நின்னைச் சரணடைந்தேன் - கருத்து திரி

Rithi

Member
Feb 8, 2021
31
18
8
40 to 50 எபி's

அருமை அருமை sis.. ப்பா எத்தனை எத்தனை உணர்வுகள்.. உள்வாங்கி படிக்க படிக்க வேற லெவல் பீல்.

அர்ஜுனின் இறுதி நொடிகள்.. மனசுல அப்படி ஒரு வலி.. அப்பவும் அவளுக்காக யோசிச்சு இன்னொரு கல்யாணம் பண்ண சம்மதம் வாங்கி கண் மூடும் போது கண்ணீரை நிறுத்தவே முடியலை😭😭😭

மது பீலிங்க பார்க்கும் போதும் அய்யோ இவளை தனியா விட்டு போறோமேனு அர்ஜுன் எவ்வளவு கவலை பட்ருப்பான்னு நினச்சா இன்னும் அழுகை தான்..

சித்தார்த் இவனோட உணர்வுகள்.. அதுவும் சில பர்டிகுலர் இடமெல்லாம் அவ்வளவு அழகு sis நீங்க சொன்ன விதம்..

என் காதல் தான், நான் தான் அவளுக்கு கஷ்டம்னா நான் இனி விலகிடுறேன்னு சொல்றதும், யாரை கல்யாணம் பண்ணினாளும் சந்தோசமா இருக்கனும்னு நினைக்குறது, பிசினஸ்ல என்ன சாதிச்சாலும் அவ மனசுல இடம் புடிக்கலனா நான் பூஜ்ஜியம்னு சொல்றதும்... ப்பா அழகு அழகு அவ்வளவு அழகு...


மது.. ரொம்ப ரொம்ப பாவம் பா மது.. என்ன சொல்றது.. அர்ஜுன்னோட அவள் கண்ட கனவு, அது கனவா போனதுலாம் கடவுளின் சதி..

சித்தார்த் இவனை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல்... அவள் படும் பாடு.. அதுவும் உருவ ஒற்றுமைனு எல்லாமே சேர்ந்து ரொம்பவே கஷ்டப்படுறா..

அவளையும் அறியாமல் அவ மனசுல சித்தார்த் இருக்கான்.. சீக்கிரமே புரிஞ்சிப்பா..

தீபக்.. இவனும் ஒரு அழகான கேரக்டர்.. எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச மேன்.. மது மேலே காட்டுற அன்பு ப்ப்பா சிம்ப்ளி சூப்பர்ப் sis..

ராஜேஷ், மேகலா, வித்யா, தேவகி, மீரா, சுபா, அஷ்வ்ந்த, ராஜி அத்தை, அர்ஜுன் அம்மா அப்பா இவங்க எல்லாருமே தனியா தனியாவே ரொம்ப அழகு.. மனசுல நிக்குறாங்க..

செம்ம sis💐💐💐 வைட்டிங் வெயிட்டிங்💐💐
 
  • Love
Reactions: Shenba

Anuya

Well-known member
Apr 30, 2019
292
331
63
வாவ்.. வாவ்... வாவ்... வேற லெவல் எபிஸ் ஷென்பா மா❤❤😍😍 ஒரு ஒரு எபியும் அது ஏற்படுத்தின தாகமும் ... paahhhhh...

இன்னும் வெளி வர முடியலை... அப்படி ஒரு டீப் பீல்... மொத்ததுல உணர்ச்சி குவியல் பீலிங்னு சொல்லலாம்..

அர்ஜுன் மது லவ் சீன் எல்லாம் அவ்வளவு லவ்லியா இருந்துச்சு😍😍... அர்ஜுன் accident அப்புறம் அவன் இல்லைன்னு ஏத்துக்கவே முடியலை🥺🥺...

அர்ஜுன் .... அவன் அவ்ளோ கியூட்.. paahhhhhh... லவ்வர் பாய்😍😍❤. லைக் அவன் வரும் போது எல்லாம் ஒரு மாதிரி ஜாலி vibe ஆஹ் create பண்ணான். அதுதான் அவனோட ஸ்பெசல்.

லவ்ல நீ தான் அர்ஜுன் கிரேட்.. காதல் மன்னன்😍❤.really I'm fall in love with arjun .. such a charming he is😍❤.

அவனோட வாழ்க்கை முழுக்க இருக்க காதலை கொஞ்ச நாட்களிலையே மதுக்கு முழுசா கொடுத்துட்டான்.. தன் காதல் மாதிரி சித்துவோட காதலும் ஜெய்கனும்னு நினைச்சானோ.. பாதிலையே போய்ட்டான்...🥺🥺🥺

அதுவும் ஹாஸ்பிடல்ல தேனு.. I'm sorry.. னு அர்ஜுன் சொல்லும் போது.. sorry வேண்டாம் நீ தான் அர்ஜுன் வேணும்னு என் சைடு ஹார்ட் சத்தமா கத்துச்சு... தெரிஞ்ச முடிவு தான்... ஆனா அதோட தாக்கம் ரொம்ப அதிகமா இருக்கு...


அதுவும் வேற கல்யாணம் பண்ணி சந்தோசமா மது இருக்கணும்னு சத்தியம் வாங்குனதுலாம் ultimate... அர்ஜுன் நீ கிரேட் டா❤❤ love u arjun❤❤

விமலா அம்மா சந்துரு அப்பா..🥺🥺 அவங்க உண்மையா ரொம்ப அற்புதம்... பையனை இழந்து மதுவை பொண்ணா பாத்துகிட்டு அவளோட நன்மைக்காக சித்துக்கூட கல்யாணம் பண்ண நினைக்குறது செம❤

அழ வைகுறதே வேலை ஷென்பா மாக்கு... control பண்ண try பண்ணாலும் அர்ஜூன்னை படிக்க படிக்க.. அதுபாட்டுக்கு என் கன்ரோல் இல்லாம கண்ணீர் வருது...

நல்லவேளை அர்ஜுன் பார்ட் மொத்த எபிஸ் ஆஹ் போட்டிங்க ஷென்பா மா.. இல்லைனா ரொம்ப கஷ்டமா சுத்தி இருப்பேன்...

அழகான எபிஸ் ஷென்பா மா.. எப்படி சொல்லுறது ஸ்பீச்லஸ் ... அந்த நிலைமை தான் இப்போ எனக்கு சொல்ல வார்த்தையே இல்லை.. அவ்ளோ செம ... நீங்க மது ,அர்ஜுன், சித்து, தீபக், ராஜேஷ் னு எல்லாரோட உணர்வையும் அந்த அந்த கேரக்டர் ஆஹ் எங்களையும் பீல் பண்ண வச்சி அவங்க உணவுகளை உணர வைக்கிறீங்க... செம...

இந்த எபிஸ் முழுசும்... ரொம்ப மகிழ்ச்சி, ரொம்ப துக்கம், ஏன் இப்படி ஆச்சுனு கோவம், ஆற்றாமைனு எல்லாம் விதமான உணர்வுகளும் கலந்து சொல்ல வார்த்தைகள்ளே இல்லை... அந்த உணர்வை soulfull ஆஹ் உணர வச்சது உங்க எழுத்துகள் தான் மா...

Such a lovely and emotional epis...Waiting for nxt epis🔥🔥❤❤
 
  • Love
Reactions: Shenba

Anuya

Well-known member
Apr 30, 2019
292
331
63
சித்து ... அவனோட லவ்வும் வேற லெவல்... மதுவை அவனை தவிர யாரலையுமே நல்ல பாத்துக்க முடியாது... அவளோட ஒவ்வொரு உணர்வையும் புரிஞ்சிக்கிட்டு அவளுக்கு ஏத்த மாதிரி நடந்துப்பான்😍😍❤ cutieee😍😍❤
 
  • Like
Reactions: Shenba

Anuya

Well-known member
Apr 30, 2019
292
331
63
மது அர்ஜுன் படிக்கும் போது என்னோட குட்டி brainல ஓடின.. சோங் லைன்ஸ்...

"வழிபோக்கனின் வாழ்விலே ...
நிழலாக வருகிறாய்!!

நான் கேட்கும் முன்னமே...
இளைப்பாறல் தருக்கிறாய் நீ!!

இளைப்பாறல் முடிந்ததும்..
போதும் போ என்கிறாய்!!
புலனைந்தையும் கொள்கிறாய்! கொள்கிறாய் நீ... "

இந்த வரிகள் எந்த அளவுக்கு சூட் ஆகுது என்று எனக்கு தெரியலை.. பட் எனக்குள்ள ஓடின வரிகள் இது...🙈🙈❤
 
  • Love
Reactions: Shenba

Rithi

Member
Feb 8, 2021
31
18
8
Wow wow wow 👏👏👏👏👏👏.. செம்ம எபிஸ் sis..

அதுவும் சித்தார்த் தான் full ஸ்கோர் பண்ணிட்டான் இந்த டைம்..,😍😍😍

எவ்வளவு அழகான வார்த்தையாடல்கள்.. சித்தார்த் கோபம், கவலை, ஏக்கம், கண்ணீர், காதல், இன்னும் இன்னும்னு அவ்வளவு அழகு..

அர்ஜுன்ற பேரை சொன்னா கூட அவ தாங்க மாட்டானு புரிஞ்சி நடந்துக்குறதுலாம் வேற லெவல்..

மது கொஞ்சம் கொஞ்சமாய் காதலை உணர்த்துபவனை உணர்ந்து முழுதாய் அவனிடம் கரையும் நொடி வரை வாவ் செம்ம sis..

சித்தார்த் கோபப்பட்டு தீபக் வீட்ல பொய் மதுக்காக சந்நிபாய் போடுறது எல்லாம் மார்வேலஸ்..

நேத்ரா காதலும் வளர ஆரம்பிச்சாச்சு..

ஒருத்தர் விடாம மதுக்கு அட்வைஸ் பண்றதும், அவ ஒவ்வொரு முறை பீல் பண்றதும், சித்தார்த் புரிஞ்சு நடக்குறதும் சில சமயம் கோபமும்னு படிக்க படிக்க தெவிட்ட மாட்டுது..


Totallay அல்டிமேட்டு sis 👌👌👌👌😍😍😍😍🤩🤩...