Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript தினம் ஒரு தகவல் | SudhaRaviNovels

தினம் ஒரு தகவல்

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
செல்போன், லேப்-டாப், பவர்-பாய்ன்ட் உதவியுடன் சட்டக்கல்லூரி மாணவர்களுடன் நீதிபதிகளுக்கும் வகுப்பெடுத்து அசத்தும் பார்வையற்ற பேராசிரியர்
சென்னை



பேராசிரியர் எஸ்.ஏழுமலை
செல்போன், லேப்-டாப், பவர்-பாய்ன்ட் என தொழில்நுட்ப உதவி யுடன் சட்டக்கல்லூரி மாணவர் களுக்கு மட்டுமின்றி நீதிபதிகளுக் கும் பல்வேறு சட்டங்கள் குறித்து வகுப்புகளை எடுத்து அசத்தி வரு கிறார் பார்வையற்ற பேராசிரியரான முனைவர் எஸ்.ஏழுமலை.
சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டக்கல்லூரியில் முதுநிலை பேராசிரியராக பணிபுரியும் முனை வர் எஸ்.ஏழுமலை, பார்வையற்ற வர். ஆனால் இவரது பேச்சு, நடை, உடை ஆகியவை இவர் பார்வையற்றவர்தானா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
வகுப்பறைக்குள் நடந்து கொண்டே பாடம் நடத்துவது, கவனத்தை சிதறவிடும் மாணவர் களின் பெயர்களை சரியாக உச்ச ரித்து அவர்களை வழிநடத்துவது, மாணவர்கள் கேட்கும் கேள்வி களுக்கு துல்லியமாக பதிலளிப்பது என பிரமிக்க வைக்கிறார் பேராசிரியர் ஏழுமலை.
“பார்வையற்றவன் என்ற தாழ்வு மனப்பான்மை எனக்குள் எப்போதுமே இருந்ததில்லை. 10-க் கும் மேற்பட்ட சட்ட விழிப்புணர்வு புத்தகங்களை எழுதியுள்ளேன். அதில் 7 புத்தகங்களை தமிழில் எழுதியுள்ளேன். உயர் நீதிமன்றத் தில் வழக்கறிஞராக பணிபுரிந்த எனக்கு நீதிபதி எஸ்.விமலா, நீதி பதிகளுக்கும் பாடம் எடுக்கும் வாய்ப்பை வழங்கினார். அன்று முதல் இன்று வரை பல்வேறு ஊர்களுக்கும் சென்று நீதிபதிகளுக் கும், வழக்கறிஞர்களுக்கும் பல் வேறு சட்ட நுணுக்கங்கள் குறித்து வகுப்பு எடுத்து வருகிறேன். பிரதமர் மோடி குஜராத்தில் முதல்வராக பதவி வகித்தபோது தொடங்கிய தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக நியமிக்கப்பட்டேன். அதன்பிறகு தற்போது இங்கு வந்து பணிபுரிகிறேன்” எனக்கூறும் பேராசிரியர் ஏழுமலையின் சொந்த ஊர் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அடிஅண்ணா மலை.
பேராசிரியர் ஏழுமலையின் தந்தை சர்க்கரை, தாயார் லட்சுமி விவசாயிகள். 3 வயதாக இருக் கும்போது மூளைக்காய்ச்சலால் பார்வையை பறிகொடுத்த ஏழு மலை, தனது விடாமுயற்சியால் இன்று சட்டப் பல்கலைக்கழக பேராசிரியர் மட்டுமின்றி டெல்லி மற்றும் பெங்களூரு தேசிய சட்டக் கல்லூரிகளின் கவுரவ ஆசிரியராக உள்ளார். தேசிய உயிரி பல்வகைத் தன்மை (பயோ-டைவர்சிட்டி) ஆணையத்தின் நிபுணர்குழு உறுப்பினர், மாநில வாரிய உறுப்பினர் என பல்வேறு பதவிகளை வகித்து வருகிறார். ஐநா சபை உடன்படிக்கைகளுக்கும் சட்டநிபுணராக திகழ்ந்து வருகிறார்.
இதுதொடர்பாக பேராசிரியர் எஸ்.ஏழுமலை ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:
முனைவர் பட்டத்தை அப்துல் கலாமின் கையால் பெற்றதை கவுரவமாக கருதுகிறேன். பார்வை உள்ள படித்த பலருக்கும்கூட சட்டம் பற்றிய விழிப்புணர்வு இல்லை. விவசாயிகள் என்றால் இன்னும் சொல்லவே வேண்டாம். மஞ்சள், கிராம்பு, கீழாநெல்லி போன்ற பாரம்பரிய மூலிகைகளையும், பண்டைய தமிழர்களின் கண்டு பிடிப்புகளையும் திருடும் மேலை நாட்டு கும்பல்களிடமிருந்து அவற்றைப் பாதுகாத்து தமிழர் களின் உரிமைகளை அறிவுப்பூர்வ மாக நிலைநாட்ட பாடுபட்டு வரு கிறேன்.
இதுவரை சிங்கப்பூர் நிறுவன விருது, முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவிடம் விருது, மத்திய வேளாண் துறை விருது என பல விருதுகள் கிடைத்துள்ளன. விஞ்ஞானி ஆக வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. ஆனால் இன்று பல விஞ்ஞானி களுக்கும், மருத்துவர்களுக்கும் சட்டரீதியாக ஆலோசனை வழங்கும் இடத்தில் உள்ளேன். சட்டத்தில் ஆழ்ந்த ஞானம் இருந்தால் போதும், வழக்கறிஞராக நீதிமன்றத்துக்குப் போய் வழக்காடி தான் சம்பாதிக்க வேண்டும் என்பது இல்லை. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் சர்வதேச நாடு களுக்கு சட்டப்பணியாற்றி மனநிறைவாகவே சம்பாதிக்கலாம். இதற்கு ஆண், பெண் என்ற எந்த பேதமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பார்வையற்றவர்களுக்கு உதவும் டாக்-பேக்!
பேராசிரியர் ஏழுமலையிடம் செல்போனை எப்படி பயன்படுத்துகிறீர்கள் எனக் கேட்டபோது, ‘‘முன்பு பிரெய்லி மட்டும்தான் பார்வையற்றவர்களின் தோழனாக இருக்கும். ஆனால் இப்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியால் எல்லோருடைய செல்போனிலும் ‘டாக்-பேக்’ என்ற வசதி உள்ளது. செல்போனுக்கு அழைப்பு விடுத்தது யார்? எப்போது அழைத்தார்? மின்-சட்டப் புத்தகத்தில் என்னென்ன பகுதிகள் உள்ளது என அனைத்து விவரங்களையும் ஆங்கிலத்தில் கூறும் அந்த வசதியை பார்வையற்ற நாங்கள் எளிதாகப் பயன்படுத்துகிறோம். மற்றவர்கள் பயன்படுத்துவதில்லை. தமிழில் மொழிபெயர்த்து கூறுவதற்கும் தற்போது இ-ஸ்பீக் என்ற வசதி அறிமுகமாகியுள்ளது. கூகுளை ஆளத் தெரிந்தால் இந்த உலகை எளிதாக ஆளலாம்’’ என்றார்.
 
  • Like
Reactions: sudharavi

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கிறதா மஹாமேரு புஷ்பம்?- சமூக வலைதளங்களில் படங்களுடன் வைரலாகும் வதந்தி
மதுரை



சதுரகிரி மலையில் மஹாமேரு புஷ்பம் என்ற ஒருவகை பூக்கள் 400 ஆண்டுகளுக்குப் பிறகு பூத்துள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படும் புகைப்படங்கள் போலியானவை என்று தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொடைக்கானலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்கின. இந்த அபூர்வ நிகழ்வைக் காண தமிழகம் மட்டுமல்லாது வட மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், தாவரவியல் ஆர்வலர்கள் கொடைக்கானலுக்கு வந்தனர்.
குறிஞ்சி மலர்கள் நிகழ்வை போன்று மதுரை, விருதுநகர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் 400 ஆண்டு களுக்குப் பிறகு மஹாமேரு புஷ்பம் என்ற அரியவகை பூக்கள், தற்போது பூத்துள்ளதாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதில் ‘‘முடிந்தவரை மற்றவர்களும் பார்த் திடப் பகிருங்கள்’’ என்று குறிப்பிடப்பட்டு புகைப்படங்களுடன் பரப்பப்படுகின்றன.
இதுகுறித்து மேற்குத் தொடர்ச்சி மலையில் புதிய வகை தாவரங்களின் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள காந்தி கிராமப் பல்கலைக்கழக உயிரியியல் துறை உதவிப் பேராசிரியரும், தாவரவியல் ஆர்வலருமான ராமசுப்பு கூறியதாவது:
சமூக வலைதளங்களில் 400 ஆண்டு களுக்கு ஒருமுறை பூக்கும் என பரப்பப்படுபவை ஆர்க்கிட் வகை செடியின் மலர்கள் மற்றும் காசி தும்பை வகையைச் சேர்ந்த மலர்கள் போன்று உள்ளன. அதிலும் கிராபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. மஹாமேரு புஷ்பம் என்ற வகை மலர்களே கிடையாது. ஆர்க்கிட் வகை மலர்கள் வெளிநாட்டு ரகத்தைச் சேர்ந்த அலங்காரச் செடி. பொக்கே தயாரிப்பதற்கும், வீடுகளில் அழகுக்காகவும் இதை வளர்ப்பர்.
அதிக மழை பெய்து குளிர்ந்த காலநிலை நிலவும்போது, இவை நன்கு வளரும். காசி தும்பை மலர்ச் செடிகள் 3 மாதங்கள் மட்டுமே உயிரோடு இருப்பவை. உலகத்தில் எந்த இடத்திலும் 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் செடிகளே இல்லை. அதிகபட்சம் குறிஞ்சி மலர் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூப்பவை. அதுவே, ஏன் என்ற காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
ஆனால், அவை அனைத்து இடங்களிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்காது. சில இடங்களில் மட்டும் ஆங்காங்கே பூக் கிறது. ஒரே நேரத்தில், அதிகளவில் 12 ஆண்டு களுக்கு ஒருமுறை குறிப்பிட்ட இடங் களில் பூப்பதால், குறிஞ்சி மலர் 12 ஆண்டு களுக்கு ஒரு முறை பூப்பதாக வரலாறு பதிவாகிவிட்டது. வதந்திகளை சுவாரசிய மாக்க படங்களை போலியாக போட்டோ ஷாப் செய்து சிலர் திட்டமிட்டு பரப்புகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அமெரிக்கன் கல்லூரி விலங்கியல் துறை உதவிப் பேராசிரியரும், இயற்கை ஆர்வலரு மான ராஜேஷ் கூறியதாவது: சமீபத்தில்கூட குழந்தை போன்ற உருவத்தில் தொங்கும் மலர்கள் மிக அபூர்வமாக இமயமலையில் பூத்துள்ளதாக புகைப்படங்கள் பரவின. அவை முழுக்க முழுக்க கிராபிக்ஸ்தான்.
அதுபோல், மஹாமேரு புஷ்பம் எனக் கூறப்படும் புகைப்படங்களில் உள்ள உருவ அமைப்பு இயற்கையான புகைப்படம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. சமூக வலைதளங்களில் இதுபோன்ற புகைப்படங்களை வைரலாக்கி பரபரப்பாக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய் துள்ளனர் என்றார்.
 
  • Like
Reactions: sudharavi

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
அநாதை சடலங்கள் அடக்கம்... தொழுநோயாளிகள் பராமரிப்பு! - வேலூர் இளைஞரின் சேவை
அனைவருக்கும் சகிப்புத்தன்மை இருக்க வேண்டும். பெற்றோரைத் தயவுசெய்து வீட்டில் இருந்து வெளியேற்றிவிடாதீர்கள். நாளைக்கு இதே நிலைமைதான் நமக்கும்.

பெற்றெடுத்த பிள்ளைகளே பெற்றோரை உதறித்தள்ளி வீட்டைவிட்டுத் துரத்தும் இந்தக் காலத்தில் முகமறியாத தொழுநோயாளிகள், ஆதரவற்றோரை அன்புடன் அரவணைப்பவர்கள் சிலர் இருப்பதால்தான் என்னவோ இன்னும் மனிதநேயம் மரித்துப் போகாமல் இருக்கிறது. அதுபோன்ற இளைஞர் ஒருவர்தான் வேலூர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.

ஒரு நாள்... வேலூர் அண்ணாசாலையில் உள்ள சாக்கடையில் 95 வயது மூதாட்டி தடுமாறி விழுந்து உயிருக்குப் போராடினார். மூதாட்டியைக் காப்பாற்றாமல் கல்நெஞ்சம் கொண்ட சிலர் செல்போனில் படம் எடுத்து ‘லைக்’ வாங்க சோஷியல் மீடியாவில் பகிர்ந்தனர். வேறு சிலர் சாக்கடையில் இறங்கலாமா... வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்க, அங்குவந்த இளைஞர் ஒருவர் திடீரென சாக்கடையில் இறங்கி மூதாட்டியைத் தூக்கி மார்போடு தாங்கிப் பிடித்தார். அவர் வேறு யாரும் இல்லை. சமூகச் சேவகரான மணிமாறன்தான் அந்த நபர். 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவர், ‘அன்னை தெரசா’வின் சமூகச் சேவையால் ஈர்க்கப்பட்டு 17 ஆண்டுகளாகத் தொழுநோயாளிகள், ஆதரவற்றோர்களுக்குச் சேவைசெய்து வருகிறார். அதுமட்டுமல்ல, அநாதையாக அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் கிடக்கும் சடலங்களை மீட்டு முறைப்படி சடங்குகள் செய்து அடக்கம் செய்கிறார். சுயமாக இயங்க முடியாத கை, கால்களை இழந்த பலருக்கும் உதவிக்கரம் நீட்டுகிறார். இதற்காக மத்திய - மாநில அரசுகளிடம் இருந்து விருதுகளையும் பெற்றுள்ளார் மணிமாறன். கேரளா பலத்த மழையால் வெள்ளக்காடாக மாறியபோது, லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து உணவு, உடைகளின்றி தவித்தனர். தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் கேரள மக்களின் துயர் துடைத்தது. அந்த நேரத்தில் தன்னுடைய பைக்கை அடகுவைத்து தன்னால் முடிந்த தொகையைத் திரட்டி கேரளாவுக்கு நிவாரணமாக வழங்கினார், மணிமாறன்.




நம்மிடம் மனம்விட்டு பேசிய அவர், ‘‘என்னுடைய சொந்த ஊர் திருவண்ணாமலை தலையாம் பள்ளம் கிராமம். ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். நான் சிறுவயதாக இருக்கும்போது என்னுடைய பெற்றோர் நிறையப் பேருக்கு அன்னதானம் வழங்கினர். அதைப் பார்த்த எனக்கும், மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை வந்துவிட்டது. தொழுநோயாளிகளுக்குத் தொண்டுசெய்யும் எண்ணம் வந்ததற்குக் காரணம், ‘அன்னை தெரசா’தான். நாங்கள், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழுநோயாளிகளுக்குச் சேவை செய்துள்ளோம். 1,500-க்கும் அதிகமானோரைக் குணமாக்கிப் பழைய நிலைமைக்குக் கொண்டு வந்துள்ளோம். ஆதரவற்ற முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், குழந்தைகள் என ஒரு லட்சத்துக்கும் அதிகமானோரை மீட்டுள்ளோம். தமிழகம் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களுக்கும் சென்று சமூகச் சேவைகளைச் செய்கிறோம்.
2008-ல் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமைச் சந்தித்தபோது, ‘தனி மரம் தோப்பு ஆகாது’ என்றார். அதன்பிறகு, ‘உலக மக்கள் சேவை மையத்தைத் தொடங்கினோம். இந்த அமைப்பு மூலம் இதுவரை ஒருவரிடம்கூட நிதி வாங்கியதில்லை... உதவியும் கேட்டதில்லை. மருத்துவமனைகளில் அநாதையாக இருந்த 850 உடல்களை மீட்டு அடக்கம் செய்துள்ளோம். சமூகச் சேவைக்காக 50-க்கும் அதிகமான ‘விருதுகள்’ எனக்கு வழங்கப்பட்டுள்ளன. இதையெல்லாம் பெருமைக்காக நான் சொல்லிக்கொள்ளவில்லை. அனைவருக்கும் சகிப்புத்தன்மை இருக்க வேண்டும். பெற்றோரைத் தயவுசெய்து வீட்டில் இருந்து வெளியேற்றிவிடாதீர்கள். நாளைக்கு இதே நிலைமைதான் நமக்கும்’’ என்றார் வேதனையோடு!
 
  • Like
Reactions: sudharavi

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
நம்மிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே, மருத்துவமனை சவக்கிடங்கில் அநாதையாகக் கிடந்த மூன்று ஆண் சடலங்களைப் போலீஸ் அனுமதி பெற்று அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டார், மணிமாறன். இறந்தவர்களின் வாரிசுபோல் பால் ஊற்றி, சடங்குகளைச் செய்து பாலாற்றில் சடலங்களைப் புதைத்ததைப் பார்க்க முடிந்தது. எத்தனை பேருக்கு இந்த மனிதநேயம்..? உண்மையில் பாராட்டுக்குரியவரே மணிமாறன்!
 
  • Like
Reactions: sudharavi

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
தொடரும் சிறுமிகள் மீதான வன்முறை
தொடரும் சிறுமிகள் மீதான வன்முறை
தருமபுரிக்கு அருகிலிருக்கும் சிட்லிங்கி மலைக் கிராமத்தைச் சேர்ந்த ராணிக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 16 வயது. அவருடைய பெற்றோர் கூலித் தொழிலாளர்கள். பாப்பிரெட்டிப்பட்டியில் தங்கி அவர் 12-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். தீபாவளி விடுமுறைக்காக சிட்லிங்கிக்கு வந்தார். மதிய வேளையில் இயற்கை அழைப்புக்காக வீட்டுக்கு அருகில் உள்ள வனப் பகுதிக்குச் சென்றார். அங்கு அவரைப் பின்தொடர்ந்த சதீஷ், ரமேஷ் இருவரும் அவரைக் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கினர்.
உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் மிகத் தாமதமாகவே மருத்துவமனையில் ராணி சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி இறந்தார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ராணிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்க முடியும். அதற்கான துரித நடவடிக்கையை மேற்கொள்ள காவல்துறை தவறிவிட்டது எனக் கூறப்படுகிறது. கடமையைச் செய்யத் தவறிய அதிகாரிகளின் அலட்சியம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.


ஓய்வெடுங்கள் மருத்துவரே
டி.எஸ். கனகா, ஆசியாவின் முதல் நரம்பியல் அறுவைசிகிச்சை பெண் மருத்துவர். நரம்பியல் மருத்துவத்தில் மிகப் பெரும் ஆளுமையான அவருக்கு ஆழ்மூளைத் தூண்டலிலும் பக்கவாத சிகிச்சையிலும் மிகுந்த ஈடுபாடு உண்டு. ஸ்டீரியோடாக்டிக் அறுவை சிகிச்சையின் முன்னோடி. சென்னை மருத்துவர் கல்லூரியின் நரம்பியல் பிரிவு அவருடைய முனைப்புக்கும் வெற்றிகரமான முன் முயற்சிகளுக்கும் சான்றாக உள்ளது. கனகாவின் தாக்கத்தாலும் ஊக்கத்தாலும் 80-க்கும் மேற்பட்ட பெண் நரம்பியல் மருத்துவர்கள் உருவானார்கள்.
இந்திய - சீனப் போரின்போது ராணுவத்திலும் ஈராண்டுகள் பணியாற்றினார். நரம்பியல் துறை பேராசிரியராக, சென்னை மருத்துவக் கல்லூரியில் நீண்டகாலம் பணியாற்றிய கனகா 1990-ல் ஓய்வுபெற்றார். பணி ஓய்வுக்குப் பிறகு முழுநேரமும் ஏழைகளுக்கு உதவினார். அதற்காகத் தனது ஓய்வூதிய நிதியைக்கொண்டு ‘ஸ்ரீ சந்தான கிருஷ்ணா பத்மாவதி ஹெல்த்கேர் & ரிசர்ச் ஃபவுன்டேஷன்' எனும் அமைப்பை நிறுவினார். சமீபத்தில் உடல்நலம் குன்றிய கனகா, சென்னையில் கடந்த புதன் அன்று 86-வது வயதில் காலமானார்.
நைட்டி அணியத் தடை?
ஆந்திரப் பிரதேச மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் தோகலாபள்ளி என்ற கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் ‘மாலை ஆறு மணி முதல் காலை எட்டு மணிவரை மட்டுமே பெண்கள் நைட்டி அணிய வேண்டும். நைட்டி அணிந்தபின் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வரக் கூடாது’ என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாட்டை மீறும் பெண்ணுக்கு ரூ.2,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் இந்தத் ‘தடை’யை மீறும் பெண்களைப் பற்றிச் சொன்னால் 1000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.


அந்த ஊரில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுவினர்தான் இந்தக் கட்டுப்பாட்டை விதித்துள்ளனர். “இது தொடர்பாக அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் யாரும் புகார் அளிக்கவில்லை. இருப்பினும் பெண்களுக்கு இவ்வாறு தடை விதிப்பது சட்டவிரோதமானது” என்று அங்கே சென்றுவந்த துணைக் காவல் ஆய்வாளர் விஜய் குமார் தெரிவித்தார்.
போர்க் குற்றவாளிகளே வருக!
முதல் உலகப் போர் 1918 நவம்பர் 11 அன்று முடிவடைந்தது. இதன் நூறாவது ஆண்டு விழா உலகம் முழுவதும் நடைபெற்றுவருகிறது. இதன் தொடர்ச்சியாக பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் முதல் உலகப் போர் நூற்றாண்டு நிறைவு விழா அனுசரிக்கப்படுகிறது. இந்த விழாவில், அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் உள்ளிட்ட உலகின் முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர். அதிபர் டிரம்ப் இந்த விழாவுக்குச் சென்றபோது அவரது காரை மறிக்கும் வகையில் பெண் ஒருவர் மேலாடை இல்லாமல் ஓடிவந்தார்.


அவரைத் தொடர்ந்து அவருக்குப் பின் இன்னொரு பெண்ணும் மேலாடை இல்லாமல் ஓடி வந்தார். இவர்கள் இருவரின் உடலிலும் welcome war criminals என்று எழுதப்பட்டு இருந்தது. அந்தப் பெண்கள் இருவரும் உடனடியாகக் கைதுசெய்யப்பட்டனர். உலகம் முழுவதும் அந்தப் பெண்களுக்கு ஆதரவு குவிந்துவருகிறது.
எகிப்து திரையுலகின் அரசி
எகிப்திய மௌனப் படங்களில் ஓரமாக நிற்கும் துணை நடிகையாக 1949-ல் அறிமுகமானார் ஹிண்ட் ரஸ்தம் (Hind Rostom). வசீகரிக்கும் அழகாலும் உணர்ச்சிமிக்க நடிப்பாலும் நளினமான நடனத்தாலும் உறுதியான உடல்மொழியாலும் எகிப்தை மட்டுமல்லாமல் உலகையே தன்மீது மையல் கொள்ளவைப்பார் என அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை. இவரது நடிப்பில் 1955-ல் ஹஸன் அல் இமான் இயக்கத்தில் வெளியான ‘இரவின் பெண்’ எனும் திரைப்படம் அதை உலகுக்கு உணர்த்தியது.

இவர் 1929-ல் பிறந்தார். 80 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அழகின் மொத்த உருவமாக இருந்தபோதும், வெறும் அழகுப் பதுமையாக மட்டுமே திரையில் உலவவில்லை. மனத்தில் பட்டதைச் சட்டெனப் பேசும் துணிவு நிறைந்த தனித்துவமான பெண்ணாக மட்டுமே நடித்தார். தெருமுனை பழ வியாபாரியாக அவர் நடித்த ‘கெய்ரோ ஸ்டேஷன்’ எனும் திரைப்படத்தை அவரது நடிப்பின் உச்சம் எனலாம். உமர் ஷெரிஃப் போன்ற நடிகர்களுடன் நடிக்கும்போதும் தனது நடிப்பு திறனால் தனித்து ஜொலித்தார்.

எண்ணற்ற விருதுகள் அவரைத் தேடிவந்தன. அவற்றில் சிலவற்றை நிராகரித்தும் உள்ளார். திரைத் துறையில் உச்சத்தில் இருந்தபோது 1979-ல் ஓய்வுபெறுவதாக அறிவித்தார். அவரை மீண்டும் நடிக்கவைக்க முயன்ற பலரது முயற்சி வெற்றிபெறவில்லை. மாரடைப்பால் 79 வயதில் மறைந்த அவரது 87-வது பிறந்தநாளையொட்டி கடந்த செவ்வாய் அன்று சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.
 
  • Like
Reactions: sudharavi