் தொகைக்கும் மட்டுமே சென்றடையும்.
இளையராஜா இந்த சேவையை அளித்ததில் இசைக்கலைஞர்கள் சங்கத்துக்கு மகிழ்ச்சி எனக் கூறப்பட்டுள்ளது.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
11 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் 24 வார கருவைக் கலைக்க உயர் நீதிமன்றம் அனுமதி: மற்றொரு சிறுமியின் கருவைக் கலைக்க அனுமதி கேட்டு வழக்கு
பாலியல் பலாத்காரத்தால் 11 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் 24 வாரக் கருவை கலைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு அந்த பர பரப்பு அடங்குவதற்குள், மற்றொரு 12 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் 20 வாரம் கடந்த கருவைக் கலைக்க அனுமதி கோரி புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொடைக்கானலைச் சேர்ந்த 40 வயது பெண்ணின் 11 வயது மகள், அரசுப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். அண்ணன் முறையுள்ள இளைஞர் ஒருவர், அச்சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அச்சிறுமியின் வயிற்றில் 24 வார கரு வளர்கிறது.
இதைக் கலைக்க மருத்துவக் குழுவுக்கு உத்தரவிடக் கோரி, சிறுமி யின் தாயார் உயர் நீதிமன்றக் கிளை யில் மனு தாக்கல் செய்தார்.
அதில், கணவர் இறந்த நிலையில் கூலி வேலை செய்து 6 குழந்தைக ளைக் காப்பாற்றுகிறேன். எனது 11 வயது மகளை சகோதரியின் மகன் பலாத்காரம் செய்துள்ளார். இத னால் என் மகள் வயிற்றில் 24 வார கரு வளர்கிறது. 11 வயதில் குழந்தை பிறப்பு எனது மகளின் உடல், எதிர்காலத்தை சீரழித்து விடும். இதனால் கருவைக் கலைக்க அனுமதி வழங்க வேண்டும். ரூ. 4 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.தாரணி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
பாதிக்கப்பட்ட சிறுமியை பரி சோதனை செய்த மருத்துவக் குழு அளித்த அறிக்கையில் சிறுமியின் வயிற்றில் வளரும் கருவை கலைப் பதிலும், வளர விடுவதிலும் ஆபத்து உள்ளது. கருவைக் கலைப்பதாக இருந்தால், அறுவை சிகிச்சை மூலமே கலைக்க முடியும் எனக் கூறப்பட்டது.
இதையடுத்து, மற்றொரு மருத்து வக் குழு பரிசோதனைக்கு உத்தர விடப்பட்டது. அந்த குழுவின் அறிக்கையில், கலைப்பதில் உள்ள ஆபத்தைவிட கருவை வளர்ப்பதில் அதிக ஆபத்து உள்ளது. கருவை வளர்த்தெடுப்பதால் தாய்க்கும், குழந்தைக்கும் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மகளின் வயிற்றில் வளரும்
கருவை கலைக்க தாய் ஒருவரே நீதிமன்ற உதவியை நாடியுள்ளார். குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். மருத்துவக் குழு அறிக்கை அடிப்படையில் பாதிக்கப் பட்ட சிறுமியின் வயிற்றில் வளரும் கருவை கலைக்கும் முடிவை ஏற்கிறோம்.
சிறுமியின் வயிற்றில் வளரும் கருவைக் கலைக்க மதுரை அரசு மருத்துவமனை மருத்துவக்குழு தாமதம் செய்யாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மரபணு சோதனைக்காக கலைக் கப்பட்ட கருவைப் பாதுகாக்க வேண் டும். கருக்கலைப்புக்கு பிறகு, சிறுமியின் உடல் நிலை தொடர்பாக டிச. 3-ம் தேதி மருத்துவக்குழு அறிக்கை அளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
மற்றொரு வழக்கு
திண்டுக்கல் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 34 வயது பெண் ஒருவர், தனியார் பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படிக்கும் 12 வயது மகளின் வயிற்றில் வளரும் கருவைக் கலைக்க அனுமதி கேட்டு உயர் நீதிமன்றக் கிளையில் மனு செய்துள்ளார்.
அவர் தனது மனுவில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த 70 வயது முதிய வர், எனது மகளை பலாத்காரம் செய்துள்ளார். இதில் என் மகள் கர்ப்பம் தரித்தார். அந்த முதியவரை போலீஸார் கைது செய்தனர்.
குழந்தையைப் பெற்றெடுக்கும் உடல் நிலையில் என் மகள் இல்லை. தற்போது என் மகள் வயிற்றில் வளரும் கரு 20 வாரத்தை கடந்து விட்டது. அதை சட்டப்படிதான் கலைக்க முடியும். கருவைக் கலைக்க அனுமதி வழங்க வேண் டும். எனக்கு இடைக்கால நிவாரண மாக ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று விசார ணைக்கு வந்தது. அப்போது, மனு மீதான விசாரணையை இரண்டு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி நீதிபதி ஜெகதீஷ்சந்திரா உத்தர விட்டார்.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
பெண் துப்புரவு பணியாளருக்கு பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடிய போலீஸார்

பெண் துப்புரவு பணியாளரின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய பழவந்நதாங்கல் போலீஸார்
பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் துப்புரவு பணியாளரின் பிறந்த நாளை போலீஸார் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழவந்தாங்கல் காவல் நிலையத்தை துப்புரவு செய்பவர் அனுசுயா (67). கடந்த 10 மாதங்களாக இந்த பணியை செய்து வருகிறார். இவருக்கு இன்று பிறந்தநாள் என்பதை அறிந்து காவலர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனை அறிந்த ஆய்வாளர் வெங்கடேசன் கேக் வாங்கிவரச் சொல்லி காவல் நிலையத்திலேயே அனைத்து உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் முன்னிலையில் அனுசுயாவின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர். புடவையும் பரிசாக வழங்கினர். பலர் பணப்பரிசு வழங்கினர். இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து போலீஸார் கூறியதாவது: நங்கநல்லூர் எம்ஜிஆர் நகரில் வசிக்கும் அனுசுயா காவல் நிலையத்தில் துப்புரவு பணிகளை கவனித்து வருகிறார். இவருக்கு கணவர் கிடையாது. ஒரு மகன். குடிபழக்கத்தால் தாயை கவனிக்கவில்லை. காலை, மாலை இருவேளை உணவு காவல் நிலையம் சார்பில் அவருக்கு வழங்கப்படுகிறது. அதேபோல் மாதச் செலவுக்கு பணமும் கொடுக்கிறோம். நல்ல முறையில் நிலையத்தை தூய்மையாக வைத்திருப்பார். ஆய்வாளர் முதல் கடை நிலை காவலர் வரை அனைவரிடமும் அன்பாகவும் கனிவாகவும் பேசுவார். குடும்பத்தில் ஒருவர் போல எங்களிடம் உரிமையுடன் பழகுவார். இதனால் அவரது பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
மனைவியை தவிக்கவிட்டால் பாஸ்போர்ட் ரத்து, போலீஸ் நடவடிக்கை, வேலையிழப்பு: ‘மனம்போல்’ வாழும் வெளிநாடு வாழ் இந்தியருக்கு எதிராக புதிய சட்டம்
மனைவியை இந்தியாவில் தவிக்கவிட்டு விட்டு வெளிநாடு தப்பிச் சென்று அங்கு மனம்போல் வாழும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
வெளிநாடுளில் வசிக்கும் இந்தியர்கள் பலர் இந்தியாவில் திருமணம் செய்துவிட்டு அவர்களை கைவிட்டுவிட்டு செல்லும் சம்பவங்கள் நீண்டகாலமாகவே நடந்து வருகின்றன. தெலங்கானா, ஆந்திரா, பஞ்சாப் மாநிலங்களில் இதுபோன்று வெளிநாடு வாழ் இந்தியர்களால் கைவிடப்படும் மனைவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் மனைவியை விட்டு விட்டு அவர்களை விவாகரத்து செய்யாமல் தாங்கள் வாழும் நாட்டில் வேறு பெண்ணுடன் அவர்கள் சேர்ந்து வாழ்கின்றனர். இந்த விவரம் தெரியாமல் கணவன் வந்து தன்னை அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கையுடன் பல ஆண்டுகளை பெண்கள் கழித்துவிடும் சூழல் உள்ளது.
குறிப்பாக ஏழை மற்றும் கல்வியறிவற்ற நிலைமையை பயன்படுத்திக் கொண்டு பெண்களை திருமணம் செய்து வெளிநாடு வாழ் இந்தியர்கள் கைவிடும் சூழல் இருப்பதாக மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் அமைச்சகம் கூறி வருகிறது.
இதையடுத்து இந்த முறைகேடுகளை தடுக்க புதிய சட்டம் ஒன்றை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இதற்கான சட்டம் கொண்டு வரப்படும் என தெரிகிறது. இதுதொடர்பாக வெளியுறவு, உள்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஹைதராபாத்தில் கூறியதாவது:
மனைவியை கைவிட்டுவிட்டு, வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களின் பாஸ்போர்ட் முடக்கப்படும். இதுபோன்ற புகாருக்கு ஆளாகுபவர்கள் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளத்தில் தகவல் வெளியிடப்படும். அவர்கள் சார்ந்த மாநில போலஸாரால் நோட்டீஸ் வெளியிடப்பட்டு அதன் விவரம் அவர்கள் வசிக்கும் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இவை அனைத்தையும்விட, வெளிநாடு வாழ் இந்தியர்கள் வசிக்கும் நாட்டின் உள்ள இந்திய தூதரகம் மூலம் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய தூதரகம் சார்பில் அந்த நாட்டு அதிகாரிகள், அவர்கள் பணிபுரியும் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்படும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவற்றுக்கு வழிவகுக்கும் வகையில் புதிய சட்டத்தில் விதிமுறைகள் இடம் பெறும் .
இவ்வாறு அவர் கூறினார்.