Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript தினம் ஒரு தகவல் | SudhaRaviNovels

தினம் ஒரு தகவல்

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
நாளை முதல் துணிப்பை; இன்றோடு பிளாஸ்டிக் பொருட்களுக்கு விடைகொடுப்போம்: முழு விவரம்
14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை நாளை முதல் அமலுக்கு வருவதால் நாளை முதல் கேரிபேக் இல்லை, வெளியே செல்லும்போது துணிப்பையை எடுத்துச் செல்லலாம்.
பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினால் சுற்றுச்சூழலுக்கு கேடு, பொதுமக்கள் உடல்நலம் பாதிப்பு, நீர்நிலைகள், விலங்குகளுக்கு பாதிப்பு என்பதாலும் மீண்டும் மறுசுழற்சி செய்யமுடியாத அளவிலும், மக்காத நிலையிலும் உள்ளதாலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வந்தது.
பல மாநிலங்களில் அது தடைசெய்யப்பட்ட முன்னுதாரணமும் உண்டு என்கிற நிலையில் அவற்றைத் தடை செய்து தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் அரசாணை வெளியிட்டது. சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூன் மாதம் அறிவித்தார்.
இதற்கான அரசாணையின்படி, தடிமன் வேறுபாடின்றி மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் ஸ்ட்ரா, பிளாஸ்டிக் கேரிபேக், பிளாஸ்டிக் கொடி தடை ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்களின் உறைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது.
நாளைமுதல் இவை அமலுக்கு வரும் நிலையில் இதை எதிர்த்து பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவர்களின் சில கோரிக்கைகளுக்கு மட்டும் தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டது.
இதையடுத்து நாளைமுதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு முற்றிலும் தடை அமலாக உள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதைக் கண்காணிக்க, தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
பொதுமக்களும் தாங்களாகவே முன்வந்து பிளாஸ்டிக் பைகளையும், குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத்துவதைத் தவிர்க்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு இனி கேரிபேக் இல்லை என்பதால் பொதுமக்களே துணிப்பைகளை கையில் எடுத்துச் செல்ல வேண்டும்.
தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் யாரேனும் வைத்திருந்தால், வார்டு அலுவலகங்களில் மாலைக்குள் ஒப்படைக்குமாறு சென்னை மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாளை முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரித்தாலோ, விற்பனை செய்தாலோ, சேமித்து வைத்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ அவற்றைப் பறிமுதல் செய்யப்படும். தண்டனையும் உண்டு.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக கண்ணாடிப் பொருட்கள், வாழை இலை, பாக்கு மட்டை, அலுமினியம் பூசப்பட்ட காகிதம், காகித உருளைகள், தாமரை இலை, மூங்கில் பொருட்கள், காகித உறிஞ்சு குழாய்கள், துணி, காகிதம் , சணல் பைகள், செராமிக் பொருட்கள், களி மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள் , காகிதம், துணியினால் தேசியக் கொடி ஆகியவற்றை மாற்றுப்பொருளாக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
பிளாஸ்டிக் தடை நாளை முதல் அமல்: ஓலைப் பெட்டி, துணிப் பைகளுக்கு மாறிய நெல்லை வியாபாரிகள்
திருநெல்வேலி



ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை தமிழகத்தில் ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது. இதனை அமல்படுத்த அரசுத் துறைகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
உணவுப் பொட்டலங்கள் கட்ட பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஒட்டும் தாள், உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக்கால் ஆன தெர்மாகோல் தட்டுகள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள், பிளாஸ்டிக் தேநீர் குவளைகள், பிளாஸ்டிக் குவளைகள், தெர்மாகோல் குவளைகள், பிளாஸ்டிக் பைகள் உட்பட 14 வகையான பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
இவற்றுக்கு மாற்றாக வாழை இலை, பாக்குமர இலை, அலுமினியத்தாள், காகித சுருள், தாமரை இலை, கண்ணாடி மற்றும் உலோகத்தால் ஆன குவளைகள், மூங்கில் மற்றும் மரப்பொருட்கள், துணி, காகிதம், மற்றும் சணலால் தயாரிக்கப்பட்ட பைகள், பீங்கான் பாத்திரங்கள், மண் கரண்டிகள், மண் குவளைகள் உள்ளிட்ட பொருட்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, துணிப் பைகள், ஓலைப் பெட்டிகள் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத மாற்றுப் பொருட்கள் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.திருநெல்வேலி மாவட்ட வியாபாரிகளிடம் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
திருநெல்வேலி டவுனில் உள்ள ஒரு ஸ்வீட் கடையில் பலகார வகைகளை ஓலைப் பெட்டிகளில் வைத்து பார்சல் செய்து கொடுக்கின்றனர். இதேபோல், பாளையங்கோட்டையில் உள்ள ஒரு இறைச்சிக் கடையில் வாழை இலை, ஓலைப் பெட்டியில் இறைச்சி வகைகளை பார்சல் செய்து கொடுக்கின்றனர். பூக்கடைகளில் வாழை இலைகளை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு டீக்கடையில் எவர்சில்வர் பாத்திரங்களை வாங்கி வைத்துள்ளனர். டீ, காபியை பார்சலில் வாங்குவோர் குறிப்பிட்ட தொகை முன்பணமாக செலுத்தி, பாத்திரத்தில் வாங்கிச் செல்லலாம் என்றும், பாத்திரத்தை திருப்பி ஒப்படைக்கும்போது முன்பணம் திருப்பி வழங்கப்படும் என்றும் டீக்கடைக்காரர் கூறினார். அல்வா கடைகளில் அலுமினியத்தாளை பயன்படுத்தி, அல்வாவை விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளதாக வியாபாரிகள் கூறினர்.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
மதுரை மல்லிகையிலும் ஊடுருவிய கலப்படம்?- புவிசார் குறியீடு பெற்ற பூவுக்கு வந்த சோதனை
மதுரை



மதுரை மல்லிகைப் பூவைப் போலவே இருக்கும் நந்தியா வட்டை பூக்களையும், காக் கரட்டான் பூக்களையும் சில் லறை வியாபாரிகள் மதுரை மல்லிகையுடன் கலந்து விற்பதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தின் மற்ற மாவட் டங்களில் மல்லிகை உற்பத்தி செய்யப்பட்டாலும், மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களில் விளைவிக் கப்படும் மதுரை மல்லிகைக்கு இணையாக அவை வராது. இதனால், மதுரை மல்லிக்கு 2013-ம் ஆண்டு மத்திய அரசின் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கும் விமானத்தில் ஏற்றுமதி ஆகிறது. இந்நிலையில், சில ஆண்டாக மல்லிகையில் பூச்சித் தாக்குதலாலும், விலையில் நிலையற்ற தன்மையாலும் தென் மாவட்டங்களில் மல்லிகை சாகு படி முன்புபோல இல்லை.
இந்நிலையில், மல்லிகைக்கு மாற்றாக , அதைப்போலவே உள்ள நந்தியாவட்டை, காக்கரட்டான் பூக்களை மல்லிகையுடன் கலந்து சில்லறை வியாபாரிகள் விற்பதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து மதுரை பூ வியாபாரி ஸ்ரீனிவாசன் கூறியதாவது:
நந்தியா வட்டை பூக்களை போலி பூ எனக் கூறி விட முடியாது. மல்லிகையைப்போல அதுவும் ஒரு பூதான். இதில் 3 வகைகள் உள்ளன. இவை சிவனுக்கு உகந்தது என்பதால் பூஜைகளில் பயன்படுத்தப்படுகிறது.
எந்த விவசாயியும் திட்டமிட்டு இந்தப் பூக்களை மல்லிகைக்கு மாற்றாக சாகுபடி செய்வதில்லை. மல்லிகையை விட விலை குறை வாக இருப்பதால் பெண்களே இந்த பூக்களை வாங்குகின்றனர்.
மதுரை பூ மார்க்கெட்டில் இந்த பூக்களை மல்லிகையுடன் கலந்து யாரும் விற்பதில்லை. மொட்டாக இருக்கும் நிலையில் இந்த பூக்களை பறித்தால் பத்து நாட்கள் ஆனாலும் அப் படியே பொலிவுடன் இருக் கும். தற்போது மல்லிகை சீசன் கிடையாது. அதனால், மல்லி கைக்கு மாற்றாகவே இந்தப் பூக் கள் பயன்படுத்தப்படுகின்றன. போலியாக அல்ல.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பூபதியிடம் கேட்டபோது, ‘‘நந்தியாவட்டை பூக்கள் சிறிதளவு நச்சுத் தன்மை உள்ளது. பெண்கள் ஏமாந்து போய் வாங்கினால்தான் உண்டு. அந்தப் பூக்களை யாரும் தலையில் சூடிக் கொள்ள மாட்டார்கள். பெங்க ளூருக்கும் மதுரை பகுதி யில் இருந்து அதிகளவு விற் பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்தப் பூக்கள் மொட்டாக இருக்கும் போது மல்லிகை மாதிரியே தோற்றமளித்தாலும், விரிந்தால் பூ மாதிரி ஆகிவிடும்.
காக்கரட்டான் பூக்கள், திண்டுக் கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதிகளில் அதிகம் சாகுபடி ஆகிறது. வாசமில்லாத இந்த பூக்களும் மல்லிகை போலவே இருக்கும். இது 10 நாட்க ளானாலும் மொட்டாகவே இருக்கும். மல்லிகையில் ஒரு வகைதான் இதுவும். இந்த பூக்களை பார்த்தாலே சுலபமாக கண்டறிந்து விடலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
எச்ஐவி பாதித்த கர்ப்பிணியை காப்பாற்ற முயன்று உயிர் துறப்பு; சுகாதார துறை விழிப்புணர்வுக்கு அடித்தளமிட்ட இளைஞர்
தனக்கு எச்ஐவி நோய் தொற்று இருப்பது தெரியாமல், ரத்தம் கொடுத்த இளைஞர், பிறகு அதை அறிந்து, பிறருக்கு செலுத்திவிடாமல் தடுக்க முயன்று தோல்வியுற்று தன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி ஒருவருக்கு செலுத்திய ரத்தத்தில் எச்ஐவி தொற்று இருந்தது. இதனால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட் டது. அவர் மதுரை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
விசாரணையில், சாத்தூர் கர்ப் பிணிக்கு செலுத்திய ரத்தம், சிவகாசி அரசு மருத்துவமனையில் கமுதி இளைஞர் ஒருவர் தானமாகக் கொடுத்தது என்பது தெரிய வந்தது. அந்த இளைஞர் சில நாட்கள் கழித்து, வெளிநாடு செல்வதற்காக மருத்துவப் பரிசோதனை செய்தபோது தான் எச்ஐவி பாதிப்பு இருப்பது அவருக்கே தெரியவந்துள்ளது. உடனே அந்த ரத்தத்தை யாருக்கும் செலுத்தி விடாமல் தடுக்க, சிவகாசி மருத்துவ மனைக்கு சென்றபோது, சாத்தூர் கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்டு, அவர் பாதிக்கப்பட்டிருப்பதை அந்த இளைஞர் அறிந்தார்.
சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர்களே இதற்கு காரணம் என்றாலும், தெரிந்தோ, தெரியாமலோ கர்ப்பிணிக்கு எச்ஐவி தாக்க, தானும் ஒரு காரணமாகி விட்டோம் என மன விரக்தி அடைந்தார். கமுதி அருகே உள்ள சொந்த ஊரில் 3 நாள் குடும்பத்தினர் யாரிடமும் பேசாமல் இருந்தார்.
தற்கொலைக்கு முயற்சி
இது போன்ற சூழலில்தான் டிச. 26-ல் அவர் தனது உயிரை மாய்த்துக் கொள்ள திட்டமிட்டார். இதற்காக எலி பேஸ்ட் மருந்தை சாப்பிட்டு வீட்டில் மயங்கி விழுந்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு, பிறகு மதுரை அரசு மருத்துவ மனைக்கு தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். ஆனாலும், 3 நாட்களுக்கு பிறகு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார்.
தானே முன்வந்து தடுக்க முயற்சி
எச்ஐவி பாதித்த தனது ரத்தத்தை பிறருக்கு செலுத்தி அவர்கள் பாதிக்கப்படக்கூடாது எனத் தடுக்க முயன்ற இளைஞரால்தான் கர்ப் பிணிக்கு எச்ஐவி ரத்தம் செலுத்திய விவகாரமே வெளியில் தெரிந்தது. தற்போது, இது தமிழக அரசு மருத்துவ மனைகள் மற்றும் சுகாதாரத் துறையில் மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற் படுத்தி உள்ளது.
பல்வேறு புதிய மாற்றங்கள், பரி சோதனை, கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ரத்த வங்கி உட்பட முக்கிய சுகாதாரப் பிரிவில் ‘அவுட்சோர்சிங்’ ஒப்பந்த அடிப்படையில் மருத்துவ ஊழியர்கள் நியமனத்திலும் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இது போன்ற தவறு கள் நடக்காமல் தடுக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் பல்வேறு ஆய்வு களை மேற்கொண்டுள்ளனர். விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் அந்த இளைஞரின் மரணம் பாடம் கற்றுக் கொடுத்துள்ளது.
பெற்றோர், உறவினர் வேதனை
இளைஞரின் பெற்றோர், உறவினர் கள் கூறும்போது, கர்ப்பிணியை காப்பாற்ற முயன்று, தோற்றுபோன எனது மகன் உயிரைவிட்டுள்ளார். மகனை இழந்து தவிக்கும் எங்க ளுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்றனர்.
மருத்துவத் துறைக்கு பாடம்
பாதிக்கப்பட்ட கர்ப்பிணி, இனி மேல் உயிர் வாழ்ந்து என்ன புண்ணியம், விஷ ஊசி போட்டு கொன்று விடுங்கள் என அழுது புலம்பிய உருக்கமான தகவல்களும் வெளியாகின.
இது போன்ற தகவல்களை அறிந்த அந்த இளைஞர், நம்மால் ஒரு குடும்பமே பாதிக்கப்பட்டு விட்டதே என அழுது புலம்பி இருக்கிறார். பாதிக்கப்பட்ட கர்ப்பிணியை அவரது குடும்பத்தினர் எப்படி எதிர் கொள்வார்கள். உறவினர்கள் சந்தேகக் கண்ணோட்டத்தில் பார்க்க வாய்ப்புள்ளதே என சிந்தித்து வேதனைப்பட்டு இருக்கிறார்.
இது போன்ற சூழலில் இனிமேல், எச்ஐவி நோயுடன் போராடி வாழ்வதை விட உயிர்விடுவதே மேலானது என்ற முடிவில்தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த இளைஞரின் தற்கொலை மருத்துவத் துறைக்கு விழிப்புணர்வை ஊட்டும் பாடமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய பள்ளி மாணவர்கள் 10 திருக்குறள்களை எழுதிக் காட்டினால் அபராதம் எதுவும் செலுத்த வேண்டாம்: பெரம்பலூரில் போக்குவரத்து ஆய்வாளர் நூதன நடவடிக்கை
பெரம்பலூர்



கோப்புப் படம்
பெரம்பலூரில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த மாணவர்க ளிடம் 10 திருக்குறள்களை எழுதிக் காண்பித்தால் விட்டுவிடுவதாகக் கூறிய போக்குவரத்து ஆய்வாள ரின் நூதன நிபந்தனை மக்களிடம் வரவேற்பைப் பெற்றுவருகிறது.
பெரம்பலூர் நகர போக்கு வரத்து காவல் ஆய்வாளராக இருப்பவர் நாவுக்கரசு. இவர், நேற்று பெரம்பலூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை நிறுத்தி உரிய அபராதம் செலுத்திவிட்டு செல்லுமாறு கூறினார்.
அப்போது, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஒன்றில் பள்ளி மாணவர்கள் 3 பேர் வந்தனர். அவர்களின் வாகனத்தைத் தடுத்து நிறுத்திய நாவுக்கரசு, எத்தனையோ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியும் ஹெல்மெட் அணியாமல் ஏன் வருகிறீர்கள் என்று கேட்டு எச்சரித்தார். பின்னர், 10 திருக்குறள்களை எழுதிக் காண்பித்துவிட்டு, அதற்கான தெளிவுரையைக் கூறினால் போதும். அபராதம் எதுவும் செலுத்தாமல் நீங்கள் செல்லலாம் எனக் கூறினார்.
அவர் கூறியபடி, திருக்குறள் களை எழுதிக் கொடுத்தவுடன், அவர்கள் பிழையில்லாமல் எழுதியிருக்கிறார்களா என்று படித்துப் பார்த்த நாவுக்கரசு, ஒரு தமிழாசிரியரைப் போல பிழைகளை சுட்டிக் காட்டித் திருத்தினார். ‘கற்க கசடற’ என்ற குறளே மாணவர்களுக்கானது, அந்தக் குறளைக் கூட பிழையில்லாமல் எழுதமுடியவில்லையா என்றார். ‘இகழ்வாரைப் பொறுத்தல் தலை’யா இகழ்வார் பொறுத்தல் தலை-யா என்று ஒரு மாணவரிடம் கேட்டார். பின்னர், அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை வாங்கி வைத்துக் கொண்டு, அவர்களின் பெற்றோர்களை தொடர்புகொண்டு, மாணவர் களை அவர்களிடம் ஒப்படைத்தார். 3 பேரும் தங்களின் பெற்றோரிடம் சொல்லாமல், ஒரு மாணவரின் வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஊர் சுற்ற புறப்பட்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
போக்குவரத்து ஆய்வாள ரின் இச்செயல் சமூக வலை தளங்களில் நேற்று வீடியோவாக பரவியது. இது தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.