நின்னைச் சரணடைந்தேன் - கதை திரி

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
394
63
அத்தியாயம் – 43


மறுநாள் காலையில் வித்யா, மேகலா, கீதா மூவரும் தூங்கிக்கொண்டிருக்க திடீரென பாட்டு பாடும் சத்தமும், வெளிச்சமும் கண்ணைக் கூச, எழுந்தவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

மது தலைக்குக் குளித்துவிட்டு, அர்ஜுன் வாங்கிக் கொடுத்த பட்டுப்புடவையைக் கட்டிக்கொண்டு, தலை வாரியபடி பாடிக்கொண்டிருந்தாள். மூவருக்கும் அவளது செய்கை பயத்தைக் கொடுக்க வித்யா, "அம்மா!" என அழைத்தபடி கீழே இறங்கி ஓடினாள்.

வித்யாவின் சப்தத்தில் திரும்பிப் பார்த்த மது மேகலாவையும், கீதாவையும் பார்த்து, “குட் மார்னிங்" எனச் சொல்லிச் சிரித்தாள்.

பதில் சொல்லாமல் நிற்பதைப் பார்த்தவள், “என்னடி நின்னுகிட்டே தூங்கறீங்களா? போய்க் குளிச்சிட்டு வாங்க மணியாகுது. என்னையே அர்ஜுன் தான் போன் பண்ணி எழுப்பினார். நேத்து கல்யாண மண்டபத்தில் இருந்த மாதிரி தான் நினைவிருக்கு அப்புறம் எப்படி வீட்டுக்கு வந்தோம்ன்னு புரியவே இல்லை" எனச் சொல்லியபடி தன் வேலையைத் தொடர்ந்தாள்.

மேகலாவும், கீதாவும் ஒருவர் கையை மற்றவர் பற்றிக் கொள்ள வித்யாவுடன் வந்த விமலாவும், ராஜியும் அதிர்ந்து போய் ஒருவரை ஒருவா பார்த்துக்கொண்டனர்.

மதுவின் அருகில் வந்த விமலா, “மது என்னம்மா இதெல்லாம்" என கேட்க

"இப்போதான் அத்தை அவர் போன் செய்தார். முகூர்த்த நேரம் நெருங்கிட்டு இருக்கு இன்னும் தூங்கிட்டு இருக்கியேன்னு சொன்னார். சரி, நாம முதலில் ரெடி ஆகிட்டு அப்புறம் இவங்களை எழுப்பலாம்னு நினைத்தேன். ஆமாம் நீங்க ஏன் டல்லா இருக்கீங்க?”

“மது நேத்து என்ன நடந்துதுன்னு உனக்கு நினைவில்லையா?” என கலவரத்துடன் கேட்டார் ராஜி.

"நினைவிருக்கே. காலைலயிருந்து நடந்ததைச் சொல்லவா எனச் சொன்னவள் திருமண தினத்திற்கு முன் தினம் நடந்ததையும், அர்ஜுன் தன்னிடம் விடை பெற்று சென்றது வரை சொன்னாள். "அதுக்கு அப்புறம் எதோ நடந்தா மாதிரி இருக்கு. ஆனால், நினைவே இல்ல" என்றாள்.

அதற்குள் அங்கே வந்திருந்த மற்றவர்களும், மதுவின் பதிலில் செய்வதறியாது திகைத்து நின்றிருந்தனர். அவளருகில் வந்த ராஜேஷ், மதுவின் கையை பிடித்து தரதரவென இழுத்துச் சென்றான்.

“அண்ணா! எங்கே என்னை இப்படி இழுத்துட்டுப் போறீங்க" என்று அவள் கேட்க பதிலே சொல்லாமல் இழுத்துச் சென்று, ஹாலில் ஒரு ஓரத்தில் வைத்திருந்த அர்ஜுனின் புகைப்படத்தின் முன்பு நிறுத்தினான்.

"அங்கே பாரு... உன்னோட அர்ஜுனைப் பாரு" எனச் சொன்னவன், அதற்கு மேல் முடியாமல் தடுமாற.... அங்கிருந்த போட்டோவைப் பார்த்தவள் கோபத்தோடு, "யார் என் ரூம்லயிருந்து இந்தப் போட்டோவை எடுத்தது. என்ன வேலை செய்து வச்சிருக்கீங்க. மாலையெல்லாம் போட்டு, பொட்டெல்லாம் வச்சி சீ...” என்று மாலைகளைக் கழற்றித் தூக்கி வீசினாள். பொட்டை அழித்துவிட்டு அந்த போட்டோவை எடுத்து தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்.

‘அர்ஜுன் எங்கே? ஸ்ரீ ராம் அண்ணா வீட்ல தானேயிருக்கார். நானே போன் செய்து பேசிக்கிறேன் என்ற போதுதான் ஸ்ரீ ராமும் அங்கே தான் இருக்கிறான் என்று கவனித்தாள். அவன் அருகில் சென்று, "அண்ணா! அர்ஜுன் எங்கே? நீங்க இங்கே இருக்கீங்க" எனத் தயக்கத்துடன் கேட்டவள், அவன் கையில் போட்டிருந்த கட்டைப் பார்த்தாள்.

"அண்ணா! உங்களைத்தான் கேட்கிறேன் அர்ஜுன் எங்கே?" என்று கத்த ஸ்ரீராம் ஏதும் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டான். “ஏன் யாரும் எதுவும் சொல்ல மாட்டேன்றீங்க. எனக்குப் பைத்தியமே பிடிச்சிடும் போலிருக்கு" என்று வீடே அதிர கத்தினாள்.

“மது! அர்ஜுன் இனி, திரும்பி வரமாட்டான்" எனச் சொல்லிவிட்டுச் சேலைத் தலைப்பில் வாயை மூடிக்கொண்டார்.

"என்ன அத்தைச் சொல்றீங்க? நீங்க சொல்வதுக்கு என்ன அர்த்தம்? நீங்க யார் சொல்றதையும் நான் நம்ப மாட்டேன்” ஈஸ்வரனிடம் சென்றவள் “மாமா! நீங்க சொல்லுங்க. அர்ஜுன் எங்கே மாமா சொல்லுங்க?" என்று கேட்க, கண்களில் நீர் தளும்ப, "மதும்மா அவங்க சொல்வது உண்மைதான்டா..." என்றார்.

தன்னையறியாமல் இரண்டடி பின்னால் சென்றவள், "நான் நம்ப மாட்டேன் நீங்க எல்லோரும் சேர்ந்து என்னை ஏமாத்தறீங்க. அண்ணா நீயாவது சொல்லு... எனக்கு ஒரே குழப்பமா இருக்கு” என்று ராஜேஷின் தோளில் சாய்ந்து கொள்ள, அவன் முகத்திலேயே அறைந்து கொண்டு அழுதான்.

“ஐயோ! அவன் மேல இப்படி உயிரையே வச்சிருக்கியே. உன்கிட்ட நான் எப்படிடா சொல்லுவேன்? இனி, அவன் திரும்பி வரமுடியாத இடத்துக்குப் போய்ட்டான்னு, என் வாயால் என் தங்கைகிட்டச் சொல்ல வச்சிட்டியே கடவுளே!" என்று கதறி அழுதான்.

ராஜேஷின் வார்த்தைகளைக் கேட்டவள் போட்டோவை நழுவவிட இறுகிப் போய் நின்றாள். ராஜேஷ் அவள் தோளைப் பிடித்து உலுக்கினான்.

"மது அழுதுடு. உன் மனசுலயிருக்கும் துக்கமெல்லாம் கண்ணீரா வெளியே வரட்டும் அழுடா. நீயும் இப்படியே இருந்து எங்களைக் கொல்லாதே அழும்மா அழு. அர்ஜுன் ஒருவன் எங்களை அழவச்சது போதும், நீயும் எங்களை வதைக்காதேடா" என அவளை உலுக்கினான்.

"அண்ணா... அர்ஜுன்...” என்றவள் கீழே விகுந்து கிடந்த அர்ஜுனின் போட்டோவைப் பார்த்தபடி , “இப்போவும் என்னை ஏமாத்திட்டுப் போய்ட்டீங்க இல்ல அர்ஜுன், என்னைத் தனியா தவிக்க விட்டுட்டுப் போய்ட்டீங்களே அர்ஜுன்!" எனப் பெருங்குரல் எடுத்து கதறியபடி போடோவின் மீது விழுந்தாள்.

போடோவில் இருந்த கண்ணாடி சில்லும், அவளது வளையல்களும் உடைந்தும் அவள் கைகளில் கீறி காயத்தை ஏற்படுத்த, அந்த உணர்வு கூட இல்லாமல் அவன் போட்டோவை அணைத்தபடி அழுதவளை ராஜியும், விமலாவும் வந்து அணைத்துக் கொண்டு அழுதனர்.

அர்ஜுன் இறந்த துக்கம் ஒருபுறம் இருக்க, மதுவைத் தேற்றுவதே பெரும் பாடாக இருந்தது. அன்றெல்லாம் அழுது அழுது ஜுரம் வந்துவிட, ஜுர வேகத்திலும் அர்ஜுன், அர்ஜுன் எனப் புலம்பிக்கொண்டிருந்தாள். பத்து நாள்களுக்குப் பிறகு, ஓரளவு தெளிந்தது போலயிருந்தாள். ஆனால், நினைத்த நேரத்தில் மல்லிப்பந்தலின் கீழே அமர்ந்து கொள்வதும், அங்கேயே படுத்துக்கொள்வது. திடீரென சுவற்றை வெறித்துப் பார்த்தபடி இருப்பது என இருந்தாள். யாரிடமும் சரியாகப் பேசாமல் அர்ஜுனின் உடைகளை அணைத்தபடி படுத்துக் கொண்டிருப்பாள்.

ஒரு மாதத்திற்குப் பிறகு, சந்துரு தாங்கள் டெல்லி கிளம்புவதாக தெரிவிக்க, ஈஸ்வரனும் சரி என்றார். தன் அறைக்குச் சென்ற மது அந்த அறையை ஒருமுறை சுற்றிப் பார்த்தாள். தன் பிறந்த நாள் அன்று அர்ஜுன் அவள் அறைக்கு வந்தது முதல், அவன் நின்ற இடம், அமர்ந்த இடம் என்று ஒவ்வொரு இடத்தையும் தொட்டுப் பார்த்து அழுதாள்.

சூட்கேசை எடுத்துத் தன் துணிமணிகளை அடுக்கத் தொடங்கினாள். மதுவிற்கு மாத்திரை எடுத்துக்கொண்டு அவளறைக்கு வந்த ராஜி, என்ன என்று விசாரிக்க, தானும் அவர்களுடன் டெல்லி போகப் போவதாகவும் இனி, அவர்களுடன் தான் இருக்கப் போவதாகவும் சொன்னாள்.

அனைவரும் எவ்வளவோ எடுத்துக் கூறியும் கேளாமல், “அர்ஜுன் என்னை நம்பிச் சொல்லி இருக்கார். இனி, அவங்க எனக்கு அத்தை மாமா இல்லை அப்பா அம்மா” எனச் சொல்ல, விமலா கண்ணீரோடு அவளை அணைத்துக் கொண்டார். அடுத்த நான்காம் நாள் அவர்களுடன் கிளம்பி டெல்லி வந்து சேர்ந்தாள். அர்ஜுனின் அறையிலேயே தாங்கிக் கொண்டாள்.சுபாவும், ஹரியும் அடிக்கடி வந்து அவர்களைப் பார்த்துவிட்டுச் சென்றனர்.

ஒருநாள் விமலா சமையலறையில் நெஞ்சை பிடித்துக்கொண்டு மயங்கிச் சரிய, மது துடித்து விட்டாள். டாக்டர் மாசிவ் அட்டாக் எனச் சொல்லிவிட, பெரும் போராட்டத்திற்குப் பிறகு காப்பாற்றிப் பிழைக்க வைத்தனர். அன்று முதல் விமலாவை விட்டு அந்தப் பக்கம் இந்தப் பக்கம் செல்வதில்லை அவள். ஓரளவு உடல் தேறியும் டாக்டர் பயணம் செய்யலாம் என்று சொன்னதும், அனைத்துச் சொத்துக்களையும் விற்றுவிட்டு, பெசென்ட் நகரில் ஒரு வீடு வாங்கி அங்கே குடிவந்தனர்.

நடுவில் மதுவின் ரிசல்ட் வர அர்ஜுனிடம் சொன்னபடியே கோல்ட் மெடல் வாங்கினாள். மெடலை வாங்கிக்கொண்டு வந்து அர்ஜுனின் படத்தின் முன்பு வைத்துவிட்டு அழுதாள். “என் கூடவே இருப்பேன்னு சொன்னீங்களே! நான் என்னோட வாக்கைக் காப்பாத்திட்டேன். ஆனா, நீங்க என்னை ஏமாத்திட்டீங்களே" என அழுதாள்.

"அவன் உன் கூடவே இருந்து எல்லாத்தையும் பார்த்துகிட்டு இருப்பான் மது அழாதே " எனு சந்துரு ஆறுதல் கூறினார்.

அர்ஜுன் இறந்து ஆறுமாதத்திற்குப் பிறகு, மதுவிற்கு வரன் பார்ப்பது பற்றி பேச்சுவர, அவள் மறுத்துவிட்டாள். அதில் கொஞ்சம் ராஜேஷுக்கு வருத்தம். அந்த நேரம் வெளிநாடு செல்லும் வேலை வர. அடுத்த பத்து நாட்களில் கிளம்பிவிட்டான்.

மதுவிற்குச் சென்னை வந்த பின், அடிக்கடி ஹோமிற்குச் சென்று வந்தாள். ஹோமிற்காக நிறைய சாரிட்டி ப்ரோக்ராம் செய்தாள். மதுவை இரண்டு மூன்று முறை ஹோமிலும், சாரிட்டி ப்ரோக்ரமிலும் பார்த்த ஒருவன் அவளைத் திருமணம் செய்து கொள்வதாக வந்து சந்த்ருவிடம் பேசினான்.

அவர்கள் மகிழ்ச்சியுடன் மதுவிடம் சொல்ல, அவனுடைய வீட்டிற்குப் போன் செய்து தன்னைப் பற்றி அனைத்தையும் சொல்லிவிட, அத்துடன் அந்தக் கல்யாணப் பேச்சு நின்று போனது.

தீபக் தான் அவளிடம் சண்டையிட்டான். அவன் பேசி முடிக்கும் வரை எதுவும் பேசாமல் கேட்டுக்கொண்டாள். அவ்ன் ஓய்ந்து போய் அமர்ந்துவிட, “நீயே நினைத்து பாரு ஒருத்தனைக் காதலிச்சிட்டு, கல்யாணம் வரை வந்து அந்த மாப்பிள்ளை இறந்து போனால், அந்தப் பொண்ணை யாரு முழு மனதோடு ஏத்துக்குவாங்க? என்னால எப்படி இன்னொருவரோடு சேர்த்து குடும்ப வாழ்க்கை வாழ முடியும்?

ஒண்ணு அந்தப் பொண்ணை அவன் புரிஞ்சிக்கிட்டு விட்டுக்கொடுத்துப் போற நல்ல மனசு இருக்கணும். இல்ல, அந்தப் பொண்ணுக்கு அவன் மேல காதல் வரணும். ரெண்டுமே நடக்கப் போறதில்லை. அப்படிப் பெருந்தன்மையா நடந்துக்க இங்கே யாரும் கிடையாது. என்னால இன்னொருத்தரோட வாழ்கை பாழாக வேண்டாம் " எனச் சொல்லிவிட்டு எழுந்து சென்றாள்.

தீபக்கிற்குள் ஒருவாரமாக இதே சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது. ஒருவழியாக ஒரு முடிவை எடுத்துவிட்டுத் தன் மாமாவை போன் செய்து சென்னைக்கு அழைத்தான். அவரும் கல்யாணம் பற்றிப் பேச அழைத்துள்ளனர் போல என்று எண்ணியபடி கிளம்பி வந்தார்.

மது வீட்டில் இல்லாத நேரத்தில் தீபக் தன்னுடைய முடிவை அனைவரிடமும் சொல்ல, விஷயத்தை கேட்ட அனைவரும் திகைத்துப் போயினர்.

மேகலாவின் அருகில் சென்ற தீபக், “சாரி மேகலா! எனக்கு வேற வழி தெரியல" எனச் சொல்லிவிட்டு அமர்ந்தான்.

மேகலாவின் தந்தை மகளின் வாழ்க்கை இப்படி திரிசங்கு சொர்க்கமாக ஊசலாடுவதை எண்ணி வேதனையுடன் சண்டையிட்டார்.

“அப்பா ஒண்ணும் சொல்லாதீங்க அப்பா! அத்தான் எடுத்த முடிவு சரிதான். அவர் முடிவுக்கு நானும் சம்மதிக்கிறேன். மதுவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும்னு நாம நினைக்கிறோம். அதுக்கு அத்தானே அவளைக் கல்யாணம் செய்துக்கறது தான் சரி. அவரால் தான் அவளைப் புரிஞ்சிக்க முடியும்" எனச் சொல்ல, கோபத்தோடு அவளை அழைத்துக் கொண்டு வெளியேறினார் அவளது தந்தை.

அன்று அர்ஜுனின் முதலாம் ஆண்டு நினைவு நாள். மது கிளம்பி ஹோமிற்குச் சென்று குழந்தைகளுடன் இருந்து தன் மனதை சற்று அமைதி படுத்திக்கொண்டாள். அன்று மாலை, மாமா வீட்டிற்கு வந்து அங்கேயே தங்கிவிட்டாள். மறுநாள் காலையில் போன் ஒலிக்க மாடியில் அவள் போனை எடுத்த அதேநேரம், கீழே ராஜியும் போனை எடுத்தார்.

மேகலா அழுதபடி தனக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளைப் பார்ப்பதாகச் சொல்ல, மது செய்வதறியாமல் திகைத்து நின்றிருந்தாள்.

ராஜி பேசிவிட்டுப் போனை வைத்ததும், வேகமாக அவரிடம் வந்து கேட்டாள். ராஜியும் மேகலா வந்தது, தீபக்கின் முடிவு என அனைத்தையும் சொல்லிவிட கோபத்தோடு தீபக்கைத் தேடிச் சென்றாள். ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தவன் கையிலிருந்து பேப்பரைப் பிடுங்கி எறிந்தாள்.

அவளது கோபத்தைக் கண்டவன், “என்ன மது?" என்றதும் அவன் சட்டைக் காலரைப் பிடித்து உலுக்கினாள்.

"உன் மனசுல, நீ என்னடா நினைச்சிகிட்டு இருக்க? பெரிய தியாகியா நீ! யாரைக் கேட்டு என்னைத் தான் கல்யாணம் செய்துக்கப் போறேன்னு சொன்ன? நீ சம்மதித்தால் போதுமா? என்னோட சம்மதத்தைக் கேட்டியா? வார்த்தைக்கு வார்த்தை தங்கச்சின்னு சொல்வியே… இதானா அது" என்றவள் மேலும் அவன் பதில் சொல்ல முடியாத கேள்வியைக் கேட்டுவிட்டு, "சொல்லு மேகலாவுக்கு என்ன பதில் சொல்லப் போற?

போதும்! ஒரு மதுமிதா போதும் இந்த வீட்டுக்கு. மேகலாவையும் அதே போல ஆக்கிடாதே. என் ஒருத்திக்காக நம்ம மூணு பேர் வாழ்க்கை பாழ் ஆவதை நான் விரும்பல. தயவுசெய்து மேகலாவைக் கல்யாணம் செய்துக்கோ. அவளை ஏமாத்திடாதே" என்று அவன் மார்பிலேயே சாய்ந்து அழுதாள்.

அவளை விலக்கி நிறுத்தியவன், “உன்னை ஆசைப்பட்டு நான் கல்யாணம் செய்துக்க நினைக்கல. உனக்கும் ஒரு பாதுகாப்பு தேவை. அந்த ஒரே ஒரு காரணம் தான். சரி, உன் இஷ்டப்படியே நான் மேகலாவைக் கல்யாணம் செய்துக்கறேன். ஆனா, எனக்கு நீ ஒரு சத்தியம் செய்து கொடு" என்று மதுவின் முன் தன் கையை நீட்டினான்.

"என்ன செய்யணும் சொல்லு" என்றாள் வேகமாக.

"நான் மேகலாவைக் கல்யாணம் செய்துக்கணும்னா; அதுக்கு முன்னால் நீ யாரையாவது கல்யாணம் செய்துக்க சம்மதிக்கணும். இதுக்க்கு நீ சரின்னு சொன்னா எனக்கும், மேகலாவுக்கும் கல்யாணம் நடக்கும்" என்றான்.

அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள். சற்று யோசித்தவள், “சரி முதல்ல உங்க கல்யாணம் நடக்கட்டும். அப்புறம் நான் சம்மதிக்கிறேன்" என்றாள்.

"பேச்சு மாறக்கூடாது மது! நீ அப்புறம் கல்யாணத்துக்குச் சம்மதிக்கலைன்னா, நான் மேகலாவை அவங்க வீட்டுக்கு அனுப்பிடுவேன். இல்ல, இதே வீட்டில் அவ தனியா இருப்பா" என்று மிரட்ட, அவள் வேதனையுடன் தலையை ஆட்டினாள்.

விஷ்யம் அறிந்த ராஜேஷ் மேகலாவிற்குப் போன் செய்து, “நீ கவலைப்படாதே நான் உன் கல்யாணத்தை முன்னால் நின்று நடத்தி வைக்கிறேன் என்று சொல்ல, மேகலாவும் அன்று காலையில் நடந்ததை, ராஜி போன் செய்து மேகலாவிடம் சொன்னதாகச் சொன்னாள்.

முதலில் மேகலாவின் தந்தையின் கோபத்தை குறைக்க வேண்டும் என முடிவெடுத்து அடிக்கடி அவரிடம் பேசினான் ராஜேஷ். மது அப்போதுதான் ஜீவாவின் அலுவலகத்தில் வேலைக்குச் சேந்தாள். கீதாவும் அங்கேயே இருந்தது அவளுக்கு மற்றொரு ஆறுதலாக இருந்தது. கீதா, சிவா, லதாவின் நட்பு அவளைக் கொஞ்சம் மாற்றியது என்றாலும், அந்தப் பழைய துள்ளலோ, துரு துரு பேச்சோ இல்லை.

மெல்ல தன் கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்திற்கு வந்த மது கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள். விளக்கைப் போட்டவள் மணியை பார்க்க, மணி எட்டு. ஐயோ ... அம்மாவுக்கு ஒன்பது மணிக்கு மாத்திரை கொடுக்கணுமே என எழுந்து முகத்தைக் கழுவிக்கொண்டு கீழே வந்தாள்.

விமலா கட்டிலில் படுத்திருக்க, சந்துரு ஈசி சேரில் அமர்ந்தபடி ஜன்னல் வழியாக வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

கிச்சனில் புகுந்தவள் மளமளவென் சப்பாத்தி, குருமா செய்துவிட்டு இருவரையும் சாப்பிட அழைத்தாள். அவர்களும் மறுப்பு ஏதும் சொல்லாமல் வந்து அமர்ந்தனர். ஆனால், மூவருக்கும் இருந்த மன நிலையில் உணவு இறங்கவில்லை. பேருக்குச் சாப்பிட்டுவிட்டு எழுந்து சென்றனர். ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவும் இல்லை.

மது சிறிதுநேரம் கழித்து அவர்கள் இருவருக்கும் மாத்திரைகளைக் கொடுத்துவிட்டு கையுடன் கொண்டு வந்திருந்த விமலாவின் தூக்க மாத்திரையில் ஒன்றைப் போட்டுக்கொண்டு படுத்தாள்.முதல் பாகம் முற்றும்.​
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
394
63
நின்னைச் சரணடைந்தேன் பாகம் - 2

அத்தியாயம் – 44


இரவின் துணையோடு, ரூஃப் கார்டனில் அமர்ந்து வானத்தை வெறித்தபடி யோசனையில் மூழ்கியிருந்த சித்தார்த்தின் எதிரில் வந்து அமர்ந்தாள் சுபா.

"என்ன சித்தார்த்! எந்தக் கோட்டையைப் பிடிக்க இந்த யோசனை?" என்றாள் புன்னகையுடன்.

சலிப்புடன், “மச்...” என்றான்.

"ஓஹ்! மதுமிதாவோட மனக்கோட்டையைப் பிடிக்கவா!"

"நான் எவ்வளவு முட்டாள்தனமா நடந்துக்கிட்டு இருக்கேன் சுபா. ரெண்டு, மூணு முறை அவளை டெல்லியில் பக்கத்தில் இருந்தும் பார்க்க முடியாமல் போச்சு. ராஜேஷ் முதலில் மதுவைப் பற்றிச் சொல்லும் போது, நான் இந்த அர்ஜுன்னு நினைக்கவே இல்ல. அவன் இறந்து ரெண்டு வருஷம் ஆகப்போகுது. ஆனாலும், அவளோட மனசுல இன்னும் அவன் வாழ்ந்துகிட்டு இருக்கான். அப்போ அவங்க ரெண்டு பேருக்கும் நடுவில் எவ்வளவு அண்டர்ஸ்டாண்டிங் இருந்திருக்கணும்" என்ற தம்பியை வியப்புடன் பார்த்தாள்.

"நீயும் தானேடா அவளை உன் உயிரா காதலிக்கிற" என்றாள் ஆறுதலாக.

"என்ன காதலிச்சி என்ன சுபா? எனக்கு அவள் மேல நம்பிக்கை இல்லாமல் போச்சே. இந்தக் கடவுளுக்குக் கண்ணே இல்லைன்னு சொல்றது உண்மைதானோன்னு தோணுது. அர்ஜுனையும், மதுவையும் ஒண்ணு சேர்த்து வச்சிருக்கலாம். அந்த வருத்தம் என் ஒருத்தனோட போயிருக்கும். இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தி, என் மதுவை ரொம்பவே அழ வச்சிட்டானே" என்று விரக்தியுடன் சொன்னான்.

"ம்ம்... அர்ஜுன் இறந்தது எல்லோருக்குமே அதிர்ச்சி தான். அதுக்காக நடந்ததையே நினைச்சி நீ கவலைப்படாதேடா. நாளைக்கு அறுபதாம் கல்யாணத்துக்கு அழைக்க, மது வீட்டுக்குப் போறோம். நீயும் வரியா?" என்றாள்.

"எனக்கும் அவளைப் பார்க்கணும்னு ஆசை தான். ஆனா, நான் வந்தா வீணா பிரச்சனை வரும். ஈவ்னிங் தான் பெரிசா அவகிட்ட சேலஜ்ஜெல்லாம் செய்துட்டு வந்திருக்கேன். இன்னைக்கே என்னை என்னவோ வில்லனைப் பார்ப்பது மாதிரி தான் பயத்தோட பார்த்தா" என்றவன் கண்களில் வேதனை தெரிந்தது.

அதைக் கேட்டு அவள் சிரிக்க, "சிரிக்காதே சுபா! நானே வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கேன். அவளோட சம்மதத்தை எப்படி வாங்கறதுன்னே தெரியலை" என்றான் கவலையுடன்.

"டோன்ட் வொர்ரி பிரதர் நடப்பதெல்லாம் நன்மைக்கே. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும். நாளைக்கு மதுகிட்ட, நீ ரொம்ப விசாரிச்சதா சொல்லட்டுமா?" என்று கிண்டலாகக் கேட்டாள்.

இரு கைகளையும் உயர்த்தி ஒரு பெரிய கும்பிடு போட்டு, “அம்மா தாயே! நீ உன் திருவாயை மூடிக்கிட்டு இரு. வந்த வேலை முடிந்ததும் மூட்டையைக் கட்டிக்கிட்டு கிளம்பு. இருக்கும் பிரச்சனையை, தீராத பிரச்சனையா மாத்திட்டுப் போய்டாதே" என்றான்.

சிரிப்பை அடக்கிக்கொண்டு பெருந்தன்மையாகச் சொல்வது போல, “ஏதோ, நீ ரொம்பப் பீலிங்ஸ்ல இருக்கியேன்னு சொன்னேன். என்னவோ என்னை இந்தத் துரத்து துரத்துற?" என்றாள்.

"நீ ஒண்ணும் சொல்ல வேணாம். நாளைக்கு மது வீட்டுக்குப் போனீங்களா... இன்வைட் செய்தீங்கலான்னு கிளம்பி வந்துட்டே இருக்கணும். அங்கே போய் அவளைப் பரிதாபமா பார்க்கற வேலை எல்லாம் வேண்டாம். நீ என்னோட அக்கான்னு தெரிஞ்சி போச்சு. இனியும், அவள் உன்கிட்டப் பழைய மாதிரி பேசுவாளான்னே சந்தேகம் தான்" என்று அவன் சொல்லிக்கொண்டிருக்க, அதைக் கேட்டபடியே வந்தாள் மீரா.

"அடடடடா... என்ன ஒரு பாசம்! அவளைக் கொஞ்சங்கூட விட்டுகொடுக்க மாட்டேன்றீங்களே சித்தார்த். அவளுக்காக இவ்வளவு பார்க்கறீங்க... ஆனா, அவ உங்களைப் புரிஞ்சிக்கவே இல்லையே?" என்றாள்.

"மது என்னோட பாதி அண்ணி. அவளுக்காக நான்தான் பார்க்கணும். அவள் பட்டக் கஷ்டமெல்லாம் முடிஞ்சி போச்சு. இனி, அவளோட வாழ்க்கைல சந்தோஷம் மட்டும்தான் இருக்கணும். அதுக்காக என்ன முடியுமோ கண்டிப்பா செய்வேன். என்னை அவளுக்குப் புரிய வைப்பேன்" என்று உறுதியோடு சொன்னான்.

மீரா, பெருமையுடன் சித்தார்த்தைப் பார்த்தாள். "ஆல் த பெஸ்ட் கொழுந்தனாரே! நாங்க எல்லோரும் உங்க பக்கம் தான். மது உங்க பக்கம் சாயத்தான் போறா. அதுக்கு என்னோட அட்வான்ஸ் வாழ்த்துக்கள்" என்று சித்தார்த்தின் கையைப் பிடித்துக் குலுக்கினாள்.

அவனும் சிரித்துக்கொண்டே தலையைக் கோதிக்கொண்டான்.

அன்று வெள்ளிக்கழமை. காலையில் கோவிலுக்குச் சென்று வந்த மது, நிதானமாக சமைத்து விட்டு காலை உணவை முடித்துக்கொண்டு, பூக்களைச் சரமாகத் தொடுத்தபடி அமர்ந்திருந்தாள்.

விமலா மெதுவாக, “என்ன மது இன்னைக்கு ஆபீஸ் போகலையா? நேத்தோட உன் லீவ் முடிஞ்சிருக்குமே?" என்றார் கேள்வியுடன்.

அவளும் இந்தக் கேள்வியை எதிர்பார்த்தே காத்திருந்தாள். அதனால் தயங்காமல், “இல்லம்மா! திங்கட்கிழமைலயிருந்து போகலாம்னு இருக்கேன்" என்று தலையை நிமிராமலே சொல்லிவிட்டுப் பூவை, பூவைத் தொடுத்துக் கொண்டிருந்தாள். வாய் அவர்களுக்குப் பதில் சொன்னாலும், மனம் அவர்களிடம் தேவை இல்லாமல் பொய் சொல்கிறோமே என்று வருந்தியது.

எதையுமே கண்களைப் பார்த்துப் பேசுபவள் நேருக்கு நேராகப் பார்க்காமல் பேசியதிலிருந்தே, ‘இனி, ஆபீஸ் போக விருப்பம் இல்லை’ என்பதை புரிந்துக்கொண்டனர். அவர்கள் அதையும் எதிர்பார்த்தே இருந்தனர்.

தீபக்கின் திருமணத்திற்கு முன்பே இனி, அந்த அலுவலகத்துக்குச் செல்லக்கூடாது என்று முடிவெடுத்து அதன்படி வேறு வேலைக்கு விண்ணப்பித்து போனிலும், அடுத்த கட்டமான ஆன்லைன் இண்டர்வியூவிலும் தேர்ந்தெடுக்கப்பட்டு, வேலையில் சேர அனுமதி கடிதத்திற்காக காத்திருக்கிறாள்.

எப்படியும் வேலைக்குப் போய்ச் சேர பதினைந்து நாட்கள் இருக்கிறது. அதுவரை என்ன செய்வது? என்று யோசித்தவள், ‘இப்போதைக்கு விஷயத்தை வீட்டில் சொல்ல வேண்டாம். பதினைந்து நாட்களும் ஸ்ரீராமின் ஹோமிற்குச் சென்று வரலாம். புது வேலையில் சேர்ந்த பின், வீட்டில் சொல்லிக்கொள்ளலாம். இப்போது சொன்னால் ஏன்? எதற்கு? என்ற பல கேள்விகளைச் சந்திக்க வேண்டி இருக்கும்’ என்று முடிவெடுத்திருந்தாள்.

"அம்மா! நான் ஹோம் வரைக்கும் போயிட்டு வரட்டுமா?" என்று அனுமதி கேட்டாள்.

"போயிட்டுவாம்மா. நேரத்தோடு வந்திடு" என்றார்.

"சரிம்மா என்றவள்" ஹாலில் மாட்டியிருந்த அர்ஜுனின் படத்திற்குப் பூவைப் போட்டுவிட்டு மெல்ல அந்தப் போட்டோவை வருடியபடி நின்றிருந்தாள்.

"வாங்க வாங்க" என்ற குரல் அவளை நினைவுல்கிற்கு வரவழைத்தது. யார் வந்திருப்பது என்று திரும்பிப் பார்த்தவள், ஹரி, ஆதி, மீரா, சுபா நால்வரும் நின்றிருப்பதைப் பார்த்ததும் ஒரு கணம் எதுவும் தோன்றாமல் அப்படியே நின்றிருந்தாள்.

அவளது தயக்கத்தைக் கண்ட ஹரி, “என்ன மதுமிதா எப்படி இருக்க?" என்று விசாரித்தார்.

"சாரி, வாங்க உட்காருங்க. நான் நல்லாயிருக்கேன். நீங்க எல்லோரும் எப்படியிருக்கீங்க?" என்று விசாரித்தவள், "இதோ வருகிறேன்" என்று சொல்லிவிட்டுத் தன்னுடைய தடுமாற்றத்தை மறைக்க கிச்சனுக்குச் சென்றாள்.

ஹாலில் இருந்தவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். சுபா, சித்தார்த்தின் அக்கா என்று தெரிந்ததும் சந்துருவும், விமலாவும் ஆச்சரியம் அடைந்தனர். பிறகு ஆண்களின் பேசும் வேறு திசையில் செல்ல, பெண்களின் பேச்சு வேறு புறமும் சென்றது.

மதுவின் மனமோ, ‘இவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள்?’ என்று யோசித்தபடியே காஃபியுடன் ஹாலுக்கு வந்தாள்.

காஃபியை கொடுத்துவிட்டு நின்றிருந்தவளை, “உட்கார் மது" என்றாள் மீரா.

“என்ன மது ஆபீஸ் போகலையா”? என்று சுபா கேட்டதும், "இல்ல... லீவ் எக்ஸ்ட்டர்ன் பண்ணியிருக்கேன்" என்றவளை மீராவின் விழிகள் குறுகுறுவென அளவெடுத்துக் கொண்டிருப்பதைக் கவனித்த மதுவிற்கு, அங்கே அமர்ந்திருப்பதே சங்கடமாக இருந்தது.

‘சுபா, தன்னைப் பற்றி வீட்டில் அனைவரிடமும் சொல்லி இருப்பாளோ’ என்ற எண்ணமே அவளை அமைதி இல்லாமல் செய்தது.

"குங்குமம் எடுத்துக்கோம்மா!" என்ற சுபாவின் குரல் அழைக்கும் வரை யோசனையில் இருந்தவள் எழுந்து குங்குமம் எடுத்துக்கொண்டு சுபாவைப் பார்த்தாள். சிரித்துக்கொண்டே அவளது நெற்றியில் குங்குமத்தைச் சரியாக வைத்தாள் சுபா.

மீராவும், ஆதியும் தாம்பூலத்துடன் பத்திரிகையை வைத்துக் கொடுத்து, அனைவரும் கட்டாயம் வரவேண்டும் என்று அழைத்தனர். அதுவரை குழம்பிக்கொண்டிருந்த மதுவிற்கு அவர்கள் வந்த காரணம் தெரிந்ததும், சற்று நிம்மதியானது.

மதுவின் போன் ஒலிக்க, “எக்ஸ்கியூஸ்மீ" என்று கேட்டுக்கொண்டு எழுந்து சென்றாள். போனில், “கிளம்பிட்டேன்…, கெஸ்ட் வந்திருக்காங்க..., வந்திடுவேன்… என்று பேசிவிட்டு வந்தாள்.

சுபா மதுவிடம், “எங்கேயாவது வெளியே போகணுமா மது? நீ கிளம்பறதுன்னா கிளம்பு” என்றாள்.

"பரவாயில்லை. நான் மெதுவா போய்க்கிறேன்" என்றாள்.

சுபா ஏதோ பேச விரும்புகிறாள், என்று புரிந்துக்கொண்ட விமலா, "நீ கிளம்பு மது. போய்ட்டு நேரத்தோடு வந்திடு" என்று சொல்ல, வேறு வழியில்லாமல் கிளம்பினாள்.

அவள் கிளம்பி சென்றதும், “என்னம்மா! மது இப்போ எப்படியிருக்கா?" என்றாள் சுபா.

“அப்படியே தான் இருக்கா சுபா! நடுவில் ஆள் கொஞ்சம் மாறினா மாதிரி இருந்ததுன்னு, நாங்ககூடக் கொஞ்சம் சந்தோஷமா இருந்தோம். ஆனா, இப்போ திரும்பவும் உள்ளுக்குள்ளே சுருண்டுகிட்டா" என்றார் கண்கள் கலங்க.

“கவலைப்படாதீங்க அம்மா! எங்க அம்மா, அப்பாவுக்கும் கூட எல்லா விஷயமும் தெரியும். அவங்களுக்கும் மது எங்க வீட்டு மருமகளா வர்றதுல பூரண சம்மதம். என் தம்பி, அவளை நல்லபடியா பார்த்துப்பான். நீங்க, மதுகிட்டப் பேசி எப்படியாவது சம்மதம் வாங்குங்க" என்றாள்.

“அவள் இருக்கற மனநிலைக்கு இனி, ஆபீஸ் போவாளான்னே சந்தேகம் தான் சுபா” என்றாள் மீரா.

“நாங்களும் அதைத் தான் நினைக்கிறோம். அவளும், எதுவும் சொல்லல; நாங்களும் கேட்கல. இப்போ கூட, ஸ்ரீராமோட ஹோமுக்குப் போறேன்னு கிளம்பிப் போயிருக்கா" என்றார் சந்திர சேகர்.

ஹரி, “யாரு? நம்ம அர்ஜுனோட ஃப்ரெண்ட் ஸ்ரீராமா?" என்றார்.

சந்துரு, “ஆமாம் அங்கே தான் போயிருக்கா" என்றதும், “இதோ வருகிறேன்" என்று சொல்லிவிட்டு எழுந்து வெளியே சென்றார் ஹரி.

சித்தார்த்தின் எண்ணுக்கு அழைத்து, "சித்தார்த்! என் ரூம்ல ஒரு ப்ளூ கலர் சூட்கேஸ் இருக்கும். அதை நான் சொல்லும் இடத்தில் கொடுத்துட்டு வர முடியுமா? நாம போனாதான் நல்லா இருக்கும்" என்றார்.

அவனும், “ஃப்ரீயா தான் மாமா இருக்கேன். அட்ரஸ் அனுப்பிடுங்க” என்றவன், “சரி, இப்பவே கிளம்பறேன்” என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.

மைத்துனனுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு, உள்ளே சென்றார் ஹரி ப்ரசாத். சிறிதுநேரம் பழைய கதைகளைப் பேசிவிட்டு, மீண்டும் சஷ்டியப்த பூர்த்திக்கு அழைத்துவிட்டுக் கிளம்பினார்கள்.

மதுமிதா ஹோமிற்குச் சென்று சேர்ந்த போது, ஸ்ரீராம் எங்கேயோ வெளியே சென்றிருப்பதாக அங்கிருந்தவர் சொல்ல, “சரி நான் குழந்தைங்க கூட பேசிக்கிட்டு இருக்கேன். அண்ணா வந்ததும் சொல்லுங்க" என்றவள், குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்த அறைக்குச் சென்றாள். அவளைக் கண்டதும் குழந்தைகள் ஆர்ப்பரிப்புடன் வரவேற்க, அவர்களுடன் தானும் ஒருத்தியாக ஐக்கியமானாள்.

சற்றுநேரத்தில் ஸ்ரீராம் வந்தது, அவள் வந்திருப்பதைத் தெரிவித்தனர். அவளைத் தேடிச் சென்றவன், அவள் குழந்தைகளுடன் சேர்ந்து பாட்டுப் பாடுவதைக் கண்டவன், அவளை அழைக்காமல் திரும்பிவிட்டான்.

ஸ்ரீராமிடம் அவனைப் பார்க்க யாரோ வந்திருப்பதாகச் சொல்லி விசிட்டிங் கார்டை கொடுத்தனர். கார்டில் இருந்த சித்தார்த், சிருஷ்டி மல்டிமீடியா என்ற பெயரைப் பார்த்ததும், எழுந்து வெளியில் வந்தவன், "ஹலோ மிஸ்டர். சித்தார்த்! நான் ஸ்ரீராம்" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவனை உள்ளே அழைத்துச் சென்றான்.

“என்ன விஷயமா வந்திருக்கீங்க?” என்று ஆராய்ச்சியுடன் கேட்டான் ஸ்ரீராம்.

“மிஸ்டர்.ஹரி பிரசாத் சீஃப் கமெண்டர் இன் ஏர் ஃபோர்ஸ்… அவர் என்னோட அக்கா வீட்டுக்காரர். அவர் இந்தப் பாக்ஸை உங்கட்ட கொடுத்திடச் சொன்னார்" என்றான்.

சற்று இயல்பானவன், “ஓ! தேங்க்யூ சோ மச். சார்கிட்ட சில புக்ஸ் கேட்டிருந்தேன். அதைத் தான் வாங்கி அனுப்பியிருக்கணும். ரொம்பத் தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லிடுங்க. நான் அப்புறம் போன் செய்து பேசறேன்" என்றான்.

சற்று நேரம் அந்த ஹோமைப் பற்றி விசாரித்த சித்தார்த், தன்னுடைய செக் புக்கை எடுத்து எழுதிக்கொண்டிருந்த போது, “என்னைச் சீக்கிரம் வரச்சொல்லிட்டு, நீங்க எங்கேண்ணா போய்ட்டீங்க?" என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தவள், அங்கே சித்தார்த்தைக் கண்டதும் திகைத்துப் போனாள்.

சித்தார்த் ஆனந்தத்திலும்; மதுமிதா அதிர்ச்சியிலும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, ஸ்ரீராம் இருவரையும் மாறி மாறிப் பார்த்தான்.

“வா மது" என்று ஸ்ரீராம் அழைத்ததும், வேறு வழியின்றி உள்ளே சென்றாள்.

அங்கே ஒருவன் இருப்பதைக் கண்டுகொள்ளாமல், “அண்ணா! நான் கிளம்பறேன். நீங்க ப்ரோக்ராமுக்குத் தேவையானதை செய்துடுங்க. மீதியை நான் போன் செய்து கேட்டுக்கறேன்" என்றாள்.

சித்தார்த்தின் பார்வை, விலகாமல் அவளிடமே நிலைத்திருந்தது. அவனது கண்களில் தெரிந்த ஆர்வத்தையும், காதலையும் ஸ்ரீராம் கவனிக்க தவறவில்லை.

அதேநேரம் மதுவின் விலகலையும் மனதில் குறித்துக்கொண்டான். ஆனால், அவளுக்கே புரியாத ஒன்று, ஸ்ரீராமுக்குப் புரிந்தது.

"மது! இந்தப் புக்ஸை லைப்ரரியில் கொஞ்சம் அரேஞ் பண்ணிடேன்" என்று சித்தார்த் கொண்டுவந்த பாக்ஸைக் கொடுக்க, வாங்கிக்கொண்டவள், சித்தார்த்தை ஒரு ஓரப்பார்வைப் பார்த்துவிட்டுச் சென்றாள்.

அவள் அங்கிருந்து சென்றதும் செக்கை ஸ்ரீராமிடம் கொடுத்தவன், “இனி, ஒவ்வொரு மாசமும் என்னோட காண்ட்ரிபியூஷன் உங்களுக்கு வந்து சேர்ந்திடும். உங்களுக்கு ஏதாவது தேவைன்னாலும் ஒரு ஃப்ரெண்டா என்னைக் கேட்கலாம் " என்றவன் கிளம்ப, ஸ்ரீராமும் கார் வரை சென்று வழியனுப்பி வைத்தான்.

லைப்ரரியின் ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்தாள் மதுமிதா. அவ்வளவு நேரம், ‘அவன் எதற்காக வந்தான்? எங்கே போனாலும் என்னைத் தொடர்ந்து வருவதே இவனுக்கு வேலையாய் போயிற்று’ என்று திட்டிக்கொண்டிருந்தவள், அவன் கிளம்பிச் செல்வதைப் பார்த்து, ‘தன்னிடம் ஒன்றுமே சொல்லாமல் கிளம்புகிறானே!’ என்று அவளது மனம் தவித்தது. ஆனால், அந்தத் தவிப்பைக் கூட அவளால் உணர முடியவில்லை.

திடீரென கதவைத் தட்டும் சப்தம் கேட்டதும், தனது உணர்வுகளில் இருந்து விடுபட்டவளாகத் திரும்பிப் பார்த்தாள். “மது! காஃபி சாப்பிடுவோமா! என்ற ஸ்ரீராமைப் பார்த்து சரி என்றாள்.

அந்தக் காம்பௌண்டிலேயே இருந்த தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றவன், நுரை ததும்ப இரு கோப்பைகளில் ஃபில்டர் காஃபியுடன் வந்தான்.

“தேங்க்யூண்ணா!” என்றாள் முறுவலுடன்.

ஒரு மிடறு பருகியவன், "மது! நான் நேரடியா விஷயத்துக்கு வரேன்” என்றவனை ஆழ்ந்து பார்த்தாள். “உன் லைஃபைப் பத்தி என்ன முடிவு செய்திருக்க?" என்று கேட்டான்.

புரியாமல், “நீங்க என்ன கேட்க வரீங்கன்னு எனக்குப் புரியல?" என்றாள்.

"உன் கல்யாணத்தைப் பத்தி என்ன முடிவு செய்திருக்க?" என்று கேட்டதும், பதில் சொல்லாமல் விரலால் கப்பின் விளிம்பில் வட்டம் போட்டுக் கொண்டிருந்தாள். “நான் கேட்ட கேள்விக்கு ஒண்ணுமே சொல்லல" என்றான்.

"பதில் சொல்லணும்னு தோணல" என்றாள் சிறு எரிச்சலுடன்.

"சொல்லணும்னு தோணலையா... இல்ல, என்ன சொல்றதுன்னு தெரியலையா?" என்றான் விடாமல்.

சற்றுக் கோபத்துடன், “உங்களுக்கு எப்படித் தோணுதோ, அப்படியே வச்சிக்கோங்க" என்றாள்.

"எதுக்கு இவ்வளவு கோபம்? நான் என்ன தப்பா கேட்டுட்டேன்?"

"எனக்குத் தெரியும். யார் என்ன சொல்லியிருப்பாங்க… இத்தனை நாளா இல்லாம, திடீர்னு இன்னைக்கு நீங்க இந்தக் கேள்வியைக் கேட்கக் காரணம் சித்தார்த்ன்னு எனக்குப் புரியுது. அதைக் கூடப் புரிஞ்சிக்க முடியாத அளவுக்கு, நான் சின்னக் குழந்தை இல்ல."

"மது! நீ தேவையே இல்லாம யோசிக்கிற. சித்தார்த் உன்னைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட என்னிடம் பேசவே இல்லை. நானா தான் உன்னைக் கேட்கறேன். இப்போ, நீ சொல்றதைப் பார்த்தா, இதில் என்னவோ விஷயம் இருக்குப் போல" என்றான் அவளைக் கூர்ந்து பார்த்தபடி.

‘நானே உளறிவிட்டேனோ!’ என்றெண்ணி உதட்டைக் கடித்துக்கொண்டாள்.

"மது! அர்ஜுன் உன்னைக் கல்யாணம் செய்து, கடைசிவரை உன்னோடு வாழ்ந்திருந்தால் எவ்வளவோ நல்லா இருந்திருக்கும். ஆனா, அது நடக்காத விஷயமா முடிஞ்சி போச்சு. உனக்குச் சின்ன வயசு. நீ ஒண்ணும் எல்லாத்தையும் ஆண்டு அனுபவித்த, நூத்துக் கிழவி இல்ல. உனக்கும் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு வரணும்னா. நீ ஏன் ஒரு கல்யாணம் செய்துக்கக் கூடாது? அர்ஜுனோட கடைசி ஆசையும் அதானே? அவனோட ஆத்மாவும் அதைத் தான் எதிர்பார்க்கும்" என்றபோதே ஸ்ரீராமின் குரல் கம்ம, மதுவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

தன்னைச் சுதாரித்துக்கொண்ட ஸ்ரீராம், "நீ ஏன் சித்தார்த்தை..." என்று ஆரம்பித்ததும், "நோ, நோ..." என்று வேகமாக மறுத்தாள்.

“மது வீணா பிடிவாதமா இருக்காதே. இந்தச் சித்தார்த் உன்னை ரொம்பவே நேசிக்கிறான். அவன் உன்னைப் பார்த்த அந்தப் பார்வையிலேயே தெரியுது. நிதானமா யோசி மது... உனக்காக, உன்னைச் சேர்ந்தவங்களோட சந்தோஷத்துக்காக... நல்ல முடிவா எடு. எனக்குத் தெரிந்து, சித்தார்த் இஸ் வெரி குட் சாய்ஸ்" என்றான்.

அவள் எதுவும் சொல்லாமல் எழுந்தாள். "நான் கிளம்பறேன் அண்ணா! நான், என் மன நிம்மதிக்காக அடிக்கடி இங்கே வந்து போறது, உங்களுக்குப் பிடிக்கலன்னா நேராவே சொல்லிடுங்க. இப்படி என் கல்யாணத்தைப் பற்றிப் பேசி, நான் இங்கே வருவதைத் தடுத்து நிறுத்தப் பார்க்காதீங்க" என்று அழுத்தமான குரலில் மொழிந்துவிட்டுச் சென்றாள்.

ஸ்ரீராம், அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
394
63
அத்தியாயம் – 45


வீட்டிற்கு வந்த பிறகும், அவளது கோபம் கொஞ்சமும் குறையவில்லை. அவள் வீட்டிற்கு வந்து சேரும் முன்பே ஸ்ரீராம் விமலாவிற்குப் போன் செய்து, நடந்த அனைத்தையும் சொல்லி இருந்தான். ஆதங்கத்துடன் கணவரிடம் அதைப் பகிர்ந்து கொண்டார் விமலா.

"அவள் மனசுல என்னதான் நினைச்சிக்கிட்டு இருக்கா? வரட்டும். நான் எல்லாத்தையும் பேசிடப்போறேன். இனியும், அவளா மனசு மாறுவான்னு காத்துக்கிட்டு இருக்க முடியாது" என்று கோபமாகச் சொன்னார் விமலா.

"விமலா! கோபப்பட்டு உன் உடம்பைக் கெடுத்துக்காதே. ஸ்ரீராம் தான் சொன்னானே விட்டுப் பிடிக்கச் சொல்லி..." என்றார்.

"இதுக்கு மேல என்னத்த விட்டு பிடிக்கிறது? இதுக்கு மேலயும் பொறுமையா எப்படியிருக்க முடியும்? நானும் இப்போ மாறுவா, அப்போ சம்மதிப்பான்னு எவ்வளவு நாளைக்குக் காத்துட்டு இருக்க முடியும். அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும்னு, நான் வேண்டாத தெய்வம் இல்ல. அதை, என்னைக்குப் புரிஞ்சிக்க போறா? நமக்கு மட்டும், என் பிள்ளை போனதுல வருத்தம் இல்லயா?" என்று அழுதார்.

"இங்கே பார்… கோபத்துல ஏதாவது வார்த்தையை விட்டுடாதே. அவன் நமக்குப் பிள்ளை. ஆனா, அவளுக்கு? ஆறே மாசம் பழகினவனுக்காக, தன்னோட வாழ்க்கையைத் தொலைச்சிட்டு நிக்கிறா. மனசால நொந்து போயிருக்கவளை உயிரோட கொன்னுடுற மாதிரி எதுவும் பேசிடாதே” என்றவர் கலங்கிய விழிகளைத் துடைத்துக் கொண்டார்.

“அவளை மாதிரி ஒரு பொண்ணு கிடைக்க, நாம கொடுத்து வச்சிருக்கணும். எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணும். அவளும் புரிஞ்சிக்குவா விமலா! முடிஞ்சி போனது வாழ்க்கை இல்ல. இனி, நடக்கப் போவது தான் நிஜம்ன்னு அவளுக்குப் புரியும். நீ அமைதியா இரு" என்றார் ஆறுதலுடன்.

ஆட்டோவிலிருந்து இறங்கியவள், கோபத்துடன் கேட்டை திறந்துகொண்டு உள்ளே நுழைந்தாள். இத்தனை நாட்களில் அவளது முகத்தில் இப்படி ஒரு கோபத்தைக் கண்டதில்லை.

விருட்டென செருப்பைக் கழற்றிவிட்டு உள்ளே வந்தவள், ஹாலில் அமர்ந்திருந்தச் சந்துருவைப் பார்த்தும் ஒரு கணம் தயங்கினாள். அடுத்த நொடியே முகத்தை இயல்பாக மாற்றிக்கொண்டு, “அப்பா! சாப்பிட்டீங்களா? மாத்திரை போட்டாச்சா? அம்மாவும் மாத்திரை எடுத்துக்கிட்டாங்களா" என்று வாஞ்சையுடன் கேட்டவளைப் பார்த்த சந்துருவின் கண்கள் பாசத்தை வெளிப்படுதின. "நாங்க சாப்பிட்டோம். மாத்திரையும் போட்டாச்சி" என்றார்.

"அம்மா எங்கே?" என்றதற்கு, “தூங்கிட்டு இருக்காம்மா! நீ ஈவ்னிங் தான் வருவேன்னு சொன்ன... மதியமே வந்துட்ட" என்று கேட்டதும், “தலைவலி... அதான்" என்றவள், விமலாவின் அறைக்குச் சென்று அவர் தூங்குவதை எட்டிப் பார்த்தாள்.

"நீ சாபிட்டியாம்மா?" என்றவரின் குரலுக்கு, "பசி இல்லப்பா!" என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

அவள் செல்வதையே பார்த்திருந்த சந்துரு, ‘எங்களுக்காக இப்படிப் பார்த்துப் பார்த்துச் செய்கிறாயே, உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும் என்று நாங்கள் நினைப்பது தவறா? அதை நீ என்று புரிந்துகொள்வாய்?’ என்று வருந்தியபடியே அர்ஜுனின் படத்தைப் பார்த்தார். ‘இப்படி ஒரு பொண்ணு கூட வாழ, உனக்குக் கொடுத்து வைக்கலையே’ என்றவருக்கு துக்கத்தில் நெஞ்சை அடைப்பது போலிருந்தது.

அறைக்கு வந்தவள், ஸ்ரீராம் கேட்ட கேள்விக்குத்தான் தேவை இல்லாமல் அவனை எடுத்தெறிந்து பேசியதை நினைத்து வருந்தினாள். இது எல்லாவற்றிற்கும் காரணம் அந்த சித்தார்த் தான்’ என்று கோபம் முழுதும் அவன் மீது திரும்பியது. அடுத்துவந்த இரு நாள்களும் வெளியே செல்லாமல் வீட்டிலேயே அடைந்து கிடந்தாள்.

திங்கட்கிழமை கிளம்பி ஹோமிற்குச் சென்றவளுக்கு, ஸ்ரீராமின் முகத்தைப் பார்ப்பதற்கே தயக்கமாக இருந்தது. இருந்தாலும், செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஸ்ரீராமின் எதிரில் சென்று நின்றாள். அவளைப் பார்த்துச் சிரித்தவன், சாதாரணமாகப் பேச வருத்தத்துடன் மன்னிப்பு கேட்டுக் கொண்டாள். அந்த வாரம் வேகமாக விரைய ராஜேஷும், தீபக்கும் தங்கள் ஹனிமூனை முடித்துக்கொண்டு வீடுவந்து சேர்ந்தனர்.

ஈஸ்வரன், சந்துருவிடம் பேசி, ஞாயிற்றுக்கிழமை சித்தார்த் வீட்டு விசேஷத்திற்குத் தங்கள் வீட்டிலிருந்தே சென்றுவிடலாம் என்று முடிவு செய்திருந்தனர். மூவரும் சனிக்கிழமை அன்றே கொட்டிவாக்கம் வந்துவிட்டனர்.

மறுநாள் காலையில் மது குளித்துவிட்டு வெளியில் வந்த போது, அனைவரும் எங்கேயோ செல்லத் தயாராகிக் கொண்டிருப்பது தெரிந்தது.

சுடிதாரில் நின்றுகொண்டிருந்த மதுவைப் பார்த்து, “என்ன கிளம்பாம சுடிதார்ல நின்னுட்டிருக்க?" என்றாள் மேகலா.

"எங்கே கிளம்பணும்" என்று புரியாமல் கேட்டவளிடம், “ஏன்டி! நீ இந்த உலகத்தில் தான் இருக்கியா? இன்னைக்குச் சித்தார்த் வீட்ல விசேஷம்ன்னு தெரியாது? அதுக்குப் போறதுக்குத் தானே இங்கே வந்தே” என்றாள்.

அப்போதுதான், ‘அவர்கள் வந்து சென்றபின், தான் அந்த அழைப்பிதழைப் பார்க்கவே இல்லை என்றும், அதற்காகத் தான் இங்கே வந்திருப்பதாகக் கூட யாரும் சொல்லவில்லையே’ என்ற எண்ணமும் வந்தது.

"நான் வரல. நீங்க எல்லோரும் போய்ட்டு வாங்க" என்றவள் அறைக்குள் செல்ல, மேகலா வித்யாவை அழைத்தாள்.
“கழுதைக்கு ஆகற மாதிரி, இருபத்தி மூணு வயசாகுது. இப்போதான் கார்ட்டூன் புக் படிச்சிக்கிட்டு இருக்கா. எழுந்து கிளம்பி வாடி. நாங்க எல்லோரும் தயாராகிவிட்டோம்" என்று அதட்டலாகச் சொன்னாள் வித்யா.

“என்ன ரெண்டு பேரும் சேர்ந்து வந்து திட்டினா கிளம்பிடுவேனா? கிளம்பினவங்க எல்லோரும் போயிட்டு வாங்க. நான் வரலை" என்றாள் பிடிவாதமாக.

"பைத்தியமாடி நீ! அவங்க அவ்வளவு தூரம் வீடு தேடி வந்து அழைச்சிட்டுப் போயிருக்காங்க. நீ என்னடான்னா வரலைன்னு சட்டம் பேசிகிட்டு இருக்க. சரி அவங்களுக்காக வேண்டாம். உங்க அண்ணனுக்காக வா" என்றாள் வித்யா.

"என்னை ஏன் கட்டாயபடுத்துறீங்க? என் மனதுக்குப் பிடிக்காத எந்த விஷயத்தையும் செய்யமாட்டேன்னு தெரியும் இல்ல?" என்று காட்டமாக கூறினாள்.

‘இவகிட்ட இப்படிப் பேசினால் சரிபடாது’ என்று எண்ணிய மேகலா, “தெரியுமடீ நீ ஏன் வரமாட்டேன்னு சொல்றதற்கு என்ன காரணம்னு எனக்குப் புரிஞ்சி போச்சி" என்றாள் கிண்டலாக.

"என்னடி புரிஞ்சிகிட்ட சொல்லேன். நானும் நீ புரிந்துகொண்ட விஷயத்தை தெரிந்து கொள்கிறேன்" என்று எரிச்சலுடன் சொன்னாள்.

"நீ உன் மனசுல எதை வச்சிக்கிட்டு வரமாட்டேன்னு பிடிவாதமா இருக்கேன்னு சொன்னா மட்டும் நீ ஒத்துக்கவா போற... ஆனாலும் சொல்றேன் கேட்டுக்கோ. உனக்குச் சித்தார்த் மேல ஒரு ஈடுபாடு வந்திடுச்சி. உன்னைப் பார்த்து நீயே பயப்படுற. அதான் அவங்க வீட்டுக்குப் போகணும்னு சொன்னதும், உன்னால் வர முடியல..." என்ற மேகலாவை முறைத்தாள்.

“விட்டா பேசிக்கிட்டே போற. உனக்குப் பிடிக்காத ஒருத்தரோட பேரைச் சொல்லுன்னு சொன்னா, யோசிக்காம சித்தார்த்ன்னு சொல்வேன். என் மனசுல எந்த விகல்பமும் இல்ல" என்றாள் ஆத்திரத்துடன்.

அவளது பதிலில் இருவரும் திகைத்து நின்றனர். இவளுக்குச் சித்தார்த் மேல் இவ்வளவு வெறுப்பா? சித்தார்த்தின் நல்ல மனத்தை இவள் எப்போது புரிந்து கொள்வாள்? ஏற்கெனவே, அவன் மீது கோபமாக இருந்தவளை மேலும் தூண்டிவிட்டோமோ!’ என்று எண்ணிய மேகலா, “உன் மனசுல எந்த விகல்பமும் இல்லன்னு நாங்க எப்படி நம்பறது?" என்றாள்.

"நீங்க நம்புனா நம்புங்க. நம்பாட்டா போங்களேன்" என்று வெறுப்போடு சொன்னாள்.

"சந்தேகம்னு உன் பேர்ல வந்துடுச்சி. அது தவறுன்னு நீ தானே எங்களுக்குப் புரிய வைக்கணும். நிரூபிங்க மேடம். அப்போ நான் ஒத்துக்கறேன்" என்றாள்.

அதை மறுக்க நினைத்தவள், யோசனையுடன் ஊஞ்சலில் இருந்து எழுந்தாள்.

‘இவ்வளவு தூரம் கேட்கும் போது, நான் போகாமல் இருந்தால் தான் பிரச்சனை. சொன்னது போலப் போய்விட்டு வந்தால், நாளைக்குச் சித்தார்த் பற்றி என்னிடம் பேசுவதற்கு யோசிப்பார்கள்’ என்ற எண்ணத்தோடு, "சரி வரேன்" என்றாள்.

அடுத்த அரைமணி நேரத்தில் அனைவரும் சித்தார்த் வீட்டிற்குச் சென்று சேர்ந்தனர். வரவேற்பில் நின்றிருந்தவன், அவளைக் கவனித்துவிட்டான். வெண்பட்டு நிறப் புடவையில் கால் முளைத்த மேகமாக நடந்து வருபவளைப் பார்த்துத் தன்னை மறந்தான். அந்த அழகை தன் இதயத்தில் கல்வெட்டாகப் பதித்துக் கொண்டான்.

வீட்டிலிருந்து கிளம்பும்போது இருந்த அவளது கோப மனநிலை மாறி, ஒருவிதமான தவிப்பும், படபடப்புமே மிஞ்சி இருந்தது. அமைதியாக வந்து கொண்டிருந்தவள் வரவேற்பில் பட்டு வேட்டிச் சட்டையில் நின்றிருந்த சித்தார்த்தை விழியகலாமல் பார்த்தாள்.

நேத்ராவின் அழைப்பு அவளைத் திசை திருப்ப, அவளைப் பார்த்து அழகாகப் புன்னகை புரிந்தாள். பெரியவர்களை வணங்கி வரவேற்றவன், ராஜேஷ், தீபக்கின் கைகளை பற்றி குலுக்கிவிட்டு இருவரையும் அழைத்து சென்றான். ஆண்கள் அனைவரும் தனியாக சென்று அமர்ந்துக்கொள்ள, நேத்ரா மற்றவர்களை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

ஜீவா, ரமேஷ், சுரேஷ் நின்று பேசிக்கொண்டிருந்தவர்களின் கவனம், உள்ளே வந்தவர்களின் மீது சென்றது.

ரமேஷ் ஆச்சரித்துடன், “மது வரமாட்டான்னு நினைச்சேன். வந்திருக்காளே!" என்றான்.

“அவ வரமட்டேன்னு சொன்னா யார் விடுவா? கூட்டிக்கிட்டு வந்திருப்பாங்க” என்று சொல்லிக்கொண்டே திரும்பியவன், மதுவின் பார்வை தன் மீது சற்று எரிச்சலுடன் விழுவதைக் கவனித்துவிட்டு, “ஐயோ என்னைத்தான் பார்க்கறா. நான் போய்ப் பேசிட்டு வரேன்" என்று புன்னகையுடன் அவளருகில் சென்றான்.

"என்ன மது எப்படியிருக்கே? நல்லாயிருக்கியா?" என்றவனைப் பார்த்து, “பார்த்தா எப்படித் தெரியுது?" என்றாள் வெடுக்கென.

"என்ன மது ரொம்பச் சூடா இருக்க. பேசும்போதே அனல் பறக்குது" என்றான் சாதாரணமாக.

சுற்றி இருப்பவர்கள் தன்னைக் கவனிப்பது போலத் தோன்ற, முகத்தைச் சற்று சிரிப்பது போல வைத்துக்கொண்டு, "நீ வந்த வேலையே மட்டும் பார்த்துட்டுப் போ. வலிய வந்து பேசற வேலையெல்லாம் வசிக்காதே" என்றாள் கடுப்புடன்.

சுரேஷ், மதுவை வினோதமாக பார்த்தான். "சரி, உன்னோட மூட் சரி இல்ல. நான் அப்புறம் பேசறேன்" என்றவன் சோர்ந்த முகத்துடன் விலகிச் சென்றான்.

சுரேஷின் முகத்தைப் பார்த்த மதுவிற்குக் கஷ்டமாக இருந்தது. தன் இயல்பே மாறிவிடுமோ என்று அஞ்சினாள்.

தேவகி, “வாங்க வாங்க. நீங்க எல்லோரும் குடும்பத்தோடு வந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். என்னம்மா மது எப்படியிருக்க?"

மது சிரித்துக்கொண்டே தலையை மட்டும் ஆட்டினாள். "வாங்க டிபன் சாப்பிடலாம் " என்று அழைத்தார்.

ராஜி, “இருக்கட்டும் பங்ஷன் முடியட்டும்" என்றார்.

"முதலில் சாப்பிடுங்க. பங்ஷன் ஆரம்பிக்க இன்னும் டைம் இருக்கே" என்றவர், தூரத்தில் நின்றிருந்த அஷ்வந்தை அழைத்தார்.

அஷ்வந்த் வருவதைப் பார்த்த மதுவிற்குச் சிரிப்பு வர, சிரித்தபடி திரும்பிக் கொண்டாள். அதைக் கவனித்த அஷ்வந்த், "என்னங்க என்னைப் பார்த்து இப்படிச் சிரிக்கிறீங்க. ஜோக்கர் மாதிரி இருக்கேனா?" என்று கேட்டான்.

"இல்லை இல்லை சாரி. ஜீன்ஸிலேயே பார்த்துட்டு, வேட்டி சட்டையில் ஒரு மாதிரிஅவஸ்தையோடு நடந்து வந்தீங்களா... அதுக்குத் தான் சிரிச்சிட்டேன்" என்றாள்.

"ஆப்மளைங்க எல்லோரும் வேட்டி கட்டணும்ன்னு நாட்டாமை தீர்ப்பு எழுதிட்டார். மாத்தச் சொன்னா மாத்தமாட்டேன்னு சொல்லிட்டார். கொடுமையேன்னு இந்த வேட்டியைக் கட்டிட்டு இருக்கேன். எப்போ அவிழ்ந்து கீழே விழுமோன்னு தெரியலை. சொன்னா வெட்கக்கேடு... அதுக்குப் பயந்து உள்ளே பேண்ட் கூடப் போட்டுக்கிட்டு இருக்கேன் "என்றதும் அவள் அடக்க முடியாமல் சிரித்தாள்.

"போடா இவனே, பேண்ட் போட்டிருக்கானாம் பேண்ட். ராம ராஜன், ராஜ்கிரண் மாதிரி ட்ரௌசர் போட்டுக்கோ அது போதும்" என்று சுபா சொல்ல, மதுவின் சிரிப்பு அடங்க வெகு நேரம் ஆகியது.

“சரி சரி வாங்க சாப்டுட்டு வந்து பொறுமையாய் உட்கார்ந்து சிரிங்க. இப்போ வாங்க” என்று அழைத்துச் சென்று கூடவே இருந்து கவனித்துக்கொண்டான்.

அனைவரையும் பேசிப் பேசி அவன் சிரிக்க வைத்துக்கொண்டிருக்க அந்தப் பக்கம் வந்த சித்தார்த், தன்னை மறந்து சிரிப்பவளைப் பார்த்தான். முதன்முதலில் அவளை அவன் அப்படித் தானே பார்த்தான். அந்த நினைவில் உதடுகள் புன்னகையில் விரிந்தன.

‘தான் அங்கே சென்றால் அவளுடைய இந்தச் சிரிப்பு மறைந்துவிடும்’ என்று எண்ணி வந்த வழியே திரும்பினான். இவை அனைத்தையும் மீரா வேலையோடு வேலையாக கவனிக்கத் தவறவில்லை. சாப்பிட்டுவிட்டு கீழே வந்த அனைவரும் பெண்கள் அமர்ந்திருந்த பக்கமாக அமர்ந்தனர்.

வேகமாக மதுவை நோக்கி வந்த நேத்ரா, “நீங்க கொஞ்சம் வாங்களேன். என் ஃப்ரெண்ட்ஸுக்கு உங்களை அறிமுகப்படுத்தணும்” என்று அவள் கையைப் பிடித்து அழைத்துச் சென்று அறிமுகப்படுத்த, அனைவரும் அவளைப் பார்த்துக் குறும்பாகச் சிரிப்பது போல் தோன்ற, சங்கடத்துடன் நின்றிருந்தாள்.

அங்கே வந்த சுபா, மதுவை அவர்களிடமிருந்து தனியாக அழைத்துச் சென்றாள்.

“ரொம்பத் தேங்க்ஸ். நல்ல நேரத்திற்கு வந்து, என்னைக் காப்பாத்திட்டீங்க" என்று சொல்ல சுபா மதுவை வித்யாசமாக பார்த்தாள். “என்ன அப்படிப் பார்க்குறீங்க?" என்று கேட்டாள்.

“ஏன் மது? முன்னெல்லாம் என்னை வாய் நிறைய அண்ணின்னு கூப்பிடுவ. இப்போ, என்ன ஆச்சு உனக்கு? அன்னைக்கு வீட்டுக்கு வந்தபோதும் அப்படித் தான் வாங்க, போங்கன்னு சொல்ற. நான் உன்னை எந்த விஷயத்திலாவது வருத்தப்பட வச்சேனா?" என்று கேட்க அவளது நிலைமை தர்மசங்கடத்தில் இருந்தது.

"அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல அண்....ணி" என்றாள் தடுமாற்றத்துடன். சித்தார்த் மீதிருந்த கோபத்தை, அவனுடைய குடும்பத்தாரிடம் காண்பிக்க அவளால் முடியவில்லை. இப்படிச் சிக்கல் ஏதேனும் நேரும் என்று எண்ணியே அவள் அங்கே வர மறுத்தாள்.

சிரித்த சுபா, "சரி. அந்த ரூம்ல ப்ரொவிஷன் ஐட்டம்ஸ் இருக்கு. இந்தத் தட்டில் கொஞ்சம் கற்கண்டு எடுத்துட்டு வா” என்று சொல்ல அவள் தயங்கினாள். “அண்ணிக்காக இதைச் செய்யமாட்டியா?" என்றதும். “ம்ம்...” என்றபடி அந்த அறைக்குச் சென்றாள்.

கதவைத் திறந்து உள்ளே செல்ல, அங்கே யாருடனோ மொபைலில் பேசிக்கொண்டிருந்த சித்தார்த் சப்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். அங்கே அவனைச் சற்றும் எதிர்பார்க்காததுடன் அவனது உடையும், பேசிக்கொண்டே திரும்பியதும், அவளுக்கு அர்ஜுனின் உருவம் தெரிந்தது. கண்கள் இருட்டிக்கொண்டு வர, தட்டை நழுவவிட்டுத் தள்ளாடியவளை, ஓடிவந்து தாங்கிக் கொண்டான்.

"மதூ... மதூ..." என்று தவிப்புடன் அவளது கன்னத்தில் தட்டினான். ‘வெளியே சென்று யாரையும் அழைத்து வந்தால், வீணான குழப்பம் ஏற்படும்’ என்று நினைத்தபடியே, அவளைத் தன் மீது சாய்த்துக் கொண்டு அருகில் இருந்த பன்னீர் பாட்டிலைத் திறந்து, அவளது கண்களைத் துடைத்தான். “மதூ!” என்றபடி அவளது கன்னத்தைத் தட்ட, மெல்லக் கண்களைத் திறந்து பார்த்தாள்.

அவள் மெல்லக் கண்களைத் திறந்தவள், அருகில் தெரிந்த அவ்னுடைய முகத்தைப் பார்த்ததும், தன் நினைவின்றி இரண்டாவது முறையாக, அவனுடைய கையணைப்பில் இருக்கிறோம் என்ற வெறுப்பில் , “சீ..." என்றபடி அவனிடமிருந்து சடாரென விலகினாள்.

சித்தார்த்திற்கோ கோபம் சுறுசுறுவென ஏறியது. தன் கைகளை இறுக மூடி கோபத்தை அடக்கினான். கண்களை அழுந்த மூடித் திறந்தவன், வேகமாக அந்த அறையை விட்டு வெளியே சென்றான்.

ஆயாசத்துடன் அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தாள். அவளது மனம் வறண்ட பாலைவனமாகக் காட்சியளித்தது. தன்னுடைய வாழ்க்கை தனக்காக என்ன வைத்திருக்கிறது என்று தெரியாமல் நைந்த மனத்துடன் அறையை விட்டு வெளியே வந்தாள்.

மது அறைக்குள் சென்ற சில நிமிடங்களில், சித்தார்த் கோபத்தோடு வெளியே வந்ததும், குழம்பிய முகத்துடன் மது வந்ததையும் வித்யா, மேகலா மட்டும் அல்ல; அந்த அறையில் அவன் இருப்பது தெரிந்து வேண்டுமென்றே அவளை அனுப்பி வைத்த சுபா, அந்தத் திட்டத்தைச் சொன்ன மீராவும் கவனித்தனர்.

நல்ல நேரம் தொடங்க சஷ்டியப்தபூர்த்தி நல்லபடியாக நடந்து முடிந்தது. அவர்கள் குடும்பத்தினரை தொடர்ந்து அனைவரும் அவர்களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர். ராஜேஷ், தீபக் சென்று வந்ததும், மது அவர்களின் காலில் விழுந்து வணங்கினாள்.

அவளது நெற்றியில் குங்குமம் வைத்த தெவகி, "சீக்கிரமே கண்ணுக்கு நிறைந்த புருஷன் வரணும்" என்று ஆசிர்வதிக்க, விதிர்த்த மனதுடன் நிமிர்ந்தவளின் கண்கள் அங்கே நின்றிருந்த சித்தார்த்தின் விழிகளைச் சந்தித்தது.

அவனுடைய கண்களில் ஒருவித எதிர்ப்பார்ப்பு தெரிவதை உணர்ந்தவள், இமைகளைத் தாழ்த்திக்கொண்டு விமலாவின் பின்னால் மறைந்தார் போல அமர்ந்து கொண்டாள்.

விழாவிற்கு வந்திருந்த உறவினர்கள், சித்தார்த்தின் அலுவலகத்தில் பணிபுரிவர்கள், என்று அனைவரும் கிளம்பிச் சென்றதும் ஈஸ்வரனும் கிளம்புவதாகச் சொல்ல, அவர்களைச் சற்று பொறுத்திருக்கும் படி கேட்டுக் கொண்டார் சித்தாத்தின் தந்தை.

ஜீவா, ரமேஷ் குடும்பத்தினர், இரு சம்மந்திகள், சற்று தாமதமாக வந்த ஸ்ரீராம், மதுவின் குடும்பத்தினர் மட்டும் பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்களது பேச்சில் கலந்து கொள்ளாமல் மௌனமாக அமர்ந்திருந்தாள் மது. சுபாவும், மீராவும் இடையிடையே மதுவை பேச்சில் இழுக்க முயல, அந்த நேரத்திற்கு ஒரு புன்னகையை மட்டும் பதிலாக கொடுத்துவிட்டு மது அமர்ந்திருந்தாள்.
‘எப்போது அங்கிருந்து கிளம்புவோம்!’ என்று இருந்தது.

அஷ்வந்த், “எல்லோரும் சேர்ந்து குரூப் போட்டோ எடுத்துக்கலாம்” என்றான் அஷ்வந்த். அதன்படி போட்டோ எடுத்து முடித்ததும் சித்தார்த்தின் குடும்பம் மட்டும் தனியாக ஒரு போடோ எடுத்துக்கொண்டனர்.

ஸ்ரீராமுடன் பேசிக்கொண்டிருந்த மதுவை நோக்கிச் சென்ற நேத்ரா, “எங்க கூடச் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துக்கோங்க" என்று அவளை அழைத்தாள்.

"அதுதான் ஏற்கெனவே நிறைய போடோல இருக்கேனே" என்றாள் மறுப்பாக.

"அதுல எங்க மொத்த பேமிலியும் இல்லையே. வாங்க ப்ளீஸ்" என்று அவளுடைய கையைப் பிடித்து இழுக்க,‘யாரேனும் உதவிக்கு வாங்களேன்’ என்பதைப் போலத் தீபக்கைப் பார்த்தாள்.

அவனோ, மும்முரமாக தன் தந்தையிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தான். அவளுக்கு தர்மசங்கடமாக இருந்தது.

விமலாவும், “போ மது! எவ்வளவு ஆசையா கூப்பிடுறா" என்று சொல்ல, எழுந்தாள்.

சித்தார்த்தின் பார்வை தன்னைத் துளைப்பதை அறிந்து படபடத்த இதயத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், மீராவின் அருகில் சென்று நின்றுகொண்டாள்.

மதுவிடம் நேத்ரா சென்று பேசிக்கொண்டிருக்கும் போதே அஷ்வந்த் போட்டோகிராபாரிடம் சென்று, ஏதோ சொல்லிவிட்டு வந்து வந்தான். மீராவின் அருகில் நின்றவளை, "மேடம்! நீங்க நடுவில் வந்து நில்லுங்க. இல்லைனா கலர் கான்ட்ராஸ்ட் நல்லா வராது" என்றார் புகைப்படக்காரர்.

வெளிப்படையாக அவள் முகத்தில் எரிச்சல் தெரிய, ‘சித்தார்த் தான் எல்லாவற்றிற்கும் காரணம். அவன்தான் முன்பே சொல்லி இந்த ஏற்பாட்டைச் செய்திருக்க வேண்டும்’ என்று மனதிற்குள் அவனைத் திட்டியபடி, சித்தார்த் மீது இடிக்காமல் சுபாவை நெருங்கி நின்றாள்.

போட்டோ எடுத்து முடித்ததும் விறுவிறுவென ராஜியின் அருகில் சென்றவள், “அத்தை! கிளம்புங்க வீட்டுக்குப் போலாம். எனக்குத் தலைவலியா இருக்கு" என்றாள்.

"இரும்மா! பெரியவங்க அவ்வளவுதூரம் நம்மள இருக்கச் சொல்லியிருக்காங்க. நடுவில் கிளம்பினா நல்லாயிருக்காது. கொஞ்சம் பொறு" என்று சொல்லிவிட்டு மற்றவருடன் பேச ஆரம்பித்தார்.

மதுவின் கடுகடுப்பைக் கண்ட சித்தார்த், அஷ்வந்தை அழைத்துத் திட்டிக்கொண்டிருந்தான்
"ஏன்டா இப்படிச் செய்ற? அவள் ஏற்கெனவே உச்சாணி கொம்பில் ஏறி உட்கார்ந்திருக்கா. மேல மேல அவளோட வெறுப்பை வளர்க்கிற மாதிரி ஏன் நடந்துக்கறீங்க? நான் தான் எல்லாத்தையும் பிளான் பண்ணி செய்றா மாதிரி, அவளோட கோபமெல்லாம் என்மேல தான் இருக்கும்" என்று கோபத்துடன் சொன்னான்.

“உச்சாணி கொம்புல ஏறினா, எப்படியும் ஒரு நாள் இறங்கித் தானே ஆகணும். விடுங்க பிரதர். காதல்ன்னா சும்மாவா. அவனவன் காதலுக்காக செருப்படியே வாங்கறான். ஆனா, அண்ணி ரொம்ப டீசெண்ட். வெறும் முறைப்போட நிறுத்திக்கிறாங்க" என்று சிரிப்புடன் ச்ப்ல்ல, தம்பியை எதுவும் சொல்ல முடியாமல் அங்கிருந்து அகன்றான் சித்தார்த்.

ராஜியின் எதிரில் வந்து அமர்ந்த தேவகி, “தீபக் கல்யாணத்தை நல்லபடியா முடிச்சிட்டீங்க. அடுத்து மதுவோட கல்யாணம் தானே. வரன் பார்க்கறீர்களா?" என்று கேட்டதும், திகைப்புடன் ஜன்னலருகில் நின்றிருந்த மது திரும்பிப் பார்த்தாள்.

“ஆரம்பிக்க வேண்டியது தான். அவளுக்கும் முடிச்சிட்டா, எங்க கடமை முடிஞ்சிடும்" என்று சொல்ல, கலங்கிய மனத்துடன் நின்றிருந்தாள்.

"நாங்களும் எங்க சித்தார்த்துக்குப் பார்க்கணும். இவ்வளவு நாளா பிடி கொடுக்காம இருந்தான். இப்போ தான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு இருக்கான்" என்றதும், ‘அடுத்த பேச்சு என்னவாக இருக்கும் என்று யூகித்தவளுக்கு இதயத்தில் இரும்புக் குண்டை வைத்ததைப் போல கனத்தது. அங்கேயே இருந்தால், கோபத்தில் ஏதாவது சொல்லிவிடுவோமோ!’ என்று அஞ்சி, வீட்டிற்கு வெளியே வந்து நின்றாள்.

அவள் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைக்க மறந்து நின்றிருக்க, பெண் கேட்டு வருவதாற்கான நேரம் குறித்ததோ, ஒட்டு மொத்த குடும்பமும் சந்தோஷமாகச் சம்மதம் சொன்னதோ அவள் அறிய வாய்ப்பில்லாமல் போனது.

மதுவின் இந்தச் செய்கை ராஜேஷிற்குக் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. ஈஸ்வரனிடம் ரகசியமாக "மாமா! மதுவிடம் இப்போது சொல்ல வேண்டாம். நாளைக்கு அவங்க வரும்போது, அவளே தெரிஞ்சிக்கட்டும். இல்லனா அவளைச் சமாளிக்கறது கஷ்டம்" என்று சொல்ல, அவரும் சம்மதித்தார்.

நிறைந்த மனதுடன் ஈஸ்வரன் குடும்பத்தினர் அனைவரும் கிளம்ப, சித்தார்த் வீட்டிலும் அனைவரும் மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தனர்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
394
63
அத்தியாயம் – 46

காலையில் எழுந்து குளித்துவிட்டு வந்த மது வார்ட்ரோபை திறந்தவள் கண்களில், அர்ஜுன் அவளுக்குக் கடைசியாக வாங்கிக் கொடுத்த இளம் கத்தரிப்பு நிறப் புடவை கண்ணில் பட அந்தப் புடவையை எடுத்தாள்.

அர்ஜுனின் மறைவுக்குப் பிறகு, அவன் வாங்கிக்கொடுத்த எந்தப் பொருளையும் உபயோகப்படுத்தாமல் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்தாள். இன்று என்னவோ, அந்தப் புடவையைக் கட்டிக்கொள்ள வேண்டும் போலத் தோன்ற, அதையே கட்டிக்கொண்டு இறங்கி வந்தாள்.

ராஜியும், விமலாவும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, “அத்தை நான் கொஞ்சம் வெளியே போய்விட்டு வரேன்" என்றாள்.

"போய்ட்டு வா. ஆனா, மதியம் வந்திடு" என்றதும், "ஏன் ஏதாவது விசேஷமா?" என்றாள்.

" காரணமா தான் சொல்றேன், வந்துடு" என்று கட்டளை இடுவது போலச் சொல்ல, தலையை ஆட்டினாள்.

மனமோ, ‘என்ன இது? ஆபீஸ் போகலையான்னு கேட்கல... எங்கே போறேன்னு கேட்கல... என்ன ஆச்சு இவங்களுக்கு? ஒருவேளை நான் வேலைக்குப் போகாது தெரியுமோ! சரி, தெரிந்தால் என்ன? என்று எண்ணிக்கொண்டு கிளம்பி சென்றாள்.

“என்ன ராஜி, அவ வெளியே போறேன்னு சொன்னதும் சரின்னு அனுப்பி வச்சிட்ட" என்றார் விமலா.

“அவள் இப்போ இல்லாம இருக்கறது தான் நல்லதுக்கா. வீட்டிலே இருந்தா ஒண்ணும் பேச முடியாது; செய்யமுடியாது" என்றார்.

மதியம் அவள் வருவதற்குள், மளமளவென வேலைகள் நடந்தன.
மதிய உணவருந்திவிட்டு படுத்தவள் நன்கு அயர்ந்து உறங்கி எழுந்தாள். முகத்தைக் கழுவிக்கொண்டு வெளியில் வந்தவளை, நெய் வாசம் வரவேற்றது. கிச்சனுக்கு வந்தவள், தயாரித்து வைத்திருந்த பலகாரங்களைப் பார்த்ததும், “என்ன அத்தை? ஒரே அசத்தல் சமையலா இருக்கே" என்று சிரித்துக்கொண்டே கேட்டாள்.

அவளுக்குப் பதில் சொல்லாமல், “தீபக்குக்குப் போன் செய்து, ஆபீஸ்லயிருந்து கிளம்பிட்டானான்னு கேளு" என்று அவளை அனுப்பி வைத்தார்.

சிறிது நேரத்தில் அலுவலகத்திலிருந்து வந்த ராஜேஷ், “மது" என்று அழைத்துக்கொண்டே வந்தான்.

"என்னண்ணா! இன்னைக்கு இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க. ஏதாவது குட் நியூசா?" என்றாள்.

"இதைப் பிரிச்சிப் பார். பிடிச்சிருக்கா சொல்லு" என்று ஒரு கவரைக் கொடுத்துவிட்டு, ஆர்வத்துடன் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆரஞ்சு வண்ணத்தில் பச்சை நிறப் பார்டரில் பளிச்சென்றிருந்த சில்க் காட்டன் புடவையைப் பார்த்தவுடன் பிடித்துவிட, “கலர் ரொம்ப நல்லாயிருக்கு அண்ணா. வித்யாவுக்கு ரொம்ப நல்லாயிருக்கும்" என்றாள்.

"இது உனக்குத்தான்டா. வித்யாவுக்கு இப்போ வேண்டாமாம். அதான் உனக்கு எடுத்துக்கொண்டு வந்தேன்.போய்க் கட்டிட்டு வா" என்றான்.

"நாளைக்குக் கட்டிக்கட்டுமா?" என்றவளிடம், "இப்போவே...” என்று சிரித்துக்கொண்டெ சொல்ல, “ம்ம்” என்றபடி அறைக்கு ஓடியவளைப் பார்த்துப் பெருமூச்சு விட்டான்.

புடவையைக் கட்டிக்கொண்டு வந்தவளை, தன் பெற்றோரின் படத்தின் முன்பு அழைத்துச் சென்று நிற்கவைத்தான். ‘இனி, அவளுக்கு அமையப் போகும் வாழ்க்கையாவது சந்தோஷமா அமையணும்’ என்று வேண்டிக் கொண்டவனின் கண்கள் அவனையும் அறியாம்ல் கலங்கின.

“அண்ணா! என்னாச்சு?" என்றவளுக்கு உள்ளுக்குள் ஏதோ சரியில்லை என்று புரிந்தது.
“ஒண்ணுமில்லடா! நீ எப்பவும் சிரிச்சிக்கிட்டுச் சந்தோஷமா இருக்கணும்" என்றவனை வினோதமாகப் பார்த்தாள். பார்ப்பது எல்லாம் இப்போது அவளுக்குச் சந்தேகத்தை கொடுத்தது.

ஈஸ்வரனும், சந்த்ருவும் யாரையோ எதிர்பார்த்து காத்திருந்தது, விதவிதமான சமையல், அண்ணனின் நெகிழ்ச்சி என்று ஒவ்வொன்றையும் யோசித்துப் பார்த்தவளுக்கு விஷயம் ஓரளவுக்குப் புரிபட ஆரம்பிக்கவும், வாசலில் இரண்டு கார்கள் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

“மது நீ இங்கே வா” என்று டைனிங் ஹாலில் அழைத்துசென்ற விமலா, “நீ இங்கேயே இரு" என்று சொல்லிவிட்டு வந்தவர்களை வரவேற்கச் சென்றார்.

யார் வந்திருப்பது என்று எட்டிப் பார்த்தவள், சித்தார்த்தைத் தவிர அவனது மொத்தக் குடும்பமும் வந்திருப்பது தெரிந்தது.

‘நேற்று எல்லாவற்றையும் தெளிவாகப் பேசிவிட்டுத் தான் வந்திருக்கிறார்கள். எனக்குத் தான் இந்த விஷயம் தெரியாமல் போயிற்று’ என்று ஒரு பக்கம் ஆத்திரமும், ‘தன்னிடம் சொல்லாமல் எப்படி இந்த ஏற்பாட்டைச் செய்யலாம்?’ என்ற கோபமும் சேர்ந்து அவளை யோசிக்க செய்தது.

கிச்சனுக்குச் சென்ற வித்யாவின் பின்னாலேயே சென்றவள், “வித்யா! சித்தார்த் வீட்டிலயிருந்து எதுக்கு வந்திருக்காங்க?" என்று கோபத்தோடு கேட்டாள்.

அனைவருக்கும் டிபன் எடுத்து வைத்துக்கொண்டிருந்த வித்யா, அவளை நிமிர்ந்தும் பாராமல், “ஏன்? இவ்வளவு நேரத்தில் உனக்கே புரிஞ்சிருக்குமே. புரியாத அளவுக்கு நீ ஒண்ணும் முட்டாள் இல்லையே" என்றாள்.

ஆத்திரத்துடன் "யாரைக் கேட்டு இந்த ஏற்பாடு செய்தீங்க?" என்றாள் உதடுகள் துடிக்க.

“யாரைக் கேட்கணும்?

"என்னைக் கேட்கணும்" என்றாள்.

“எதுக்கு? நீ முடியாதுன்னு முரண்டு பிடிக்கவா?"
“ஏன்? இப்போ முரண்டு பிடிக்க மாட்டேனா? இல்ல, வேற எதுவும் செய்ய மாட்டேனா?" என்று கோபத்துடன் சொன்னவளைப் பார்த்து, "கண்டிப்பா செய்யமாட்ட" என்று சொல்லிவிட்டு அனைவருக்கும் டிபன் எடுத்துக்கொண்டு சென்றாள்.

“வித்யா! அண்ணனையாவது கூப்பிடு. நான் பேசணும்" என்றாள்.

"பேசலாம் பேசலாம். இப்போ இல்ல. அவங்க எல்லோரும் கிளம்பிப் போனதற்குப் பின்ன பேசலாம்" என்றாள்.

“வீணா என்னைச் சீண்டிவிட்டு எல்லோரும் சேர்ந்து வேடிக்கை பார்க்கறீங்க. எனக்கு கோபம் வந்தா, நான் எப்படி மாறுவேன்னு எனக்கே தெரியாது" என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க, எதையும் காதில் வாங்காமல் ஹாலுக்குச் சென்றாள் வித்யா.

மதுவின் கோப உணர்வுகள் அலையென புரண்டு அவளைச் சுற்றி படர்ந்தது. உள்ளுக்குள்ளே குமுறிக்கொண்டு அமர்ந்திருந்தவளை, "என்னம்மா கல்யாணப் பொண்ணு சௌக்கியமா?" என்ற மீராவின் குரலில் நினைவிற்கு வந்தவள், அவளிடம் தன் கோபத்தைக் காட்ட முடியாமல், புன்னகைக்க முயன்றாள்.

‘சரி, பார்க்கத் தானே வந்திருக்காங்க. பார்த்துவிட்டுப் போகட்டும். அதன் பிறகு, பேசிக் கொள்ளலாம்’ என்று எண்ணிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

அங்கே வந்த சுபா, “வா மது" என்று அவளது கையைப் பிடித்து அழைத்துச் செல்ல, ஹாலுக்கு வந்தவள் தலையை நிமிராமலே அனைவரையும் வணங்கினாள்.

‘என்ன நடக்குமோ?’ என்று அதுவரை உள்ளுக்குள் பயந்து கொண்டிருந்த மது வீட்டினர் சற்று இறுக்கம் தளர்ந்தனர்.

"வாம்மா உட்கார்" என்று தன்னருகில் அமரவைத்துக் கொண்டார் தேவகி.

ஈஸ்வரன், “ஏன் மாப்பிள்ளையையும் அழைச்சிகிட்டு வந்திருக்கலாமே" என்றார்.

ராம மூர்த்தி, “அவன் ஆஃபிஸ் விஷயமா பெங்களூர் போயிருக்கான். முதலில் ஜீவா தான் போவதாக இருந்தது, கடைசியில் இவன் போக வேண்டியாதாக ஆகிவிட்டது."

ஆளாளுக்கு ஒவ்வொன்றைப் பேச, அவள் கன்றிய முகத்துடன் அமர்ந்திருந்தாள்.

அவளது இந்த அமைதி, சுனாமிக்கு முன்னால் வரும் அமைதியைப் போன்று தீபக்கிற்குத் தோன்றியது.

பேச்சு எங்கெங்கோ சுற்றி வந்து கடைசியில் ராமமூர்த்தி, “சரி சம்மந்தி! இந்த வாரத்திலேயே நல்ல நாளா பார்த்து நிச்சயம் வச்சிக்கலாம். அடுத்து வரும் முகூர்த்தத்திலேயே கல்யாணத்தையும் வச்சிக்கலாம்" என்று சொல்லிக்கொண்டிருக்க, மது தன் மனக்குமுறலுடன் அங்கே அமர முடியாமல் விடுவிடுவென எழுந்து சென்றாள்.

அவளது செயல் அனைவரையும் சங்கடப்படுத்த, விமலாவும், ராஜியும், அவள் பின்னாலேயே சென்றனர். அழுகையை அடக்கியபடி சுவற்றில் தலையைச் சாய்த்து நின்றிருந்தாள்.

ராஜி கோபத்தோடு, “மது! என்ன நினைச்சிட்டிருக்க? பெரியவங்க பேசிட்டிருக்காங்கன்னு கொஞ்சங்கூட மரியாதை இல்லாமல் எழுந்து வர்ற... என்ன பழக்கம் இது? என்று கடிந்து கொண்டர்.

அவரது கைகளைப் பிடித்துக்கொண்டு, “அத்தை! ப்ளீஸ்... எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம். தயவுசெய்து என்னைப் புரிஞ்சிக்கோங்க அத்தை" என்று கெஞ்சியவளைப் பார்க்கவே பாவமாக இருந்தது அவருக்கு.

“இன்னும் எத்தனை நாளைக்கு நீ இதையே சொல்லுவ" என்று கோபத்துடன் கேட்டார் விமலா.

அவளும் விடாமல், “நான் சாகற வரைக்கும்" என்றாள் அழுகையோடு.

“அப்படியே அறைஞ்சா எப்படியிருக்கும் தெரியுமா? நல்ல விஷயம் நடக்கும் போது இப்படி அபசகுனமா பேசுற" என்று ஆத்திரத்துடன் சொல்ல, "ப்ளீஸ்ம்மா! நீங்க கூட என்னைப் புரிஞ்சிக்க மாட்டீங்களா?” என்று பரிதாபமாகக் கேட்க, விமலா சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை.

“நாங்க எல்லோரும் சேர்ந்து பேசித்தான் அவங்களை வரச் சொன்னோம். நீ அவங்களை அவமானப்படுத்தறா மாதிரி நடந்துக்கற. எப்பேர்பட்ட குடும்பம், உன்னோட இந்த புறக்கணிப்பைக் கூட பொறுத்துக்கிட்டு, பொறுமையோட உட்கார்ந்திருக்காங்க. கல்யாணத்துக்கு ஒத்துக்கோ. உன்னோட நல்லதுக்குத்தான் சொல்கிறோம்" என்று கோபத்துடன் ஆரம்பித்தவர், கெஞ்சலாக முடித்தார்.

"நல்லதா? எது நல்லது? என் மனசுக்குப் பிடிக்காத விஷயத்தைச் செய்றது தான் நல்லதா?” என்று கண்களைத் துடைத்துக்கொண்டு, “நானே அவங்ககிட்ட இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு சொல்லிடுறேன்” என்றவள் அவர்கள் எதிர்பாராத தருணத்தில் கீழே இறங்கிச் சென்றாள்.

கோபத்தோடு வேகமாக வந்தவள், இரு கைகளையும் எடுத்துக் கும்பிட்டு, "தயவுசெய்து எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க. இந்தக் கல்யாணத்துல எனக்கு இஷ்டம் இல்ல. எனக்கு நீங்க வரப்போகும் விஷயம் முதலிலேயே தெரியாது. தெரிந்திருந்தா, என்னோட முடிவை நான் போன்லயே சொல்லி இருப்பேன். உங்களை அவமானப்படுத்தணும்ன்னு நினைக்கல. என்னை மன்னிச்சிடுங்க" என்றாள் கண்ணீரோடு.

மது வீட்டினர் அனைவரும் என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்து நிற்க மீண்டும் ராமமூர்த்தியே, “இதை நாங்க ஓரளவுக்கு எதிர்பார்த்தது தான். எங்களுக்கு ஒண்ணும் அவசரம் இல்லை. மதுகிட்ட பேசுங்க" என்றார்.

விமலா, “அவளுக்கு ஒரு நல்ல வாழ்கை அமையணும்னு நாங்க எல்லோரும் ஒவ்வொரு நாளும் படாத பாடு பட்டுகிட்டு இருக்கோம். ஆனால், அவ என்னடான்னா அதை புரிஞ்சுக்காமல் நடந்துகொள்கிறாள்."

தேவகி, “வருத்தப்படாதீங்க. மது பேசியதிலும் தப்பில்லை. அடிபட்டவர்களுக்கு தான் அதன் வேதனை தெரியும். இந்தச் சின்ன வயசுல அவ எல்லா கஷ்டத்தையும் அனுபவிச்சிட்டா. எல்லோரும் நிதானமா சொல்லிப் புரிய வைங்க."

ராம மூர்த்தி, “அப்போ நாங்க கிளம்பறோம்..” என்ற தந்தையை இடைமறித்த சுபா, “அப்பா கொஞ்சம் இருங்க வந்துடுறேன்" என்றவள் மீராவையும் அழைத்துக்கொண்டு மதுவின் அறைக்குச் சென்றாள்.

கதவைத் திறந்த மது, இருவரையும் பார்த்து திகைத்தவள் பின்னர், "உள்ளே வாங்க" என்று அழைத்தாள்.

“மது! சித்தார்த் உன் மேல், உயிரையே வச்சிருக்கான். நீ இன்னும் பழசையே நினைச்சி உன் வாழ்க்கையைப் பாழ்படுத்திக்கிற. சித்தார்த் உன்னை நல்லபடியா பார்த்துப்பான். அவன் ரொம்ப நல்லவன் மது. தயவுசெய்து இந்தக் கல்யாணம் வேண்டாம்னு சொல்லி, அவன் மனசைக் காயபடுத்திடாதே...." என்று சொல்லிக்கொண்டே போக ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தாள் மதுமிதா.

"போதும் அண்ணி! உங்க தம்பியைப் பத்தி கதாகாலட்சேபம் கேட்கும் நிலையில நான் இல்ல. எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டம் இல்ல. உங்க தம்பிகிட்டச் சொல்லுங்க, நான் போகும் இடத்திற்கெல்லாம் பின்னாலேயே வருவது, வம்பாக பேசுவதெல்லாம் வேண்டாம்னு. இதெல்லாம் செய்றதுக்குப் பேரே வேற. நானும், என்னைக்கும் ஒரே மாதிரி இருக்கமாட்டேன். எனக்கும் கோபம் வரும். அன்னைக்கு எனக்கு என்ன தோணுதோ அதைச் செய்திடுவேன். அப்புறம், என் மேல கோபப்பட்டு எந்தப் பிரயோஜனம் இல்ல" என்று தனது மனத்தில் இருந்த ஆத்திரம் தீர சொல்லி முடிக்க, மீராவும், சுபாவும் ஒரு நிமிடம் ஆடிவிட்டனர்.

அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் இருவரும் திரும்பிச் சென்றனர். சற்றுநேரத்தில் கார் கிளம்பிச் செல்லும் சப்தம் கேட்டது. ஆனால், ஏனோ அவளால் நிம்மதியாக உட்காரக் கூட முடியவில்லை. அவர்கள் சென்றவுடன் வீட்டில் எப்படியும் ஒரு பூகம்பம் வெடிக்கும் என்று எண்ணியபடி, அறையைவிட்டு வெளியே வந்தாள்.

ஆனால், யாருமே அவளை ஒருவார்த்தைக் கூடக் கேட்காதது அவளுக்குப் பயத்தையே கொடுத்தது. ராஜேஷின் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை. அவளை முறைத்தபடியே தன் அறைக்குச் சென்றான். மாலையிலிருந்த கலகலப்பு முற்றிலும் இல்லாமல், அமைதியாக இருந்த வீட்டைப் பார்க்கவே அவளுக்குப் பயமாக இருந்தது. தீபக் மட்டும் சமாதானமாக அவள் தோளைத் தட்டிவிட்டுச் சென்றான்.

பெங்களுரில் இருந்து போன் செய்த சித்தார்த்திடன், மது தன்னிடம் அறையில் சொன்னதை மட்டும் சொல்லாமல், மற்றதை சுபா சொல்லச் சொல்ல, அவனுடைய முகம் உணர்ச்சிகளைத் துடைத்துவிட்டுக் கற்பாறையாக இறுகியது.

மனம் பெரும் யுத்த களமாய் தோன்ற, ஊருக்குச் சென்றதும் செய்ய வேண்டியவைப் பற்றி யோசிக்கத் துவங்கினான்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
394
63
அத்தியாயம் – 47

மறுநாள் சித்தார்த் வீட்டிற்கு வந்ததும், தேவகி சற்று சங்கடத்துடனேயே மகனைப் பார்த்தார். அன்னையின் சங்கடத்தைக் கண்டவன் சாதாரணமாக முகத்தை வைத்துக்கொள்ள முயன்றான். ஆனாலும் தாய் அறியாத சூலா?

சாப்பிட்டுவிட்டுக் கைகழுவியவன், எதிரில் வந்த சகோதரியை தன் அறைக்கு வரும்படி செய்கை காட்டிவிட்டு வந்தான்.

சற்று நேரத்திற்கெல்லாம் வந்தவள், “போன வேலை நல்லபடியாக முடிஞ்சதா?" என்று கேட்டதும், "ஹ்ம்ம்... இந்தப் ப்ராஜெக்ட்டும் நமக்கே கிடைத்திருக்கு" என்றான்.

"இவ்வளவு நல்ல விஷயத்தை, இப்படிச் சாதாரணமா சொல்ற? கையைக் கொடு. உன்னோட உழைப்புக்கு இதெல்லாம் சாதாரணம். நீ இன்னும் எவ்வளவு பெரிய உயரத்தை எல்லாம் பிடிக்கப் போற பாரு. அப்போ நாங்க எல்லோரும் உன்னை அப்பாயின்மென்ட் வாங்கிட்டுத் தான் பார்க்கணும்" என்று சிரித்தாள்.

தலையைக் கோதியவன் விரக்தியுடன் சிரித்துவிட்டு, "என்ன உயரத்தைப் பிடிச்சு என்ன சுபா? என் மனசுக்குப் பிடிச்சவளோட இதயத்தில், ஒரு சின்ன இடத்தைப் பிடிக்க என்னால முடியலையே. அப்புறம், நான் பிசினஸ்ல ஜெயிச்சி என்ன பிரயோஜனம்? என் வாழ்க்கை, தொடங்கிய அதே இடத்தில் தானே இப்பவும் இருக்கும்" என்றவனுக்கு, என்ன ஆறுதல் சொல்வது?’ என்று புரியாமல் அமர்ந்திருந்தாள்.

"மது வீட்டில் என்ன நடந்தது?" என்றான்.

அதான் அன்னைக்கே சொன்னேனே... அவகிட்டப் பேசி நல்ல பதிலாச் சொல்றேன்னு சொல்லியிருக்காங்க சித்தார்த். சீக்கிரமே மது சம்மதிச்சிடுவா" என்று சொல்ல அவளை நேருக்கு நேராக பார்த்தான்.

"அப்புறம் வேறென்ன சொன்னா?" என்று கேட்டான்.

சுபா தடுமாற்றத்துடன், “என்ன சொன்னா ? ஒண்ணும் சொல்லலையே" என்றாள்.

"என்கிட்டே எதையும் மறைக்காதே சுபா. உனக்கு உண்மையை மறைச்சி சொல்லத் தெரியல. உன் கண்ணே சொல்லுது. அவளோட புறக்கணிப்பையே தாங்கிட்டு இருக்கேன். அவளோட வார்த்தைகளா என்னைப் பாதிக்கப் போகுது?" என்று வருத்தத்துடன் சொன்னான்.

"சித்தார்த்! நான் சொல்றேன். ஆனா, நீ கோபப்பட்டு எதுவும் செய்திடாதே" என்றவள் தயங்கித் தயங்கி மது சொன்னதைக் கூறினாள்.

அவனது முகம் சொல்லவொண்ணா துயரத்தில் இருந்தது. ஒரு கையால் நெற்றியைத் தடவிக்கொண்டான்.

"சித்தார்த் பீல் பண்ணாதேடா! அவ உன்னைப் புரிஞ்சுக்குவா. அவளும் சின்னப் பொண்ணு தானே... ஏதோ கோபத்தில் பேசிட்டாடா" என்று ஆறுதலாகப் பேசினாள்.

"அதான் இவ்வளவு தெளிவா என்னைப் பற்றி தப்பா புரிஞ்சி வச்சிருக்காளே. அதுக்குப் பேரே வேறன்னா என்ன அர்த்தம்? என்னைப் பொறுக்கின்னு சொல்லாம சொல்றாளா? ஆனால், அவளை அநாவசியமாகச் சந்தேகபட்டதற்கு, எனக்கு இந்தத் தண்டனை தேவை தான்" என்று வேதனையும், கோபமும் கலந்த குரலில் சொல்லிக்கொண்டிருக்க, அவனது மொபைல் ஒலித்தது.

ஸ்ரீராமின் அழைப்பை ஏற்றான். அவனிடம் பேசிவிட்டு, உடனே கிளம்பி வருவதாகச் சொல்லிவிட்டு வைத்தான்.

"நான் கொஞ்சம் வெளியே போகணும் சுபா! போயிட்டு வரேன்" என்றவன் அடுத்த ஐந்தாவது நிமிடம் கிளம்பிச் சென்றான்.

தன் தம்பியை இதற்கு முன்பு இவ்வளவு வருத்தத்துடன் பார்த்ததில்லை. ‘மதுவை தவறாக எண்ணி இருந்த போது கூட, அவன் இவ்வளவு வேதனை அடைந்து பார்த்ததில்லையே. இப்போது அவளுக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டிருக்கிறானே. இந்த மது அவனைப் புரிந்து கொள்ளாமல், குதிரைக்குக் கடிவாளம் போட்டது போலிருக்கிறாளே! என்று எண்ணியபடி அமர்ந்திருந்தாள்.

ஸ்ரீராமை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தவன், அவன் கொடுத்த கவரை வாங்கிக் கொண்டு ஒரு முடிவுடன் கிளம்பினான். அவனது மனம் முழுதும் கோபமும், வேதனையும் நிறைந்திருந்தது.
வீட்டில் யாரும் மதுவிடம் முகம் கொடுத்து பேசவில்லை. பட்டும் படாமலும் இருந்தனர். அவளுக்கு வெறுப்பாக இருந்தது. எதுவும் செய்யப் பிடிக்காமல் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள்.

கதவு தட்டும் சப்தம் கேட்டதும் திறந்தவள், இரண்டு தினங்களாகத் தன்னைப் பார்க்கக் கூடப் பிடிக்காமல் இருந்த உடன்பிறந்தவன், இப்போது தன்னைத் தேடி வந்திருப்பதை அறிந்து, "அண்ணா!" என்றாள் ஆச்சரியத்துடன்.

"மதும்மா! மனசே சரி இல்ல. கொஞ்சம் வெளியே போய்ட்டு வரலாமா?" என்றதும், சற்றும் யோசிக்காமல், “இதோ பத்து நிமிஷம் வந்துடுறேன்" என்றவள் உடை மாற்றிக்கொண்டு ராஜேஷுடன் கிளம்பினாள்.

அவன் எதுவும் பேசாமலேயே, காரை செலுத்திக் கொண்டிருந்தான். கோவளம் அருகில் சென்றதும் காரை நிறுத்திவிட்டு, "மது! ரெண்டு நிமிஷம் வந்துடுறேன்" என்றவன் இறங்கிச் செல்ல, தூரத்தில் தெரிந்த கடல் அலையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

சரியாக இரண்டு நிமிடத்தில் வந்து அமர்ந்தவனைத் திரும்பிப் பார்த்தவள் அதிர்ச்சியுடன், "நீ..ங்..களா...? அண்..ண..ன் எங்..கே?" என்று பதட்டத்துடன் கேட்க, உணர்ச்சிகளைத் துடைத்த முகத்துடன் சாலையில் கவனத்தைத் திருப்பினான் சித்தார்த்.

எதுவும் சொல்லாமல் அவன் காரைக் கிளப்ப, “உங்களைத் தான் கேட்கறேன் அண்ணன் எங்கே?” என்று அவள் பதட்டமும், பயமுமாகக் கேட்டுக் கொண்டிருக்க, கார் ஜீவாவின் கெஸ்ட் ஹவுசி்ற்குள் நுழைந்தது.

அவளுக்கு மூச்சு முட்டுவது போலயிருந்தது. பயத்தில் காது அடைத்துக் கொண்டது. வாசலிலும் யாரும் இல்லை. கேட் திறந்தே இருந்தது. போர்ட்டிகோவில் காரை நிறுத்திவிட்டு இறங்கியவன், மறக்காமல் காரைப் பூட்டிவிட்டு கெஸ்ட் ஹவுஸ் கதவைத் திறந்துவிட்டு காரைத் திறந்தவன், "இறங்கு மது" என்றான்.

‘தன்னை எதற்காக இங்கே அழைத்து வந்திருக்கிறான்?’ என்று எண்ணியவளின் எண்ணம் நொடியில் தேவையில்லாத கற்பனைகளைச் செய்தது. பொறுமை இழந்தவனாக, அவளது கையைப் பிடித்து வெளியே இழுத்தான்.

அவனது இரும்புப் பிடியிலிருந்து கரத்தை விடுவித்துக் கொள்ள முயன்று முடியாமல், “சித்..தா..ர்த்… விடுங்க. நான் வரமாட்டேன். என்னை விடுங்க” என்று கெஞ்சலும், மிரட்டலுமாகக் கூறிய வார்த்தைகள் எதையும் காதில் வாங்காமல் உள்ளே இழுத்துச் சென்று கதவைப் பூட்டினான்.

அவன் பற்றியிருந்த இடம் கன்றிச் சிவந்திருக்க, பருந்திடம் அகப்பட்ட கோழிக்குஞ்சை போல நடுங்கிக் கொண்டிருந்தாள் அவள்.

அவன் எதுவும் பேசாமல், அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். மனத்திற்குள் பயம் இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல், “உங்க மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? கதவைத் திறங்க... நான் போகணும்?" என்று சப்தமாகக் கேட்க நினைத்தாலும், குரல் இருக்க இருக்கத் தேய்ந்து கொண்டே போனது.

அவன் மதுவை நெருங்கி வரவர, அவளது இதயம் துடிக்கும் ஓசை அவளுக்கே தெளிவாகக் கேட்டது. பின்னாலேயே சென்றவள் டீபாயில் முட்டித் தடுமாற, அவன் எதுவும் செய்யாமல் பார்த்துக் கொண்டிருந்தான். பயத்தில் வெளுத்திருந்த அவளது முகத்தைப் பார்த்தவன், கண்களை மூடி ஆழமூசெடுத்தான்.

அங்கிருந்த சோஃபா ஒன்றில் அமர்ந்தவன், “உட்காரு..." என்று எதிரிலிருந்த சோஃபாவைக் காண்பிக்க, அதிசயமாக அவனைப் பார்த்தாள். "பயப்படாதே மது! உட்காரு நான் உன்கிட்டப் பேசணும்" என்றான்.

அவனது சமாதான பேச்சில் சற்று பயம் தெளிந்தவளாக, பட்டும் படாமலும் அமர்ந்தாள். அவனோ, வேதனையுடன் நெற்றியைத் தேய்த்தபடி அமர்ந்திருந்தான். இதுவரை, இப்படியொரு வேதனையை அவனுடைய முகத்தில் கண்டிராதவளுக்கு என்னவோ போலிருந்தது.

"சித்தார்த் ப்ளீஸ்! என்னைச் சீக்கிரம் அனுப்பிடுங்க. அண்ணன் என்னைத் தேடுவாங்க" என்றாள்.

சிறு தயக்கத்துடன், "உன்னைக் கூட்டிட்டு வரச் சொல்லி நான்தான் ராஜேஷுக்குப் போன் செய்தேன். உன்னை இங்கே கூட்டிட்டு வந்தது அவனுக்கும் தெரியும்" என்றதும், அவ்வளவு நேரம் சற்று சமாதானமாக இருந்தவள் மனதில், கோப அலையடிக்க ஆரம்பித்தது.

கோபத்துடன், "உங்களுக்கெல்லாம் ஆம்பளைங்கன்ற திமிர்தானே... எங்க அண்ணணே..." என்றவளுக்குப் பேச வார்த்தைகள் வரவில்லை.

"ரிலாக்ஸ் மது! உன்னை இப்படிக் கட்டாயப்படுத்திக் கூட்டிட்டு வந்தது தப்புதான். ஆனா, எனக்கு வேற வழியே தெரியல. நான் உன்னிடம் பேசணும்னு சொன்னா, நீ ஒதுக்கமாட்ட. உன் வீட்டுக்கும் வந்து பேச முடியாது. ஜஸ்ட் பத்து நிமிஷம் நான் பேசிடுறேன். அப்புறம், நீ போகலாம்" என்றான் இறங்கிய குரலில்.

எரிச்சலுடன், “என்னை நிம்மதியா இருக்க விடக்கூடாதுன்னு முடிவுல இருக்கீங்களா? ஏன் என்னை நிழல் மாதிரி தொடர்ந்து வந்து தொல்லை கொடுக்கறீங்க" என்று கத்தினாள்.

"மது! கொஞ்சம் பொறுமையா பேசு" என்று தன் பொறுமையை இழுத்துப் பிடித்துக்கொண்டு பேசினான்.

"என்ன பொறுமையா பேசணும்? நீங்க யாரு சார் என் சொந்த விஷயத்தில் தலையிட? எங்க வீட்டில எல்லார்கிட்டயும் நல்ல பேர் வாங்கி, உங்க பக்கம் இழுத்துட்டீங்க. எதுக்காக என்னை இப்படிச் சுத்திச் சுத்தி வரீங்க? உங்..க.. உங்..க..ளைப் பார்த்தாலே எனக்குப் பயமாயிருக்கு. உங்களைப் பார்த்த நாள்லயிருந்து என் நிம்மதி போச்சு" என்று தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க, "நான் சொல்றதைக் கொஞ்சம் கேட்கிறாயா?" என்றான் சப்தமாக.

அவனது சமாதான வார்த்தைகள் அவளுக்குத் தைரியத்தைக் கொடுத்திருக்க, "முடியாது! நீங்க சொல்றதை, நான் எதுக்குக் கேட்கணும்? நான் போற இடத்துக்கெல்லாம் தொடர்ந்து வர்றது. வலிய வந்து பேசறதுன்னு, இவ்ளோ நாள் இதோட நின்னு இருந்தது. இன்னைக்கு, ஒரு பொண்ணுகிட்ட நடந்துக்குற மாதிரியா நடந்துக்கறீங்க!

ரௌடி மாதிரி பிஹேவ் பண்றீங்க. என் வீட்டில இருக்கவே எனக்குப் பயமாயிருக்கு. கூடப் பிறந்த அண்ணனே இப்படி நடந்துக்கறான். என் நிம்மதியை ஒட்டுமொத்தமா அழிச்சிட்டீங்க" என்று கண்கலங்க அமர்ந்திருந்தவளைப் பார்க்கவே அவனுக்கு வேதனையாக இருந்தது.

தன்னுடைய கோபமெல்லாம், அவளது கண்ணீரைக் கண்டதும் குறைவதை உணர்ந்தான். ஆனால், அவளது பேச்சு அவனது மென்மையான மனத்தை இரணமாக்கிக் கொண்டிருந்தது.

"நான் செத்தாதான் எனக்கு நிம்மதி போல...’ என்று மெல்ல முனகியவளை, "சொல்றத சத்தமாச் சொல்லு. திட்டுறதையும் சத்தமா திட்டு. இப்படி உனக்குள்ள முனகாதே" என்றான் எரிச்சலுடன்.

"நான் யாரு சார் உங்களைத் திட்ட? என்னோட நிலைமையை நினைச்சி நொந்துக்கறேன். நான் என்னைக்குச் சாகறனோ அன்னைக்கு..."என்று சொல்ல, "ஏய்! அறிவிருக்காடி உனக்கு? என்ன பேச்சு பேசற? அப்படியே ஒரு அறைவிட்டேன்னா தெரியும். செத்துப் போறாளாம். ஏன்டி என்னைக் கொல்லாம கொல்ற" என்று கத்தியவனைப் பார்த்ததும், அவ்வளவு நேரம் வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருந்தவள், பயத்துடன் ஒடுங்கிப் போய் அமர்ந்திருந்தாள்.

அதைப் பார்த்தவன் இரு கைகளையும் உயர்த்தி, “சாரி... சாரி... வெரி சாரி... மது! நீ சொன்ன வார்த்தையை என்னால தாங்க முடியல. அதான் கொஞ்சம்..." என்றவன் தண்ணீரை எடுத்து மடமடவெனக் குடித்தான்.

தன்னை அமைதி படுத்திக்கொண்டு அவளுக்கும் தண்ணீரைக் கொண்டுவந்து கொடுத்தான். அவளும் மறுக்காமல் வாங்கிக் கொண்டாள். அவள் தண்ணீர் குடித்து முடிக்கும் வரை பேசாமல் இருந்தவன், தன் பாக்கெட்டிலிருந்து ஸ்ரீராம் கொடுத்த கவரை எடுத்து டிபாயின் மீது வைத்தான்.

‘என்ன இது?’ என்பதைப் போல அவள் பார்க்க, "எடுத்துப் பாரு" என்றான்.

தயக்கத்துடன் எடுத்தவள், ‘அது தன் புது வேலைக்கான உத்தரவுக் கடிதம்’ என்று அறிந்து, "இது... உங்கிட்ட எப்படி?" என்று தடுமாறினாள்.

"நீ ஸ்ரீராம் வீட்டு அட்ரஸ் கொடுத்திருந்தியாம். அங்கே வந்ததுன்னு, ஸ்ரீராம் தான் என்னிடம் கொடுத்தார்" என்றான்.

அவள் முகம் கோபத்தில் சிவந்தது. சீற்றத்துடன் "அங்கே போய், இங்கே போய் கடைசில ஸ்ரீராம் அண்ணாவையும் உங்க கைக்குள்ள போட்டுக்கிட்டீங்க. பிசினஸ் மேன் இல்லையா? அதான், உங்க போர்ட் ரூம் டாக்டீஸை வச்சி எல்லோரையும் உங்க பக்கம் திருப்பிக்கறீங்க. ஆனால், உங்களுடைய எந்த முயற்சியும் என்கிட்ட நடக்காது" என்றவளுக்கு மூச்சிரைத்தது.

கோபத்தில் அவனுடைய உடல் இறுக, “என்னை எப்பவும் நீ தப்பாவே புரிஞ்சிக்குவியா? அப்படி நான் என்ன தப்பு செய்தேன். என்னை ஏத்துக்க இவ்வளவு தயங்குற. சரி, அதுக்கும் காரணம் இருக்குன்னு வச்சிக்கிட்டாலும், தேவையில்லாம என் மேல பழி சொல்ற. நான் யாரையும் என் கைக்குள்ள போட்டுக்கல. அந்த அவசியமும் எனக்கு இல்ல.

நீ எனக்கு வேணும்னு நினைச்சா யாரோட உதவியும் எனக்குத் தேவையில்ல. ஆனா, எனக்குத் தேவை உன்னோட மனசு, உன்னோட காதல், என் வாழ்நாள் முழுக்க உனக்குத் துணையாக இருக்கணும். உன்னை என் கண்ணுக்குள்ளே வச்சிப் பார்த்துக்கணும்னு நினைச்சேன். ஆனா, ஆரம்பத்திலிருந்தே என்னை ஒரு சந்தேகத்தோடே பார்த்துட்ட. நீ எப்போ தான் என் மனசைப் புரிஞ்சிக்குவ?" என்று கோபத்தோடு அவளையே ஊடுருவியபடி கூறினான்.

சித்தார்த்தின் கோபம் அவளுக்கு உள்ளுக்குள் பயத்தை கொடுத்தாலும் இதுவரை அவன் தன்னிடம் அத்துமீறி நடக்காதே, அவனது குணத்தைப் புரிய வைத்திருந்தது. ஆனாலும் வீம்புடன், “தேவையில்ல. நான் உங்களைப் புரிஞ்சுக்கணும்னு அவசியம் இல்ல. என் வாழ்க்கையில் அநாவசியமா குறுக்கே வராதீங்க. உங்களால் தான் நான் இந்த வேலையை விட்டே போறேன்" என்று சினத்துடன் கூற, சித்தார்த்தின் முகம் சுருங்கி பலவகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தியது.

“ஏன் மது! நீ வேலையை விட்டுப் போக, நானா காரணம்? அந்த அளவுக்கா நான் உன்னை வேதனைப்படுத்தி இருக்கேன். நீ எப்போ என் காதலை ஏத்துக்க முடியாதுன்னு சொன்னதிலிருந்து, உன்னை விட்டு விலகித் தானே இருக்கேன். அப்போதும் நீ என்னைப் புரிஞ்சிக்கல. நாளுக்கு நாள் என் மேல் உனக்கு வெறுப்பு தான் கூடுது.

அன்னைக்கு, நீ என் காதலை மறுத்துட்டுப் போனபோது அதுக்கான காரணத்தைத் தெரிஞ்சிக்கத்தான் உனக்குப் போன் செய்தேன். ஆனா, போன்ல கூட என்கூடப் பேசல. அதனால் தான் நேர்ல வந்தேன். அதன்பிறகு உன்னைப் பற்றி ராஜேஷ் மூலமா தெரிஞ்சதும் உனக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாதுன்னு விலகி இருந்தேன்.

திரும்ப உன்னைப் பார்த்துப் பேசி, புரிய வச்சி... உன்னோட காயத்துக்கு நல்ல மருந்தா இருக்கணும்னு ஆசைப்பட்டேன். உன்னைச் சிட்டிசென்டரில் பார்த்துகூட தற்செயல் தான். சுபா தானே உன்கிட்டப் பேசினாள். சுபா சொல்லித்தான் உன்னை வீட்டுக்கு அழைச்சிட்டுப் போனேன். நீயாதான் அன்னைக்கும் பேச்சை ஆரம்பிச்ச. இல்லான்னா, நான் உன்னை வீட்டில் விட்டுட்டுப் போயிருப்பேன்.

ஸ்ரீராமோட ஹோமுக்கு நான் வந்தபோது நீ அங்கே இருந்தன்னு எனக்குத் தெரியாது மது. இவ்வளவு ஏன்? உனக்குச் ஸ்ரீராமை தெரியும்னே, எனக்குத் தெரியாதுமா" என்று ஒரு குழந்தைக்குச் சொல்வதைப் போல அவளுக்குத் தன்னைப் புரிய வைக்க முயற்சித்தான்.

ஆனால், எதையும் புரிந்துக்கொள்ள மாட்டேன் என்று பிடிவாதத்துடன் இருப்பவளை என்ன செய்ய முடியும்? சித்தார்த் சொன்ன அனைத்தையும் வேண்டா வெறுப்பாகக் கேட்டுக்கொண்டு, “இதெல்லாம் போகட்டும், அன்னைக்கு உங்க வீட்டு விசேஷத்தில் நான் மயங்கி விழுந்ததும் நீங்க வேறு யாரையாவது கூப்பிட வேண்டியது தானே? நீங்களே என்னை உங்க மேலே.... "என்று பாதியில் நிறுத்திவிட்டு நெற்றியைப் பிடித்துக் கொண்டாள்.

"விசேஷம் நடக்கும் வீட்டில் நீ மயங்கி விழுந்ததை யாராவது பார்த்தா வீணா குழப்பம் வரும். அது மட்டும் இல்ல... அந்தப் போட்டோ விஷயத்துக்கும் நான் காரணம் இல்ல" என்றவனை வெறுப்போடு பார்த்தாள்.

"இந்தக் கதையெல்லாம் நல்லா சொல்லுங்க. யாருக்கும் மசியாத கீதாவோட அப்பாவையே பேசிப் பேசிக் கரைச்சவர் தானே நீங்க. உங்க வீட்டிலிருந்து பொண்ணு பார்க்க வராங்கன்னு தெரியும் இல்ல உங்களுக்கு. அப்படி எனக்காகவே யோசிக்கும் நீங்க, ஏன் அதைத் தடுத்து நிறுத்தல?" என்று கேட்டதும், பதில் சொல்ல வாயைத் திறந்தவனை, “போதும்! இனியும், நீங்க சொல்ற கதையைக் கேட்க நான் தயாரா இல்ல. நீங்க சொன்ன டைமுக்கு மேலேயே ஆயிடுச்சி. நான் கிளம்பறேன்" என்று எழுந்தாள்.

"ஒரு நிமிஷம்..." என்றான். ஆழ மூச்செடுத்து, “நீ ரெண்டு நாள் ஆபீஸ் வந்து உன்னோட பெண்டிங் வொர்க்கை முடிச்சிக் கொடுத்துட்டு, உன் அக்கௌண்டையும் செட்டில் பண்ணி வாங்கிட்டுப் போய்டு. உன்னோட எம்.டி யா மட்டும்தான் சொல்றேன். இதில் எந்த உள் அர்த்தமும் இல்ல" என்றவன், டீபாய் மீதிருந்த அப்பாயிண்மென்ட் ஆர்டரை எடுத்து, “ஆல் த பெஸ்ட்!” என்று அவள் கையில் கொடுத்தான்.

கதவைத் திறந்தவன், "இனி, என்னால உனக்கு எந்தத் தொல்லையும் இருக்காது. நீ தைரியமா இருக்கலாம். நீயா என்னைக் கல்யாணம் செய்துக்கொள்ள சம்மதம்னு சொல்லும் வரை, எங்க வீட்டிலிருந்து யாரும் வந்து உன்னைத் தொல்லை செய்யமாட்டாங்க” என்று வருத்தத்துடன் சொன்னவன், “ஒண்ணு தெரிஞ்சுக்கோ மது! எனக்கு மனைவின்னா, இந்த ஜென்மத்தில் அது நீ மட்டும்தான். நீ சந்தோஷமா இருக்கணும்னு தான் நான் நினைத்தேன் நான் உன் வாழ்க்கையிலிருந்து வெளியேறினா தான் உனக்கு அந்தச் சந்தோஷம் கிடைக்கும்ன்னு நீ நினைச்சா அதுவும் எனக்குச் சம்மதம்" என்றான்.

அவள் எதுவும் பேசாமல் வேகமாக வெளியே செல்ல, காயம்பட்ட வலியுடன் எந்தவிதமான சலனமின்றி அவளையே வெறித்துக் கொண்டிருந்தான்.