நின்னை சரணடைந்தேன்
பாகம் 1
ஷெண்பா sis ஸ்டோரி தெரியாதவங்க யாரும் இருப்பாங்களா? 2013 நான் ரீடரா முதன்முதலில் படித்த நாவல் நின்னை சரணடைந்தேன் தான்.. திரும்பவும் அவங்களே அதை போஸ்ட் செய்து படிக்கும் போது அதுவும் இத்தனை வருஷம் கழித்து படிக்கும் போது அவ்வளவு சந்தோசம்..
என்ன! அப்ப காலேஜ்ல பிரண்ட்ஸ் கூட சேர்ந்து படிச்சுட்டு கதையை பத்தி பேசிப்பேசியே என்ஜோய் பண்ணி படிச்சோம்.. இப்ப! தனியா படிக்குறேன்..
கூட்டு குடும்பம், காதல், நட்புக்கள், இன்னும் என்னென்ன எதிர்பார்க்குறீங்களோ எல்லாமும் இங்க இருக்கு..
கொஞ்சமும் தொய்வில்லாத கதை.. எங்கேயும் பாதில விட்டுட்டு போக முடியாது. அடுத்து என்ன அப்டிங்ற கேள்வியை கடைசி வரை கொண்டு வந்து அழகா முடிச்சு கொடுத்திருக்காங்க.
ஹீரோ யாரு? அர்ஜுன் இல்ல சித்தார்த்?
ரெண்டு பேருமே ஹீரோ தான். ஒரே மேனரிசம் மட்டும் இல்லாமல் எல்லாவற்றிலும் ஒரே மனமும் கூட..
ஹனி.. தேனு.. இதுல இருந்து தொடங்கும் அவர்களின் ஒற்றுமை.
சுபாவின் உடன் பிறந்தவனும் உடன் பிறவாதவனுமாய் இருவரும் மனதை அள்ளுவது உண்மை..
சித்தார்த் தான் எனக்கு ரொம்பவே புடிச்ச கதாபாத்திரம். அவனோட கோபம், ஏக்கம், கண்ணீர், சிரிப்பு, குறும்பு, காதல் எல்லாமே என்னை ரொம்ப கவர்ந்தது. காதலுக்காகவே காத்திருந்து, காதலுக்கவே காதலை விட்டுக்கொடுக்கவும் தயாறானவன்.
அவனின் காதல் கை சேர்ந்ததா?
அர்ஜுன் விளையாட்டு பிள்ளையானாலும் பொறுப்பானவன். விளையாடியே அவளை ஏமாற்றி அழ வைத்து சமாதானம் செய்யாமலே காதலால் சமாதானபடுத்துபவன்.
அவன் பொறுப்பாய் செய்த செயல் தான் இறுதியில் அவனுக்கு எமன் ஆனதோ? வாழ்க்கையிலும் ஏமாற்றி போனானோ?
மது.. எந்த இடத்திலும் இவளோட செய்கையை யாரும் குற்றம் சொல்லவே முடியாது. காதலிக்கும் போது அவளின் துள்ளலும், எல்லாம் இழந்து நிற்கும் போது குடும்பத்திற்காய் வாழும் வாழ்வும், அதே குடும்பத்திற்காக அவள் எடுக்கும் ஒரு முடிவும்னு... அவ்வளவு அழகு.
மது எடுக்கும் அந்த முடிவு அவளை வாழ வைத்ததா?
இதில் எல்லாம் விதியின் சூழ்ச்சி தான்.
நட்பாக கீதா சுரேஷ் லதாவும் உறவின் நட்பாக வரும் தீபக் மேகலா வித்யா ராஜேஷ் எல்லாமே அருமையான படைப்புக்கள்.
தேவகி, ராஜி, விமலா, ராமமூர்த்தி பெரியவர்கள் அனைவரின் படைப்புமே சொல்லக் கூடியது தான்.
அண்ணியாக மீராவும் அண்ணன் தம்பி தங்கைகளாக ஆதி, அஸ்வந்த் நேத்ரா எல்லாம் வேற லெவல்..
சுபா ஹரி திருமணம் முடிந்தும் இவர்களின் புரிதலை அழகா காட்டிருக்காங்க sis..
நிறைய இடங்கள் திரும்ப திரும்ப படிக்கவும் அழவும் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்குறது தனி அழகு..
இப்படி ஒரு கதையை இவ்வளவு நாள் படிக்காமல் விட்டுட்டோமேனு கண்டிப்பா தோணும்..
இன்னொரு ரசிக்க கூடிய ஒன்று.. கதையில் வில்லன் வில்லி என்ற ஒன்றுக்கு இடமே இல்லாமல் முழுதும் பாசத்தால் மட்டுமே உணர்வை கொட்ட வைப்பது. காதலை உணர வைப்பது..
இதுவரை படிக்காதவங்களுக்கு பெஸ்ட் சஜகேஷன் நின்னை சரணடைந்தேன்..
தரமான படைப்பிற்கு நன்றி sis


.. மென்மேலும் தங்கள் எழுத்து பயணத்திற்கு வாழ்த்துக்கள்






..