Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript தினம் ஒரு தகவல் | SudhaRaviNovels

தினம் ஒரு தகவல்

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
நைட்டி நல்ல உடையில்லையா?

தீபாவளிக் கொண்டாட்டம் ஒருவழியாக முடிந்தது. சாப்பிட்டபோது, பட்டாசு வெடித்தபோது என வெவ்வேறு தருணங்களில் எடுத்த போட்டோக்களை வலைத்தளங்களில் போடத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தான் சுரேஷ். விடியற்காலையில் எடுத்த ஓரிரண்டு போட்டோக்கள் தவிர மற்ற எல்லா போட்டோக்களிலும் அவன் அம்மாவும் மனைவியும் நைட்டி அணிந்தபடி இருந்தனர். சுரேஷுக்குக் கோபம் கோபமாக வந்தது. அம்மாவைத் திட்ட முடியாது. மனைவியிடம் எரிந்து விழுந்தான்.
எப்படித்தான் இந்தப் பெண்கள் எப்போதும் நைட்டியுடனே திரிகிறார்கள் என்று புரியவில்லை. அன்றைக்குப் பார்த்தால், அடுத்த வீட்டு அம்மா, அவர்கள் தெருவில் இருந்த பால் பூத்துக்குப் பால் வாங்க நைட்டியுடன் வந்திருந்தார். நைட்டிக்கு மேல் ஒரு துண்டு வேறு. பார்க்கவே சுரேஷுக்கு அருவருப்பாக இருந்தது.
இரவுச் சாப்பாட்டு நேரத்தில் அவன் மனைவி புடவை அணிந்திருந்தாள். அம்மா வழக்கம்போல் நைட்டிதான். சுரேஷ், மனைவியைப் பார்த்து, கட்டை விரல்களை உயர்த்திக் காண்பித்தான். மனைவியிடம் அம்மாவை சைகையால் காண்பித்து, கட்டை விரலை கீழ்நோக்கிக் காண்பித்தான்.
அம்மாவுக்குத் தெரியாமல் காண்பித்த தாகத்தான் நினைத்தான். ஆனால், அம்மா பார்த்துவிட்டாள்.
ஏண்டா, உன் பொண்டாட்டியைத் திட்டின மாதிரி என்னைத் திட்ட முடியலேன்னு வருத்தமா?
ஆமா, நீங்க எல்லாம் நைட்டுல மட்டுமே போட வேண்டிய டிரெஸ்ஸை ஏன் இப்படிப் பகல் முழுக்கப் போட்டுட்டுத் திரியறீங்கன்னு புரியலை. தீபாவளி போட்டோவுல நீங்க ரெண்டு பேரும் நைட்டிலதான் இருக்கீங்க. குடும்ப வாட்ஸ் அப் குரூப்லகூட அதைப் போடத் தோணலை.
நாங்க நைட்டியில இருக்கும்போது நீ ஏன் போட்டோ எடுத்தே? நான் காலையில புதுப் புடவை கட்டி இருந்தேனே?
அப்ப நான், அப்பா எல்லாரும் குளிச்சு புது டிரெஸ் போடலை.
நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம்தான் வேட்டி, சட்டையைப் போட்டிருந்தீங்க. கொஞ்ச நேரத்திலேயே நீ டீஷர்ட்டும் பெர்முடாவும் மாத்திக்கிட்டே. அப்பா பனியனுக்கும் லுங்கிக்கும் மாறிட்டார்.
சுரேஷின் மனைவி தன் மாமியாரை ஆச்சரியத்தோடு பார்த்தாள். தனக்கு இப்படிக் கேள்வி கேட்கத் தோணலையே என்று நினைத்தாள்.
சமீபத்தில் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் ஆண் எழுத்தாளர் ஒருவர் நைட்டி போட்டு பெண்கள் வாக்கிங் வருவது பற்றிக் கிண்டல் அடித்திருந்தார். கூடவே அவரை ஆதரித்துச் சில குரல்களும் பதிவாகியிருந்தன.
இன்றைக்குத் தமிழ்நாடு முழுவதும் கிராமப்புறங்களில்கூட, பகல் முழுவதும் பெண்கள் நைட்டி அணிந்து நடமாடுகிறார்கள். நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை பார்க்க வரும்போதுகூட நைட்டியும் அதற்கு மேல் சட்டையும் போட்டுக்கொண்டு வருகிறார்கள்.
என்னுடைய உண்டு உறைவிடப் பயிலரங்குகளில் நாள் முழுவதும் புடவையோடு இருக்கும் பெண்களை இரவு நேர பாடத்திட்டத்துக்கு வரும்போது நைட்டியோடு வரலாம் என்று கூறுவேன். அனைவரும் ஒரு சிறிய துண்டை மேலே போட்டுக்கொண்டு வருவார்கள்.
துப்பட்டாவாவது போடுவதற்கு வசதியாக நீளமாக இருக்கும். இந்த டவல் சும்மா சம்பிரதாயத்துக்குப் போட்டது போல்தான் இருக்கும். அதைப் போடுவதைவிடப் போடாமல் இருந்தாலே நன்றாக இருக்கும் .
ஏன் இவ்வளவு விமர்சனம்?
இரவு நேரத்தில் மட்டும் அணிய வேண்டிய உடையைப் பெண்கள் பகலில் அணிவதால் ஆண்களுக்குப் பாலியல் ரீதியான எண்ணங்கள் வருவதைத் தவிர்க்க முடியவில்லையா? பெரும்பாலான பெண்கள் குறைந்தபட்சம் கீழ்த்தட்டு, கீழ் மத்தியத் தட்டுப் பெண்கள், சினிமாக்களில் வருவது மாதிரியான மெல்லிய இரவு உடைகளையோ பளபளவென்று சாட்டின் துணியில் தைக்கப்பட்ட நைட்டி களையோ அணிவதில்லை.
பெரும்பாலும் கெட்டியான பருத்தி நைட்டிகளையே அணிகிறார்கள். நைட்டியில் தங்கள் உடல் எந்தவிதத்திலும் காட்சிப் பொருளாக ஆகாததாகவே அவர்கள் உணர்கிறார்கள். அதனாலேயே இன்று நைட்டி என்பது பெண்கள் மத்தியில் சுலபமாக, சௌகர்யமாக அணியும் உடையாகிவிட்டது. இது ஏன் ஆண்களின் கண்களை உறுத்த வேண்டும்?
ஆண்களுக்கு என்ன பிரச்சினை?
சின்ன டிரவுசர்/பெர்முடா போட்டுக் கொண்டு ஆண்கள் பொது இடங்களில் நடமாடுகிறார்கள். சில வேலைத் தளங்களில்கூட இன்று அரை (அ) முக்கால் போன்ட்டுகளைப் போட்டுக்கொண்டு வேலை செய்கிறார்கள்.
லுங்கி கட்டுபவர்கள்கூட, பாதம் வரை அணிவதில்லை. முட்டிக்கு மேல் வருகிறபடிதான் மடித்துக் கட்டுகிறார்கள். இதெல்லாம் ஆபாசம் இல்லையா? ஆபாசமாக, ஊடுருவிப் பார்க்கும்படியாக நைட்டி இல்லை என்பதுதான் ஆண்களின் பிரச்சினையா?
நடைப்பயிற்சிக்கு நைட்டி அணிந்துவரும் பெண்ணோ, வீட்டில் பகலில் வேலை செய்வதற்குத் தோதாக நைட்டி அணியும் பெண்களோ, அதற்கு ஏற்றாற்போல் கெட்டியான, தடித்த நைட்டிகளைத்தான் அணிகிறார்கள். பலரும் உள்ளாடைகளை அணிந்துதான் நைட்டியையும் அணிகிறார்கள். உடலை இறுக்கிப் பிடிக்காத தொள தொள நைட்டிகளையோ அல்லது ஃபிரில் வைத்த நைட்டிகளையோதான் அணிகிறார்கள்.
மாற வேண்டியது மனப்பான்மையே
நைட்டி என்பதில் பொருளாதாரச் சிக்கனமும் அடங்கியுள்ளது. 20 வருடங்களுக்கு முன்பெல்லாம் சில பெண்கள் வெளியே போட்டுச் செல்லும் உடைகளைக் கொஞ்சம் பழையது ஆன பிறகு வீட்டில் போடும் பழக்கம் இருந்தது. இப்போது 150 ரூபாயிலேயேகூட ஓரளவுக்கு நல்ல நைட்டிகளை வாங்க முடிகிறது. வெளியில் இருந்து வீட்டுக்குள் நுழைந்தவுடனேயே நைட்டி போடுவது சவுகரியமாக இருப்பதோடு, சிறிது நேரமே அணிந்த வெளி உடைகளைக் காற்றாட விட்டுவிட்டு, திரும்ப மறுபடியும் அணிகிறார்கள் சில பெண்கள்.
இயல்பாக அணுகும் பெண்கள்
நைட்டி போடுவது பற்றி ஆண்களின் அசலான பிரச்சினை என்ன? அது இரவு நேரத்துக்கான உடை என்று மண்டைக்குள் ஊறி இருப்பதால், பெண்கள் நைட்டியோடு நடமாடினால் படுக்கையறையைத்தான் ஆண்களால் கற்பனை செய்துகொள்ள முடியும் என்றால், அது அவர்களுக்குள் புரையோடிப்போயிருக்கும் எண்ணம்.
மாற வேண்டியது நம் மனப்பான்மைதான். புடவையோ சுடிதாரோ நைட்டியோ, தனக்கு சவுகரியமாக உள்ள உடையைத் தேர்ந்தெடுத்து அணியும் உரிமை பெண்களுக்கு உண்டு. அவர்கள் கண்ணியத்தை அவர்களே தீர்மானிப்பார்கள். பெண்களின் உடைக்கான கலாச்சாரக் காவலர்கள் பொறுப்பை ஆண்கள் தாங்களாகவே ஏற்றுக்கொண்டு, குத்துதே குடையுதே என்று புலம்பினால், கோபப்பட்டால் அவர்கள் அணியும் உடைக்கும் அதை நீட்டிக்க வேண்டும். அதுதான் நியாயம்.
ஆண்கள் இறுக்கமான டிஷர்ட் அணிகிறார்கள். அரை டிராயரை அணிகிறார்கள். பெரிய தொப்பையை வைத்துக்கொண்டு சட்டையை டக் இன் செய்துகொள்கிறார்கள். டிரவுசருக்கு மேல் வரும்படி லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு லுங்கி டான்ஸ் ஆடுகிறார்கள்.
இவற்றையெல்லாம் சகஜமாகப் பார்க்கும் பக்குவத்தைப் பெண்கள் பெற்றுவிட்டார்கள். அதனால்தான் பெண்கள் இவற்றைப் பற்றி எல்லாம் எரிச்சல்படுவதும் இல்லை. புலம்புவதும் இல்லை.
கலாச்சாரம் என்பது ஒரு சமூகத்தில் வாழும் ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது. ஒரு சாராருக்கு மட்டும் வரையறைகள் விதிப்பது பெருமிதமல்ல; கற்பிதம். கற்பிதங்களை உடைப்பதில் பெருமிதம் கொள்வோம்.
 
  • Like
Reactions: sudharavi

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
அம்மாவும் மாமியாரும்


கீதாவின் அக்கா லலிதாவுக்குத் திருமணமாகிப் பத்தாண்டுகள் ஆகிவிட்டன. முதல் வருடம் அம்மா வீட்டுக்கு வரும்போதெல்லாம் லலிதா கண்ணீர் சிந்தியபடி இருந்தாள். கீதாவுக்கு அப்போது 15 வயது. அக்காவின் அழுகையைப் பார்க்கும்போதெல்லாம் வாழ்க்கையில் திருமணமே செய்யக் கூடாதென்று கீதாவுக்குத் தோன்றும்.
வீட்டில் மாப்பிள்ளை பார்த்தபோது அப்பா, அம்மா இல்லாத பையனாகப் பார்க்க வேண்டுமென்று கீதா சொல்லிவிட்டாள். அப்பா, அம்மா இருந்தாலும் அவர்கள் வேறு ஊரில் இருப்பவர்களாக இருந்தால் ஓகே என்றும் சொன்னாள். பையனுக்கு கீதாவைப் பிடித்துத் திருமணம் நிச்சயமாயிற்று. கீதா தன் பிறந்த வீட்டுக்கு அருகில் வீடு பார்ப்பதாக இருந்தால் மட்டுமே கல்யாணத்துக்குச் சம்மதிப்பேன் என்று மாப்பிள்ளையிடம் கறாராகச் சொல்லிவிட்டாள்.
கீதா மட்டுமல்ல, இன்றைக்குத் திருமணத்தையொட்டி பல பெண்களும் இப்படி கண்டிஷன் போடுகிறார்கள் என்று பயிலரங்குகளில் பலர் சொல்கிறார்கள். இதேபோல் ஆசிரியர்களுக்கான பயிலரங்கில் ஒருமுறை என்னிடம் ஆசிரியர் ஒருவர், மேடம் என் மனைவி அவங்க அம்மா, அப்பா வந்தா பிரியாணி செய்யறாங்க. எங்க அப்பா, அம்மா வந்தால் கஞ்சித்தண்ணிதான் ஊத்தறாங்க என்று சொன்னார்.
அதிகாரப் போட்டி
பெண்கள் இப்படி ‘திமிர்த்தனமாக’ இருப்பதற்குக் காரணம், வேலைக்குப் போய்ச் சம்பாதிப்பதால்தான் என்று பலர் நினைக்கிறார்கள். திருமண உறவுகளில் ஆண், பெண்ணுக்குள் இங்கு யாருக்கு அதிகாரம் அதிகம் என்ற முறையில்தான் குடும்பங்கள் இயங்குகின்றன. திருமணமான முதலிரண்டு வருடங்களில், அமைதியாக அடங்கி இருக்கும் பெண்கள், வருடங்கள் போகப் போக குடும்ப உறவுகளில் கறாராக இருக்கப் பழகிவிடுகிறார்கள்.
இன்னும் சொல்லப் போனால், பலவீடுகளில் ரிடையர் ஆனபின் ஆண்களுக்குக் கிடைக்கும் ‘மரியாதை’ அவர்கள் தன்மானத்தைக் குலைப்பதாக இருக்கிறது. இரண்டாம் தடவை காபி கேட்டால், ‘இருங்க, வேலைக்குப் போறவங்களை அனுப்பிவிட்டு உங்களுக்கு காபி தருகிறேன்’ என்று மனைவி அலட்சியப்படுத்துவதாக ரிடையரான பல ஆண்கள் புலம்புகிறார்கள்.
மன உளைச்சலின் வடிகால்
ஏன் இப்படி நடக்கிறது? கோளாறு யாரிடம்? காலம் மாறிக்கொண்டு இருக்கிறது. ஆனால், மாறிவரும் காலத்துக்கு ஏற்ப மதிப்பீடுகளும் சிந்தனைகளும் மாறுகின்றனவா? பெண்ணோ, பெண்ணின் குடும்பமோ தங்களை அலட்சியப்படுத்துவதாக நினைக்கும் ஆணும் அவன் குடும்பமும் திருமணமாகி அவர்கள் வீட்டுக்கு வந்த பெண்ணை, இத்தனை காலமாக எப்படி நடத்தினார்கள்?
வீட்டுக்கு வந்த பெண், கணவரின் அப்பா, அம்மாவை அத்தை, மாமா என்று சொல்லாமல் அப்பா, அம்மா என்றே சொல்ல வேண்டும் என்று பல வீடுகளில் வலியுறுத்தப்படுகிறது. கணவனின் அப்பா, அம்மாவைத் தானும் அப்பா, அம்மாவாகப் பெண் நினைக்க வேண்டுமென்றால் கணவனும், மனைவியின் அப்பா, அம்மாவைத் தன் அப்பா, அம்மாவாக நினைக்க வேண்டாமா?
ஒரு பெண், கணவனின் பெற்றோரை மருத்துவமனைக்கோ திருவிழாவுக்கோ எந்தப் புலம்பலும் இல்லாமல் கூட்டிக்கொண்டு போக வேண்டுமென்று ஆணும் அவன் பெற்றோரும் நினைக்கிறார்கள். சமூகத்தின் பெரும்பான்மை நினைப்பும் அதுதான். தன் பெற்றோர் வரும்போது வெறுமனே ஹலோ சொல்லிவிட்டு, தான் பிஸியாக இருப்பதாக ஒரு ஆண் பிகு பண்ணிக்கொண்டால், மனைவிக்கு அவன் மேல் கோபம் வருகிறது. அதை அவன் மேல் காண்பிக்கிறாள். முடியாதபோது அவனுடைய பெற்றோர்களை அலட்சியப்படுத்துவதன் மூலம் தன் மன உளைச்சலுக்கு ஆறுதல் தேடிக்கொள்கிறாள்.
வினையும் எதிர்வினையும்
மனைவியின் பெற்றோரை யார் பார்த்துக்கொள்வார்கள்? அவளுக்குச் சகோதரன் இல்லாமல் இருக்கலாம். இருந்தாலும் மகன் வீட்டிலேயே அவர்கள் காலம் முழுக்க இருக்க வேண்டுமா? ஆணை வளர்த்து, படிக்கவைப்பது போல்தானே பெண் வீட்டிலும் படிக்க வைத்து ஆளாக்குகிறார்கள்? இதெல்லாம் நம் கலாச்சாரம், பண்பாடு இப்படித்தான் ஏற்கெனவே சொல்லி இருக்கிறது என்று சொல்லி இனியும் சப்பைக்கட்டு கட்ட முடியாது. நியூட்டனின் மூன்றாம் விதிதான். ஒவ்வொரு செயலுக்கும் பதில்வினை உண்டு.
குடும்பங்கள் அதிகாரத்தால் கட்டமைக்கப்படும்வரை இப்படித்தான் இருக்கும். நாம் யாரிடம் எதை எதிர்பார்க்கிறோமோ அதுவாக நாம் அவர்களிடம் இருக்க வேண்டும். கணவனின் பெற்றோரை மனைவி பராமரிக்க வேண்டும் என்றால், மனைவியின் பெற்றோரைக் கணவன் பராமரிக்க வேண்டும்.
திருமணமானால், பெண் கணவன் வீட்டில் வந்து வாழ வேண்டும் என்பதுதான் நம் பண்பாடு என்று சொல்லி, பெண்ணை வற்புறுத்துகிறோம். கணவன், அவன் பெற்றோர், சகோதர சகோதரிகளின் உணர்வுக்கு, உறவுக்கு அந்தப் பெண், மரியாதை கொடுக்க வேண்டும் என்கிறோம். அவர்களை மதிக்க வேண்டும் என்கிறோம். அவள் எத்தனை நாள் இதற்குக் கட்டுப்படுவாள்? அவள் கை தாழ்ந்து இருக்கும்வரை கட்டுப்படுவாள். கணவரது உடன்பிறந்தவர்கள் திருமணமாகிப் போன பின்பு, மாமனார், மாமியாருக்கு வயதாகி முடியாமல் போகும்போது அலட்சியப்படுத்த ஆரம்பிப்பாள். அவள் அதுவரை பெற்றதை பிறகு திரும்பத் தருகிறாள்.
வயதான இரண்டு பக்கப் பெற்றோரையும் கணவன், மனைவி இருவரும் சரிசமமாக நடத்த முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? இந்தக் கற்பனை சாத்தியப்பட்ட வீடுகளும் இருக்கின்றன. அங்கே பரஸ்பர அன்பு, மரியாதை, நம்பிக்கை அடிப்படையில் உறவு கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்படி இல்லாதபோது, மனைவி அடங்கிப்போகும் இடத்தில் கணவனும் கணவன் அடங்கிப்போகும் இடத்தில் மனைவியும் ஒருவர் மேல் மற்றொருவர் அதிகாரம் செலுத்துகிறார்கள்.
இரு உறவும் முக்கியம்
ஒரு பயிற்சியில் ஐம்பது வயது ஆன ஆண் சொன்னார். “திருமணமான புதிதில் மனைவி கண்ணைக் கசக்கி, என் அம்மா பற்றிப் புகார் சொன்னாள். அன்றைக்கு முடிவெடுத்தேன், இந்தப் பெண்ணைக் கஷ்டப்படுத்தக் கூடாதென்று. வேறு ஊருக்கு மாற்றல் வாங்கி வந்துவிட்டேன். என் குடும்பத்தோடு உறவு விட்டுப்போயிற்று. என் மனைவிக்காக அதைச் செய்தேன். இன்று அவள் தன் குடும்பத்து மனிதர்களோடு நல்ல உறவில் இருக்கிறாள். எனக்குத்தான் யாருமில்லை” என்றார்.
கோளாறு அந்த பெண்ணிடம் மட்டும் இல்லை; ஆணிடமும்தான். மனைவிக்குக் கணவனின் பெற்றோருடன் பிரச்சினை என்றால், மனைவியை அவர்களிடம் அன்பாக இரு என்று கட்டாயப்படுத்த வேண்டியதில்லை. ஆனால், எனக்கு நீயும் முக்கியம், அவர்களும் முக்கியம். உனக்குப் பிடிக்கவில்லை என்றால் நீ அவர்களைப் பார்க்க வேண்டாம், பேச வேண்டாம். ஆனால், நான் அவர்களோடு பேசுவதை, பார்ப்பதை நீ தடுக்க முடியாது. உனக்கும் எனக்குமான உறவைப் போலவே எனக்கும் அவர்களுக்குமான உறவு என்ற ஒன்று உள்ளது என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும்.
ஆணோ, பெண்ணோ ஒருவர் மேல் மற்றொருவர் புகார் சொல்வதல்ல வாழ்க்கை. அதிகாரத் தராசின் முள் ஒரு பக்கமாகச் சாயலாம். மாறி, மாறிச் சாயலாம். இரண்டு தராசுத் தட்டிலும் சமமாக எடை வைக்கும்போது தராசு சமநிலையில் இருக்கும். இதுதான் வாழ்க்கை. ஆணைப் பெண்ணும் பெண்ணை ஆணும் அன்போடும் மரியாதையோடும் நடத்தினால் வாழ்க்கை எனும் நியாயத் தராசு சமநிலையில் இருக்கும்.
 
  • Like
Reactions: sudharavi

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
சாஸ்திர இசையும் நாட்டுப்புறக் கலையும்

தனக்கு ஒதுக்கப்பட்ட பணியுடன் மட்டும் நின்றுவிடாமல் அழிந்துவரும் நாட்டுப்புறக் கலைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பெரும்பணியையும் சேர்த்தே செய்துவருகிறார் இசை ஆசிரியை ம. அமல புஷ்பம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றிவரும் அமல புஷ்பத்தைத் தந்தை வழியாகவே இசை வந்தடைந்தது. இவரது பூர்விகம் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள கம்மாப்பட்டி. தந்தை மரியசூசை, திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத்தில் தச்சுத் தொழிலாளியாக வேலை செய்துவந்தார். அவர் அங்குள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் பாடல் பாடுவார். வீட்டில் இருக்கும்போது, நாட்டுப்புறப் பாடல்களை எளிமையான வரிகளுடன் பாடி அசத்துவார். அதுவே அமல புஷ்பத்துக்கு முதல் உந்துதலாக அமைந்தது.
அம்பாசமுத்திரம் ஏவிஆர்எம்வி பள்ளியில் படித்தபோது பாட்டுப் போட்டி என்றதுமே முதல் ஆளாகப் பெயரைப் பதிந்து போட்டியிடுவதோடு, வெற்றியும் பெற்றிருக்கிறார். இவரது இசை ஆர்வத்தைக் கவனித்த தலைமை ஆசிரியை ருக்மணி சாந்தா, இசை ஆசிரியர் சோமசுந்தரத்திடம் முறைப்படி இசையைக் கற்கும்படி சொன்னார்.
“ஆசிரியர் சோமசுந்தரத்துக்கு எங்க வீட்டோட ஏழ்மை நிலை தெரியும். அதனால தாசில்தார், எல்ஐசி அதிகாரிங்க வீடுகளுக்குப் பாட்டு கற்றுத்தரப் போகும்போது என்னையும் அங்கே வரச் சொல்லி இசைப் பயிற்சியளிப்பார்” என்று சொல்லித் தனது பள்ளிப் பருவ நினைவுகளில் மூழ்கினார் அமல புஷ்பம்.
தற்போது தான் பணியாற்றிவரும் பள்ளியில் மாணவிகளுக்கு கர்னாடக இசையைக் கற்றுத்தருவதோடு ஒயிலாட்டம், கரகாட்டம், காவடி, களியல், கோலாட்டம் எனப் பல்வேறு கலைகளையும் கற்றுத்தருகிறார்.
ஆகஸ்ட் 15-ம் தேதி தூத்துக்குடியில் நடந்த சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் கோவில்பட்டி அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வுப் பாடல்களுக்கு இவரது வழிகாட்டலில் நடனமாடியது, அனைவரையும் கவர்ந்தது. ஆசிரியை அமல புஷ்பத்தை அழைத்து மாவட்ட ஆட்சியர் பாராட்டியுள்ளார். விழிப்புணர்வுப் பாடல்களையும் அமல புஷ்பமே எழுதியிருக்கிறார். கர்னாடக சங்கீதத்தைக் கற்றவரின் கவனம் நாட்டுப்புறப் பாடல்கள் பக்கம் திரும்பியது குறித்துக் கேட்டோம்.
“நான் படித்து முடித்து கிராம சமுதாய முன்னேற்றப் பணித் திட்டத்தில் பணியாற்றினேன். அப்போது கிராமங்களில் பல்வேறு விழிப்புணர்வு பணிகளைச் செய்ததோடு அதன் ஒரு பகுதியாகக் கலைநிகழ்ச்சிகளையும் நடத்தினோம். எனக்குப் பன்முகத் தன்மை வேண்டும் என்பதற்காக, அப்போது இளையரசனேந்தல் பங்குத் தந்தையாக இருந்த ஞானப்பிரகாசம் எனக்கு நாட்டுப்புறப் பாடல்களை நயத்துடன் பாடப் பயிற்சி அளித்தார்” என்று சொல்லும் அமல புஷ்பம், ஞானபிரகாசமும் தனக்கு இன்னொரு குரு என்கிறார்.
அவரிடம் பயின்றதுதான் பாடல்கள் எழுதும் ஆர்வத்தைத் தூண்டியதாகக் குறிப்பிடுகிறார். 2009-ல் ‘ஆச இருக்குதய்யா’ என்ற நாட்டுப்புறப் பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டையும் 2012-ல் ‘பருவநிலை மாற்றம்’ குறித்த விழிப்புணர்வுப் பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டையும் வெளியிட்டார்.
‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சியில் இவர் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியதால் சென்னையில் பல பெரிய மேடைகளில் பாட வாய்ப்புக் கிடைத்தது. அதன்மூலம் ‘மன்னாரு’ திரைப்படத்தில் பாடினார். பிறகு ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘வென்று வருவான்’ ஆகிய படங்களிலும் பாடினார்.
“இசைதான் வாழ்க்கை என முடிவாகிவிட்டது. அதைப் பயனுள்ளதாக மாற்றத்தான் விழிப்புணர்வுப் பாடல்களை நானே எழுதிப் பாடுகிறேன். இயற்கையோடு இணைந்த வாழ்க்கை, நெகிழி ஒழிப்பு, குழந்தைகள் பாதுகாப்பு, பெண்ணுரிமை எனப் பல்வேறு கருத்துகளில் விழிப்புணர்வுப் பாடல்களை எழுதிப் பாடியுள்ளேன். அதையே என் மாணவிகளுக்கும் கற்றுத்தருகிறேன். இதில் முயற்சி மட்டும்தான் என்னுடையது. மாணவிகளின் ஆர்வம்தான் என்னை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்கிறது” என்கிறார் அமல புஷ்பம்.
 
  • Like
Reactions: sudharavi

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
இது டூமச்

பெல்ஜியத்தின் சார்லேரோய் நகரில் இருக்கும் இ-சிகரெட் கடையில் 6 இளம் திருடர்கள், ஆயுதங்களுடன் நுழைந்தனர்.
பணம் கொடுக்குமாறு மிரட்டினர். கடையில் இருந்தவர்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ஊழியர் ஒருவர் சட்டென்று, “வியாபாரமே இன்னும் ஆரம்பமாகவில்லை. கடை மூடும் நேரம் வந்தால், 2.5 லட்சம்வரை பணம் கிடைக்கும்” என்றார். பதற்றம் இல்லாமல் அந்த ஊழியர் பேசியதைக் கேட்டு திருடர்கள் ஆச்சரியமடைந்தனர். அவரது பேச்சில் நம்பிக்கை வைத்து, இரவு வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றனர். ஆனால் மாலை 5.30 மணிக்கே ஆறு பேரும் கடைக்கு வந்தனர்.
இந்த முறை அந்த ஊழியருக்குத் தைரியம் அதிகமாகிவிட்டது. இப்போதைக்கு 70 ஆயிரம் மட்டும்தான் இருக்கிறது, இரவு வந்தால் 3 லட்சம் கிடைக்கும் என்றார். மீண்டும் திருடர்கள் கிளம்பிச் சென்றனர். “இப்படி ஒரு முட்டாள் திருடர்களைக் கண்டதில்லை. கொஞ்சம் கூட யோசிக்காமல், அப்புறம் வரச் சொன்னால் சரி என்றார்கள். இனிமேல் சும்மா இருக்கக் கூடாது என்று முடிவு செய்தோம். காவல்துறையில் புகார் கொடுத்தோம். ஆனால் நாங்கள் சொன்னதை அவர்கள் நம்பவில்லை. கண்டிப்பாகத் திருடர்கள் வருவார்கள். அவர்களைக் கைது செய்ய காவலர்களை அனுப்புங்கள் என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டோம். வருவதாகச் சொல்லி வைத்துவிட்டனர்.
பிறகு உள்ளூர் சேனல் ஒன்றிடம் விஷயத்தைச் சொல்லி அவர்களை வரவழைத்தோம். படம் பிடிப்பதற்கு எல்லாம் தயாராக இருந்தன. 6 திருடர்களும் வந்தனர். ஆனால் இன்னும் காவலர்கள் வந்து சேரவில்லை. அதனால் ஒரு மணி நேரம் முன்னாடியே ஏன் வந்துவிட்டீர்கள் என்று கேட்டேன். மறுபடியும் திரும்பிப் போனார்கள். சற்று நேரத்தில் சாதாரண உடையில் காவலர்கள் வந்து கடையில் பதுங்கியிருந்தனர். ஒரு மணி நேரத்தில் மீண்டும் திருடர்கள் வந்தபோது, காவலர்கள் பிடித்துவிட்டனர். இவர்களில் ஒரு சிறுவனும் இருந்தான். குறைந்தது சில ஆண்டுகளாவது சிறையில் இருக்கப் போகிறார்கள். ஒரு பக்கம் சிரிப்பாக இருக்கிறது.
இன்னொரு பக்கம் பெல்ஜியத்திலேயே மிக மோசமான திருடர்கள் இவர்கள்தான் என்று தோன்றுகிறது” என்கிறார் கடையின் உரிமையாளர் டைடியர்.அப்ரன்டிஸ் திருடர்களாக இருப்பார்களோ!துருக்கியைச் சேர்ந்த 55 வயது செரெஃப் கான், காவல்துறைக்கு அளவுக்கு அதிகமான முறை அழைப்பு விடுத்த குற்றத்துக்காகச் சிறைத் தண்டனை பெற்றிருக்கிறார். ஓராண்டில் 45,210தடவை காவல்துறையினருக்கு மொபைல் போனில் தொடர்புகொண்டிருக்கிறார்! 2017-ம் ஆண்டு மே முதல் 2018-ம் ஆண்டு மே வரை ஒரு நாளைக்கு 100 முறை அழைத்திருக்கிறார். ஆனால் ஒரு முறை கூட எதற்காக அழைத்தார், என்ன புகார் என்பதைச் சொன்னதில்லை.
அதனால் ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் புகார் கொடுத்து, இவர் மீது வழக்கு தொடுத்துவிட்டனர். விசாரணையில் 115 அவசர அழைப்பு எண்களுக்கு45,210 தடவை அவர் அழைப்பு விடுத்திருந்தது தெரியவந்தது. ‘‘இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்துப் பெற்று, தனியாக வாழ்ந்து வருகிறேன். தனிமையிலிருந்து விடுபட மது அருந்துவேன். உடனே யாரிடமாவது பேசத் தோன்றும். அதனால் இப்படி அழைப்பு விடுத்தேன். மன்னித்துவிடுங்கள்” என்கிறார் செரெஃப் கான்.
இது டூமச்…
 
  • Like
Reactions: sudharavi

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
பொம்மை என நினைத்து நிஜ துப்பாக்கியுடன் விளையாடிய 2 வயது குழந்தை: துப்பாக்கி வெடித்து பலியான பரிதாபம்
பொம்மை என நினைத்து நிஜ துப்பாக்கியுடன் விளையாடிய 2 வயது சிறுவன், துப்பாக்கி வெடித்ததால் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் ஜார்ஜியா மாகாணத்தில் நிகழ்ந்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை அன்று க்ளேடன் கவுண்டி பகுதியைச் சேர்ந்த 2 வயது சிறுவன், தனது தந்தையின் அறைக்குள் நுழைந்து விளையாடினார். அப்போது அவரின் தந்தை உறங்கிக் கொண்டிருந்தார். தனது தந்தையின் முகத்தை மூடி விளையாடிய சிறுவன், அவரின் தலையணைக்கு அடியில் இருந்து துப்பாக்கியை எடுத்தார்.
பொம்மை துப்பாக்கி என்று நினைத்த சிறுவன் அதைக் கொண்டு விளையாட ஆரம்பித்தார். துப்பாக்கி லோட் செய்யப்பட்டிருந்ததால் திடீரென வெடித்தது. உடனடியாக தந்தை எழுந்து பார்க்க, சிறுவன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
மற்றோர் அறையில் இருந்த சிறுவனின் தாய் ஓடி வந்தார். இருவரும் அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே சிறுவன் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக க்ளேடவுன் கவுண்டி காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில் யார் மீது குற்றம் சுமத்தப்படும் என்று தெரியவில்லை.
 
  • Like
Reactions: sudharavi