நின்னைச் சரணடைந்தேன்
மனதை கவரும் காதலுடன் பல அழகிய குடும்பங்களை சேர்க்கும் காதலின் வலியை சுமக்கும் நெஞ்சில் காதலைப் பூக்க வைக்கும் காதல்கள் இணையும் அழகான காதல் கதை
கதைகள் படிக்கத் துவங்கிய ஆரம்ப காலத்தில் எல்லாரும் இந்த கதையைப் படித்து இருப்போம். இந்த கதையைப் படிக்காதவங்களே இருக்க முடியாதுனு சொல்லும் அளவுக்கு நிறைய பேர் படித்த கதை இது. இப்படி தான் கதையை அழகான முறையில் காதல், நட்பு, சேட்டை, சண்டை, ஊடல், குடும்பம், பாசம், வலி, அன்பு என எல்லாமே சரியாக அளவில் எப்படி செதுக்கப் பட வேண்டும் என சொல்லும் ஒரு முன்னுதாரண கதை.
கடந்த காலக் கசப்பான நிகழ்வுகளின் உண்மையை அறியாமல் மதுவை தவறாக நினைத்த சித்தார்த், காலங்கள் பல கடந்து மதுவை பார்க்க நேர்ந்த நேரத்தில் உண்மைகளை அறிந்து கலக்கம் அடைகிறான். அவள் மேல் தான் கொண்ட மாறாத காதலினால் அவளை திருமணம் செய்துக் கொள்ள நினைக்கிறான். சித்தார்த்தின் மீது அளவற்ற மதிப்புக் கொண்ட மது அவன் எண்ணத்தை அறிந்து அவனை வெறுக்கிறாள். யாரையும் மணக்காமல் வாழும் மது, மணந்தால் அது அவளை மட்டுமே என வாழும் சித்தார்த், இருவருக்கும் இடையில் போராடும் மூன்று குடும்பங்கள் என தொடர்கிறது கதை.
மது ஏன் சித்தார்த்தை மறுக்கிறாள்?? மதுவின் மனதில் என்ன உள்ளது?? சித்தார்த் மது இருவருக்கும் இடையில் என்ன நடந்தது?? இருவரின் கடந்த கால வாழ்க்கை என்ன?? இருவரும் எங்கு எல்லாம் தங்கள் காதலைத் தவற விட்டு எங்கு சேர்ந்தார்கள்?? சித்தார்த் மது இருவரையும் இணைத்த விதியின் அடுத்தடுத்த செயல்கள் என்ன?? எல்லா துன்பங்களையும் கடந்து இருவரும் இணைந்து மகிழ்ச்சியாக வாழ்ந்தார்களா?? என்பதை கதையில் படித்துத் தெரிந்துக் கொள்ளலாம்.
மதுமிதா
:
கடந்த காலத்தில் சிறகடித்து பறவையாகச் சுற்றி திரிந்தவளின் இறக்கைகளை உடைத்ததைப் போல, நிகழ் காலத்தில் அழ வைத்தவள். மனதில் காதலின் வலி குறையாது பல துன்பங்களை சந்தித்தவள். மது, ஹனி, தேனுவாக இருந்து நம்மை ரசிக்க வைப்பவள். அத்தான், நண்பர்களுடன் செய்யும் சேட்டைகள், சித்தார்த்தோடு அடிக்கும் காதல் லூட்டிகள், அர்ஜுன் மதுவின் குறும்புகள் என எல்லாமே இணைந்த அழகான கதாப்பாத்திரம்.
சித்தார்த்
:
தான் ஒரு தலையாக காதலித்து வந்த காதலியோடு தன் வாழ்க்கையை பகிர்ந்துக் கொள்ள ஆசைகள் பல வளர்ந்தவன், மதுவின் மனதை அறிந்து தன் காதலை அவளிடம் சேர்ந்தவன். பெண்களின் கனவு நாயகன் சித்து அப்படினு சொல்லலாம்... நீ என்ன பண்ணாலும் அழகு தான் டா... செம்ம ஸ்வீட்டான ஹீரோ கோவம், வலி, காதல், ஏக்கம், வீம்பு, புரிதல் என எல்லாமே இணைந்த இருக்கும் அக்மார்க் கியூட் ஹீரோ.
அர்ஜுன்
:
இவன் வேற மாதிரி...மனது விட்டு சிரிக்க வைத்து இனித்தவன் நம்பல ரொம்ப அழவும் வைப்பான். 15 எப்பிஸ்ல மட்டும் தான் இவன் வரானா அப்படி ரொம்ப ஃபீல் பண்ண வச்சிட்டான்...தேனு, தேனுனு சொல்லி சொல்லியே நம்பலை அவன் பின்னாடி சுத்த வைக்கும் கேடி 50 எப்பில வரும் சித்துக்கு வெறும் 15 எப்பி மட்டுமே வந்து டஃப் கம்பெடிட் பண்ணவன். அட அட அட பெண்களின் மனதை மயக்கும் அர்ஜுனனும் இவனே குரும்புகளின் பிறப்பிடமான கண்ணனும் இவனே.
"எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே
என்னை மறந்தேன் என்னை மறந்தேன்
நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே" இந்த பாட்டு அர்ஜூனுக்கு தான்.
தீபக் - மேகலா
, ராஜேஷ் - வித்யா
, ஆதி - மீரா
, ஹரி - சுபா
, நேத்ரா - ஸ்ரீராம்
, சுரேஷ் - கீதா
, சிவா - லதா
ஆகிய இளம் ஜோடிகளின் காதல், மது சித்துவை சேர்த்து வைக்க அவர்கள் செய்பவை, சின்ன சின்ன சண்டைகள், சேட்டைகள், பொறுப்புகள், குறும்புகள் என இவங்க எல்லாருமே கலக்கி இருப்பாங்க.
மூத்த தம்பதிகளான ராஜி - ஈஸ்வரன்
, விமலா - சந்துரு
, தேவகி - ராமமூர்த்தி
மூன்று ஜோடிகளும் வேற லெவல் இவங்க எல்லாரும் பொறுமை என்றால் சிங்கிளாக சுத்தும் அஸ்வந்த்
, ஜீவா
, ரமேஷ்
எல்லாரும் வேகம்.
இவங்க எல்லாரும் சேர்ந்து வரும் காட்சிகள் எல்லாமே அவ்வளோ அழகு... படிக்க படிக்க தேன் தித்திப்பு ஊட்டும் கதாப்பாத்திரங்கள். இதுல அஸ்வந்த் பத்தி சொல்ல மட்டும் ஒரு கதையே எழுதலாம் அவ்வளோ சேட்டை... அர்ஜுனுக்கு ஜூனியர்.
எல்லாரையும் ரசிக்க வைக்கும் கதையான நின்னைச் சரணடைந்தேன் Edited Version படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்க.
இதை போன்ற நல்லப் படைப்புகளைத் தந்துக் கொண்டே இருக்க வாழ்த்துக்கள் அக்கா...
Best Wishes

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
பொன்னை உயர்வை புகழை விரும்பிடும்
என்னை கவலைகள் தின்ன தகாத்தென்று
நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன கொன்றவை போக்கென்று