புத்தகம்: பாரிஜாதமே
எழுத்தாளர்: எஸ்.பர்வீன் பானு
பதிப்பகம்: AA publication
பக்கங்கள்:364

பாரிஜாதமே – எஸ். பர்வீன்பானு
கையில் கிடைத்தவற்றின் அருமை இருக்கும்போது புரிவதில்லை. இழப்பின்போது தான் அது புரிகிறது.
பாறைகள் மீது அமரும் போது
அதனுள் பதுங்கி இருக்கும் நெருப்பு
கண்ணுக்குத் தெரிவதில்லை;
ஆலமரத்தின் விதைகள்
உள்ளங்கையில் கனப்பதில்லை;
பேரன்பின் வலிமை
இழப்பிற்கு முன் புரிவதில்லை...
-எஸ் பர்வீன்பானு
சிறு வயதிலேயே தாயை இழந்த யயாதிக்கு தந்தையின் பேரன்பு கிடைக்கிறது. ஆனால் அந்த பேரன்பும் ஒரு கட்டத்தில் மறைந்து போக, பற்றிக் கொள்ள இருந்த ஒரே ஆதரவான அக்கா தாரணியிடம் அத்தனை நெருக்கமில்லாமல் போகிறது.
தாயின் ஏக்கத்திலேயே வளர்ந்தவளுக்கு தந்தையின் அன்பு பிடிவாதத்தை மட்டும் கொடுத்திருக்க, வாழ்க்கையை விளையாட்டுத்தனமாகவே கொண்டு செல்லும் பக்குவத்தில் வளர்ந்து விடுகிறாள் யயாதி.
அதே சமயம் தந்தையின் அரவணைப்பிற்கு ஏங்கும் குழந்தையாக ஒவ்வொரு நாளும் அவள் மனம் தவிக்கிறது. அவளுக்கு இருக்கும் ஒரே பற்று அக்காவின் குழந்தை சஞ்சனா.
இதன் நடுவே அந்த வளர்ந்த குழந்தையின் மனதில் காதல் வளர, தன் காதலை அடைந்து விடும் நோக்கத்தோடு பல முயற்சிகளை மேற்கொள்கிறது. அவளின் மனதை கவர்ந்தவனோ ஏற்கனவே காதலினால் சூடுபட்ட பூனை.
இவளைக் கண்டு அவன் ஒதுங்க, இவளோ நான் உன்னை விரும்புகிறேன் அவ்வளவு தான். நீ என்னை விரும்ப வேண்டும் கட்டாயப்படுத்தவில்லை என்கிற நிலையில் நிற்கிறாள்.
இவர்களுக்குள் நடக்கும் உணர்வுப் போராட்டங்களை அழகான வார்த்தை கோர்வையால் நம்மை அவர்களின் உணர்வுகளோடு கலக்க வைத்து, அந்த சுழலில் சிக்கி பரிதவிக்க வைக்கிறார்.
அவரின் ஒவ்வொரு வரியும் ரசிக்க கூடிய வகையில் இருக்கும்.
*மொத்த வாழ்க்கையும் இந்த சின்னச் சின்ன நொடிச் சில்லறைகளின் சேகரம் தான். பல்லாயிரம் நொடிகள் கொண்ட வாழ்க்கைக்கு ஏதோ ஒரு நொடியும், அந்த நொடியில் ஏற்படும் நிகழ்வும், அந்த நிகழ்வில் விளையும் பந்தமே ஆதாரமாய் போகிறது.
*காலத்தை கட்டி வைக்கும் கயிறெல்லாம் யாருக்கும் வாழ்க்கை அன்பு பரிசாய் வழங்குவது இல்லை. ஆனால் அவரவர் செயலும், திறனும், காலத்திற்குள் அழியாச் சுவடாய் தன்னை கட்டி வைத்துக் கொள்ளும் பெரும் வாய்ப்பு மனிதர்களுக்கு உண்டு.
*நல்லவர்களுக்கு நல்லது மட்டும் தான் நடக்கும் என்ற எந்தவொரு குறைந்தபட்ச உத்திரவாதத்தையும் காலமும், கடவுளும் தந்திருப்பதாய் நினைவில்லை.
இப்படி நாவல் முழுவதும் நம்மை ரசிக்க வைக்கும் வரிகளுடன் கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார்.
இங்கு அவரவர் தரப்பு ஞாயத்தை மட்டுமே எண்ணி அடுத்தவரின் உணர்வுகளை காயப்படுத்தி விடுவது உண்டு. மற்றவரின் பக்கம் என்ன இருக்கிறது என்பதை உணராமலே சில நேரங்களில் நல்ல மனிதர்களின் மனங்களை காயப்படுத்தி விடுகிறோம்.
வைகறை வருணன் தன் மனக்காயத்திலிருந்து வெளிவந்து, அவளின் காதலை புரிந்து கொண்டானா? யயா எதிர்பார்த்த பேரன்பும், அரவணைப்பு கிடைத்ததா என்பதற்கு பதில் பாரிஜாதத்தில் இருக்கிறது.
பாரிஜாதம் என்னை மிகவும் கவர்ந்து விட்டது. உணர்வு போராட்டத்தில் ஆழ்த்தி விட்டது பர்வீன்.
ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் இணைத்திருக்கும் அந்தப் பாடல்கள் அத்தியாயத்தின் கனத்தையும், நம் மனதின் கனத்தையும் அதிகரிக்க செய்கிறது.